Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நீச்சல் கற்றுக்கொள்வோம், கோர விபத்துக்களிருந்து தப்பிப்போம் 18

அதிரைநிருபர் | December 27, 2010 | ,


சுனாமி என்ற ஆழிப்பேரலை 2004ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ந்தேதி தென்கிழக்கு ஆசிய கண்டத்தினை உலுக்கி நெய்தல் நகரங்களான கடற்கரை ஓரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட தினமான 2010 டிசம்பர் திங்கள் 26ந்தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் என்ற முஸ்லிம்கள் வாழும் ஊரிலிருந்து இரண்டு படகுகளில் உல்லாசமாக இரண்டு படகுகளில் அருகில் உள்ள தீவினைப்;பார்க்க சென்ற சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் விபத்துக்குள்ளாகி 13 பேர்கள் பலியான செய்தி வெளியானது கண்டு அனைத்து உள்ளங்களும் அதிர்ச்சியில் உரைந்தன வென்றால் மிகையாகாது.

அந்தக் கோரச்சம்பவத்தினை ஆராயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:

1) படகில் சென்றவர்கள் உயிர் காக்கும் சாதனமாக லைப்போட் என்ற ரப்பர் டியூப்பினை அணியவில்லை.

2) படகின் சுமைக்கேற்ப பெண்களும், குழந்தைகளும் படகில் ஏற்றப்படவில்லை.

3) படகில் ஒரு பக்கமே பளுவான பெண்களும் மறு பக்கம் குழந்தைகளும் அமரச் செய்திருந்தது.

4) குழந்தைகள் உற்சாகத்தில் அலையினை கையில் தொட முனைந்து அவர்களுடைய பளு படகின் ஒரு பகுதியினை சார்ந்திருந்து சாய்ந்தது.

5) பெண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது.

6) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீச்சல் பழக்கமின்மை.

7) ஆபத்தான நேரத்தில் எப்படி உயிர் காப்பது என ஆண்களுக்கு தெரியாதது.

8) மற்றொரு படகில் சென்ற சில ஆண்களுக்கும் நீச்சல் தெரியாததால் மீனவர்கள் கரையிலிருந்து வேறொரு படகில் வரும் வரை விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற இயலாதது.

இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது என்றாலும் கடற்கரை ஓரத்தில் வாழும் இஸ்லாமிய கிராமங்களில் வாழும் ஊர்களில் இப்படிப் பட்ட விபத்துக்கள் ஏற்படும் போது அதனை தடுக்க என்னன்ன வழிகள் என ஊர் ஜமாத்தார்கள் அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கட்டாயமாக நீச்சல் தெரிந்திர ஏற்பாடு செய்வது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரர்களின் கடமையாகும் என்றால் மிகையாகுமா?

2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி அன்று என் கல்லூரித் தோழனும் பரங்கிப்பேட்டையினைச் சார்ந்த அலி அப்பாஸ் காரைக்காலில் சக தோழர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சுனாமி அலை வரும் போது அனைவரும் ஒரு மரத்தில் ஏறி தப்பிக்கும் போது நண்பன் அலி அப்பாஸ் மட்டும் மரமேர முடியாததால் அதில் பலியானான் என அறிந்து என் உள்ளம் இன்னும் வேதனையால் துடிக்கிறது. அதனைப்போன்று இந்த படகு விபத்தில் தன் அருமைக் குழந்தைகளையும், தாய்மார்களையும் விபத்தில் சிக்கி பரிதவிக்க விட்டு விட்டு இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நிலை எப்படியிருநதிருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். ஆகவே இது போன்ற விபத்துக்களை தடுக்க என்னன்ன வழிகள் என ஆராயந்து நடவடிக்கை எடுத்தால் கடற்கரை ஓர மக்களை சோக இருள் கவ்வாமல் இருக்குமல்லவா?

1) கண்டிப்பாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை நீச்சல் பழகியிருக்க வேண்டும். நீச்சல் நீரிலிருந்து மனிதனை காப்பாற்றுவது மட்டுமல்ல மாறாக சிறந்த ஒரு உடற்பயிற்சியாகும். அத்துடன் எவ்வளவு பெரிய டென்சனில் இருந்தாலும் அரை மணிநேர நீச்சலுக்கு சென்று வந்தால் அந்த மன நெருக்கடி ஒரு நிமிடத்தில் பறந்தோடி உற்சாகம மேலோங்கும்;.

2) நீச்சல் செய்பவர்கள் மனதில் எதனையும் சாதிக்கலாம் என ஒரு எண்ணம் ஏற்படும். அதற்கு உதாரணமாக 26.12.2010 அன்று புதுவையில் ஒரு 38 வயது பெண்மனி செய்த சாதனையினை உங்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறேன். பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூரினைச் சார்ந்த குடும்ப நடு வயது பெண்மனி ராணி(38) என்பவர் நீச்சல் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு சாதனை செய்ய வேண்டுமென நினைத்து நீச்சல் பயிற்சினை மேற்கொண்டார். ஆழிப்பேரலை நாளன்று பாண்டி முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு நீச்சல் குளத்தில் தலையினை மேலே வைத்துக் கொண்டு கால்களை தரை நோக்கியும் ஆனால் தரையில் படாமலும், நீச்சலிடிக்காமலும் ஒரு கிளோ மீட்டர் தூரத்தினை காலை பத்து மணியிலிருந்து மதியம் ஒரு மணிவரை நடந்து சாதனை செய்துள்ளார் என்றால் பாருங்களேன் நீச்சல் சாதனை பெண்களுக்கு விதிவிலக்கல்ல என்பதினை இது காட்டவில்லையா?

3) சிலர் கேட்கலாம் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து உள்ளார்கள் அவர்களால் எப்படி நீச்சல் உடையில் நீந்த முடியுமென்று. இப்போது முஸ்லிம் பெண்களுக்கென உடல் அங்கங்கள் தெரியாது புர்கா வடிவில் நீச்சல் உடைகள் மேலை நாடுகளிலும், அரேயிய நாடுகளிலும் உள்ளன. நமது பெண்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்து நீச்சல் பயிற்சி பெண் பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் பெண்களுக்கான தனி நேரங்கள் நீச்சல் குளங்களில் ஓதுக்கப்படுங்கின்றன. குளங்கள் உள்ள ஊர்களிலும். பேரிய கண்மாயல் குளிப்பவர்களுக்கும், ஆற்றங் கரையில் உள்ள முஸ்லிம் பெண்கள், சிறார்களுக்கு நீச்சல் பயிற்சி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

4) சிலர் சொல்வார்கள் மீன் குட்டிகளுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும், அவர்களாக பழகிக் கொள்வார்கள் என்று அசட்டையாக. ஆனால் இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு ஏற்படும் உயிர் பலிக்கு அவர்கள் மற்றவர்களை குறை சொல்லத்தான் அவர்களுக்குத் தெரியுமேயொழிய அந்த குறைகளை போக்க எடுத்த நடவடிக்கை என்ன என அவர்களுக்குத் தெரியாது.

ஆகவே வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் முஸ்லிம் ஊர்களில் ஏற்படாதாவாறு நடவடிக்கை எடுப்பது அனைவருடைய கடமையல்லவா சகோதர, சகோதரிகளே?

-- டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சம்பவங்கள் எதுவானாலும் அதனை சமுதாயச் சிந்தனையோடு எடுத்துச் சொல்லும் பாங்கே தனிதான் !

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
எழுத்துப்பிழையை சரி செய்யவும்
அந்தக் கோரச்சம்பவத்தினை ஆயும்போது கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

கோர சம்பவத்தினை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நாம் அனைவரும் விழிப்புடன் இருப்பது நல்லது.

சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம், சாஹுல் காக்கா சுட்டிக் காடியமைக்கு நன்றி.. + தூக்கிவிட்டு டியூப்பை சேர்த்தாகிவிட்டது

Yasir said...

சகோ சொல்வது முற்றிலும் சரி...இக்காலக்கால குழந்தைகள் குளத்திற்க்கு அருகில் போவதற்க்கே பயப்படுகின்றன..நீச்சல் என்பது அனைவருக்கும் அறிந்து இருக்கவேண்டியது

Shameed said...

அந்தக் கோரச்சம்பவத்தினை (ஆயும்போது) கீழ்கண்ட காரணங்கள் தெரிந்தன:

அஸ்ஸலாமு அழைக்கும்

மேலே உள்ள ( )கவனிக்கவும்
அஸ்ஸலாமு அழைக்கும்

மேலே உள்ள ( )கவனிக்கவும் ஆராயும் போது என்று இருக்கவேண்டும்

அதிரைநிருபர் said...

எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டிய அன்பு சகோதரர் ஷாஹுல் அவர்களுக்கு மிக்க நன்றி, சரி செய்துவிட்டோம்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்று நாங்கள் வேட்டியில் முட்டை கட்டிக்கொண்டு வெட்டிக்குளத்தில் ஆண்கள் கரையில் இருந்து பெண்கள் கரைக்கு போய்வருவதை நினைத்தால் மனதுக்கு உற்சாயமாக உள்ளது

sabeer.abushahruk said...

நீச்சல் கற்றலின் அவசியத்தை இதைக்காட்டிலும் தெளிவாக சொல்லமுடியாது.

5) பெண்களுக்கு பதில் பேன்கள் என்றும் உள்ளதே

அதிரை முஜீப் said...

//5) பேண்கள் குழந்தைகளின் இந்த விளையாட்டுச் செயலினை கட்டுப்படுத்தாதது//

பேன்கள் என்ற வார்த்தையினை பெண்கள் குழந்தைகளின்..... என்று மாற்றவும்.

மேலும் நீச்சல் என்பது பெண்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் சாத்தியப்படாத ஒன்று!. ஆனால் பாதுகாப்பான பயணம் என்ற ஒன்று மட்டுமே இறுதியான தீர்வாக இருக்கமுடியும். மீன்பிடிக்கும் தோனியை இவர்கள் பயன்படுத்தியது முதல் தவறு. பின் இதுபோன்ற படகில் பயணம் செய்தவர்கள், பாதுகாப்பு ஆடை (லைப் ஜாக்கெட்) அனியாமல் சென்றதும் (அப்படி ஓரு சாதனம் இதுபோன்ற குக்கிராமத்தில் கிடைக்குமா?)இவர்களின் மற்றொரு தவறாகும். மேலும் இவர்கள் சென்ற தோணியில் விருந்திற்காக கொண்டு சென்ற ஆடு துள்ளிக்குதித்து கடலில் விழுந்ததாகவும், அதை மீட்க அனைவரும் ஒரே பகுதியின் பக்கம் வந்ததினால் இப்படி ஓரு விபத்து நடந்ததாகவும் ஓரு தகவல் உண்டு!. எதுவாகிலும் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் அழைப்பு இவர்களுக்கு விடுக்கப்படுவிட்டது என்றே எண்ணி இவர்களின் மறுமை வாழ்க்கைக்கு துவா செய்வோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல அருமையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள். சரியான நேரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உண்மை சம்பவத்தை (2004 சுனாமி) நினைத்தாலே மனம் பதறுகிறது. நீச்சல் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எதை எடுத்தாலும் நம் மக்கள் தரத்தையும், பாதுகாப்பையும் பார்ப்பது இல்லை. சுற்றுலா செல்லும் போது எங்கு எவ்வளவு குறைந்த சிலவாகும் என்பதை மட்டுமே பார்க்கிறார்கள் (அனுபவத்தில் அறிந்தது). பாதுகாப்பு, தரம் இவைகளை அலசும் மக்கள் மிக குறைவு. இது போன்ற பாதுகாப்பற்ற சுற்றுலாக்களால் விபத்துக்களே அதிகம். சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இரண்டு முறை இது போன்ற படகு விபத்துக்கள் நடந்துள்ளது என்பதே நமக்கு மிகப்பெரிய எச்சரிக்கை. இனியாவது தகுந்த பாதுகாப்புடன் உள்ள சுற்றுல செல்வதே புத்திசாலித்தனம்.

சுனாமி நடந்த தினத்தில் இந்த விபத்தால் மூட நம்பிக்கையில் மக்கள் மூழ்கிவிடாமல் இருக்க படைத்தவனிடம் துஆ செய்வோம்.

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//சுனாமி நடந்த தினத்தில் இந்த விபத்தால் மூட நம்பிக்கையில் மக்கள் மூழ்கிவிடாமல் இருக்க படைத்தவனிடம் துஆ செய்வோம்//


ஆக அப்படி ஒன்னு இருக்குதோ ஊருலே சும்மாவே அவுத்து உடுவான்கள் இதுலே இதுவேறையா சொல்லவே வேணாம் !!!!

அதிரைநிருபர் said...

// sabeer சொன்னது… 5) பெண்களுக்கு பதில் பேன்கள் என்றும் உள்ளதே//

// அதிரை முஜீப் சொன்னது… பேன்கள் என்ற வார்த்தையினை பெண்கள் குழந்தைகளின்..... என்று மாற்றவும்.//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரர்களே, திருத்தம் செய்யப்படுள்ளது. உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு மென்மேலும் நம் அதிரைநிருபரின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது என்பது உண்மை.

நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒரு காலத்தில் 365 நாளும் குளங்களில் தண்ணீர் இருந்தது, சிறுவயதிலுருந்தே நீச்சல் கற்றுக்கொள்ள வாய்பாக இருந்தது. இன்றைய காலத்தில் அது போன்ற வாய்ப்புகள் குறைவே.

எச்சரிக்கை: அதிரையில் இந்த வருடம் அதிக மழை பெய்ததால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளதாக தகவல். அதிசயமாக குளங்களில் தண்ணீரை காணும் இக்கால சிறுவர்களை மிக கவனமாக இருக்க செல்ல வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு. இக்காலத்து நம்ம புள்ளைலுவலுக்கு நீச்சல் என்றால் என்னவென்று தெரியாதே.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.விபத்தில் உயிரிழந்த சகோதர,சகோதரிகளுக்கு அல்லாஹ் சுவர்கபதி தந்தருள்வானாக.அன்னாரின் குட்ம்பத்தினர்களுக்கு சாந்தியும்,பொருமையையும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.ஆமீன், சகோ அலீ அவவர்கள் ஆக்கம் எப்பவுமே சமுதாயம் சார்ந்தது.அல்ஹம்துலில்லாஹ்.மரைகலம் ஏறும் மரைக்காயர் பெயர் மட்டும் போதுமா> அதன் மூலம் வரும் ஆபத்டை எதிர் நோக்க,காத்துகொள்ள முறையான நீச்சல் பயிற்சி அவசியம் இது என் மனதில் பல நாள் சிந்தனை அதைசரியான நேரத்தில் நினைவு படுத்து எச்சரிததற்கு சகோதருக்கு வல்ல அல்லாஹ் எல்லா பாக்கியமும் தந்தருள்வானாக ஆமின்.சமுதாயம்,சமுதாய மக்களை காப்போம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எழுத்துப் பிழை சுட்டிக் காட்டியவர்களைப் பற்றி இந்தக் கட்டுரையை எழுதிய சகோதரர் அறிந்திருந்தால் நிச்சயம் பெருமை கொண்டிருப்பார், இப்படியான் சான்றோர் சபை மன்றமே தனது கட்டுரையை அலசி ஆராய்வதௌ நினைத்து ! இவர்கள் யாரும் சாமானியர்கள் அல்ல சாதிக்கப் பிறந்தவர்கள் என்று !

ஆக ! எதிர் நீச்சலும் போடத்தான் வேண்டும் தடைகள் மீட்டெடுத்து, உயர்கல்வி தேடிச் செல்ல மாணவ உறவுகளை ஒன்று திரட்டுவோம் அதிரைப்பட்டினத்தில் அதிரைநிருபர் வாசகர்களின் ஆளுமையை உரைத்திட !

அதிரை தாருத் தவ்ஹீத் said...

பிழைகள் நீக்கப்பட்ட பதிவு : http://www.satyamargam.com/1602

அதிரைநிருபர் said...

முனைவர் முகம்மது அலி IPS அவர்கள், தன் கட்டுரைகள் தொடர்பாக நம் அதிரைநிருபர் வாசகர்களுக்காக அனுப்பிய செய்தியை இங்கு பகிர்ந்துக்கொள்கிறோம்.

Your Adirai nirubar web need not wait for my permission to publish any of my articles.

I thank my readers observations on my articles. Some of them had pointed out the spelling mistakes also. In future I will correct them.

Since I only do tamil typing I make some mistakes. Kindly tell them to point out boldly.

A.P.Mohamed Ali
31.12.2010

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு