Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுத்தும் - பேச்சும்...! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2012 | , , , , ,

மனித சமுதாயத்தில் எழுத்தாளர்.., பேச்சாளரின் பங்கு ஓர் ஆய்வு..!

மனித வளத்திற்கு அறிவுசார் உலகின் பங்கு மிக அபரிதமானது..! பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை அறிவுகளைப் புகட்டும் கருவியாக எழுத்தும் பேச்சும் எவ்வாறு அமையப் பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கற்கால மனித சமுதாயத்தின் தேவைகளின் தேடல் அன்றாட அத்தியாவிசயத்தை சார்ந்ததாக இருந்தது. அன்றாடம் உண்ண உறங்க தேவை சார்ந்தவைகளாக இருந்தது. கொடிய மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் முழு கவனமும் இருந்தது. அந்தத் தேடலின் விளைவு மனித இனம் வாழ தகுந்த நகர அமைப்பு, ஆற்றங்கரை ஓர குடியிருப்பாக அமைந்தது. 

கொடிய மிருகங்களிடமிருந்து மீண்ட மனிதன் மனிதனுக்குள் உள்ள கொடிய குணத்திடமிருந்து மீள அறிவு புகட்ட அவசியமேற்பட்டது. அறிவு தேடலின் முக்கிய கண்டு பிடிப்புதான் மொழி தனது தேவையைக் கூற, மற்றும் எச்சரிக்க ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்தியை எடுத்துச் செல்ல மொழி இன்றி அமையாததாய் ஆனது. களத்தின் அவசியம் மொழி என்றானதும் அந்த மொழிக்கு எழுத்து வடிவம் அவசியம் ஆனது. அந்த தேடலில் வெற்றி கண்ட மனித இனம் எழுத்தின் மூலம் பதிவுகளை மனித சமுதாயம் வருங்கால சந்ததிகளுக்கு விட்டுச்சென்றது. இந்த பதிவு துறையின் பங்கு அறிவு சார் உலகிற்கு இன்றி அமையாததாய் அமைந்து விட்டது என்பது உண்மையானது.

எழுத்துலகமும் – எழுத்தாளரும்.

இன்றைய கால கட்டத்தில் முதல் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை அறிவு ஜீவிகளின் படைப்புகள் பாடம். எழுத்தாளர்களின் படைப்பு அங்கீரிக்க படுவதென்பது அவ்வளவு சுலபமல்ல. எழுதுபவரை விட எழுத்தை நுகரும் வாசகர்கள் நுன்னிய அறிவுடைவர்களாக இருக்கிறார்கள். எழுத்தை படிக்கும் ஒவ்வொருவரும் எழுத்தாளரின் எண்ணங்களை தன் இதய ஏட்டில் பதிந்து கொள்கிறார்கள் என்றால் மிகையாகாது. எனவே, எழுத்தாளர்கள் தனது படைப்பை வெளியிடு முன் பலமுறை சரி பார்ப்பான் அப்படி படைக்க பட்ட ஆக்கம் மக்களிடம் சென்றடைய பல காலமாகும். பண்பட்ட எழுத்தாளர்கள் மட்டுமே எழுத்துலகில் பிரகாசிக்க முடியும். அதிகம் படிக்கும் வழக்கம் உடையவர்கள் அமைதியாக இருப்பார்கள். எழுத்துலகின் முன்னேற்றம் நவீன யுக்திகளால் இக்காலத்தில் சற்று மந்த நிலை அடைத்துள்ளது.

மேலை நாடுகளில் உள்ள பெரும் அரசியல் தலைவர்கள் தனது ஒய்வு  காலங்களில் தனது அனுபவங்களை ஒரு நூலாக வெளியிட்டு பெரும்காசு பார்த்து விடுகிறார்கள் அந்த புத்தகம் உலகில் பெரிய அரசியல் தாkகத்தை ஏற்படுத்துவதாக அமைந்து  விடும்எழுத்துக்களால் ஏற்படும் மாற்றம் மிக பெரியதாக இருந்தாலும் அதிரை நிருபரின் தாரக மந்திரம் அமைதியின் ஆளுமை எழுத்துலகதிற்கு பொருந்தும்.

பேச்சின் வீரியம்

ஆதி மனிதனின் கண்டு பிடிப்பான மொழி எப்போது உருவானதோ அன்றே பேச்சின் வீரியம் உலகில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது. கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பார்கள். அது போன்று மொழி தோன்றிய காலம் தொட்டே மக்களை ஈர்க்கும் தன்மை பேச்சுகலைக்கு உண்டு.

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ராணுவத்தினர் போருக்கு செல்லும் முன் அவர்களுக்கிடையே படை  தளபதிகளால் போருக்கான பேருரை வழங்க படும் அந்த பேச்சு ஒவ்வொரு வீரனின் உள்ளத்திலும் தன் உயிரை விட நாட்டின் வெற்றியே பெரிது என்கிற உணர்ச்சி வெள்ளத்தை அள்ளி தரும்  ஒன்றாக அது அமையும் ..அதே போன்று ..நம் நாட்டில் இருக்கும் பல் வேறு அரசியல் கட்சிகளாகட்டும் அதில் உள்ள பல்லாயிர கணக்கான தொண்டர்கள் தனது தலைவனுக்காக கட்சிக்காக தொண்டர்கள் உயிரையும் கொடுக்க துணிவார்கள்..! அந்த உணர்ச்சியைத் தூண்டிவிடும் ஒரே கருவி பேச்சு கலைதான். 
  • எழுத்தாளனின் எழுத்து பிரசவிப்பது மனித பிரசவம் போன்றது. அவ்வளவு இலகுவாக முழுமை பெற்று வெளிவராது. ஆனால், பேச்சாளரின் பேச்சு கோழி முட்டையிடுவது போன்றது வில்லிலிருந்து அம்பு வெளியாவது போன்று மிக இலகுவானதும், இலகுவாக வெளிவரகூடியது.
  • எழுத்தாளர் என்ன எழுதினாலும் அதை நுகரும் வாசகர் ..படித்தவர்கள். மிகவும் கவனமாக பகுத்தறிந்து நல்ல விசயமாக இருந்தால் ஏற்பார்கள், இல்லையெனில் இவர் எதோ எழுதுகிறார் ஏற்க தக்கதல்ல என்று நிராகரித்து விடுவார்கள். எழுத்தாளன் என்னதான் உணர்ச்சி பூர்வமான எழுத்துக்களை எழுதினாலும்.
  • அவ்வளவாக போய் சேராது தனது உணர்வுகளை ஓரளவே காண்பிக்க இயலும். ஆனால், பேச்சாளர்  பேசுகின்ற பேச்சில் ஏற்ற இரக்கத்தால். தனது உணர்வுகளைப் பிரதிபலிக்க வைக்க முடியும் துயர நிகழ்வுகளை நாவு தழுதழுத்த நிலையில் கூறி சபையையே அழ வைத்து விடுவார். துயர சூழல் கூடி இருந்த சபையையேத் தொற்றிக்கொள்ளும்.
  • எழுத்தாளர்கள் மீது வாசகர்கள் வைக்கும் பாசத்திற்கும், பேச்சாளர்கள் மீது நேசர்கள் வைக்கும் நேசத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள பாகுபாடு..!

எழுத்துலகின் நுகர்வு நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்களின் உலகம். ஆனால், பேச்சை கேட்பதற்கு படிப்பறிவு அவசியம் இல்லை பாமரர்களின் பாசறை என்றே கூறலாம்.

எழுத்தாளர் எங்கோ ஒரு மூலையில், ஆனால் பேச்சாளரோ சபையின் நாயகன், எழுத்து மனதை பண்படுத்தும், பேச்சு மனதை சலனப் படுத்தும், நூலினை படிக்க அமைதியான சூழல் தேவை,  பேருறைக்கு இரைச்சலே துணை.

என் அன்புள்ளம் கொண்ட  வாசகர்களே..! நீங்களும் பேச்சுக்கும்  எழுத்திற்கும் உள்ள நிறை குறைகளை பின்னூட்டம் மூலம் எழுத வேண்டுகிறேன். எழுத்துலகம் என்பதால் உணர்ச்சி பிளம்பிற்கு இங்கு அனுமதி இல்லை

நன்றி ..!


அதிரை சித்தீக்

25 Responses So Far:

Aboobakkar, Can. said...

ஒரு விசயத்தை பிறருக்கு சொல்ல தேவை பட்டதேமொழி அல்லது எழுத்து.ஒருவனின் கருத்தை புரியாத மற்றவன் திரும்ப கேட்க அதை அவனுக்கு புரியவைக்க உருவானதே மொழியும் எழுத்தும்.அருமையான ஆக்கம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எழுத்தும் பேச்சும் எப்படி உருவானது என்பதை அழகாக எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது போல் எவரும் எழுதிவிடலாம்.அது எல்லாரையும் சென்றடைவதில்லை. ஆனால் பேச்சு எவரையும் சென்றடையும்.

பேசும் கலையை பள்ளிப் பருவத்திலிருந்து நன்கு ஊக்கு விக்க வேண்டும். குறிப்பாக மார்க்கக் கல்வி பயிலும் ஆலிம்களுக்கு ரொம்ப அவசியம். பேச்சின் வீரியம் எப்படிப்பட்ட உள்ளத்தையும் தன் பக்கம் ஈர்க்க முடியும்.

நிஸார் அஹமது said...

// கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பார்கள்.//
மனிதன் தோன்றுவதற்கு முன்பே கூட தமிழ் தோன்றி இருக்கலாம்..(அப்படி என்றால் யார்தான் தமிழ் பேசி இருப்பார்கள்? )
இப்படி காலத்துக்கும் ஒவ்வாத - லாஜிக் இல்லாத, புனைக்கதைகள் கற்பனைகளை வைத்தே தமிழர் சரித்திரம் தமிழர் வீரம் என்று காலத்தை ஓட்டுகின்றனர் இன்றைய "லேட்டஸ்ட் தமிழ்ப் பற்று வியாபாரிகளான "டாஸ்மாக்" புகழ் தமிழ்நாடு அரசியல்வாதிகள்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// ஆதி மனிதனின் கண்டு பிடிப்பான மொழி எப்போது உருவானதோ அன்றே பேச்சின் வீரியம் உலகில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது. ///

*********************************************************************
மொழி என்பது ஆதி மனிதனின் கண்டுபிடிப்பு என்று வெறும் வார்த்தையாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஆதி மனிதருக்கு (ஆதமிற்கு) மொழியைக் கற்றுக் கொடுத்தது இறைவனே என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகிறது:::


இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான். (அல்குர்ஆன் : 2:31)


அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் : 2:32)


...பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் : 2:37)

அலாவுதீன்.S. said...


//// கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் என்பார்கள். அது போன்று மொழி தோன்றிய காலம் தொட்டே மக்களை ஈர்க்கும் தன்மை பேச்சுகலைக்கு உண்டு. ///
**********************************************************************

கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே மொழி இருக்கிறது என்பது அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா? இந்த வார்த்தையை எத்தனை காலத்துக்கு சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

*****மனிதன் பேசத்தான் மொழி
*****கல்லும் மண்ணும் பேச ஒரு மொழியா?
*****சிந்திக்க மாட்டார்களா?

***************************************************************

//////எழுத்தாளர்கள் மீது வாசகர்கள் வைக்கும் பாசத்திற்கும், பேச்சாளர்கள் மீது நேசர்கள் வைக்கும் நேசத்திற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள பாகுபாடு..!/////
////எழுத்துலகின் நுகர்வு நூறு சதவிகிதம் படிப்பறிவு உள்ளவர்களின் உலகம். ஆனால், பேச்சை கேட்பதற்கு படிப்பறிவு அவசியம் இல்லை பாமரர்களின் பாசறை என்றே கூறலாம்.///

**************************** உண்மை! **************************

அதிரை சித்திக் said...

ஆரோக்யமான பின்னூட்டங்கள் ..
ஆக்கத்தின் வெற்றி என்றே கருதுகிறேன்
வாருங்கள் இன்னும் எதிர் பார்கிறேன் ..
ஏற்புரையில் இன்னும் பல கருத்துக்கள்
கூறுவேன் ....

Yasir said...

உண்மையாளரின் உரத்த சிந்தனையுள்ள உண்மையை சொல்லும் ஆக்கம்....எழுத்தைவிட பேச்சு,கேட்பவர்களையும்,பார்ப்பவர்களையும் சுண்டி இழுக்கும் என்பது நாம் கண்டுகொண்டிருக்கும் உண்மை

நம் சமுதாயத்திலும் சிறந்த பேச்சாளர்கள் வரவேண்டும்

அப்துல் காதர் சார்,நூர் முகம்மது காக்கா,அன்சாரி மாமா,அதிரை அஹமது காக்கா,ஜமீல் நானா போன்ற சிறந்த பேச்சாளர்களை பேட்டி எடுத்து பேச்சின் முக்கியத்துவத்தையும் அது சமுதாயத்திற்க்கு எந்த அளவிற்க்கு பயன்படும் என்பதையும் ஆக்கமாக வெளியிட வேண்டும்

ZAKIR HUSSAIN said...

//எழுத்தாளர் என்ன எழுதினாலும் அதை நுகரும் வாசகர் ..படித்தவர்கள். மிகவும் கவனமாக பகுத்தறிந்து நல்ல விசயமாக இருந்தால் ஏற்பார்கள், இல்லையெனில் இவர் எதோ எழுதுகிறார் ஏற்க தக்கதல்ல என்று நிராகரித்து விடுவார்கள்//


மிகச்சரியாக சொன்னீர்கள்....சமயங்களில் என்ன எழுதினாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் இருக்கும் உலகம் இது.

அதனால்தான் விமர்சனங்கள்தான் முக்கியம் விமர்சிப்பவர் அல்ல. இது துரதிஸ்டவசமாக ' யார்யா எழுதுறது?" என்ற கேள்வியிலேயே நிற்கிறது.

Yasir said...

//கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டே// யாரோ ஒரு உளறுவாயன் உணர்ச்சி வசத்தால் உளறிவிட்டு போன வார்த்தைகள் இது...ஆனால் இதைப்பல பேச்சுப்போட்டிகளில் பேசி கைத்தட்டலும் பரிசும் வாங்கி இருக்கின்றேன் :-)

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஆஹா!!!!!! சுடசுட தேவக்கேற்ற கட்டுரையாக தெரிகிரது அப்பழுக்கற்றவர் கர்மவீரர் காமராஜரையே அன்னாவின் பேச்சற்றல் ஆட்சி கவிழ செய்தது மொவ்லானா பி.ஜெ.அவர்களும் தனது பேச்சற்றலால் பலைளைஞர்களை தன்பக்கம் வைத்திருக்கிறர்
ஒருமுரை சஹாபி சஹது(ரலி) அவர்கள் என நினைக்கிரேண் போரில் சிறந்தவர். அவர்கள் போர் செய்தால் நிச்சயம் வெற்றி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த சமயம் ஒரு போர்கள்த்தில் சஹது(ரலி) அவர்கள் தலமையேற்று ஆயத்தப்பனியில் இருந்த பொழுது உமர்(ரலி) அவர்களிடமிருந்து அவசரகடிதம் சஹதே உடனே தங்கள் பொருப்பை வேரு ஒரு சஹாபியிடம் தலமை பொருப்பை கொடுத்து விட்டு திரும்பி வரவும் என்றிருந்த்து அவர்களும் கலீஃபா வின் கட்டலைக்கு கட்டுப்பட்டு திரும்பினார்கள்.
இது விசயமாக உமர்(ரலி) அவர்களிடம் வினாவும்பொழுது ஒரு தனி நபர் மேல் முழு விசுவாசங்கள் வைப்பது ஈமானுக்கு ஆபத்து ஆதலால் திரும்ப வரசொன்னேன்
தனி நபர் விசுவாசம் பேச்சுத்திரனில் அடிமையாவது புகைபழக்கம் இசையிளயிப்பது இஸ்லாத்தில் இடமில்லை

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஆஹா!!!!!! சுடசுட தேவக்கேற்ற கட்டுரையாக தெரிகிரது அப்பழுக்கற்றவர் கர்மவீரர் காமராஜரையே அன்னாவின் பேச்சற்றல் ஆட்சி கவிழ செய்தது மொவ்லானா பி.ஜெ.அவர்களும் தனது பேச்சற்றலால் பலைளைஞர்களை தன்பக்கம் வைத்திருக்கிறர்
ஒருமுரை சஹாபி சஹது(ரலி) அவர்கள் என நினைக்கிரேண் போரில் சிறந்தவர். அவர்கள் போர் செய்தால் நிச்சயம் வெற்றி என்று மக்கள் நினைக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த சமயம் ஒரு போர்கள்த்தில் சஹது(ரலி) அவர்கள் தலமையேற்று ஆயத்தப்பனியில் இருந்த பொழுது உமர்(ரலி) அவர்களிடமிருந்து அவசரகடிதம் சஹதே உடனே தங்கள் பொருப்பை வேரு ஒரு சஹாபியிடம் தலமை பொருப்பை கொடுத்து விட்டு திரும்பி வரவும் என்றிருந்த்து அவர்களும் கலீஃபா வின் கட்டலைக்கு கட்டுப்பட்டு திரும்பினார்கள்.
இது விசயமாக உமர்(ரலி) அவர்களிடம் வினாவும்பொழுது ஒரு தனி நபர் மேல் முழு விசுவாசங்கள் வைப்பது ஈமானுக்கு ஆபத்து ஆதலால் திரும்ப வரசொன்னேன்
தனி நபர் விசுவாசம் பேச்சுத்திரனில் அடிமையாவது புகைபழக்கம் இசையிளயிப்பது இஸ்லாத்தில் இடமில்லை

U.ABOOBACKER (MK) said...
This comment has been removed by the author.
U.ABOOBACKER (MK) said...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

//ஒருமுரை சஹாபி சஹது(ரலி) அவர்கள் என நினைக்கிரேண்//

காலித் பின் வலீத் (ரலி)அவர்கள்.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நல்ல உரத்த சிந்தனை!

கருத்துக்களும் ஆரோக்கியமானதாக இருப்பதை நினைத்து பெருமிதமே ! அல்ஹம்துலில்லாஹ்.

அப்துல்மாலிக் said...

இதனால்தான் (மசூரா) முகம் கொடுத்து பேசி புரிதலை உண்டாக்குவது மிக முக்கியம் என்பதை இஸ்லாமே சுட்டிக்காட்டுகிறது. எதையும் பேசி தீர்த்துக்கலாம் என்றுதானே சொல்லுவார்களே தவிர எழுதி தீர்த்துக்கலாம் என்று யாரும் சொல்லுவது இல்லை..
எழுத்து – அமைதியின் ஆளுமை
பேச்சு – அசத்தும் சூதனம்

Ebrahim Ansari said...

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே என்று அள்ளிவிடும் பேச்சாளர்களைப் பற்றி இங்கு விமர்சிக்கிறோம். சரிதான்.

ஆனால் இப்போதெல்லாம் வாடா என் மச்சி - வாழக்கா பஜ்ஜி- ஒன் ஒடம்பை பிச்சி- போடப்போறேன் சொஜ்ஜி என்றெல்லாம் உளறுகிற பேச்சாளர்களை எல்லாம் ரசித்து கை தட்ட ஒரு கூட்டம் இருக்கிறதே.

எழுதுவது கஷ்டமா?பேசுவது கஷ்டமா? என்றால் பேசுவதுதான் கஷ்டம். காரணம் எழுத்தை திருத்தலாம். பேச்சை திருத்த முடியாது. சொன்னால் சொன்னதுதான். சொல்லும் முன்பு நன்கு பயிற்சியும் என்ன சொல்லப்போகிறோம் என்ற திட்டமும் தீர்மானமும் வேண்டும்.

கோவலனை கொண்டு வா என்பதற்கு பதில் கொன்று வா என்று பாண்டியன் சொன்னதால்தான் மதுரை எரிந்தது என்று சொல்வார்கள். அதையே அவன் எழுதி உத்தரவாகப் போட்டிருந்தால் கொன்று வா என்றே எழுதி இருக்கலாம்.

அதேபோல் எழுதும்போது ஒரு கமா இடம் மாறியதால் ஒருவன் உயிர் பிழைத்தான் என்று திரு. ரெங்கராஜன் சார் கூறியிருக்கிறார். அது பற்றி சொல்ல தம்பி நூர் முகமது அவர்களுக்கு வழிவிடுகிறேன்.

நல்ல ஆக்கம். சிந்தனையாளர் சித்தீக் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

பேச்சு ------ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்கு மட்டும் .

எழுத்து-----ஓராயிரம் தலைமுறைக்கு மேல் .

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

எழுத்தோ பேச்சோ அதனதன் சாதக பாதகங்களைக் கொண்டே அறியப்படுகின்றன.

எனக்கு எழுத்தே விருப்பம். பேச்சு ஆபத்தானது.

உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு.

யாகாவராயினும் நாகாக்க.

பேச்சு சரித்திரம் படைக்குமெனில் எழுத்து அதைப் பதிந்து வைக்கும்.

இரண்டுமே ஒன்றையொன்று முந்தப்பார்க்கும் ஆயுதங்களே.

நல்ல சிந்தணை, விதைத்த அதிரை சித்திக் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

அதிரை சித்திக் said...

நிசார் அகமது ..அவர்களுக்கு ..!
கல் தோன்றி மண்தோன்றா ...என்ற
சொற்றொடர் ...கூற காரணம் ..சொற்பொழிவாக
இருந்தாலும் சரி எழுத்து ஆக்கமாக இருந்தாலும் சரி
நாம் கூற வந்த கருத்துக்கு முன்னாள் ..
மக்கள் மனதில் பதிந்த ஒரு விஷயத்தை
கூறி "அது போல " என்று உதாரணம்
சொல்லி நாம் சொல்ல வந்த கருத்தை
கூறினால் எடு படும் என்பதால் ..கல்தோன்றி..!
என்ற சொற்றொடரை பயன் படுத்தினேன்
தமிழ் மொழியல்ல ..தமிழ் குடி ..என்றே கூற பட்டுள்ளது
மார்க்க விசயத்திற்கு விரோதம் என்றால்
அந்த சொல் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் ..

அதிரை சித்திக் said...

அன்பு சகோ .அலாவுதீன் அவர்களுக்கு ...!

ஆதம் (அலை)அவர்களுக்கு அல்லாஹ்

பேச கற்றுக்கொடுத்தான் என்பதை குர் ஆண்

ஆதாரத்துடன் பின்னூட்டம் இட்டு இருந்தீர்கள் ..

ஆதம் (அலை) அவர்களின் மக்கள் கற்கால மக்கள்

எந்த அறிவும் பெற்றிருக்க வில்லை அந்த மக்களின்

வாழ்வின் துவக்கமே அந்த மக்களின் தேடலே

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன் ..திருமறை

யிலிருந்து தாங்கள் தந்த விளக்கம் அற்புதம்

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி

அதிரை சித்திக் said...

நண்பன் சபீர் (மு.செ.மு )கூறிய கருத்து

மிக சரி ..பேச்சுகலையினால் சபையினையே

கட்டிப்போடும் அளவிற்கு திறமையுள்ளவர்கள்

மிக இலகுவாக மக்களை கவர்ந்து விடுவார்கள் ..

ஒரே நபரே ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும்

கலந்து கொண்டு பேசுத்துவது என்பது கூடாத விசயம்

இதற்க்கு உதாரணம் ..வைகோ ..தி.மு.க.வில் இருந்த

சமயம் தனது சொல்லாற்றலால் தலமைக்கு அருகில் சென்றார்

எங்கு சென்றாலும் தொண்டரின் அமோக வரவேற்ப்பு

அரசியல் பார்வையாளர்களால் அடுத்த தி மு க தலைவன் என்று வர்ணிக்க பட்டார்

கொஞ்சம் அடக்கி வாசிக்கவும் வலியுரதப்பட்டார் ..

மாநாடு நடைபெற்றால் வைகோ பேச்சுக்கு

தனி மவுசு...! மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் வைகோ

பேசும் நேரத்தை மதிய உணவுக்கு தொண்டர்கள்

செல்லும் நேரத்தில் ஒதிக்கி இருந்தார்கள் ..

வைகோ பேச ஆரம்பித்ததுதான் மிச்சம்

உண்ணும் சோற்றை உதறி விட்டு மாநாட்டிற்கு

தொண்டர்கள் விரைந்தார்கள் ..பேச்சுகளை

தனி நபர் ஈர்ப்பு அதிகம் கால போக்கில்

கொள்கை மறந்து பேசுபவர்கள் மீது நேசம் வந்து

பெரும் பிளவை சந்திக்க நேரும் அது தான் ம.தி மு க

என்ற இயக்கமே உருவானது ..நம்ம ஊரில் கூட ஒரே நபர்

ஐந்தாறு வருடமாக ஹதீஸ் நிகழ்வு நடத்தி நம்மவர்களின்

நேசம் பெற்று இன்று பெரும் பிளவு நிகழும் அளவிற்கு

பல சச்சரவுகள் நிகழ கிறது ..தனி நபர் நம்பிக்கை வைப்பு

கூடுதல் கூடாது ..என்பதை ஹதீஸ் விளக்கத்துடன் கூறியமைக்கு நன்றி

அதிரை சித்திக் said...

சகோ அபூபக்கர்(கனடா)கருத்திற்கும்

வருகைக்கும் நன்றி ..ஜாபர் அவ்வப்போது

வந்து பின்னூட்டத்தில் தரும் கருத்து

ஆக்கம் தருவோருக்கு ஊக்கம் தருகிறது ..!

அன்பு தன்பி யாசிர் எனக்கு தன்பியில்லா

குறையை பின்னூட்டம் மூலம் நீக்கி வருகிறார்

ஏற்றமிகு எழுத்தாளர் சகோ ஜாகிர் காக்கா

வருகைக்கு நன்றி ..மரியாதைக்குரிய சகோதரி

ஆமினா அவர்களின் பாராட்டிற்கு நன்றி

எழுத்துலக ஜாம்பவான் அன்சாரி காக்கா

அவர்களின் பாராட்டு ஊக்கம் .நன்றிகள் பல

கவிஞர் அபுசாரூக் சபீர் காக்காவின் கருத்து

பல் கட்டுரைக்கு சமம் ..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு