Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அணு(வே) உலை ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2011 | , ,

அணுசக்தியைப் பயன்படுத்தி கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி நம் நாட்டில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு உலை அமைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.

அறிவியலின் முனேற்றமாக இது இருந்தாலும் நம் அறிவை சில நேரம் கிள்ளிப்பார்த்து பல உயிர்களை அள்ளிச் சென்று விடுகின்றது இது மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரிடியகவும் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாரளம நமக்கு அள்ளித்தரகூடிய ஒன்றாக அமைந்து விடுகின்றன. காலத்தின் கட்டாயத்தால் இது போன்ற அணு உலைகளை நாம் அமைத்தாலும் அது தரும் பாடங்கள் நமக்கும் நமக்கு பின் வரும் நமது சந்ததிகளும் லேசில் மறக்க கூடியதாக ஒன்றாக இருக்காது என்பது மட்டும் உண்மை.

25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்நோபில் இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்னும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்கங்களையும் உயிர் சேதங்களையும் பற்றி மகிழன்கோட்டை மன்னாரில் இருந்து கொள்ளுக்காடு குப்பன் வரை நன்கு அறிந்து வைத்திருக்கும் போது நமது நாட்டில் அணு உலை என்றதும் அடித்தட்டு மக்களில் இருந்து மேல் தட்டு மக்கள் வரை (விவரம் தெரிந்தவர்கள் இந்த தட்டுக்களுக்கு விவரம் சொல்லுங்கப்பா ) . அணு உலை ஆபத்து பற்றி அறிந்து வைத்துள்ளனர்.


கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி அனைவருக்கும் அடி வயிற்றில் உலையாய் கொதிக்கின்றது காரணம், 25 ஆண்டுகளுக்குப் முன் ஏற்பட்ட அணு உலை விபத்தில் இன்றும் செர்னோபிலில் உள்ள பாறைகள் அங்கு உள்ள தண்ணீரில் இருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளது.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள விபத்து பற்றி தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இந்த இரு நாடுகளும் அணு உலைகளை கையாள்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்கள் ஆனால் அவர்களால் கூட இந்த அணு உலைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. காரணம் மனித உடல்கள் இதன் கதீர் வீச்சை தாங்கிக்கொள்ள முடியாது .

நமது நாட்டில் இப்படி ஒரு அணு உலை பிரச்சினை வந்தால் நமது நாட்டு தொழில் நுட்பமும் அரசும் எந்த அளவுக்கு செயல்படும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே ! சுனாமியால் பாதிப்பு தீயால் பாதிப்பு வெள்ளத்தால் பாதிப்பு என்றால் தொண்டு நிறுவனங்களும் பொது நல ஆர்வார்களும் போய் நின்று உதவி செய்து விடலாம் ஆனால் அணு உலை பாதிப்பு என்றால் நாம் அங்கு கச்சல் கட்டி முண்டா தட்ட முடியாது.

சென்னை அருகில் உள்ளது கல்பாக்ககம் இங்கு நிறுவப்படவுள்ள இந்த அணு உலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டுப்பாடு இழந்து வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் பாதுகாப்பானது என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு சுனாமி தாக்கினால் எந்த வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதும் யாருக்கும் தெரியாது.

தற்போது அமெரிக்காவில் எந்த ஒரு அணு உலையும் புதிதாக நிர்மாணிக்கவில்லை (பார்டி உஷாராகிட்டான்கள்) காரணம் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்து அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டி உள்ளது நாம் பாடம் படிக்கும் முன் உஷாரகிக்கொல்வது கொள்வது நமக்கும் நல்லது நமது சந்ததிகளுக்கும் நல்லது காரணம் அணு உலை என்பது அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மிக கொடிய மிருகம் இது வெளியோ கசிய தொடங்கினால் கட்டுப்படுத்துவது சுலபமல்ல இயற்க்கை சீற்றம் என்பது வரும் போவும் ஆனால் இந்த "செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் !

-S-ஹமீது

15 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அருமையான அறிவியல் செய்தி,
எவ்வளவோ முன்னெச்சரிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்ட ஜப்பான் நாடே இன்று யோசிக்கும் போது அணுகளவும் பாதுகாப்பில்லாத நம்நாட்டில் இதை தவிர்த்து மாற்று முறைகளை கையாள்வதே நாட்டுக்கும் உயிருக்கும் நல்லதாக இருக்கும்

அப்துல்மாலிக் said...

இப்போ என்னாதான் செய்யுறது, கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. இதை எதிர்த்தால் நாட்டின் முன்னேற்றத்து தடை போட்டு பழமையே பேசிக்கிட்டிருக்கானுங்கனு சொல்லுறானுவோ. இதன் மூலம் நாட்டிற்கும்/வீட்டிற்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்பானுஞ்க. இதையெல்லாம் விட பலகோடி ஊழலை தடுத்து அந்த பணத்தை வைத்து வேறு ஏதாவது வழி யோசிக்கலாம், நாடும் வல்லரசாகும். எங்கே விட்டானுவோ இந்த அரயல்சிவாதிங்க. ஜாமீன் வாங்கி நல்லா ருசியா ஆக்கித்திண்டா அந்த ருசி மேலும் தவறு செய்யதான் வழிவகுக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அணுசக்தி மின்சாரம் என்பது அவசியத் தேவையாகிருப்பதும், அனுசக்திகளை வைத்து எவ்வளவோ ஆக்கபூர்மான பயன்கள் பெறமுடியும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை, இருந்தாலும் அதன் மற்றொரு பக்கம் கோர பின்விளைவுகளால் ஏற்படும் பாதிப்புக்களை அறியும்போது இதுவும் தேவையா என்று கேள்வி எழத்தான் செய்கிறது.

வலி என்றால் நிவாரனம் இருந்தால்தான் போக்க முடியும், பாதிப்புகள் வராமல் அதன் நன்மைகள் கருதி அணு உலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்...

அவர்கள் புதிதாக நிறுவாவிடினும் இருப்பதை கட்டிக் காத்து வருகிறார்களே... அதன் பயனைக் கொண்டு !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீது காக்கா,

மிக அருமையான தகவல் பதிவு, சில நக்கலான தங்களின் செற்களும் ரசிக்கும்படி இருந்தது.

அழிவை தரும் அனுமின் உற்பத்திக்கு மற்று வழிகள் நிச்சயம் நிறைய உண்டு.ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்கலாம். ஆதிக்க சக்திகளின் அச்சுறுதல்களே புதிய கண்டுபிடுப்புகளுக்கு தடையாக உள்ளது நம்மை போன்ற அமெரிக்க அடிமை நாடுகளுக்கு.

ஹமீது காக்கா வித்யாசமான அலசல். பகிர்வுக்கு மிக்க நன்றி..

ZAKIR HUSSAIN said...

அணுவே உலை...தலைப்பே சூப்பர்.. சாகுல் எழுதியிருப்பதால் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கிறது.

கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் போட்டோ...குடிபோகும்போது, பால் பொங்கும்போது எடுத்ததா?

தமிழெழுதி காணாமல் போய் விட்டது..மெனக்கட்டு "தேன் துளி" போய் எழுதி வந்தேன்..யாரும் போகாததால் ரொம்ப ஈசியா அக்ஸஸ் பன்னமுடியுதுலெ.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தமிழெழுதி காணாமல் போய் விட்டது..மெனக்கட்டு "தேன் துளி" போய் எழுதி வந்தேன்..யாரும் போகாததால் ரொம்ப ஈசியா அக்ஸஸ் பன்னமுடியுதுலெ.//

அசத்தல் காக்கா: உங்களுக்கு தனி மின்அஞ்சலில் தெளிவிக்கிறேன் நேரடியாக தட்டி தட்டிக் கொடுதப்பது எப்படி என்று !

அதிருக்கட்டும்... எங்கேயும் உமர்தமிழ் எங்கேயும் கானாமல் போகவில்லை... அங்கேயே "உமர்தமிழ்" என்ற வழித்தடம் இருக்கிறது அழுத்தினால் புதுவீட்டுக்கு அழைத்துச் சென்று தேத்தனி போட்டுக் கொடுத்து நாற்காலி போட்டு ஆற அமர உட்கார்ந்து எழுதச் சொல்லும்... அதற்கு இன்னும் கட்டுமானப் பனிகள் இருப்பதாலும் கொத்தநார்களுக்கு வேறு பணிகளில் சுமை கூடியிருப்பதாலும் சீக்கிரமே காண்ட்ராக்டை முடிச்சு கொடுத்திடலாம்...

Yasir said...

"அனு”க்‌ஷா பின்னாடி போனாலும்
”அணு” பின்னாடி போனாலும்
ஆபத்துதான் என்று தனக்கே உரிய பாணியில் வடித்து இருக்கிறீர்கள் காக்கா..தொகுத்தவிதம் அழகு

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//அணுவே உலை...தலைப்பே சூப்பர்.. சாகுல் எழுதியிருப்பதால் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கிறது//

பெயர் வைக்க ஆடு ஒட்டகம் எல்லாம் வெட்டி நம்ம அபு இப்ராகிம் வைத்த பெயர் அதன் தூக்கலா இருக்கு

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

Yasir சொன்னது…
//"அனு”க்‌ஷா பின்னாடி போனாலும்
”அணு” பின்னாடி போனாலும்
ஆபத்துதான்//

அணு என்றாலே ஆபத்து என்பதை அந்த அனு சிம்பாலிக்க சொல்லிட்டாங்க

crown said...

இந்த "செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் !
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அனு,அனுவா அனுபவித்து இதன் ஆபத்தை பற்றிய எச்சரிக்கை கட்டுரை அருமை.(யாரங்கே மாயவியா? மர்ம யோகியா இது ஜால்ராவான்னு பிறகு சொல்லனும்).சிறு தவறு எழுத்தின் போக்கில் மன்னிகவும்.பெரும் நாற்றம் என்பது நல் வாசனையை குறிக்கும் சொல் துற்னாற்றம் என்பதே கெட்ட வாசனை. ( நறுமணமே நாற்றம் என்பது).

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Naina Mohamed சொன்னது…

சகோ. தஸ்தகீருக்கு,

நீர் தமிழ் கற்றுக்கொண்டது சண்முகம், ராமதாஸ் வாத்தியார்களிடமா? இல்லை வள்ளுவன், வைரமுத்துவிடமா? இங்கு எதை எழுதினாலும் பொழந்து கட்டுகிறீரே? கலிஃபோர்னியாவிலிருந்து தினம், தினம் காவியம் படைக்கிறீரே? தமிழ் மேல் அதீத பற்றா? இல்லை அதன் மேல் பித்தா? ஆகட்டும்....உம் தமிழ்த்தொண்டு தொடரட்டும்....உம் இளைய தமிழ் இணையத்தில் பிண்ணட்டும்....வாழ்த்துக்கள்...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Reply Thursday, June 02, 2011 9:23:00 AM

அதிரைநிருபர் பதிப்பகம் said...

Shameed சொன்னது…

நல்லா நா(மா)ற்றமான திருத்தம் நன்றி கிரௌன் !

crown said...

Naina Mohamed சொன்னது…

சகோ. தஸ்தகீருக்கு,
நீர் தமிழ் கற்றுக்கொண்டது சண்முகம், ராமதாஸ் வாத்தியார்களிடமா? இல்லை வள்ளுவன், வைரமுத்துவிடமா? இங்கு எதை எழுதினாலும் பொழந்து கட்டுகிறீரே? கலிஃபோர்னியாவிலிருந்து தினம், தினம் காவியம் படைக்கிறீரே? தமிழ் மேல் அதீத பற்றா? இல்லை அதன் மேல் பித்தா? ஆகட்டும்....உம் தமிழ்த்தொண்டு தொடரட்டும்....உம் இளைய தமிழ் இணையத்தில் பிண்ணட்டும்....வாழ்த்துக்கள்..
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ. நைனா நலம், நலமறிய ஆவல். நிற்க! தமிழ் கற்றது ஆசான் ராமதாஸிடம் . பெற்றது முன்னால் முதல்வர் மு.க விடம் செவிவழியும், படித்தறிந்தும். ஆனாலும் தமிழில் இருந்த வட மொழிச்சொல் கலப்பு, ஆரிய கோட்பாடின் திணிப்பு அதனால் அந்த இனிப்பு தமிழும் ஆனாது சற்று கசப்பு. இதில் ஒழிவோ, மறைவோ இல்லை. ஆனாலும் தமிழ் மொழி நம் தாய்,தந்தை மொழியல்லவா? அதனால் அதன்மேல் ஒருதலைக்காதல் இருந்தது இன்னும் இருபது என்னவோ உண்மைதான் ஆனாலும் நான் ஒன்றும் அதிகம் அறிந்தவன் அல்லன். எல்லாபுகழும் அல்லாஹுக்கே, அன்பிற்கும்,வாழ்துக்கும் நன்றி.

sabeer.abushahruk said...

ஹமீது, நீங்க பேசாம ஒரு முழு நீள ஆராய்ச்சிக் கட்டுரை எழுதலாம். அந்தளவுக்கு ஈடுபாடு தெரிகிறது உங்கள் எழுத்தில். சமீபத்தில் ரசித்த கேள்வி பதில்களில் இது தலையாயது.

//இல்லை வள்ளுவன், வைரமுத்துவிடமா//

//தமிழ் மொழி நம் தாய்,தந்தை மொழியல்லவா? அதனால் அதன்மேல் ஒருதலைக்காதல்//

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு