Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1) 34

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2012 | , , , , , ,


மாட்டுக்கறி என்ற பெயர் கேட்டதும் சும்மா அதிருதா? அதிர வேண்டாம் ; பதற வேண்டாம்; இந்த ஆக்கத்துக்கு அதிரை வேண்டாம். போபாலில் ஆரம்பித்து, அகில இந்தியாவில் மாட்டுக்கறி என்கிற பிரச்சனையைத்தான் அலசப் போகிறோம்.  இந்த அலசல்  அதிரை என்கிற குண்டு சட்டியில் குதிரை ஓட்ட அல்ல. பன்னெடுங்காலமாகவே மாட்டை அறுப்பதும், மாட்டுக்கறி வியாபாரம் செய்வதும் சாப்பிடுவதும் மாபாதகம் என்றும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே இவை தொடர்பான தொழில்களில், நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும்,அவர்களை தீண்டத்தகாதவர்களாகவும், ஜீவகாருண்யம் அற்றவர்களாகவும், இரக்கமற்ற பாவிகளாகவும் சித்தரித்து தீட்டப்பட்டுள்ள கபட சித்திரங்கள் யாவற்றையும் அழிக்கும்  நோக்கில்தான். நாம் முதலில் போபாலுக்குப் போகப்போகிறோம். பிறகு புதுடில்லிக்கும் போவோம்.

பி ஜெ பி அரசாளும் மத்தியப் பிரதேச அரசு பசுவதை தடுப்புக்காகச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்திருக்கிறது. இம்முடிவின் மீது  நடுநிலை மற்றும் நன்னெறி பரப்பும் அறிஞர்களால் எதிர்ப்புக்கனை தொடுக்கப்பட்டுள்ளது. இது தனி நபர சுதந்திரத்தில் அரசின் அப்பட்டமான தலையீடு என்றும், ஏழைகளுக்கு எதிரான ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கொடுமை என்றும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையில்  'பசுவின் புனிதத்தன்மை' பற்றிய புராண இதிகாச சாஸ்திர சம்பிரதாய மற்றும் வரலாற்று குறிப்புகள்  பற்றியும் அந்த குரிப்புகளை வைத்து சானா பானாக்கள் நாட்டைத் துண்டாட எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தோர் மேலும்   உயர்சாதியினர் இந்த பசுவதை, மாட்டுக்கறி ஆகிய அஸ்திரங்களை எப்படி உபயோகிக்கின்றனர் என்பதைப் பற்றியும் சற்று ஆதாரங்களோடு அலசலாம்.           (இவர்களின் ஊளா  பாலாக்களை அலசி அலசியே நமக்கு  தண்ணீர் பில் எகிறிவிட்டது).

முதல் ஓவரை வீசும்  முன்பு,  ஒரு சிறு கவனக் குறிப்புத் தந்து விட எண்ணுகிறேன். இந்த ஆக்கத்தில் சில இராமாயண,  மஹாபாரத காட்சிகளை, ஆதாரங்களை குறிப்பிட்டு இருப்பேன்.இந்த ஆதாரங்கள் கம்ப இராமயணத்தில் இல்லையே, இராஜாஜி எழுதிய வியாசர் விருந்திலும், பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்திலும் இல்லையே என்று தமிழ் புலமை படைத்த / படித்த யாரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள்.  இந்த இதிகாசங்களில் இருந்து என்னால் காட்டப்படும் ஆதாரங்கள் ஒரிஜினல் இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. கம்பர் எழுதியதும், இராஜாஜி, பாரதியார் எழுதியதும் தழுவல்கள் மட்டுமல்ல அவைகள் வழுவல்கள்; வளவலாக்கள்.; கொழகொழாக்கள்; பசப்பல்கள்; ரீல்கள்; புருடாக்கள்; காதில் சுற்றும் பூக்கள். தமிழ்ப் பண்பாடு கருதி மறைக்கப்பட்ட உண்மைகள். உதாரணமாக இராவணன் சீதையை எங்கே கை வைத்து தொட்டு தூக்கிச்சென்றான் என்பதை வால்மீகி ராமாயணம்  குறிப்பிடும் விதமும் இடமும் வேறு; அந்த இடம் வித்தியாசமானதல்ல ஆனால்  விபரீதமானது. இருந்தாலும், ஒரு பெரும் எடையுள்ள பெண்ணை  கடல் கடந்து ஆகாயத்தில்  தூக்கிச்செல்ல வசதியானது. இந்த சம்பவத்தை கம்பராமாயணம் குறிப்பிடும் விதம்  தமிழ்பண்பாட்டை ஒட்டியது. தொடாமல் தூக்கினானாம்; ஆகாயத்தில்  பறந்தானாம். நம்பமுடியுமா? ஆகவே இந்த ஆக்கத்தில் ஒரிஜினல் இதிகாசங்கள் குறிப்பிடும் ஆதாரங்களையே கையாண்டு இருக்கிறேன்.     

முதலாவதாக, இந்திய துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காக அறுக்கும் வழக்கத்தை முஸ்லிம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள் என்று சானா பானாவினர் கூறுகிறார்கள். ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வரத்தொடங்கும் முன் காலத்திலிருந்தே மாடுகளை உணவுக்காகவும் வேண்டுதல்களுக்காகவும், யாகங்களுக்காகவும் அறுத்து பலியிட்டு புசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இதிகாச,  பிராமண, சமண, புத்த இலக்கியம் மற்றும் வரலாறுகளில் இருந்து சான்றுகள் இருக்கின்றன. 

விலங்குகளைப் பலியிடுதல் என்பது வேத காலத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுப் பலியிடுதலுக்கு முன் செய்யப்படும் முன்னேற்பாட்டுச் சடங்காகிய 'அக்கினித் தேயம்' என்னும் சடங்கில் பசுதான் கொல்லப்பட்டது. 

பலியிடுதலில் முதன்மையான ஒன்றாகிய 'அசுவமேத யாகத்'தில் அறுநூறு விலங்குகளும் பறவைகளும் கொல்லப்படும் அப்படிக் கொல்லப்பட்ட பின் பலியிடுதலின் நிறைவைக் குறிப்பிடும் வகையில் இருபத்தோரு பசுக்கள் கொல்லப்படும். இந்த இருபத்தியொரு பசுக்கள் கொல்லப்படாவிட்டால் அந்த யாகம் பொய்த்துவிட்டதாக அர்த்தம். அத்துடன் இராஜசூய யாகம், வாஜ்பேய யாகம் ஆகியவற்றிலும் விலங்குகள் பலியிடப்படும். இதேபோல் மற்றொரு முதன்மையான யாகமாக கருதப்படும் கொசவ யாகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகள்  பயமுறுத்தும் தேவதைகளுக்காக பலியிடப்பட்டன. ஆகவே எல்லாவகையான யாகங்களிலும் பசுக்கள் கொல்லப்பட்டன. அவை புசிக்கப்பட்டன.   

'வேதக் கருத்துகளிலும் தர்மசாத்திரங்களிலும் உணவுக்காக பசுக்கள் கொல்லப்பட்டதும் மாட்டிறைச்சி தின்னப்பட்டதும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. 'பசு விருப்பமான உணவு' என வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞ வல்கீய முனிவர் கூற்றின்படி , பசு இறைச்சியைத் தின்பதை வலியுறுத்துவது வேதங்களில் உள்ளது. விருந்தினர்களை வரவேற்கும் போது பசுக்களைக் கொன்று உணவாகப் படைப்பது பெருமைக்குரிய ஒன்று என வேதங்களும் அவற்றிற்குப் பிந்தைய கருத்துகளும் சொல்கின்றன. இறுதிச் சடங்குகளின் போது பிராமணர்கள் பசுக்களைக் கொன்று தின்றதற்கான பல்வேறு எழுத்துச் சான்றுகள் இருக்கின்றன. 

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போ என்று தகப்பன் தசரதன் ஆணையிட்டான்  என்று இராமனுக்கு சொல்லப்பட்டபோது இராமனுடைய உடனடி பதிலாக இருந்ததாக வால்மீகி இராமாயணம் குறிப்பிடுவது “ நான் நாட்டையும், மணிமுடியையும் , அரண்மனை வாசத்தையும் இழப்பதுடன் சுவைதரும் மாமிச உணவுகளையும் துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு வருடங்கள் காய்களையும் பழங்களையும் புசிக்க வேண்டுமா?” என்பதுதான்.               
(AYODHYA KANDAM  CHAPTERS 20, 26, 94).

அது மட்டுமா? வால்மீகி கூறுவதையும், நாம்  எடுத்துக்காட்டுவதையும் ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால்  ஒருவர் இருக்கிறார் அவர் கூறுவதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அவர்தான் வீரத்துறவி என்று பெயர் பெற்ற சுவாமி விவேகானந்தர். இதோ அவரே கூறுகிறார். 

"You will be astonished if I tell you that, according to the old ceremonials, he is not a good Hindu who does not eat beef. On certain occasions he must sacrifice a bull and eat it."  “ வேதக் கருத்துக்களின் அடிப்படையில் மாட்டுக்கறியை உணவாகக் கொள்ளாத ஒருவர் நல்ல ஹிந்துவாக இருக்க முடியாது என்று நான் கூறினால் நீங்கள் திகைப்படைவீர்கள். சில சமய சடங்குகளில் ஒரு ஹிந்து ஒரு காளை மாட்டை அறுத்து பலியிடுவதோடு உட்கொள்ளவும் வேண்டும் ” என்று விவேகானந்தர் கூறுகிறார். 

"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;"  இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது.   இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]

மேலும் கீழ்க்கண்ட விளக்க நூல் எப்படி மாட்டை அறுப்பது என்று பிராமணர்களுக்கு வழிகாட்டுகிறது. 
[Aitareya Brahman, Book 2, para 6 and 7]

அடுத்து,  Purv Mimansa Sutra Adhyaya 3, Pada 6, Sutra 18, the Shabarbhasya says,
संति च पशुधर्माः- उपाकरणं, उपानयं, अक्ष्णया बंधः, यूपे नियोजनम्, संज्ञपनं, विशसनमित्येवमादयः 

There are also certain details to be performed in connection with the animals, such as (a) Upaakaranam [Touching the animal with the two mantras], (b) Upaanayanam [Bringing forward], (c) Akshanyaa-bandhah [Tying with a rope], (d) Yoope niyojanam [Fettering to the Sacrificial Post], (e) Sanjnapanam [Suffocating to death], (f) Vishasanam [Dissecting], and so forth.

அதாவது அறுக்கப்படப்போகும் மாட்டை எங்கே தொடுவது, எப்படிக் கொண்டுவருவது, கழுத்திலும் அறுக்கப்படும் கம்பிலும் கயிற்றால் எப்படிக் கட்டுவது, எப்படி அறுப்பது என்கிற வழிமுறைகளை இந்த ஸ்லோகம சொல்லித்தருகிறது.   
[Shabhar bhashya on Mimamsa Sutra 3/6/18; translated by Ganganath Jha]

இந்த ஆதாரங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.மிகவும்  விரிவாகப்போனால் இந்த ஆக்கம் வீங்கிவிடும்.பல முகமூடிகள் கிழிந்துவிடும். யாராவது எதிர்த்து விளக்கம்  கேட்டால் விபரம் சொல்வேன்.

வேதகாலத்தை அடுத்து, இடைக்கால வரலாற்றுக் குறிப்புகளிலும் நமது வாதத்துக்கு வலு சேர்க்க  ஏராளமான சான்றுகள்  இருக்கின்றன.  ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் பசியைப் போக்குவதற்காக காளை இறைச்சியையும் நாய் இறைச்சியையும் தின்றதை மனுசாத்திரம்  கூறுகிறது. 

படித்த பார்ப்பனரைப் பெரிய காளையைப் படைத்தோ ஆட்டைப் படையலாக்கியோ வரவேற்க வேண்டும் என்று யக்ஞவல்கீய ஸ்மிருதி (கி.மு. 100-300) சொல்கிறது. மகாபாரதத்தில் வரும் கதா பாத்திரத்தில்  முக்கால்வாசிப் பேர் அசைவ உணவு தின்பவர்கள்தான்.  இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கொழுத்த கன்றை அடித்து உணவாக்கி இராமனுக்குப் பரத்வாஜ முனிவர் படையலாக்கினார் என்று தெரிகிறது.  

மதம் சார்ந்த இலக்கியங்களில் மட்டுமல்ல. மதச்சார்பற்ற இலக்கியங்களிலும் இப்படிச் சான்றுகள் காட்ட முடியும். இந்திய மருத்துவ முறைகளில் மாட்டிறைச்சி மருந்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், ஸ்ரீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன.
(ஆதாரம் : THE MYTH OF THE HOLY COW BY DR. D.N. JHA).

இப்படியெல்லாம் தங்களால் சப்புக்கொட்டி சுவைக்கப்பட்ட மாட்டுக்கறி , அந்த கறி தரும் மாடு எப்படி மதவாதிகளால் புனிதத்தின் அடையாளமாக்கப்பட்டது?

தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

34 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"There was a time in this very India when, without eating beef, no Brahmin could remain a Brahmin;" இந்திய பழக்கங்களில் மாட்டுக்கறி உண்ணாத பிராமணர் ஒரு சிறந்த பிராமணராகவே இருக்க முடியாது. இதையும் கூறியவர் கறிக்கடை காதர் பாட்சா அல்ல. சாட்சாத் விவேகாகனந்தரே.
[The complete works of Swami Vivekananda, Volume 3, Pg 536]//

ஹ்ஹா ஹா !

அப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு சொல்ல கொஞ்சம் கூட தயங்காது இந்த சங்க்பரிவார் கூட்டம் !

என்னமா வேஷம் போடுறாய்ங்க ! அவர்கள் ஆறுத்து சாப்பிட்டால் புனிதமான உணவு மற்றவர்கள் அறுத்து சாப்பிட்டால் பசுவதை !

இத்தனை ஆதாரங்களின் திரட்டிகள் அனைத்தும், அச்சில் பதியப்பட வேண்டும் !

Shameed said...

// இரந்திதேவ அரசரின் அடுக்களையில் மட்டும் ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் பசுக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உணவாக்கப்பட்டன. மற்ற தானியங்களுடன் இந்த இறைச்சியும் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன//

அடப்பாவிகளா அப்போவே ஆயிரக்கணக்கான மாடுகளை தின்று தீர்த்து விட்டு இப்போ பசுவதை பற்றி பேசுறியளே நியாயமா இது

Shameed said...

இந்த மாதிரி சுவையா யாரும் மாட்டுக்கறியை (எழுதியதில்லை ) சமைத்ததில்லை!!

Ebrahim Ansari said...

மருமகன் சாகுல்,

//இந்த மாதிரி சுவையா யாரும் மாட்டுக்கறியை (எழுதியதில்லை ) சமைத்ததில்லை!!//


உங்கள் வீட்டில் கூடவா? அது ஒரு மறக்க முடியாத சுவை.

Unknown said...

ஆனா, கட்டுரை ஆசிரியருக்கு மாட்டுக்கறி கூடவே கூடாது. ஏன்னா.....

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப். அஹமது காக்கா.

புரிகிறது. நீங்கள் சொல்வது புரிகிறது. அன்புக்கு நன்றி.

Shameed said...

Adirai Ahmad சொன்னது…

//ஆனா, கட்டுரை ஆசிரியருக்கு மாட்டுக்கறி கூடவே கூடாது. ஏன்னா..... //

மிகச்சரியாக சொன்னீர்கள்

அலாவுதீன்.S. said...

சகோ. இபுராஹீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களின் ஆய்வு கட்டுரையை வரவேற்கிறோம்.

அன்று மாட்டுக்கறி தின்று வளர்ந்த ''அவாள்கள்''
இன்று ''புனிதமானது'' என்று
கலவரம் செய்து வரும் 'கயவர்களுக்கு'
சும்மா 'அதிர' விடுங்கள் தங்களின் ''ஆய்வுகளை!''

sabeer.abushahruk said...

இன்னும் என்னென்ன பூச்சாண்டிகளை எங்களுக்குக் காட்டித்தரப் போகிறீர்களோ!

எங்கேயாவது தேடிப்பார்த்து, இவிங்க காக்கா வெளவால் எல்லாம்கூட சாப்பிடலாம் என்று எழுதிவைத்திருப்பதையும் கண்டுபிடிச்சிடுவீங்க போலிருக்கு.

sabeer.abushahruk said...

மாட்டுக்கறி சாப்பிட வேண்டாம் என்று சொல்வதில் என்ன அன்பு இருக்கிறதாம்?

சொல்றவங்க சாப்பிடலாமாமோ?

sabeer.abushahruk said...

வெயிட் எ மினிட்...

வெளங்கிடுச்சி...வெளங்கிடுச்சி...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்று மாட்டுகறியை "புல்லா"(Full) மேய்ஞ்சவங்களும், வயிறு "முட்ட" மாட்டுகறி திண்ண அவாளும் இப்ப உங்க கையில் மாட்டிகிட்டாங்க போங்க!

Yasir said...

மாட்டுக்கறிக்கு பின்னால் இவ்வளவு வரலாற்று உண்மைகளா ?? உண்மையில் உங்கள் ஆக்கம் அதிர வைக்கின்றது மாமா...தொடருங்கள்

Iqbal M. Salih said...

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் மாட்டுக்கறி ஆராய்ச்சி அபாரமானது! அரிய தகவல்கள். மென்மேலும், என்ன எழுதப்போகிறீர்கள் என்றும் மிக்க ஆர்வமாக இருக்கிறது.

Shameed said...

இத்தனை நாளும் மாட்டுக்குப்பின்னால் வால் மட்டும்தான் இருக்கின்றது என்று நினைத்து இருந்தோம் இப்போதான் புரிகின்றது வரலாற்று உண்மை தொடருங்கள் மாமா

Ebrahim Ansari said...

//மாட்டுக்குப்பின்னால் வால் மட்டும்தான் இருக்கின்றது என்று// AHAHAHAHAHHA.

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமுஅலைக்கும்!
மாட்டுக்கறி சாப்பிட்டால் தான் Pressure ஏறும் என்பார்கள். ஆனால் உங்களுடைய ஆக்கத்தைப் படித்தாலும் சிலருக்கு Pressure ஏறும் போல் இருக்கிறதே.
தொடரட்டும் உங்கள் ஆய்வும் ஆக்கமும்.
Wassalam
N.A.Shahul Hameed

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கறி ஆக்கல் ரொம்ப டேஸ்ட்!

ஆக சுவைத்தன்மையும் பயத்தோற்றமும் கொண்ட எதுவும் மதங்கொண்டுவிடுமோ?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இ.அன்சாரி காக்கா களத்தில் தாங்கள் குதிக்கும் போது நாங்கள் ஒட்டு போடாம இருப்போமா?
உங்களை எதிர்த்து நிற்பவர்கள் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தோற்ப்பார்கள்.

மாட்டு கறியிலே கொழம்பு சமைத்து சாப்பிட பிடிக்காட்டி பிரியாணி சமைத்து சாப்பிட சொல்லுங்க காக்கா அதனுடைய டேஸ்ட்டே தனி.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ்ஸலாம்.

Prof. Janab. N.A.S.

Thanks for your comment.

Ebrahim Ansari said...

அன்பான எல். எம் .எஸ். அபூபக்கர் அவர்களே! அலைக்குமுஸ்ஸலாம்.

உங்கள் கடையில் பார்சல் பிரியாணிக்காக ஒரு தனி கவுண்டர் ஆரம்பிக்கலாமா?

Ebrahim Ansari said...

janaab. MHJ

//சுவைத்தன்மையும் பயத்தோற்றமும் கொண்ட எதுவும் மதங்கொண்டுவிடுமோ?//

கவித்துவமான கேள்வி. சூப்பர்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிகுந்த கடப்படுடையேன். ஜசக்கல்லாஹ்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// உங்கள் கடையில் பார்சல் பிரியாணிக்காக ஒரு தனி கவுண்டர் ஆரம்பிக்கலாமா?//

அப்படி ஆரம்பித்தால் ஏரியா உண்மையில் கலைக்கட்டும் . ஆனால் அழகுடைய கடையின் பெயர் மறைந்து பிரியாணி கடை என்று கூப்ப்பிட ஆரம்பித்து விடுவார்களே!

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

டாக்டர் பட்டம் தரப்போகிறார்கள் என்று அறிந்ததுதான் தாமதம், ஆரிக்கிள், வென்ரிகிள் என்று பேச ஆரம்பித்து விட்டீர்கள்! அடுத்த தொடரில் அறுஞர் பட்டம் பெறும் முயற்சியில் பசுக்களை அறுத்துப் போடுகிறீர்கள்! அவற்றைப் படித்துப் (புசித்துப்) பார்த்து “ஆ! என்ன அறு சுவை!” என்று வியந்துவிட்டோம்
சபீர், கலாம், உங்கள் அண்ணாவுக்கு ‘அறிஞர்’ பட்டம் கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் அவர் எழுத்தில் பேரறிஞர் அண்ணாவின் நடை மிளிர்கிறது! டாக்டர் கலைஞர் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன்!
அண்ணாவின் ‘கம்ப ரசம்’ படித்திருக்கிறீர்களா?
வா..

crown said...

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) சொன்னது…
அவற்றைப் படித்துப் (புசித்துப்) பார்த்து “ஆ! என்ன அறு சுவை!” என்று வியந்துவிட்டோம்.
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். மேன்மைபொருந்திய ஆசிரியர் அவர்களே! இங்கே ஆ'என்ன அறுசுவைன்னு புகழ்கிறீர்கள். இதை படிக்கும் அவாள். "ஆ"(பசு) வைத்தான் அறுத்து சுவைப்பது என அவசரமாக பொருள் கொள்ளவார்களோ என ஒரு ஐயம் எனக்குள் எழுகிறது".

salih said...
This comment has been removed by the author.
Anonymous said...

/உங்கள் அண்ணாவுக்கு ‘அறிஞர்’ பட்டம் கொடுக்க விரும்புகிறேன்//

//அண்ணாவுக்கு ‘அறிஞர்’ பட்டம்//

அப்படியே எங்க ஸார் வா...வண்ணாவுக்கும் ‘பெரு வரைஞர்’ பட்டம் கொடுக்கலாமே!.

ஏனெனில், அவர்கள்தம் வரைகலையில்:

வாத்துகூட புத்திசாலியாகவும்
கொக்கு மூக்கு கொஞ்சுவதாகவும்
தோன்றல்கள்

வாகனம் வரைந்தால்
காகிதச் சாலையில் ஓட்டெமெடுக்கும்
கானகம் வரைந்தால்
காக்காக் குருவி சப்தம் கேட்கும்

நூவண்ணா (காக்கா) எழுந்தால்
கூட்டம் கலைகட்டும்
சாவண்ணா எடுத்தால்
புகைப்படம் பேசும்
வாவண்ண(சார்) வரைந்தால்
ஓவியம் வாழும்!

சபீர் அபுசரூக்

ZAKIR HUSSAIN said...

/உங்கள் அண்ணாவுக்கு ‘அறிஞர்’ பட்டம் கொடுக்க விரும்புகிறேன்//
//அண்ணாவுக்கு ‘அறிஞர்’ பட்டம்//
//அப்படியே எங்க ஸார் வா...வண்ணாவுக்கும் ‘பெரு வரைஞர்’ பட்டம் கொடுக்கலாமே!.//


பாஸ்.... இப்படியெல்லாம் பட்டம் பட்டமா கொடுத்துக்கொண்டிருந்தால் அப்புறம் மற்ற வாசகர்கள் நக்கலடிக்க காரணம் ஆகிவிடும். கொஞ்ச நாளைக்கு இந்த பட்டம்தரும் "MODE" ஐ "DISABLE"ல் வையுங்கள்.

Ebrahim Ansari said...

//பாஸ்.... இப்படியெல்லாம் பட்டம் பட்டமா கொடுத்துக்கொண்டிருந்தால் அப்புறம் மற்ற வாசகர்கள் நக்கலடிக்க காரணம் ஆகிவிடும். கொஞ்ச நாளைக்கு இந்த பட்டம்தரும் "MODE" ஐ "DISABLE"ல் வையுங்கள்.// There you are.

Ebrahim Ansari said...

//அண்ணாவின் ‘கம்ப ரசம்’ படித்திருக்கிறீர்களா?//

சார்! உங்களின் மாணவனாக இருக்கும்போதே புத்தகத்துக்குள் மறைத்து வைத்துப் படித்திருக்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

// சார்! உங்களின் மாணவனாக இருக்கும்போதே புத்தகத்துக்குள் மறைத்து வைத்துப் படித்திருக்கிறேன்.//

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் இவ்வரிகளைப் படித்து விட்டுச் சிரித்து விட்டேன்! எத்துணை அழகான நகைச்சுவை; நீங்கள் வந்தாலே ஆனந்தம் மிகைக்கும் அவை!

KALAM SHAICK ABDUL KADER said...

//வாத்துகூட புத்திசாலியாகவும்
கொக்கு மூக்கு கொஞ்சுவதாகவும்
தோன்றல்கள்

வாகனம் வரைந்தால்
காகிதச் சாலையில் ஓட்டெமெடுக்கும்
கானகம் வரைந்தால்
காக்காக் குருவி சப்தம் கேட்கும்

நூவண்ணா (காக்கா) எழுந்தால்
கூட்டம் கலைகட்டும்
சாவண்ணா எடுத்தால்
புகைப்படம் பேசும்
வாவண்ண(சார்) வரைந்தால்
ஓவியம் வாழும்!//

கவிவேந்தர் சபீர் அவர்களின்
கவிதை உணர்வு பேசும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு