Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொய்...! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2012 | , ,


ஒரு மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவரும் செய்கின்ற தவற்றை மறைப்பதற்காகவும், தன்னை சமூகத்தில் “நல்லவன்” போல் காட்டிக்கொண்டு அதை மற்றவர் முன் நடித்து வெளிப்படுத்துபவர்களும் பயன்படுத்தும் ஆயுதமே “பொய்” 

சிலருக்கு பொய் கூறுவதென்பது குற்றால அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் அவ்வளவு சுலபமாக வரும். எதற்கெடுத்தாலும் நூர் லாட்ஜ் கடை “ஹல்வா” போல பொய்யைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தங்களின் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற “கெத்து” வேறு. ஒருவன் “பொய்” சொல்லும் போது அவனின் கண் புருவங்களையும், உதட்டையும் கவனித்தாலே போதும்......காட்டிக்கொடுத்து விடும்.

1. விளையாட்டுக்காகவும், அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்பவரும் சரி.............

2. இல்லாத ஒன்றை மிகைப்படுத்தி தன்னிடம் இருப்பதாக கூறிக்கொள்பவரும் சரி..............

3. தன்னிடம் இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டிக்கொள்பவரும் சரி...............

4. வீட்டில் இருந்துகொண்டே இல்லை என அவரிடம் சொல் என சொல்பவரும் சரி.............

5. ஒரு பொய்யைச் சொல்லி அதை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்பவரும் சரி.............

6. சமூகத்தில் தன்னை உயர்த்திக் காட்டுவதற்காக பொய் சொல்பவரும் சரி.............

7. வியாபாரத்திற்காக பொய்யை மூலதனமாக பயன்படுத்துபவர்களும் சரி............

8. பொய்யானக் காரணத்தைக் கூறி கடன் கேட்பவர்களும் சரி.............

9. பிறருக்காக சாட்சி சொல்லும்போது பயன்படுத்துபவர்களும் சரி...............

10. இறைவன் மீது பொய் சத்தியம் செய்பவர்களும் சரி..............

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொய் சொல்பவனுக்கு தான் சொன்ன ஒரு பொய்யை மறைக்க பல மடங்கு பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்பதும் மறந்து, வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். 

மேலும் பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீயச்செயலாகும். இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய ஈனச்செயலை விட்டொழிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட சூழல்கள் :

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கீழ்கண்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, அதாவது எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1. போரின் போது.....
2. சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த.....
3. ஒரு கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்ள.....

போன்றவற்றிற்கு கூறிக்கொள்ளும் பொய் அனுமதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக ! ஆமின் !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

37 Responses So Far:

அதிரை சித்திக் said...

.சகோ ,சேகனா .நிஜாம் காலத்திற்கேற்ற ஆக்கம் ,இதோ நபோ மொழி

..பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம்.‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்று நினைக்கும் அளவிற்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மெய்யாகவே நல்ல தொரு ஆக்கம்.மெய்பொருள் சொன்ன இஸ்லாம் வெறுத்த இந்த பொய் தவிர்த்தால் ஈமான் காக்கப்படும். நூர் லாட்ஜ் ஹல்வா மெய்யாகவே நல்ல நெய் செய்து செய்வது என கேள்வி ஆனால் நம்மவர் கிண்டும் பொய் எனும் நெய் வூற்றிய வாய் கிண்டல் துற்னாற்றம் கொண்டசெயல். அல்லாஹ் அனைவரையும் இந்த பொய் என்னும் அழிவிலிருந்து காப்பானாக ஆமீன்.சகோ. சேகனாவின் ஆக்கம் எல்லாமே கலஞ்சியம்,அவசியம் கவனம் கொள்ள தக்கவை.வாழ்த்துக்கள்.

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இதோ ஒரு வரியில் ஒரு நபி மொழி -

"பொய் ஈமானைத்தின்று விடும்"

ZAKIR HUSSAIN said...

பொய் பேசுபவர்கள் முதலில் தன் குடும்பத்திலேயே மதிக்கப்படுவதில்லை. குடும்பத்திலேயே மரியாதை இல்லாததால் வெளியேயும் மரியாதை இருப்பதில்லை.

டெக்னிக்கல் கேள்வி

அதிரை நிருபரில் வரும் கமென்ட்களில் ' அ ' என்ற எழுத்தில் மட்டும் இன்க் கசிந்த மாதிரி எப்படி தெரிகிறது.????
நான் தான் அவசரப்பட்டு ' இன்க் போட்டு எழுதும்" கணிணி வாங்கியிருக்கேனா?..."பால்பாயின்ட்" கணிணி ஏதாவது சந்தையில் உள்ளதா?....யாசிர்..உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

பின் குறிப்பு: நான் தேடுபொறியாக " நெருப்பு நரி- 3.1 பயன்படுத்துகிறேன்'

சேக்கனா M. நிஜாம் said...

குட்டீஸ் கதை !

பொய்..!

ஜெயா ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். மைனா, ரோஜா, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜெயா ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.

"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா ?" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.

"நான் இல்லை"..... "நான் இல்லை"....... என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து "நான் தின்னவில்லை" என்று சொன்னாள்.

"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் ஜெயா ஆன்ட்டி.

பட்டுக்குட்டி பயந்துபோய், "இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கினாள்.

"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா ? இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன ?" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜெயா ஆன்ட்டி.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
" நெருப்பு நரி- 3.1 பயன்படுத்துகிறேன்'
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஹாஹாஹா ஹாஹாஹா

Ebrahim Ansari said...

தம்பி நிஜாம்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

பொய்யைப் பற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர் நிஜாம், நல்ல சிந்தனை பதிவு... ஜஸக்கல்லாஹ் ஹைரன்...

இறைவனின் உண்மை மார்க்க இஸ்லாத்தை தவிரை பொய்யை மூலதனமாக கொண்டவையே மற்ற மதங்கள். அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்கள் பற்றி பல இறைவசனங்கள் இருந்தாலும், ஞாபகமூட்டலுக்காக இந்த குர்ஆன் வசனங்கள்.


39:32. எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?


39:59. (பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”

39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ZAKIR HUSSAIN (காக்கா) சொன்னது…

//டெக்னிக்கல் கேள்வி

அதிரை நிருபரில் வரும் கமென்ட்களில் ' அ ' என்ற எழுத்தில் மட்டும் இன்க் கசிந்த மாதிரி எப்படி தெரிகிறது.???? நான் தான் அவசரப்பட்டு ' இன்க் போட்டு எழுதும்" கணிணி வாங்கியிருக்கேனா?... "பால்பாயின்ட்" கணிணி ஏதாவது சந்தையில் உள்ளதா?.... யாசிர்... உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

பின் குறிப்பு: நான் தேடுபொறியாக " நெருப்பு நரி- 3.1 பயன்படுத்துகிறேன்'//

"பொய்" பதிவு மையை காட்டிக் கொடுத்து விட்டதா ?

'மைய்'போட்டுதானே மயக்கமுடியுமாமே ? (கிரவுனு சரியா?)

எதிலும் "பொய்" இன்றி "செய்"

சேக்கனா M.நிஜாம் என்றால் "உத்திரவாதம்" மெய்யே !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பொய்யும் நயவஞ்சகத்தனமும் அதன் விபரீதங்களும், பதிவுக்கு பொருத்தமான இந்த மார்க்க சொற்பொழிவை கேளுங்கள்,

please click here
நயவஞ்சகத்தனமும் அதன் விபரீதங்களும்

Yasir said...

”பொய்” குடும்பத்தை,சமுதாயத்தை அழித்துவிடும் சக்தி வாய்ந்தது.......இதனை பற்றி ஞாபகப்படுத்திய சகோ.நிஜாம் அவர்களுக்கு வாழ்துக்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தெளிவான பதிலுக்காக சில கேள்விகள்:

1. பிறர் கர்வம், பொறாமை கொண்டு நமக்கு தீங்கு விளைவிக்க இயலும் என்பதற்காக சிலவற்றில் நம்மிடம் இருந்தும் இல்லை என பொய் சொல்லலாமா? அல்லது மறுக்கலாமா?

2. நல்ல விசயங்களுக்காக பொய் சொல்லலாமா? அதாவது ஒரு நல்ல விசயம் நடக்க இருக்கின்றது இன்னாரிடம் அதை முன்பே தெரிவித்தால் அது நடைபெறாமல் நின்று விட வாய்ப்புண்டு அந்த சமயம் அவரிடம் பொய் சொல்லலாமா?

3. நம்மிடம் கொஞ்சம் சிறுக,சிறுக சேமித்த சேமிப்பு இருக்கிறது. அது மற்றவர்களுக்கு தெரிந்தால் (திருப்பி வரும் கடனோ அல்லது வராக்கடனோ?) கடன் கேட்டு தொல்லை செய்வார்கள் என்பதற்காக பொய் சொல்லலாமா?

4. பிறர் கண் போட்டு விடுவார்களே என்பதற்காக சிலர் பொய் சொல்லி சில‌ காரிய‌ங்க‌ளில் சாதித்துக்கொள்கின்ற‌ன‌ர். (முத‌லாவ‌து க‌ண் என்று ஒன்று உண்டா? மார்க்க‌ம் இது ப‌ற்றி என்ன‌ சொல்கிற‌து?) அது ச‌ரியா?

5. ம‌னிதாபிமான‌ அடிப்ப‌டையில் (இந்து, முஸ்லிம், கிருஸ்த‌வர் என பிரித்துப்பார்க்காது) ஒரு ம‌னித‌னுக்கு அடைக்க‌ல‌ம்/த‌ஞ்ச‌ம் கொடுக்க‌ப்ப‌டும் வேளையில் ஊர், உல‌கிற்காக‌ பொய் சொல்ல‌லாமா?

6. ச‌ரி வ‌ர‌ மார்க்க‌ அறிவு இல்லாத‌ ச‌ம‌ய‌த்தில் பெற்றோர்க‌ளின் வ‌ற்புறுத்த‌லால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்க‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌த‌ட்சிணையை ம‌க‌ன் பெற்றோர்க‌ளிட‌ம் பொய் சொல்லி ம‌னைவி வீட்டிற்கு திருப்புவ‌தில் பொய் சொல்ல‌லாமா?

7. ஒருவ‌ன் அல்லது ஒரு கூட்டம் ம‌த‌வெறி கொண்டு ந‌ம்மை தாக்க/கொல்ல‌ வ‌ரும் ச‌ம‌ய‌ம் அவ‌னிட‌மிருந்து உயிர் பிழைக்க‌ பொய் சொல்ல‌லாமா?

8. ம‌ண‌ப்பெண்ணிட‌ம் அல்லது மணமகனிடம் சில‌ குறைக‌ளும், த‌வ‌றுக‌ளும் இருந்தும் எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ளுக்கு திரும‌ண‌ம் ந‌ட‌ந்தேறி விட‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இரு வீட்டின‌ர்க‌ளும் ஏதேனும் பொய் சொல்ல‌லாமா?

9. உயிர்ப்பிச்சை/வாழ்வாதார‌த்திற்காக‌ உல‌கில் பொய் சொல்ல‌லாமா?

10. நம் வீட்டின் பொருளாதார நெருக்கடிகள், குடும்ப சுமைகள் என பல பொறுப்புகள் இருப்பதால் மேற்க‌த்திய‌ நாடுக‌ளுக்கு சென்று அங்கு ஹ‌லாலான‌ வேலை நிச்ச‌ய‌ம் கிடைக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையும், உறுதியும் இருந்த‌ போதும் அதற்கு முன் அந்த‌ நாடுகளுக்கு எப்படியாவது செல்ல‌ விசா வாங்க‌வும் பின் விமான‌ நிலைய‌த்தில் ப‌ல‌ பொய்க‌ள் சொல்ல‌வும், அந்நாட்டிற்குள் சென்றதும் பிறந்த நாட்டை மாற்றி சொல்லி வழக்கு தொடர்ந்து பிறகு குடியுரிமை வாங்க‌வும் சொல்ல‌ப்ப‌டும் பொய்க‌ள் ப‌ற்றி?

இப்படி இன்னும் ப‌ல‌ கேள்விக‌ள் ந‌ம் இத‌ய‌த்தில் உதிக்காம‌ல் இல்லை. இவை யாருக்கோ? எங்கோ? ந‌ட‌ந்த‌தாக‌ ம‌ட்டும் கேட்க‌வில்லை. எதேனும் ஒரு ச‌ம‌ய‌ம் மேற்க‌ண்ட‌ கேள்விகள்/விடயங்கள் பெரும்பாலும் ந‌ம் வாழ்வில் விடை தெரிந்தும் அல்ல‌து தெரியாம‌ல் குறிக்கிடாம‌ல் இல்லை.

ந‌ம் த‌ள‌த்திற்கு வ‌ரும் பெரிய‌வ‌ர்க‌ளும், சான்றோர்க‌ளும், படித்த மேதைகளும் இவைகளுக்கு ந‌ல்ல‌ விள‌க்க‌த்துட‌ன் ப‌தில் த‌ந்தால் நாமெல்லாம் அதை ப‌டித்து இறைவன் நாட்டத்தில் ப‌ய‌ன்பெற‌ ஏதுவாக‌ இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

Shameed said...

பொய்யின் தீமை பற்றிய உண்மைகளை பற்றி அழகா சொன்னீர்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நீங்கள் சொல்லும் பொய்யான நடைமுறைகள் அனைத்தும் உண்மை

உண்மை உரைப்போம்
பொய் தவிர்ப்போம்

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது

//பின் குறிப்பு: நான் தேடுபொறியாக " நெருப்பு நரி- 3.1 பயன்படுத்துகிறேன்' //

நாங்க கேள்விப்பட்டது எல்லாம் காட்டு நரி நாட்டு நரிதான் அது என்ன நெருப்பு நரின்னு புதுசா கரடி உடுறீங்க!

Yasir said...

நெருப்பு ந ரி(இந்த மாதிரி திங்க் பண்ண உங்களை அடிக்க ஆளே இல்லே காக்கா நீங்க அடித்த வளத்தகடா மார்ள முட்டுன ஜோக் துபாய்லே ரொம்ப பிரபலமாயிகிட்டு இருக்கு நன்றி) க்கு “அ” ரொம்ப பிடித்து இருக்கின்றது போலும்..அதான் “அ” வைக்கடித்து அதிலிருந்து “இரத்தத்தை” கசிய விடுகிறது....
"வேட்டைக்குழு 5.1.7”வை உபோயிகித்து பாருங்களேன்

Yasir said...

சாவன்னா காக்கா இது சக்கினா-ஆசியாம்மாவை அலையாத்தி காட்டுல கடித்த நரி இல்ல..வேற நரியாக்கும் :) ( நான் பொய் சொல்ல).....

Shameed said...

Yasir சொன்னது…

//சாவன்னா காக்கா இது சக்கினா-ஆசியாம்மாவை அலையாத்தி காட்டுல கடித்த நரி இல்ல..வேற நரியாக்கும் :) ( நான் பொய் சொல்ல)..... //

ஆகா அப்போ வேற நரின்னு ஒன்னு இருக்கா (ரொம்ப நச்சரிப்பா இருக்கா)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

விண்டோஸ் (சன்னல்)

மெக்.கஃபி (எம்.கசாயம்)

ஃபைல்ஜில்லா (கோப்புஜில்லா (அ) கோப்பு மாவட்டம்)

கார்ட்லஸ் மவுஸ் (வாலில்லாத எலி)

ஆண்டி வைரஸ் (கிருமி நாசினி/கிருமி தடுப்பு (அ) மாமி கிருமி)

மைக்ரோ சாஃப்ட் (மிருதுவான நுட்பம்) என பல உபகரணங்கள் இன்றைய காலத்தில் பயன்படுத்தினால் தான் கணிப்பொறியே பல்லிளித்து நம் சொல் கேட்கும்.

Unknown said...

நய வஞ்சகப் பொய் என்று ஒன்றும் உள்ளது .அது என்ன தெரியுமா ?
தீய எண்ணம் கொண்டவன் தான் பழகுபவர்களிடம் தவறான வழிகாட்டலை /தகவலை நேரடியாக சொல்லம்மல் மறைமுகமாக சொல்லி பிறரை வழிகெடுப்பது .

அன்புடன் புகாரி said...

>>>>>1. போரின் போது.....
2. சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த.....
3. ஒரு கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்ள.....<<<<<

சாந்திக்காகவும், சமாதானத்திற்காகவும், அன்பிற்காகவும், உறவிற்காகவும், உயிருக்காகவும் பொய் சொல்லலாம் என்று சகோ சேக்கனா சொல்வதாக இதனைக் கொள்கிறேன். மாற்றுக் கருத்துக்கள் உண்டா?

அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி said...

அன்பின் சகோ மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களே,

உங்கள் கேள்விகள் அமர்க்களம். வள்ளுவன் சொன்னதைத்தான் இங்கே நான் நினைத்துக்கொள்கிறேன்.

ஒரு பொய் ஹலால் ஆவதும் ஹராம் ஆவதும் நம் உள்ளத்தில் உள்ளது. நம்மால் சமாதானம் சொல்லமுடியாத பொய்களை நாம் நிச்சயமாகச் சொல்லக்கூடாது.

இயன்றவரை மௌனத்தால் பொய்சொல்லும் நிலைகளைத் தவிர்ப்பது சிறப்பு.

அன்புடன் புகாரி

sabeer.abushahruk said...

எது எப்படியோ. பொய் சொல்வது தமிழ் நாட்டு நாகரிகம் என்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறேன். சர்வ சாதாரணமாகப் பொய் சொல்கிறார்கள். 26 வருடங்களாகத் தொடர்ந்து இந்தியாவில் வாழாததால் இந்த நாகரிகம் எனக்கு வரமாட்டேன் என்கிறது. ஜீரணிக்கவும் முடியவில்லை.

யாருக்காவது நேரடியாகவோ மறைமுகமாகவோ தீங்கு விளைவிக்கும் உண்மைக்குப் புரம்பான ஏது சொல்லும் பொய்யே.

Saleem said...

அப்போ!!!
இவைகளை எப்படி எடுத்துக்கொள்வது ???
**அரசியல் வாதிகளின் பொய்**
** மீடியா விளம்பரங்களில் கம்பெனிகள் சொல்லும் பொய்**
** விசா எடுத்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பும்போது ஏஜெண்டுகள் சொல்லும் பொய்**
**சில நிறுவனங்கள் நடத்துபவர்கள் நட்டத்தில் இயங்குகிறது என்று கூறும் பொய் **
**சில ஹோட்டல்களில் தாங்கள் சமைத்த உணவுகள் இப்போதுதான் சமைத்து என்று கூறும் பொய் **
** மாணவர்கள் பள்ளிகளுக்கு தாமதமாக வந்தால் காரணம் சொல்லும் பொய்**

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் மு செ மு நெய்னா....

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் பதிலிருக்கு. தனி பதிவாக இன்ஷா அல்லாஹ் விரைவில் தர முயற்சி செய்கிறேன். தயவு செய்து காத்திருக்கவும். இதற்கிடையில் வேறு யாராவது குர்ஆன் சுன்னா அடிப்படையில் பதில் தந்தாலும் நலமே...

அன்புடன் புகாரி said...

>>>>யாருக்காவது நேரடியாகவோ மறைமுகமாகவோ தீங்கு விளைவிக்கும் உண்மைக்குப் புரம்பான ஏது சொல்லும் பொய்யே. <<<<

நல்ல விளக்கம் சகோ கவி சபீர்.

இன்று நம்மூரிலிருந்து அமெரிக்கா சென்றிருப்பவர்களில் 99 சதவிகிதத்தினர் பொய் சொல்லித்தான் அங்கே சென்றிருக்கிறார்கள். பொய் சொல்லித்தான் ஓவர் ஸ்டே செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்புடன் புகாரி

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்னுடைய கேள்விகளில் யாருக்கேனும் எதுவும் மனம் புண்படும்படி கேட்டிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.THE QURAN

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது."
முகீரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள். THE SAHIH AL BUKHARI

KALAM SHAICK ABDUL KADER said...

காலையில் ஃபஜர் தொழுதுவிட்டு (கரண்ட் கட் ஆகுமுன்பு) இடப்பட்ட என் பின்னூட்டம் பதிவாகியிருந்தது; ஆனால், மாலையில் நீக்கப்பட்டது ஏன்?

Anonymous said...

//காலையில் ஃபஜர் தொழுதுவிட்டு (கரண்ட் கட் ஆகுமுன்பு) இடப்பட்ட என் பின்னூட்டம் பதிவாகியிருந்தது; ஆனால், மாலையில் நீக்கப்பட்டது ஏன்? //

அன்பு அபுல் கலாம் காக்கா அவர்களுக்கு,

பின்னூட்டத்தில் தாடி வைப்பது சுன்னத் அதுவே நபிவழியாஉம், அதனை இன்றைய யஹூதிகளின் தவறான பிரச்சாரத்தால் "தாலிபான்" போராளிகள் பற்றி சித்தரித்தபதை போன்று கருத்தாடல் இருந்ததால் நன்னோக்கு கருத்தி அவ்வகை கருத்தினை நெறியாடளுக்கு உட்படுத்தியிருக்கிறோம்.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,

அன்புடன்

நெறியாளர்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புள்ள நெறியாளர் அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அடியேன் குறிப்பிட்டிருந்த கருத்துச் சுருக்கம்:” தாடி எனும் சுன்னத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குறிப்பிட்ட என் முன்னாள் மேலாளர் (யன்பு-சவுதி அரபிய்யா)ஹராம் என்று ஷரி அத் தில் திட்டவட்டமாகச் சொல்லப்பட்ட “பொய் கூறுதல்” என்ற பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார்;அவருடன் பலமுறை வாதாடியுள்ளேன்; ஆனால் அவர் மீண்டும் எல்லா முஸ்லிம் ஊழியர்களையும் தாடி வைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்; அதிலிருந்தும் பின்னர் அவரின் மற்ற நடவடிக்கைகள் மூலமும் அவர் ஒரு தாலிபான் ஆதரவாளர் என்றும் பின்னர் சவூதியிலிருந்து அவரின் சொந்த நாடான எமனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார் என்றும் அறிந்ததனால் அவ்வண்ணம் என் கருத்தில் குறிப்பிட்டேன். இதிலிருந்து இக்கட்டுரையாளர் மெய்பிக்கும் ஓர் உண்மையான உணர்வான “பொய் பேசுதல்” என்பது வெளி வேடதாரிகளிடம் இருக்கும் ஓர் அம்சம் என்பதைச் சுட்டிக்காட்டி, இக்கட்டுரைக்கு என் கருத்துரை மேலும் பக்கபலமாக அமையும் என்பதே.
இங்கு தாடி என்பதை குறை கூற எடுத்துக் கொள்ளப்பட்ட கரு அன்று; மாறாக ஓர் எடுத்துக்காட்டு; இன்னும் சுன்னத்தான கோலங்களைப் பின்பற்றுப்வர்கள் வரதக்‌ஷணை, தலாக் சொல்ல வைப்பதில் தீவிரம். அடுத்தவர்களைக் கிண்டல் செய்வது, தான் மட்டும் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவதாக நினைத்துக் கொண்டு ”பொய்பேசுதல்” என்பதை வழக்கமாகக் கொண்டவர்கள் உள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டவே என் பின்னூட்டம் இடப்பட்டது. என் முன்னாள் மேலாளரைப் பற்றி எழுதுவதில் பொய் இருக்கக் கூடாது என்பதாற்றான் அவரின் நடவடிக்கைகளை ஈண்டு எழுதினேன்; இதில் புறம் அல்லது அவதூறு இல்லை என்றே என் மன்சாட்சியின் கூற்று.

Unknown said...

>>>>இங்கு தாடி என்பதை குறை கூற எடுத்துக் கொள்ளப்பட்ட கரு அன்று; மாறாக ஓர் எடுத்துக்காட்டு; இன்னும் சுன்னத்தான கோலங்களைப் பின்பற்றுப்வர்கள் வரதக்‌ஷணை, தலாக் சொல்ல வைப்பதில் தீவிரம். அடுத்தவர்களைக் கிண்டல் செய்வது, தான் மட்டும் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுவதாக நினைத்துக் கொண்டு ”பொய்பேசுதல்” என்பதை வழக்கமாகக் கொண்டவர்கள் உள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டவே என் பின்னூட்டம் இடப்பட்டது.<<<<<<

ஓர் இஸ்லாமியனுக்கு
தன் புறத்தோற்றத்தைவிட
அகமாற்றமே மிகமிக அவசியமானது

அகத்தில் அவன் இஸ்லாமியனாய் இல்லாதபோது
அவனின் புறம் என்பது வெளிவேசம் மட்டுமே
அப்படியானவர்களைத்தான் நானும்
என் வாழ்நாளில் அதிகம் கண்டேன்

புறம் தேவையில்லை என்று சொல்லவில்லை ஆனால்
நாம் அகத்தை அதிகம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

புறம் என்பது காலத்துக்குக் காலம் மாறக்கூடியது
ஆனால் அகம் மட்டும் எந்தக் காலமும் மாறிவிடக்கூடாது

அப்படிய மாறிய மறுநிமிடம்
அவன் எப்படி இஸ்லாமியனாய் இருக்கமுடியும்?

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//புறம் தேவையில்லை என்று சொல்லவில்லை ஆனால்
நாம் அகத்தை அதிகம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்//

ஜஸாக்கல்லாஹ் கைரன், மிக்க நன்றி அன்புடன் புகாரி அவர்களே!

அவசரப்படாமல் - ஆழமாகச் சிந்திக்கும் உங்களின் அறிவை அல்லாஹ் மேன்மேலும் விருத்தியாக்குவானாக (ஆமீன்)

“அவசரம் ஷைத்தானின் வழிமுறை” என்று என் ஆசான் எனக்கு இட்ட கட்டளை; சில நேரங்களில் அடியேன் கூட அக்கட்டளைக்கு மாறாக அவசரப்பட்டு செய்து பின்னர் நட்டவாளியாக ஆனதும் ஒன்று.

உங்களின் கருத்துக்கள்/பின்னூட்டங்களில் நீங்கள் அவசரம் காட்டாமல்-ஆழமாகச் சிந்தித்து நல்லெண்ணத்தில் எழுதுகின்றீர்கள் என்பதாற்றான் உங்களின் எல்லா ஆக்கங்களும்/பின்னூட்டங்களும் “நீடூர்சன்ஸ்” வலைத்தளத்தில் அதன் நிர்வாகி முஹம்மத் அலி ஜின்னா அவர்கள் மீள்பதிவு செய்கின்றார்கள் என்பதும் கண்டு வருகின்றேன்.

sabeer.abushahruk said...

அகத்தூய்மையற்ற ஒருவரைப் பற்றி விமரிசிக்க அவர்தம் புறத்தழகில் சுன்னாவைப் பின்பற்றியதை கிண்டல் செய்ததுபோன்றதொரு தொணி கவியன்பனின் பின்னூட்டத்தில் இருந்ததை நானும் கவனித்தேன்.

ஊடகத்தில் தாக்கம் விளைவிக்கும் எழுத்துத்திறன் வாய்ந்த கவியன்பனின் மேல் அன்பு கொண்டவர்கள் வாசிக்க நேர்ந்தால் கவியன்பனின் கருத்தில் சற்றே வருந்த நேரும் எனும் நல்நோக்கிலேயே அக்கருத்து அகற்றப்பட்டது.

ஒரு மனிதனின் ஐந்து தன்மைகளில் இரண்டில் சுன்னத்தைப் பின்பற்றி மூன்றில் அலட்சியம் இருப்பின் அந்த மூன்றைப் பற்றியே விமரிசிக்கலாமே தவிர, அவர் பின்பற்றும் மற்ற இரண்டையும் கிண்டல் செய்தல் சரியல்ல.

தெளிவாக கருத்துரைக்க நேரமில்லை நண்பர்களே. ஆயினும், ஒன்று தெளிவு. அந்த பின்னூட்டம் நீக்கப் பட்டதற்கு கவியன்பனின்மேலான அன்பே காரணமன்றி வேறேதுமில்லை.

sabeer.abushahruk said...

ஆங்...மறந்துவிட்டேன்

இப்படிக்கு,

தாடி வைக்குமளவுக்கு அகத்தூய்மை இல்லையோ என்கிற சந்தேகத்தால் இன்னும் தாடி வைக்காத....சபீர்.

Unknown said...

>>>>தாடி வைக்குமளவுக்கு அகத்தூய்மை இல்லையோ என்கிற சந்தேகத்தால் இன்னும் தாடி வைக்காத....சபீர்.<<<<

கவிஞரே, இதைவிட அகத்தூய்மையா? தாடி ஆசை இருந்தால் உடனே வைத்துவிடுங்கள்.

>>>>பின்பற்றும் மற்ற இரண்டையும் கிண்டல் செய்தல் சரியல்ல<<<<

உண்மையோ உண்மை. நாம் காணும் யாரிடமும் உள்ள நல்லதைத்தான் நாம் பாராட்டவேண்டும். அப்படிப் பாராட்டும்போது மெல்ல மெல்ல கெட்டவை உதிர்ந்துவிடும். ஆனால் அந்த நல்லவை என்பது வேசம் என்பது தெளிவாகும்போது, ஊரை ஏய்க்க என்பது வெளிப்படையாகவே தெரியும்போது, நாம் ஏமாறத் தேவையில்லை. பசுத்தோல் போத்திய புலிகள் ஆடுகளால் அடையாளம் காணப்படுவது அந்த இனத்திற்கே நலம் விளைவிக்கும்.

நான் சிறு வயதில் கேட்ட ஒரு குட்டிக் கதை!

ஈசா நபி நடந்துகொண்டிருந்தபோது ஓர் தெருமுனையில் ஒரே கூட்டம். பார்த்தால் ஒரு நாய் செத்துக்கிடக்கிறது. எல்லாம் அழுகி துற்நாற்றம் வீசுகிறது. எல்லோரும் அதை கடுமையாக திட்டிக்கொண்டிருந்தார்கள். அடடா எத்தனை வெண்மையான பற்கள் இந்த நாய்க்கு என்று ஈசா நபி சொன்னார். தங்கள் தவறை உணர்ந்தவர்கள் இறந்துபோன நாயை அப்புறப்படுத்தினர்.

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் கவிவேந்தர் சபீர், அஸ்ஸலாமு அலைக்கும், என்பால் உள்ள அன்பால் என் கருத்துரை நீக்கப்பட்டது; மேலும், என்பால் உள்ள அன்பால் நீங்கள் அன்பொழுக “கவியன்பன்” என்று மட்டும் (பெயர் கூறாமல்) விளிப்பதைப் போலவே, ஈண்டு என் எழுத்துக்களின் தரம் ஊடகத்தில் உண்டாக்கியுள்ளத் தாக்கம் பற்றியும் குறிப்பிட்டு நீங்கள் பின்னூட்டம் இட்டது. அறிவேன். குறிப்பிட்ட ஒருவரின் குணங்களை விமர்சிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட எடுத்துக்காட்டன்று; மாறாக, அவரைப்போல் அதிகமானோர் “பொய் பேசுதல்” என்பதைப் போலவே வரதக்‌ஷணைப்யாக கட்டாயப் படுத்தி வீடு எழுதி வாங்குதல், தலாக் போன்றவற்றில் துரிதப்படுத்தல், பிறரைக் கிண்டல் செய்தல், தான் மட்டும் அல்லாஹ்வின் பாதையில் செல்வதால் மற்றவர்கள் எல்லாம் இஸ்லாம்/ஈமான் இல்லாதவர்கள் என்று எண்ணுதல் ....இப்படி பற்பல “ஹராம்”களைச் செய்து கொண்டு முன் சஃபில் தொழுதல் (இவ்வார்த்தை ஜனாப் மு.செ.மு. நெய்நா அடிக்கடி பயன்படுத்தி இதே தளத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அடியேனும் கையாள்கிறேன்)போன்ற வேடதாரிகளை ஊரில் நிரம்பக் கண்டேன்; அது மட்டுமன்று, சிலர் “ஹராமான” சம்பாத்யத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவிகளையும் ஏற்கின்ற அளவுக்கு “பொய்மை” எனும் புற்றுநோய் புரையோடிக் கிடக்கின்றது. இக்கட்டுரைக்குப் பொருந்தும் என்பதாற்றான் இக்கருத்துரையிடப்படுகின்றது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு