Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உன் பயணம் சுபமானதோ !? - சாலை விபத்து ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 12, 2012 | , , , ,

யாஸீன் சுஃபியான் – நண்பா !
கல்லூரி முதல்நாள்
அறிமுக மானாய் 
அகமும் ஆனாய்
நண்பர்கள் அனைவருக்குமே !


புதுக் கல்லூரியில்
நீ படித்ததோ வேறு
நான் படித்ததோ வேறு..
எங்களோடு இருந்தாய் வேராய் !


பெற்றோரின் பிள்ளையாய்
கற்றோரின் முல்லையாய்
மார்க்கம் தேடி தர்க்கமென்றாலும்
சன்மார்க்கமென்றாலே கூடிப் பேசுவோமே !


புதுக் கல்லூரி விடுதியோ
புதிராய் தெரிந்தது
புத்தம் புது உன் நட்போ
புத்திமதி சொன்னது !


ஆங்கிலம் கற்க
அதிகாலையே எழுப்புவாய் !
அரட்டையும் பிடிக்கும்
குறட்டையும் பிடிக்கும் !


அத்தோடு விட்டாயா ?
கல்லூரி காலங்கள்
சடுதியில் கழிந்தாலும்
தொடர்ந்தது நம் நட்பு


சனி இரவென்றாலே
ஞாயிறும் இரவாகுமே!
எல்லை தாண்டாத
தொல்லைகள் கொடுப்பாயே !


விட்டாயா அத்தோடு !
வந்தாயே என்னோடு(ம்)!
வளைகுடா வாழ்வுக்கும்!
வசந்தங்கள் கூட்டிட !


என் வாழ்வில்
கொண்டாயே அக்கரை
உன்னால் வாழ்வில்
கண்டேனே சர்க்கரை !


ஏனடா !
நேசிக்க இணைந்தவனே !
ஏனடா !
இன்னும் நேசிக்க
வைக்கிறாயே !


உன் பயணம் சுபமானதோ !?
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் !


நண்பர்களோடு உன் மறுமை வாழ்வுக்காக துஆசெய்யும்


சகோதரன் !


m.nainathambi (அபுஇபுறாஹிம்)
அதிரைப்பட்டினம்

27 Responses So Far:

sabeer.abushahruk said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.

எத்துணை தூரப் பயணம் உங்களோடு!!!

இலக்கு வரை கூட வருவார் என்ற நம்பிக்கை எதிர்பாராமல் வெட்டப்படும்போது ஏற்படும் வலி பெரியது.

நட்பு
நலினமானதுமட்டுமல்ல
வலிமையானதும்கூட. இழந்தால் வலிமயமானதும்தான்.

இனி
இன்னின்ன நேரமென்றல்லாது
அவர் நினைப்பு கொல்லும்

எனினும்
இறைவன்
மறதி எனும் மருந்தை
காலம் எனும் தேன் கலந்து
வலி நிவாரணி தருவான்.

கலங்காதீர்கள், சபுர் செய்து கொள்ளுங்கள்.

சேக்கனா M. நிஜாம் said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் !

இல்யாஸ் said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் . பிறந்தது கீழக்கரை ஆனாலும் அதிரையில் நண்பர்கள் அதிகம், அதில் நானும் ஒன்று. அன்னாரின் பாவ மன்னிப்புக்காக எல்லாம் வல்ல அல்லஹ்விட்ம் இறைஞ்ச்வோம்

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

மரண சிந்தனை யாவருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. உங்களிடம் ஃபோனில் பேசிய பின்பு தங்களின் இழப்பு எத்தகையது என உணர முடிந்தது.

வாழ்க்கையும் சரி; மரணமும் சரி எத்தனை பேருக்கு விரும்பியபடி அமைகிறது?


எங்ஙனம்?

எல்லை தாண்டிய
பயங்கரவாதத்தில்
இயற்கையின்
இன்னொரு அலை
ஈடுபடாத வரை...
எங்ஙனம்
இயற்கை எய்திடல் சிறப்பு
என
எதிர்பார்ப்பு
எவர்க்கும் இருக்கலாம்!

சிலருக்கு
நித்திரையிலோ
நிம்மதியான இருப்பிலோ...
இன்னும் சிலருக்கு
தாம் விரும்பும்
மடியிலோ
தம்மை விரும்புபவர்
மடியிலோ...
இறந்துபோக ஆசை!

எனினும்
வாய்ப்ப தென்னவோ
வாகன விபத்திலோ
வன்மத்தின் முடிவிலோ
நீர்க் குமிழியாகவோ
நெஞ் சடைப்போடோ
உறுப் பறுந்தோ
நோய் வதைத்தோ
ஒற்றையாகவோ
கொத்துக் கொத்தாகவோதான்.

எனக்குமுண்டு
எதிர்பார்ப்பு...
ஒரு
தொலைதூரப் பயணத்திலிருந்து
வீடு திரும்பும் பின்னிரவில்
சன்னலோர
இருக்கையில்
குட்டிக் குட்டி
மரணங்களான
தூக்கத்தை
என் மகன்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்
அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என...!

KALAM SHAICK ABDUL KADER said...

பிரித்து பொருள்
கூறவியலாத இலக்கணம்
நட்பு

பிரிந்து போன
நட்பின் துயரம்
கொடிது

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Noor Mohamed said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அலாவுதீன்.S. said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!

Yasir said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுஃபியான் காக்கா இறந்த செய்தி கேட்டு மனமும் கண்களும் களங்கின...

நண்பரும் சகோதரரே, சகோதரரின் நண்பரும் சகோதரரே என்பதற்கான ஓர் எடுத்துகாட்டு எங்கள் சுஃபியான காக்கா....

நான் படிக்கும் காலத்திலும், சம்பாதிக்கும் காலத்திலும் பேருதவியாக இருந்து பயனுல்ல நல்ல ஆலோசனைகள் செய்த வெகு சிலரில் சுஃபியான் காக்காவும் ஒருவர்..

தடித்த கண்ணாடி வைத்த மூக்குக்கண்ணாடி யாரும் போட்டிருந்தாலும் எங்கள் சுஃபியான் காக்காவின் ஞாபகமே வரும்...

இன்று சென்னையில் ஒரு வணிக வளாகம் அருகில் சென்றபோது நான் முதன் முதலில் சென்னைக்கு வந்தபோது சுஃபியான் காக்கா எனக்கு முதலில் வாங்கி தந்த ஆலன்சொலி சட்டையும், வெள்ளை கென்வாஸ் சூவும் ஞாபகத்தில் வந்தது கண்கள் களங்கின..

சில வருடங்களாக தொடர்பு இல்லாமல் இருந்தாலும், மனதில் நீங்கா இடம்பிடித்த எங்கள் சுஃபியான் காக்காவின் மறுவுலக வாழ்வுக்காக துஆ செய்கிறேன்.

எங்கள் சுஃபியான் காக்காவை இழந்துள்ள அவரின் பிள்ளைகளுக்கும் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் மனநிம்மதியை தந்தருள்வானாக.

Yasir said...

//அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என...!// கண்ணீரை பொங்கி வரவழைத்துவிட்டீர்கள் காக்கா..அல்லாஹ் நாம் அனைவருக்கும் அமைதியான மரணத்தை தருவானாக

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்....

சகோ.யாஸீன் சுஃபியானை கண்டதில்லை
அதனால் அவரைப்பற்றி அறிய வாய்ப்பில்லை
உள்ளம் ஏனோ கணக்கிறது
கண்கள் ஏனோ தன்னைக்கழுவிக்கொள்கிறது

என் சகோதரன் நான் இங்கு வருமுன்னே
சேர வேண்டிய இடம் சென்றுவிட்டான்
நானும் அவனிடம் சென்றதும் என்னை
அடையாளம் கண்டுகொள்வானோ?
உம்மாவைக்கூட்டி வரச்சொல்வானோ?

ர‌ம‌ளான் வ‌ருமுன் உன்னிட‌ம் வ‌ந்துவிட்ட‌
அந்த‌ ச‌கோத‌ர‌னை இன்முக‌த்துட‌ன் ஏற்றுக்கொள்
எங்களையும், அவ‌ரையும் ப‌டைத்த‌ இறைவ‌னே!

இறப்பு எல்லோர்க்கும் வர இருந்தும் சகோதரனின் இறப்பு எப்படி, எங்கு சம்பவித்தது? என யாரேனும் இங்கு அறியத்தருவீர்களா?

ZAKIR HUSSAIN said...

எல்லாம் [ மரணமும் ] சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை மனது புரிந்து கொண்டால் இறைவனடி சேர்ந்த அந்த சகோதரனுக்கு அந்த இறைவனடித்தில் நற்பதவி கிடைக்க துஆ மட்டும் செய்யச்சொல்லும்.

U.ABOOBACKER (MK) said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!
கல்லூரியில் படிக்கும் காலத்தில் பெறோர்கள் கொடுத்து வந்த pocket money ல் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்க துண்டு பிரசுரம் அடித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழ்மையும் வெளியிட்டு அழைப்புப் பணி செய்த நல்ல அடியான் சகோ.யாஸீன் சுஃபியான். சாலை விபத்தில் இறந்த அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஆகிரத்தில் நற்பதவியை வழங்குவானாக!

Unknown said...

இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன்
இறப்பிற்கு பின் தனக்காக துஆ செய்யும் பிள்ளைகளை பெற்றிருப்பது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அப்படி பட்ட நிலையில் நன்பரின் மரனதுக்கு பின் நன்பனுக்காக துஆ செய்யும் நன்பனை பெற்றிருப்ப்தும் பெரும் பாக்கியமே அப்படிபட்ட நன்பனையும் பிள்ளைகளை உருவகுவது நமது நல்லசெயல்பாட்டல் மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும் எனவே அப்படிபட்ட பன்பை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் நமக்கு அருள் புரியட்டும்
வஸ்ஸலாம்

Yasir said...

இஸ்லாமை ஏற்றதற்க்காக கருவருக்கபடும் மக்கள்..நேரம் கிடைக்கும்போது பாருங்கள்
http://www.aljazeera.com/programmes/aljazeeraworld/2012/06/201262711846997219.html
யா அல்லாஹ் இவர்களுக்கு சக்தியை கொடுப்பாயாக

Shameed said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். படித்ததும் என்னால் தாங்க முடியல .அவர்களின் ஆகிரத்திற்கு துஆ செய்யவும். அவர் ஒரு விலைமதிக்க முடியாத மனிதன். அல்லாஹ் போதுமானவன்.

அப்துல்மாலிக் said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!
வல்ல இறைவன் அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து சுவர்கத்தை கபூலாக்குவானாகவும், அன்னாரின் பிரிவால் வாடு குடும்பத்திற்கும் அனைத்து நட்புக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..... :(

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர்,சகோ.சுபியானின் மரணச்செய்தி பெரும் இடியாக வந்து பெரும் மனவேதனையை தருகிறது. இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் ஆகிரத்துடைய வாழ்வை செம்மையாக்குவானாக. ஆமீன்.அவரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொருமையை தந்தருள்வானாக ஆமீன். பெரும் துயரத்துடன் வாடும் அ.ர.அப்துல் ஜப்பார் மற்றும் குடும்பத்தினர்.

Unknown said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!

Ebrahim Ansari said...

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!

நண்பன் பிரிந்து நம்மைவிட்டு இருக்கலாம். நட்பு பிரியாது. சபூர் செய்வோமாக.

இப்னு அப்துல் ரஜாக் said...

என் மூத்த சகோதரர் அர அப்துல்ஜப்பார் அவர்களின் தோழராக புதுக் கல்லூரியில் எனக்கு அறிமுகமாகி,பிறகு எனக்கும் மற்றைய என் சகோதரர்களுக்கும் நண்பராக ஆனவர்,அதுமட்டுமல்ல,என் தந்தையின் அன்பிற்கும் ஆனவர்,அந்த அளவு எல்லாரிடமும் பழகும் நற்குணம்,மார்க்கப் பற்று,ஏகத்துவ எழுச்சி தொடங்கிய காலம்-நியூ காலேஜில் இதற்காக முனைப்பாக செயல்பட்டவர்.நான் அருகிலிருக்கும் பாஸ்டன் பள்ளியில் படிக்கும்போது,நியூ காலேஜ் சென்றால்,நன்கு உப சரிப்புடன் - அழகான - அமைதியான முறையில் அக்கறையாய் பல விஷயங்கள் எடுத்து சொல்வார்.அவருடன் இருக்கும் எல்லா நண்பர்களும் அவர் பேசும் கல கல பேச்சை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.அவர் தடிமனான கண்ணாடியின் உள்ளே இருக்கும் அவர் கண்களும் சிரிக்கும்.(அவர் நண்பர்களுக்கு இது தெரியும்).

இறைவா,அந்த நல்ல சகோதரனை,நண்பரை அதிகமதிகம் கவுரப்படுத்து,உயர்ந்த சுவனம் கொடு,சொர்க்கத்தில் எல்லாவற்றயும் கொடு,அவர் மனைவிக்கும் கொடு,யா அல்லாஹ்.(சென்ற வருடம் அவர் மனைவி கேன்சரால் இறந்துவிட்டார்கள்)

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!

சபூர் செய்வோம்.அல்லாஹ் நீயே போதுமானவன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

இன்ஷா அல்லாஹ் !

கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்கை அதில் மரணமும் அடக்கமே !

இந்த பதிவு நட்பை நினைவு படுத்துவதற்கு மட்டுமல்ல மரணத்தையும் நினைவில் வைத்திருக்கவே !

யாஸீன் சுஃபியான் !

இழந்ததும் உணர்கிறேன் எவ்வளவு உண்மையானவன் அவன் !

பிறந்தது கீழக்கரை, எவரிடமும் தைரியமாக பேசும் வழக்கம், நேர்பட எதிர்கொள்வதிலும் தில்லானவன்.

கஷ்டமே இருந்தாலும் அவைகளில் இஷ்டமானதை எப்படி பிரித்தாளலாம் என்று அடிக்கடி அடிமேல் அடிவைப்பான் !

நிறைய சந்தர்ப்பங்களில் காதியானிகளோடு 'கத்தி'க்கொண்டு போராடாமல் கருத்துகள் கொண்டு போராடலாம் என்று ஒவ்வொரு மாலையும் வாய்க்கும் தருணமெல்லாம் அழைத்துக் கொண்டு செல்வான் அங்கே ஒரு போராளியாக...

நிறைய சந்திப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பான் ! ரகசியம் காப்பதில் அவன் ஒரு நல்ல விசுவாசி !

என் தகப்பனாரோடு உரிமையோடு உறவாடுவான், உள்ளதை அப்படியே உடைத்து பேசுவான். எனக்கு அதிமுக்கியமான சந்தர்ப்பங்களில் ரிமோட் கண்ட்ரோலாகவும் இருந்தான், அலர்ட் கொடுத்தான், அதிலிருந்து மீட்டெடுத்தான் என்று சொன்னால் மிகையில்லை... !

எனது வாப்பிச்சா வீட்டு அப்பா அவர்கள் இறப்பெய்த செய்தியை எங்கள் சொந்தங்களில் ஒருவர் ஹாஸ்டலுக்கு வந்து என்னிடம் எதுவும் சொல்லாமல் என்னுடன் வா என்று அழைத்து வந்து ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்ததும், "உடனே ஊருக்கு கிளம்பு அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தகவல் வந்திருக்கு" என்றதும் அழுதே விட்டேன் என்ன ஆனதோ என்று !

அந்த நேரத்தில் ஒன்றுமே விளங்கவில்லை, "நீ கெளம்பு கெளம்பு" என்றுதான் அவசரப்படுத்தி என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள் அதுவரை எனக்கு சுயநினைவாக எதுவுமே புரியவில்லை... ஊர் நெனப்புலயே இருந்திகிட்டு இருக்கும்போது பஸ் கிளம்புவதற்கு ரெடியாகும்போது ஒருத்தன் முதுகில் கைவைத்து தட்டினான்.

பர்த்ததும் ஷாக் என்ன இவன் இங்கே அவன் தான் "சுஃபியான்"

"எனக்கு எல்லாமே தெரியும், இந்தா உன்னோட பேக்", அப்போதுதான் அவனிடம் "என்ன தெரியும் உனக்குன்னு" கேட்டேன் !

அவனோ "தைரியமாக இரு உன்னோட அப்பா மவுத்தாயிட்டாங்களாம் அதான் பின்னாடியே சுஜித் பாலன் பைக்கில வந்து இறக்கி விட்டான்" என்று சொல்லி தாம்பரம் வரை ஒன்னாக வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தான் அங்கே ஸ்டாப் வந்ததும் மனமின்றி திரும்பிச் சென்றான்...

என் வாழ்வில் மறக்க முடியாத ஆறுதல் அவனுடைய அந்த நிமிடங்கள் !

இன்னும் ஏராளம் மற்ற நண்பர்களைப் போல் இவனுடைய நினைவுகளும், அவைகள் எல்லாமே பெர்ஷனல் என்றாலும் பகிர்ந்தால் நீளிம்

நிறைவாக (என்றுமே) நட்பு நாட் அவுட்(தான்) !

அதிரை சித்திக் said...

இன்னாளிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உயர்ந்த நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த அன்னாரின் துயரத்தில் இருப்பவர்களுடன் இணைந்து நிரந்தர மறுமை பேற்றுக்கு இறைவனிடம் துஆ செய்தவனாக.

Unknown said...

அன்புச்சகோ நெய்னா தம்பி,

இதயத்தினின்று வந்தாலேயன்றி
இப்படி எளிமையும் வலிமையுமுடைய
கவிதையை ஈனுவது இயலக்கூடியதாய் இருப்பதில்லை!

நாம்
இறைவனிடம் இருந்தே வந்தோம்
மேலும்
அவனிடமே திரும்பிசெல்பவர்களாக
இருக்கிறோம் (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்)

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு