Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தோழர்கள் வரலாறு - நூல் வெளியீடு - சத்தியமார்க்கம்.com அழைக்கிறது ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2011 | , ,


அல்லாஹ்வின் திருப் பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். 

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!



அன்பிற்கினிய வாசக நேசங்களுக்கு,

நம் அதிரைநிருபர் வலைத்தளமும் ஊரிலிருக்கும் சகோதரர்களிடம் வேண்டுவது, இதனை நேரடி அழைப்பாக ஏற்று அவசியம் சிரமம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் சத்தியமார்க்கம்.com வலைத்தளம் பதிப்புலக உலகில் முதல் அடி எடுத்து வைக்கிறது. இவர்கள் (சத்தியமார்க்கம்.com வலைத்தளம்) சாதிக்க இணைந்தவர்கள். இவர்களின் இம்முயற்சி நிச்சயம் யாவருக்கும் நன்மையை நாடியே இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

இந்த புத்தகம் வெளிவர அயாரது பாடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, அவர்களின் நற்கருமங்களை வல்ல நாயன் அங்கீகரிப்பானாக.

எங்களின் வாழ்த்தும் துஆவும் என்றும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்...

- அதிரைநிருபர் குழு

தோழர்கள் நூல் வெளியீடு அழைப்பிதழ்!


7 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தோழர்கள் வரலாறு -நூல் வெளியிடு விழாவிற்கு (அ.நி) மூலமாக அழைப்பு கொடுத்திருக்கும்
சத்திய மார்க்கம்.காம் குழுவினருக்கு மிக்க நன்றி.

நபி(ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற அந்த சஹாபாக்கள் போல் நம் வாழ்க்கையை அமைத்து கொள்ள அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர்ந்து இதுவரை வெளிவந்த எல்லா தொடர்களை வாசிக்காவிட்டாலும் இடையிடையே ஏராளமான தகவல் பொக்கிஷமாக அடங்கிய தொடரை வாசித்து இருக்கேன்... அல்லாஹ்வின் உதவியால் நூலாக வெளிவர இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் !

நிச்சயம் ஒவ்வொருவம் வாங்கிப் படிக்க வேண்டிய வரலாற்று நூலாக அமையும், அதனை தோழர்கள் தொடரிலேயே நிருபித்தும் இருக்கிறார் சகோதரர் நூருத்தீன்.

சத்தியமார்க்கம் பதிப்பகம் இதைத் தொடர்ந்து மேலும் பயனுள்ள நூல்களை வெளியிட துஆச் செய்கிறேன்..

வாழ்த்துக்கள் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தோழர்கள் வரலாற்றை புத்தகமாக வெளியிடும் சத்தியமார்க்கம் இணையதளத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

அறியாத தகவல்களை தொகுத்தளித்துவரும் தோழர்கள் தொடர் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

பெரும்பாலான தோழர்களைப்பற்றி சத்தியமார்க்கம் தளத்தில் வாசித்து பயனுற்றவன் என்ற முறையில் சொல்கிறேன், இந்நூல் இத்தலைமுறையைச் சற்று, "நில், கவனி, செல்" என்பதுபோன்றதொரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.


தோழர்கள்...
சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!

தொடராக வந்தச்
சுடர்!

போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!

கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில் 
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்தத் 
தோழர்கள் சரிதை!

நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!

சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாயகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!

வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!

இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!

அலாவுதீன்.S. said...

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்!
தோழர்கள் பதிவு அனைத்தையும் படித்தேன்.


ஈமானில் உறுதி
தன் உயிருக்கும் மேலாக
நபி(ஸல்) அவர்கள் மேல்
ஸஹாபாக்கள்(ரலி) வைத்த பாசம்
எதற்கும் வளைந்து கொடுக்காத நெஞ்சுறுதி
மார்க்கத்திற்காக தன் உயிரை கொடுத்த தியாகம்
இப்படிப்பட்ட தோழர்களை இதுவரை
உலகம் கண்டதில்லை!

ஸஹாபாக்களின் உறுதியான
ஈமான், தியாகம் இவைகளை
கண் முன்னே கொண்டு வந்து
படித்த உள்ளங்களை அவர்களின்
தியாகம் கண்டு மனம் உருகி
கண்களில் நீர் வரச்செய்த
மெய் சிலிர்க்க வைத்த
இந்த உண்மை வரலாறை
அழகிய எழுத்து நடையில்
சலிப்பு கொள்ளாத எழுத்து நடையில்
நம் மக்களின் நடவடிக்கைகளையும்
ஆங்காங்கே கோடிட்டு காட்டிய
மிகச்சிறந்த எழுத்தாளர்
சகோதரர் நூருத்தீன் அவர்களுக்கு
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!



நல்லமுறையில் புத்தகம் வெளிவரவும்
இதற்காக உழைத்த அனைவருக்கும்
சத்தியமார்க்கம் வலைதளத்திற்கும்
வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!

சகோதரர் ஆசிரியர் நூருத்தீன்
அவர்களை நேரில் சந்தித்து
சிலமணி நேரங்கள் பழகும் வாய்ப்பு
கிடைத்ததும் மகிழ்ச்சியே!
அல்ஹம்துலில்லாஹ்!

அலாவுதீன். S.

Muhammadh said...

மாஷா அல்லாஹ்
அருமையான பதிப்பு, இந்த விஷயத்தை சென்னை வாழ் அதிரை மக்கள் அனைவருக்கும் எட்டுமாறு செய்ய வேண்டும் . இங்கே குறிப்பிடபட்டிருக்கும் இருவரும் மிகச்சிறந்த பேச்சாளர்கள் என்பதை நான் அவர்களுடைய உரையை கேட்டதால் கூறுகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் அல்லாஹ் த ஆலா கலந்து கொள்ள நாடுவானாக,,, ஆமீன்!!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் கவிக் காக்காவின் இந்த வாழ்த்துக் கவிதை சத்தியமார்க்கம் பதிப்பகம் வெளியிட்ட தோழர்கள் நூல் வெளியீட்டு விழாவில் சான்றோர் கூடி நிறைந்த சபையில் வாசிக்கப்பட்டதை அறியத்தருகிறோம் ! - அல்ஹம்துலில்லாஹ் !

------------------
தோழர்கள்...
சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!

தொடராக வந்தச்
சுடர்!

போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!

கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்தத்
தோழர்கள் சரிதை!

நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!

சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாயகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!

வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!

இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!
------------------------

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு