Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே செல்கிறது இந்த பாதை? பகுதி 1 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

வாழ்க்கையிலும், கல்வியிலும் எந்த குறிக்கோளும் இல்லாமல் நாட்களை கடத்திவரும் நம் பலருக்காக இந்த தொடர் கட்டுரைகளில் ஏதாவது நல்ல விசையங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்ற முயற்சி, அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளர்கள் தாங்கள் இத்தொடர் கட்டுரையில் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் வேண்டும் என்ற கருத்தோட்டத்தில் உள்ள கட்டுரைகளை இங்கே "எங்கே செல்லும் இந்த பாதை?" பகுதி 1, பகுதி 2 ….. என்று தொடராக பதியலாம், மற்றவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் பதிவாளர்களுக்கும் ஈமொயில் மூலம் அனுப்பி பதிய செய்யலாம். சரி என்னுடைய முதல் பதிவுக்கு வருகிறேன். இது ஒரு சிறிய முயற்சி தான்.


ஆசிரியர் பணி:

ஒவ்வொரு சமுதாயம் நல்ல சமுதாயமாக வருவதற்கு கல்வி அவசியம், அக்கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஒரு மனிதன் நல்லவனாவதும், தீயவனாவதும் ஆசிரியரிடம் தான் உள்ளது. நல்ல சமுதாயத்தை உருவாக்குவது தான் ஒவ்வொரு நல்ல ஆசிரியரின் குறிக்கோள் மற்றும் லட்சியமாக இருக்கும்.

இங்கு முக்கிய விசையத்தை பற்றி அலசி ஆராய்வோம். நம்மூரில் முன்பு போல் இப்போது ஆசிரியர் பணிக்கு நம்மூர்வாசிகள் ஆர்வத்துடன் சேருவதில்லை என்பது மிக வருத்தமான விசையம். இதில் எந்த தெருவாசிகளும் விதிவிலக்கல்ல. இதற்கு ஆர்வமின்மையா? திறமையின்மையா? இதில் அதிக வருமானம் இல்லாத்தா? ஆசிரியர் பணி செய்வது கேவலமா? அப்படி என்னதான் காரணம்? என் பார்வையில் கொஞ்சம் யோசித்து பார்த்தேன், சில விசையங்கள் என் எண்ணத்தில் தோன்றியது அவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். மேலும் கருத்துக்கள் இருந்தால் பின்னோட்டமிடுங்கள்.

அதிரையை பொருத்தவரையில் நம்மக்களிடம் கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேலையில் வெளிநாட்டு மோகம் இன்னும் அறவே குறைந்த பாடில்லை.

தான் பிள்ளை படிக்க வேண்டும், பிறகு சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் தான் இன்னும் பல பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. தன் பிள்ளைகளை என்னவாக உருவாக்க வேண்டும் என்ற நீண்ட காலத்திட்டமிடல்கள் எதுவும் பல பெற்றோர்களிடம் உண்மையில் அட்லீஸ்ட் இருக்கிறதா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது. தன் பிள்ளையை அப்படியாக்க வேண்டும் இப்படியாக்க வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக வீடு வீடாக பெருமையடிக்கும் சில பெற்றோரை வேண்டுமானால் பார்க்கமுடியும். வேடிக்கை!

அதிரைவாசிகள் பலரிடம் சீக்கிரம் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர தொலைநோக்குப் பார்வையுடன் எந்த ஒரு முறையான செயல்திட்டங்கள் எதுவும் இல்லை, ஆனால் மகள்களுக்கும், சகோதரிக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஒரே கட்டாய தலைவிதி குறிக்கோள் ஒன்றை மட்டும் தவிர. இது நம்மிடம் தொடர்ந்து வரும் வேதனையான விசையம். வரதட்சனை கொடுமைகள் முன்பு போல் இப்போது மோசமாக இல்லாவிட்டாலும், தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் இல்லாதா மற்றும் இஸ்லாத்தில் இல்லாத இந்த “பெண்ணுக்கு வீடு” என்ற சம்பிரதாயம் இன்னும் ஒழியவில்லை. இவைகள் மாற வேண்டும். மாறும் என்பது அறிவு வளர்ச்சியடைந்த இக்காலத்தில் நம்முடைய நம்பிக்கை. இன்ஷாஅல்லாஹ்.

தன் உண்மை உழைப்பால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்திக்கொள்வது நம் அனைவரின் எண்ணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன், மாறாக வாழ்க்கையில் எந்த லட்சியமில்லாமல் விரைவில் அதிக பொருளாதாரம் சம்பாத்திக்கும் கட்டாயத்தை நம் இளைய சமுதாயத்திடம் திணிக்கும் போக்கு மாறவேண்டும், இப்போக்கை மாற்றினால் தான் நாமும், நம்மூரும் நிறைய சாதித்து நல்ல முன்னேற்றங்களை நம் சமுதாயத்திற்காக சமர்பிக்க முடியும்.

பல வருடங்களுக்கு முன்பே நம் சுற்று வட்டாரத்திற்கு கல்வி கண் திறந்து கல்லூரியை தந்துல்லது நம் அதிரை. சரியான திட்டங்கள், குறிக்கோள்கள், லட்சியங்கள் அன்றைய காலாகட்டத்தில் நம்மூர் வாசிகளிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் இருந்திருந்தால், இன்றைக்கு அதிரை பள்ளி, கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் சமூக சேவையுள்ள ஆசிரியர்களாக அதிரைவாசிகள் இருந்திருப்பார்கள், எத்தனையோ பேராசிரியர். பரகத் சார் போன்றவர்களை அதிரை கண்டிருக்கும். நல்ல அதிரை ஆசிரியர்களினால் என்றோ அதிரையில் நிறைய சீர்த்திருத்தங்கள் வந்திருக்கும், தெருப்பிரிவினை என்றோ தூக்கி ஏறிப்பட்டிருக்கும், ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமை அதிரையில் என்றோ வந்திருக்கும். நடந்தவைகள் நடந்துவிட்டது, நடப்பவைகள் பற்றி யோசிப்போம்.

இங்கு மற்ற ஊர் ஆசிரியர்களை நான் குறை சொல்வது நியாயமில்லை, அவர்கள் தங்களின் வேலைகளை செய்கிறார்கள், இது பற்றி விரிவாக மற்ற கட்டுரைகளில் மிகத் தெளிவாக அலசலாம்.

TEACHING IS THE NOBLE PROFESSION என்பது இன்றும் அதற்கான புணிதத் தன்மையுடன்தான் உள்ளது இந்த ஆசிரியர் பணி. ஒரு சில விசமிகள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

நடந்தவைகளை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை, இனி நடக்கப் போவதை பற்றி கொஞ்சம் யோசிப்பது அதிரையை பொருத்தவரையில் காலத்தின் கட்டாயம். ஏன் இந்த புனிதமான பணியை நம்மில் சிலர் நம்மூர் எதிர்கால சந்த்தியினருக்காக தேர்ந்தேடுக்க கூடாது? எத்தனைப் பேர் இந்த கேள்வியை நம்மிடம் கேட்டிருக்கிறோம். மனசாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள். இது ஒருபுறமிருக்க நம் வீடுகளில் நம் பிள்ளைகளை ஆசிரியராக ஆக்கப்போகிறேன் என்று ஒரு பேச்சை போட்டுப் பாருங்கள், “இந்த வேலைல என்னத்த நம்ம புள்ள சம்பாதிக்கப்போறான், இதெல்லாம் ஒரு சம்பாத்தியமா?” என்ற பதில் ரொம்ப குயிக்கா வரும். வேதனையான விசையம். இந்த எண்ணம் மாற வேண்டும், நிறந்தர வேலை நியமான சம்பாத்தியம் ஆசிரியர் பணியில் மட்டும் தான் என்பதை நம் மக்கள் உணரவேண்டும்.

இப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் பட்சத்தில் தங்கள் பிள்ளைகளையும் இளம் வயதில் ஒரு நல்ல வழிகாட்டியாக, ஆசிரியராக உருவாகுவதற்கு முயற்சி எடுக்கலாமே.

நம்மூர்வாசிகள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக இருந்து வந்தால் நம் ஊருக்கும், நம் சமுதாயத்துக்கும் நல்ல பயனுள்ளதாக இருக்குமே.

நல்ல வழிகாட்டுதலுடன் நல்ல சமூக ஒற்றுமையுள்ள சமுதாயத்தை நாம் காணலாமே.

அதிரை பெரியோர்களும், பள்ளி, கல்லூரி நிர்வாகமும் நம் அதிரைவாசிகளை ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஊக்கமளிப்பார்களா? அட்லீஸ்ட் சில பெற்றோர்களாவது முயற்சி செய்வார்களா? செய்வார்கள் என்பது நம்முடைய நம்பிக்கை.

என்னுடைய லட்சியமும் கல்லூரி விரிவுரையாளராக ஆகவேண்டும் என்பது தான். முதுகலை முடித்துவிட்டு முயற்சி செய்தேன், UGC மற்றும் SLET தேர்வுகள் 3 முறை எழுதினேன், வெற்றிபெற முடியவில்லை. பொருளாதாரத் தேடலின் கட்டாயத்தால் அம்முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இன்ஷாஅல்லாஹ் சில காலம் கழித்து குறைந்தபட்சம் சில காலமாவது கவுரவ விரிவுரையாளராகவாவது பணியாற்ற வேண்டும் என்பது என் நீண்ட கால லட்சியம் கணவு. துஆ செய்யுங்கள்.

மீண்டும் ஒரு நல்ல தலைப்பில், எங்கே செல்லும் இந்த பாதை? என்ற தொடரில் சந்திப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை தாஜூதீன்

1 Responses So Far:

mohamedali jinnah said...

நல்ல வழிகாட்டி.கணவு கண்டு முயற்சியும் செய்து இறைவனை வேண்டுங்குள் . இறை அருள் கிடைக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு