Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை கல்வி மாநாட்டுப் புகைப்படங்கள் - 15.01.2011 11

அதிரைநிருபர் | January 17, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரையில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டின்  இரண்டாம்  நாள்  நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக, புத்துணர்ச்சியுடன் கலந்துக்கொண்டு பயனடைந்த எல்லோருக்கும் எல்லம்வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

சகோதரர் ஹாபிழ் பத்ருத்தீன் அவர்களின் கிராஅத்துடன் இரண்டாம் நாள் மாநாடு துவங்குகிறது.


அறிமுக உரையை நிகழ்த்துகிறார்கள் சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள்


தலைமை உரையை நிகழ்த்துகிறார்கள் அதிரை அறிஞர் புலவர் பஷீர் ஹாஜியார் அவர்கள்


கருத்துரையுடன் தன் எழுச்சி உரையை நிகழ்த்துகிறார்கள் பேராசிரியர் பரகத் அவர்கள்


பேராசிரியர் பரகத் அவர்களின் உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவை மிக கவனத்துடன் கேட்கும் மக்கள்.


அதிரை அறிஞர் புலவர் பஷீர் ஹாஜியார் மீண்டும் ஒரு அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்துகிறார்கள், நம் அதிரை மக்களுக்கு அதிரையில் வாழ்ந்த நம் மூன்னோர்கள் கல்வியாளர்களாக திகழ்ந்தவர்களை பட்டியிலிட்டு எல்லோருக்கும் புரியும்படி சொல்லி நம் எல்லோரும் அவ்வழியில் வந்தவர்கள் என்று நினைவுபடுத்தினார்கள்.


அதிரை அறிஞர் பஷீர் ஹாஜியாரின் உரையை மிக கவனமாகவும் ஆர்வமாகவும்  கேட்கிறார் சிறப்புப்பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்கள்.


பெண்கள் பகுதியிலிருந்து முதுகலை பட்டதாரி சகோதரி உமர் கனி அவர்களின் ஊக்கமூட்டும் சொற்பொழிவை மிக கவனமாக கேட்கும் மக்கள்.


கருத்துரையை வழங்குகிறார் சிறப்புப்பேச்சாளர் பேராசிரியர் அன்வர் அவர்கள்.


சிறப்புப்பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்கள் தன் உரையை துவங்குகிறார்கள்.


தன் எழுச்சி உரையை மிக அற்புதமாக நிகழ்த்திவருகிறார் சகோதரர் CMN சலீம் அவர்கள்.


அரங்கத்தில் உள்ள அனைவரும் ஒரு வினாடி கூட வேறு எங்கும் தங்களின் கவனத்தை திசைத்திருப்பாமல் மிக கவனமாக சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சி உரையை கேட்டு வருகிறார்கள்.


அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு நன்றியுரை: சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் பேசுகிறார்கள்.


மாநாட்டில் சிறந்த கேள்வி கேட்டதற்காக அதிரை சகோதரர் முகம்மது ஹனீபா அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலையும் சகோதரர் CMN சலீம் அவர்கள் விரிவாக எடுத்துச்சொன்னார்கள்.


மாநாடு முடிந்த பிறகு அதிரை கல்வியாளர்களும் சிறப்பு பேச்சாளர்களும்  கலந்துரையாடல்.



 இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துல்லில்லாஹ்.

--அதிரைநிருபர் குழு

11 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இம்மாநாட்டின் மிகத் தெளிவான புகைப்படங்கள் அனைத்தையும் பெற விரும்புகிறவர்கள் adirainirubar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக்கொண்டால், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறோம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாநாட்டின் முதல் நாளின் , முதல் அமர்வை மட்டுமே நேரலையாக என்னால் காண முடிந்தது. இங்கே இரவு அங்கே பகல் என்ற மாற்றத்தினால் , மற்ற நேரலைகளை காணும் வாய்ப்பு தவறிப் போய்விட்டது.

நானும் என்னைப் போன்று நேரலைகளை காணத் தவற விட்டவர்கள் காணும் பொருட்டு மீண்டும் அனைத்து நேரலைகளின் ஒலி & ஒளித் தொகுப்புகளை தொடர்ச்சியாக காணும் வகையில் நிருபரில் உடனே மறு ஒளி பரப்பு செய்ய ஏற்பாடு செய்யவும்.

தற்போது நிருபரில் இருக்கும் மறு ஒளிபரப்பு காணொளியில் இரண்டாம் நாளின் முதல் அமர்வு மாத்திரமே காணக் கிடைக்கிறது.

தாமதம் வேண்டாம் தயவு செய்து.

--
ஷரஃபுத்தீன் நூஹு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் ஷரபுத்தீன் காக்கா: தங்களின் ஆர்வம் நிச்சயம் நிறைவேறும், நேரலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஏற்பட்ட சின்ன சின்ன தடங்கள்களால் மாநாட்டு நிகழ்வுகளை டிஜிட்டல் முறையில் மூன்று விதமாக பதிவு செய்து வந்தோம் இதனை வெகு சீக்கிரத்தில் மீதமிருக்கும் recorded நிகழ்வுகளை பதிவுக்குள் கொண்டு வருகிறோம் இன்ஷா அல்லாஹ், இதற்கான முயற்சியில் இன்று காலையிலிருந்தே ஈடுபட்டிருக்கிறோம்..

HIRASHARFUDEEN said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அனைத்து புகைப்படங்களும் சூப்பர்...

அபு ஆதில் said...

ஹிரா ஷரபுத்தீன்

அஸ்ஸலாமு அலைக்கும்,இனி வரும் கல்வி மாநாடுகளிலெல்லாம் உங்களைப் போன்ற பெண்மணிகளின் பங்களிப்பும் இருந்திட வாழ்த்தி துஃஆ செய்கின்றேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புகைப்படங்களைப் பார்க்கும் போது ஊருக்கு போய் வந்தது போல் உணர்வு. மற்றும் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளும் சொல்லப்பட்ட கருத்துக்களும் மனதில் வந்து செல்கிறது என்றால் மிகையில்லை.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

எல்லோருடைய போட்டோவும் உள்ளது.
மாநாட்டுக்காக ஊர் சென்ற
அந்த அபு இப்ராஹீம் போட்டோ எங்கேயப்பா ?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

ஃபோட்டோஷாப் நிபுணர்கள் யாராவது லைட் குடுத்துப் படங்களின் கொள்ளளவு குறைத்து மீள்பதிவு செய்தால் வேகமாகத் திறந்து தெளிவாகத் தெரியும்.

யாரும் இல்லேன்னா மட்டும் எனக்குச் சொல்லியனுப்புங்க!

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜமீல் காக்கா, தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்துப்புகைப்படங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் படங்களின் கொள்ளளவை குறைத்து மீள் பதிவு செய்ய முயற்சி செய்கிறோம். நேரமின்மை காரணமாக புகைப்படங்களை முடிந்தவரை சிறிய கொள்ளளவுடன் பதிவு செய்திருந்தோம்.

வேகமாக படங்களை திறந்து பார்ப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. இன்ஷாஅல்லாஹ் இனிவரும் நாட்களில் படங்களின் கொள்ளளவை குறைத்து பதிவு செய்கிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் அன்பின் (ஜமீல்) காக்கா: அவர்களில் ஒருவர் இன்னும் ஊரில் இருக்கிறார் அவரின் மடிக் கணினியில் சுமைகள் நிறைய இருப்பதாலும் கால அவகாசம் குறைவாக இருந்ததினால் எடுத்த வண்ணப்படங்களில் கைவண்ணம் செய்ய முடியாமல் போனது, இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறோம் தங்களின் பரிந்துரையை...

Unknown said...

ஜமீல் சொன்னது…
"ஃபோட்டோஷாப் நிபுணர்கள் யாராவது லைட் குடுத்துப் படங்களின் கொள்ளளவு குறைத்து மீள்பதிவு செய்தால் வேகமாகத் திறந்து தெளிவாகத் தெரியும்.

யாரும் இல்லேன்னா மட்டும் எனக்குச் சொல்லியனுப்புங்க!"

Reply Monday, January 17, 2011 11:49:00 PM

பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது, 'லேட்ஃபீ' ஒட்டி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு