ரமளான் பரிசு ! [அமெரிக்காவில் புதிய பள்ளிவாசல்கள்]

அல்ஹம்துலில்லாஹ் !

நாங்கள் வசிக்கும் கலிபோர்னியா மாகாணம் vallejo எனும் ஊரில் கணிசமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் .

குறிப்பாக அதிரையை சேர்ந்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். அரேபியர், பாகிஸ்தானியர், மற்றும் இந்திய முஸ்லிம்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

இங்கு ஒரு பள்ளிவாசல் இருந்து, அது சிறியதாக இருந்ததாலும்,முஸ்லிம் சனத்தொகை கூடுவதாலும் அதிக மக்கள் தொழுவதற்கு சிரமமாக இருந்தது. அச்சூழ்நிலையில் புதிதாக பள்ளி வாசல் கட்டுவதாக இருந்தால் இரண்டு / மூன்று மில்லியன் டாலர் தேவைப்படும். இதற்கிடையே, நம்மவர்கள் பல தரப்பட்ட முயற்சியில் ஈடுபட்டுவந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் பெரிய சர்ச் புதிய கட்டிடமாக கட்டிய நிலையைல் சில மாதங்களிலேயே மக்களின் வருகையின்மையால் நிர்வாகம் அந்த தேவாலத்தை மூடி விட்டார்கள். தேவாலயத்தை கட்ட அதன் நிர்வாகம் வங்கியில் கடன் வங்கியிருந்ததால் அதை செலுத்தாமல் போகவே.. வங்கி அந்த கட்டிடத்தை கையாக படுத்தி கொண்டது.

இதையறிந்த vallejo இஸ்லாமிக் சென்டர். நிர்வாகிகள் நியாயமான விலையில் அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கி புனரமைப்பு செய்து நவீன வசதியோடு விசாலமான பெரிய பள்ளியாக இன்று காட்சி தருகிறது. ரமலான் முதல் பிறையில் தொழுகையும் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் ! 


*அதான் (பாங்கு ஓசை) நவீன ஒலி பெருக்கியில் ஒலிக்கிறது.
*எல்லாத் தொழுகைகளுடன் - இரவுத் தொழுகையும் நடை பெறுகிறது .

இது எங்களுக்கு ரமலான் பரிசாக அல்லாஹ் தந்துள்ளதாகவே கருதுகிறோம் .

அதே போன்று எங்கள் ஊரில் அருகில் உள்ள பேர்பீல்ட் என்ற ஊரிலும் (முன்பு சிறிய பள்ளியாக இருந்தது) சென்ற வாரம் புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது. இங்கும் அதிரை மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எங்கள் பக்கத்து கவுண்டியான சொனோமா கவுண்டியில் உள்ள பள்ளிவாசல் தற்போது - கிறிஸ்தவ ஆலயத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டு - தொழுகை நடந்து வருகிறது, இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் புதிய பள்ளிவாயில் கட்ட உள்ளார்கள்.

அந்தப் பள்ளியின் ஜும்மா பயான் கேட்க இங்கு கிளிக்கவும் http://j1fx.org/ISSR

மேலும் உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களுக்கு இதே போன்று ரமலான் பரிசு கிடைக்கட்டும், ஆமீன்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!" என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். SAHIH AL BUKHARI # 444

அதிரை சித்தீக்
நன்றி : பேனா முனை

9 கருத்துகள்

Abdul Razik சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

good news.

Unknown சொன்னது…

மாஷா அல்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்!!
வல்லேஹோ (Vallejoவின் உச்சரிப்பு இதுதான்)மக்களே, வாய்ப்பைப் பயன்படுத்தி, வல்லானின் அன்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Fairfield மக்களுக்கு ஒரு fair deal வரும், இன்ஷா அல்லாஹ்.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அல்ஹம்துலில்லாஹ். நான் அமெரிக்காவில் இருந்த போது (New Jersey- Plainfield) ஜூம் ஆ தொழுகைக்குப் பள்ளிவாசல் இல்லாமல் இஸ்லாமிக் செண்டர் உள்ள பேஸ்மண்ட் கட்டிடத்தில் கஷ்டப்பட்டுத் தொழுதோம்; இன்று நீங்கள் அழகிய பெரிய பள்ளிவாசல் ரமலான் பரிசாகக் கிடைக்கப் பெற்றிருக்கின்றீர்கள். அதிரையர்கள் அதிகம் உள்ள இடத்தில் நீங்கள் இருப்பதால் அடிக்கடி எல்லா மக்களயும்(அதிரையர்களை) பார்த்து உரையாட ஓர் அரிய வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

Yasir சொன்னது…

மாஷா அல்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மாஷா அல்லாஹ்! அல்ஹம்து லில்லாஹ்!!

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். அல்லாஹ்வின் அருளினால் அவன் இதை அருளினான். அல்ஹம்துலில்லாஹ்!ஆஹா!ஓஹோ வென வல்லஹோ முஸ்லிம் மக்களுக்கு இந்த வருடம் இரட்டை பெறுனாள் மகிழ்சிதான் பொங்க (ஏற்பட)போகிறது போங்க!

அதிரை சித்திக் சொன்னது…

வல்லேஹோ முஸ்லிம் சகோதரர்களின் நெடுநாள் ஆசை அல்லாஹ் இந்த வருடம்
நிறைவேற்றி தந்துள்ளான் ..ஒவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகை
பூங்காக்களில் கூடி தொழுவோம் ....புதிய பள்ளிவாசல் ..கோட்டைப்போல்
காட்சி தருகிறது ...அல்ஹம்து லில்லாஹ் ..எங்கோ ஒரு முஸ்லிம்சகோதரன்
பெற்ற வசதிக்கு அதிரை சொந்தங்கள் பெற்ற எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்ததை
எண்ணி பெருமிதம் கொள்கிறேன் ..அதிரை என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அல்ஹம்துலில்லாஹ்.
மகிழ்வான தகவல்கள்.