Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இந்திய தூதரக அதிகாரிகள் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , ,

அன்புடையீர் !

ஜித்தா இந்தியத் தூதரகத்திற்கு பாஸ்போர்ட் செக்ஷன் கவுன்சிலராக ஒரு தமிழர் நியமிக்கப் பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.திரு தாஸ் ஜெயச்சந்திரன் என்ற இவர் இனிமையாகப் பழகும் ஓர் தமிழ் ஆர்வலர். தூத்துகுடி பகுதியைச் சேர்ந்தவர். ஜெத்தா தமிழ் சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கப்பட்டார்.

ஏற்கனவே மதிப்பிற்குரிய S.D. மூர்த்தி அவர்கள் திருச்சிப் பகுதியைச்சேர்ந்த தமிழ்த் தாக்கமும் தேசப் பற்றும் ஒரு சேரப் பெற்ற நற்றமிழர்.சென்ற வருடம் வரை ஹஜ் செக்ஷனை கவனித்து வந்து ஹாஜிகளின் துஆக்களை அள்ளிக் கொண்ட நம் நண்பர் ,இவ்வருடம் மக்கள் நலத்துறை - welfare - கான்சளாக உயர்த் தப்பட்டுள்ளார்.


நாகர்க்கோவில் பகுதியைச்சேர்ந்த மரியாதைக்குரிய முபாரக் அவர்கள் ஒரு இளம் அதிகாரி.ஹஜ் கான்சலான இவர்களோ அனைவரும் மெச்சும் வன்ணம் தனது பணிகளை செவ்வனே செய்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.


மும்மூர்த்திகளாய் மூன்று தமிழ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பெற்றது யாம் பெற்ற பெரும்பேறு!

- ரஃபியா

5 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரஃபியா காக்கா அவர்கள் நல்லினக்கத்தோடு நட்பு போற்றுவதிலும் அதனன தொடர்வதிலும் என்றுமே முன்னுதாரனமே !

நல்ல பகிர்வு !

துபாய் இந்திய தூதரகத்தில் நெருக்கம் கொண்டிட பக்கத்து மாநிலத்தார் என்றுமே முன் வரிசையில் இருப்பார்கள் ! ஏனோ நமக்குத்தான் நட்பு போற்றிட வாய்ப்புகள் குறைவே !

முபாரக் அவர்கள் இங்கு துபாய் இந்திய தூதரகாத்தில் இருந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து இருக்கிறோம்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


நாம் வாழும் இடங்களில் (வெளிநாடோ அல்லது உள்நாடோ) பணியில் அமர்த்தப்படும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் (மார்க்க வரம்புக்குட்பட்டு) மரியாதையும், கண்ணியமும் கொடுத்தால் அதன் மூலம் நம் சமுதாயத்தின் மேல் அவர்களுக்கு ஒரு ஈர்ப்பும், மரியாதையும், அன்புன் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. அதன் மூலம் நமக்கு வேண்டிய நலத்திட்டங்களையும், தேவைகளையும் நாம் அவசியம் வரும் சமயம் நிறைவேற்றிக்கொள்ள இது பேருதவியாக இருக்கும்.

நாம் இன்று எப்படி நம் வாழ்வில் சந்தித்த நல்ல பல உள்ளங்களையும், எளிதில் மறக்க முடியா மனித நேயம் கொண்ட மனிதர்களைப்பற்றியும், நாம் வேலை செய்த இடங்களில் சந்தித்த நல்ல பல மனிதர்களைப்பற்றியும் மலரும் நினைவுகளிலிருந்து நாம் கட்டுரைகள் பல எழுதி அவர்களை இன்முக‌த்துட‌ன் நினைவு ப‌டுத்துகிறோமோ அது போல் அவ‌ர்கள் த‌ங்க‌ள் வாழ்வின் சுய‌ச‌ரிதையை எழுதும் ச‌ம‌ய‌ம் ந‌ம் ந‌ன்ன‌ட‌த்தை, ந‌ற்ப‌ண்புக‌ளையும், ம‌ரியாதையையும் அவ‌ர்க‌ள் பிற்கால‌த்தில் த‌ங்க‌ள் எழுத்திலோ அல்ல‌து பேச்சிலோ நிச்ச‌யம் எங்கோ ப‌கிர்ந்து கொள்வார்க‌ள். அத‌ற்கு இது போன்ற‌ ந‌ல்ல‌ அணுகுமுறையும் அவ‌ர்க‌ளுக்கு செய்யும் பாராட்டும் உத‌வி புரியும் என்ப‌தே என் க‌ருத்து. சகோ ரஃபியாவின் இது போன்ற நல்ல முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.

பாராட்டுகிறோம் என்று சொல்லி மார்க்க‌ எல்லை தாண்டி சென்று விட‌க்கூடாது.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரை முஜீப் said...

சகோதரர் ரஃபியா அவர்களூக்கு சலாம்.

திரு தாஸ் ஜெயச்சந்திரன்,S.D. மூர்த்தி போன்ற மாற்று மத தமிழ் சகோதரர்கள் உங்களிடம் தொடர்புகளில் உள்ளதால், அவருக்கு சத்திய மார்கத்தை எத்தி வைப்பதும் உங்களின் கடமையாகும். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓர் இறைவனை நீங்கள் நினைவூட்ட வேண்டும். சத்திய மார்க்கம் பிறந்த இடத்தில் இவர்கள் பணிபுரிவதால் இவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நேர்வழியை காட்ட நாம் அனைவரும் துவா செய்வோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பகிர்வுக்கு மிக்க நன்றி..

சகோதரர் முஜீப் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்..

மேலும் ஹாஜிகளுக்கு சேவை செய்யும் பொறுப்பில் இருந்து நன்மதிப்பை பெற்றவருபவர்களும் நம் தூய மார்க்கத்தை எட்டிப்பிடிக்க இறைவனிடம் துஆ செய்வோம்.

அப்துல்மாலிக் said...

நல்ல விஷயம், வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு