Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 94

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2012 | , , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.

அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி வலைத்தளத்தில் பதியப்பட்டதால் வெளிநாடு வாழ் அதிரைவாசிகளை மட்டுமல்ல உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே இந்த விளக்கம்.

இந்த பதிவு எந்த தனிநபரையோ, ஒரு அமைப்பில் உள்ளவர்களையோ உயர்த்தி / தாழ்த்தி எழுதப்பட்டதல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தபட்டது.

யார் இந்த ஹைதர் அலி ஆலிம்?

கடந்த பல வருடங்களாக ஊரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக அதிரையின் மறைந்த ஆலிம் பெருமக்கள் பலர் பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார்கள் இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மரியாதைக்குரிய மர்ஹூம் முஹம்மது அலீய் ஆலிம் (ரஹ்) அவர்கள் ஊரில் நடைபெறும் மிகப்பெறும் பித்அத்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்கள். மர்ஹூம் முஹம்மது அலீய் (ரஹ்) ஆலிம் அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களின் மறைவுக்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் புதிதாக தினிக்கப்பட்டுள்ள பித்அத்துக்களை (புதின்ங்கள்) பகிரங்கமாக மார்க்க மேடைகளில் எதிர்த்து குரல் கொடுத்து வரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர்களில் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் ஒருவர். தமிழ்நாட்டில் சித்திரக்கோட்டையிலிருந்து அதிரைக்கு குடிபெயர்ந்து மார்க்க பிரச்சாரம் (பெரிய ஜும்மா பள்ளி பயான், பெண்கள் பயான், தக்வா பள்ளி பயான்) செய்துவருகிறார்கள்.

என்ன பிரச்சினை?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்  ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சித்திக்பள்ளி நிர்வாகம் உண்மையை வெளியில்  கொண்டு வந்தது என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள். இதனால் சிலருக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மேல் தனிப்பட்ட கோபமும் குரோதமும் ஏற்பட்டது. மேலும் ஊரில் நடைபெற்று வரும் பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து வருவதாலும் பல ஆண்டுகளாக அதிரையில் பித்அத்களை ஆதரித்து வரும் சில உலமாக்கள் மற்றும் மவ்லித் லெப்பைமார்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு கோபப்பார்வை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது ஊரில் உள்ள அனைவரும் மிகவும் அறிந்ததே. இதற்கிடையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை கேட்க ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவது ஊரில் உள்ள அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கடந்த ஓரிரு மாதங்களாக அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரின் முயற்சியால் ஊரில் மிகச் சிலரிடம் மட்டுமே கையொப்பம் பெற்று, தவறான அதாவது பொய்யான தகவலை வைத்து தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் தவறான தகவல் என்பதால் தக்வா பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் அதே நபர், தக்வா பள்ளி நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானத்தை அதில் எடுத்தது போல் மினிட் புத்தகத்தில் தானாகவே எழுதி (மினிட் புத்தகம் திட்டமிட்டு இதுவரை மறைக்கப்பட்டுள்ளது) ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தமிழ்நாடு வக்பு வாரியம், காவல்துறை, ரிசீவர் ஜெயச்சந்திரன் அட்வகெட். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதில் தக்வா பள்ளி ட்ரஸ்ட் தலைவர் கையொப்பமின்றியும், அவரின் அனுமதியின்றியும் அவராகவே எழுதுகிறார். இதில் தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஒட்டுமொத்த தாயிக்கள் அனைவரின் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட புகாரை அளிக்கும் அந்த சகோதரரே சென்ற வருடம் அதிரை உலமாக்கள் சபையிடம் அதிரை தக்வா பள்ளியில் ஓதப்பட்டுவரும் மவ்லிதை நிறுத்த வேண்டும் என்று கோரிகை மனு அளித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 18.08.2012 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடுகிறார். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத பிர்ச்சாரம் செய்து, ஊரில் உள்ள இளைஞர்களை வழிகெடுத்து வருதாகவும் மேலும் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பிரிவினை ஏற்பட தூண்டுவதாகவும் இல்லாத பொல்லாதவைகளை எழுதி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திலும் ஹைதர் அலி ஆலிம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகாரும் கொடுத்து இந்த வருட ரமளானில் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். ஊரில் உள்ள பல சகோதரர்களின் முயற்சியால் அந்த சகோதரர் காவல் நிலையத்தில் கொடுத்த தவறான புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற வழக்கு இன்னும் விசாரனையில் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, போலீஸ் புகாரை திரும்ப பெற்ற அவர் மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை அனுகி, தான் முன்பு கொடுத்த புகாருக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சங்க தலைவர் வீட்டில் பேச முற்பட்டுள்ளார்கள்.

ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர்,  துணை செயலாளர் மற்றும் இரண்டு  பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.

பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியிலிருந்து சென்று விட்டார்கள், இது தான் நடந்த சம்பவம்.

இதனை தொடர்ந்து ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் (தலைவர், துணை தலைவர், துணை செயலாளர்) மூன்று நபர்கள் மட்டும் கூடி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்து வரும் ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெறும் மகளிர் வாராந்திர பயான் தற்காலிகமாக நிறுத்தபடுவதாக தங்கள் அறிவிப்பை அதிரை வலைப்பூ ஒன்றுக்கு மட்டும் அறிவிப்பை தெரிவித்து விட்டு. அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கு ஹைதர் அலி ஆலிமை மார்க்க சொற்பொழிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலத்தெரு சங்கத்திற்கு அனுப்பட்ட கடித நகல் மற்றும் ஆயிசா மகளிர் அரங்கத்தின் நிர்வாகி அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.






ஊரில் இருப்பவர்களுக்கும் வெளியூர்களில் இருக்கும் அதிரைவாசிகளுக்கும் எழும் சந்தேகம் இதே..

1.   ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்?

2.   ஒரு பிரச்சினை சங்கத்துக்கு வந்தால் முறையாக பொதுக்குழு அல்லது செயற்குழு அல்லது நிர்வாக குழு கூடி தீர்மானம் போட்டு அல்லது முடிவு எடுத்த பின்னர்தானே நடவடிகை எடுப்பது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா சங்கத்திலும் வழக்கம் மற்றும் நெறிமுறை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் சங்கம் போர்கால அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள் பயான் செய்ய தடை விதித்ததின் மர்மம் என்ன?

3.   மற்ற இரண்டு நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் மூன்று நிர்வாகிகளை கொண்டு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசர நிகழ்வு நடத்துவிட்டது?

4.   ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெரும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் சங்கத்திற்கு என்று இருக்கும் வலைப்பூவில் வெளியிடாமல் பொதுவான வலைப்பூ ஒன்றில் அவசர அவசரமாக வெளிட்ட மர்மம் என்ன?

5.   ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எப்போது ஊரில் உள்ள சங்கங்களுக்கு (மேலத்தெரு ஜும்மா பள்ளி சங்கம் உட்பட)  கட்டளையிடும் அதிகாரம் பெற்றது?

6.   தீவிரவாதி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் அந்த சகோதரர் மீது சம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன நடவடிக்க எடுக்க போகிறது?

இவ்வாறான பல கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. உண்மை நிலையை அறிய இந்த கேள்விகளுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பதிலை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும்

நேற்று முன் தினம் 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துணை தலைவர், துணை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடிதத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்நிலையில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம் போல் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்மா பயான் (31-08-2012) நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தகவல்கள் விரைவில்… இன்ஷா அல்லாஹ் !

L.M.S. Mohamed Yousuf 

உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.

நெறியாளர்

94 Responses So Far:

aa said...

சங்கத்தின் முடிவு கண்டிக்கத்தக்கது. சங்கம் இதை உடனடியாக மறுபரீசலனை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

U.ABOOBACKER (MK) said...

இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படும் சம்சுல் இஸ்லாம் சங்கம் நமக்கு தேவையில்லை.மோசடி பேர்வழிகள், கேவலமான புதிய அரசியல்வாதியுடன் சேர்ந்து கொண்டு சத்தியத்திற்கு எதிராக போர்தொடுக்க தொடங்கிவிட்டார்கள். ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு விரட்ட பலவழிகளிலும் முயன்று தோல்வியுற்று,இப்போது சுயநல கத்துகுட்டி அரசியல்வாதியையும் சேர்த்துக்கொண்டு அவர் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்து அதன் பழியை ஆலிம்சா மீது போட்டு அவரை துரத்த சதி கூட்டங்கள் நடப்பதாக அறிகிறோம். சத்தியம் நிச்சயம் வெற்றி பெறும். அசத்தியம் அழியும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் மேலத்தெரு ஜமாத்தின் துணிச்சலான் முடிவு பாராட்டத்தக்கது.

நேற்று மோசடிபேர்களால் அவசரமாக AAMF கூட்டம் கூட்டி அசிங்கப்பட்டதும் விரைவில் வரவேண்டும்

Adirai khalid said...

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான செயலாளர் சகோதர்.அபுல் ஹசன் அவர்களிடமும் மற்றும் பொருளாளர் சகோதர்அதிரை அஹமது அவர்களிடத்திலும் விளக்கம் கேட்கப்பட்டது

அதற்க்கு அவர்கள் சங்கத்திற்கோ அல்லது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கோ ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு போக சொல்லும் விசாரணை சம்மந்தம்மாகவும் அல்லது மௌலவி அவர்களின் பயானை தடை செய்ய சொல்லி எந்த வித Memoமெமோ தகவலும் வரவில்லை என்றும் மேலும் அவர்களுக்கும் எந்த வித அழைப்பும் வரவில்லை என்று மிக வருத்தத்துடன் கூறினார்கள்.

மேலும் ஹைதர் அலி ஆலிம் அவர்களை சங்கத்திர்ற்கு அழைத்து அல்லது முக்கிய நிர்வாகிகள் அவர்களை நேரில் சந்திக்க செல்ல மேற்குறிப்பிட்ட நிர்வாகிகளை அணுக தவறி விட்டனர் என்றும் அறிய முடிந்தது, இதன் மூலம் என்ன புலப்படுகின்றது என்றால் ஒரு சில அதிகாரம் படைத்தவர்கள், பணக்காரர்களின் கையில் கைபுல்லையாக சிக்கிதவிக்கின்றதாக கருத முடிகின்றது.

பணபலம் அதிகாரம் படைத்தவர்களின் கையில் சங்க நிர்வாகம் சிக்கினால் சாதாரண பாமர, நடுத்தர மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் களுக்கான கிடக்க வேண்டிய நியாயம் அநியாயமாக பந்தாடப்படும் நிலை ஏற்படும்
இது போன்ற அநியாயத்திற்கு துணை போகும் சங்கதிர்க்கோ அல்லது எந்த வித இயக்கத்திற்கோ மனசாட்சி உள்ளவர்கள், நடுநிலையாளர்கள், மற்றும் அல்லாஹ்விற்கும் மறுமைக்கும் பயப்படுபவர்கள் ஒருபோதும் துணை போகிவிட கூடாது

சங்கம் கூரிய காரணத்திற்கு (ஊரைவிட்டு போக சொல்லும் / மார்க்க பயனை தடை செய்ய சொல்லி ) மாற்றமாக எந்தவித ஆதாரமில்லாமல் திடிரென்று ஹைதர் அலி ஆலிம் மீது பால புகார்கள் ஆதரபூர்வ மற்ற நிலையில் பரப்புரைகள் திட்ட மிட்டு செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய செயலை யார் செய்கின்றார்கள் என்றால் ஹக்கை நிலை நிறுத்த தவறும் சில மார்க்க? அறிஞர்களும் (வறட்டு கொவரத்திற்காக ? ) பொய்யான பரப்புரையில் ஈடுபட்டு இருப்பது மன வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது. இவர்களுக்கு தெரியாத அல்லாஹ் ஒருவன் நம்மை எல்லாம் கண் கணித்துக் கொண்டுள்ளான் மறுமையில் வதந்தியை பரப்புவோர் மீது மிக பெரிய தண்டனை உண்டு என்று.


Adiraiabdullah said...

பாவம் சங்கம் தொடர்ந்து தேவை இல்லாமல் மூக்கை நுழைத்துக்கொண்டு தன் நாக்கை தானே அறுத்துக் கொண்டுள்ளது
முன்பு தேர்தலின்போது சங்கம் நிறுத்தி இருக்கும் வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டி இடக்கூடாது என்று கட்டளை இட்டது ஆனால் நம் சேர்மன் சங்கத்திற்கு எதிராக சவாலாக வேட்பாளரை நிறுத்தி அதில் வெற்றியும் கண்டார்

ஆனால் இன்றோ தா மு மு க காரர்கள் பாதிக்கப் பட்ட ஹைதர் அலி மௌளன விற்கு உதவ போனதனால், சேர்மனின் எதிரியாக இருந்த சங்கம் நண்பனாகவும், அவர்வீட்டில் பெண்களுக்கு மார்க்க பயான் செய்த ஆலிம் எதிரியாகவும் ஆஹிவிட்டார்.

சேர்மன் அச்லத்திர்க்கு பெண்கள் அதிகமாக ஓட்டடளித்தர்க்கும், அவருக்காக வீடு வீடாக பெண்கள் ஒட்டு கேட்டதற்கு முக்கிய காரணம்
மௌலவி ஹைதர் அலி அவர்களின் பயானை சேர்மன் அஸ்லம் இடத்தில் தொடர்ந்து நடத்தி வந்ததும் ஒரு காரணம்

இதை சேர்மன் உணர்ந்து நடந்தால் அவரின் எதிர்கால அரசியலுக்கு நல்லது

Shameed said...

இது சம்பந்தமாக முன்பு வந்த செய்திகள் (இணையத்தில்) வெளிநாட்டு வாழ் அதிரையர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது காரணம்
செய்தியில் தெளிவின்மையோ தற்போது L.M.S.அளித்த செய்தி அனைத்தையும் தெளிவுபடுத்திவிட்டது

MS said...

நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்ட்டும் மற்றும் நல் வழிகாட்டலும் கிடைக்கட்டுமாக குறிப்பாக சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு...

இறை இல்லத்தில் இறைவனை பற்றி பேசும் மதிப்பிர்கூரிய சகோ. ஹைதர் அவர்களுக்கு தடை விதிக்க சம்சுல் இஸ்லாம் சங்கத்தினறருக்கு என்ன அதிகாரம் உள்ளது.

அவர்களுடைய கீழ்வரும் பொறுப்புகளை புறந்தள்ளிவிட்டு தேவை இல்லாத விசயத்தில் சங்கத்தின் தலையீடு வருத்தம் அளிப்பதோடு கண்டிக்கத்தக்க செய்தியாகும்...

வரதட்சனை கொடுமையான திருமணம்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Ebrahim Ansari said...

வெளியூர்வாசி என்பதால் ஜனாப். ஹைதர் அலி ஆலிம் மேல் குரோதம் காட்டப்பட்டால் பலர் காயல் பட்டினத்துக்கு அதிரையை விட்டு மூட்டைகட்ட வேண்டி இருக்கும்.

££Plus££ said...

adirai now the days going to be dangerous sutition.... allah'vin koba paarvaikku ullaaga vendaam.

அதிரை தம்பி said...
This comment has been removed by a blog administrator.
Shameed said...

ஆலிம் உலமாக்கள் பங்குபெறும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில்
ஒரு ஆலிம் பேசுவதற்கு தடை விதிக்க காரணம் என்ன வெளிவூர்காரர்
என்ற ஒரே காரணத்ததை தவிர வேறு ஒன்றும் இல்லை
சங்கம் இப்படி உள்ளுர்வெளிவூர் வாசி என்று பார்த்தால் இன்னும் பலர் முத்துப்பேட்டை, நாச்சிகுளம், காரைக்கால், இப்படியாக கடற்கரையோர பூர்விக இடங்களுக்கு புலம்பெயர தயாரக இருக்கனும்.
அப்படியாக இருந்தால் ஊரில் மனைக்கட்டு விலை குறைந்துவிடும் என்ற நல்ல எண்ணமே சங்கத்தின் நோக்கமா இருக்குமோ!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அன்புச் சகோதரர்களுக்கு,

பதிவின் சாரம் உணர்ந்து உங்களின் மேலான ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்களை பதியுங்கள், சகோதர வலைத்தளங்கள் பற்றிய விமர்சனம் தயை கூர்ந்து இந்த பதிவில் பதிவதை தவிருங்கள்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

நெறியாளர்
www.adirainirubar.in

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.



//1. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்? //
வட்டி மூசாக்களை பற்றி பகிரங்கமாக பேசியதுதான்.மன்னிக்க முடியாத குற்றமாக இருக்குமோ?


நீதி, நேர்மை,நியாயமற்ற சங்கத்தை கலைக்கப்படவேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.



//1. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்? //
வட்டி மூசாக்களை பற்றி பகிரங்கமாக பேசியதுதான்.மன்னிக்க முடியாத குற்றமாக இருக்குமோ?


நீதி, நேர்மை,நியாயமற்ற சங்கத்தை கலைக்கப்படவேண்டும்.

sabeer.abushahruk said...

என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒன்னுமே புரியலே உலகத்திலே.

அதிரை சித்திக் said...



அதிரை சித்திக் சொன்னது…
ஹைதரலி ஆலிம் அவர்களின் மார்க்க பேருரை
மிக தெளிவானதுதான் ..ஆனால் ஹைதர் அலி ஆலிம்
இல்லை என்றால் அதிரைக்கு மார்க்க தெளிவு
கிடைக்காது என்ற தோரணை நம்மவர் மத்தியில்
நிலவுகிறது ..இசாவுக்கு பிறகு எந்த வேலையும்
செய்யாமல் ஹைதரலி ஹஜரத் பயான்கேட்கணும்
என்று செல்லும் நபர்கள் பலர் ஆனால் கேட்கும் பயம்
செயல் பாட்டில் யாருக்கும் இல்லை ...
ஹைதர் அலி ஆலிம் அவகளுக்கு வருமானம்
எந்த வகையில் வருகிறது ...?ஊர் பெரியார்களிடம்
ஏற்பட்டுள்ள சில கலக்கங்கள் தீர்வாக ஹைதர் அலி
ஹஜரத்தின் செயல் பாடுகள் இருக்க வேண்டும் ..
உள்ளூர் வெளியூர் என்ற பேதத்தினால் இதை
கூற வில்லை ..பிரச்சனைக்கு தீர்வு என்ற
ரீதியில் செயல்பாடுகள் அமைய வேண்டும்
தனக்கென இளைஞர் அமைப்பை நாடியதால் ...
சில மூடர்களை போலிஸ் இலாகாவில்
புகார் செய்யும் அளவிற்கு செல்லவைத்து விட்டது ..
இல்லாத புகார் நம் சமுதாயத்தை
எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை யாவரும்
அறிய வேண்டும் ..நம்மவர் போடும் போட்டிக்கு
நிகராக ஹைதர் அலி ஹஜரத்தும் கச்சை கட்டுவது
எனக்கு சரியாக பட வில்லை ...ஹைதர் அலி ஹஜரத்
அவர்களின் மார்க்க பேருரைகள் பதிலாக வேறு ஆலிம்
பேருரை நடத்தினால் எவ்வளவு பேர் வருவார்கள்
பத்து பேர் கூட வர மாட்டார்கள் ஏன் தெரியுமா ...
ஹைதர் அலி ஹஜரத் அவர்களை பேச்சின்
சொல்லாற்றல் ...எதுகை மோனை ..
மற்ற ஆலிம் களிடம் இருக்காது ..வருபவர்கள் பலர்
பேச்சின் ரசனை ரசிப்பவர்கலாகவே காண்கிறேன் ..



Reply ஞாயிறு, செப்டம்பர் 02, 2012 12:07:00

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஹைதர் அலி ஹஜரத் அவர்களின் பயான் அதிரைக்கு அவசியம் தேவை.
ஒன்றிணைந்த ஒத்த கருத்துடைய புதுநிர்வாகம் இன்றைய பாரம்பரிய சங்கத்திற்கு தேவை.
அஸ்லம் அவர்களும் மீண்டும் அதே இடத்திலும் சொற்பொழிவாற்ற அனுமதிப்பதும் நற்பெயருக்கு அவசிய தேவை.
மூன்று தரப்பாரும் நடந்து விட்ட ஒருசில தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து இணக்கமாக வேண்டும் என்பது ஹாஜத்.
நாயன் கபூல் செய்வானாக ஆமீன்.

அதிரை சித்திக் said...

மார்க்க போதனைக்காக மட்டும் வரவில்லை
மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய்
உத்தரவாதம் அளிக்கப்பட்டு .அதற்கான
வேலைகள் உருவாக்கப் பட்ட பின்னரே
மவ்லவி வர சம்மதித்தார் என்ற தகவல்
முன்பே எனக்கு தெரியும் ..
ஆய்ஷா மகளிர் அரங்கில் தொடர்ந்து
மார்க்க சொற்ப்பொழிவு நடை பெற வேண்டும்
வேறு ஆலிம் ஆக இருந்தாலும் சரியே ..!
அதே போன்று தக்வா பள்ளியிலும்
வேறு ஆலிமை வைத்து தொடர்ந்து
சொற்பொழிவு நடை பெற வேண்டும்
ஒருவர் இல்லை என்றால் அந்த
நிகழ்வு தடை பெறுவது என்பது
அந்த நபருக்கு கொடுக்கும் மதிப்பாகவே
எடுத்துக்கொள்ள படும் ..ஹதீஸ் ..
மார்க்க சொற்பொழிவு என்று நினைத்தால்
யாரு செய்யலாம் ..ஹைதர் அலி ஹஜரத்
மட்டும் சொல்லும் சொல்லல்ல ஹதீஸ்
யாரும் கூறலாம் ..தனி நபர் அன்பு
எங்கோ சென்று சேர்ந்து விடும் எச்சரிக்கை ..
ஹைதர் அலி ஹஜரத்தால்தான் அசலம்
ஜெயித்தார் என்ற சொல் வந்ததே தவறு ...!

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

ஹைதர் அலி ஆலிம் அவர்கள் செய்த தவறுதான் என்ன? நீதியுடணும்,துணிச்சலுடன் மார்க்க சொற்ப்பொழிவு செய்வது தவறா?,தயவு செய்து மார்க்கத்துடன் அரசியல் செய்யாதீர்கள் நமது ஒவ்வொரு அசைவயும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு காலத்தில் மார்க்க சொற்பொழிவை துணிவுடன், ஆணித்தரமாக, எவ்வித ஒளிவு,மறைவு இன்றி உரக்கச்சொல்லும் மார்க்க அறிஞர்கள் இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தினரின் கோபத்திற்கு ஆளாகி பல இன்னல்களை சந்தித்தனர். ஆனால் இன்றைய நிலைமையோ காரசாரமான சொற்பொழிவால் மார்க்கத்திற்குள்ளேயே வெறுப்பையும், எதிர்ப்பையும், வழக்கையும் சந்திக்க வேண்டியுள்ளது. நல்ல பின்னேற்றம்.

உலகத்தின் மீது பற்றும், மரணத்தின் மீது பயமும் சமுதாய மக்களுக்கு வந்து விட்டது. இனி என்ன? உலக யுக முடிவு (கியாமத்) நாளை எதிர்பார்த்து இருக்க வேண்டியது தான்.


அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் அவனே பெரியவன் யாவற்றையும் நன்கறிந்தவன்

"நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 7148 )"

பல குடும்ப ரீதியான (விவாகரத்து போன்ற) பிரச்சனைகள் நிழுவையில் இருக்க மார்க்க சொற்பொழிவாற்றும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் எதோ தாங்க முடியாத குற்றம் செய்து விட்டார் என்று சித்தரித்து அவர் மேல் பழி சுமத்தி அவர் பயானை அவசர அவசரமாக தடை செய்வதின் நோக்கமென்ன?

மேல குறிபிட்டது போல அவர் "வெளியிர்காரர்" என்ற ஒரு காரணத்திற்க்காக அவரை இவ்வூரிலிருந்து அகற்றும் முயற்சியில் சங்கம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது என்பது வேதனையான செய்தி மார்கத்தை எடுத்துரைக்கும் மார்க்க அறிஞரை எந்த ஒரு காரணமில்லாமல் அவர் மேல் பழிசுமத்தும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கண்டனத்துக்குரியவர்கள் என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை.

சகோதரர் ஹைதர் அலி ஆலிம் ஊரில் பல பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து அதனால் பலரும் பயனடைந்தார்கள் என்பது அனைவராலும் மறுக்க முடியாது.

ஊர் நலனை பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் மசூரா செய்தாக வேண்டும் நம்மூரில் விரல்விட்டு எண்ணமுடியாத சமூக அமைப்புகள் இருந்தும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனையானது நேற்று முளைத்த AAMF என்றொரு அமைப்பு இருந்தும் ஒரு பிரயோஜனமில்லை ஆகவே அனைத்து சமூக அமைப்பையும் விட்டெறிந்து ஒர் அமைப்பாக செயல்படுவது சிறந்தது என்பது என்னுடைய கருத்து

நாம் மனிதர்கள் தவறுகள் நடப்பது இயல்பே அனைத்தையும் மறந்து / மன்னித்து. இதுபோன்ற பாவச்செயலில் ஈடுபட்டு அல்லாஹ்வின் கோபத்திற்க்கு ஆளாகாமல் ஒற்றுமையுடன் சகோதரத்துடனும் பழகுவோம் இன்ஷா அல்லாஹ்.

ஆகவே சம்சுல் இஸ்லாம் சங்கம் தானிட்ட தடையை திரும்ப பெற்று அவர் மார்க்க சொற்பொழிவை தொடர்ந்து நடத்தி அவர் நிகழ்த்தும் உரையை கேட்டு பயனுற்று ஈருலக வாழ்வில் வெற்றியை காண்போம்,வல்லோனின் அருளை பெறுவோம்..

Naina said...

We dont understand what is going on??

அப்துல்மாலிக் said...

தெளிவான விளக்கத்திற்கு நன்றி
தனக்கு அசாதாரணமான சூழல் வந்தால் தன் பலத்தைக்கொண்டு தடுக்கும் நிலமை நபி(ஸல்..) அவர்களின் காலத்திலிருந்தே இருந்திருக்கிறது, நியாயம், தர்மம் நிச்சயம் நிலைத்து நிற்கும், ஃபிஅத்களுக்கு எதிரான குரல் ஒலிக்கப்பட்டு அவை ஒழிக்கப்படவேண்டும் இன்ஷா அல்லாஹ்...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நிச்சயமாக சித்தீக் பள்ளியின் சொத்துக்கள் மீட்கப்படவேண்டும் அதர்க்கு நேர்மையான ஓர் அதிரைவாசி சித்தீக் பள்ளி தலைவராக வரவேண்டும் தலைவர் என்றகாரனத்திற்க்காக சம்பளம் எடுக்ககூடாது
நிச்சயமாக ஆயிசா மகளீர் அரங்கிள் பயான் நடைபெறவேண்டும் ஹைதர் ஆலிம் ஒருவரால் மட்டும்தான் அது முடியும் என்று நினைப்பது மூடத்தனம் வாரம் ஒரு ஆலிம் பயான் செய்தால் நலம்
ஆயிசா அறங்கிள் நடக்கும் பாயனுக்கு அறங்கின் உரிமையாலரிடம் பயான் செய்பவர் சம்பளம் பெறக்கூடாது
ஊரில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது ஹைதர் ஆலிம் இதில் சம்மந்தப்படும் சூழ்னிலை வந்துவிட்டதால் ஊரின் நலன் கருதி ஹக்கை சொல்லிவிட்டு, மக்காவில் குழப்பம் வந்தபொழுது ஸல்லல்லாஹு அவர்கள் ஹிஜிரத் செய்தது போல் ஆலிம் அவர்களே முடிவெத்தால் என்னை போன்ற ஆலிமின் நலம் விரும்பிகளுக்கு சந்தோசம்
காரனம் 150, 200 வருடங்களுக்கு முன்னால் வந்த பாரம்பரியமிக்க குடும்பங்கலை முத்துப்பேட்டை,காயல்பட்டினம் நாச்சிகுலம் என்று நம்மவர்களே தூற்றிக்கொல்வது குழப்பத்தின் முதல் கட்டம்

Noor Mohamed said...

ஊரில் நடைபெறும் குழப்பம் சரியா? தவறா? என்பது ஒருபுறமிருக்க, ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க பயான் ஒரு தியாகம் என்பதுபோல் பலர் இங்கே சித்தரிக்கின்றனர்.

நமதூரில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஒரு பேராசிரியர் பெரும் சம்பளத்தை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள். நல்ல வசதி கொண்ட வீட்டு வசதி, மற்றும் பல வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப் படுகின்றன. இத்தனையையும் பெற்றுக் கொண்டுதான் பயான் செய்கிறார்கள். மாறாக, பணம் பெறாமல், பள்ளிவாசலில் படுத்துக் கொண்டு மார்க்க பயான் செய்யவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
RAFIA said...

வெளியூரில் / வெளி நாட்டில் யார் எப்படிப் போனால் நமக்கென்ன.. என்று வாழும் நம் ஊர் சகோதரர்களுக்குள் ஒற்றுமையை புகட்டி, ஊர்னலனில் அக்கரயை கவலையோடு ஊட்டி,ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருக்கவேண்டும் எனும் எண்ணத்தை நெஞ்சில் நிலை நாட்டி க்கொன்டிருக்கையில் ஊரில் உள்ள நம்மவர்களோ இப்படிஒற்றுமையென்னும் கயிற்றை பஞ்சுபஞ்சாகபிய்த்துக்கொன்டிருந்தால்.......

உருப்படவா....?! ஓ ...முசல்மான்...உருப்பட வா!)

_ராஃபியா
ஜித்தாவிலிருந்து.

Adirai pasanga😎 said...

அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் -

அனைத்து இஸ்லாமியச்சகோததரர்கள் செயல்வடிவில் தங்களைத் திருத்திக்கொண்டு பிற மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழாத காரணத்தால் பல இயக்கங்களாக, அமைப்புக்களாக ஊர் ஊருக்கு பிரிந்து கிடப்பதால் இது போன்ற புதுப் புது பிரச்சனைகள் சமுதாயத்திற்கு உள்ளேயே வெளியாகிறது. மார்க்க போதகர் தீவிரவாதம் போதிப்பதாக நம் ஊர்காரர்களாலேயே அவதூறு சுமத்தப்படுகிரார்.

கருத்து வேறுபாடுகளைக் களைந்து முன்புபோல் இக்லாஸோடு ஒன்றுபட்டு செயல்பட முன்வாருங்கள்
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாகவும்

மார்க்க போதனைகளை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த வந்த மவ்லவி நம் ஊருக்கு ஒரு வரப்பிரசாதம்.

அதனை தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக எதிர்ப்பவர்கள் நம் ஊர் நலன் வேண்டாதவர்கள்

“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)

Unknown said...

stop comments start commend.....begin revolution against fraud.

Anonymous said...

சபீர் காக்கா சொல்வது போல் அவர் சம்பளம் வாங்கி தானே பயான் செய்கிறார்.. அவர் பெரும் தியாகி போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.. விமர்சனம் செய்பவர்கள் நன்கு ஆராய்ந்து விமர்சனம் செய்யவும்... அதிரைநிருபர செய்தியாளர் நடுநிலையோடு செயல்படவும்.. சம்சுல் இஸ்லாம் சஙகத்தின் நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு அதையும் பதியவும்.அ து தான் நடுநிலை. ஒரு சார்பு செய்தியை போடுவது கண்டிக்கத்தக்கது...

ஹைதெர் அலி ஆலிம் அவர்கள் தக்வா பள்ளியில் பயான் செய்கிறார். கூட்டம் வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை விலகச் சொன்னது நிர்வாகம்... ஆனால் அவர் மறுத்துவிட்டார்.. அதனால் Court - ல் Injection Order கேட்டு தாக்கல் பண்ணி இருக்கிறது தக்வா பள்ளி.. அவருக்கு ரூ 5000/- சம்பளம் கொடுப்பதினால் நிர்வாகம் சிக்கன நடவடிக்கையின் பேரில் விலக சொன்னது, ஆனால் மறுத்துவிட்டார். அதன் காரணமாகவே கோர்டிக்கு செல்ல நேரிட்டது.. அவர் பயான் செய்வதாக இருந்தால் சம்பளம் வாங்காமல் செய்தால் தக்வா பள்ளி நிர்வாகம் தாராளமாக அனுமதிக்கும்.. அவர் சம்பளம் வாங்காமல் செய்ய தயாரா?

Wassalaam

Mohamed
Dubai

Shameed said...

குழப்பத்தின் முதல்கட்டமே 100 வருடம் 200 வருடம் பாரம்பரியம் என்று சொல்லும் ஒரு கூட்டமே
அந்த கூட்டம் செய்யும் குழப்பம்தான் இத்தனைக்கும் காரணம் ,முஸ்லிம்கள் அனைவரும் சமமே இதில் 100 வருடம் 200 வருடம் என்று பேசுவதெல்லாம் வெறும் பிதற்றல் உள்ளூர் முஸ்லிம் வெளி ஊர் முஸ்லிம் என்ற பாகுபாடு முதலில் ஒழிக்கப்படவேண்டும்

Yasir said...

மாஷா அல்லாஹ்...அதிரைக்கு இது புதுசு இல்லையே...விரல் ஆட்டினவனை தொப்பி போட்டவன் காட்டிகொடுத்ததும், தொப்பி போட்டவனை விரல் ஆட்டினவன் மாட்டிக்கொடுத்ததும் காலம் காலமா நடந்துவரும் பாரம்பரிய கலாச்சாரம்தானே..மறக்ககூடாது அல்லவா இனிவரும் தலைமுறையும் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா...அல்லாஹ் என்ன பக்கத்துல இருந்தா பார்க்கிறான் ...ஜாமாய்ங்க நண்பர்களே....கெட்டழிணும்ட்டு முடிவு பண்ணிட்டீங்க..இனிமே உங்க வார்த்தையே நீங்களே கேட்க மாட்டீங்க

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஒரு குடும்பத்தில் அல்லது தெருவில் அல்லது ஊரில் ஒரு குழப்பம் அதில் ஒரு நபர் சிரிய அலவில் சம்மந்தப்பட்டுவிட்டார் குழப்பம் தீர மார்க்க அடிப்படையில் அவர் என்னமுடிவெடுக்கவேண்டும் ஆலிம்களை கேட்டு சொல்லுங்கள்
வெளியூர் உள்ளூர் முஸ்லீம் என்றபாகுபாடு தவருதான் வெளியூரில் இருந்து வந்து இருக்கிண்ற கள்ளூரியாசிரியர்கள் மார்க்க அறிங்கர்கள் இங்கே மரியாதை யுடண்தான் நடத்தப்படுகிண்றார்கள் சற்று முன்புவரை ஹைதர் ஆலிம் அவர்களும்கூட
உள்ளூர் பிரச்சனையில் உள்ளூர் காரர்கள் பேசிதீர்ப்பதுதான் நல்லது என்பதே என் கருத்து
அதிரை வாசிகளின் பழக்கம் வெளியூர் முஸ்லீம்களை நட்போடு பழகுவார்கள் சம்மந்தம் கலக்கமாட்டார்கள்

அதிரை சித்திக் said...

நல்ல நிகழ்வுகள் தொடர வேண்டும் ..
பல ஆண்டுகளாக நடை பெற்ற வரும்
புகாரி ஷரீப் நிகழ்வு தனி நபரின் சொற் பொழிவல்ல..
அதே போன்றே தக்வா பள்ளி மற்றும் ஆய்ஷா அரங்கில்
நடைபெறும் இஸ்லாமிய சொற்பொழிவாக
நடை பெற வேண்டும் ..தனி நபர் பெயர் தாங்கிய
நிகழ்வாக இருக்க கூடாது ..நமதூரில் சில
காலமாக ஹைதர் அலி ஹஜரத் பயான் என்றே
அழைக்க படுகிறது..இது கால போக்கில்
ஹைதர் அலி ஹஜரத் ஒரு அரங்கம் அமைத்து
நுழைவு சீட்டு கொடுக்கும் அளவிற்கு மக்கள்
ஒருவர் பேச்சிற்கே அடிமை ஆக கூடாது ..
இஸ்லாமிய பேருரை பலரும் ஆற்ற வேண்டும்
என்பதே எனது தாழ்மையான கருத்து ..
ஒவ்வரு பாணுக்கும் பணம் வாங்குவதால்
எந்த நிகழ்வையும் அவரால் நிறுத்த முடிய வில்லை
எனவே பொதுவான வழியில் ஹஜரத் அவர்களுக்கு
வருவாய் வர அல்லாஹ் நல் வழி புரிவானாக ஆமீன் ..
பள்ளிவாசல்களில் பயானுக்கு பணம் என்பது
உலக பொதுமறையான குர் ஆண் ,மற்றும் ஹதீஸ்களுக்கு
விலை நிர்ணயிப்பது போல் இருக்கிறது ...
சகோ.நூர் முகமது காக்கா கூறியது போல்
பள்ளிவாசலில் உறங்கி கொண்டு ..
மக்களுக்கு உபதேசம் செய்வது மட்டுமே
வாழ்க்கை என்றால் யாராலும் ஒன்றும்
சொல்ல முடியாது ..சித்திக் பள்ளி நிர்வாக சம்பளம்
குத்பா பள்ளி சம்பளம் ,தக்வாபள்ளி சம்பளம்
என்று ஊதியத்துடன் ஊழியம் என்பதால்
ஊதியம் பெறுபவர்கள் சில சங்கடங்கங்களுக்கு
ஆளாக நேர்வது உலக நடை முறைதான்
எனவே ..பேச்சை குறைத்து ..அமல் கலை பெருக்க
வேண்டு கிறேன் ..,

Anonymous said...

முன்பு சித்தீக் பள்ளி தலைவராக இருந்த கன்னியத்திற்க்குரிய ஆப்துல் காதர் ஆலிம் அவர்கள் செய்த தியாகம் யாராலும் செய்ய முடியாது. அவருக்கு நிகராக யாரும் தலைவருக்கு பொருத்தமானவர் அல்ல.

தலைவர் என்பது தேர்ந்து எடுக்க வேண்டும். எதன் அடிப்படையில் ஹைதர் அலி ஆலிமை தேர்ந்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை..உள்ளூர் காரர்கள் ஒன்று கூடி உள்ளூர் காரரை தலைவராக தேர்ந்து எடுக்க வேண்டும்..உள்ளூர் நிலவரம் உள்ளூர் காரருக்கு தான் தெரியும்.அவர் உன்மையான மார்க்க அறிஞராக இருந்தால் அவர் தானாகவே பதவி விலக வேண்டும். சர்ச்சைக்குரிய பதவியில் நீடிப்பது நல்லது அல்ல..அது தான் பெருந்த்தன்மை. அவர் இப்பொழுது அரசியல் செய்ய தொடங்கி விட்டார். இலைஞர்களை ஒன்று திரட்டி அவர் கூட்டம் சேர்க்கிறார்.

ஹைதர் அலி ஆலிம் அவர்களை பயான் சொல்வதற்க்கு அழைத்து வர ஆட்டோ அனுப்ப வேண்டும். ஆதை அவரால் மறுக்க முடியாது..அவரை தியாகி போல் சித்தரிக்கும், ஆதரவாளர்கள் அவருடைய character - ஐ தெரிந்துக் கொள்ள வேண்டும்..

Wassalam..

Mohamed
Dubai

Shameed said...

அதிரை வாசிகள் வெளி ஊரில் சம்பந்தம் கலக்க மாட்டார்களா ஏன் வெளி ஊரில் உள்ளவர்களும் முஸ்லிகள் தானே

எந்த ஹதீசிலாவது வெளி ஊரில் சம்பந்தம் பண்ண கூடாது என்று சொல்லி உள்ளதா ?

இதல்லாம் வெறும் பாரம்பரியம் என்று சொல்லக் கூடிய 100 வருட 200 வருட வறட்டு பிடிவாத குணமே தவிர வேறு ஒன்றும் இல்லை

பிரச்சனை மார்க்க சம்பந்தப்பட்டது அதை உள்ளூர்காரர்கள்தான் பேசி தீர்க்கணும் என்று சொல்வது பிரச்சனையை பெரிதுபடுத்துமே தவிர பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது

Shameed said...

ஹைதர் அலி ஆலிம் ஆட்டோவில் தான் வருகின்றார் என்றால் அதன் அர்த்தம் அவர் இன்னும் எளிமையாகத்தான் இருக்கின்றார் என்பதை பறை சாற்றுகின்றது

ஹைதர் அலி ஆலிம் பயான் செய்ய வருவதற்கு இன்னோவ கரோ போர்ட் காரோ கேட்டிருந்தால் அதை பெரிது படுத்தலாம் ஆட்டோவில் வருவதெல்லாம் இப்போ மிக சாதாரணம்!!!

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

உண்மையில், நமக்குக் குழி தோண்டுபவர்கள் வெளியூர்க்காரர் கள்தான்!

வா..

அதிரை சித்திக் said...

யார் குழி தோண்டினாலும் நாம்
விழிப்புணர்வோடு இருந்தால்
தோண்டும் குழியில் அவர்களே விழுவர் ..
ஹைதர் அலி ஹஜரத் அவர்கள்
பற்றி பேசுவதை நிறுத்தி ஹஜரத்
அவர்களின் கருத்தை வெளியிட்டால்
நம்மவர்களின் மன நிலை தெளிவடையும் ..

Abu fahim said...

தக்வா ப்ள்ளி நிர்வாகம் அவரை விலகச் சொன்னதா ?அல்லது ஒரு தனினபரா ? சம்பலம் 5000 என்பதை உருதி செய்யா வேண்டும் சன்மானம் சம்பளம் வாங்கினால் நமக்கு ஆலிம் அடிமையா??

Yasir said...

எந்த ஆலிமை பற்றியும் நமக்கு தெரியாது...ஆனால் ஒரு கமென் புரிதலில் ஆலிம் சம்பளம் வாங்குவது ஹராம் இல்லை...சம்பளம் கொடுக்காமல் ஒரு ஆலிமை பிச்சையா எடுக்கச்சொல்கிறீர்கள்...ஆட்டோதானே கேட்டார் ஆட்டோ பைலட் உள்ள ஃபிளைட்டே கேட்டப்பல சொல்றிய.உள்ளூரோ வெளியூரோ நன்மை செய்பவருக்கு நொந்தரவு செய்யக்ககூடாது..பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே சைத்தான் விஷமிகள் வடிவில் வந்து ஒற்றுமையை சீர் குழைக்கப்பார்ப்பான்

Anonymous said...

மிண்டும் நினைவூட்டுகிறோம் !

தயைகூர்ந்து கருத்துப் பெட்டியை முடக்கும் அளவுக்கு கருத்துக்களில் எல்லை மீறல் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...!

ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்களை நளினமாக எடுத்து வையுங்கள்... !

Shameed said...

பள்ளிவாசல் சொத்தை திருடி பலரும் வயிறு நிறைக்கும்போது ஹைதர் அலி ஆலிம் பயான் செய்வதற்கு சம்பளம் இல்லாமல் பயான் செய்யட்டும் என்றால் ஹைதர் அலி ஆலிம் காற்றை குடித்தா? உயிர் வாழ்வார்

அதிரை சித்திக் said...

சித்தீக் பள்ளி நிர்வாகம் செய்ய
தலைமை வகிக்கவும் சம்பளம்
என்ற தகவல் உண்மையா..?

Abu fahim said...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…தலைவர் என்றகாரனத்திற்க்காக சம்பளம் எடுக்ககூடாது... இது அவதுரன செய்தி

மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும். 31:33

அபூ சுஹைமா said...

என்னைப் பொறுத்தவரை தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.

குச்சிப் பள்ளி விவகாரம் வெளிவந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், ஒரு குடும்பத்துக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஆயிஷா மகளிர் மன்ற உரிமையாளருக்கும் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அவர் சங்கத்தின் சில நிர்வாகிகளைத் தூண்டி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டார் என அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

இது தவிர மேலும் சில காரணங்கள் ஓராண்டுக்கு முன்னரே எனக்குத் தெரியும் என்பதால், இந்த முடிவு சரியானது. ஆனால் முடிவு எடுக்கப்பட்ட நேரம் மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்காதது தவறு.

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தடை செய்வதால், அதிரையில் ஏகத்துவப் பிரச்சாரமே தடை செய்யப்படும் என்று நினைப்பதும் தவறு.

இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே அரசியல் செய்வதில்லை.

அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

அதிரை சித்தீக்,
குழி தோண்டும் வெளியூர்க்காரர்களே (பீகார்க்காரர்கள்) குழியில் விழுந்தால், நமக்கு யார் குழி தோண்டுவது?

வா..



அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

@ அபூ சுஹைமா. நீங்கள் எந்த முடிவைக் குறித்து பேசுகிறீர்கள்?(ஏனெனில் உங்களுடைய கமெண்டில் ‘முடிவு’ என்று தான் சொல்லப்படுகிறது. அது எந்த முடிவு.) சற்று தெளிவாக விளக்குங்களேன்.

Ebrahim Ansari said...

//இந்த சித்தீக் பள்ளி விவகாரத்தை மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் கையில் எடுத்து விசாரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.//

இதைப்படித்ததும் எனக்கு ஏற்பட்ட கருத்தை அன்பர்களுடன் பகிர நினைக்கிறேன். ஊரில் தனித்தனித் தெருக்களில் அல்லது முஹல்லாக்களில் ஏற்படும் பிரச்னைகளை பேசி சமரசமாக தீர்த்துவைக்கும் நோக்குடனேயே அனைத்து முஹல்லா என்ற அமைப்பு வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு இது போல் பிரச்னைகளில் ஏன் தலையிட்டு சமரசம் செய்து வைக்கக் கூடாது?
அனைத்து முஹல்லா அமைப்பு எனபது மாதம் ஒருமுறை கூடி களையும் ஒரு சடங்கு மட்டும்தானா? ஏன் அந்த அமைப்பால் அனைவரையும் கட்டுப்படுத்தும் நிலைமைகளை உருவாக்கிட முடியவில்லை?
இந்த சித்தீக் பள்ளி விவகாரம், ஹைதர் அலி ஆலிம் விவகாரம், தரகர் தெருவில் நமக்குள் நாமே வன்முறையில் ஈடுபட்ட விவகாரம், தக்வா பள்ளி பயான் விவகாரம் , ஆயிஷா பெண்கள் அரங்கத்தில் பயான் மர்ரவர்களைக்கொண்டாவது நடத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட பலதரப்பட்ட விவகாரங்களில் உறுதியான தலையீட்டை இந்த அமைப்பு செய்யும் விதத்தில் ஊர் கட்டுப்பாட்டு அமைப்புகளை கடையநல்லூர் ஜமாஅத் முறையில் ஒருமுகப்படுத்த முடியாதா?

நமது பிரச்னைகளை நமக்கென்று ஒரு பொது அமைப்பில் பேசி தீர்க்கமுடியும் என்பது ஒரு நிறைவேறாத கனவுதானா?

மேலே உள்ளவை நான் கேட்டது.

கீழே இருப்பது என்னிடம் ஒருவர் கேட்டது அதை நான் வெளிப்படுத்துகிறேன்.

அனைத்து முஹல்லா அமைப்பு என்பது மாதம் ஒருமுறை கூடி சம்சா தின்று இஞ்சி டீ குடிக்கவா?
அனைத்து முஹல்லா அமைப்பு என்பது வருடா வருடம் காலண்டர் வெளியிட மட்டும்தானா?

இதைக்கேட்டபோடு எனக்கு ஒரு கவிதைதான் நினைவுக்கு வந்தது.

""என் அண்ணன் கோபித்துக்கொண்டு அடுதத தெருவில்
தம்பியோ தலைதெறிக்க ஓடி ஒளிந்துவிட்டான்
அக்கா அடிதடி செய்து அகப்பட்டதை எடுத்துபோனாள்
கூட்டுக்குடும்பம் சிதறினாலும்
குடும்பம் என்னவோ ஒற்றுமையாகத்தான் இருக்கிறது
எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் ".

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஊரில் ஏதோ நல்ல மாற்றங்கள் நடக்கும், நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், நப்பாசையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தேர்தலில் 'நம்ம இவருக்கு' வாக்கு அளித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்று ஊர்மக்களிடம் ஆதரவு கேட்டு மற்றொரு சகோதர வலைய தளத்தில் அவசரப்பட்டு கட்டுரை எழுதி வெளியிட்டதற்கு இங்கே மன்னிப்பு கேட்க உள்ளம் நாடுகிறது.

காரணம், அடுத்த எலக்சன்லெ எங்க வாப்பாவே நிண்டாலும் பல்லைப்பிடித்து பார்த்து, இவர் நல்லவரா? வல்லவரா? என பலவற்றை அலசி ஆராய்ந்து தான் எதையும் பேச, எழுத எத்தனிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல பாடத்தை கடந்த காலம் மூலம் கற்றுக்கொண்டேன்.








Unknown said...

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீது உண்டாவதாக...

இந்த கட்டுரையை படித்து குழம்பி போயிருக்கு அதிரைவாசிகளே,

அதிரையில் நடந்து வரும் உண்மை நிலையை பற்றி அறிந்தும் அல்லது அறியாமலும் அல்லது அறைகுறையாக ஊரிலிருந்து கேள்விபட்டும் தங்களின் கருத்துக்களை பதிந்திந்துள்ளார்கள் ஒரு சில சகோதரர்கள்.

இங்கு எல்லோரும் கவணிக்க பட வேண்டிய முக்கிய சமாச்சாரம் ஹைதர் அலி ஆலிம் சர்ச்சையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவு சரியா? அல்லது தவறா? என்பது தான்.

வெளியூர் காரர் ஊரில் குழப்பம் செய்கிறார் என்பது ஒரு கருத்து வெளியூர் காரர் ஊரில் மார்க்க பிரச்சாரம் செய்து மக்களை நேர் வழி படுத்துகிறார் என்பது மற்றொரு கருத்து.

இஸ்லாத்தில் மார்க்கத்தை பிரச்சாரம் (உண்மையை மேடைகளில்) வெளியூர்காரன் உள்ளூர்காரன் என்ற வரைமுறை ஏதும் உண்டா?

பேரூராட்சி தலைவர் மற்றும் சம்சும் இஸ்லாம் சங்கத்தின் நிலைபாடு: "ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயானில் எந்த தவறுமில்லை ஆனால் சங்கத்தை அவமதித்துவிட்டார், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று பிடிவாதத்துடன் இந்த தீர்ப்பை மாற்ற முடியாது என்பது தான்". அதே சமையத்தில் மேலே இணைக்கபட்டுள்ள கடிதங்களின் வாசகங்களை கொஞ்சம் உள்நோக்கி பார்த்தால் "ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க பிரச்சாரம் சரியில்லை, ஊரில் குழப்பம் விளைவிக்கிறார் என்பதே மேலோங்கி உள்ளது". இதன் மர்மம் என்ன சம்சுல் இஸ்லாம் சங்கம் இதற்கு கட்டாயம் விளக்கம் தருமா?

ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் சொல்லப்படும் அவதூறுகளுக்கு அவரும் மக்கள் மத்தில் விளக்கம் தந்து அவர் மேல் உள்ள சந்தேகங்களை கலைய செய்வாரா?

நம்மில் சிலர் இருத்தரப்பின் கருத்தை அறிந்துவிட்டு பதில் தருவதுதானே ஓர் முஸ்லீமின் நற் செயலாக இருக்க முடியும், இதல்லாமல் அவர் சொன்னார், இவர் சொன்னார், கேள்விபட்டேன் என்று தெரு முச்சந்திகளிலிருந்து போசுவது போல் உங்கள் கருத்து இருப்பது வருத்தமளிக்கிறது. தீர விசாரித்து கருத்துக்கள் இட்டால் எல்லோரும் தெளிவுபெறலாம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், "பழிவாங்கு நோக்கில் கொஞ்சம் கூட இறையச்சம் இன்றி "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற ஆணவ போக்கு வலுபெற்று ஊரை இரண்டாக்க முயற்சிப்பது என்னவோ உண்மை" என்பதை நாம் எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வே நம் எல்லோரையும் நேர்வழி படுத்த தகுதியானவன்.. அல்லாஹ் நம் ஊர் மக்களை அநீதியாளர்களிடமிருந்து காப்பாற்றுவானாக..

Unknown said...

//இந்த சித்தீக் பள்ளி விவகாரம், ஹைதர் அலி ஆலிம் விவகாரம், தரகர் தெருவில் நமக்குள் நாமே வன்முறையில் ஈடுபட்ட விவகாரம், தக்வா பள்ளி பயான் விவகாரம் , ஆயிஷா பெண்கள் அரங்கத்தில் பயான் மர்ரவர்களைக்கொண்டாவது நடத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட பலதரப்பட்ட விவகாரங்களில் உறுதியான தலையீட்டை இந்த அமைப்பு செய்யும் விதத்தில் ஊர் கட்டுப்பாட்டு அமைப்புகளை கடையநல்லூர் ஜமாஅத் முறையில் ஒருமுகப்படுத்த முடியாதா?//

சகோதரர் இபுறாஹீம் அன்சாரி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

சொந்த சுய நலன்களை தூக்கி எறிய ஊரில் உள்ள செல்வந்தர்களுக்கு மார்க்க அறிஞர்களும் முற்பட்டால் முடியும் இன்ஷால்லாஹ்... ஆனால் தற்போது நடைபெறுவது சர்வதிகார போக்கு என்பது நீங்கள் ஊரில் இருப்பவராக இருந்தால் நடைபெரும் நிகழ்வுகளை வைத்து நடுநிலையோடு உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்..

பல நேரங்களில் எல்லாமே வெறும் பகட்டுக்காகவே நடைபெறுகிறது ஊரில். இன்னும் சில நேரங்களில் அநீதியாகவும் நடைபெறுகிறது இதற்கு தற்போதைய உதாரணம் சித்தீக் பள்ளி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பிரச்சினை...

ஊரில் நடைபெரும் நிகழ்வுகள் மிகவும் வேதனையளிக்கிறது என்னை போன்ற சாமானியனுக்கு...

ஊர் நலனுக்காக துஆ ஒன்றே தீர்வு.. வேறென்ன சொல்ல..

Unknown said...

சகோதரர்கள் முஹம்மது, சித்தீக் மற்றும் நூர் முஹம்மது, முசெமு சபீர்.

அல்லாஹ்வுக்கு அஞ்சி தான் உங்களை கருத்தை பதிந்தீர்களா?

ஒரு ஆலிமின் வருமானத்தை பற்றி இப்படி கொச்சை படுத்தி பேசுவதற்கு எப்படி உங்கள் மனசாட்சி இடம் தந்தது? தரமற்ற கருத்துக்களை உணர்ச்சிவசப்பட்டு இட்டு ஏன் உங்கள் நன்மதிப்பை கெடுத்துக்கொள்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

தஃவ்பா செய்து கொள்ளுங்கள்...

அவர் அப்படி என்ன தான் தவறு செய்தார்? என்பதை கொஞ்சம் விளக்கிவிட்டு இது போன்ற கருத்தை பதியுங்களேன் சகோதரர்களே... ஏன் ஊரில் நடக்கும் உண்மை சம்பவங்கள் தெரியாமல் இப்படி கண்டதை சொல்லி பாவத்தை சம்பாதிக்கிறீர்கள். சொந்த சுய நலன்களுக்காக இஸ்லாத்தை ஓரங்கட்டி பழிவாங்கும் போக்கு நடைபெறுகிறது சந்தர்ப்பவாத கூட்டனியினரால். பலருக்கு நேற்றுவரை இனித்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் இன்று அவர்களுக்கு கசக்கிறது.

தீர விசாரித்து விட்டு கருத்திடுங்கள்... இட்ட கருத்தை திரும்ப பெருங்கள் சகோதரர்களே...

U.ABOOBACKER (MK) said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

\\ஊரில் ஏதோ நல்ல மாற்றங்கள் நடக்கும், நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், நப்பாசையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தேர்தலில் 'நம்ம இவருக்கு' வாக்கு அளித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்று ஊர்மக்களிடம் ஆதரவு கேட்டு மற்றொரு சகோதர வலைய தளத்தில் அவசரப்பட்டு கட்டுரை எழுதி வெளியிட்டதற்கு இங்கே மன்னிப்பு கேட்க உள்ளம் நாடுகிறது.

காரணம், அடுத்த எலக்சன்லெ எங்க வாப்பாவே நிண்டாலும் பல்லைப்பிடித்து பார்த்து, இவர் நல்லவரா? வல்லவரா? என பலவற்றை அலசி ஆராய்ந்து தான் எதையும் பேச, எழுத எத்தனிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல பாடத்தை கடந்த காலம் மூலம் கற்றுக்கொண்டேன்.\\

சபாஷ் நெய்னா !

Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் ஜனாப். அதிரை ஜாபர் அவர்களுக்கு,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது?

நான் பதிந்த கருத்தை வேதனையுடன் பதியக்காரணம்,

தரகர்தெருவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மாற்றார் தலையிட்டு சமாதானம் செய்துவைக்க இருப்பதாக ஒரு செய்தி வந்தது.மாவட்டத்திலேயே மாபெரும் ஜமாஅத் ஆகிய நம்மிடையே நடைபெற்ற ஒரு பிரச்னைக்கு மாற்றார் சாமாதானம் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோமே- நம்மிடையே ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு இல்லையே- அப்படி இருக்கும் அமைப்பும் எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக இருக்கிறதே என்ற ஆதங்கம்தான்.

அனைத்து முஹல்லா அமைப்பு என்பது ஒரு கலங்கரை விலக்காக இருக்க வேண்டும். அதில் அனைத்து முஹல்லா மட்டுமல்ல ஊரில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கவேண்டும். பொதுப் பிரச்சனைகளில் விசாரிக்கும் - தீர்ப்புத்தரும் அதிகாரமும் அதற்கு வேண்டும்- அந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்படும் உறுதியும் ஒத்துழைப்பும் வேண்டும்.அதற்கு ஏற்றபடி இந்த அமைப்பின் துணை விதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இந்த கலகத்தில் இருந்தாவது அதிரைக்கு ஒரு நியாயம் கிடைக்கவேண்டும்.

இவைகள் என்போன்ற சிலரின் சின்ன சின்ன ஆசைகள்.

Noor Mohamed said...

//பலருக்கு நேற்றுவரை இனித்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் இன்று அவர்களுக்கு கசக்கிறது.//

முற்றிலும் உண்மை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் கேட்ட மக்கள் சர்ச்சைக்குரிய இள்மு-அறிவைத்தான் அறிந்து கொண்டார்கள். ஆக்கம் ஏதுமில்லை. பணம் கொடுத்தால் பயான் கிடைக்கும் என்பதில் எந்த பயனுமில்லை. காலப்போக்கில் குடும்பம், ஊர் ஒற்றுமைதான் குலைகிறது.

சித்திக் பள்ளி சொத்து பிரச்சனை கண்டிப்பாக தீர்க்கப்படவேண்டும். ஆனால் அதற்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் எவ்விதத்திலும் நடுநிலையாளராக செயல்படமுடியாது என்பதுதான் என் கருத்து.

Unknown said...

****இவைகள் என்போன்ற சிலரின் சின்ன சின்ன ஆசைகள்*****

ஜனாப் இபுறாஹீக் அன்சாரி அவர்களுக்கு,

நம்மை போன்ற பலரின் சின்ன சின்ன ஆசை....

துஆ மட்டுமே இதற்கு ஆயுதம் அல்லது மருந்து..

நீங்கள் சொல்லும் செய்தி உண்மையில் வருத்தமளிக்கிறது.

Anonymous said...

சகோதரர் B.ஜமாலுதீன் அவர்களின் கருத்து மட்டுறுத்தலுக்குப் பின் பதியப்பட்டுள்ளது

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய அதிரை நிருபர் வலைப்பூ வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? என்கிற தலைப்பில் பதியப்பட்டுள்ள கட்டுரை மற்றும் அதற்கு பின்னுட்டங்களை படித்த போது இவ்விவகாரம் சம்மந்தமாக நான் அறிந்த தகவல்களை இங்கே பதிய விரும்புகிறேன். அவை வருமாறு:

இனி நமது ஊருக்கு நல்ல நடக்கப்போகிறது - என்று நமதூரில் அனைத்து தரப்பு மக்களும் கடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியானபோது எண்ணினார்கள். ஆனால் நமதூர் நகர மன்ற தலைவர் அவர்கள் ஈடுபடுகிற காரியங்களைப் பார்க்கிறபோது. தனது பதவிக்காக எதையும் செய்வார்போல் தெரிகிறது. அதனால் நாம் அனைவரும் எதிர்பார்கிற நமதூரின் ஒற்றுமை, நல்லிணக்கம், ஊரின் முன்னேற்றம் அனைத்திற்கும் கேடு விளைவித்து விடுவாரோ என்கிற அச்சம் தான் எனக்கு ஏற்படுகிறது.

காரணம் 1:
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பெயரில் ஒரு வரலாற்று பிழையான மற்றும் மார்க்கத்திற்கு புறம்பான காரியங்கள் நடைபெறுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதுவும் நிர்வாக முடிவு என்று கூறி நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் மட்டுமே இக்காரியத்தில் நமதூர் நகர மன்ற தலைவர் தூண்டுதலின் பெயரில் ஈடுபடுவது ஊரின் ஒற்றுமைக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.

காரணம் 2:
இஸ்லாத்தின் பெயரில் பல காலமாக நமதூர் மக்கள் மார்க்கத்திற்கு முரணாக ஈடுபட்டு வருவதை மேன்மைமிகு குர்ஆனின் வழிகாட்டுதல் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சிறப்புமிகு வாழ்வியல் நெறி ஆகிய இரண்டின் அடிப்படையில் சீர்திருத்தம் செய்து வருகிற கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பணிகளை முடக்கும் விதமாக, நமது நகர மன்றத்தின் தூண்டுதலினால் அவருடைய சொந்தக்காரரான உமர் தம்பி அவர்களைக் கொண்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதும், நமதூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருப்பதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய காரியத்தைப் பற்றி ஷம்சுல் இஸ்லாம் சங்கமோ மற்றும் தக்வா பள்ளி நிர்வாகமோ உமர் தம்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாததையும் நோக்கும் போது சுய விருப்பு வெறுப்பினை ஒரு முஹல்லா நிர்வாகத்தின் பெயரை ஒரு சிலர் பயன் படுத்துவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.

காரணம் 3:
ஊரில் சீர்திருத்த பணிகளில் ஈடுபடுகிற ஒரு ஆலிம் மீது ஏன் நகர மன்ற தலைவர், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நிர்வாகிகளான தலைவர், து.தலைவர், மற்றும் ஒருவர் ஆகியோருக்கு ஏன் இந்த குரோதம் என்று புரியவில்லை. ஏனென்றால் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் ஆயிஷா மகளிர் மன்றம் மற்றும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு அளிக்கப்பட்ட கோரிக்கை கடிதங்கள் பிரதி எடுத்து பொது மக்களுக்கும், நமதூர் வலைப்பூக்களுக்கும் வினியோகம் செய்துள்ளதையும் கவணித்தால், இச்செயலில் ஈடுபட்டுள்ளது ஒன்று ஆயிஷா மகளிர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

காரணம் 4:
ஆயிஷா மகளிர் அரங்கில் ஒவ்வொரு வார வியாழக் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கு பயான் நடைபெற்று வந்ததை நகர மன்ற தலைவர் நிறுத்தியதும், கடந்த 31.08.2012 அன்று நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அவசர கூட்டத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் ஹைதர் அலி ஆலிம் அவர்களால் பெரிய ஜும்ஆ பள்ளியில் வெள்ளிக் கிழமைகளில் நடத்தி வருகிற பயாணை நிறுத்துவதற்கு கோரியதை, பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகிகள் நிராகரித்ததும் அதனை மற்ற முஹல்லா நிர்வாகிகள் ஒப்புக் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை தங்கள் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பெரிய ஜும்ஆ பள்ளி நிர்வாகம் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளதும் அதனை மற்று முஹல்லா நிர்வாகிகள் ஒப்புக் கொண்டுள்ளதும் பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது.

அல்லாஹ்வின் ஒளியைத் (மார்க்கம்) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனா. (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.(அத்தவ்பா 9:32)

குறிப்பு:
பெரிய ஜும்ஆ பள்ளியில் கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நடத்தி வருகிற சொற்பொழிவு நிகழ்வுகளை இன்ஷாஅல்லாஹ் யாராலும் நிறுத்த இயலாது என்பதை பெரிய ஜும்ஆ பள்ளி முஹல்லாவிற்கு உட்பட்டவன் என்கிற உரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
050-2855125
055-2177618
கருத்து பதியப்பட்ட நாள் & நேரம் : திங்கள், செப்டம்பர் 03, 2012 2:11:00 am

Unknown said...

******ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் கேட்ட மக்கள் சர்ச்சைக்குரிய இள்மு-அறிவைத்தான் அறிந்து கொண்டார்கள். ஆக்கம் ஏதுமில்லை.*******

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் நூர் முஹம்மது...

இது முற்றிலும் தவறு.. எதன் அடிப்படையில் வைத்து பேசுகிறீர்கள் என்று புரியவில்லை... மார்க்க விசயங்களில் கருத்துவேறுபாடு எழுவது சகஜமே.. மார்க்க விசயத்தில் சுய நலனின்றி ஆய்வு செய்து, மனிதன் என்ற முறையில் மார்க்க தீர்ப்புகளில் தவறு இழைத்திருந்தால் இதற்காக ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொல்லும் கருத்துக்கள் அனைத்தையும் சர்ச்சைகுறிய இள்ம் - அறிவு என்பது ஏற்புடையதா?

*****காலப்போக்கில் குடும்பம், ஊர் ஒற்றுமைதான் குலைகிறது.
****

உங்களை போன்ற சிலர் ஊர், குடும்ப ஒற்றுமை பற்றியே பேசுகிறீர்களே... ஊரில் நடந்தேரிவரும் சுயநல அரசியல் ஆணவக்காரர்களின் சூழ்ச்சியும், பணக்கார வார்க்கத்தின் திமிரும், சங்கம் ஊர் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கு செயலும் ஏனோ உங்கள் பார்வைக்கு எட்ட வில்லை...

அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக ஆமீன்...

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\அந்த அமைப்பு இது போல் பிரச்னைகளில் ஏன் தலையிட்டு சமரசம் செய்து வைக்கக் கூடாது?
அனைத்து முஹல்லா அமைப்பு எனபது மாதம் ஒருமுறை கூடி களையும் ஒரு சடங்கு மட்டும்தானா? //

சரியாக சொன்னீர்கள் நானும் இதே கருத்தை தான் இட்டுள்ளேன் ஊரில் இத்துணை பிரச்சனைகளிருந்தும் ஒரு அமைப்புக்கூட தலையிட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது ஆகவே நேற்று முளைத்த அமைப்புகள் அனைத்தையும் கலைத்தாக வேண்டும் என்பது அனைவராலும் வரவேற்க்ககூடிய முடிவு

//பலருக்கு நேற்றுவரை இனித்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் இன்று அவர்களுக்கு கசக்கிறது.//

காரணம் அவர் ஆற்றும் உரை ஒவ்வொன்றும் (வட்டி மற்றும் இதர ஹதீஸ்கள்) சத்தியம் அதை ஏற்றுகொள்ளாத மனம் கசக்கத்தான் செய்யும் என்பது மூடர்களின் நிலை இப்பொழுது அதிரையில் ஒரு சிலரிடம் சூழ்ந்துள்ளது அல்லாஹ் தான் அனைவரையும் நேர்வழி காட்டனும்

\\அதிரை சித்திக் சொன்னது…
சித்தீக் பள்ளி நிர்வாகம் செய்ய
தலைமை வகிக்கவும் சம்பளம்
என்ற தகவல் உண்மையா..?//

சகோதரர்கள் கருத்து வேறுபக்கம் திசை மாறுகிறது என்பது வேதனையே ஒரு ஆலிமுடைய சம்பளத்தை நாமறிந்து என்ன பயனளிக்க போகிறது. என்ன கருத்து நமக்கு தேவையோ அதை மட்டுமிட்டால் போதுமானது.

அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் அவன் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து தீய காரியத்திலிருந்து விழகி இருங்கள்.

சித்திக் பள்ளியின் நிர்வாகத்தில் யாராக இருந்தாலும் சரி (சகோதரர் ஹைதர் அலி ஆலிமாக இருந்தாலும் சரி இதே மற்ற நடுநிலையானவர் இருந்தாலும் சரி) இறை இல்லத்தின் சொத்தை மீட்டாக வேண்டும் என்பது அனைவரின் (முஹல்லாவாசிகள் உட்பட) வேண்டுகோள் இதை கருத்தில்கொண்டு ஊர் பெரியவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம் இன்ஷா அல்லாஹ்..

Anonymous said...

adirai jafar சொன்னது…

\\சகோதரர்கள் முஹம்மது, சித்தீக் மற்றும் நூர் முஹம்மது, முசெமு சபீர்.

ஒரு ஆலிமின் வருமானத்தை பற்றி இப்படி கொச்சை படுத்தி பேசுவதற்கு எப்படி உங்கள் மனசாட்சி இடம் தந்தது? தரமற்ற கருத்துக்களை உணர்ச்சிவசப்பட்டு இட்டு ஏன் உங்கள் நன்மதிப்பை கெடுத்துக்கொள்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

தஃவ்பா செய்து கொள்ளுங்கள்...

தீர விசாரித்து விட்டு கருத்திடுங்கள்... இட்ட கருத்தை திரும்ப பெருங்கள் சகோதரர்களே...\\

அவசியம் இல்லை…..

அவருடைய வருமானத்தை கொச்சைபடுத்தவில்லை, மாறாக அவரை தியாகி போல் சித்தரிக்கும் உங்களை போல் விபரம் அரியாதவருக்கு விளக்கம் அளிக்கவே தவிரே.....


அபூ சுஹைமா சொன்னது…

\\இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே அரசியல் செய்வதில்லை.\\

100% உண்மை..

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி சொன்னது…

\\இன்னும் கொஞ்சம் சொல்கிறேன் கேளுங்கள். ஹைதர் அலி ஆலிம் மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா பள்ளிவாசல்கள் இமாம்களுக்கும், மோதினார்களுக்கும், ஜும்ஆ கதீப்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது கூட உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆகவே இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\\

மற்றவர் காசு வாங்குவதை கொச்சை படுத்தும் உங்களுக்கு, ஹைதர் அலி ஆலிம் காசு வாங்குவது ஒன்றும் இல்லை

Shameed சொன்னது…

\\ பள்ளிவாசல் சொத்தை திருடி பலரும் வயிறு நிறைக்கும்போது ஹைதர் அலி ஆலிம் பயான் செய்வதற்கு சம்பளம் இல்லாமல் பயான் செய்யட்டும் என்றால் ஹைதர் அலி ஆலிம் காற்றை குடித்தா? உயிர் வாழ்வார் \\

அவரும் மற்றவரை போல் காசு வாங்கி தான் பயான் செய்கிறார். அவர் தியாகி இல்லை.. மற்றவருக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை.. நன்றாக பேசுகிறார் என்பதால் அவருக்கு support செய்யக்கூடாது அவர் சம்பாதிக்க வேண்டும் என்றால் தொழில் செய்யட்டும், நடு நிலையாக இருப்பவர் சம்பளம் பெற கூடாது..அவர் தலைவராக தொடர வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் தொடரட்டும், இல்லையேல் விலகட்டும்

Wassalaam..

Mohamed
Dubai

Abdul Majid said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

maji என்ற வாசகரின் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்கு பின்னர் பதியப்பட்டுள்ளது

அட! நீங்களும் நல்லது சொல்லமாட்டிங்க சொல்லுரவங்களையும் விட மாட்டிங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. உங்களுக்கு பிடிக்கலைன்னு காரணத்துக்காக தேவையல்லாத வேலையெல்லாம் பாக்காதிங்க... சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு பிடிக்க வில்லையென்றால் ஓதுங்கி கொள்ளுங்கள் ஏன் இப்படி புரளி கிழப்பிவிடுறிங்க.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கு சகோதரர்கள் முஹம்மது என்ற அழகிய பெயரில் எழுதும் சகோதரரின் கருத்தை படிக்கும் போது வேதனையே வருகிறது. தீர விசாரித்துவிட்டு கருத்திடுங்கள் என்று தானே குறிப்பிட்டுள்ளேன்... நீங்கள் தீர விசாரிக்க மாட்டேன், அதற்கு அவசியமில்லை என்று மொட்டையாக கூறுவது வேதனையே. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக ஆமீன்..

அவருடைய வருமானத்தை பற்றி கொச்சை படுத்தவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் மீண்டும் அதை பற்றி மட்டுமே பேசுகிறீர்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

இவ்வளவு சம்பளம் தந்தால் தான் பேசுவேன் என்று ஹைதர் அலி ஆலிம் யாரிடமாவது கூறினாரா? இது அப்பட்டமான அவதூறு... அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால்...

ஹைதர் அலி ஆலிம் என்ற நபர் அப்படி என்ன தான் மன்னிக்க முடியாத தவறிழைத்தார்? கொஞ்சம் சொல்லுங்களேன்...

அவரை ஊருக்கு அழைத்தது யார்? அவரை ஆயிசா மகளிர் அரங்கில் பேச வைத்தது யார்? ஏன் இவர்கள் ஊரில் உள்ள மார்க்க அறிஞர்களை வைத்து மார்க்க பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை. அன்று இனித்த ஹைதர் அலி ஆலிம், இன்று மேல் குறிப்பிட்டவர்களின் தவறை சுட்டிக் காட்டியவுடன் அவர் இப்போது கசக்கிறார்கள்.

சம்பளம் வாங்கி அவர் பேசினாலும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவது தவறு என்று தானே உங்களை போன்றவர்கள் சொல்ல வருகிறீர்கள்.


ஊரில் நடக்கும் அனாச்சாரங்களையும், அதிகாரவர்காத்தின் தவறுகளையும், இணைவைப்பு பித் அத்களையும் கண்டிக்காத சம்பளம் வாங்காத மார்க்க பிரச்சாரகர்களுக்கு.. நீங்கள் குறிப்பிடும் சம்பளம் வாங்கி ஊரில் நடக்கும் அனாச்சாரங்களையும், அதிகாரவர்காத்தின் தவறுகளையும், இணைவைப்பு பித் அத்களையும் கண்டிக்கும் ஹைதர் அலி ஆலிம் போன்றவர்கள் எவ்வளவோ தேவைலை..

Unknown said...

அதிரை சித்தீக், வ அலைக்கு முஸ்ஸலாம்..

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை...

உங்கள் கருத்திலிருந்து நான் புரிந்துக்கொள்வது.. ஏதோ ஹைதர் அலி ஆலிம் அவர்கள் அதிரையிலிருந்து கொண்டு ஏதோ நான் மட்டும் தான் பயான் செய்வேன் என்று அடம்பிடிப்பது போல் உள்ளது. அறிவுக்கு பொருந்தாத வாதம் அதிரை சித்தீக் அவர்களே...

****மனோ தத்துவ ரீதியாக
ஹைதரலி ஆலிம் அவர்களுக்கு
பாதிப்பு வந்து விட்டது ..*****

ஹைய்... இது என்ன புது கதையா இருக்கு? எந்த மருத்துவ
மனையிலிருந்து சான்றிதழ் வாங்கி வைத்துள்ளீர்கள்? ஊரில் யாரும் சொல்லவே இல்லை...

கொஞ்சம் நிதானமாக அறிவுப்பூர்வமாக கருத்திடுங்கள் அதிரை சித்தீக் அவர்களே.. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக...

Unknown said...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது… ******ஊரில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது ஹைதர் ஆலிம் இதில் சம்மந்தப்படும் சூழ்னிலை வந்துவிட்டதால் ஊரின் நலன் கருதி ஹக்கை சொல்லிவிட்டு, மக்காவில் குழப்பம் வந்தபொழுது ஸல்லல்லாஹு அவர்கள் ஹிஜிரத் செய்தது போல் ஆலிம் அவர்களே முடிவெத்தால் என்னை போன்ற ஆலிமின் நலம் விரும்பிகளுக்கு சந்தோசம்*****

மார்க்க அறிவில்லாதவர் பேசுவது போல் உள்ளது உங்கள் கருத்து...

உங்கள் கருத்துபடி பார்த்தால்.. ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மட்டும் ஹக்கில் உள்ளார் என்ற நற்சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள்.

ஆனால் நீங்கள் சொன்ன வரலாற்று உதாரணத்தை வைத்து பார்த்தால் ஊரில் இருக்கும் அதிரைவாசிகள் அனைவரும் மக்கத்து குரைஷி காபிர்களா?

******உள்ளூர் பிரச்சனையில் உள்ளூர் காரர்கள் பேசிதீர்ப்பதுதான் நல்லது என்பதே என் கருத்து
அதிரை வாசிகளின் பழக்கம் வெளியூர் முஸ்லீம்களை நட்போடு பழகுவார்கள் சம்மந்தம் கலக்கமாட்டார்கள் *****

அப்படியானால்... ஊரில் உள்ள விடையங்கள் மார்க்க தீர்ப்பு சொல்லும் முஹம்மது குட்டி ஆலிம், பொது அமைப்பான பைத்துல்மாலின் தலைவராக இருக்கு மரியாதைகுறிய பரகத் சார் ஆகியோரை புரந்தள்ள சொல்லுகிறீர்களா?

Ebrahim Ansari said...

எப்போதாவது ஊருக்கு வந்து குறைந்த நாட்கள் மட்டுமே தங்கிப்போகும் எங்களைப்போல் சிலருக்கு சில சந்தேகங்கள். தெரிந்தவர்கள் பதில் சொன்னால் நன்றியுடன் புரிந்துகொள்வோம்.

இவ்வளவு மார்க்க அறிஞர்கள் வசிக்கும் ஊர்
மாவட்டத்தின் மார்கஸ் - பத்வா என்கிற மார்க்கத்தீர்ப்பு வாங்க மற்றவர்கள் வரும் ஊர் -
தமிழகத்திலே பெரும் எண்ணிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களின் முதன்மை பட்டியலில் உள்ள ஊர்
பல்வேறு ம்தராசாகள் நிறைந்த ஊர்
மார்க்க கல்வி கற்பதர்காகவே தனது பிள்ளைகளில் ஒருவரை ஒதுக்கும் உதாரண நன்னெறி பெருமை பெற்ற ஊர்
முஸ்லிம்கள் மட்டுமே கட்டுக்கோப்பாக இடைக் கலப்பின்றி வீடுகட்டி வாழும் ஊர்
வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை பெற்ற ஊர்
புஹாரி ஷரீப் முழங்கும் ஊர்

இவ்வளவு பெருமை பெற்ற ஊரில் மார்க்க பயான் செய்ய ஒரு வெளியூர்காரரைத் தேடி போயிருக்க வேண்டிய அவசியம் என்ன? ஒன்றல்ல மூன்று நான்கு இடங்களில் அவரை மட்டுமே பணம் கொடுத்து பயான் செய்ய சொன்னது ஏன்? வாராவாரம் ஒரு மாறுதலுக்காகக் கூட பயான் செய்ய இவ்வளவு பெரிய / நிறைய ஆலிம்கள் நிறைந்த அதிரையில் ஆள் இல்லையா அல்லது தெரியாதா? இங்குள்ள ஆலிம்கள் படித்ததெல்லாம் பாத்திஹா ஓதமட்டும்தானா?

இதே கேள்விதான் சித்தீக் பள்ளி விஷயத்திலும். பல பெருமகன்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் ஒரு வெளியூர் ஹஜரத்தை தலைவராக நியமிக்க வேண்டிய தேவை என்ன? (அப்படி நியமித்தவர் -உவைஸ் ஹாஜியார் அவர்களை உயிருடன் இருக்கும்போதே நீக்கிவிட்டு- கண்ணியத்துக்குரிய அப்துல் காதர் ஆலிம்சா என்று கூறுகிறார்கள்.)

நம்முடைய பொடுபோக்கா? அல்லது அவரது திறமையால் நாம் ஈர்க்கப்பட்டு அவருக்கு நிறைய பொறுப்புக்கள் கொடுத்தோமா? கொடுத்த பொறுப்புக்களை நாம் இப்போது தட்டிப் பறிக்க காரணம் அவரது தவறா? அல்லது நமது மனங்களில் எழுந்த மாற்றங்களா? அல்லது அவர் சுட்டிக்காட்டிய தவறுகளை நம்மால் தாங்கமுடியாமலா? அவர் சுட்டிக்காட்டியவைகள் உண்மையிலேயே நாம் இழைத்த மார்க்கவிரோத தவறுகள்தானா?

மற்றொன்று இங்கு குறிப்பிட விருப்பம். வெளியூர்- உள்ளூர் மண்ணின் மைந்தர் என்பன எல்லாம் வளரும் சமுதாயத்தில் வழக்கொழிந்துபோன ஒன்று. வெளியூறார் தலைமை நிலைக்கு வரக்கூடாது என்பதற்கு அதிரை ஒன்றும் பம்பாய் அல்ல. இங்கு சிவசேனாவும் ஆட்சி செய்யவில்லை.

Anonymous said...

நமக்குள் பேசித்தீர்வு கண்டிருக்க வேண்டிய விசயத்தை பொதுவில் பதிவிட்டும்,கருத்திட்டும் முடிவின்றி நீண்டு கொண்டிருக்கும் இந்தப் பதிவில் பின்னூட்டமிடாமல் 'வெட்டி'யாக இருப்பது வலைப்பூ தர்மமல்ல என்பதால் எனது கருத்துகள்.

1) இப்பிரச்சினையை வலையேற்றிய நண்பர்களுக்கும் இணைய ஸலஃபி சகோ.முஹம்மது யூசுப் அவர்களுக்கும், அவரது பதிவைப்பிடித்து கருத்திட்டுக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் முதலில் "தற்காலிக" என்பதன் பொருள் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில், கண்ணியத்துக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் கலகம் ஏற்படுத்தும் என்பதால் விதிக்கப்பட்டது 'தற்காலிகமாக தடை' என்பதை எவரும் 'கவனத்தில்' கொண்டதாகத் தெரியவிலை. தெரியாமல்தான் கேட்கிறேன். சுமூகத்தீர்வு ஏற்படும்வரை 'தற்காலிகமாக' பயான் நிறுத்தப்பட்டால் குடியா மூழ்கிப்போய்விடும்?

2) 'ஆதாயத்துக்கு பயான்' செய்யும் ஆலிமுக்கும், சொத்துப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவருக்கும் இடையேயான தனிப்பட்ட பகை நீதிமன்றம் வரை சென்றபிறகும்,இருவரும் குடியிருக்கும் முஹல்லா சங்கத்தினர் இனிமேலும் நீடிக்கவிடுவது நல்லதல்ல என்ற சமாதான நோக்குடன், ஆலிமின் வீடுதேடிச் சென்ற பின்னரும் அவமதிக்கும் வகையான அணுகுமுறையே அந்த தற்காலிக தடைக்கும் காரணம் என்பதை புல்லரிக்கும் பின்னூட்டங்களால் சொற்சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் அன்பர்கள் 'கவனத்தில்' கொண்டதாகத் தெரியவில்லை.

3) ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்ததும், சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி, ஆயிஷா மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம் ஆகியவற்றில் கவுரவமான பணிகொடுத்து அழகுபார்த்ததும் இதே 'சம்சுல் இஸ்லாம்' சங்கத்திற்குட்பட்ட, கொஞ்சம் கொச்சையாகச் சொல்வதெனில் 'நடுத்தெருவான்' என்பது ஸலஃபிகளுக்கு தெரிந்திருக்குமா? என்று தெரியவில்லை.

4) பிணக்கு கொண்டிருக்கும் சகோதரர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள் - முஃமீன்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களே - நன்மையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் 'தொண்டை கிழிய' பயான் செய்யும் ஓர் ஆலிம், சங்க நிர்வாகிகள் சமாதானத்திற்கு அழைத்தும் முரண்டு பிடித்து, சில இளைஞர்களுடன் சமரசம்பேச முன்வந்ததும் எவ்வகையில் நியாயம் என்று எவரும் கேட்டதாகத் தெரியவில்லை.

5) "ஹைதர் அலி ஆலிம் பதில் சொல்வாரா?" என்று 6 வருடங்களுக்கு முன்பு நோட்டீஸ் விநியோகித்தவர்களுக்கும் இனிக்கும் அதே ஹைதர் அலி ஆலிம், "வானத்துக்கு மேலேயும், பூமிக்குக் கீழேயும் உள்ளவற்றை மட்டுமே பேசும் தப்லீக்வாதி என்பதை அறிவார்களா என்று தெரியவில்லை.

6) சித்தீக் பள்ளிக்கு மட்டுமின்றி காட்டுப்பள்ளிக்கும் தலைவராக ஹைதர் அலி ஆலிம் அவர்களையே ஏகமனதாக பின்னூட்டங்கள் மூலமே நியமித்து விட்டால் நமதூரில் அசைக்க முடியாத புரட்சி ஆலிமை அடையாளம் காட்டிய பேறு கிடைக்கும்.

இனிமேல், ஊரு ஒற்றுமை, ஒலக ஒற்றுமை என்றெல்லாம் யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்பதை இப்பதிவின் சில பின்னூட்டங்கள் மூலம் அறிந்து "குழப்பம் விளைக்கும் சைத்தானின் சூழ்ச்சி 'வலை' யில் எமது சகோதரர்கள் வீழ்ந்தது வேதனையளிக்கிறது. பசித்திருந்தும் விழித்திருந்தும் போனவாரம்வரை சம்பாதித்த நன்மைகள் வலையுக ஃபித்னாவால் பறிபோகாமலிருக்கட்டும்.

வஸ்ஸலாம்.

இப்படிக்கு,
N.ஜமாலுதீன்
துபாய் - 050/4737200

Anonymous said...

continue...

பின்னூட்டங்களில் சிலர் தவறான கருத்தை விதைக்கின்றனர். அதாவது ஹைதர் அலி ஆலிமின் பயானுக்கு விதிக்கப்பட்ட 'தற்காலிக தடை' அவர் சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தைக் கிளப்பினார் என்பதால் அல்ல. அதனால் எழுந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டி சமாதானத்திற்கு அழைத்தபோது சங்கத்தின் நிர்வாகிகளை அவமதித்ததே காரணம் என்றே அறிகிறேன்.

பகைமூட்டி குளிர்காயும் படியாக அவர் 'வெளியூர்காரர்' என்பதாலேயே பயானுக்குத் தடை என்பது பொருத்தமற்ற குற்றச்சாட்டு. ஏனெனில், வெளியூரிலிருந்து அழைத்து வந்தவர்கள்தான் தற்காலிக தடையையும் விதித்தார்கள். இது சமாதான முயற்சியின் தொடர்ச்சியாகவே கருத வேண்டும்.

இப்படிக்கு,
N.ஜமாலுதீன்
துபாய் - 050/4737200

M.I.அப்துல் ஜப்பார் said...

ஹைதா் அலி ஆலிம் அவா்கள் வெளியூர் என்று இப்பொழுதுதான் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு தெரியுமா?

அல்லாஹ்வின் பள்ளியின் இடத்தை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டு எடுக்க முடியாதவர்கள் அதை தவறு என்பதை சொன்னதற்காக தடைவிதிப்பதா?

பாபர் பள்ளி இடத்தை சங்பரிவர்கள் அபகரித்தால் கொந்தளிக்கும் உலமாக்கள் பொதுமக்கள் சித்தீக் பள்ளி இடத்தை முஸ்லிம் அபகரித்தால் வாய்முடி மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?

பள்ளிவாசல் இடத்தை அபகரித்தவர்கள் ஏழைகளும் இல்லை, மார்க்க அறிவு இல்லாதவர்களும் இல்லை ஊருக்கு உபதேசங்கள் செய்யும் தப்லீக் உலமாக்கள் இது விசயமாக வாய்திறக்காதற்கு காரணம் என்ன?

மதினாவி்ல் ஆட்சி செய்த நபி (ஸல்)அவர்கள் மக்காவில் இருந்துவந்த வெளியூர்காரர்கள் தான் அதற்கு பின்பு மதினாவில் ஆட்சி செய்த நான்கு கலிபாக்களும் வெளியூர் வாசிகள் தான் என்பதை சங்க நிர்வாகிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

சங்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் இந்த பொறுப்புகளுக்கு நியமித்தவா்களுக்கு விசுவாசமாக இப்பொழுது நடந்துக்கொள்கிறார்களா?

ஹைதா் அலி ஆலிம் அவர்கள் இப்பொழுது தெளிவாக விளங்கி இருப்பார்கள் சத்தியத்தை எப்பொழுது சொன்னாலும் எதிர்பார்கள் நீங்கள் வந்தவுடன் சொன்னாலும் எதிர்த்து இருப்பார்கள் இன்னும் 10 வருடங்கள் பின்பு சொன்னாலும் எதிர்ப்பார்கள் இதற்கு பின்னரும் நீங்கள் இரண்டு நிலையில் இருக்காதீர்கள் சொல்வதை தெளிவாக சொல்லிவிடுங்கள்

mohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒமர் தம்பி எப்படி போலீஸ் கோர்ட்டு போகலாம் ஏன் யாரும் இதை கண்டிக்கவில்லை எனக்கு ஒன்றும் புரிய வில்லை? ஆலிம்கள் எல்லாரும் தீவிரவாதியா?

தவறு செய்யாத ஒரு ஆலிமைப்பற்றி தேவை இல்லாமல் விமர்ச்சனகளும் வதந்திகளும் தேவை தான உண்மையை எடுத்து சொன்னதற்கு இதுதான் பரிசா! உண்மையை எடுத்து சொன்ன ஆலிம் தீவிரவாதியா!

ஜெ. முகமது புகாரி தமாம்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் N ஜமாலுதீன்,

பொதுவாக ஊர் செய்திகள் பற்றி நீங்கள் எதையும் தீர விசாரித்துவிட்டு இரு தரப்பு கருத்தை பெற்ற பின்பு தான் எதையும் எழுதுவீர்கள். ஆனால் உங்கள் கருத்த வாசிக்கும் போது இரு தரப்பு கருத்துக்களை பெற்று தான் எழுதியிருக்கிறீர்களா என்ற சந்தேகம் வருகிறது.

******பின்னூட்டங்களில் சிலர் தவறான கருத்தை விதைக்கின்றனர். அதாவது ஹைதர் அலி ஆலிமின் பயானுக்கு விதிக்கப்பட்ட 'தற்காலிக தடை' அவர் சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தைக் கிளப்பினார் என்பதால் அல்ல. அதனால் எழுந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டி சமாதானத்திற்கு அழைத்தபோது சங்கத்தின் நிர்வாகிகளை அவமதித்ததே காரணம் என்றே அறிகிறேன்.******

சகோதரர் LMS யூசுப் பதிந்துள்ள இந்த கட்டுரையின் பின் வரும் பகுதியை படித்துவிட்டு தான் உங்கள் கருத்தை பதிந்துள்ளீர்களா?

ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர், துணை செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.

பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியிலிருந்து சென்று விட்டார்கள், இது தான் நடந்த சம்பவம்.


இங்கு சிலருடைய பேச்சுக்கு சங்கத்தை அவமானமதித்தார் என்று வைத்து கொள்வோம். சித்தீக் பள்ளி விவகாரத்தில் சமாதானம் பேச சென்றார்கள் என்று சொல்லுகிறீர்கள், சமாதான பேச்சுக்கு ஏன் அவரை மட்டும் சந்திக்க வேண்டும்? இதற்கு தலைவர், துனை தலைவர், செயலாளர், துனை செயலாளர், பொருளார் போன்ற நிர்வாகிகள் போனால் என்ன? ஏன் பேரூராட்சி தலைவர், பேராசிரியர், திருப்பூர் முசெமு சபீர் செல்ல வேண்டும்?

இங்கு கவனிக்க பட வேண்டியவைகள் இரண்டு...

1) சங்க நிர்வாகிகள் சந்திக்க சென்றார்கள், சிலருடைய கருத்துபடி சந்திக்க சென்றவர்களை ஹைதர் அலி ஆலிம் அவமதித்தார் என்று வைத்துக் கொள்வோம் ஆனால் இங்கு அவர் அவமதித்தது சென்றவர்களையே தவிர ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தத அல்ல...

2) சங்கத்தை அவமதித்தார் என்றால் என்ன என்பதை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்... ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஓர் பொதுகுழு, செயற்குழு அல்லது நிர்வாக குழு கூட்டம் கூட்டி ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் சமாதானம் பேசுவதற்கான தீர்மானம் போட்டு, அதற்கு சங்கத்தத சேர்ந்த யார் யார் எல்லாம் செல்லாம் என்று முடிவு செய்து, கூட்டத்துக்கு வந்தவர்களிடம் மினிட்ஸ் புத்தகத்தில் கையெழுத்தி வாங்கி, ஹைதர் ஆலிமை அழைத்து அல்லது சென்று பார்க்க முற்படும் போது அவர் பார்க்க சென்றவர்களை அவமதித்தால் சங்கத்தை அவமதித்தாக சொல்ல வேண்டுமே தவிர மேல் சொன்ன முதல் விசயத்தை வைத்து சங்கத்தை மதிக்கவில்ல சங்கத்தை மதிக்க வில்லை என்று சொல்லுவது சந்தர்ப்பவாத வாதம் என்று சொல்லுவதை வேறு என்ன சொல்ல முடியும். நீங்களே சொல்லுங்கள் சகோதரர் ஜமாலுதீன்.

ஹைதர் அலி ஆலிம் அவர்கள் இஷாவுக்கு பிறகு தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் செய்து வருகிறேன் என்று சொல்லியும் வழுக்கட்டாயமாக அவசர அவசரமாக அன்றைய தினமே வீடு தேடி வந்து பேசும் அளவுக்கு சித்தீக் பள்ளி விவகாரத்தில் அன்றைய தினமே, அதற்கு முந்திய தினமோ எந்தவித பிரச்சினையும், அசம்பாவிதமும் நடக்கவில்லையே.. அவசர அவசரமாக திருடனை தேடி பிடிப்பது போல் தேடிபிடித்து சமாதானம் செய்ய அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?

Unknown said...

*****1) இப்பிரச்சினையை வலையேற்றிய நண்பர்களுக்கும் இணைய ஸலஃபி சகோ.முஹம்மது யூசுப் அவர்களுக்கும், அவரது பதிவைப்பிடித்து கருத்திட்டுக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் முதலில் "தற்காலிக" என்பதன் பொருள் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில், கண்ணியத்துக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் கலகம் ஏற்படுத்தும் என்பதால் விதிக்கப்பட்டது 'தற்காலிகமாக தடை' என்பதை எவரும் 'கவனத்தில்' கொண்டதாகத் தெரியவிலை. தெரியாமல்தான் கேட்கிறேன். சுமூகத்தீர்வு ஏற்படும்வரை 'தற்காலிகமாக' பயான் நிறுத்தப்பட்டால் குடியா மூழ்கிப்போய்விடும்?******

சகோதரர் ஜமாலுதீன்... நீங்கள் தற்காலிக தடை என்ற வார்த்தை அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் மட்டும் போடப்பட்டது, தயவு செய்து சகோதரர் LMS யூசுப் எழுதிய இந்த கட்டுரையோடு இரண்டு கடிந்தங்கள் இணைக்க பட்டுள்ளது அதில் எங்கையாவது தற்காலிக என்ற வார்த்தை உள்ளதா? அதன் பிறகு தற்காலிக என்ற வார்த்தைக்கு விளக்கத்தை நீங்களே தாருங்கள்...

சகோதரர் LMS யூசுபின் இந்த கட்டுரையில் பின் வரும் வரிகளை படித்தீர்களா?

நேற்று முன் தினம் 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துணை தலைவர், துணை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடிதத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை.


புரிகிறதா சங்கத்தின் அப்பட்டமான இரட்டை நிலைப்பட்டை...

இது மட்டுமா...

மேலதெரு ஜும்மா பள்ளி நிர்வாகம் உட்பட 9 சங்ககளுக்கு அவசர அவசரமாக இது போன்ற கடிதங்கள் அனுப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு அதிரை அனைத்து முஹல்லா கூட்டத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பற்றிய செய்தியை பேசி அவமானபட்டது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்.

தக்வா பள்ளியில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் குழப்பம் ஏற்படுத்த நேற்று ஊரில் உள்ள லெப்பைமார்களை தூண்டிவிட்டு தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இப்படி இன்னும் பல சூழ்ச்சிகள் செய்யப்படுகிறது..

அரசியல், பணம் இவற்றின் ஆணவத்தால் ஊரில் நடைபெற்று வரும் தவறுகளை வெளிக் கொண்டு வருபவர்களை தயவு செய்து discourage பண்ணும் வகையில் உங்களிடமிருந்து வந்துள்ள இந்த கருத்து எங்களை போன்ற வாசகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

பலரிடம் இறையச்சம் என்பதெல்லாம் வெறும் பேச்சு என்பது அன்மை கால அதிரை நிகழ்வுகளே சாட்சி.. அல்லாஹ்வின் சாபம் ஏற்படாமல் இருக்க நாம் எல்லோரும் இத்தருணத்தில் துஆ செய்ய வேண்டும்.


அநீதிக்கு எதிராக ஒரு தளம் செய்யாத ஒன்றை தைரியமாக மற்றொரு தளம் செய்கிறது என்பதை ஆதரிக்காவிட்டாலும், விமர்சனம் செய்யாமல் இருந்தால் இன்னும் பல தவறுகளை சுட்டிக்காட்ட வழி பிறக்கும். அது ஊருக்கும் சமுதாயத்திற்கு நன்மை தரும்.அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால்..

ஹைதர் அலி ஆலிம் சர்ச்சையில் தைரியத்துடன் செய்தியை வெளியிட்ட அதிரைநிருபர் வலைத்தளத்திற்கு பாராட்டுக்கள்.

Unknown said...

*****3) ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்ததும், சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி, ஆயிஷா மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம் ஆகியவற்றில் கவுரவமான பணிகொடுத்து அழகுபார்த்ததும் இதே 'சம்சுல் இஸ்லாம்' சங்கத்திற்குட்பட்ட, கொஞ்சம் கொச்சையாகச் சொல்வதெனில் 'நடுத்தெருவான்' என்பது ஸலஃபிகளுக்கு தெரிந்திருக்குமா? என்று தெரியவில்லை.
******

நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களின் (சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி, ஆயிஷா மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம் ) தவறுகளை மறைமுகமாகவும், பகிரங்கமாகவும், நேரிலும் இவர்கள் அனைவரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த முயற்சித்தவர் தான் இந்த ஹைதர் அலி ஆலிம், தவறுகளை சுட்டிக்காட்டிய ஒரே காரணத்துக்காக தான் அவரை ஊரைவிட்டு ஒரேடியாக துரத்த நீங்கள் மேலே குறிப்பிட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஒரு சில சுயநலவாதிகள் முயற்சிக்கிறார்கள். இது தான் உண்மை..

சூழ்ச்சியாளர்களுக்கு எல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்பதை மட்டும் நம் மனதில் நிலை நிறுத்திக்கொள்வோமாக...

Adirai pasanga😎 said...



சகோதரர் B.ஜமாலுதீன்,அதிரை தம்பி, அதிரை ஜாபர் - கருத்துக்கள் சீர்தூக்கிப்பார்க்க வேண்டியவைகள்

\\ஹைதர் அலி ஆலிம் சர்ச்சையில் தைரியத்துடன் செய்தியை வெளியிட்ட அதிரைநிருபர் வலைத்தளத்திற்கு பாராட்டுக்கள்///

Naina said...

Please remove all comment box. It is danger among our community and it is allowing growth of argument.

Shameed said...

இத்தனை அமளி துமளியிலும் (தற்க்காலிக) தடை செய்ய சொல்லி கடிதம் கொடுத்த சம்சுல் இஸ்லாம் சங்கம் எந்த வித தன்னிலை விளக்கமும் கொடுக்காமல் "சும்மா" இருப்பது ஏனோ ?

இத்தனைக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு என்று தனி பிளாக்கும் உண்டு

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
நமது சமுதாயத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா!!
பின்னோட்டம் யுத்தத்தில் இரத்தம் சிந்தாமல் பின்னூட்டமிடும் நபர்கள்..கவணத்திற்கு...

நமது சமுதாயத்தை அழிக்க இஸ்ரேல் போன்ற யூதர்களின் சதி தேவையில்லை... நமக்கு நாமே போதும்....
இந்த பின்னோட்ட யுத்தத்தில் சில கயவர்கள் குளிர்காய்ந்து கொண்டு இருக்கிறார்கள்...
இதில் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் திருக்குரான் வசனத்தையும் பதிந்து பித்னாவை உண்டுபண்ணுகிறார்கள்.
மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு இதற்கு என்ன தீர்வு காண போகிறோம் என்பதை பாருங்கள்.....
தயவு செய்து இது போன்ற சர்ச்சை குறிய பதிவுகளை பதிந்து பிறர் உணர்வுகளை தூண்டி நமக்குள் பிரிவிணைகளை உண்டு பண்ணக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...

இப்படிக்கு
அப்துல் ஹமீது

Saleem said...

சங்கத்தின் விளக்கம் :http://adiraipost.blogspot.in/2012/09/blog-post_3.html

அபூ சுஹைமா said...

அதிரை நிருபர் குழுவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

புனைபெயரில் எழுதுவதை விமர்சனம் செய்து ஊடக போதை http://adirainirubar.blogspot.in/2011/12/blog-post_08.html என்ற தலைப்பில் அதிரை நிருபரில் கட்டுரை வெளியானது. பின்னர் போலி புனைபெயரில் எழுதுவதுதான் தவறு; அறியப்பட்ட புனைபெயரில் எழுதலாம் என விளக்கம் அளித்தீர்கள். ஆனால் அதற்கு மாற்றமாக, பலமுறை கோரப்பட்டும் தான் யாரென வெளியில் அறிவித்துக் கொள்ளத் தயங்கும் அதிரை தம்பி என்பவரின் பின்னூட்டத்தையும் சகோ. ஜமாலுத்தீன் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தி வரும் புனைபெயரான அதிரைக்காரன் என்பதைப் போலியாக ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டவரின் பின்னூட்டத்தை அனுமதித்திருப்பதில் இருந்து புனைபெயர் மற்றும் போலி புனைபெயர் தொடர்பான தங்களின் முந்தைய கருத்தில் இருந்து அதிரை நிருபர் மாறிவிட்டது என்று கருதலாமா? அல்லது வேறு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா? அதிரை தம்பி யாரென தாங்கள் அறிந்தால் அதை இங்கு கூறவும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,

இந்த பதிவில் குறிப்பிட்டது போன்றே...

///இந்த பதிவு எந்த தனிநபரையோ, ஒரு அமைப்பில் உள்ளவர்களையோ உயர்த்தி / தாழ்த்தி எழுதப்பட்டதல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தப்பட்டது.//

கருத்திட்ட சகோதரர்களின் ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்களை அனுமதித்தோம், ஒரு சில கருத்துக்களில் மட்டுறுத்தல் செய்தோம்.

இது பின்னூட்டங்களில் பிரிவினைக்கு கோடுபோடுவது போன்ற தோற்றத்தை சில சகோதரர்கள் எடுத்து வைத்தார்கள் நிச்சயமாக அப்படியில்லை.

இந்த பதிவு அதிரையில் பெரும்பாலான வலைத்தளங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததையும் அறிவோம், ஆக! தெளிவுற வேண்டியே அனுமதித்தோம்.

இத்துடன் இந்த பதிவுக்கான கருத்துரைகள் நிறுத்தப்படுகிறது.

மேலும் தகவல் பறிமாற்றத்திற்கு editor@adirainirubar.in

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அன்பு (அதிரைநிருபர்) வாசக நேசங்களே :

கடந்த 01-09-2012 அன்று நம் அதிரைநிருபரில் மார்க்க பிரச்சாகரருக்கு சம்சுல் இஸ்லாம் அவசர தடை ஏன்? என்ற பதிவு பதியப்பட்டது.

இந்த பதிவால் சிலருக்கு மாற்று கருத்து இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் சிலருக்கு மனதளவில் சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் இந்த பதிவேற்றம் செய்ய முக்கிய காரணம், எங்களுக்கு அனுப்பித் தந்த பதிவில் கண்டிருந்த காரணங்களே.

இரு தரப்பு ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்களை அனுமதித்ததின் நோக்கம் என்ன?

சத்தியத்தை சொல்லும்போது ஏற்படும் இடர்கள் எதிர்ப்புகள் எவ்வாறு ஏனைய மார்க்க பிரச்சாரகர்கள் பலருக்கு நிகழ்ந்ததோ அதே நிலை தான் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல.

ஊரில் நடைபெரும் இணைவைப்பு, மவ்லுது, இன்னும் பிர அனாச்சாரங்கள், வட்டி, விபச்சாரம், சொத்து அபகரிப்பு, அரசியல்வாதிகளின் அநீதிச்செயல், ரமழானில் வீண் விளையாட்டுகள் என்று இஸ்லாமிய மார்க்கத்துக்கு புறம்பான செயல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தான் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார் என்ற புகார் போலீஸிலும், நீதிமன்றத்திலும் ஒரு தனி நபரால் கொடுக்கப்பட்டு, ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எண்ணிலடங்கா தொந்தரவு கடந்த சில நாட்களாக கொடுக்கப்பட்டு வருவதை ஊரில் பெரும்பாலோர் அறிவர்.

மீண்டும்...

அதிரைநிருபர் ஊர் அன்றாட செய்திகளை தொடர்ந்து பதிவதில்லை அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை பலமுறை சகோதரர்கள் மத்தியில் எடுத்து வைத்திருக்கிறோம், இருப்பினும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் விசயத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களில் பெரும்பாலும் வேதனைக்குள்ளாக்கியது. சம்பவங்களின் ஒலிப்பேழைகள், சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வந்த மொட்டை கடிதங்கள், காவல்துறை மற்றும் நீதிமன்ற வழக்கு மனுக்கள் என்று பல தகவல்கள் தொடர்ந்து வந்ததால், அதிரைநிருபர் இவ்விசயத்தில் பதிவிட முடிவு செய்தோம்.

மார்க்க பிரச்சாரகருக்கு சம்சுல் இஸ்லாம் அவசர தடை ஏன்? பதிவு வெளியிடுவதற்கு முன்னரே இந்த பதிவை சற்று தாமதமாக வெளியிட முடிவெடுத்தோம். ஊர் செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் அதிரை வலைத்தளங்கள் இச்செய்தியை வெளியிடுகின்றனவா அவ்வாறு வெளியிட்டால் அதுவே போதும் உண்மை வெளிப்பட யார் முன்னின்றாலும் நன்மையே என்ற முடிவில் இருந்தோம். ஆனால், அதிரைத் தளங்களில் எதுவும் சகோதரர் LMS முஹம்மது யூசுப் அனுப்பிய செய்தியின் முழுமையை வெளியிடவில்லை.

Continue....

அதிரைநிருபர் பதிப்பகம் said...

continue... (2/2)

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவை அதிரை வலைத்தளம் ஒன்றில் தற்காலிக முடிவு என்று அறிவித்துவிட்டு, ஊரில் உள்ள அனைத்து முஹல்லா ஜமாத்திற்கு சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பெழிவை நிறுத்துமாறு கடிதங்கள் அதே ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக அனுப்பியதும், இந்த கடிதங்களில் உள்ள முடிவு மூன்று நபர் நிர்வாகிகளால் மட்டுமே எடுக்கப்பட்டது, இந்த நடவடிக்கை நிகழ்வுகள் பற்றி செயலாளர், பொருளாளர் இவர்களுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கப்படவில்லை என்பதை அதிரைநிருபர் குழுவால் உறுதி செய்யப்பட்டது.

ஆகவே மார்க்க பிரச்சாரகர் ஒருவருக்கு அரசியல், பணம் இவைகளை வைத்து திட்டமிட்டே சங்கடங்கள் ஏற்படுத்தப்படுகிறது என்ற நிலைபாட்டிலும். அனைவரின் கண் முன்னே இது அரங்கேறுகிறது என்று தெரிந்திருந்தும் அரசியல் பலம், பண பலத்திற்கு அஞ்சி உண்மையை மறைப்பதற்கு துணைபோகாமல், அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக இதன் தகவல்களை பதிவிட துணிந்தோமே தவிர பரபரப்பு உண்டாக்க வேண்டும் என்று எண்ணம் துளியும் இல்லை அதிலிருந்து விளகியிருப்பதையே என்றுமே விரும்புகிறோம் - அதிரைநிருபரின் முகப்பு வாசகமே தெளிவு படுத்தும் "அமைதியும் ஆளுமை"

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மிக்க பாரம்பரியமிக்க சங்கம் - அனைவரும் அறிந்ததே, சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் தன் தவறான அணுகுமுறையால் பல்வகை சந்தேகங்களுக்கு இடம் கொடுத்து அநீதியிழைக்க உடண்படுகிறதே என்ற ஒரு ஆதங்கத்தாலும் மட்டுமே இந்த பதிவை வெளியிட அனுமதித்தோம்

நினைவூட்டுகிறோம், அரசியல் பலம், பண பலம், குடும்பம், பாரம்பரியம் இவைகளை வைத்து உண்மை நிலையை மறைக்கும் எவ்வித சூழலுக்கும் நாங்கள் துனை போகமாட்டோம் (அல்லாஹ் பதுகாப்பானாக) இதனை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

அடுத்து...

சுய அறிமுகமில்லாதவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அதில் என்றுமே உறுதியாக இருக்கிறோம். சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தொடர்பாக இரு தரப்பிலிருந்து பெறப்பட்ட நியாயமான பின்னூட்டங்கள் தனிமனித தாக்குதல் இன்றி மட்டுறத்தளுக்குட்படுத்த்தபட்டும் வெளியிடப்பட்டது.

இந்த விளக்கத்தோடு பதிவுக்கான பின்னூட்ட பெட்டி முடக்கப்படுகிறது.

உங்களின் மேலான கருத்துக்களை தனி மின்னஞ்சலில் அனுப்புங்கள். comments@adirainirubar.in

அதிரைநிருபர் குழு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு