Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அகல இரயில் பாதையும் மீட்டர் கேஜ் மனதும் - MSM R 7

அதிரைநிருபர் | March 26, 2011 | ,

அகல ரயில் பாதைக் கேட்டு சகோதரர் அ.இ.அப்துல் ரஜாக் (சேஸ். காம் ) தகவல் அறியும்  சட்டம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். புது தில்லிக்கும் ,ரயில்வே அமைச்சுக்கும் , முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கும் அணுகப் போவதாக கூறி ,'வெளி நாட்டில் வாழும்  அதிரை அன்பர்கள் அனைவர்களும் இந்தியத்தூதர் அலுவலகங்கள் மூலமும் விண்ணப்பித்தால் மிக நல்லதாகும்' என்ற கருத்தினை முன் வைத்தார்.

இந்த சிறப்பு விண்ணப்பத்திற்காக ஜித்தாவில் Ayda ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து கலந்து ஆலோசித்தது .எமது கோரிக்கையை தூதரகம் Attestation செய்து தரவேண்டும் என தொலைபேசியில் அனைவர் முன்னிலையில் Welfare கான்சல் அவர்களை கேட்டுக் கொண்டேன்.

ஊர் நலனுக்காக அனைவரும் ஒன்று பட்டு முன்வருவதை வெகுவாக அவர் பாராட்டுவதை ஸ்பீக்கரில் எல்லோரும் கேட்டு இன்புற்றனர். மேலும் சட்டரீதியாக இதை நாங்கள் அட்டெஸ்ட் செய்யமுடியாவிட்டாலும், நட்பின் அடிப்படையில் நம் இனிய தமிழ் மக்களுக்காக ' மனு ஏற்றுக்கொண்டதாக ஒரு Approval செய்து தருவதாகவும் மற்றும் தில்லிக்கு இதை Forward செய்து தருவதாகவும் ஒப்புக் கொண்டார்.

அஃதன்றி, Saudi Fisheries company க்கு மீனவ விசாவில் வந்து மாட்டிக் கொண்ட ஒரு தமிழரின் அவலநிலையை விளக்கினார். சம்பளமின்றி துன்புறும் அறுவரின் பரிதாப நிலையையும் , அதில் ஒருவரின் சுகவீனம் - இரண்டு மாதத்திற்கும் மேலாக "கோமா" வில் மருத்துவ மனையில் கிடந்து மறுபிறவி எடுத்து வந்துள்ளபோது பாஸ்போர்ட்டும் இக்காமா(Resident Permit) ம் காலாவதி ஆகிவிட்டதாம்.


அந்த தமிழரை ஊருக்கு அனுப்ப எம்பாசியே கையை முறிக்கித்தினறிக் கொண்டிருக்கையில், "நீர்  எவரும் பெரிதாக பொருளோ -பணமோ-மருந்தோ கொடுத்து உதவ முடியாவிட்டாலும் ஆறுதலாக ஹாஸ்பிடல் சென்று பாருங்க சார்" என்று அழாத குறையாக கேட்டுக் கொண்டார்.

இதுவரை அவருக்கு உதவி ஒத்தாசையாய் பார்த்து வந்துள்ளது ஒரு மலையாளியும் ,ஒரு ஸ்ரீலங்காத் தமிழருந்தானாம். இங்கு சவூதியில் கிட்டத்தட்ட ஆறு அமைப்புகளில் சிற்சில பொறுப்புகளில் இருந்து வரும் யான் எந்த அமைப்பின் லேபிளில்(லும்) இந்த சேவை செய்யலாம்..?!. முன்னுரிமை கொடுத்து அதிரை அன்பர்களுக்கு அழைப்பு விடுத்து அயர்ந்து போனதே மிச்சம்! அதிரைக் காரர்களுக்கு விளம்பரம் பெறுவது தங்களுக்கு வெருப்பைத்தரலாம். ஆனால்,இச்சேவை மூலம் கான்சல் அவர்களின் விருப்பத்தை பெறலாம் அல்லவா..?!

அகல ரயில் பாதை சீக்கிரம் வருகிறதோ...இல்லையோ ... மீட்டர்கேஜ்லிருந்து நம் இதயங்கள் ஒரு சில செண்டி மீட்டராவது அகலமாகவேண்டும்!!!

-- MSM ராஃபியா

7 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த சிறப்பு விண்ணப்பத்திற்காக ஜித்தாவில் Ayda ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து கலந்து ஆலோசித்தது .எமது கோரிக்கையை தூதரகம் Attestation செய்து தரவேண்டும் என தொலைபேசியில் அனைவர் முன்னிலையில் Welfare கான்சல் அவர்களை கேட்டுக் கொண்டேன். //

ரஃபியா காக்கா : நல்ல அக்கறையுள்ள முயற்சி...

///"நீர் எவரும் பெரிதாக பொருளோ -பணமோ-மருந்தோ கொடுத்து உதவ முடியாவிட்டாலும் ஆறுதலாக ஹாஸ்பிடல் சென்று பாருங்க சார்" என்று அழாத குறையாக கேட்டுக் கொண்டார். ///

மனிநேயம் உள்ளூரத்தான் உறங்குகிறது எழுப்பிவிட உங்களின் இம்முயற்சி பாராட்டத்தக்கதே....!

சிலிர்க்கிறது...

sabeer.abushahruk said...

மூச்சு மட்டுமல்ல
முயற்சியும் இருந்தாலே
மனிதன்
உயிர் வாழ்வதாய் அர்த்தம்!

சகோ. ராபியா முயல்வதில் முன்னால் நிற்பவர் ந்ன்பது அதிரை அறிந்ததே!

வாழ்க!

Yasir said...

// அதிரைக் காரர்களுக்கு விளம்பரம் பெறுவது தங்களுக்கு வெருப்பைத்தரலாம். ஆனால்,இச்சேவை மூலம் கான்சல் அவர்களின் விருப்பத்தை பெறலாம் அல்லவா..?!// நீங்கள் சொல்வது சரிதான் சகோ.ராபியா.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த அய்டாவுக்கு வேறுவேலையே இல்லையா(சொந்த்
வேலையை சொன்னேன்)எப்ப பார்த்தாளும் சேவை,சேவை அப்படா தப்பிவிட்டோம்
ன்னு சிலர் விலகி செல்ல அய்யோடான்னு அய்டா ஓடிவரும்.அல்லாஹ் துணை
நிற்பான்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அகல ரயில் பாதை சீக்கிரம் வருகிறதோ...இல்லையோ ... மீட்டர்கேஜ்லிருந்து நம் இதயங்கள் ஒரு சில செண்டி மீட்டராவது அகலமாகவேண்டும்//

அஸ்ஸலாமு அலைக்கும்,

நீங்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

நல்ல சிந்தனை ஆக்கம்.

காரணங்கள சொல்லி தப்பித்துக்கொள்வதில் முதன்மையானவர்கள் நம்மவர்கள் என்பது மட்டும் உண்மை. நம்முடைய மில்லிமிட்டர் கேஜ் மனம் சற்று விரிவடைய வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிரைக்காரர்களுக்கு விளம்பரம் பெறுவது தங்களுக்கு வெருப்பைத்தரலாம். //

இது போல் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்ததால் தான் நாம் இன்னும் முன்னேரவில்லை. சமூக அக்கறையில் செய்யப்படுவதை விளம்பரம் என்று முதலில் பார்ப்பதே தவறு என்று நான் கருத்துகிறேன். ஒரு தனி நபரோ நண்பர்களோ ஏதாவது ஒர் நற்செயலை செய்தால், அதை விளம்பரத்துக்காக செய்கிறார்கள் என்று சொல்லுவது வேதனையே. அதை ஏன் நாம் இது போல் செய்வதற்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளக்கூடாதா?

அப்துல்மாலிக் said...

இந்தியன் கான்சுலேட்டு இது மாதிரி ஒருவர் ஏர்போர்ட்டில் ஒருவர் பாஸ்போர்ட்டை தவறவிட்டதால் எங்கேயும் செல்லமுடியா நிலையில் இருந்து கடைசியில் ஒரு சில சமூக அமைப்புகள் தீவிர ஈடுபாட்டுடன் தன் தாயகம் திரும்பினார். என்னாதான் குறைந்துவிடப்போகிறார்கள் என்று தெரியவில்லை, மொத்தத்தில் அவர்களும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்தான்

நம்முடைய ஒட்டுமொத்த அகல போராட்டம் மூலம் அகால மரணமடைந்திருக்கும் அகல ரெயில் வரவைக்க பாடுபடும் அனைத்து உள்ளங்களும் பாராட்டக்கூடியவையே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு