Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அறிஞர் 12

அதிரைநிருபர் | January 08, 2011 | , ,

கீழ்க் காணும் கவிதை, 1954 ஆம் ஆண்டில், நமது தற்போதையக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக் கருத்தரங்கிற்குத் தலைமை வகிக்க வரவிருக்கும் 'அதிரை அறிஞர்' புலவர் பஷீர் அவர்கள் அன்னார் தம் மாணவப் பருவத்தில் இயற்றியது:


"என்வாழ்வின் வருங்கால இலட்சி யத்தை

ஈண்டறிவீர் என்னன்பீர்! யாதோ வென்று

தன்வாழ்வே கொண்டவனாய்த் தகையே இன்றித் தான்தோன்றித் தனமாக வாழ்வேன் என்றோ

உண்பதுவும் உடுப்பதுவும் ஓய்வே கொள்ள

உறங்குவதும் என்றேநீர் எனைநினைந் தீரோ?

மண்பதையில் அதுவேண்டாம் மாண்பே கொண்டு

மாணவரின் சேவைசெய மனங்கொண் டேனே."


புலவரவர்களின் மாணவப் பருவச் சிந்தனைகளுள் சில:

"என் அன்னையார் உணவூட்டச் சீராட்டும்போதும், வீட்டு வேலைகளைச் செய்யும்போதும், ஊஞ்சலில் அமர்ந்து ஒய்வு எடுக்கும்போதும், மெல்லிய இனிய குரலில் முனாஜாத் (புகழ்ப் பாடல்கள்) இசைத்தவாறு இருப்பார்கள். அவர்கள் பேசுகின்றபோதும், ஏதேனும் ஒரு பழமொழியோ, பழம்பாடல் வரியோ இடம்பெறாமல் இருக்காது.

"என் தந்தையார் படிக்கும் பருவத்திலிருந்தே விடுதலைப் போராட்ட வீரர். கராச்சிப் பட்டே கல்யாணப் புடவையாக இருந்த எங்கள் குடும்பத்தில், கதர்ப்புடவையை வாங்கி என் தாயாருக்குத் திருமணச் சீராக வழங்கினார்களாம். முரட்டுக் கதரின் இறுக்கம் ஆயினும், விருப்பத்தோடு அணிந்த நெருக்கம் பற்றி என் தாயார் குறிப்பிடுவார்கள்.

"நாற்றங்காலில் விதைகளைத் தூவி நீர் பாய்ச்சி உரமிட்டு வளர்ப்பது போன்றது எங்கள் ஆசிரியப் பணி. இளஞ்சிறார்களின் ஆசை உணர்ச்சிகளைக் கடமைப் பொறுப்புகளாக மடை மாற்றம் செய்யும் சித்து வேலையினை எங்களிடத்தில் ஒப்படைத்த வல்ல இறைவனுக்கே நன்றி."

கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் பிற பட்டங்களும் பெற்றுப் பல்லாண்டுகள் கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்த 'அதிரை அறிஞர்' , நமது கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் கருத்தரங்குத் தலைமை ஏற்க இருப்பது, நமக்கெல்லாம் பெருமையன்றோ?

-- அதிரை அஹ்மது


12 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு லட்சியமற்ற மூடனாகவோ ,சோம்பித்திரியும் சோம்பேறியாகவோ இருக்க மாட்டேன். மனச்சோர்வு அறவே நீங்கி தெளிவான சிந்தை கொண்டே,வரும் கால மெல்லாம் பனியாற்றுவேன் என்று சிறு வயதிலேயே கொள்கை சிங்கமாய் முழங்கிய விதமும், அதுபோலவே கடந்து வந்த பாதையில் நடந்ததும், நடப்பதும் சிறப்பே. அவர்கள் வாழ்க பல்லாண்டு வளம் பல கொண்டு.

Unknown said...

மாநாட்டு தலைவரைப் பற்றி பொருத்தமான நேரத்தில் நல்ல அறிமுகம்.
அதுவும் ஒரு அறிஞரே இன்னொரு அறிஞரைப் பற்றி சொல்லியிருப்பது இன்னும் பொருத்தம்! அவர்களைப் பற்றிய புதிய தகவல்கள் நிச்சயமாக பயன் படும். அறிஞரிடம் ஒரு விரிவான பேட்டி எடுத்து வெளியிட்டால் நல்லதே!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________
அறிஞரின் தமிழ் புலமைக்கு கீழக்கரை பல்லாக்கு ஒளியுல்லஹ் அவர்கள் எழுதிய 'முனாஜாத்' கேட்டு வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
'முனாஜாத்' செந்தமிழில் எழுதிய 25பாடல்கள் ஆகும்.
அதில் ஒரு பாடல்:

"வறுமை பஞ்சம் ஊழ்வினையும்
வகையறு நாசந் தப்பிதங்கள்
சிறுமை சின்னஞ் செய்பிழையுஞ்
சிலபல ரகசிய பாவங்கள்
மறுமை நினையாப் பாவங்கள்
மடைமை மாசுறு மெண்ணங்கள்
நிறைந்த பாவமடங்கலையும்
நிவர்த்தி யருள்வாய் றஹ்மானே!"

அதே நேரத்தில்" முனாஜாதை தினமும் காலை மாலை ஓதி வந்தால் மாபெரும் பிணிகள் கூட தீரும்" என்று மூடர்கள் சொல்வதில் நமக்கு உடன்பாடுடில்லை.
மற்றபடி இதுதான் செந்ததமிழ்!
இந்த தமிழையெல்லாம் விட்டுவிட்டு வடநாட்டு காதைகளை 'இதுதான் தமிழிலக்கிய' மென்று பல்கலைக் கழகத்தில் 'கொலு' வகைத்திருப்பது ஏனோ?
தூசி தட்ட யாருமுண்டா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இளம் பிராயத்தில் தமிழின் மேல் கொண்ட தாகம் தீர படித்தோம், படித்தோம் பின் வடமொழி கலப்பு காவிய சிந்தனையும் கலந்தது கண்டு இலக்கியம் படிப்பதை நிறுத்தியவன் நான் (என்னை போல் பலர்) நிறுத்துவது புத்திசாலித்தனமா? கேட்பவர்களுக்கு.மார்கம் பெரிது என்பதாலும், அவர்களின் வார்தைகளை உச்சரித்து அந்த தோத்திரங்களை சொல்ல கூடாது என்பதுவுமே!உதாரணம் ":வானாகி, மண்ணாகி( விசயம் தெரியாதவன் என்று ஊர் பழித்தாலும் பரவாயில்லை நான் எல்லாம் அறிவிலிதான் ஆனாலும் இலக்கிய வழியில் சிர்கை கடைப்பிடிக்காமல் காப்பாத்திய அல்லாஹுக்கே எல்லாப்புகழும். சப்பை கட்டு என்று நினைத்தாலும் ஒன்று சொல்வேன் அதனால் தான் ஆதியில் மரபு கவிதை எழுதிய என்னை போல பலர் அந்த இலக்கணத்தொடர்பை விட்டதால் இன்று பெரியவர்கள் விரும்பாத புது கவிதை?என்று கிருக்கி கொண்டுள்ளோம். எம் இளைஞர்களுக்கும் மரபு கவிதை வசப்படும் வசபட்டிருக்கு என்னை போல் உள்ளவர்களைத்தவிர்த்து.இப்ப மரபு கவிதை எழுத என்னால் முடியாவிட்டாலும் மூத்த சகோதரர்கள் சபீர் காக்கா போன்றவர்கள் எழுதக்கூடியவர்களே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பொருத்தமான நேரத்தில் பொருத்தம் அறிந்து பொழிவு காட்டிடும் பொக்கிஷங்களின் இதுவும் ஒன்று !

தம்பி ஹிதாயத்துல்லாஹ், உனக்கு ஒரு படி மூத்தவனை பேருக்கு முன்னால் தான் கீரீடம் வைத்து அழைப்போம் ஆனால் உனக்குதானப்ப அந்தக் கீரீடம் பொருந்தும் தமிழாலும் அதன் தரத்தாலும் அதோடு தோண்டியெடுத்து வைத்திருக்கிறாயே முத்தான கேள்வி ! - தூசித் தட்ட யாருமுண்டா ?

சபாஷ்(டா)ப்பா ! தொடருட்டும் உன் தேடல்கள் !

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

பொருத்தமான நேரத்தில் பொருத்தம் அறிந்து பொழிவு காட்டிடும் பொக்கிஷங்களின் இதுவும் ஒன்று !

தம்பி ஹிதாயத்துல்லாஹ், உனக்கு ஒரு படி மூத்தவனை பேருக்கு முன்னால் தான் கீரீடம் வைத்து அழைப்போம் ஆனால் உனக்குதானப்ப அந்தக் கீரீடம் பொருந்தும் தமிழாலும் அதன் தரத்தாலும் அதோடு தோண்டியெடுத்து வைத்திருக்கிறாயே முத்தான கேள்வி ! - தூசித் தட்ட யாருமுண்டா ?

சபாஷ்(டா)ப்பா ! தொடருட்டும் உன் தேடல்கள்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். உள்ளபடி சொல்லப்போனால், நான் இருபடி மூத்தவன், ஆனாலும் என்னை இவன் அன்பால் அதிகம் ஈர்தவன்.என் இளைய இளவல்.என்கிரீடம் பறிக்கப்பட்டுவிட்டது. அது என் இளவளுக்கு சூட்டப்பட்டது.இவன் என் குடும்பதொகுதியில் இவன் வால் பகுதி யென்றாலும்,இவன் தலையே அந்த கிரீடத்துக்குப்பொருந்தும்.அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

இந்த தமிழையெல்லாம் விட்டுவிட்டு வடநாட்டு காதைகளை 'இதுதான் தமிழிலக்கிய' மென்று பல்கலைக் கழகத்தில் 'கொலு' வகைத்திருப்பது ஏனோ?
தூசி தட்ட யாருமுண்டா?
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இனி தூசுதட்ட யாருமுண்டா? ஏன் இல்லை நாங்கள் உண்டு என்று முண்டாசு கட்ட(பரிவட்டம்) நம் அதிரை இளைஞர்கள் அணி இனித்திரளும் இந்த மா விழாவின் பின் என்பது திண்ணம்.

sabeer.abushahruk said...

இத்தனை திறன் படைத்தவர்களா நம் மாநாட்டுத் தலைவர் அவர்கள்! கொள்கைச் சிங்கத்தின் கைகளிலா எம் கனவுகளை ஒப்படைத்திருக்கிறோம்! என்னே இறைவனின் மாண்பு! 

மேலே, கிரீடமும் குட்டி கிரீடமும் சொல்லியிருக்கும் எல்லாவற்றிலும் நானும் உடன்படுகிறேன்,

( ஒன்றைத் தவிர....//புது கவிதை?என்று கிருக்கி கொண்டுள்ளோம// பிறிதொரு சமயம் இதைப்பற்றிப் பேசுவோம்)

உண்மையிலேயெ குட்டி கிரவுனின் இலக்கிய, குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய அறிவும், கிரவுனின் தமிழ் சொல் விளையாட்டும் பிரமிக்க வைக்கிறது (pls note, not flattering)

புலவர் பஷீர் காக்கா, மூதறிஞர் அஹ்மது காக்கா மற்றும் எங்கள் ஆசான் ஜமீல் காக்கா ஆகியோர் இம்மாநாட்டின் தொடர்ச்சியாக யாப்பிலக்கணமும் பிழையின்றி எழுதும் சூட்ச்சுமமும் எம் போன்ற ஹைட்ராலிக்ஸ், கம்ப்யூட்டர், எஞ்ஜினியரிங் தலையர்களுக்கு அ.நி.யில் பாடம் எடுத்தால்...தமிழ் தப்பிக்கும் இல்லையா?

ZAKIR HUSSAIN said...

//இன்று பெரியவர்கள் விரும்பாத புது கவிதை?என்று கிருக்கி கொண்டுள்ளோம்.//

"விரும்பாத அல்ல'..."விரும்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும்'

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சபிர்காக்காவின் அன்பு என்னை நெக்குருக வைக்கிறது.
உங்களைப்போல் பண்பாளர்களின் பழகும் வாய்பு அமைந்தது எங்கள் பேறு.எல்லா
புகழும் அல்லாஹுக்கே. சகோ.ஜாஹிரின் கருத்தில் மொத்தமாய் உடன் படுகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த பெருமைவாய்ந்த கல்வியாளர் நம்மூர் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துக்கொள்வது நமக்கும் பெருமையே.

ஆவலுடன் எதிர்ப்பார்கிறோம் சிறப்பு விருந்தினரை.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்

http://peacetrain1.blogspot.com/

இப்னு அப்துல் ரஜாக் said...

"நாற்றங்காலில் விதைகளைத் தூவி நீர் பாய்ச்சி உரமிட்டு வளர்ப்பது போன்றது எங்கள் ஆசிரியப் பணி. இளஞ்சிறார்களின் ஆசை உணர்ச்சிகளைக் கடமைப் பொறுப்புகளாக மடை மாற்றம் செய்யும் சித்து வேலையினை எங்களிடத்தில் ஒப்படைத்த வல்ல இறைவனுக்கே நன்றி."
அழகு வரிகள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு