Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ECR சாலையும் ஆம்புலன்ஸ் சேவையும்... 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பொயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவுற்றது, புதிய அரசு பதவி ஏற்று திட்டங்கள் செயல்படுத்தும் என்பது ஒரு வகையான நம்பிக்கையாக இருந்தாலும், காலத்தின் கட்டாயம் கருதி தற்போதைய சூழலில் மக்களே நம் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையிலேயே நாம் இருக்க வேண்டிய நிலை அதிரை போன்ற ஊர்களில், இது தான் எதார்த்தம்.

இந்த ஆக்கம் எழுதுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் ஒன்று ECR சாலையில் ஏற்படும் சாலைவிபத்துக்களும், அவசர உதவிக்கு அதிரையில் மக்களுக்கு உதவக்கூடிய நவீண வசதியுள்ள அவசரவூர்தி இல்லாமையும்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வசிக்கும் அன்பு சகோதரர் சேக்தாவுத் அவர்கள் ECR ரோடு பற்றியும் அவ்வழியே நடக்கும் விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று எமக்கு ஓர் மடல் எழுதியிருந்தார்கள்.

இந்நிலையில் சவுதியில் இருக்கும் சகோதரர் S ஹமீது அவர்களின் நெருங்கிய நண்பர் சில வாரங்களுக்கு முன்பு சவூதியில் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்த செய்தி கேட்டதும், மிகவும் வருத்தமாக இருந்தது, அதேவேலையில் நம்மூரில் சமீப காலமாக ஏற்பட்ட கொடூர சாலை விபத்துக்களும், அவ்விபத்துக்களுக்கு உடனடி உதவி செய்யமுடியாமல் போவதும் மட்டும் ஞாபத்தில் வந்து விழிப்புணர்வு சிந்தனைகளை நம் மக்களிடம் அதிகப்படுத்தவேண்டும் என்ற அடிப்படியில் சில கருத்துக்களை இங்கு உங்கள் முன் வைக்கிறோம். உங்கள் சிந்தனைக்கு உதித்த தகவல்களாக இருந்தால் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம்.

- நான்கே மணிநேரத்தில் அதிரையிலிருந்து துத்துக்குடிக்கு செல்லமுடியும் என்பதை நிரூபித்துள்ளது ECR ரோடு, இதில் வியாபர நிமித்தமாக அநேக அதிரைவாசிகள் அன்றாடம் துத்துக்குடிக்கு சென்று வருகிறார்கள். இந்த ஈசிஆர் ரோட்டில் விபத்துக்கள் நடைப்பெறாத நாளே இல்லை. நெடுஞ்சாலைத்துறையும் விபத்துக்களை தடுப்பதற்கு பாதுக்காப்பிலும், விழிப்புணர்வுவிலும் அக்கறைக்காட்டுவது குறைவு என்பது நாடறிந்த உண்மை.

- விபத்துக்களை தடுக்கும்விதமாக சாலையோரங்களிl கடைவத்திருப்பவர்கள் அவ்விடங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்வதன் மூலம் தங்களின் வியாபரங்களுக்கும் பொதுமக்களின் உயிர்களுக்கும் உத்திரவாதம் கொடுக்கலாம்.

- ECR சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்திவைத்திருப்பதே அதிக விபத்துக்களுக்கு காரணம். அதிரைப் போன்ற ஊர்களில் இது போன்ற விபத்துக்கள் குறைவு என்றாலும் துத்துக்குடி துறைமுகத்தில் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் வரும் நாட்களில் வாகனப் போக்குவரத்து மிக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- ECR சாலையில் செல்லும் வாகனங்கள் தொடர்பாக வானொலி, கேபில் டிவி, பத்திரிக்கை, ஜும்மா மேடைகள், பள்ளிவாசல்கள் போன்றவைகளில் அறிவிப்புகள் செய்ய வேண்டும்.

- ECR சாலையை ஒட்டியுள்ள காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சாலையோரங்களில் விபத்து எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் நிறுவ பள்ளி நிர்வாகங்கள் முன் வரவேண்டும்.

- ECR சாலையை ஒட்டியுள்ள தெருக்களில் விபத்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை அதிரை பேரூராட்சி நிறுவவேண்டும்.

நெடுஞ்சாலைதுறை தொடர்பான புகார்களை கீழே உள்ள இந்த இரண்டு இணையத்தளங்களில் தெரிவிக்கலாம்



ECR சாலை தொடர்பாக உங்கள் கருத்துக்களை பதியுங்கள், இன்ஷா அல்லாஹ் நம் அதிரைநிருபர் சார்பாகவும் உடனே ECR சாலை தொடர்பான புகார் மற்றும் ஆலோசனைகளை உடனே மேல் குறிப்பிட்டுள்ள இணையத்தில் பதிந்துவிடலாம்.

சரி முக்கிய விசயத்துக்கு வருகிறோம், என்ன தான் வசதிவாய்ப்புகளுடன் கனிசமான மக்கள் அதிரையிலும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பரந்து விரிந்து அன்றாட பொழுதை கழித்து வந்தாலும். இவ்வளவு பெரிய ஊரில் முறையான அவசர உதவிக்குரிய மருத்துவமனைகள் இல்லை. உருப்படியான நவீன சாதனங்களுடன் கூடிய அவசரஊர்தி (ஆம்புலன்ஸ்) இல்லை.

சரி நம் ஷிஃபா மருத்துவமனைக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார்கள் நல்லுள்ளம் கொண்ட பெரியோர்கள். அவசரஊர்தி மற்றும் மருத்துவமனை புத்துணர்வு போன்ற நல்ல செய்திகள் விரைவில் வரும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருக்கிறோமே தவிர இன்னும் முழுமையான செயல்வடிம் இதுவரை இல்லை.

இது ஒரு புறமிருந்தாலும், அதிரைக்கு நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு ஆம்புலன்ஸ் சேவைகள் அவசியம் தேவை. இது காலத்தின் கட்டாயம். நவீன வசதியில்லாத ஆம்புலன்ஸ்களால் எந்த பயனுமில்லை, அதற்காக அதிரை பைத்துல்மாலில் உள்ள ஆம்புலன்ஸை குறை கண்டு சொல்லுவதாக அர்த்தமாகாது. அதிரை பைத்துல்மாலின் ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தாலும், இன்றைய காலகட்டதில் அதிரைக்கு பைத்துல்மால் ஆம்புலனஸ் மட்டும் போதாது. சரி வேறு என்னதான் வழி?


கடந்த இரண்டு வருடங்கலாக அதிரை தமுமுக சகோதரர்கள் அதிரைக்கு நவீண வசதியுள்ள ஆம்புலன்ஸ் கொண்டுவரும் முயற்சியில் பணம் வசூல் செய்துவருகிறார்கள், அதிரையின் அநேக வலைப்பூகளிலும் செய்தியாக வெளியிட்டார்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டார்கள், இன்னும் வெளிநாடுகளில் சகோதரர்கள் அரும்பாடுபட்டு வசூல் செய்துவருகிறார்கள், அவர்களின் அதிரை வலைப்பூவிலும் நீண்ட நாட்களாக அறிவிப்புகள் இருந்துக்கொண்டே இருக்கிறது. இது நாள் வரை தேவையான தொகை வசூலாகவில்லை. நவீன ஆம்புலனஸ் சேவையின் நன்மையை பற்றி அறியாததே இன்னும் அதிரைக்கு ஆம்புலனஸ் கொண்டு வரவேண்டும் என்ற அதிரை த மு மு க சகோதரர்களின் முயற்சியில் தடங்கள் ஏற்படடுள்ளது. ஊருக்கு பொதுப்படையான அவசியத் தேவை என்பதை கருத்தில் கொண்டு நல்லுள்ளம் கொண்ட யாவரும் தங்களால் ஆன உதவிகளை அளித்து உதவுங்கள். ஆம்புலன்ஸ் தொடர்பாக உதவி செய்ய விரும்புபவர்கள் கீழே உள்ள நபர்களை தொடர்புக்கொள்ளலாம்.

அதிரை தமுமுக: தலைவர் – உமர் தம்பி +918056860836, துணை தலைவர் –சாதிக்பாஷா +919942033233 / adiraitmmk@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

அமீரக தமுமுக கிளை: அதிரை அஸ்ரப்: +97155 9738367

இங்கு இவர்கள் ஈடுப்படுகிறார்கள் அவர்கள் ஈடுபடுகிறார், இவன் சரியில்லை அவன் சரியில்லை என்ற எண்ண ஓட்டங்களே எவ்வளவோ நல்ல காரியங்கள் நம்மூரில், நம் சமுதாயத்திற்காக நிறைவேற்றுவதற்கு தடையாகிப்போகிறது என்பதை எண்ணிப்பார்க்கையில் வேதனையாகவே உள்ளது. அதிரைக்கு ஆம்புலன்ஸ் தேவை என்ற செய்தியை படிக்கும் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஆம்புலன்ஸின் அவசியத் தேவை அனுபவரீதியாக என்றாவது ஒருநாள் உணர்த்தப்பட்டிருக்கலாம். இவைகளை மனதில் முன்னிருத்தி ஊருக்கு ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவர எல்லோரும் உதவ வேண்டும் என்பதை நடுநிலையோடு கேட்டுக்கொள்கிறோம்.

அரசின் சார்பாக ஓர் அம்புலன்ஸும் அதிரைக்கு அவசியம். இதனை வழியுறுத்த அதிரை வாழ்மக்கள் அனைவரும் தேர்தல் முடிவுகளில் உள்ள இனிப்பு கசப்புகளை மறந்து முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதைப்போன்று அதிரைக்கு ஆம்புலன்ஸ் கொண்டுவரும் முயற்சியில் வேறு எந்த இயக்கங்கள் முன்வந்தாலும், ஊர் நலனை மனதில் வைத்து எல்லோரும் உதவி செய்ய வேண்டும்.

நாம் சாலைவிதிகளை மதிப்போம், நம் உடல் நலன் பேணுவோம், ஊர் நலன் காப்போம்.

அல்லாஹ் போதுமானவன்.

-- அதிரைநிருபர் குழு

Thanks to Br. Sheik Dawood

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சரி நமது தொகுதிக்காக நின்று அதிரையிலேயே டெண்ட் அடித்து ஓட்டு வசூல் செய்த காங்கிரஸ் முன்னாள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏ. ரங்கராஜன் ஏற்கனவே அதிரைநிருபரில் பேட்டியளித்திருக்கிறார் ! அதிரைக்கு அவசியம் 108 அரசு அவசர ஊர்தி சேவை கிடைக்க முயற்சிப்பேன் என்று ! அதனைக் கொண்டும் அவரின் முயற்சியையும் துரிதப் படுத்தலாமே !

சமீபத்தில் நமதூர் வலைத்தளங்களிலும் லண்டன் வாழ் அதிரைச் சகோதரர்களின் ஆதங்கமும் அவர்க்ளின் அவசியத் தேவை உணர்ந்து வெளியிட்ட உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நோக்கம் நல்லதை நாடியே இருப்பதால் இதனை அவசரகால முயற்சியாக செய்திட மக்கள் முன் வரவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

Shameed said...

அதிரைக்கு தேவை ஆம்புலன்ஸ் சேவை


ஓட்டுனர்களுக்கு ஒரு கல்வி தகுதியை நிர்ணயம் செய்து ஓட்டுனர் உரிமம் வழங்கவேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

போக்குவரத்துக்கு ஈசியான சாலை என்று சொல்லி நடைப்பாதைக்கு கஷ்டத்தை கொடுத்திட்டாங்க.. காதர் முகைத்தீன் பள்ளிக்கு செல்லும் சாலை அருகே எவ்வித எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்து ஆரம்பித்திருப்பதால், வரும் மாதங்களில் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ மாணவிகளிடம் கவணம் அவசியம் தேவை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு