விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.


ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A. ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift
Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்).. விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

 
தகவல்: அப்துல் மாலிக்

13 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நல்ல தகவல் களஞ்சியம் - (எப்போதுமே) தேடித் த(ரும்)ந்த அப்துல் மாலிக்(குக்கு) நன்றி.

அது சரி வழக்கமா கருத்துச் சொல்லனுமே ! சமீபத்தில வருகிற பதிவுகள் ஒரே மெதப்பாதான் இருக்கு :) தலைங்களா பதிப்பாளர்களைச் சொல்லவில்லை :))

வேலை வேலை(ன்னுதான்) பறக்கிறங்கன்னு பார்த்த இங்கே இறக்கை கட்டில பறக்கிறாங்க !

Yasir சொன்னது…

லியாக்தலி (இயற்பியல் ) சார் கிளாஸில் ஒரு பத்து நிமிஷம் உர்காந்து இருந்த ஃபீலிங்....நல்ல தொகுப்பு...தெரியாத நிறைய விசயங்கள்...வாழ்த்துக்கள் வாத்தியாரே

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அவரோட (அந்த) கிளாஸ் என் முதுகுப் பின்னால் இருந்துச்சா ஞாபகத்தில வரவே மாட்டேன்னுடார் இந்த லியாகத் அலி வாத்தியார் :)

Yasir சொன்னது…

ம்ம்ம்ம்....அப்போ சகோ.அபு இபுறாஹிம் நீங்க தர்மலிங்கம் கிளாஸ் மாணவரா...அவரின் முதுகுக்கு பின்னால்தான்...லியாக்கத் அலி சார் கிளாஸ்

அப்துல்மாலிக் சொன்னது…

தகவலை பதிவிட்டமைக்கு நன்றி

ஒவ்வொரு செயலிலும் நிச்சயம் நமக்கு கற்றுத்தந்த ஆசான் இரு(க்)ப்பாங்க..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//கற்றுத்தந்த ஆசான் இரு(க்)ப்பாங்க.//

அதெப்படிங்க மறக்க முடியும் இங்கே பாருங்க..

//நீங்க தர்மலிங்கம் கிளாஸ் மாணவரா..//

அடி"மேல்" அடி"வைத்த" வாத்திங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்து வந்து போறாங்களா ஆனா நீங்க இந்த ஐயாவை சரியாக நெனப்பு வச்சுக்கிறீங்களே.. :)

sabeer.abushahruk சொன்னது…

சகோ. அ.மாலிக்கின் உழைப்புக்கு நன்றி.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு என் feild என்பதால் interestingங்கா இருந்தது.
(தம்பி யாசிர், லியாகத் அலி சார்தான் எனக்கு இயற்பியல் விருப்ப பாடமாக inspiration.)

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் .இந்த சுவாரசிய(வி)மான தகவல் என் ஈமெயிலுக்கு பறந்து வந்தது. நல்ல அப்படியே ரெக்க கட்டிப்பறக்குற மாதிரி இருந்துச்சு. இப்ப நம்ம விசயத்துக்கு வருகிறேன்.லியகத் அலி சார் சொன்னது யாரு,யாருக்கோ சிலை வைக்கிறானுவோ உனக்கு மட்டும் ( நமக்குத்தான்)ஏன் மறந்துட்டானுவ?(பெருமையா நினைத்த பாராட்டு)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

sabeer on Thursday, September 23, 2010 8:10:00 PM said...// மற்றவர்களுக்கு எப்படியோ //

காக்கா என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, நா(ன்)ங்க விரும்பிப் படிக்க நினைத்தது வேறு(root) ஆனா அன்றோ ஒரு trend அவன் (வேற யாரு நட்புதான்) எடுக்கிறான்னு அவனோடு சேர்ந்து வீழ்ந்து எழுந்த குரூப் வேறு(different) ஆனால் நன்பனோ மேலே ஒடும் விமானம் எப்படித்தான் பறக்கிறதுன்னு பாதியிலேயே ஏறிப் பறந்துட்டான் (இப்போ நல்லாத் தான் இருக்கான்) எப்படியெல்லாம் (விமானம்)பறக்கிறதுன்னு மேலேயிருந்தே (இப்போ) வாசிச்சேன் மீண்டும். :)

ZAKIR HUSSAIN சொன்னது…

இப்படியெல்லாம் பள்ளிக்கூட நினைவுகளை ஆளுக்குஆள் எழுதி இப்படி பாவத்தை வாங்கி கட்டிக்கொள்வதால்..ஒரு சின்ன அசைன்மென்ட்...இப்போதும் அதே சுறுசுறுப்புடனும், தெளிவான பேச்சிலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்கள் ஹாஜாமுஹைதீன் சார், அலியார் சார், லியாகத் அலி சார், வாவன்னா சார் , சேக் தாவூது சார் இவர்களை பேட்டி எடுத்து [ முக்கியம் போட்டோ இருக்கவேண்டும் ..புதியதும்..பழைய போட்டோ அவர்களிடம் இருந்தால் நமது டிஜிட்டல் கேமராவில் Re-shoot செய்து கொள்ளலாம். ...எடுத்து வெளியிட்டால் நல்லது. நான் ஊரில் இருந்தால் நிச்சயம் இதை செய்வேன்.

கமென்ட்ஸ் எழுதும்போது நிறம்ப பிராக்கெட் போடாமல் எழுதுபவர்களுக்கு செளபாக்யா வெட் கிரைண்டர் பரிசு தருவதுபற்றி அதிரை நிருபர் குழு யோசிக்களாம்.

ZAKIR HUSSAIN

Unknown சொன்னது…

நீண்ட நாள் கேள்வி .....அருமையான விளக்கம் ...நன்றி மாலிக்....
தஸ்தகீர் ....நீங்கள் சொன்ன அந்த தம்பி தவறை உணர்திருப்பார் என நம்புகிறேன் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இங்கே அடைப்பு வேலி வேலை செய்யாதவங்களுக்கு செளபாக்யா மட்டுமா கொடுக்கனும் அதற்கு கால் கரண்ட், அரைக் கரண்ட் பத்தாது முழுக் கரண்ட்டுடன், இலவச மின்சாரமும் வழங்க ஆவண செய்யுமாறு அடைப்பு வேலி பயனாட்டாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Shameed சொன்னது…

விமானம் பற்றி விபரமான அலசல் அறிவு பூர்வமாக இருந்தது