Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் வாங்கவில்லையா ? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 03, 2012 | , , ,



சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல் நிலையத்திற்கே.........

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவது என்பது நிதர்சனமான உண்மை. 

இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்காக காவல் நிலையத்திற்கு வரும் புகாரை விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக் கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே காவல்துறை அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படும் என்ற ஒரு கருத்து பெரும்பாலானோர் மத்தியில் காணப்பட்டாலும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்வர். இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. 

காவல்துறைக்கு எடுத்துச்செல்லும் நியாமான நமது புகார்களை முறையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வில்லையா ?

தமிழ்நாடு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக http://www.tnpolice.gov.in/ இவை உள்ளது. இதில் தமிழ்நாடு போலீசின் விவரங்கள், காவல்துறையின் அன்றாட நிகழ்வுகள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறிப்பாக கிரிமினல் குற்றங்கள், நில மோசடி, விபத்துகள் மற்றும் நமது கருத்துகள் போன்றவற்றை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யும் முறை : (ONLINE  PETITION  FILING)

1. இதற்கு முதலில் http://www.tnpolice.gov.in/ இந்த லிங்கில் செல்லுங்கள். 
2. அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய புகார்களை பதிவு செய்துகொள்ளலாம். 
3. மேலும் நமது புகாரின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம். 
4. நாம் பதியும் புகார் நமது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ( Superintendent of Police )அவர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
5. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் அனைத்தும் குறிப்பாக நமது பெயர், தொலைப்பேசி எண்கள், புகாரின் தன்மை போன்றவை உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். 

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.....

12 Responses So Far:

அதிரை சித்திக் said...

விளிப்பிணர்வு வித்தகர் ......

சேகனா .M .நிஜாம் ஒவ்வொரு ஆக்கமும்

புத்தகத்தில் பதிவாக்க பட வேண்டிய விஷயம் ..

மணிமேகலை பதிப்பகத்தின் வெளியீடு போல் இருக்கிறது

உங்களின் ஆக்கம் .வாழத்துக்கள்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பின் தம்பி நிஜாம்,

தேவையான ஆக்கம். வழக்கம் போல். மிகுந்த பாராட்டுக்கள்.
அங்கோலா கிளம்பிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் பதிவினைப் படித்து கருத்து இட்டுப் போவது மகிழ்ச்சி.

விழிப்புணர்வு பக்கங்களின் இரண்டாம் பகுதியில் முதலில் வரவேண்டிய ஆக்கம்.

வஸ்ஸலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவசியமான, எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள் !

இதனைச் செய்வதற்கு கொஞ்சம் திடம் வேணும், இதில் நிறைய பேர் புகார் அளித்தால் யார் இங்கெல்லாம் அழைந்து கொண்டிருப்பார்கள் என்ற உணர்வும் நம்மில் நிறைய பேருக்கு ஏற்படுவதை மறைக்கவும் முடியாது !

Noor Mohamed said...

விழிப்புணர்வு வித்தகர் தம்பி நிஜாம் அவர்களின் ஓயாத உழைப்பால் உறங்கும் நம் மக்களை விழித்தெழ செய்கிறார்.

பெரும்பாலும் நமதூர் மக்களெல்லாம் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள். குறுகிய கால விடுப்பில் வரும்போது, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு பெற துணிந்து இறங்கினால், எதிர்கால வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிடுவார்களோ என்ற அச்சமட்டுமின்றி, நடைமுறையில் பாதிப்பிற்கும் ஆளாகுகிறார்கள்.

இதனால்தான் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் ஏஜண்டுகள் மூலம் சென்று, பணத்தை பற்றி பார்க்காது காரியத்தை முடித்து, பிரச்சனைகளிலிருந்து வெளிவருகிறார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயனுள்ள காவல் செய்திகள்!

அங்கே நம்மவர்களின் பணி செய்யவேண்டியதன் விழிப்புணர்வையும் ஏற்படுத்துங்களேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புச்சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களின் எல்லா ஆக்கமும் நம் சமுதாய நோக்கமாகவே இருப்பதை கண்கூட கான்கிறோம். அல்லாஹ் அவருக்கு எல்லா நலன்களையும் தருவானாக. ஆமீன். ஏழைகளின் புகார் எந்த காவனிலையதில் உள்ள காவலரின் காதில் புகா(து)ர்!ஆனால் பணக்காரன் செல்வந்தனின் புகார் உடனே காவல் நிலையம் புகும்.இது களையப்பட வேண்டியது அவசியம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய அதிரை நிருபர் வாசகர் அனைவருக்கும் என்றென்றும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

தற்காலியமாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தன் கருத்தினை கக்கமுடியாமல் தவிக்கிறேன்.

நண்பர் நிஜாமின் போலீஸ் என்ற பயமுறுத்தல் நம்மையெல்லாம் நெகிழவைக்கின்றன.
இதற்குமேலும் நான் கருத்து பதியவில்லை என்று சொன்னால் புகார் கொடுத்து விடுவார் என்ற பயத்தில் சிரமம் மேற்கொண்டு கருத்தினை பதிந்து நிஜாமின் புகாரில் இருந்து
தப்பித்துக்கொல்லுகிறேன்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய அதிரை நிருபர் வாசகர் அனைவருக்கும் என்றென்றும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

தற்காலியமாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தன் கருத்தினை கக்கமுடியாமல் தவிக்கிறேன்.

நண்பர் நிஜாமின் போலீஸ் என்ற பயமுறுத்தல் நம்மையெல்லாம் நெகிழவைக்கின்றன.
இதற்குமேலும் நான் கருத்து பதியவில்லை என்று சொன்னால் புகார் கொடுத்து விடுவார் என்ற பயத்தில் சிரமம் மேற்கொண்டு கருத்தினை பதிந்து நிஜாமின் புகாரில் இருந்து
தப்பித்துக்கொல்லுகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பயனுல்ல ஆக்கம் தந்த நண்பர் நிஜாம் அவர்களுக்கு மிக்க நன்றி.

sabeer.abushahruk said...

ஒவ்வோர் பதிவுக்கும்
இவ்வூர் உமக்குக் கடப்பாடு!

வாழ்க!

KALAM SHAICK ABDUL KADER said...

//தற்காலியமாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தன் கருத்தினை கக்கமுடியாமல் தவிக்கிறேன்.//

இணையம் கிடைக்காதத் துடிப்பு உங்கட்கு; உங்களைக் காண என் இதயத்துடிப்பு ஊர் வந்த நாளாய்; உங்களைத் தேடி உங்கள் நிறுவனம் நாடி வந்து ஆரத்தழுவிய பின்னரே என் துடிப்பு அடங்கியது. மீண்டும் சந்திக்க எண்ணினேன்; உங்கள் கடை பூட்டப்பட்டிருந்தது. என் வீட்டுத் தெருவுக்குப் பக்கத்தில் நீங்கள் இருப்பதால் அடிக்கடி வரலாம் என்று நினைத்தேன். உங்கட்கு இணைய இணைப்புக் கிட்டியதால் இனி உங்களின் அருமையானப் பின்னூட்டங்களைக் காண அவா.

விழிப்புணர்வு வித்தகர் “தியாகம்” செய்து இப்படிப்பட்டத் துணிவானப் பதிவுகளை நமக்காக வழங்குவதால், கவிவேந்தர் சொல்லை வழிமொழிகின்றேன்: அதிரை மக்கள் உங்கட்குக் கடன்பட்டிருக்கின்றார்கள்.
உங்களுடைய “விழிப்புணர்வு பக்கங்கள்” நூலை என் நணபர்கட்கு (வெளியூரில்) கொடுத்தேன். “இப்படிப்பட்ட அரசு இயல் சம்பந்தப்பட்ட அறிவு உள்ளவரை நீங்கள் ஏன் பேரூராட்சித் தலைவராகத் தெரிவு செய்யக் கூடாது?” என்று என்னிடம் கேட்டனர். “இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு மக்கள் தொடர்பு அவரிடம் உண்டு” என்று மறுமொழி சொல்லிவிட்டு வந்தேன். இதனை விழிப்புணர்வு வித்தகரிடம் நேரில் பலமுறை கேட்டுக் கொண்டேன். அவர் மறுத்து விட்டார்; இப்படிக் கட்டுரைகள் எழுதுவது என்பதை விட செயலுருவில் நடாத்திக் காட்ட அரசியலில் தூய தொண்டாற்ற முன் வந்தால்
“சொல்லும் செயலும் ஒன்றான” ஒரு முன்மாதிரிச் சேவகராக எண்ணுவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு