Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

AAMF அமீரக சந்திப்பு - அதிரையில் சாத்தியமில்லையா? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சென்ற வருடம் 30 ஆகஸ்ட் 2011 நோன்பு பெருநாள் தினத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் தேரா ஈத்கா மைதானத்தில் அதிரை நல்லுள்ளங்களின் அற்புதமான முயற்சியால் அமீரக வாழ் அதிரை சகோதரர்களின் சகோதரத்துவ சங்கமம் நடைபெற்றது. 

இந்நிகழ்வு அமீரக அதிரைவாசிகளுக்கு மட்டுமான சந்தோசமாக அல்லாமல் உலகெங்கும் வாழும் அதிரை சொந்தங்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பிறபகுதிகளில் உள்ள அதிரை சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ந்தது. தொடர்ச்சியாக அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அமீரகத்தில் உருவாகி, பிறகு அதிரையிலும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உருவானது. சென்ற வருடம் ஹஜ்ஜுப்பெருநாள் சந்திப்பும் வெளிநாடு வாழ் சொந்தங்களை மேலும் ஒன்றிணைக்க மிகப்பெரும் உதவி செய்தது. அல்ஹம்துலில்லாஹ்.

முக்கியத்துவம் வாய்ந்த சென்ற வருட ஈத் பெருநாள் சந்திப்பின் காணொளியை மீண்டும் நினைவலைகளாக உங்கள் பார்வைக்கு தருகிறோம்.





அமீரக அதிரை சொந்தங்களின் முதல் கூட்டுச் சந்திப்பில் அவர்கள் பரிமாற்றி கொண்ட எல்லையற்ற மகிழ்ச்சியை மேற்கண்ட காணொளியே கண் கண்களால் காணும் சாட்சி அல்ஹம்துலில்லாஹ்!

அதிரை சொந்தங்களின் சந்திப்பினால் நட்பு பாராட்டி ஒற்றுமையை வழியுறுத்தி உருவானதுதான் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு. இது போன்று அதிரைவாசிகளின் பெருநாள் சத்திப்புகள் அமீரகம் மற்றும் உலகின் பிற நாடுகளில் சாத்தியப்படுகிறது! ஆனால் அதிரையில் மட்டும் ஏன் இன்னும் சாத்தியமில்லை? என்ற கவலையுடனான கேள்வி நம் எல்லோரின் மனத்தில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அனைத்து அதிரை சொந்தங்களின் பெருநாள் சந்திப்பு சாத்தியப்படுமா? ஏன் முடியாது இதனை ஊரில் உள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உளத்தூய்மையுடன் நினைத்தால் நிச்சயம் இந்த அற்புதம் சாத்தியப்பட வாய்ப்புகள் உள்ளன.

அதெப்படி !?

நிற்க…

திறந்தவெளி திடலில் பெருநாள் தொழுகை பற்றி நபி வழியில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றி பின் அவரும் ஹதீஸ்களின் மூலம் அறியலாம். ஆனால் இந்த நபிவழியை அதிரையில் இதுநாள் வரை பின்பற்றாமல் போனதே நம்மூர்வாசிகளின் பெருநாள் சந்திப்புகளுக்கு சாத்தியமில்லாமல் போகிறது.

திறந்தவெளி திடலில் பெருநாள் தொழுகை:

பெரும்பாலும் நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜா

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி

பரஸ்பரம் அதிரை சொந்தங்கள் மனம் திறந்த சந்தோசத்துடனான ஓரிட்த்தில் சந்திப்பது மட்டுமே ஊர் ஒற்றுமையை நிலைநாட்ட ஏதுவாக அமையும். இதற்கு சாத்தியமான பொருநாள் சந்திப்புகள் அவசியம் தேவை. நம்முடைய ஊர் பெரிய ஊர் இது உடனே சாத்தியப்படுமா என்பது சந்தேகமே, இருப்பினும் குறைந்த பட்சம் ஊரில் முன்று நல்லது நான்கு இடங்களிலாவது தனி ஈத்கா மைதானமோ அல்லது ஈத் முஸல்லா அவசியம் உருவாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கூட்டம் எப்படி அதிரையின் ஓவ்வொரு முஹல்லா சங்கங்களின் வைத்து நடத்துகிறார்களோ அது போன்று, குறிப்பிட்ட முஹல்லாக்களுக்கு உட்பட்ட அந்த ஈத் முஸல்லா பகுதியில் ஒவ்வொரு பெருநாளையும் சுழற்சி முறையில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்தலாம். இதற்கு நல்ல முடிவு எடுக்க தகுதியான ஒரே அமைப்பு ஊரில் உள்ள அனைத்து சங்கங்களை கொண்டுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, வரும் காலங்களில் முன் வருமா? ஈத் பெருநாளில் இயலாவிட்டாலும் ஹஜ் பெருநாளில் செய்யலாமே. இதற்கு அமீரகம் மற்றும் பிற நாடுகளில் உள்ள அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்கள் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லா கூட்டமைப்பை வழியுறுத்தி கேட்டுக்கொள்ளவார்களா?

தெரு, குலம், முஹல்லா, பணக்காரன், ஏழை, படித்தவன், உள்ளூர்காரன், வெளியூர்காரன், இயக்கம், கட்சி போன்றவைகளால் உருவாகும் பாகுபாடுகள் இன்றி, நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள், முஸ்லீம் என்ற எண்ணம் மட்டுமே தலைத்தோங்கி, நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நடந்தால் மட்டுமே அனைத்து அதிரை மக்களின் பெருநாள் சந்திப்பு சாத்தியம். இன்ஷா அல்லாஹ்.

கடந்த சில வருடங்களாக அதிரை ஈத்-கமிட்டி சார்பில் பெருநாள் தொழுகைகள் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இஹ்லாஸுடன் ஊர் ஒற்றுமை, சமுதாய ஒற்றுமையை விரும்பும் அதிரை சகோதரர்களே இந்த வருடம் உங்கள் அனைவரின் பெருநாள் தொழுகையை திறந்தவெளி திடலில் அதாவது மேலத்தெரு சானவயல் மைதானத்தில் ஈத்-கமிட்டியால் நடத்த இருக்கும் பெருநாள் தொழுகையில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த சுன்னத்தை ஹயாத்தாக்க முயற்சி செய்யலாமே இன்ஷா அல்லாஹ்!

அதிரைநிருபர் குழு

4 Responses So Far:

Abdul Razik said...

ஊர் ஒற்றுமை ஓங்க அருமயான கட்டுறை.இதன்படி சுழற்சி முறையில் சந்திப்பு நடத்தினால் மிக நன்றாக இருக்கும். இது சாத்தியப்படாவிட்டால் , ஈத் தொழுகை நேரம் தவிர்த்து மற்ற ஏதாவது நேரத்தில் அதாவது அஷர் தொழுகைக்கு பிறகு பொதுவான ஒரு இடத்தில் அனைத்து முஹல்லா வாசிகளும் சகொதரத்துவத்துடன் கூட ஏறப்பாடு செய்தால் மிக நன்றாக இருக்கும். இந்த இடம் அனைது பகுதி சகோதரர்களும் சங்கமிக்கும் பொருத்தமான இடமாக இருந்தால் நன்றாக இருக்கும். இதற்கென்று ஒரு இடத்தை அனைத்து முஹல்ல மக்களிடம் கருத்து வாங்கி தேர்வு செய்து, நிரந்தரமாஅக அந்த இடத்தை எல்லா ஈத் பெருநாட்கலிளும் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்தால் நிசயம் நம் சமுதாய ஒற்றுமை நிலைக்கும் இன்ஷா அல்லாஹ். இந்த விஷயத்தில் ஊராட்சித்தலைவர் பங்கு எடுது முயற்சி செய்ய வேண்டும். தேர்வு செய்யும் இடம் யாருக்கும் பாதிப்பு வரா வண்ணம் பொதுவான இடமாக இருக்க வேண்டும். நமதூர் வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியர் குலத்தை துரிதப்படுத்தி நிரந்தர மைதானம் உருவக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இது அனைத்து பகுதி மக்களுக்கும் நடுப்பகுதியாக இருப்பதோடு ஒரு பொதுவான இடமாகவும் இருக்கிறது. இதன் மூலம் நீண்ட காலமாக சாக்கடை பகுதியாக இருந்த ஒரு இடம் சுத்தமாவதோடு நம் சமுதாய மக்கள் சந்திக்கும் இடமாகவும் மாறினால் ஒரே முயற்சியில் இரண்டு பலன்கள். இதன் மூலம் நம் சமுதாய ஒற்றுமை ஓங்கட்டும் இன்ஷா அல்லாஹ்.

Abdul Razik
Dubai

அப்துல்மாலிக் said...

நல்ல விடயம் மற்றும் எண்ணம், இதற்கான முயற்சியில் இறங்கலாம், மேலும், வெளீநாடுகளின் நாம் அனைவரும் வேலைக்காக நின்னு பேச நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கோம், எனவே இது மாதிரியான சந்தர்பங்களை பயன்படுத்தி நம் சகோதர்ர்களை சந்தித்து அளவாவ ஒரு கைக்கூடும் நிலமை, ஆனால் ஊரில் அப்படியில்லை எல்லோரும் எப்போதும் எங்கேயாவது சந்திப்போம் அதுக்காக இப்படி ஒரு ஏற்பாடு என்பது தேவையா என்ற எண்ணமும் ஏற்படும். இருந்தாலும் தின சந்திப்பிற்கு பதில் பெருநாள் அன்று சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தும் பாக்கியம் கிடைக்கனும், இன்ஷா அல்லாஹ்

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஊருக்கு தேவையான எத்தனையோ பல நல்ல பல விடயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இது போன்றவற்றிற்கு கடின முயற்சியும் உழைப்பும் தேவை

///தெரு, குலம், முஹல்லா, பணக்காரன், ஏழை, படித்தவன், உள்ளூர்காரன், வெளியூர்காரன், இயக்கம், கட்சி போன்றவைகளால் உருவாகும் பாகுபாடுகள் இன்றி, நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள், முஸ்லீம் என்ற எண்ணம் மட்டுமே தலைத்தோங்கி, நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நடந்தால் மட்டுமே அனைத்து அதிரை மக்களின் பெருநாள் சந்திப்பு சாத்தியம். இன்ஷா அல்லாஹ்///

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பர் அப்துல் ராஜிக் அவர்கள் கூறி இருப்பது ஒரு நல்ல யோசனையே. ஆனால் அந்த இடம் சுலபமாக வாகனங்கள் சென்றுவர இயலுமா என்று பார்க்க வேண்டும்.

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக இப்படி நமதூர் பொதுக் காரியங்களை நடந்த்திக்கொள்வதற்காக அதிரை பொதுநல சங்கமோ மற்ற ஏதோ ஒரு பெயரில் ஜாவியா ரோட்டில் மார்கெட்டுக்கு பின் புறம , முத்தம்மாள் தெருவுக்கு இடையே ஒரு இடத்தை செப்பனிட்டு , அதை சுற்றி சுவர் எடுத்து அந்தக் காலங்களில் மீலாது விழா போன்ற விழாக்கள், திருக்குர் ஆண் மாநாடுகள் அங்கு நடைபெற்று இருந்தன. கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள்,கலீலுர் ரஹ்மான பாகவி, ரவண சமுத்திரம் பீர் முகமது மற்றும் கி.ஆ. பே. விஸ்வநாதன், அன்பழகன், போன்றவர்கள் எல்லாம் அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதைக் கண்ட நினைவு எனக்கு இருக்கிறது.

அந்த இடம் இப்போது நரகத்தின் சாம்பிலாக இருக்கிறது. சீண்டுவாரும் சீரமைப்பாரும் இல்லாமல் சீர்கெட்டுக்கிடக்கிறது.

நான் குறிப்பிடும் இடம் மையப்பகுதிதான். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பகுதி. அருகில் ஜாவியாவும் தக்வா பள்ளியும் சூழ உள்ள இடம்.

அந்த இடத்தை மீண்டும் செப்பனிட்டு உபயோகப்படுத்துவதில் ஏதும் தடை இருக்கிறதா? பிரச்னை இருக்கிறதா? அது யாருக்கு சொந்தமானது?
என்பனவற்றையும் அலசிப்பார்க்க பரிசீலிக்கலாமே.

அதே நேரம் செட்டியார் குளமும் சீர்மைக்கப்படவேண்டியதே.

ஒரு யோசனை அவ்வளவே. முடிந்தால் முயலாமே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு