Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடக தீவிரவாதம் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 24, 2012 | , , , ,


நேற்று(ம்) செய்திச் சேனல்களில் தொடர்ந்து அந்தச் செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் "அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது" செய்தி. அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே, செய்தி சேகரித்து அளிப்பவர் ஒருவரின் வக்கிரமான மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு கற்பனை கட்டுக் கதைகளை நேரில் கண்டவர் போல் கைகளை ஆட்டிக் கொண்டு பரபரப்புடன் பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.

அவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.

ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி, இணைய, மற்றும் அச்சு மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி அதே ஊடகம் வழியாக மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம்.

மற்றுமொரு தொடர் நேரலை தொலைக் காட்சியியில் நேற்று அதிரையைச் சார்ந்த சகோதரர் அவர்களின் பேட்டியைக் கேட்டவர்களுக்கு வேதனையே மிஞ்சும், அவரின் உருக்கமான வேண்டுகோள் "நிஜத்தை எழுதுங்கள்" என்பதே !

கேடுகெட்ட ஊடக தீவிரவாதிகள் அத்தோடு நிற்கவில்லை தங்களின் பங்கிற்கு கற்பனைக் கதைகளை அள்ளி விடுவதில் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல என்று எல்லா சூழலிலும் செய்துகாட்டி வருகின்றார்கள் இந்த ஊடக பயங்கரவாதிகள்.

மேலும் பார்க்க : 

அதிரைநிருபர் குழு

5 Responses So Far:

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//ஒவ்வொரு இயக்கத்திற்கும் இவன் அவனை குறை சொல்லவும் அவன் இவனை குறை சொல்லவுமே நேரம் சரியில்லை. எப்படி சமூகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் இவன் தீவிரவாதி அவன் தீவிரவாதி என்று சொன்னாம் எப்படி எதிர்கொள்வது.....முதலில் நம்சமுகத்தில் விழிப்புணர்வு வரவேண்டும். ஒருகை ஓசை ஜெயிதடாக சரித்திரம் இல்லை. இரண்டு கைகள் வேண்டும். நம் இயக்கங்கள் ஒன்றாக இருந்து குரல் கொடுத்தால் எதிர்காலம். இல்லையென்றால்......!//

உலக மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சமுதாயம் தடம் மாறி சென்று கொண்டிருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளை உலகில் பல பாகத்திலும் அதன் விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் மனித ஜின் இனத்தை தன்னை வணங்குவதற்காகவே படைத்ததாக கூறுகின்றான். அதற்காக அவனது தூதரையும் நமக்கு வழிகாட்டியகவும் அனுப்பியுள்ளான். நாம் அதனை உணர்ந்து நம்மை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமுதாய நலன் என்று கூறிக்கொண்டு தினமும் எத்தனை இயக்கங்கள் அமைப்புக்கள் தோன்றிகொண்டு இருக்கின்ற்ன- சமுதாய ஒற்றுமை என்று பேசும் இவர்கள் மட்டும் ஏன் பிரிந்து கிடக்கிறார்கள் ?

நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். முதலில் நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடவேண்டும். முன்னுதாரணமாக நமதூரில் உள்ள அனைத்து அமைப்புக்களும் பிரிந்து கிடக்காமல் ஈகோ பார்க்காமல் அனைவரும் முஸ்லிம்களென்ற அடிபடையில் ஒன்று சேரட்டும். இது பிற ஊர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கட்டும்.

இன்ஷா அல்லாஹ் இவ்வாறு நாம் ஒன்றினைந்து இருந்தால் அல்லாஹ்வைதவிர நம்மை வேறு யாரும் ஒன்றும் செய்யமுடியாது

அப்துல்மாலிக் said...

இது மாதிரி அவதூறுகள் கண்டிக்கப்பட வேண்டிய விடயம், முஸ்லிம்கள் என்றால் ரெண்டு மொடக்கு தண்ணீர் அதிகமாத்தான் குடிக்கிறாய்ங்க...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அநியாயமாக கைது செய்யப்பட்டவருக்கு உடன் நீதி கிடைக்க வேண்டும். சதி வலை செய்த அனைவரையும் பணி நீக்கம் செய்து அவர்களையும் மதச் சார்பற்ற அரசு தண்டிக்க வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு