Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 3 42

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2012 | , , , ,


உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (3)

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட இடம் இந்தியா என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் சான்றுகள்.

حَدَّثَنَا الحسن بن يحيى ، قال : أخبرنا عبد الرزاق ، قال : أخبرنا معمر ، عن قتادة ، قال : " أهبط الله عز وجل آدم إلى الأرض ، وكان مهبطه بأرض الهند " 

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான். அவர்கள் இறங்கிய இடம் இந்தியாவாக இருந்தது என்று கதாதா அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: மஃமர்

(حديث موقوف) حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ سِنَانٍ ، قَالَ : حَدَّثَنَا الْحَجَّاجُ ، قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ يُوسُفَ بْنِ مِهْرَانَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلامُ : " أَطْيَبُ أَرْضٍ فِي الأَرْضِ رِيحًا أَرْضُ الْهِنْدِ ، أُهْبِطَ بِهَا آدَمُ فَعَلِقَ شَجَرُهَا مِنْ رِيحِ الْجَنَّةِ " .

பூமியில் நறுமணம் மிகுந்த இடம் இந்தியா, அங்குதான் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பெற்றார்கள். அங்கிருக்கும் மரங்கள் சுவனத்தின் நறுமணத்தைப் பெற்றுள்ளன என்று அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – யூஸுஃப் இப்னு மிஹ்ரான்


 (حديث موقوف) حَدَّثَنَا أَبُو هَمَّامٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، قَالَ : حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ ، عَنْ أَبِي يَحْيَى . بَائِعِ الْقَتِّ قَالَ : قَالَ لِي مُجَاهِدٌ : لَقَدْ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ، " أَنَّ آدَمَ عَلَيْهِ السَّلامُ نَزَلَ حِينَ نَزَلَ بِالْهِنْدِ ، وَلَقَدْ حَجَّ مِنْهَا أَرْبَعِينَ حِجَّةً عَلَى رِجْلَيْهِ

ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள்  அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது

حَدَّثَنَا ابن حميد ، قال : حَدَّثَنَا سلمة ، عن ابن إسحاق ، قال : وأما أهل التوراة فإنهم ، قالوا : " أهبط آدم بالهند على جبل ، يقال له : واسم عند واد يقال له : بهيل بين الدهنج والمندل ، بلدين بأرض الهند ، قالوا : وأهبطت حواء بجدة من أرض مكة ، وقال آخرون : بل أهبط آدم بسرنديب على جبل يدعى بوذ 

தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள்.  இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர்.  அறிவிப்பவர் – அபூ இஸ்ஹாக்

وأخرج ابن جرير وابن أبي حاتم والحاكم وصححه عن ابن عباس قال أول ما أهبط الله آدم إلى أرض الهند وفي لفظ بدجنى أرض الهند

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் முதலில் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது. அறிவிப்போர்: இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம்

(حديث موقوف) حَدَّثَنِي الْحَارِثُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ سَعْدٍ ، قَالَ : حَدَّثَنَا هِشَامُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " أُهْبِطَ آدَمُ بِالْهِنْدِ وَحَوَّاءُ بِجِدَّةَ , فَجَاءَ فِي طَلَبِهَا حَتَّى اجْتَمَعَا , فَازْدَلَفَتْ إِلَيْهِ حَوَّاءُ فَلِذَلِكَ سُمِّيَتِ الْمُزْدَلِفَةَ ، وَتَعَارَفَا بِعَرَفَاتٍ فَلِذَلِكَ سُمِّيَتْ عَرَفَاتٍ ، وَاجْتَمَعَا بِجَمْعٍ فَلِذَلِكَ سُمِّيَتْ جَمْعًا ، قَالَ : وَأُهْبِطَ آدَمُ عَلَى جَبَلٍ بِالْهِنْدِ ، يُقَالُ لَهُ : بُوذُ " .

ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப் பெற்றார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள். ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா (அலை) அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்தபொழுது ஹவ்வா (அலை) அவர்களும் அவர்களை நெருங்கினார்கள். அவர்கள் இருவரும் நெருங்கி வந்த இடம் முஸ்தலிஃபா என்று அழைக்கப் பெற்றது. பின்னர், அவர்கள் இருவரும் அரஃபாத் என்ற இடத்தில் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டதால், அந்த இடம் அரஃபா என்று பெயர் பெற்றது. இன்னும் அவர்கள் இருவரும் ஜம்உ எனும் இடத்தில் ஒன்றிணைந்தனர். அதனால், அவ்விடம் ஜம்உ என்று பெயர் பெற்றது. இன்னும், ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் பூத் என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஸாலிஹ்

இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன.

மேற்கண்ட அறிவிப்புகளில், இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று வரும் அறிவிப்பில் வரும் தஞ்ச் என்ற வார்த்தை தெங்கணம், (தென்+கணம்) என்ற வார்த்தையை ஒத்திருக்கின்றது. இன்னும், அவ்வறிவிப்பில் வரும் மன்தல் எனும் வார்த்தை (மண்டல், கோரமண்டல்) போன்ற இந்தியாவின் தென் பகுதிகளின் பெயர்களுடன் ஒத்துப் போகின்றது. 

தஞ்ச்  எனப் பெயர் கொண்ட அல்லது அப்பெயருடன் தொடர்புள்ள நிலப்பகுதி ஏதும் தமிழ்நாட்டின் பகுதியாக இருந்ததா என்ற கேள்வியுடன், இணையத்தில் தேடும் பொழுது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.

கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார். தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.


பண்டைய தமிழகத்தின் பாண்டிய நாட்டின் பகுதிகளாக 49 நாடுகள் இருந்தன வென்றும் அவற்றில் தெங்க நாடு என ஒன்று இருந்தது என்ற தகவல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் தொடர்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குணகரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை 
இணருபின் பாலையோ டேழ்தலை மேய 
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே. 

(ஏழ்தலைமேய - ஏழ்என்னும் எண்ணை முதலிலுடைய ஏழ்குணகரைநாடு, ஏழ்குன்றநாடு,
ஏழ்குறும்பனை நாடு, ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை
நாடு எனக் கொள்க.)

மாறிமாறி வந்த கடற்கோள்களினால் பாண்டி நாட்டைச் சேர்ந்த 49 நாடுகளாகிய ஏழ் தெங்க நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு ஆகியன மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். பார்க்க: http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311332.htm

 “ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தியப் பூமியில்தான் இறக்கினான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், இன்னொரு அறிவிப்பில் இந்தியப் பூமியில் தஜ்னா என்ற இடத்தில் இறக்கினான் என்று கூறியதாகவும் வருகின்றது” – இப்னு ஜரீர், இப்னு அபீ ஹாத்திம், ஹாகிம் ஆகியோர் அறிவிக்கும் இந்த அறிவிப்பில் வரும் ‘தஜ்னா’ என்ற வார்த்தையில் வரும் ஜீம் என்ற அரபி எழுத்தினை geem என்றும் கூறுவர். அதன்படிப் படித்தால் ‘தக்னா’ என்றும் அவ்வார்த்தையைப் படிக்கலாம். அந்த உச்சரிப்பு ‘தக்கன்’, ‘தக்காணம்’ போன்ற வார்த்தைகளின் உச்சரிப்புடன் ஒத்திருக்கின்றது.

“ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் ‘பூத்’ என்று அழைக்கப் பெறும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்”- என்ற அறிவிப்பில் வரும் ‘பூத்’ வார்த்தையினை ‘புத்’ என்றும் வாசிக்க இயலும். அது ஏனெனில், அரபி அல்லாத வார்த்தைகளை அரபியில் எழுதும் பொழுது உகரத்தைக் குறிக்க அரபி மொழியின் எழுத்தான் ‘வாவ்’ என்ற எழுத்தைப் பயன்படுத்துவது அரபிகளின் வழக்கம். அவ்வகையில், புத் என்று அழைக்கப் பெறுவதாக இவ்வறிவிப்பில் குறிப்பிடப் பெறும் அம்மலை, இலங்கையில் உள்ள ‘புத்தர் பாதம்’ என்று அழைக்கப் பெறும் மலையாக இருக்கலாம்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதம் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்கு முன் இலங்கையுடன் ஒன்றாக இருந்த இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மலை ஒன்றின் மீது இறக்கப் பெற்றார்கள் என்று கருத அதிகம் வாய்ப்பிருக்கின்றது.


- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-600092.

42 Responses So Far:

Yasir said...

சகோதர் ஆரிஃப் அவர்களுக்கு...உங்களின் இந்த ஆக்கம் எங்களைபோன்ற வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு தீனி போடுவதாய் உள்ளது..அல்லாஹ் உங்களுக்கு அறிவை விசாலமாக்கி வைத்து இத்தொடர் மேலும் பல ஆதார “உண்மையுடன்” வெற்றி கரமாக முடிய துவாச்செய்கின்றேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிய வேண்டிய அருமை பெருமையுடன் கூடிய அரிய வரலாறு.

ஆதம் (அலை) இறக்கப்பட்ட நம் தாய்நாடு, கிட்டத்தட்ட நம் மண்டலம், ஆக நம் தாய்மொழியாகிய தமிழாக இருக்க இன்னும் அதிக வாய்ப்பு.

இன்னும் அதிகம் தாருங்கள், ஆவலுடன்....

Ebrahim Ansari said...

Assalaamu Alaikkum (Warah )

அன்பின் சகோதரர் ஆரிப் அவர்களுக்கு,

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அறிய வேண்டிய கருத்துக்கள் ஆதாரங்களுடன்.

சேக்கனா M. நிஜாம் said...

மிகவும் பயன் தரும் தகவல் !

வாழ்த்துகள் சகோதரருக்கு............

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது//

காக்கா,இப்ராஹீம் நபிக்கு அல்லவா அல்லாஹ் கட்டளை இட்டான்,எல்லாரையும் ஹஜ்ஜுக்கு அழையுங்கள் என்று!நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல,இஸ்லாத்தில் இல்லாதது.எச்சரிக்கை.அல்லாஹ்வும்,ரசூலும் சொல்லாததை,சொன்னதாக சொன்னால் நரகம் என்ற ஹதீஸைக் கொண்டு எச்சரிக்கிறேன்.


//தவ்ராத் வேதத்தை உடையவர்கள் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் தஞ்ச், மன்தல் எனப்படும் இடங்களுக்கிடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மலையின் மீது இறக்கப் பெற்றார்கள். இன்னும் ஹவ்வா (அலை) அவர்கள் மக்காவின் நிலப்பரப்பைச் சேர்ந்த ஜித்தாவில் இறக்கப் பெற்றார்கள், என்று கூறுகின்றார்கள். இன்னும் சிலர், ஆதம் (அலை) அவர்கள் ஸரந்தீப் (இலங்கையின் பழைய அரபிப் பெயர்) என்ற இடத்தில் உள்ள பூத் எனும் மலையின் மீது இறக்கப் பெற்றார்கள் என்றும் கூறுகின்றனர். அறிவிப்பவர் – அபூ இஸ்ஹாக்//

தவ்ராத் என்பது மூஸா நபிக்கு அல்லவா அல்லாஹ் அருளினான்.

விளக்கம் தருவீர்களா?

அப்துல்மாலிக் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி.. மேலும்
//அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் //
இபுராஹீம் நபி காலத்துலேதான் ஹஜ் கடமையாக்கப்பட்ட்து என்று படித்த ஞாபகம், தெளிவு படுத்தவும்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்பதிவில் கொடுக்கப்பட்ட அரபி/தமிழ் சான்றுகள் அனைத்தும் நபித்தோழர்களின் சொந்தக் கருத்துகளாகும். அவை, இறைமறை/நபிமொழி ஆகிய வஹீத் தொடர்புடையவையாக இருந்தால் மறுக்கவியலாது; ஆனால் அவ்வாறு ஒன்றுமேயில்லை. நபித்தோழர்கள் கத்தாதா, இப்னு அப்பாஸ், அலீ (ரலி-அன்ஹும்) ஆகியோருக்கு இந்தத் தகவல்கள் எப்படித் தெரியவந்தன என்ற வேரடி வேண்டும்.

என்னுடைய மொழி எனக்கு உவப்பானதுதான். எனது ஊரும் எனக்கு உவப்பானதே. எனது மாவட்டமும் எனக்குப் பெருமையான ஒன்று. அதற்காக 'தஞ்ச்' என்பது தஞ்சாவூரைக் குறிக்கும் என்றெல்லாம் நான் பெருமை கொள்ளவியலாது.

Noor Mohamed said...

அவ்வப் போது செவி வழியாகக் கேட்டு நினைவில் நிற்காதிருந்த வரலாற்றை தெளிவான விளக்கத்துடன் இக்கட்டுரையில் விளக்கும் அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த ஆய்வை அவர்கள் தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Shameed said...

//ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது//

அப்போது இருந்தே ஹஜ் என்ற வணக்க வழிபாடு இருந்ததா? கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்

sabeer.abushahruk said...

மேற்கண்ட கேள்விளுக்கு ஆதாரங்களுடன் பதில் தர வேண்டிய பொருப்பு கட்டுரையாசிரியருக்கு உள்ளது.

அதிரை சித்திக் said...

தலைப்பை பார்த்துமே ஆக்கத்தை படிக்க நான் முயற்சிக்க வில்லை. பின்னூட்டம் வருகை ..கண்டபின் விஷயம் ..விபரீத மாகுமோ என்பதால் படித்து பார்த்தேன் ..அர.அலஅவர்களின் வினா ..அறிஞர் ஜமீல் காக்காவின் ஆதங்கம் ..நான் வரவேற்கிறேன் ..என்னுள் எழும் கேள்வி தமிழ் விர்ப்பன்னர்கள் கூட தமிழின் வயதை இந்த அளவிற்கு கூற வில்லையே ..ஆதம் (அலை ) மொழி தேவை பட்டிருக்காதே ..யாரோடு பேசி இருப்பார்கள் இறைவன் ..அதன் பின் ஹவ்வா (அலை ) ..இதனை அலி (ரலி )அவர்கள் எப்படி அறிந்தார்கள் ..

சில அரபி வார்த்தைகள் அதன் கீழ் சில அர்த்தங்கள் ..பார்க்க கட்டுரை அழகாக இருக்கும் ..

ஆனால் எல்லோரும் ஏற்று கொள்ள கூடியதாக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்

.

.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த ஆக்கத்தின் நோக்கம்?புரியவில்லை! இதனால் சொல்லவிளைவது யாது?இது நேரவிரயம். ஆதம்(அலை)அவர்கள் தமிழில் பேசி இருந்ததாகவே இருந்தாலும் அதனால் என்ன பயன்? இந்த ஆக்கமே தேவையில்லை என எனக்குப்படுகிறது!.

அதிரை சித்திக் said...

நபிமார்களை பற்றிய இஸ்லாமிய பதிவுகள்

ஆதாரமாக ..முதலில் எடுத்துக் கொள்ளும்

கால அளவு நூஹு நபி காலத்திற்கு பிறகுதான்

அதற்கு முன் என்றால் நபிமார்களுக்கு இறைவனால்

தெரிய படுத்தும் வேதங்கள் ஒன்றே ..எனவே நூஹு

நபி காலத்தில் ஏற்பட்ட உலக அழிவு நமது நம்பிக்கைக்கு

உள்பட்டது ..எந்த கிரகந்த ஆதாரமும் நாம் ஏற்க்க கூடாது

வேதங்களின் அடிப்படையில் ஆதாரம் தாருங்கள் அல்லது

நபி மொழி ..அதற்க்கு அப்பால் வந்தவர்களின் ..பதிவு

நாம் ஏற்ப்பது ..நல்லதல்ல ..

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஆதாரத்தை மையமாக வைத்து நம் சமூகத்தின் தேவை அது எப்படி பெறுவது? எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்? எது உண்மை , எது இடைச்சொறுகள் என்பதையெல்லாம் ஆதரத்துடன் குறிப்பிட்டு ஆக்கம் இருந்தால் நல்லதும் அதன் விளைவு. பயன். எதன் நோக்கம் கொண்டு எழுதப்படுகிறது என்பதையும் நிறுவாக ஆசிரியர் கவனம் கொள்ளவும்.தயவு செய்து யாரும் தறாக புரிந்து கொள்ளவேண்டாம். இது போல் ஆக்கம் எழுதுவதை விட வேறு பல நல்ல ஆக்கம் சகோதரர் ஆரிப் அவரிகளிடம் எதிர் பார்க்கும் வாசகன் நான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

முன்பு ஒரு பதிவில் நான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலாக சகோ. ஆரிஃப் அவர்கள் சில விளக்கங்களுடன் அதை ஒரு பதிவாக தந்து அது இன்று மூன்றாம் பாகமாக நீண்டிருக்கிறது. அப்படியே இந்த ஆய்வின் ஆதாரப்பூர்வமான முடிவு ஒரு வேளை தமிழாகவே இருந்து விட்டாலும் அதனால் நமக்கு ஈருலக பயன் ஏதுமில்லை என்பது திண்ணம். எனவே என்னுடைய தனிப்பட்ட‌ வேண்டுகோள் என்னவெனில் அருமையான எழுத்தாற்றல் வளத்தை பெற்றிருக்கும் சகோ. ஆரிஃப் அவர்கள் மற்ற விடயங்கள் பற்றி இங்கு எழுத ஆரம்பித்தால் அதை ஆர்வமுடன் படிக்க காத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுள் நானும் ஒருவனாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.

நகைப்புக்காக தயவு செய்து யாரும் இவ்வாக்கம் பற்றி எதுவும் பின்னூட்டத்தில் எழுதி விடாதீர்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

ஒன்றும் பிரச்சினையில்லை. அதிரை நிருபரில் இக்கட்டுரையை எழுதுவதை நான் நிறுத்திக் கொள்கிறேன். அதிரை நிருபர் இணைய தளப் பொறுப்பாளர் இதுவரை வந்த இக்கட்டுரைத் தொடரை நீக்கிவிட்டாலும் அதனாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், என்னுடைய http://ahamedarif.blogspot.in பிளாக்கில் இக்கட்டுரையைத் தொடர்வேன். விருப்பம் உள்ள சகோதரர்கள் அங்கு வந்து பார்வையிட்டுக் கொள்க. வஸ்ஸலாம். அஹ்மது ஆரிஃப்.

Yasir said...

//பிளாக்கில் இக்கட்டுரையைத் தொடர்வேன்./// உங்களை எழுத்தை விரும்பி படிப்பவன் நான் ஆனால் சகோதரரே விளக்கங்கள் கேட்டால் தலைதெரிக்க ஒடுவது ஒரு நல்ல கட்டுரையாசிரியருக்கு அழகல்ல....”இசை இரைச்சல்” ஆக்கத்தை பாருங்கள் மூச்சை பிடித்துக்கொண்டு தம் கட்டிகொண்டு பதில் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள்......இக்கேள்விகளுக்கு பதில் அளிப்பதின் மூலம் பல விசயங்களை நாங்கள் அறிந்துகொள்ள முடியும்.....தவறிப்பின் திருத்தி அல்லது திருந்தி கொள்ளலாம்...அதற்க்காக வேறோரு பிளாக்கில் இதனை செய்வேன் என்ற வார்த்தைகள் உங்களை போன்றோருக்கு பொருத்தமாக தெரியவில்லை

Yasir said...

அன்பு அ.நி நெறியாளர் அவர்களுக்கு...எங்களுக்கு தெரியும் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் எவ்வித பிரதிபலனுமின்றி இச்சேவையை செய்துவருகின்றீர்கள்....மார்க்க சம்பந்தமான ஆக்கங்களில் கொஞ்சம் இன்னும் சிரத்தை எடுத்து ஒரு தரத்துடன் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்....மார்க்கத்தில் விசயங்களின் தவறான தகவல்கள் ஒரு தீக்குச்சி போன்று சைஸ் சின்னதாக இருந்தாலும் ஒரு பெரிய வனத்தையே அழித்துவிடுவதுபோல்.....சமுதாயத்தில் பரவி கேடுவிளைவிக்கும் அல்லது ஒரு சலசல்ப்பை உண்டாக்கும் ........அல்லாஹ் பாதுகாப்பான்.....

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//அர அல சொன்னது…
நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல,இஸ்லாத்தில் இல்லாதது.//

//மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
அப்படியே இந்த ஆய்வின் ஆதாரப்பூர்வமான முடிவு ஒரு வேளை தமிழாகவே இருந்து விட்டாலும் அதனால் நமக்கு ஈருலக பயன் ஏதுமில்லை என்பது திண்ணம். எனவே என்னுடைய தனிப்பட்ட‌ வேண்டுகோள் என்னவெனில் அருமையான எழுத்தாற்றல் வளத்தை பெற்றிருக்கும் சகோ. ஆரிஃப் அவர்கள் மற்ற விடயங்கள் பற்றி இங்கு எழுத ஆரம்பித்தால் அதை ஆர்வமுடன் படிக்க காத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுள் நானும் ஒருவனாக இருப்பேன் இன்ஷா அல்லாஹ்.//



//அதிரை சித்திக் சொன்னது…
ஆனால் எல்லோரும் ஏற்று கொள்ள கூடியதாக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்//

//crown சொன்னது…
அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த ஆக்கத்தின் நோக்கம்?புரியவில்லை! இதனால் சொல்லவிளைவது யாது?இது நேரவிரயம். ஆதம்(அலை)அவர்கள் தமிழில் பேசி இருந்ததாகவே இருந்தாலும் அதனால் என்ன பயன்? இந்த ஆக்கமே தேவையில்லை என எனக்குப்படுகிறது!.//


மேற்கண்ட சகோதரர்கள் போன்றோர், இக்கட்டுரை வரலாற்றுப் புரட்டு, நேரவிரயம், மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லாதது, இன்னும் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானது, முட்டாள்தனமான கட்டுரை என்று கருத்துக்களைப் பார்த்த பின்னர் நான் இக்கட்டுரையை எழுதுவதை பலர் விரும்பவில்லை என்று தோன்றியதால் அவர்களின் பொன்னான நேரத்தை நாம் ஏன் வீணடிக்க வேண்டும் என்று அவ்வாறு கூறினேனே அன்றி, கேட்கப்படும் கருத்துக்களுக்குப் பதிலளிக்க இயலாமல் அல்ல. இத்தொடரின் 2ஆவது கட்டுரையின் பின்னூட்டங்களுக்குக் கருத்துரையாக மொத்தமாக ஒரே கட்டுரையாக அஹ்மது சாச்சா அவர்களுக்கு மே 2ஆம் தேதியன்று அனுப்பி உள்ளேன். அது அவர்கள் அனுமதி பெற்ற பின் வெளியிடக் கோரியுள்ளேன. இந்த மூன்றாம் தொடரின் பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளுக்கும் தேவையான கருத்துகளைத் தயார் செய்து கொண்டு தான் உள்ளேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள ஜனாப். அஹமது ஆரிப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தொடர்கள் எழுதும்போது இப்படி சில கேள்விகள் எழவே செய்யும். நாங்கள் அவ்வளவு மார்க்க கல்வி படித்தவர்கள் அல்ல. உங்களைப்போல் மார்க்க கல்வி படித்துப் பட்டம் பெற்று எழுதுபவர்களைத்தான் நம்பி இருக்கிறோம். நம்புகிறோம். எங்களில் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு தெரியாத்தனமாக கேட்பதாக எடுத்துக் கொண்டு பொறுமையாக விளக்கம் தந்தால்தான் நாங்களும் அறிவீட்ட முடியும்.

மூன்றாம் தொடரின் பின்னூட்டங்களுக்கும் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கும் தேவையான கருத்துக்களை தயார் செய்து கொண்டுதான் உள்ளேன் என்று ஒற்றை வரி பதிலை ஆரம்பத்திலேயே நீங்கள் அளித்து இருந்தால் அனைவருக்கும் திருப்தியாக இருந்து இருக்கும். அதைவிட்டு தளத்தில் இருந்தே வெளியேறுவேன் என்று அறிவித்தது என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஒருவேளை இந்த தொடரின் கருப்பொருளில் - அது கற்பிக்கும் வினைக்கருத்தில் பெரிய பயன்படும் விளைவுகள் இல்லையே என்று தம்பி கிரவுன் போன்றவர்கள் சொன்ன அபிப்பிராயத்தை ஏற்று தொடரை முடிக்கவேண்டுமென்று நீங்கள் கருதி இருந்தால் உங்களின் மற்ற தலைப்பில் தரும் ஆக்கங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த அறிவுத்திரை போடவேண்டுமென்று அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

மருமகன் யாசிர் அவர்கள் கூறுவதுபோல் இசை பற்றிய ஒரு பட்டி மன்றம் நடைபெற்று வருகிறது. ரசித்துப் படிக்கிறோம். காரணம் பலரின் பல அறிவுப் பரிணாமங்கள் வெளிப்படுகின்றன. வாதப்பிரதிவாதங்களில் வெளிப்படும் கருத்துச்சுடர்கள் மகிழ்வையே ஏற்படுத்துகின்றன.

உங்களின் மற்ற தலைப்பில் இனி வரும் கட்டுரைகளை விரும்பிப் படிக்கலாம் என்று இருந்தோம். அவைகளை உங்கள் தனி வலைப்பூவில்தான் வண்டுபோல் பறந்து வந்து படிக்கவேண்டுமென்று இறைவன் நாடினால் அப்படியே நடக்கட்டும்.

வஸ்ஸலாம்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//Ebrahim Ansari சொன்னது…
தளத்தில் இருந்தே வெளியேறுவேன் என்று அறிவித்தது என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.//

இப்ராஹிம் காக்கா,
இக்கட்டுரையை எழுதுவதை நான் நிறுத்திக் கொள்கிறேன் என்று தான் எழுதினேனே அன்றி, தளத்தில் இருந்தே வெளியேறுவேன் என்று நான் அறிவிக்கவில்லையே!

Noor Mohamed said...

மரியாதைக்குரிய சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களின் மன வேதனையில் நானும் பங்கு கொள்கின்றேன்.

//அர அல சொன்னது…
நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல,இஸ்லாத்தில் இல்லாதது.//

இவ்வாறாக எடுத்தேன் சாய்த்தேன் என்று அர்த்த மற்ற முறையில் பத்வா கொடுத்திருப்பதும், மேலும் புரட்டு, இல்லாதது என்ற நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதும் வேதனைக்குரியதே.

பக்குவமான பண்பாடு காத்து பயன் பல பெற வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நல்லருள் புரிவானாக.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு !

சகோதரர் அஃபளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்ஃபில் அவர்கள் குறிப்பிட்டது போல் இரண்டாம் அத்தியாயம் வரை வாசகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலுரையாக ஒரு தனி பதிவை அனுப்பித் தந்தார்கள், இதற்கிடையில் பதிலுரைகள் பதிவை நிறைவில் பதியலாம் தொடரை தொடரலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது அவ்வாறே தொடர்கிறார்கள்...

விமர்சனங்களும் கேள்விகளும் பதிவுவைச் சுற்றியே இருந்திருக்கனும்... அதைவிடுத்து பதிவாளரை விமர்சிப்பதை தவிர்த்தே ஆகவேண்டும்.

இதுவரை வெளியான மூன்று அத்தியாயங்களில் காரணிகளையும், தொடர்புகளையும் பேசப்பட்டு வந்ததையும் எழுதப்பட்டு வந்ததையுமே விளக்கிக் கொண்டு வந்திருக்கிறார் சகோ.அஹமது ஆரிஃப் அவர்கள்.

தனி மின்னஞ்சல்களாக கிடைக்கப்பெற்ற விமர்சனங்களில் கூட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிவாளர் பதில் தரவேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள் அதில் சில தொடரை நிறுத்திவிடுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

தொடர் நீளும்வரை அந்தந்த அத்தியாங்களில் எழும் ஐயங்களை, கேள்விகளை கேட்டுவைப்போம், அல்லது கண்டங்களை பதிந்தும் வைப்போம், அவைகளுக்கு பதிலுரை அளிப்பது கட்டுரையாளரின் கடமை என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.

நேர விரயம் என்பதை விடுத்து, நம்மால் தேடி எடுக்க வியலாத அல்லது முயற்சிக்காத ஆய்வுகளை தேடியெடுத்து பதிவாக தருவதற்கு மதிப்பளித்து சகோதரர் அவர்களின் தெளிவான பதிலுரைக்கும் காத்திருப்போமே...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கட்டுரையாளர் அவர் ஆய்வில் கிடைத்ததை பெரும்பாலும் ஆதாரங்களுடன் தான் கொடுத்துள்ளார்கள்.

ஆதி காலத்தைய வரலாறுகளில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். சர்ச்சையாக தெரிந்தால் அதை மறுத்து நாம் அறிந்த ஆதாரங்களை காட்டி கட்டுரையாளரின் விளக்கத்தை நாடனும்.

கட்டுரைக்குத தான் கருத்துரை கொடுக்கனும். அதை விடுத்து ஒருவர் பின் ஒருவராக ஏற்கனவே கொடுத்த கருத்தை அடிப்படையாக வைத்து அதையே பின் பற்றி ஆய்வாளரின் ஆர்வத்தை குலைக்கும் வகையில் கருத்திடுவது நல்லதாக தெரியவில்லை.

மரியாதைக்குரிய சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களின் மன வேதனையில் நானும் பங்கு கொள்கின்றேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள ஜனாப். அஹமது ஆரிப் அவர்களுக்கு,

தவறுக்கு வருந்துகிறேன். தளத்தில் இருந்து வெளியேறுவதாக புரிந்துகொண்டது என் தவறுதான்.

தம்பிகள் அபூ இப்ராஹீம், எம். ஹெச் ஜெ., நூர் முகமது ஆகியோரின் உணர்வுகளோடு என் உணர்வுகளையும் இணைக்கிறேன்.

வஸ்ஸலாம்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

கட்டுரை என்பதற்கு ஆங்கிலத்தில் artical என்று எழுதுவோர் இக்கட்டுரையினை ‘முட்டாள்தனமான கட்டுரை’ என்று கூறியதாலும், அதுபோன்று ஸுன்னா என்றால் என்ன என்று தெளிவாகக் குறிப்பிடாமல், இக்கட்டுரை குர்ஆன் ஸுன்னாவிற்கு மாற்றமாக உள்ளது என்றும், அறிவிப்பாளர் பெயர், அறிவிக்கும் ஸஹாபி அல்லது தாபிஈயின் பெயர், அறிவிப்பாளர் தொடர், நூலின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரும் இது வரலாற்றுப் புரட்டு, இஸ்லாத்தில் இல்லாதது என்றும் கூறி, கட்டுரையின் நோக்கம் கட்டுரையின் தொடர் (1)லேயே தெளிவு படுத்தப்பட்டதன் பின்னரும், புரியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான். Nothing else..

எனவே, கட்டுரையின் நோக்கம் இதுவரை புரியாமல் இருக்கும் சகோதரர்கள் இக்கட்டுரையின் தொடர் (1) ஐ மீண்டும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

அஹ்மது சாச்சா அவர்கள் இத்தொடரின் (2) ஆம் கட்டுரையின் பின்னூட்டங்களுக்கான எனது கருத்துரையைப் பதியுமாறு அனுமதி அளித்து விட்டார்கள். எனவே, முதலில், அதனை இக்கட்டுரையின் (2) ஆம் தொடரின் பின்னூட்டப் பகுதியில் பதிகின்றேன்.

சகோதரர்கள் இப்ராஹிம் அன்சாரி, யாஸிர், நூர் முஹம்மது ஆகியோருக்கும், நெறியாளருக்கும் எனது நன்றி.

அதிரை சித்திக் said...

எழுத்தாளன் பண்முகம் கொண்ட ஆசாமி

அவன் பிடிக்கும் எழுத்தாணி பல வகை கொண்டது

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் கையாளும் விதம்

வேறு படும் ..ஆவேசப்படும் எழுத்து அச்சப்படும் எழுத்து

வரலாற்று நுணுக்கம் கொண்ட எழுத்து ..வியக்கும் எழுத்து

கவிதை .. ரசனை எழுத்து ..கேட்டதை பார்த்ததை அப்படியே

பதியும் பதிவு ..இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்

சகோ .ஆரிப் .கடினமாக உழைத்து சரித்திர ஆதாரங்கள் .பழமையான

ஊளை சுவடி ஆதாரங்கள் கொண்டு தங்களின் எழுத்து முயற்சி

தொடரட்டும் ..நீங்கள் எங்கு எழுதினாலும் நல்லதைத்தான்

எழுத போகிறீர்கள் ..ஒவ்வொருவரின் எழுத்து சாயலை நாம்

ரசித்து படிக்க வேண்டும் . முழு புத்தகமாக நீங்கள் எழுதிய பின்னர்

என் கையில் கிடைத்திருந்தால் என் உணர்வுகள் மாறி மாறி

வந்திருக்கும் ..நவீன யுகம் உடனுக்குடன் பதில் தங்கள்

மனதினை சலன படுத்தியதற்கு வருத்துகிறேன் ..

நீங்கள் வரலாற்று பின்னணியோடு ஆய்வு கட்டுரை

எழுதுபவராக இருப்பதால் .தூற்றுதலை போற்றுதலை

உணர்வுகளை ..சமமாக மதியுங்கள் ..நம்ம எழுத்தில்

இதனை தாக்கமா எனா மகிழுங்கள்

சிலரின் எழுத்தாணி சிர்ப்பியின் உளி ..

சிலரின் எழுத்தாணி வீரனின் வாள் ..,

சிலரின் எழுத்து தாகம் தீர்க்கும் நன்னீர்

சிலரின் எழுத்து கசக்கும் கசாயம்

சில நேரங்களை ஆளுயர அலை கரையை

தொடும்போது குதிகாலை தழுவி செல்லும்

சில சமயம் அலையே தெரியாது அது ஆழி பேரலையாக

வந்து அடித்து செல்லும் அது போன்று தான் எழுத்து .

அச்சம் வேண்டாம் ஆவேசமும் வேண்டாம்

தொடருங்கள் உங்கள் பணியை ..ஊதியம் இல்லா பணிக்கு

இத்தனை வசவுகளா ..உறவின் வசவு ..வீரியம் இருக்காது

தொடருங்கள் ஆரிப் உங்கள் பணியை .,,.

Noor Mohamed said...
This comment has been removed by the author.
Noor Mohamed said...

மரியாதைக்குரிய சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

குரான் மற்றும் சில ஹதீஸ் தொகுப்புகளின் தமிழ் மொழி பெயர்ப்பையும் அரபி அகராதியையும் கையில் வைத்துக்கொண்டு, சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, மக்களை குழப்பிக் கொண்டு, பத்வா கொடுத்துக் கொண்டு, குதர்க்கம் பேசுபவர்களுக்கு, அறிவுக்கு விருந்தாக குரான் ஹதீஸ் அடிப்படையாகக் கொண்ட தப்சீர் விளக்கத்தை தெளிவாக தங்கள் கட்டுரையின் (2) ஆம் தொடரின் பின்னூட்டப் பகுதியில் பதிந்துள்ளீர்கள். இன்ஷா அல்லாஹ் மூன்றாம் தொடரின் பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளுக்கும் தேவையான கருத்துகளைத் தயார் செய்து இதுபோன்று விரிவான விளக்க்ம் தர வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.

தொடருங்கள் உங்கள் பணியை. அறிவை அள்ளிக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.ஆரிப் அவர்களுக்கு,என் கருத்தை மறுபடியும் படித்து பார்க்கவும். நான் யாரையும் குறை கூறுபவன் அல்லன். மேலும், இது போல் ஆய்வு என் வாழ்னாளில் நினைத்தாலும் முடியாது. அது "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபடுவது போல்". ஆனால் உங்களின் அருமையான இந்த ஆய்வின் பயன் என்ன என்பதுதான் என் கேள்வி!. மேலும் நீங்கள் பல ஆக்கம் எழுதனும் என்பதும் என் வேண்டுகோள். மேலும் சகோ. யாசிர் சொன்னதை நான் வழி மொழிகிறேன். கட்டுரை ஆசிரியர் என்பவர் பலரின் கேள்விக்கு பதில் அளிக்கக்கூடியவராக இருக்க வேண்டுமே ஒழிய சினம் கொண்டு நான் இத்துடன் இந்த ஆக்கத்தை முடிக்கிறேன் அல்லது முன்பு எழுதிய ஆக்கத்தை அழித்துவிடுங்கள் என்று சொல்வது உங்களைப்போல் ஆராய்ந்து எழுதும் எழுத்தாளருக்கு, படைப்பாளிக்கு நல்லதல்ல என்பது இந்த இளைய சகோதரனின் கருத்து.

இப்னு அப்துல் ரஜாக் said...

bro Ahamed Arif (Arabic Institute of Commerce), bro noor mohamed


'என் மீது, எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்" என அனஸ்(ரலி) அறிவித்தார். புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய் யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது."
முகீரா(ரலி) அறிவித்தார். புகாரி


10:69. “அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.THE QURAN


மேற்கண்ட குரான்,ஹதீஸ் சொல்லும் விஷயத்தில் அக்கறையாய் இருந்து,பதில் சொல்லுங்கள்.இதுவரை மக்கள் மன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே?இனி கேட்கும் கேள்விகளுக்கு அந்தப் பதிவில் பதில் தந்தால் நல்லது.நீங்கள் சொல்ல வரும் செய்தி ஒரு நபியைப் பற்றி,அல்லாஹ்வின் ஒரு தூதர் பற்றி.அதீத கவனம் தேவை.

Noor Mohamed said...

//மேற்கண்ட குரான்,ஹதீஸ் சொல்லும் விஷயத்தில் அக்கறையாய் இருந்து,பதில் சொல்லுங்கள்.//

சகோ. அர அல, அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் குரான்,ஹதீஸ் தாங்கள் மட்டுமே பின்பற்றுவது, தங்களுக்கு மட்டுமே அக்கறை இருப்பது போலும் சித்தரித்து எழுதியுள்ளீர்கள்.

நானும் தங்களின் பல பின்னூட்டங்களை படித்துக் கொண்டுதான் வருகிறேன். இதில் வேதனையான விஷயம் என்னவெனில், வரிக்கு வரி குரான்,ஹதீஸ் வார்த்தைகளை எழுதிக் கொண்டே இருப்பீர்கள் ஆனால் விளக்கம் என வரும்போது, கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையில், onlinepj.com தளத்தை விளக்கம் என்பீர்கள். onlinepj.com எல்லாம் குரான்,ஹதீஸ் விளக்கம் காண ஏற்றுக் கொள்ள முடியுமா? வேண்டுமானால் தங்களைப் போன்று PJ மத்ஹபு பின்பற்றுபவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இக்கட்டுரையின் ஆசிரியர் மிகவும் தெளிவாக,
//இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் தபரீ அவர்கள் தொகுத்த தாரீஃகுத் தபரீ என்ற உலக வரலாற்று நூலில் வருகின்றன// என்றும், அறிவிப்பாளர் பெயர், அறிவிக்கும் ஸஹாபி அல்லது தாபிஈயின் பெயர், அறிவிப்பாளர் தொடர், ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னரும், இந்த விளக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத நீங்கள், onlinepj.com விளக்கங்களை மட்டும் பிறருக்கு எத்திவைப்பது எந்த வகையில் நியாமானது? நீங்களே உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய அதிரை நிருபர் குழுவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்பும் அமைதியும் நிறைக!

---------------------------------------------------------
அங்கே அடைப்பிட்டதை இங்கே திறக்கிறேன். ஏனெனில் உண்மை எப்படி மறுக்கப்பட்டாலும் திறக்கப்படுதல் வேண்டும். தகாத செயலை எவர் செய்தாலும் ஹராம் என்று அறிவித்து அதை இறைவன் மன்னிக்கமாட்டான் என்பதை நினைவில் கொள்க! இந்த மடல்லின் அத்தியாவசியம் கருதி இவ்விழை ஆசிரியர் என்னை மன்னிப்பாராக!
---------------------------------------------------------

>>>>பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இசை கருவிகளுடன் இசைக்கப்படும் இசையை இஸ்லாம் தடை செய்துள்ளது,

ஆதரிக்கவில்லை<<<<<<

”**********பெரும்பாலான************ மார்க்க அறிஞர்கள்”

இதற்கு என்ன பொருள் அதிரை நிருபர்களே?

மார்க்க அறிஞர்கள் என்று கூறப்படும் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விசயம். உண்மைதானே? இங்கே நான் ஏதாவது மாற்றிச்

சொல்கிறேனா என்ன?

அன்று *****பெரும்பாலான***** மார்க்க அறிஞர்கள் உலகம் தட்டை என்றுதான் அழுத்தமாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். பிறகு என்னாயிற்று?

இன்றும் *****பெரும்பாலான***** மார்க்க அறிஞர்கள் கவிதை எழுதுவது ஹராம் என்றுதான் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை அதிரை

நிருபர் உடைத்தது. மூத்தசகோ அஹ்மது அவர்கள் உடைத்தார்கள். அதற்குத் தளம் அமைத்துக்கொடுத்த பெருமை அதிரை நிருபருக்கு உண்டு.

அதனால்தான் நான் அதிரை நிருபர் வலைப்பூவை நேசிக்கத் தொடங்கினேன். இல்லாவிடில் நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன். குண்டுச் சட்டியில்

குதிரை ஓட்டிவோர் என்றால் நான் ஏன் போட்டிபோடப் போகிறேன்? அப்படியே அவர்களை ஓட்டவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்தல்லவா சிரிப்பேன்.

”என்னை வணங்குவதற்கேயன்றி வேறு எதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை” என்று இறைவன் கூறுவதாகத்தான் *****பெரும்பாலான*****

மார்க்க அறிஞர்கள் இன்றும் கூறுகின்றார்கள். ஆனால் அதை அகமது ஆரிப் என்ற ஆய்வாளர் இதே அதிரை நிருபரில் உடைத்தார். “என்னை

அறிவதற்கேயன்றி வேறு எதற்காகவும் உங்களை நான் படைக்கவில்லை” என்று இறைவன் கூறிய உண்மையைச் சொன்னார். அதனாலும் எனக்கு

சகோ அகமது ஆரிபையும் அதிரை நிருபரையும் பிடித்துப்போயிற்று.

இன்னும் இங்கே, இறைவன் ஆணா பெண்ணா என்ற அறிவுத்தள ஆய்வு, உருவமுள்ளவனா இறைவன் என்ற அற்புதக் கருத்தாடல்கள் என்று நிறைய

விலங்கிடப்படாத அறிவினைத் திறந்து கலந்துரையாடல் நிகழ்ந்ததால்தான் அதிரை நிருபரை நான் ஏற்றேன். இல்லாவிட்டால்...... ..... ...... ......

(தொடரும்)

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

(தொடர்ச்சி....)

>>>>குர்ஆன் ஹதீஸ்களுக்கு தவறான சுயவிளக்கங்களுடன் தெளிவற்ற தகவல் பரிமாற்றம் செய்வதால்<<<<

நல்லதொரு கருத்தை இங்கே முன்வைத்திருக்கிறீர்கள். அப்படி தவறான சுயவிளக்கங்களைத் தருவது யார் எனபதை நாம் தயைகூர்ந்து கவனிக்க

வேண்டும். ஒருவன் பிரபல்யமாக இருக்கிறான் என்பதாலேயே அவன் சொல்வதெல்லாம் சரியென்று நீங்கள் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

ஏனெனில் நீங்கள் அறிவுடையவர்கள் அல்லவா? அறிவைத் தேடுபவன்தானே? உண்மையான முஸ்லிம் தானே?

சாத்தானால் கூட்டத்தைச் சேர்க்க முடியும். சத்தியவானால் கூட்டத்தைச் சேர்க்க முடியாது, ஆனால் அவனால் உயர்வான சத்தியத்தைக் காக்க முடியும்.

அது நிதானமாக.... அமைதியாக.... மெதுவாகத்தான்... தன் வீரத்தை நிலைநாட்டும். ஆனாலும் அது ஒன்றுதானே வீரம்? உண்மை ஒன்றுதானே

உண்மையான வீரம்?

>>>நம் மூத்த சகோதரர் ஜமீல் கேட்டுக்கொண்ட பிறகும் பதிவுக்கு தொடர்பில்லாத மறுமொழிகள் பதியப்பட்டுவருகிறது.<<<<

சகோ ஜமீல் எனக்கு மிக நெருக்கமானவர். என் உடன்பிறவா அண்ணன். சகோ ஜமீலுக்குத் தெரியும் நான் யார் என்று. நாங்கள் ஏராளமான

விசயங்களில் தாராளமாகக் கருத்தாடி இருக்கிறோம். அவரின் மகா கர்வத்தை ஏற்க முடியாமல் வெகுண்டு, ஆனாலும் மெல்ல கிரகித்து நான்

அன்போடு ஏற்றிருக்கிறேன். அதற்குக் காரணம் அவரின் அறிவு தேடும் அறிவு. அன்பு தேடும் அளப்பரிய பாசம். அவரின் மச்சான் அன்புச்சகோ ஜமீல்

பற்றி எனக்கு அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். ஓ அப்படியா என்று சமாதானம் அடைந்திருக்கிறேன். ஆனாலும் துபாயில் பிரியாவிடை

தந்தபோது ஜமீல் நாணா மாறவே இல்லையா என்று வேதனையும் பட்டேன்.

இங்கே இந்தப் பதிவில் இசை கேலிசெய்யப்பட்டது. அதனால் மட்டுமே நான் இங்கே எழுதினேன். நீங்கள் எல்லாம் கவனித்தீர்கள் என்றால். நான் வேறு

எந்த இழையிலும் இழைய முற்பட்டதில்லை.

>>>>பதிவுக்கு தொடர்பில்லாத சுய விளங்களுடன் பின்னூட்டங்கள் தொடருவதால், இத்துடன் பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகிறது.<<<<<

தொடர்பில்லாத விசயம் என்று எப்படி கணித்தீர்கள் நிருபர்களே? உங்களை நான் மேன்மைனவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்? இப்படிக்

கவிழ்த்துவிட்டீர்களே? நியாமமா? அறிவுக்குப் புறம்பான செயலல்லவா இது?

>>>இறைவன் நாடினால்... ஒரு தனி பதிவில் இது தொடர்பாக உங்கள் எல்லோருடைய கருத்துக்களை பதியலாம்.<<<<

இப்படித்தான் நீங்கள் மற்ற இழையிலும் சொன்னீர்கள். இது வெறுமனே தப்பிக்கும் வழி என்று இப்போதுதானே தெரியவருகிறது. ஒரு மட்டுநர் செய்யும்

காரியமா இது? நான் பல காலம் மட்டுநராய் இருந்து தமிழ் அறிவுசார் உலகுக்குச் சேவை செய்திருக்கிறேன். ஒருபோதும் இப்படி ஒரு குழந்தையை

ஏமாற்றுவதுபோல் எவரையும் ஏமாற்றியதில்லை.

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பின் சகோ அர அல அவர்களுக்கு,AOA

>>>>>>இப்ராஹீம் நபிக்கு அல்லவா அல்லாஹ் கட்டளை இட்டான், எல்லாரையும் ஹஜ்ஜுக்கு அழையுங்கள் என்று! நீங்கள் சொல்வது ஒரு வரலாற்று புரட்டு மட்டுமல்ல, இஸ்லாத்தில் இல்லாதது. எச்சரிக்கை. அல்லாஹ்வும், ரசூலும் சொல்லாததை, சொன்னதாக சொன்னால் நரகம் என்ற ஹதீஸைக் கொண்டு எச்சரிக்கிறேன்.<<<<<<

ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பொழுது இந்தியாவில் இறங்கினார்கள். இன்னும் அவர்கள் அங்கிருந்து கால்நடையாக 40 ஹஜ்ஜுகள் செய்துள்ளார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஜாஹிது

இதுவும் மேலே உள்ள ஹதீஸ் மூலம்தானே நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் ஹதீஸ்கள் சொல்வதைக் கேட்பவர்தானே? இங்கே என்ன பிரச்சினை? சற்று விளக்கமாகக் கூறுவீர்களா? இதற்கு நீங்கள் கூறும் பதில் வழியாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக அறிய விழைகிறேன்

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய சகோ இப்றாஹிம் அன்சாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!

>>>>>மருமகன் யாசிர் அவர்கள் கூறுவதுபோல் இசை பற்றிய ஒரு பட்டி மன்றம் நடைபெற்று வருகிறது. ரசித்துப் படிக்கிறோம். காரணம் பலரின் பல அறிவுப் பரிணாமங்கள் வெளிப்படுகின்றன. வாதப்பிரதிவாதங்களில் வெளிப்படும் கருத்துச்சுடர்கள் மகிழ்வையே ஏற்படுத்துகின்றன. <<<<

இங்கே எழுதுவது வீண் அல்ல என்ற நம்பிக்கையைத் தருகின்றன உங்கள் சொற்கள். நன்றி.

இஸ்லாமியர் அனைவரும் சகோதரர்கள். ஏற்ற இறக்கம் என்பதை இஸ்லாம் போதிக்கவில்லை. சரி தவறுகளை மட்டுமே வலியுறுத்துகிறது. இறைவனை அறியமுயலும் அறிவுடையோனாய் இஸ்லாமியனை வாழச் சொல்லுகிறது. அப்படியான அறிய முயலும் அறிவுடையோனே இஸ்லாமியன்.

அன்புடன் புகாரி

Unknown said...

http://islamqa.info/en/ref/5000

Conclusion

Perhaps – for fair-minded and objective readers – this summary will make it clear that the view that music is permissible has no firm basis. There are no two views on this matter. So we must advise in the best manner, and then take it step by step and denounce music, if we are able to do so. We should not be deceived by the fame of a man in our own times in which the people who are truly committed to Islam have become strangers. The one who says that singing and musical instruments are permitted is simply supporting the whims of people nowadays, as if the masses were issuing fatwas and he is simply signing them! If a matter arises, they will look at the views of fuqahaa’ on this matter, then they will take the easiest view, as they claim. Then they will look for evidence, or just specious arguments which are worth no more than a lump of dead meat. How often have these people approved things in the name of sharee’ah which in fact have nothing to do with Islam!

Strive to learn your Islam from the Book of your Lord and the Sunnah of your Prophet. Do not say, So-and-so said, for you cannot learn the truth only from men. Learn the truth and then measure people against it. This should be enough for the one who controls his whims and submits himself to his Lord. May what we have written above heal the hearts of the believers and dispel the whispers in the hearts of those who are stricken with insinuating whispers. May it expose everyone who is deviating from the path of Revelation and taking the easiest options, thinking that he has come up with something which none of the earlier generations ever achieved, and speaking about Allaah without knowledge. They sought to avoid fisq (evildoing) and ended up committing bid’ah – may Allaah not bless them in it. It would have been better for them to follow the path of the believers.

And Allaah knows best. May Allaah bless and grant peace to His Messenger who made clear the path of the believers, and to his companions and those who follow them in truth until the Day of Judgement.

Summary of a paper entitled al-Darb bi’l-Nawa li man abaaha al-Ma’aazif li’l-Hawa by Shaykh Sa’d al-Deen ibn Muhammad al-Kibbi.

For more information, please see:

Al-I’laam bi Naqd Kitaab al-Halaal wa’l-Haraam, by Shaykh al-‘Allaamah Saalih ibn Fawzaan al-Fawzaan

Al-Samaa’ by Shaykh al-Islam Ibn al-Qayyim

Tahreem Aalaat al-Tarab, by Shaykh Muhammad Naasir al-Deen al-Albaani (may Allaah have mercy on him)



Islam Q&A
Sheikh Muhammed Salih Al-Munajjid

அன்புடன் புகாரி said...

நல்ல எண்ணங்கள் சொன்னது… music is permissible has no firm basis

இஸ்லாம் இசையைத் தடை செய்துவிட்டதாக இதில் ஏதும் குர்-ஆன் வசனங்கள் இணைக்கப்படவில்லையே?

இணையம் முழுவதும் இதுபோல பலப்பல கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. இங்கே அவற்றையெல்லாம் வெட்டி வெட்டி இங்கே ஒட்டினால், எவரேனும் வாசிப்பார்களா? வாசிப்பீர்கள் என்றால் ஒரு வார்த்தை சொல்லுங்கள், கொண்டுவந்து குவித்துவிடுகிறேன்.

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

I agree with the above comment of bro Buhari. First of all I would ask AN to identify "Nalla Yennangal" as it is one of our terms that to have known persons only to comment here. Secondly, we asked that to have Quran hadhees reference on any religious sayings but not just declaration.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புச் சகோதரர்களுக்கு:

நல்ல எண்ணங்கள் நம் யாவரிடமும் இருப்பதில் சந்தோஷமே !

"அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துக்கள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துக்கள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசகர் நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு"

"நல்ல எண்ணங்கள்" என்ற பெயரில் கருத்து பதிந்திருக்கும் சகோதரர்/சகோதரி பற்றிய சுய அறிமுகமில்லாததால் அதற்கான பதிலுரைகளை தவிர்த்து கொள்ளும்படி வாசகர்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

பதிவுகளுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை அங்கே பதிவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம் !

அதனாலென்ன, செழுமையான கருத்தாடல்கள் தொடரும் நம் அதிரைநிருபரில் "இசை" பற்றிய தனி ஒரு பதிவும் விரைவில் வெளிவர இருக்கிறது !

நிற்க !

சுய அறிமுகம் பொதுவில் / தனிமின்னஞ்சலில் கிடைக்கும் பட்சத்தில் அவரின் கருத்துக்கான பதிலுரைகளை தொடரலாம்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு