Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூன்றாம் ஆண்டிலும் தொடர்கிறது...
அல்ஹம்துலில்லாஹ்!
23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2012 | , , , ,


அதிரைநிருபர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து சாதித்தது ஏராளம், அதனை நேசிப்பவர்களின் எண்ணிக்கையோ க்ச்க்ம் !

அதிரை வலைத் தளங்களில் முன்னணெயிலும் குறிப்பிடத்தக்க நிலையிலும் முன்னெடுத்துச் செல்வதை நற்பண்புகள் நிறைந்த அதிரை மற்றும் அனைத்து சமுதாய சகோதரர்களும் நன்கறிவர். எல்லாப் புகழும் இறைவனுக்கே !

துவங்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன....

கற்றதோ….!

இருபது வருடங்களுக்கான அனுபவங்கள்...

இரண்டு தலைமுறைகளல்ல மூன்று தலைமுறை பதிவர்களின் வட்டம் !

இருபாலரின் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட தனித்துவம் !

அதிரைநிருபரில் சிறப்பம்சமாகத் திகழ்வது இணைய வாசகர்கள் மீதான முழுநம்பிக்கை. அதனால்தான் ஒவ்வொரு பதிவின் கருத்துப் பெட்டிகளும் எப்போதும் திறந்தே இருக்கும், அன்பு நேசங்க்ளின் திறந்த மனத்தோடு வெளிப்படையாக, தனிமனித சாடல் இல்லாத, இறைவனுக்கு அஞ்சிய கருத்துக்களைப் பதிவதற்கு ஏதுவாக இருப்பதே சிறப்பம்சம்.

பதிவுகளையும் பதிவர்களையும் பாராட்டும் நோக்கமும், அவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதிலும், அதிரை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டுவதிலும் மும்முரம் காட்டி வருவதோடு. அடுத்தவர்களின் தனித் தன்மைக்கு எவ்விதத்திலும் பங்கமில்லாத ஊடக தர்மத்தைப் பேணுவதில் என்றுமே கவனமாக இருப்பதில் அதிரைநிருபர் குழு தனித்துவமானது.

கட்டுரைகள், பொதுசார்பு பதிவுகள், கவிதைகள், மார்க்க பதிவுகள், கல்வி சார்ந்த பதிவுகள், புதுமைசார்ந்த பதிவுகள், வணிகசார்பு பதிவுகள், வாழ்வியல் ஆய்வுகள், தனித்தன்மை மேம்பாடு, நெறியாளர் பக்கம், இப்படியாக பல்வேறு பிரிவுகளாக பதிவுகளைத் தினமும் ஒன்று அல்லது அதற்கு மேலாக தொடர்களாகவும், குறுந்தொடர்களாகவும் பதிந்து வருகிறது.

தனி மின்னஞ்சல்களில் வந்து குவியும் கருத்துகளையும், வாசகர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள், பரிந்துரைகள், கண்டனங்கள், விமர்சனங்கள் இவைகள் அனைத்தும் அதிரைநிருபரை பண்படுத்த பயன்படும் படிக்கட்டுகளே, அவற்றில் எதனையும் புறந்தள்ளியதே இல்லை. இவ்வாறு எங்களுக்கு பதிவுகளில் கருத்துக்களாகவும், வயது பேதமின்றி தனி மின்னஞ்சல் வழியாக தொடர்ந்து கருத்துகளைப் பரிமாறும் உங்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

அதிரைநிருபரில் பதிவாகும் தொடர் பதிவுகள், சிறப்பு பதிவுகள், வழமையான வாழ்வியல் பதிவுகள் யாவும் பிற இணையதளங்களில், வலைப்பூக்களில் எங்கள் அனுமதியுடனும், சில அனுமதியின்றியும் பகிர்ந்து வருவதை இணைய தேடலில் இருப்பவர்கள் அனைவரும் அறிவர்.

தொலைக்காட்சி ஊடகங்களின் கவனமும் அதிரைநிருபர் பக்கம் திரும்பியிருக்கிறது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் மாணவர்களின் விவாதங்களில் அதிரைநிருபரில் வெளிவரும் "படிக்கட்டுகள்" பதிவு கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு பிரபலமான "விஜய்" தொலைகாட்சியில் விவாதங்கள் பகுதியில் "ரியல் எஸ்டேட் சிந்திப்போம் - குறுந்தொடர்" பற்றிய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும் சான்றுகளே அதிரைநிருபர் வலைத்தளம் விரிந்த இணைய வலையில் பரந்து இருப்பதற்கு.

அதிரை வலைத்தளங்கள் என்றில்லாமல், இலவச வலைப்பூக்களில் எத்தனையோ அற்புதமான வலைப்பூக்கள், இணையதளங்கள் இருந்தாலும் வலைத்தளங்களுக்கான ஊடக தர்மம் மீறல் இன்றி தனிமனித தனித்தமை போற்றி, கருத்து திணிப்பின்றி, சுதந்திரமாக எடுத்துவைத்து ஒரு வெற்றிப் பாதையை அமைத்துக் காட்டியதை யாவரும் அறிவர் அல்ஹம்துலில்லாஹ் !

இயக்க செய்திகளோ, அரசியல் கட்சி ஆதரவு நாடும் தகவல்களோ பதிவதில்லை என்ற நிலைபாடு நடுநிலையென்ற சொல்லுக்கு இலக்கணமல்ல. நடுநிலமை என்பது எந்த ஒரு விடயமும், காரியங்களும் நிறைவுக்கு வரும்போது அங்கே தெரியும் அந்த நடுநிலமை எந்தப்பக்கம் சாய்ந்திருக்கிறது. அதுவே ஊடக தர்மம் கற்றுக் கொடுத்த உண்மைநிலை அறிந்து அதன் பக்கம் சார்ந்திருப்பதே.

ஊடக வரலாற்றில் அதனை ஆளுமை செய்பவர்களை விட அதனை நேசிக்கும் வாசர்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஒவ்வோர் ஊடகவியலாளரும் உணந்திருக்க வேண்டும் அதனை அதிரை நிருபர் நன்றாக அறிந்தும் அதன்படியே செயல்பட்டும் வருகிறது.

இந்த பதிவை எழுதத் தூண்டிய அதிரைநிருபர் வாசகர்களின் பதிவுகளில் பதியும் மற்றும் மின்னஞ்சல் வழி தனி-கருத்துக்களே என்றால் அது மிகையாகாது.

அதிரைநிருபர் குழு

23 Responses So Far:

Adirai Media said...

வாழ்த்துக்கள் !!!

KALAM SHAICK ABDUL KADER said...

கொலைகளமோ வெனவஞ்சும் வண்ணம் நாளும்
....கொலைவெறியை யூட்டிவிடும் ஊட கங்கள்
வலைதளமோ முகநூலோ மாற்றார் மீது
....வசைபாடும் நிலையிற்றான் காண்போம் நாளும்
பலகலைகள் கற்றவர்கள் பங்கு பெற்றப்
....பல்கலைக்கூ டமென்பேன்நான் அதிகம் பேர்கள்
உலாவருமிவ் வலைதளம்தான் மூன்றாம் ஆண்டை
...உற்சாகம் பொங்கிடவே கொண்டா டும்நாள்!

Ebrahim Ansari said...

அதிரை நிருபர் வலை தளத்தோடு அண்மையில் ஏற்பட்ட சகவாசம் எனக்கு சுகவாசம்.

ஆனால் இப்போது அதுவே எனது சுவாசம்.

மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

குழந்தைகளை பெற்றெடுத்தால் போதாது அதை ஒழுக்கமுள்ள நல்லா பிள்ளைகளாய் வளர்த்தெடுப்பதில் பெற்றோர்களின் தலையாய கடமை போல். அதிரை நிருபர் வலைத்தளத்தை உருவாக்கி.கண்டும் காணாமல் விட்டுவிடாமல்.தரமிக்க எழுத்தாளர்கள் மூலம். அதை சரியான பாதையில் கொண்டு சென்று.வாசகர்களாகிய எங்களை எல்லாம் நல்ல சிந்தனையாளர்களாகவும்,எழுத்தாளர்களாகவும் உருவாக்கி கொண்டிருப்பதில் அதிரை நிருபர் உயர்ந்த வலைத்தளமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இன்னும் பல தலைமுறைகளை தத்தெடுத்து நல் வழியில் அழைத்து செல்லும் என்பதில் முழு ஆதரவு வைக்கின்றோம்.

U.ABOOBACKER (MK) said...

அல்லாஹ்வின் அருளால் அதிரை நிருபர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

அதிரை என்.ஷஃபாத் said...

வாழ்த்துகள்!! அமைதியின் ஆளுமை-அருமை!! இன்னும் பற்பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபோட வேண்டும்.

Yasir said...

பல்சுவை பல்கலைக்கழகம் “அதிரை நிருபர்” இன்றும்போல் என்றும் வாழ வாழ்த்துகிறோம்

அப்துல்மாலிக் said...

நேற்றுதான் ஆரம்பித்தது போல் இருந்தது அதற்குள் மூன்றாண்டுகள் கடந்துவிட்டன, எத்தனையோ பதிவுகளையும், படிப்பினையும் கண்ட/கொடுத்த இத்தளம் இதே வீர நடையுடன் வெற்றிநடை போட என் வாழ்த்துக்களும் துஆவும்....

விழிப்புணர்வு ஒன்றே
உனது குறிக்கோள்
அதை நோக்கியே
உன் பாதை
அமைந்திட
என்றென்று வீறுகொண்டெழு
அதிரை நிருபரே....!

Noor Mohamed said...

"படிக்கட்டுகள்" போல் படிப்படியாய் முன்னேற்றப் பாதையை நோக்கி வீர நடைபோடும் "அதிரை நிருபர்" தன் சேவையை மக்களின் தேவையாகக் கொண்டு வாழும் வாழ்க்கை தொடர வளமார வாழ்த்துகிறேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரை நிருபர் வலை தளத்தோடு ஏற்பட்ட சகவாசம் எனக்கு சுகவாசம்.

இப்போது அதுவே எனது சுவாசம்.

என்றும் சிறக்க வாழ்த்தும் துஆவும்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மேலும் சிறக்க இப் புதியவனின் வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

இந்த
மூன்ற வயது குழைந்தையா
இத்துணைமூத்தவர்களை
விரல் பிடித்து
அழைத்துச் செல்கிறது!

வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள் !!!

Saleem said...

ஒரு செயலை ஆரம்பம் செய்வது சுலபம் அதை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது தான் சிரமம்.அதிரை நிருபர் வலைத்தளம் மென்மேலும் சிறந்து விளங்க துஆவும் வாழ்த்துக்களும்!!!

Shameed said...

முத்தாக மூன்றாம் ஆண்டை நிறைவு செய்த அதிரை நிருபருக்கு வாழ்த்துக்கள்

மேலும் சிறந்து விளங்க துஆவும் வாழ்த்துக்களும்!

ZAKIR HUSSAIN said...

All the best to Adirai Nirubar ..particularly to readers & Technical Team

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்...

அமைதியின் ஆளுமையின் வளர்ச்சி வினாடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் என்று கடந்து வருடங்கள் நிலைக்கு சென்றதுக்கு முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்...

என்னுடைய தனிப்பட்ட கருத்து.. அதிரைநிருபரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் இதன் அனைத்து பங்களிப்பாளர்களும், அனைத்து வாசகர்களுமே. அதிரைநிருபரின் ஊடக சேவை மேலும் வளர்ச்சி பாதையில் வீரியத்துடன் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அரட்டையின் ஆரம்ப கல்வி பயின்றேன். அதிரை நிருபரில் முதுகலை பட்டம் பெற்றேன். என்னன்டோ இருந்த எம்மை எல்லாம் நாலு பேர் அன்னாந்து பார்க்க வைத்த கைங்கரியம் அதிரை நிருபருக்குண்டு என்றால் அது மிகையில்லை.

வருடங்கள் ஓடுவதுடன் அ.நி. தரம் வருடா வருடம் உயர்ந்து கொண்டே செல்ல வாழ்த்தி து'ஆச்செய்கின்றேன்.

அதிரை சித்திக் said...

அதிரை நிருபர் ..வலைத்தளம் வெற்றி பாதையில்
வீறு நடை போடுவது .சந்தோசமான விஷயம்
சில ஆலோசனைகள் .....
அதிரை நிருபரில் வரும் ஆக்கங்கள் குறைந்தது ஒரு நாள்
முழுவதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் ...
பங்களிப்பாளர்கள் பலர் இருந்தாலும் பதிவாளர்கள்
மிக குறைவாக இருக்குமானால் பதிவின் தரம்
காக்க படும் ..வரும் ஆக்கங்களில் எழுத்து பிழை
கருது பிழை இருக்குமானால் நன்கு ஆராய்ந்து
போடும் திறமை எடிடருக்கு உள்ளது என்பதால்
தொடர்ந்து தயவு பார்க்காமல் செய்து வரவும் ..
சில தளங்களில் மின்னி மறையும் மின்னலாக
ஆக்கங்கள் வருவதால் படைப்பாளியின்
பதிவு எடு படாமல் போய் விடுகிறது ...
வாழ்த்துக்கள் ..து ஆ வுடன் அதிரை சித்திக்

NewWay said...
This comment has been removed by the author.
அதிரை தென்றல் (Irfan Cmp) said...

முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைத்து தொடர்ந்து வளர்ந்து வரும் வலைத்தள பட்டியலில் அதிரை நிருபர் இடம் பிடித்துள்ளதை எண்ணி மனம் மகிழ்கிறது அல்ஹம்துலில்லாஹ்

நாம் சாதாரண மனிதர்கள் அதனால் மனிதருக்கு மனிதர் கருத்து வேறுபாடு இருக்கலாம்.ஆனால் நாம் தமிழர்கள் என்ற உணர்வில் மட்டும் வேறுபாடுகள் இல்லை. அதனால் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் காட்டும் அன்பில் வேறுபாடு இல்லாமல் ஒரு குடும்பமாக பழகிவருவோம்.இன்ஷா அல்லாஹ்

இரண்டாண்டுகளிலும் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது. பல தொடர் வாசகர்களும் மிக அதிக அளவு சைலண்ட் வாசகர்களும் காணமுடிந்தது நல்ல பதிவுகளை மற்றும் நானிட்ட ஒருசில பதிவுகளை பலர் மன‌ம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள்& இமெயில் வழியே ஊக்குவித்துள்ளனர். சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்..எனக்கு பதிவிட வாய்ப்பளித்த அதிரை நிருபர் மேன்மேலும் வளர வாழ்த்துக்களும் துவாவும்.

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்.அமைதியின் ஆளுமை பலநூறு பாடங்கள் கற்றுதந்துள்ளது.நட்பையும் சகோதரர்களையும் பெற்றுதந்துள்ளது.அறிவையும் ஆற்றலையும் அடையாளப்படுத்தியது. இன்னும் என்ன சொல்ல...? பல்லுயிர் ஓருயிராய் செல்கிறது அதிரை நிருபர்

Meerashah Rafia said...

Congrats.. All the best for successful steps..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு