Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2012 | ,

தொடர் - 2
நம்பிக்கையாளனுக்கு அனைத்தும் நன்மையே!

அல்லாஹ்வின் கட்டளைப்படி அச்சமூட்டி மக்களை எச்சரிக்கும் அண்ணல் நபியவர்கள், அதே வேளையில் நல்லவர்களுக்கு  சுவனம்பற்றிய  நற்செய்திகளை தொடர்ந்து சொல்லி,   மகிழ்ச்சி அளித்துக்கொண்டே   இருந்தார்கள்.

சுஹைப் இப்னு சினான் என்ற ஸஹாபி அறிவிப்பதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸஹாபாக்கள் ஆகிய எங்களுடன் (ஒருமுறை) அமர்ந்திருந்தபோது சிரித்தார்கள்.

பின்பு அவர்கள் ஏன் சிரித்தேன் எனத்தெரியுமா? என்று கேட்டார்கள். யா ரஸூலுல்லாஹ், ஏன் சிரித்தீர்கள் என்று வினவினோம். அதற்கு அண்ணலார் அவர்கள் இறை நம்பிக்கையாளனின் நிலையைக் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன். (ஏனெனில்) அனைத்து அம்சங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைந்துவிடுகிறது.

அவன் நேசிப்பது நிகழ்ந்துவிட்டால் உடனே தன் இறைவனை நினைத்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி நவில்கின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைகின்றது.

அவனுக்குப் பிடிக்காத ஓர் அம்சம் சம்பவித்தால் அவன் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே ஆகிவிடுகின்றது.

(ஆக) அவனுடைய அனைத்து அம்சங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைவது ஒரு முஃமினுக்கு அல்லாமல் வேறு யாருக்கும் இந்தப்பாக்கியம் கிடைப்பதில்லை! இதை எண்ணித்தான் நான் சிரித்தேன் என்றார்கள்.  -முஸ்னத் அஹ்மத் : 22804 

சிந்திக்கவும்: இயல்பாகவே நாம் முஃமின்களாக இருப்பதால் எத்தனைப் பாக்கியம் பெற்றவர்கள் என எண்ணும்போது மெய் சிலிர்க்கிறது!

வாழ்நாள் முழுதும் அல்லாஹ்வுக்கு நன்றியை சுஜூதிலேயே கழித்தாலும் போதாதல்லவா? மென்மேலும் வல்ல இறைவன் நம் ஈமானை உறுதியாக்கித் தருவானாக!

ஃபஜர் தொழுததிலிருந்து பகல் வேளை வரை முஸல்லாவிலேயே அமர்ந்து அல்லாஹ்வை நினைத்து திக்ர் செய்து கொண்டிருந்த நம் அன்னை ஜூவைரிய்யா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் கற்றுக் கொடுத்த அழகிய துஆ! அனைத்துப் புகழ்ச்சிகளும் அடங்கிய துஆ! எனக்கு மிகவும் விருப்பமான திக்ரை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்: 

سبحان الله  و بحمده   عدد خلقه و رضى نفسه   و زنة عرشه ومداد كلماته

"சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத ஹல்கிஹி வரிளா நஃப்சிஹி வஜினத்தி அர்ஷிஹி வமிதாத கலிமாத்திஹி".

விளக்கம்: அவன் படைத்த படைப்புகளின் எண்ணிக்கை அளவிற்கு, மனதில் ஓடும் எண்ணங்களின் அளவிற்கு, அவன் அரியாசனத்தின் அளவுகோள் அளவிற்கு, அவன் ஏற்கனவே எழுதிவைத்திருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அளவிற்கு, தூய்மை நிறைந்தவனாகிய என் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றேன்.
தொடரும்
இக்பால் M.ஸாலிஹ்

12 Responses So Far:

அதிரை சித்திக் said...

நகைச்சுவை யுடன்
நல்ல து ஆக்களும் தரும்
தேடல் ஆசிரியரின் பல
அறிய தகவல்கள் ஹதீசுடன்
காண ஆவலாக உள்ளேன்
து ஆ வை மனனம் செய்ய
ஆவலாக உள்ளேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...



முஃமினான நாம் பாக்கியம் பெற்றவர்கள்.அல்ஹம்துலில்லாஹ்!

سبحان الله و بحمده عدد خلقه و رضى نفسه و زنة عرشه ومداد كلماته

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ், இந்த தொடர் நன்மையின் பக்கம் மக்களை அழைக்கிறது.

Ebrahim Ansari said...

//அவன் நேசிப்பது நிகழ்ந்துவிட்டால் உடனே தன் இறைவனை நினைத்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி நவில்கின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைகின்றது.

அவனுக்குப் பிடிக்காத ஓர் அம்சம் சம்பவித்தால் அவன் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே ஆகிவிடுகின்றது.//

இந்த மனப்பக்குவம் அனைவரிடமும் வளர து ஆச் செய்வோமாக.

பாராட்டுக்கள் தம்பி இக்பால்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ், இந்த தொடர் நன்மையின் பக்கம் மக்களை அழைக்கிறது.

மதியழகன் said...

அருமையான விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..... ரசூலுல்லாஹ்வின் அத்தனை வாழ்க்கை நெறிமுறையும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபடவேண்டியவை.... அருமையான தலைப்பு..... இதுபோன்ற ரசூலுல்லாஹ்வின் பன்முகத்தன்மையை உலகிற்கு உணர்த்தும்போது ஈருலக நன்மையை பெற வழிவகுக்கும்..... மேலும் தங்களின் பணி தொடர வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கிறோம்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

தொடரட்டும் இப்பபதிவு

sabeer.abushahruk said...

நகைச்சுவை இழைய நபிமொழிகள், கேட்கப் புதுமையாகவும் பின்பற்ற பிரயோஜனமானவையாகவும் இருக்கின்றன.

ஜஸாக்கல்லா க்ஹைர், இக்பால்.

Iqbal M. Salih said...

ஜஸாக்குமுல்லாஹூ க்ஹைரன்.

உன் சகோதரனைப் பார்த்து நீ புன்னகைப்பதும் உனக்கு தர்மம்தான் என நபி(ஸல்) நவின்றார்கள். என் எழுத்தில் உங்களுக்குப் புன்னகை வந்திருந்தால், அந்த நன்மை போதுமானது. அல்ஹம்துலில்லாஹ்!

RAFEEQCMP said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

தங்கள் எழுத்துக்களை கண் முன் ஓட்டிப்பார்த்து மிக எழுதில் மனதில் பதியும் வன்னம் அமைகின்றது..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு