Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சித்தீக்பள்ளி கமிட்டி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்கம்! 61

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2012 | , , ,

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,.

அன்பான சித்தீக் பள்ளி முஹல்லா மற்றும் அதிரைவாசிகளுக்கு,

கடந்த சில நாட்களாக ஊரில் உள்ள மக்களிடமும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரை மக்களிடமும் பேசப்பட்டு வருபவை, சித்தீக் பள்ளி மற்றும் சித்தீக் பள்ளி நிர்வாகத்  தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் பற்றிய செய்திகளே. ஊரிலும் இணையத்திலும் இது தொடர்பாகப் பேசப்படும் செய்தி எங்களுக்கு வருத்தமளிக்கிறது. சித்தீக் பள்ளி தொடர்பான விசயங்களில் ஏனோ ஒரு சில மக்கள் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார்கள். அதனால், நடந்த சம்பவங்களைப் பற்றி எங்களுடைய விளக்கத்தை மக்கள் மத்தியில் வைப்பது எங்கள் கடமை என்பதை உணர்ந்தே இம்மடலை வரைகின்றோம்.

சித்தீக் பள்ளிக்கும், சித்தீக் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கும் இடையே நிலப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்குச் சொந்தமான இடத்தைப் பொதுப் பாதையாக்க ஒரு சிலர் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களினால் பள்ளிக்குரிய நிலத்தில் தெருப்பாதை வேண்டும் என்று வாதிடும் சிலர் வெளித் தெருவைச் சேர்ந்த ஒரு சகோதரருடன் சேர்ந்து, அநாகரீகமாகத் தகாத வார்த்தை பேசி, மிகவும் கேவலமாக சித்தீக்பள்ளி நிர்வாகத்தை கண்ணியக் குறைவாக நடத்தினார்கள். இது தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டு, சித்தீக்பள்ளிக்கு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.

அன்று இரவே சித்தீக்பள்ளி சம்பந்தபட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கூடி ஆலோசனை செய்தார்கள். அதில், பள்ளிவாசல் நிலத்தில் பாதை விடவேண்டாம் என்று ஒரு மனதாக முடிவு செய்து கையொப்பமிட்டார்கள். யார் யார் எல்லாம் இதில் உடன்பட்டார்கள் என்ற விபரம் சித்தீக்பள்ளி நிர்வாக மினிட்ஸ் புத்தகத்தில் உள்ளது. 

பிறகு இரண்டு நாட்கள் கழித்து,  பள்ளிவாசல் வேலியை, தெருவில் உள்ள பெண்களை தூண்டிவிட்டு உடைத்து, சமூக விரோதச் செயல்களில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில சகோதரர்கள் ஈடுபட்டுப் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். இதில், ஒரு சில சகோதரர்கள் சுவர் கட்டலாம் என்று கை எழுத்து போட்டவர்களும் சுவரை இடிக்கும் வேலையையும் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் அன்றைய தினமே அல்லாஹ்வின் உதவியால் சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான நிலத்தின் சுவர்கள் வெகுவிரைவாகக் கட்டி எழுப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு சில நாட்கள் கழித்து சம்சுல் இஸ்லாம் சங்கத் துணைத்  தலைவர் அவர்கள், சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் கூட்டம் ஒன்றில் அஜெண்டா இல்லாமல் எடுத்து வைத்ததன் காரணத்தால், சித்தீக் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளை சங்கத்தில் சென்று சந்தித்துப் பேசினோம். “எங்கள் மீது ஏன் நடவடிக்கை  எடுக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதோடு அல்லாமல் அன்று வரை நடைபெற்ற அனைத்தையும் முழுமையாக சொல்லிக்காட்டப்பட்டு செய்திகளை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த உரையாடலில் சங்கத் தலைவர் அவர்கள், வெளியூர்க்காரர் ஊர் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதில் தவறில்லை என்று கூறியதோடு அல்லாமல், சங்க உலமா இபுறாஹீம் ஆலிம் அவர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு இபுறாஹீம் ஆலிம் அவர்கள் முஹல்லாவாசிகள் அதை விரும்பினால் தவறில்லை என்று விளக்கம் கூறினார்கள். மேலும் சித்தீக்பள்ளி இடம் மீட்கப்பட வேண்டும் என்று சங்கத் தலைவர் அவர்களும் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்கள். 

அதுவரை சங்கம் இது தொடர்பாக எந்தவித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. சித்தீக்பள்ளிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்பதை மக்கள் தெரியவந்த சூழலில், சித்தீக்பள்ளித்   தலைவராக இருக்கும் ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைப் பதவியிலிருந்து விலக்க ஊரில் உள்ள ஒரு சிலர் மும்முரமாக முயற்சி செய்து பல தொந்தரவுகளை ஹைதர் அலி ஆலிம்சா அவர்களுக்கும், சித்தீக் பள்ளி நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். சித்தீக்பள்ளிச் சொத்து விவகாரத்திற்குள்ளான  பிரச்சினையில் சம்பந்தபட்ட நபரான தக்வா பள்ளி நிர்வாகி அவர்கள்(தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்) சித்தீக்பள்ளி நிர்வாகிகளைச்  சந்தித்துப் பேசினார். பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமும் ஏற்படாத நிலையில்,  அந்த நிர்வாகி ஒரு மிரட்டலும் விட்டுச் சென்றார்.

இப்படி மாதங்கள் கடந்து கொண்டே சென்றன, கடந்த ரமழானில் தக்வா பள்ளி நிர்வாக கமிட்டியின் செயலாளர் அவர்கள் சித்தீக் பள்ளி கமிட்டி தலைவர் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு பொய் வழக்கு - அதாவது ஆலிம்சா அவர்கள் இளைஞர்களை வைத்து தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார் என்று இல்லாதவைகளை அவர் மீது சுமத்தி  நீதிமன்றத்தில் 13 குற்றசாட்டுகளை வைத்து பொய் வழக்குத் தொடுத்துள்ளார்.  பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து ஹைதர் அலி ஆலிம்சா அவர்களைக் காவல் நிலையத்திற்குச் செல்ல வைத்தார். பிறகு சித்தீக்பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் காவல் நிலையத்தில் தக்வா பள்ளி நிர்வாகி அவர்களால் கொடுக்கபட்ட பொய் புகார்  இதுவரை வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவம் ஊரில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதன் பின் ஹைதர் அலி ஆலிம் அவர்களை (29-08-2012) காலை 10:30 மணியளவில் வீட்டிற்குத் தனியாக வருமாறு சங்கத் தலைவரின் அழைப்புடன் வந்த சங்க பிரதிநிதி சகோதரர் சாலிஹ் அவர்களிடம், "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்தக் கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதி சாலிஹ் மீண்டும் வந்து, “நீங்கள் வர இயலவில்லை என்றால், நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள், "சங்கத் தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை.  இன்று தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய சில நிமிடங்களிலேயே  சங்க தலைவர், பேரூராட்சித் தலைவர், சங்கத் துணைத் தலைவர்,  துணைச் செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள்  ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க முற்பட்டார்கள்.

சித்தீக்பள்ளியில் வைத்துப் பேசலாம் என்று சொல்லி, வந்தவர்களை சித்தீக்பள்ளியில் அமருமாறு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதே சமயத்தில் ஹைதர் அலி ஆலிம் பள்ளிக்கு வருவதற்குள் சித்தீக்பள்ளிக்கு கமிட்டி சகோதரர்கள் 4 பேர்  வந்துள்ளார்கள். அவர்களிடம் சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் அவர்கள், “இனி எத்தனை பேர் வருவீர்கள்?  நீங்களா அல்லது நாங்களா என்று பார்த்துக்கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் சித்தீக்பள்ளிக்கு வந்த 5 நிமிடத்திற்குள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சலாம் கூறி சித்தீக்பள்ளி உள்ளே வருகிறார்கள். உடனே சங்கத் தலைவர்கள் அவர்கள், “நீங்கள் வெளியூர்க்காரர். நாங்கள் உள்ளூர்வாசிகள். ஊரை இரண்டாகப் பிரித்துவிடாததீர்கள்” என்று சொன்னார். அருகில் இருந்த சித்தீக்பள்ளி கமிட்டி நிர்வாகி ஒருவர், சங்கத் தலைவர் அவர்களிடம், “சலாத்திற்கு பதில் கூறுங்கள் காக்கா” என்று சொல்லியும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. பள்ளியில் இருந்த முஹல்லா சகோதரர் ஒருவர், “நீங்களும்  வெளியூர்தானே” என்று சங்கத் தலைவரைப் பார்த்துக் கூறினார். இதன் பிறகு ஏற்பட்ட சலசலப்பால், நடைபெறவிருந்த சந்திப்பு தடைபட்டது. சங்கத் தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள். வெளியே செல்லும் முன், அனைவரும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப்  பேசிவிட்டுச் சென்றார்கள். திரும்பத் திரும்ப ஹைதர் அலி ஆலிம் அவர்கள், “வாருங்கள் பேசலாம்” என்று கேட்டுக் கொண்டும், சந்திக்க மறுத்துவிட்டு வெளியேறினார்கள். 

30-08-2012 அன்று இரவு சித்தீக்பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை  ஷம்சுல் இஸ்லாம் சங்கத்  தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் அழைத்துப்  பேசினார்கள். இதில் முஹல்லா சகோதரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, சங்கத்தில் உள்ளவர்கள் முன்னுக்குப் பின்  முரணான தகவல்களைத் தெரிவித்து,  ஹைதர் அலி ஆலிம்சா அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.  “ஹைதர் அலி ஆலிம் அவர்களை சங்கத்தின் சார்பாக சந்திக்கவில்லை,  விளக்கம் கேட்கவே சென்றோம்.  ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சங்கத் தலைவர், துணைத்  தலைவர், துணைச் செயலர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். 

ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கும் 9 முஹல்லாக்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களைக் கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள். இறுதியாக, தற்காலிகமான முடிவு என்றாலும், இதை மறுபரிசிலனை செய்ய வாய்ப்பே இல்லை என்று சங்கத்  துணைத் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.  மேலே குறிப்பிட்ட அனைத்து முடிவுகளும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கபட்டது என்பது எங்கள் கமிட்டி நடத்திய விசாரனையில் தெரியவந்துள்ளது.

தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் தனி நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சொல்லி உள்ளாதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் கூறினார்கள், ஆனால் இதுவரை தக்வா பள்ளி நிர்வாகியிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை. அடுத்த மாதத்திற்கு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்தப் பொய் வழக்கால் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள்

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை பற்றி எந்தவிதக் கடிதமும் இது நாள் வரை சித்திக்பள்ளி கமிட்டிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து  வரவில்லை. ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் வந்த கடிதம் மட்டும் தான் வந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டுச்  சொல்ல விரும்புகிறோம்.

மரியாதைகுறிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் எந்த ஒரு இயக்கத்தினரையும்  வைத்து எந்தவித இயக்க வேலையோ அல்லது எந்தவிதத் தீய காரியங்களோ இதுவரை செய்யவில்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறோம். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் பொய் வழக்குத் தொடர்ந்துள்ள சகோதரரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  இதற்கு துணை நிற்கும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

சித்தீக்பள்ளி கமிட்டித் தலைவர் பொறுப்பு வேண்டாம் என்று மூன்று முறை ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்கள். ஆனால் பள்ளி கமிட்டியில் உள்ள நாங்கள்  மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே  இந்தப் பொறுப்பில் இது நாள் வரை இருந்து வருகிறார்கள். பதவி ஆசையால் அல்ல என்பதை உறுதியாக எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த  03-09-2012 அன்று பொதுப் பாதையை சித்தீக்பள்ளி நிர்வாகிகள்  அடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தஞ்சை கலெக்டர் அவர்களுக்கு சென்னையிலிருந்து ஒரு நபர் அவசர மனு கொடுத்து, ஆர் டி ஓ, தாசில்தார், வி ஏ ஒ ஆகியோர் சித்தீக்பள்ளிக்கு வந்து விசாரனை நடத்தி, அப்படி ஒரு சம்பவம் அன்று நடக்கவில்லை என்று விபரங்கள் சேகரித்துத்  திரும்பி சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் தனிபட்ட முறையில் எழுதிய கடிதத்தில் சித்தீக்பள்ளிக்குத் தொழ வருவதற்கு மக்களுக்கு அச்சமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது!  அப்படி என்ன அச்சம் ஏற்படும் சூழல் சித்தீக் பள்ளியில் நிகழ்கிறது என்பதை சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களுக்குக் கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது அச்சம் ஏற்படும் சூழல் இருந்திருந்தால், இந்த ரமளானில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் ‘இஃதிகாப்’ எப்படி இருந்திருப்பார்கள்? 

சித்தீக்பள்ளிக்கான  சொத்து விவகாரத்தை வைத்து நடந்து வரும் நிகழ்வுகளுக்கு,  தனி நபரான ஹைதர் அலி ஆலிம் மட்டும் தான் பொறுப்பு என்று சித்தரித்து வருகிறார்கள், ஆனால் இதில் சித்தீக்பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பு, என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம். ஆகையால் மரியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம்சா அவர்களை மட்டும்  குறிவைத்து, நீதிமன்றத்தில் பொய் வழக்கு, பொய் பிரச்சாரம், வீண் பழியை சுமத்தி அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை சித்தீக்பள்ளி கமிட்டி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது.  ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொய் வழக்கை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சித்தீக் பள்ளி விவகாரத்தில் நாங்கள் எந்த நிலையிலும் ஷரியத்து முறைப்படி இணைக்கமாகவும் சுமூகமாகவும் நடந்துகொள்ளவே விரும்புகிறோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அனைத்தும் மசூரா அடிப்படையில் எடுக்கப்படுகிறது. எந்த ஒரு தனிநபருக்கு முடிவை தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

இறுதியாக வரும் 13.09.2012 அன்று பட்டுக்கோட்டை RDO அலுவலகத்தில் சித்தீக்பள்ளி நில விவகாரம் தொடர்பாக சமாதான கூட்டம் நடைபெறுகிறது. இந்த சமாதான கூட்டத்திற்கு தற்போது சித்தீக்பள்ளி நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்கள் ஒருவரை கூட அழைக்கப் படவில்லை. ஆனால் மரியாதைக்குரிய அப்துல் காதர் ஆலிம்சா அவர்களை மட்டும் சித்தீக்பள்ளி நிர்வாகி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஒரு தலைபட்சமான போக்கு என்பதை இங்கு எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சித்தீக்பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தன்னிலை விளக்க ஒழிப்பேழையையும் இதோ கேளுங்கள்.

மேலோ சொல்லபட்ட அனைத்திற்கும் சாட்சியாளன் அல்லாஹ் ஒருவனே.

மேலதிக தகவல்களுக்கு சித்தீக்பள்ளி நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு 

சித்தீக்பள்ளி நிர்வாகம்,
புதுமனைத்தெரு, அதிராம்பட்டினம் – 614 701

சித்தீக் பள்ளி நிர்வாகத்தின் தன்னிலை விளக்கம் இன்று மின்னஞ்சல் வழியாக கிடைக்கப்பெற்றது அதனை அதிரைநிருபரின் நெறியாடலுக்கு உட்படுத்தி அவ்வாறே பதியப்பட்டுள்ளது


** உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.


பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.


நெறியாளர்

editor@adirainirubar.in

61 Responses So Far:

Yasir said...

///சித்தீக் பள்ளி விவகாரத்தில் நாங்கள் எந்த நிலையிலும் ஷரியத்து முறைப்படி இணைக்கமாகவும் சுமூகமாகவும் நடந்துகொள்ளவே விரும்புகிறோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்/// இதைவிட வேறன்ன வேண்டும்

தனிப்பட்ட பிணக்குகளை அல்லாஹ்வுக்காக நீக்கி...பேச்சு வார்த்தை மூலம் ஒற்றுமை ஆவதற்க்கு தேவைப்பட்ட வழிகளை பாருங்கள்..சாந்தி சமதானமாக வாழச்சொன்ன நம் மார்க்க சகோதரகளுக்கிடையே சச்சரவுகள் வேண்டாமே.

உள்ளூர் / வெளியூர் என்று பார்க்க வேண்டாம் அனைவரையும் ”ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட” முஸ்லிமாக பாருங்கள்

Shameed said...

இந்த சமாதான கூட்டத்தில் மரியாதைக்குரிய அப்துல் காதர் ஆலிம்சா அவர்களையும் அழைத்ததில் தவறில்லை அதோடு தற்போது இருக்கும் நிர்வாகிகளையும் அழைத்திருக்க வேண்டும் அதுதான் நேர்மை ! மற்றும் மேன்மை

Abu fahim said...

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

வெளியூர்க்காரர்/கள் விஷயம் பிறகு பேசிக்கொள்ளலாம்.

முதலாவதாக உள்ளூர் விஷயம் - முக்கியமான விஷயம் - 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731) சொத்தைப் பற்றிப் பேசித் தீர்ப்போமா?

அபூ சுஹைமா said...

அன்புள்ள சித்தீக் பள்ளி நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மீது அபாண்டமான வழக்கு தொடர்ந்தவர் பற்றியும் அவர் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது பற்றியும் அநீதம் இழைக்கப்பட்டவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பது பற்றியும் அதிரைவாசிகளிடையே கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை.

அதிரையின் நடப்புகளையும் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோரின் அரசியலையும் பள்ளிகள்கூட மின்னஞ்சல் வைத்துக் கொள்ளும் தற்போதைய காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தாலும் அதிரைவாசிகள் அறிந்தே உள்ளனர்.

எனவே, மீண்டும் மீண்டும் இந்த விசயத்தைப் பொதுவெளியில் பதிந்து நமக்கிடையே இடைவெளியை அதிகப்படுத்திக் கொள்ளாமல், பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். இல்லை எனில், நீதிமன்றத்தை நாடி பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முயலுங்கள்.

அதைவிடுத்து, இரு தரப்பாரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைப் பொது வெளியில் வெளியிடும்போது, பகைமைதான் உருவாகும் தவிர, தீர்வை எட்ட முடியாது.

Unknown said...

" இரு தரப்பாரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைப் பொது வெளியில் வெளியிடும்போது, பகைமைதான் உருவாகும் தவிர, தீர்வை எட்ட முடியாது."
மிக அழகாக சொன்னீர் அபூ சுஹைமா, இந்த பிரச்சினையை சித்திக் பள்ளி, கமிட்டி அபகறித்தவர்கள் என்று யாரை சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்கலிடமோ அல்லது ஓர் முக்கியச்தர்களிடமோ அல்லது முஹல்லாவிற்கு உட்பட்ட சஙத்திடமோ அல்லது ஜனனாயகப்படி நீதிமன்றமோ சென்றிருந்தால் இப்படியொறு நெருக்கடியும் பிரிவினை பேச்சுகளும் வந்திருக்காது. ஹைதர் அலி ஆலிம் அவர்களும், வேறு முஹல்லா ஆட்களை வைத்து சுவர் எழுப்பும் முன் இப்படி ஒரு முயற்சி எடுத்தார்களா என்று தெரியவில்லை.

Unknown said...

ஆர். டி. ஓ அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி.

Adirai khalid said...

வருந்துகிறோம்
மனித நேயம் காக்க படவில்லை
இறைவா உன்னிடமே இறையஞ்சிகின்றோம்

அனைத்து முஹல்லா?
பரிகொடுத்தவர்களின் வழக்கை
திருடனின் கையிலே
தீர்ப்புக்காக

தெரு பிரச்சனை? அல்ல
ஊர் பிரச்சனை? அல்ல
மதப்பிரச்சனை ? அல்ல
இந்தியா இறையாண்மைக்கு
ஊறுவிளைவிக்கும்
மனித நேயர்களின் மனசாட்சிக்கு எதிராக நடக்கும் ஓர் மஹாயுத்தம்

Shameed said...

பொது சொத்தை கொள்ளை அடித்தவர்கள் / அதற்க்கு கூட்டாக இருந்தவர்களை பொதுவில் கொண்டு வந்தால்தான் இனிவரும் சந்ததிகளுக்கு அது ஒரு பாடமாய் அமைந்து பொது சொத்துக்கு ஆசை படமாட்டார்கள்

பள்ளிவாசல் சொத்து 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731) சொத்தைப் கொள்ளை அடித்தவர்கள் / அதற்க்கு கூட்டாக இருந்தவர்களை இனியும் மூடி மறைத்தால் அப்பன் குதுருக்குள் இல்லை என்ற கதையாகிவிடும்

Meerashah Rafia said...

பின்னூட்டத்தில் சண்டை நாறியபின்புதான் "பின்னூட்டம் இத்துடன் நிறுத்தப்படுகின்றது" என்று வெளியிடவேண்டியதில்லை என்பது என் கருத்து..

அந்த அழகிய வாசகத்தை பார்க்கும்போது "முழுக்க நினைந்ததற்கு அப்புறம் முக்காடு எதற்கு..?" என்ற கேள்விதான் கேட்க தோனுகின்றது..

இதனை வைத்து நான் ஒரு சாரார் என்று யாரும் சுவரொட்டி அடித்துவிடவேண்டாம்.. இந்த கருத்தை கடந்த மூன்று வாரத்தில் மூன்றாவது முறையாக நான் பதிகின்றேன் என்று நினைக்கின்றேன்..


இந்த பின்னூட்ட வசதியினால் இந்த பிரச்சினைக்கு எம்மாம்பெரிய நாட்டாமை தீர்ப்பு கிடைக்கின்றதேன்று என் சிறிய மூலைக்கு எட்டவில்லை..

அபூ சுஹைமா said...

meerashah சொன்னது…

//இந்த பின்னூட்ட வசதியினால் இந்த பிரச்சினைக்கு எம்மாம்பெரிய நாட்டாமை தீர்ப்பு கிடைக்கின்றதேன்று என் சிறிய மூலைக்கு எட்டவில்லை..//


எம்மாம் பெரிய வார்த்தை!

இதுபோன்ற பதிவுகளுக்குப் பின்னூட்டம் அளிக்கும் போது, யார் குற்றவாளி எனக் கண்டுபிடிப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

சகோத‌ர‌ர் அபூ சுஹைமா அவ‌ர்க‌ள் தாங்க‌ள் சொல்லும் இதே வார்த்தையை எத்த‌னையோ வெளியீடுக‌ளையும் க‌டித‌ங்க‌ளையும் எழுதித்த‌ள்ளிய‌ ச‌ம்சுல் ச‌ங்க‌ம் வெளியிடும்போது ம‌ட்டும் ஏன் அவ‌ர்க‌ளுக்கு இதே புத்தியை தாங்க‌ள் சொல்வ‌தில்லை? இத்த‌னை நாட்க‌ள் அவ‌தூருக‌ளும் பொய்க‌ளும் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தை பொருத்துக் கொள்ள‌ முடியாத‌ சித்தீக் ப‌ள்ளி நிர்வாக‌ம் முத‌ன் முத‌லாக‌ த‌ன் நிலை விள‌க்க‌த்தை வெளியிட்டு உண்மை நிலையை ம‌க்க‌ளுக்கு அறிவிப்ப‌தை த‌ங்க‌ளைப் போன்ற‌ ந‌டு நிலையாள‌ர்க‌ளுக்கு ஏன் தாங்கிக்கொள்ள‌ இய‌ல‌வில்லை?

ச‌கோத‌ர‌ர் அஹ்ம‌து அஸ்ல‌ம் அவ‌ர்க‌ளே சித்தீக் ப‌ள்ளி அத‌ன் முஹ‌ல்லா வாசிக‌ளுக்கோ, அதிரை வாசிக‌ளுக்கோ, உங்க‌ளுக்கோ, ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ளுக்கோ சொந்த‌மில்லை என்ப‌தையும், அல்லாஹ்வுடைய வீடு அல்லாஹ்வுக்கு சொந்த‌மான‌து, அத‌ற்கு பாதிப்பு ஏற்ப‌டும்போது உல‌க‌ம் முழுக்க‌ உள்ள‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ருக்கும் அதை பாதுகாக்க‌ வேண்டிய‌ பொருப்பு இருக்கிற‌து என்ப‌தையும் தாங்க‌ள் அறிய‌மாட்டீர்க‌ளா? பாப‌ர் ம‌ஸ்ஜித் விவ‌கார‌த்தில் அயோத்தியில் உள்ள‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை அது என்று சொல்லி த‌ட்டிக்க‌ழிப்ப‌வ‌ன் உண்மை முஸ்லிம் அல்ல‌ என்ப‌தை தாங்கள் ம‌றுக்கிறீர்க‌ளா?

சித்தீக் ப‌ள்ளி சகோத‌ர‌ர்க‌ள் சில‌ர் த‌ங்க‌ள் ந‌ன்ப‌ர்க‌ளை நியாய‌த்திற்கு ஆத‌ர‌வாக‌, அல்லாஹ்வுக்கு ஆத‌ர‌வாக‌ அழைத்த‌தை அடுத்த‌ முஹ‌ல்லா என்று தாங்க‌ள் இக‌ழ்வ‌தை நாளை அல்லாஹ் உங்க‌ளிட‌ம் ம‌றுமையில் விசாரிப்பான், உங்க‌ளின் எழுத்து, பேச்சு ஆகிய‌வை நாளை அல்லாஹ் முன் சாட்சியாக‌ வ‌ரும் என்ப‌தை தாங்க‌ள் என்ணிப்பார்க்க‌வில்லையா?

Adirai khalid said...

அநியாயக் காரர்களின்
தவறுகள் சுட்டிக்காட்டுவது
தண்டிக்கபடுவதற்காக அல்ல
சுட்டி காட்டி அதை திருத்துவதற்காக

நீதி மறுக்கப் படலாம்
ஆனால் நிச்சயமாக
நியாயங்கள் தண்டிக்கப் படக்கூடாது

அபூ சுஹைமா said...

adirai saeed சொன்னது…

/சகோத‌ர‌ர் அபூ சுஹைமா அவ‌ர்க‌ள் தாங்க‌ள் சொல்லும் இதே வார்த்தையை எத்த‌னையோ வெளியீடுக‌ளையும் க‌டித‌ங்க‌ளையும் எழுதித்த‌ள்ளிய‌ ச‌ம்சுல் ச‌ங்க‌ம் வெளியிடும்போது ம‌ட்டும் ஏன் அவ‌ர்க‌ளுக்கு இதே புத்தியை தாங்க‌ள் சொல்வ‌தில்லை? இத்த‌னை நாட்க‌ள் அவ‌தூருக‌ளும் பொய்க‌ளும் ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தை பொருத்துக் கொள்ள‌ முடியாத‌ சித்தீக் ப‌ள்ளி நிர்வாக‌ம் முத‌ன் முத‌லாக‌ த‌ன் நிலை விள‌க்க‌த்தை வெளியிட்டு உண்மை நிலையை ம‌க்க‌ளுக்கு அறிவிப்ப‌தை த‌ங்க‌ளைப் போன்ற‌ ந‌டு நிலையாள‌ர்க‌ளுக்கு ஏன் தாங்கிக்கொள்ள‌ இய‌ல‌வில்லை?//

இந்தப் பதிவில் இனி கருத்திடுவதில்லை என்ற முடிவில் இருந்தேன். என்னை நோக்கி கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் இப்பின்னூட்டம்.

அன்புச் சகோ. அதிரை சயீத்,

எனக்குத் தெரிந்து ஷம்சுல் இஸ்லாம் அதிரை எக்ஸ்பிரஸில் முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பின்னர் சங்கத்தின் அந்த அறிவிப்புக்கு என்ன காரணம் என தான் கருதுவதை சகோ. யூசுஃப் எழுதினார். அந்தப் பதிவை வாசித்த பலரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அறிவிப்புக் கண்டனம் தெரிவிப்பதை விடுத்து, இப்படி ஒரு சங்கமே தேவை இல்லை, மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் அவருக்குத் தடை என்பன போன்று கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர். அதற்கு சங்கத்திடமிருந்து பதில் வந்தது.

இதுதவிர, இந்தப் பிரச்சனை தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேறு வெளியீடுகளையோ கடிதங்களையோ வெளியிட்டதாக நான் அறியவில்லை. இனி, ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் இதுபோன்ற அறிக்கைப் போரில் ஈடுபடுமானால் அவர்களுக்குமான என் பதிலுரை மேலே உள்ள பின்னூட்டம்தான்.

Unknown said...

ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ளின் ஆடியோ ப‌திவையும் இந்த‌ ப‌திப்பையும் ப‌டித்த‌வுட‌ன் என‌க்குத் தோன்றிய‌து.

1. ச‌ங்ப‌ரிவார் ச‌ங்க‌ம் என்று ந‌ம்மூராரும் பெண்க‌ளும் இக‌ழும் அள‌வுக்கு சென்றுவிட்ட‌த‌னால், ந‌ட‌ந்த‌ தவ‌ருக‌ளை ஒத்துக்கொண்டு, அத‌ற்காக‌ அல்லாஹ்விட‌ம் பாவ‌ம‌ன்னிப்பு தேடுவ‌துட‌ன், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌மும் அத‌ற்காக‌ ம‌ன்னிக்கும்ப‌டி கேட்டுக்கொண்டு உட‌ண‌டியாக‌ சம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் ப‌த‌வியிலிருந்து வில‌க‌ வேண்டும். இது ச‌ங்க‌ நிர்வாகிக‌ளுக்காக‌ இம்மையிலும் ம‌றுமையிலும் மிக‌ச்சிற‌ந்தது. வ‌ழ‌க்கு தொட‌ர்ந்த‌வ‌ரும் இதையே செய்ய‌ வேண்டும். பொதுவிஷ‌ய‌ங்க‌ளில் ப‌ங்கு பெருவ‌திலிருந்தும் வில‌கி தான் செய்த‌ குற்ற‌த்திற்காக‌ அல்லாஹ்விட‌ம் த‌வ்பாச் செய்ய‌ வேண்டும்.

2. சங்க நிர்வாகி மற்றும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் உண்மையாளர்க‌ளாக‌ இருக்கும்ப‌ட்ச‌த்தில் ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் கூறுவ‌து போல் ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ளும், ச‌ங்க‌ நிர்வாகிகள் ம‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வெள்ளிக்கிழ‌மை அஸ‌ருக்குப்பிற‌கு மிம்ப‌ரில் ஏறி ச‌த்திய‌ம் செய்ய‌ வேண்டும். ஆனால் இது ஆபத்தான‌ முடிவாக‌ இருக்கும். ஏனெனில் ச‌ங்க‌ நிர்வாகிக‌ளும், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் இதற்கு எந்த‌ ப‌திலும் அளிக்காம‌ல் கால‌த்தை க‌ட‌த்துவ‌தைப் பார்த்தால் அவ‌ர்க‌ள் ஹ‌க்கில் இல்லை என்ப‌து ந‌ம‌க்கு ந‌ன்றாக‌ விள‌ங்குகிற‌து.

3. மேலே குறிப்பிட்ட‌ இர‌ண்டும் செய்யாத‌ ப‌ட்ச‌த்தில் நம் க‌ட‌ந்த‌ கால‌ சரித்திர‌த்தை ப‌டிக்கும்போது நாம் இப்ப‌டிதான் என்ண‌ நாடுகிற‌து. அல்லாஹ் எப்ப‌டி ந‌ம்ரூது, பிர் அவ்ன், அபூஜஹ்ல், க‌டாஃபி ஆகியோரின் முடிவை பின்வ‌ரும் ச‌முதாய‌த்திற்கு பாட‌மாக‌ ஆக்கினானோ அதேபோல் ச‌ம்ப‌ந்த‌ப்பட்ட‌ ச‌ங்க‌ நிர்வாகிக‌ளின் முடிவையும், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு தொட‌ர்ந்த‌ ந‌ப‌ரின் முடிவையும் அல்லாஹ் ஆக்கி விடுவானோ என்று அஞ்சுகிறோம். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இத்த‌கைய‌ நிலையை அஞ்சிக்கொள்ளுங்க‌ள்.

அபூ சுஹைமா said...

சகோ. அதிரை சயீத்,

முதல் முறையாக உங்கள் பின்னூட்டத்தை வாசிக்கிறேன். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியுமா? பொதுவில் சொல்ல இயலாத எனக்குத் தெரிந்த தகவல்களையும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். எனில் என்னை abusuhaima@gmail.com அல்லது +96597919697 என்ற எண்ணில் அழைத்து அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே.

இப்படி நான் கேட்கக் காரணமும் உண்டு. "கள்ளப்பெயரில் நிறைய ஆட்களும் உண்மை பெயரில் ஒருசிலரும் வந்து ஆட்டம் போடும் தளம்" என்று குற்றம் சாட்டப்பட்ட அதிரை எக்ஸ்பிஸில் கூட, இப்போதெல்லாம் பின்னூட்டமிடுபவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை.

Unknown said...

//எனக்குத் தெரிந்து ஷம்சுல் இஸ்லாம் அதிரை எக்ஸ்பிரஸில் முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் யாரையும் குற்றம் சாட்டவில்லை. பின்னர் சங்கத்தின் அந்த அறிவிப்புக்கு என்ன காரணம் என தான் கருதுவதை சகோ. யூசுஃப் எழுதினார். அந்தப் பதிவை வாசித்த பலரும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அறிவிப்புக் கண்டனம் தெரிவிப்பதை விடுத்து, இப்படி ஒரு சங்கமே தேவை இல்லை, மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் அவருக்குத் தடை என்பன போன்று கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர். அதற்கு சங்கத்திடமிருந்து பதில் வந்தது.

இதுதவிர, இந்தப் பிரச்சனை தொடர்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேறு வெளியீடுகளையோ கடிதங்களையோ வெளியிட்டதாக நான் அறியவில்லை. இனி, ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் இதுபோன்ற அறிக்கைப் போரில் ஈடுபடுமானால் அவர்களுக்குமான என் பதிலுரை மேலே உள்ள பின்னூட்டம்தான்.///

சகோ. அபூ சுஹைமா அவ‌ர்க‌ளுக்கு.

ச‌ம்சுல் சங்க‌ம் 9 சங்க‌ங்க‌ளுக்கு எழுதிய க‌டிதமும் சில‌ க‌டித‌ங்க‌ளின் ந‌க‌ல்க‌ள் இணைய‌த‌ள‌ங்க‌ளில் வ‌ந்த‌தும் தாங்க‌ள் அறியாதது துர‌திர்ஷ்ட‌ம்தான்.

இன்னும் சங்க‌ நிர்வாகிக‌ள் ஊரில் பொய்பிர‌ச்சார‌ம் செய்வ‌தும், வெளி நாடுக‌ளில் வ‌சிப்போருக்கு டெலிபோன் மூல‌மும் க‌டித‌ங்க‌ள் மூல‌மும் பொய்பிர‌ச்சார‌ம் செய்வ‌தும் த‌ங்க‌ளுக்கு தெரியாம‌ல் போன‌து துர‌திர்ஷ்ட‌மான‌து.

Unknown said...

சகோ. அபூ சுஹைமா அவ‌ர்க‌ளுக்கு.

இப்போதெல்லாம் யாரை ந‌ம்புவ‌து யாரை ந‌ம்ப‌க்கூடாது என்று ஃபில்ட‌ர் செய்வ‌து மிக‌ க‌டிண‌மான‌தாக‌ இருக்கிற‌து.

ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் போல் உண்மையைச்சொல்ல‌ போய் கோர்ட்டு கேசு என்று அழைந்து என் பொருளையும், குடும்ப‌த்தையும் நாச‌ப்ப‌டுத்த‌ விரும்ப‌வில்லை. அத‌னால் த‌ங்க‌ளுக்கு பொதுவில் ப‌கிர்ந்து கொள்ள‌ முடியாத‌ த‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளை என் இமெயிலுக்கு அனுப்பித்த‌ர‌லாம்.

என் இமெயில்: haroon_abu@yahoo.com

அபூ சுஹைமா said...

சகோ. சயீத்,

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அந்தக் கடிதங்களைப் பொதுவெளியில் வெளியிடவில்லை. குறிப்பிட்ட சங்கங்களுக்கு அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எழுதிய மடலைப் பொதுவெளியில் வெளியிட்டதே முதலில் அமானித மீறல் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதுதவிர, தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக எழுதப்பட்ட அந்த மடல்களை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றவர்களுக்குக் கட்டளையிடுகிறது என்று திரிப்பது எந்த வகையில் சாரும்?

//என் இமெயில்: haroon_abu@yahoo.com //

உங்களுக்கு எத்தனை ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகள் வேண்டும்? என்னாலும் தர முடியும்?

ஹைதர் அலி ஆலிமுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற அந்த நபருக்கு எதிராகத்தான் நானும் என் கருத்தைப் பதிந்துள்ளேன். என்ன செய்துவிடுவார் என்னை?

நியாயத்திற்காகவும் உண்மைக்காகவும் போராடும்போது, உங்களை ஆயிரம் பேர் எதிர்த்தாலும் அல்லாஹ்வின் துணை உண்டு என்பதை மறவாதீர்கள். எனவே பயம் வேண்டாம்.

Unknown said...

ச‌ங்க‌ த‌லைவ‌ர் ச‌வால் விட்டு போன‌வுட‌ன் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ அந்த‌ க‌டித‌ம் எழுத‌ப்ப‌ட்டு அனுப்ப‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை எழுத்த‌ர் ம‌ற்றும் ச‌ம்ப‌ந்தப்ப‌ட்ட‌ த‌ட்ட‌ச்சு செய்த‌வ‌ர்க‌ள் மூல‌ம் நான் அறிந்த‌ பிற‌குதான் சகோத‌ர‌ர்க‌ள் எழுதிய‌ "க‌ட்ட‌ளை இட‌ப்ப‌ட்ட‌து" என்ப‌தை நானும் ஊர்ஜித‌ம் செய்தேன்.

நீங்க‌ள் சொல்லும் பொதுவில் ப‌கிர்ந்து கொள்ள‌ முடியாத‌ செய்தி இதுதானா? ப்பூ,

ச‌கோத‌ர‌ரே ந‌ட‌ந்த‌ நிக‌ழ்சுக‌ளை பார்க்கும்போது ச‌ம்சுல் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள் அகங்கார‌த்துட‌னும் ஆதிக்க‌ வெறியிலும், வெளியூர்கார‌ன் என்ற வெறியிலும் செய‌ல்ப‌ட்ட‌தை ஊரின் ந‌டு நிலையாள‌ர்க‌ள் அனைவ‌ரும் அறிவ‌தை தாங்க‌ள் அறிய‌வில்லையா?

மார்க்க‌ பிரச்சார‌ச்ச‌த்தை த‌டை செய்யும் அயோக்கிய‌த்த‌ன‌த்துக்கு வக்காள‌த்து வாங்குகிறீர்க‌ளா? அத்த‌கைய க‌டித‌ம் எழுதிய‌வ‌ர்க‌ள் எத்த‌னை ஆய‌த்துக‌ளை ம‌ன‌ன‌ம் செய்திருக்கிறார்க‌ள்? அல்ல‌து இஸ்லாத்தைப்ப‌ற்றியும் அல்லாஹ்வைப்ப‌ற்றியும் எந்த‌ அள‌வுக்கு அவ‌ர்க‌ளிட‌ம் ஞான‌ம் இருக்கிற‌து என்ற‌ இல‌ட்ச‌ன‌த்தை நான் அவ‌ர்க‌ளிட‌ம் பேசிய‌திலிருந்து அறிவேன்.

இத்த‌கைய த‌டை அல்லாஹ்வால் ந‌ம‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஷ‌ரீய‌த்திற்கு உட்ப‌ட்ட‌தா ?

//உங்களுக்கு எத்தனை ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகள் வேண்டும்? என்னாலும் தர முடியும்?//

என்னிட‌ம் அத்த‌னை ஆயிர‌ம் இமெயில்க‌ள் எல்லாம் இல்லை.

Unknown said...

குறிப்பு என‌து மாமி வீடு, சாச்சா வீடு ஆகீய‌ 4 சொந்த‌ங்க‌ளின் வீடு சித்தீக் ப‌ள்ளி ம‌ஹ‌ல்லாவிற்கு உட்பட்ட‌ மிக‌ அக்க‌ம்ப‌க்க‌த்து வீடு என்ப‌தையும், நான் வெளிம‌ஹ‌ல்லா, அல்ல‌து பாகிஸ்தான், துருக்கி கார‌ பேர்வ‌ளி அல்ல‌ என்ப‌தையும் ச‌கோ. அஹ‌ம‌து அஸ்ல‌ம் போன்ற‌ அடிக்க‌டி வெளிம‌ஹ‌ல்லா என்று கூறும் சகோத‌ர‌ர்க‌ளுக்கு கூறிக்கொள்ள‌ விரும்புகிறேன்.

sabeer.abushahruk said...

இந்தப் பதிவின் பொருளடக்கம் இந்தத் தளத்தில் இரண்டு மூன்று பதிவுகளாகப் பதிக்கப்படாமலிருந்திருந்தால் என்னையும் சேர்த்து இன்னும் எத்தனை பேர்களுக்கு இதன் சாராம்சம் தெரியாமல் போயிருக்குமோ?

ஊர் நடப்புகளை, அதுவும் குறிப்பாக இரண்டு தரப்பு நியாயங்களையும் பாரபட்சம் இல்லாமல் பதிவு செய்து, வருடக்கணக்கில் வெளிநாட்டில் வசிக்கும் அதிரை வாசிகளுக்கும் உள்ளூரில் இருந்தும் விவரம் தெரியாமல் இருக்கும் அதிரை வாசிகளுக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டிய அதிரை நிருபருக்கு என் நன்றிகள் பல.

கருத்திடும் சகோதரர்கள் தத்தமது சரியான அடையாளங்களை இத்தள நிர்வாகிகளிடம் தந்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். சாதகமாகவோ பாதகமாகவோ யார் கருத்திட்டாலும் வரம்பு மீராமல் இருக்கும் வரை அ.நி. அவற்றை அனுமதிக்கலாம்.

தவிர,அப்படிக் கருத்திடுபவரைப் பற்றிய குறிப்புகளை வெளியிடவேண்டும் என்று அரச கட்டளை ஒன்றும் இல்லை. போலி பெயர்களை அனுமதிப்பதில்லை என்னும் நிலைபாட்டில் உள்ள அ.நி. கருத்திடும் ஆள் கள்ளப்பேர்வழி அல்ல என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறது.

மற்றபடி, தெரிந்ததையெல்லாம் சொல்லவேண்டாம் என்பதில் எந்த நியாயமுமில்லை.

Meerashah Rafia said...

adirai saeed சொன்னது…
//ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ள் போல் உண்மையைச்சொல்ல‌ போய் கோர்ட்டு கேசு என்று அழைந்து என் பொருளையும், குடும்ப‌த்தையும் நாச‌ப்ப‌டுத்த‌ விரும்ப‌வில்லை. //

Wow..Excellent.. Marvelous.. Fantastic..
போன் நம்பரை கேட்டதற்கு போலிஸ் ஸ்டேசன் வரை யோசிக்கிறாரே!!
I believe this is called "Thinking Ahead". Keep it up.

//மார்க்க‌ பிரச்சார‌ச்ச‌த்தை த‌டை செய்யும் அயோக்கிய‌த்த‌ன‌த்துக்கு வக்காள‌த்து வாங்குகிறீர்க‌ளா?//
அப்படியா?என் கண்ணுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை..மன்னிக்கவும்..

அதிரைக்காரன் said...

அதிரை ஜாஃபர். அதிரை செய்யது. ஆகிய இ(ஒ)ருவருக்கும் ஒரே பயம் என்னவென்றால் அடையாளத்தை சொன்னால் ஆட்டோ வரும். கோர்ட்டு. கேஸு என்று அலையவேண்டும் என்பதே! என்னே ஒத்த சிந்தனை!! அப்புறம். போலிப்பெயரில் பின்னூட்டமிடுபவரா நீங்கள்? http://adirainirubar.blogspot.com/2011/12/blog-post_08.html சொடுக்கவும்:))

அபூ சுஹைமா said...

அன்பின் சபீர் காக்கா,

உங்களுடைய கருத்தை உங்கள் கருத்து என்றே நான் நம்புகிறேன். நானும் புனைபெயரில் எழுதுவதற்கு ஆதரவாளனே. என்னுடைய / நம்முடைய கருத்துக்கு மாற்றமான கருத்தையே அதிரை நிருபர் குழுமம் கொண்டிருந்தது / கொண்டிருக்கிறது என்பதை இப்போதும் பின்னூட்டப் பெட்டிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள போலி புனைபெயரில் பின்னூட்டமிடுபவரா நீங்கள்? என்ற பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் யார் என அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டபின்னரும் சொல்ல மறுப்பது, சகோ. தாஜுத்தீன் புனைபெயர் குறித்த அந்தப் பதிவில் கூறியது போன்று, நிழல்களோடு உரையாடுவது வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க முடியுமே தவிர சமூக பொருப்புணர்வு என்று சொல்லுவது சற்றே யோசிக்க வைக்கிறது.

தற்போது இத்தகைய நிழல்களை அதிரை நிருபர் குழு ஆதரிப்பது ஆச்சர்யமே.

Yasir said...

இறையில்லத்தின் நிலத்தை அபகரிக்க எண்ணும் ,அபரிகத்துக் கொண்டு இருக்கும் பெயர்தாங்கி முஸ்லிம்களே....கொழுந்து விட்டு எரியும் நரக நெருப்பிற்க்கு கொள்ளிக்கட்டையாக போவீர்கள் எச்சரிக்கை..கோர்ட்டில் வாதம் செய்து சாதகமாக / பாதகமாக தீர்ப்பைப் பெற்றுவிடலாம் ஆனால் வல்ல நாயனின் கோர்ட்டில்

Shameed said...

இங்கே பதியப்பட்டிருக்கும் கருத்துக்கள் பதிவுக்குண்டன விமர்சனமாகவோ அல்லது மறுப்பாகவோ இல்லாமல் கருத்துக்கள் ஏதோ பழைய காழ்புணர்ச்சியில் வரிந்து கட்டிக் கொண்டு சொல்லி வைத்தார்போல் கட்டுரை பதிந்த தளத்தை நோக்கி திரும்புகிறது... மறக்க மணம் தோனவில்லையோ!!

Yasir said...

//பதிந்த தளத்தை நோக்கி திரும்புகிறது// அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது..நாளைவரைப்பார்ப்போமே..கொஞ்சம் பிஸினால கவனம் செலுத்த முடியவில்லை

அபூ சுஹைமா said...

Shameed சொன்னது…

//இங்கே பதியப்பட்டிருக்கும் கருத்துக்கள் பதிவுக்குண்டன விமர்சனமாகவோ அல்லது மறுப்பாகவோ இல்லாமல் கருத்துக்கள் ஏதோ பழைய காழ்புணர்ச்சியில் வரிந்து கட்டிக் கொண்டு சொல்லி வைத்தார்போல் கட்டுரை பதிந்த தளத்தை நோக்கி திரும்புகிறது... மறக்க மணம் தோனவில்லையோ!!//

Yasir சொன்னது…

//பதிந்த தளத்தை நோக்கி திரும்புகிறது// அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது..நாளைவரைப்பார்ப்போமே..கொஞ்சம் பிஸினால கவனம் செலுத்த முடியவில்லை//

இந்தப் பதிவில் வெளியாகியுள்ள என் பின்னூட்டத்தையும் என்னை நோக்கி அதிரை சயீத் என்பவர் தொடுத்த கேள்விகளையும் அதற்கு நான் அளித்த பதில்களையும் தயவு செய்து மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

பல ஆண்டுகளாகவே ஆலிம்களின் தொடர்புகளில் இருந்து வருவதாலும் அடிக்கடி அதிரை சென்று வருவதாலும் எனக்குத் தெரிந்த பொதுவில் சொல்ல இயலாத / சொல்ல விரும்பாத தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டு இந்தப் பதிவை ஒட்டிய தகவல்களைச் சொல்ல முடியும் என்பதற்காகவே அவரது அறிமுகத்தை நான் கேட்டேன். என்னை நம்ப முடியாது என்று அவர் கூறினார். பின்னர், மார்க்கப் பிரச்சாரத்தை தடை செய்யும் அயோக்கித் தனத்துக்கு வக்காலத்து வாங்குகிறீர்களா என்று என் மீதும் பாய்துந்துள்ளார்.

தற்போது அதிராம்பட்டினத்திலேயே ஆலிம்களின் (கவனிக்கவும் லெப்பைகள் அல்லர்; ஆலிம்கள்) வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருக்கும் ஒரே சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை சங்பரிவார் சங்கம் (http://aimuaeadirai.blogspot.com/2012/09/blog-post_12.html) என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்.

தன்னை யாரென வெளிப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவர் மீது புகார்களைக் கூறிக் கொண்டிருப்பவரின் பின்னூட்டங்களை அனுமதிப்பது எவ்வகையில் சேரும்? அதிரை நிருபரின் வாசகன் என்ற முறையில் இப்படிக் கேட்க எனக்கு அனுமதி இல்லையா? இத்தகையோரின் பின்னூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதானே அதிரை நிருபர் குழுவின் முடிவு. அந்த முடிவை ஒட்டித்தானே போலி புனைபெயர் பதிவு இன்றளவும் பின்னூட்டப் பெட்டிக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளது? அதை நினைவூட்டுவது தவறா?

இத்தகைய பின்னூட்டங்களால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? ஆரோக்கியமான முறையில் நம்முடைய வாதங்களை முன்வைக்க முடியாதா? இந்தப் பிரச்சனையில் நீங்களும் நானும் விரும்புவது, சுமுகமான தீர்வைத்தானே? எனில், மாற்றத்தை ஏற்படுத்த முடியாத, நமக்கு எதிரான கருத்துள்ளவர்களைக் குறை கூறுவதிலேயே குறியாக இருக்கும் பின்னூட்டங்களை ஏன் அனுமதிக்க வேண்டும்.

இந்தப் பதிவின் மூலம் இதைப் பதிந்தவர் தகவலாகச் சொல்ல விரும்பினால், பின்னூட்டங்களை அனுமதிக்கக் கூடாது.

இந்தப் பதிவின் மூலம் சுமுக தீர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினால், தீர்வைக் கூறி வரும் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

அதை விடுத்து, தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லாதவர்கள் பதியும் குறை கூறும் பின்னூட்டங்களால் என்னதான் பயன்?

என்னுடைய இந்தப் பின்னூட்டமாவது இந்தப் பதிவுக்குத் தொடர்புடையது எனக் கருதுவீர்கள் என்று நம்புகிறேன்.

(சபீர் காக்கா: அசுஹை, வழக்கம் போல் வளவளா... :-)

sabeer.abushahruk said...

அன்புத் தம்பி அபுசுஹைமா சொல்வதுபோல் அடையாளம் தெரியாத வாசகர் யாராக இருந்தாலும் அவரைப்பற்றிய குறிப்புகள் அதிரை நிருபரிடன் கட்டாயம் இருந்தாக வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் "அதிரை நிருபரின் கண்டிப்பான நிபந்தனைகளில்" ஒன்றான போலி பெயர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதில்லை என்கிற ஷரத்தின்படி சம்மந்தப்பட பின்னூட்டங்கள் உடனடியாகத் தூக்கப்பட வேண்டும்.


(அதே சமயம், யார் என்கிற அடையாளம் தள நிர்வாகிகளுக்குத் தெரியும் எனும் பட்சத்தில்; அவர் விருப்பத்திற்கிணங்க பொதுவில் வைக்க முடியாது என்று தீர்மாணிக்கவும் அ.நி.க்கு உரிமையுண்டு என்பதுவும் என் நிலைபாடே)

அசுஹை, என்றுமே சுவாரஸ்யமான எழுத்தர்தாம். "வளவளா" - தன்னடக்கமாக்கும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆலிம்சா அவர்கள் போதிய விளக்கம் கொடுத்ததை அடுத்து இனி சுமூக தீர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும்.

இதற்கு தகுதியான இரு நபர்களான சங்க செயலர் மற்றும் பொருளாளர் இருவர்களும் சங்கத்தின் மற்ற நிர்வாக சகாக்களுடன் கூடி நல்ல முடிவெடுப்பது சங்கத்தின் களங்கம் போக்கவும் தற்போது நடந்துவிட்ட செயல்களுக்கு தீர்வு ஏற்படுத்தவும் பரஸ்பரம் இருவரிடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் (இன்சா அல்லாஹ்) நிச்சயமாக முடியும்.

சுமூகத் தீர்வுக்கான பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அடையாளமில்லாத போலிகளின் கருத்துக்கள் நல்லதாக இருந்தாலும் அவை பெரும் ஆபத்தானவையாகவே இருக்கும்.

பகைமை வளர்க்கும் பின்னூட்டங்களை உடனடியாக தூக்கி விட வேண்டும்.

மாறி மாறி அறிக்கைப் போர் என்றில்லாமல் மன்னிப்பு, இணக்கம் என்ற நல்ல செய்தி இரு தரப்பிலும் வர வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மௌலானா ஏ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் .தெளிவான விளக்கம்.ஊரில் இருக்கின்ற எனக்கே இப்பத்தான் முழு விவரம் புரிகிறது.
அவர்கள் மீது குற்றம் பழி சுமத்தக்கூடிய நபர்களே நீங்கள் சொல்லக்கூடிய சொல் உண்மையாக இருந்தால்.நாளை வெள்ளிக் கிழமை.
அசருக்கு பின் ஒழுவோடு மெம்பரில் ஏறி இறைவனின் மீது ஆணை இட தயாரா?

அப்படி நீங்கள் சத்தியம் செய்ய மறுத்தாலும் அல்லாஹ் உங்களை கண்டு காணமல் விட்டு விடப்போவதில்லை .

Abu fahim said...

மீரா பிள்ளை அவர்கள் பாத்திமா குப்பத்தை சார்தவர் அவர் பாத்திமா குப்பத்தில் பலஆன்டுகலாக வசீத்து வருகிரார்

அதிரை என்.ஷஃபாத் said...

சங்கம் தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கின்றது.
ஆலிம் அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கின்றார்கள்.
- இது குறித்த விவாதங்கள் பின்னூட்டத்தில் இடம்பெறுவது நாகரிகம் அன்று.

கடந்த காலத்தில் சங்கம் குறித்த ஒரு பிரச்சனை எழுந்த போது, அதை கண்ணியமிகு அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள் தலைமையில் ஒன்று கூடி, மார்க்க அடிப்படையில் அணுகி சுமூகமாக தீர்வு காணும் முயற்சி கையாளப்பட்டது. அந்த கூட்டத்தில் ஆளுக்கு ஆள் எழுந்து பேச அனுமதி வழங்கப்படவில்லை. அப்படி அனுமதிப்பது இஸ்லாமிய முறையும் அன்று. தலைமைக்குக் கட்டுப்பட்டு அந்தக் கூட்டம் நடந்தது.
அது மாதிரியான ஆலிம்கள் தலைமையில் இந்த விஷயமும் ஏன் அணுகப்படவில்லை என்பது விடை தெரியா வினாவாகவே இருக்கின்றது.

இப்படி இவரை எதிர்த்து அவரும், அவரை எதிர்த்து இவரும் என பின்னூட்டங்களில் சண்டையிட்டுக் கொள்ளாமல், சுதந்திர போரட்டத்தையும் இணையத்திலேயே நடத்திவிடலாம் என்னும் போக்கை கையாளாமல், போர்க்கால அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் இதை கையிலெடுத்து இஸ்லாமிய பார்வையில் தீர்த்து வைக்க வேண்டும்.
இனிமேலும் இந்த பிரச்சனை இப்படியே தொடருமாயின், சமுதாய ஒற்றுமைக்கு உகந்தது அன்று.
இது தொடர்பான பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அன்புடன்,
என்.ஷஃபாத்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புச் சகோதரர் மீராசா மற்றும் கருத்துகள் பதியும் சகோதரர்களுக்கு:

இங்குப் பதியப்படும் பதிவுகள் அதனைத் தொடரும் பின்னூட்டங்களில் தொடர்ந்து கருத்துக்கள் பதிந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

குறிப்பாக இந்த பதிவில் பதியப்பட்ட பின்னூட்டத்தில் ஏதுமறியாதவர்களோடு கருத்துரையாடுவது போன்று கருத்திடுவதை தவிர்த்திருக்கலாம். ஏதோ! தீர்ப்புக்காக காத்திருக்கும் கடைக்கோடி பஞ்சாயத்தில் இருக்கும் மண்ணின் மைந்தன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நகையாடல், உண்மையிலே நகைப்புக்குரியதே!. அனைத்து பதிவுகளையும் முழுமையாக படித்துவிட்டுத்தான் உங்கள் கருத்தை பதிந்தீர்களா? இல்லை அதிரைநிருபர் பின்னூட்டம் பதிந்ததும் பளிச்சிடும் வாய்ப்பினை வைத்திருப்பதில் சங்கடமா ?

தங்களைப்போன்ற ஒத்த கருத்துடையவர்களுக்கு தெளிவாக விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.

ஹைதர் அலி ஆலிம், சித்தீக்பள்ளி விவகாரம், ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆகிய விசயத்தில் இதுவரை ஏன் இனிமேலும் நியாயமான நிலைபாட்டில்தான் உள்ளோம்.

ச.இ.சங்கத்தின் தடை அறிவிப்பு செய்தி அதிரைநிருபர் தளத்துக்கு வரவில்லை என்பது நினைவில் இருக்கட்டும். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க பிரச்சாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்ற ச.இ.சங்க கடிதம், ஆயிசா மகளிர் அரங்கம், ஜும்மா பள்ளி, மற்றும் இன்னும் பிற முஹல்லாக்களுக்கு கொடுக்கப்ட்டதோடு அல்லாமல், அதனை நகல் எடுத்து வீடுவீடாக அன்றைய தினமே விநியோகித்தார்கள். அதோடு இன்றளவும் அதிரையில் ஒரு சில சுயநலக்காரர்கள் விநியோகித்து வருவதுடன் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் தங்களுக்கு உள்ள வெறுப்பை பகிரங்கமாக காட்டி வருகிறார்கள்.

சகோதரர் LMS முஹம்ம்து யூசுப் அவர்கள் அனுப்பிய பதிவை நேரம் தாழ்த்தி, ஊரில் உள்ள உண்மை நிலையை நன்கு விசாரித்த பின்னரே அதனைப் பதிவுக்கு கொண்டு வந்தோம். அதற்கான மறுப்பும் சம்சுல் இஸ்லாம் சங்கம் ஒரு பதிவாக அனுப்பியதையும் அப்படியே “அவதூறு பரப்பும் வலைத்தளம்” என்று குறிப்பிட்டு அனுப்பியிருந்தும் நாங்கள் அந்தப் பதிவைப் பதிந்து எங்கள் நிலைபாட்டை உறுதிபடுத்திக் கொண்டோம். சித்தீக்பள்ளி மற்றும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தங்களின் தன்னிலை விளக்கமாக அனுப்பித் தந்த பதிவையும் அவர்க்ளின் வேண்டுகோளுக்கின்ங்கவே பதிவு செய்தோம். இருதரப்பு தகவல்களைப் பதிந்த இந்த நிலைபாட்டை சீர்தூக்கி பார்த்தால் இதுதான் ஊடக தர்மம் என்று (அன்று சொல்லப்பட்டது போன்று) இன்றும் சொல்வார்கள். இதில் எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் நாட்டாமைகளின் தீர்ப்பை!? ஒருவேளை சாதகமாக இருந்திருந்தால் சரியான தீர்ப்பு, இல்லையேல் நாட்டாமை தீர்ப்பை மாத்து !?

பின்னூட்டங்களை அனுமதிப்பதும், அனுமதிக்காமல் இருப்பதும் அதிரைநிருபரின் நெறியாளுமைக்குட்பட்டது. இதில் கருத்துரைகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் இவ்வாறானவைகளாக இருப்பின் அதனை ஏற்பதும் மறுப்பதும் அதிரைநிருபரின் நெறியாளுமைக்குட்பட்டது. அங்கே ஆனையிடவும், ஆனவத்தில் எதனையும் கருத்திடவும் எவருக்கும் அனுமதியில்லை. வாசகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் கன்னியமான வலைத்தளமிது. தற்போதைய சர்ச்சையான பதிவுகளில் வெளியான ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள், வாசகர்களின் தனி மின்னஞ்சல் சுட்டலுக்கு பின்னரும் பல கருத்துக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இது ஒரு இலவச ஊடகமே ! அதிரையில் பணம் பலம், அதிகார பலம் என்று அஞ்சி, ஒருதலைபட்சமாக தகவல்களை வெளியிட அதிரைநிருபர் ஒருபோது துணைபோகாது.

எந்த அல்லாஹ் நம்மை படைத்தானோ அவனுக்கு மட்டுமே அஞ்சுவோம் அவனிடமே பாதுகாவல் தேடுவோம் இன்ஷா அல்லாஹ்….! இதில் உடன்படுவீர்கள்தானே !.

அதிரைநிருபர் குழு

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்! தன்னிலை விளக்கம் தெளிவாக உள்ளது.

ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன், ஒரு பி.ஜே.பிக்காரன் மேலோ அல்லது இந்து முன்ணணிக்காரன் மீதோ அபாண்ட பழிசுமத்தி வழக்கு தொடுத்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதில்லை அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இயக்கங்களைச்சார்ந்தவர்களாக இருந்த போதிலும்.

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள் என்ற நம் மார்க்கத்தின் நல்ல கருத்தை வேற்றுமை என்னும் கயிற்றை வசதிக்குத்தகுந்தார்போல் பற்றிப்பிடித்துக்கொண்டு சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறது நம்ம ஊர்.

வாப்பா, உம்மாவை கவனிப்பதில், வரதட்சிணையை வேரோடு அழிப்பதில், பிறர் சொத்தை மனதால் கூட அபகரிக்க நினைக்காமல் இருப்பதில், எவ்விதத்திலும் வட்டை வாங்காமல் இருப்பதில், தறிகெட்டு ஓடும் வாலிப ஆண்கள், பெண்களை மார்க்க போதனைகள் மூலம் தடுப்பதில், சொந்த, பந்தம் பேணுவதில் என இது போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் காட்டப்படாத அவசரம் ஊர்/பள்ளிப்பிரச்சினைகளில் புரளியைக்கிளப்பி, வதந்தீயைப்பரப்பி, பரபரப்பை ஏற்படுத்தி, அமைதியை குலைத்து அதில் சிலர் ஆனந்தம் அடைவதலால் அவர்களுக்கு கிடைக்கும் பலாபலன்கள் தான் என்ன, என்ன?

"The mill of the god grind slow; but sure"

அரசின் அன்றே கொல்வான்; அல்லாஹ் நின்றும் கொல்வான், நிற்காமலும் கொல்வான் ஏதேனும் ஒரு வழியில்.......அஞ்சிக்கொள்வோம்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய சகோதரர்களே !

சமீபத்தில் ஊர் அறிந்த பிரச்சினைகளாக ஹைதர் அலி ஆலிம், சித்தீக் பள்ளி நிலவிவகாரம், சம்சுல் இஸ்லாம் சங்க பதிவு என்று தொடர்ந்து பதிவுகள் மாறி மாறி பதிந்தாகிவிட்டது. இவைகள் யாவும் இங்கே ஆவனப்படுத்துவதற்கு அல்ல அதன் நிலைபாட்டை அதிரை சகோதரர்கள் அறிந்து கொள்வதற்காகவும் உண்மை நிலையின் அலசி ஆரய்ந்து அதன்பால் நிலைத்திருக்கவும் மட்டுமே.

அதிரைநிருபரில் போலி பெயர்கள், அனாமத்தாக வரும் பின்னூட்டங்களுக்கு அனுமதியில்லை என்ற நிலைபாட்டில் தெளிவாக இருந்தும், பதிவுகளை அனுப்பித் தந்தவர்கள் அதற்கான விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்ற உறுதி அளித்ததன் பின்னரே பின்னூட்டமிட்டவர்களில் அறிந்த அறியாத பெயர்களுடைடைய சகோதரர்களின் கருத்துகள் இவ்விடயத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

இதுவரை மேற்குறிப்பிட்ட பதிவுகளில் கருத்துகள் பதிந்த சுய அறிமுகம் காட்டிக் கொள்ளாத சகோதரர்கள் இன்னும் 12 மணிநேரத்திற்குள் editor@adirainirubar.in மின்னஞ்சலுக்கு அனுப்பித் தராவிட்டால் அவர்கள் அனைவரின் கருத்துகள் உடனடியாக நீக்கம் செய்யப்படும்.

சுய அறிமுகம், கருத்துகளை பதிந்த சகோதரர்களை அடையாளம் காட்டுவதற்கு அல்ல, அவர்களின் கருத்துகளில் இருக்கும் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதற்காகவே.

அதிரை சகோதரர்கள் மட்டுல்ல, அல்லாஹ் நம் அனைவரின் செயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மனதில் நிறுத்தி ! மேன்மையடைந்த மக்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு உறவாடுவோம் இன்ஷா அல்லாஹ் !

அன்புடன்,

நெறியாளர்
www.adirainirubar.in

Unknown said...

//அபூ சுஹைமா சொன்னது…
சகோ. சயீத்,

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அந்தக் கடிதங்களைப் பொதுவெளியில் வெளியிடவில்லை. குறிப்பிட்ட சங்கங்களுக்கு அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எழுதிய மடலைப் பொதுவெளியில் வெளியிட்டதே முதலில் அமானித மீறல் என்பதை நினைவில் கொள்ளவும். //

//அதிரை-நிருபர்-குழு சொன்னது…
ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க பிரச்சாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்ற ச.இ.சங்க கடிதம், ஆயிசா மகளிர் அரங்கம், ஜும்மா பள்ளி, மற்றும் இன்னும் பிற முஹல்லாக்களுக்கு கொடுக்கப்ட்டதோடு அல்லாமல், அதனை நகல் எடுத்து வீடுவீடாக அன்றைய தினமே விநியோகித்தார்கள். அதோடு இன்றளவும் அதிரையில் ஒரு சில சுயநலக்காரர்கள் விநியோகித்து வருவதுடன் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் தங்களுக்கு உள்ள வெறுப்பை பகிரங்கமாக காட்டி வருகிறார்கள்.//


மேலே அதிரை-நிருபர்-குழு குறிப்பிட்ட‌திலிருந்து சம்சுல் ச‌ங்க‌ம் மேற்ப‌டி க‌டித‌ங்க‌ளை "அமானித‌மாக‌"""" ஊர் முழுக்க‌ வினியோகித்து த‌ன் ஆத்திர‌த்தை வெளிக்காட்டிய‌து என்ப‌து புல‌னாகிற‌து.

Shameed said...

// நீங்கள் செய்த மிக பெரிய தவறு தரகர் தெருவை சேர்ந்த சகோதர்களை அழைத்து வந்ததுதான் அதை ஏன் இந்த விளக்கத்தில் தெரிவிக்கவில்லை?அன்று வந்த சகோதர்களின் இன்றை நிலையை அல்லாஹ் உலகுக்கு காட்டிவிட்டான்!//

இந்த தரகர் தெரு சகோதரர் A.J.பள்ளி சுற்றுசுவர் கயவர்களால் இடிக்கப்பட்டபோது தன் உயிரையும் பரிக்கத்துணிந்த கயவர்களை நேருக்கு நேர் நின்று இடிக்கப்பட்ட இறை இல்லத்தின் சுற்றுசுவரை இறைவன் துணை கொண்டு துணிச்சலுடன் கட்டி முடித்தவர்

அவரின் தற்போதைய நிலை = தமது தெருவில் நியாயத்தை நிலை நாட்டவேண்டும் என்பதற்காக ரத்தம் சிந்தி போலீஸ் கேஸ் என சென்றுகொண்டிருக்கின்றார் இதில் சித்திக் பள்ளி இடத்தை மீட்டு கொடுக்க இவர் உதவினார் என்பதற்காக சிலர் தலை நகரத்தில் இருந்து கொண்டு பல சங்கடங்கள் கொடுத்து வருகின்றானர் இப்போது இந்த சகோதரரின் நிலை மனிதர்கள் கொடுக்கும் தொல்லைக்கு ஆளாகி உள்ளார் அல்லாஹ்வின் சொத்தை பாதுகாப்பவருக்கு தொல்லை கொடுக்கும் இவருகளுக்கு இறைவன் தொல்லை கொடுத்தாள் தாங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்

அல்லாஹ்வின் சொத்தை எந்த முஹல்லா சகோதரர் மீட்டாள் என்ன இதில் பலருக்கும் பற்றிக்கொண்டு எரிவது ஏன் ?

Adirai khalid said...

ஓர் விஷயம் அரங்கத்திற்கு வந்த பிறகு அந்தரங்கம் எதற்கு?

வெளிப்படையான பின்னுட்டம் வேண்டம் என்று கூறும் சகோதர்களே உங்களுக்கும், சித்திக் பள்ளி மற்றும் ஹைதர் அலி மௌலவிக்கு எதிராக அநியாயம் செய்பவர்களுக்கும் ஏதும் அந்தரங்க தொடர்பு உண்டோ எண்ணத் தோன்றுகிறது?

அதிரை சயீத் என்பவரின் நிலைப்பாடும் என்போன்ற அநேக பாமர மக்களின் நிலைப்படும் ஒன்றே

ஆதலால் தனிப்பட்ட முறையில் தொலைபேசி எண்ணை கேட்டு அல்லது முகவரி கேட்டு தனியாக விளக்க மலுக்காமல்? பொதுவில் வெளிப்படுத்த வேண்டும்.

அப்படி பொதுவில் விவாதிக்க முடியாத அப்படியான ராணுவ இரகசியம்தான் என்ன?

நீங்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகின்றிர்களா?

சத்தியத்திற்கு எதிராக உங்களை வேலை செய்ய தூண்டும் காரணிகள்தான் என்ன ? அல்லது உங்களின் தனிப்பட்ட நிலைப்பாட என்று கூற வேண்டிய அவசியம் இருந்தால் கூரலாம்
இல்லாவிடில் பரவாயில்லை
நம் அனைவரின் மனநிலையை, செயல்களை அல்லாஹ் அறிவான்

Yasir said...

//மின்னஞ்சலுக்கு அனுப்பித் தராவிட்டால் அவர்கள் அனைவரின் கருத்துகள் உடனடியாக நீக்கம் செய்யப்படும்.// அ.நி நெறியாளர் அவர்களே...அதிரை சயீத் என்ற பெயருடன் அவர் எழுதியுள்ளார், அனாமத்தாக எழுதவில்லை..அவர் எழுதிய கருத்துக்கள் யாரையும் புண்படுத்துவதாக தெரியவில்லை..இது நடுநிலை வாதியிடம் இருந்து வரும் பொது கருத்தாக எனக்கு படுகின்றது..நீக்க வேண்டிய அவசியம் இல்லை...இதபோல் ஆள்களுக்கு சிலர் தொந்தரவு கொடுத்துவருவது வரலாறு நமக்கு சொல்லிதரும் உண்மை இவர் வாக்கு அட்டையை காட்டிவிட்டுதான் “பின்னூட்டம்” இட வேண்டும் என்று நீங்கள் சொன்னால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை...தனிநபர் தாக்குதல் அவரிடம் இல்லை

Meerashah Rafia said...

//அன்புச் சகோதரர் மீராசா மற்றும் கருத்துகள் பதியும் சகோதரர்களுக்கு://
பல சகோக்களுக்களுக்கு வழங்கப்பட்ட தெளிவுரையில் என் பெயர் மட்டும் முதலிடம்!! மகிழ்ச்சி..
இதனால் இந்த பதினொன்று பத்தியும் எமக்கும் பொருந்தும் என்றால் நானும் கொஞ்சம் விடை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..

//ஏதோ! தீர்ப்புக்காக காத்திருக்கும் கடைக்கோடி பஞ்சாயத்தில் இருக்கும் மண்ணின் மைந்தன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நகையாடல், உண்மையிலே நகைப்புக்குரியதே.//
எந்த நகைச்சுவையை சொல்றீங்கன்னு புரியவில்லை..இங்கு ரெண்டு, மூணு கிச்சி கிச்சி மூட்டல் நடந்திருக்கின்றது..
ஒருவேளை அந்த "நாட்டாமை" விஷயம் உங்களுக்கு புன்னகை ஏற்படுத்தியிருப்பின் "சீரியசான பதிவில் சிரிப்பு மூட்டக்கூடாதென்று நம் அதிரை நிரூபரில் விதி இல்லை என்பதை நான் அறிந்ததே. அபூ சுஹைமா ,Ahamed Aslam, M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு), அதிரை என்.ஷஃபாத் அவர்களும் பின்னூட்ட மட்டுறுத்தலை பற்றி எழுதிருந்தார்கள்..ஒத்த கருத்தாக இருந்தாலும் அதெல்லாம் நகைச்சுவையாக இல்லை என்பதற்கு நான் என்ன செய்ய..

//அனைத்து பதிவுகளையும் முழுமையாக படித்துவிட்டுத்தான் உங்கள் கருத்தை பதிந்தீர்களா?//
நான் முழுசையும் படித்துவிட்டேன்பா!..ஒலி வடிவிலும் கேட்டுவிட்டேன்..


//ஹைதர் அலி ஆலிம், சித்தீக்பள்ளி விவகாரம், ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆகிய விசயத்தில் இதுவரை ஏன் இனிமேலும் நியாயமான நிலைபாட்டில்தான் உள்ளோம்.//

உங்கள் நிலைப்பாட்டை பற்றி நான் எதுவும் பேசவில்லை.. வேறு சகோதரர்கள் பேசியிருந்தால் இந்தகேள்வியை அவர்களுக்கு "PASS" செய்து நான் "ESCAPE " ஆகின்றேன்..

//பின்னூட்டங்களை அனுமதிப்பதும், அனுமதிக்காமல் இருப்பதும் அதிரைநிருபரின் நெறியாளுமைக்குட்பட்டது. இதில் கருத்துரைகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் இவ்வாறானவைகளாக இருப்பின் அதனை ஏற்பதும் மறுப்பதும் அதிரைநிருபரின் நெறியாளுமைக்குட்பட்டது.//

பின்னூட்டத்தை நிறுத்தச்சொல்லி பதிந்திருக்கும் எவரும் "நிறுத்தியே ஆகவேண்டும், இல்லாவிடும் கொலை மிரட்டல் விடுப்போம்" என்று கூறியதாக தெரியவில்லை.. சொந்த கருத்தை பதிகின்றோம்.. பிடிக்காவிடில் மட்டுறுத்துங்கள்.. இந்த பதிவிற்கு பின்னூட்டத்தை நிறுத்த சொல்வதற்கு காரணங்களை மிக தெளிவாக அனைவரும் சொல்லித்தான் நிருத்தசொல்கின்றோம் என்பதை நெறியாளரும் அறிந்துதான் வெளியிடுகின்றார் என்பதை கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்..

//வாசகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் கன்னியமான வலைத்தளமிது.//
மதிப்பதை மதித்துத்தான் வேண்டுகோள் வைக்கப்பட்டது..வைக்கப்படுகின்றது.. ஊரில் நலன் விரும்பி, தங்கள் ஊடகத்தை மதித்து வைக்கப்படும் வேண்டுகோளை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் வசம். நம் வேண்டுகோளை புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை என்று நாங்கள் இருப்பதும் தவறில்லை, ஏற்க முடியாதென்று நீங்கள் இருப்பினும் தவறில்லை.. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.. அவனிடமே விட்டு வைப்போம்..

அபு அபீரா said...

சகோ அபுசுஹைமா அவர்களுக்கு,
//தற்போது அதிராம்பட்டினத்திலேயே ஆலிம்களின் (கவனிக்கவும் லெப்பைகள் அல்லர்; ஆலிம்கள்) வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருக்கும் ஒரே சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை ...//

ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பற்றி சும்சுல் இஸ்லாம் சங்கம் தனது லட்டர் பேடில் மேலத்தெரு ஜூமுஆ பள்ளிக்கு எழுதிய கடிதத்தில், ..நமதூர் உலமாக்கள் (அப்துல்காதில் ஆலிம்சா உட்பட)பலரும் புறம் தள்ளப்பட்டு இவரே மிகைத்து நிற்கவேண்டும் என ஆசைபடுகிறார். இவரது போக்கை நீடிக்கவிட்டால் நமது ஊருக்கு நல்லதல்ல'

அபுசுஹைமாவைப் பொருத்தவரை ஒரு ஆலிமைப் பற்றி மற்ற சங்கங்களுக்கு இப்படி அபாண்டமாக ஒரு பொய்யை கற்பனை செய்து எழுதுவது தான் ஆலிம்களின் வழிகாட்டல் படி நடக்கும் சங்கம் போலும்! ஹைதர் அலி ஆலிம் இப்படி எண்ணிதான் செயல்படுகின்றார் என்பதை இவர்கள் எப்படி - எந்த ஞானத்தை வைத்து - கண்டுபிடித்தார்கள் என்பதை சகோதரர் முடிந்தால் விளக்கவும்.

பித்அத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் பாதிப்படைந்த லெப்பைமார்களும், வட்டிக்கு எதிராக பேசியதால் பாதிக்கப்பட்ட பல பணக்காரர்களும், ஜகாத் சம்பந்தமாக சத்தியத்தை எடுத்துக்கூறியதால் தாங்கிக்கொள்ளமுடியாத மத்ஹப்பவாதிகளும், சித்தீக் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்களை தைரியத்துடன் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்துக்கொண்டு - கூடவே சங்கத்தையும் சேர்த்துக்கொண்டு – ஹைதர் அலி ஆலிமை ஊரைவிட்டு துரத்தியடிக்க வேண்டும் என்று கங்ஙனம் கட்டி அலைந்துக்கொண்டிருக்கும் இந்தவேலையில், இவர்களுடன் சேர்ந்துக்ககொள்ள அபூசுஹைமாவை தூண்டியது எது என்று தெரிந்துக்கொள்ளாமா? அல்லது ஹைதர் அலி ஆலிமை நீங்கள் எதிர்பதற்கு வேறு விஷேசமான காரணம் ஏதும் இருந்தால் அதை கூறலாமே!

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

msm.naina md -

///ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன், ஒரு பி.ஜே.பிக்காரன் மேலோ அல்லது இந்து முன்ணணிக்காரன் மீதோ அபாண்ட பழிசுமத்தி வழக்கு தொடுத்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதில்லை அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இயக்கங்களைச்சார்ந்தவர்களாக இருந்த போதிலும்.

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள் என்ற நம் மார்க்கத்தின் நல்ல கருத்தை வேற்றுமை என்னும் கயிற்றை வசதிக்குத்தகுந்தார்போல் பற்றிப்பிடித்துக்கொண்டு சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறது நம்ம ஊர்.///

அல் குர்-ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் ஏக இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்ட தலைமையில் சத்திய தூதர் வழியில் ஸஹாபாக்கள் இருந்ததால் அல்லாஹ் இஸ்லாத்தினை அவர்கள் மூலமாக நம் அளவில் கொண்டுவந்துள்ளான்..

அவ்வாறு இல்லாமல் அவரவர் தாம் சொல்வதும் செய்வதும் தான் மார்க்கம் என்று நினைத்து செயல்படுவதினால்தான் பிரச்சனைகள் கூடிக்கொண்டே செல்கிறது.

தற்போது தேவை ஊருக்கு ஒரு இஸ்லாமிய தலைமை அதற்கு கட்டுப்பட்ட மக்கள்

எந்த ஒரு சமுதாயமும் தன்னைத்தானே சீர்படுத்திக்கொள்ளதவரை அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழி காட்ட மாட்டான் என்பது வான்மறையின் கருத்து என்பதனை அனைவரும் அறிவோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானகவும்.

Unknown said...

மற்றார்களுக்கு பயந்து இணையத்தில் மட்டுவாது அதிரையின் மானம் காப்போம் என்று மார்தட்டி பேசும் அன்பு சகோதரர்களே... ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமானது தானே என்று ஒரு சில சகோதரர்கள் சொன்னார்கள், நான் யார் என்பதை அறிந்துக்கொள்ள அசைப்பட்ட சகோதரர்கள் தாங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நான் முன்பு கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன். பதில் தாருங்களேன்..

மன்னிப்பு என்ற ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுதரவில்லையா? பெரும்பாவங்களையே மன்னிப்பவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ஹைதர் அலி ஆலிம் விசயத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை எங்கே போனது? மன்னிப்பு என்ற வார்த்தையை எடுத்துச் சொல்ல மறந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகாரபூர்வ மார்க்க அறிஞர்கள் எங்கே சென்றார்கள்? இந்த கேள்விகளுக்காவது சங்கம் பதில் தருமா?

சித்தீக்பள்ளி நிர்வாகம் "எந்த நிலையிலும் ஷரியத்து முறைப்படி இணைக்கமாகவும் சுமூகமாகவும் நடந்துகொள்ளவே விரும்புகிறோம்" என்று கூறிவிட்டார்கள். ஹைதர் அலி ஆலிம் அவர்களும் "தான் யாரையும் அவமானபடுத்தவில்லை, எந்த ஒரு தவறான பேச்சும் பேசவில்லை, எந்த ஒரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவாக சொல்லி சந்தியம் செய்ய தயார்" என்றும் அறிவித்துவிட்டார்கள்.

தவறு செய்பவன் மனிதன். மனிதன் என்ற அடிப்படையில் தவறு இருபக்கமும் நடைதிருக்கலாம். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மன்னித்துவிட்டு, தூய இஸ்லத்திற்காக பாடுபட முயலவேண்டும். ஊரில் திருத்தவேண்டியவைகள் நிறையவே உள்ளது என்பதை மட்டும் மனதில் நிறுத்தி சுயநலனை தூக்கி எறிந்து பொதுநல நோக்கத்தில் நடந்து வரும் சம்வங்களை அனுக முயற்சி செய்யலாமே. ஆட்சி அதிகாரம், ஆணவ போக்குடையவர்களை ஓரங்கட்ட முயற்சிக்கலாமே.

மன்னிப்பு என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று கங்கனம் கட்டுக்கொண்டிருந்தால். மேலும் மேலும் அவமானப்பட போதுவது என்பது என்னவோ உறுதி. அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

அதிரைநிருபர் நெறியாளருக்கும் என் கருத்தை படிப்பவர்களுக்கும், என்னுடைய கருத்தில் தவறேதும் இருந்தால் நீக்கிவிடுலாம். தவறில்லை என்றால் அப்படியே வைத்துவிடுங்களேன். என்னுடைய கருத்துக்களில் வில்லங்கமிருந்தால் என்னுடைய சுய அறிமுகம் தேவை என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயம் வில்லங்கமான கருத்துக்கள் பதியமாட்டேன் சகோதரர்களே.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு ஸஹாபாக்களிடம் கருத்துவேறுபாடுகள் இருந்தது, ஆனால் தங்களின் வாழ்நாட்களில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால் இன்றோ உலமாக்கள் பலரிடம் கருத்துவேறுபாடுகளும் இருந்து வருகிறது, கூடவே சுயவெறுப்புகளுடன் ஒற்றுமையின்மையே மேலோங்கியுள்ளதை மிக மிக வருத்தத்துடன் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.

நல்லுள்ளதோடு சிந்திபதற்காக மட்டுமே என்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

Shameed said...

//தற்போது அதிராம்பட்டினத்திலேயே ஆலிம்களின் (கவனிக்கவும் லெப்பைகள் அல்லர்; ஆலிம்கள்) வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருக்கும் ஒரே சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை ...//


மற்ற சங்கங்கள் எல்லாம் பாபாஜி குருஜி வழி காட்டுதல் படி நடப்பதுபோல் தாங்கள் கருத்து இட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது

crown said...

Shameed சொன்னது…

//தற்போது அதிராம்பட்டினத்திலேயே ஆலிம்களின் (கவனிக்கவும் லெப்பைகள் அல்லர்; ஆலிம்கள்) வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருக்கும் ஒரே சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை ...//


""மற்ற சங்கங்கள் எல்லாம் பாபாஜி குருஜி வழி காட்டுதல் படி நடப்பதுபோல் தாங்கள் கருத்து இட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது""
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. சாகுல் சிக்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!அதானே? பஜ்ஜி,சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு இப்படி பொறுப்பு இல்லாமல் கருத்து சொல்வது எப்பத்தான் மாறுமோ? சரியா கேட்டிய இதுல எனக்கு ஏற்கனவே விலா வலி! இதில் அதை மேலும் ஆக்கியது உங்கள் கேள்வி!-

Yasir said...

//பாபாஜி குருஜி வழி காட்டுதல் படி நடப்பதுபோல் // ஹாஹாஹாஹா ஜோக் ஆஃதி யியர் 2013...காக்கா ரூம் போட்டு யோசிப்பியலோ....அதான

Yasir said...

ஆலிம்கள் என்பவர்கள் தாஃலிம் படிக்கமட்டும் இல்லை,சில வசதியான வீடுகளுக்கு சென்று கறியானமும்,வட்டலப்பமும் சாப்பிவதற்க்கு மட்டும் இல்லை - 1993 வருடம் என்று நினைக்கின்றேன் இஷா தொழுவ வந்த கண்ணியதிற்க்குரிய அலீய் அலிம்சா அவர்கள் கடற்க்கரைதெரு கந்தூரி நடந்துகொண்டு இருக்கும்போது பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல்,யாரப்பற்றியும் பயப்படாமல் இது ஹராம்மென்று “ஹக்”கை எடுத்துக்கூறினார்கள்..அவர்தாம் நான் கண்ட உண்மையான ஆலீம்..அல்லாஹ் அவர்களின் கபூரை பிராகாசமாக்கி வைக்கட்டும்..அவர்கள் எங்கே ..பள்ளி நிலத்தை கொள்ளை அடிக்கும் பிசாசுகளுக்கு குங்குலீயம் காட்டும் சில ஆலீம்கள் எங்கே

அபூ சுஹைமா said...

Shameed சொன்னது…

//தற்போது அதிராம்பட்டினத்திலேயே ஆலிம்களின் (கவனிக்கவும் லெப்பைகள் அல்லர்; ஆலிம்கள்) வழிகாட்டுதல்படி நடந்து கொண்டிருக்கும் ஒரே சங்கமான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை ...//

//மற்ற சங்கங்கள் எல்லாம் பாபாஜி குருஜி வழி காட்டுதல் படி நடப்பதுபோல் தாங்கள் கருத்து இட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.//

அன்புச் சகோ. ஹமீது காக்கா,

நான் அறிந்தவரை சங்கத்தின் ஆலோசகர்களாக இரண்டு ஆலிம்களைக் கொண்டிருப்பது தற்போதைய ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமே. (ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முந்தைய நிர்வாகத்திலும் இப்படி இல்லை.) அதனைச் சிறப்பித்தே சொன்னேன். இப்படிச் சொன்னதால் மற்றவர்கள் பாபாஜியையோ அல்லது குருஜியையோ ஆலோசகர்களாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள் அல்ல. அப்படி ஒரு பொருளைத் தந்து அது உங்களுக்கோ அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கோ வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக உங்களிடமும் சம்பந்தப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன். மன்னிப்புக் கோருவதற்கு நான் வெட்கப்படுபவன் அல்லன்.

இந்தப் பதிவில், அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்களை அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகளான சங்பரிவாரத்துடன் ஒப்பிட்டது பின்னூட்டங்கள் இட்டது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அல்லது அவர்கள் உங்கள் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, அது உங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லையா?

Unknown said...

ச‌ம்ப‌ந்தித்திற்கு உட்ப‌ட்ட‌ ஆலோச‌க‌ர் ஆலிம் அவ‌ர்க‌ளிட‌ம் த‌ற்போது ஊரில் உள்ள‌ சகோத‌ர‌ர். ஷாஃபி அவ‌ர்க‌ளே இந்த‌ ஆலிமிட‌ம் க‌டித‌ம் எழுதும் முன் ம‌ஷ்வ‌ரா செய்ய‌ப்ப‌ட்ட‌தா? அதில் தாங்க‌ள் க‌ருத்து என்ன‌ என்ப‌தை அவ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி ஆலோச‌னை வ‌ழ‌ங்கினீர்க‌ள்? அல்லாஹ்வுக்கு ப‌ய‌ந்து ச‌த்திய‌ம் செய்து உண்மை சொல்லுங்க‌ள் என்று உண்மையை கேட்டு வெளியிடும்ப‌டி அன்புட‌ன் கேட்டுக் கொள்கிரேன்.

Shameed said...

//இந்தப் பதிவில், அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்களை அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதிகளான சங்பரிவாரத்துடன் ஒப்பிட்டது பின்னூட்டங்கள் இட்டது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அல்லது அவர்கள் உங்கள் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, அது உங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லையா? //

அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டாள் மட்டும் போதுமா ?அதன்படி நடக்க வேண்டாமா ?

பள்ளிவாசல் சொத்தை பாதுகாக்க ஏன் அடுத்த முஹல்லாவாசிகள் வருகின்றார்கள் என்று இழிவு செய்யும் இவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டாள் மட்டும் போதுமா ?

அல்லாஹுவின் சொத்தை பாதுகாக்க அடுத்த முஹல்லா என்ன அத்திக்கடையில் இருந்தும் வரலாம் அம்மாபட்டினத்தில் இருந்தும் வரலாம்

நமது ஊரில் உள்ள எல்லா இஸ்லாமிய சங்கங்களும் பிரச்னை என்று வரும்போது ஆலிம்கள் உதவியை நாடுகின்றார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை அப்படி இருக்கும்போது அதிராம்பட்டினத்தில் ஆலிம்கள் வழி காட்டுதல்படி செயல்படும் ஒரே சங்கம் சம்சுல் இஸ்லாம் சங்கம் என்று கூறுவது உண்மைக்கு மாறானது

Meerashah Rafia said...

நகைச்சுவையாக பின்னூட்டமிட்டதை சுட்டிக்காட்டிய நெறியாளருக்கு இந்த பின்னூட்டத்தில் பெயர் சொல்லி தாக்கும் போக்கு(மு.இ.ஷாஃபி சொன்னது…) தங்கள் நெற்றிக்கண்ணிற்கு தெரியவில்லையா என்று கேட்கதோன்றுகின்றது..முடிந்தால் பதில் கூறவும்..இல்லாவிடில் 'நீங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் கூற அவசியமில்லை' என்றாவது கூறவும்..

Unknown said...

// ஆலிம்க‌ளை ஆலோச‌க‌ர்க‌ளாக‌க் கொண்ட‌ ஒரே ச‌ங்க‌ம்//

இந்த‌ ஆலிம்க‌ள்தான் 9 ச‌ங்க‌ங்க‌ளுக்கு க‌டித‌ம் எழுத‌ ஆலோச‌னை வ‌ழ‌ங்கினார்க‌ளா? அத‌ற்காக‌ எங்கிருந்து அவ‌ர்க‌ள் ஹ‌தீதை எடுத்தார்க‌ள்?

இவ‌ர்க‌ளுக்காக‌ கொடி தூக்கும் இவ‌ர்க‌ளின் சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள் நாளை அல்லாஹ்வின் முன் வ‌ழ‌க்காட‌ வேண்டியிருக்கும் என்ப‌தை அஞ்ச‌வில்லையா? க‌டித‌ம் எழுதிய‌வ‌ர்க‌ளும் எழுதும்ப‌டி ஆலோச‌னை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளும் அல்லாஹ் றஸூல் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் க‌ட்ட‌ளையை நிறைவேற்றுவ‌த‌ன் ஒரு அடையாள‌மாக‌த்தான் இப்படி அல்லாஹ்வின் பிர‌ச்சார‌த்தை த‌டை செய்து க‌டித‌ம் எழுதினார்க‌ளா?

அதிரை என்.ஷஃபாத் said...

/*திருடன் கையில் சாவியைக் கொடுக்கச் சொல்வது போலிருக்கிறது*/

முன்பு நடந்த சங்கம் சம்பந்தப்பட்ட கூட்டம் எப்படி ஆலிம்கள் தலைமையில் நடத்தப்பட்டதோ... அதுபோல் இந்த பிரச்சனையையும் 'ஆலிம்களின்' தலைமையில் தான் அணுகப்பட வேணுமே ஒழிய,கண்டவரும் பேசும்/கருத்து தெரிவிக்கும் முறை களையப்பட வேண்டும். இது ஆரோக்கியமானது அன்று.

திருடன் கையில் சாவி கொடுக்க சொல்லவில்லை, சாவியை உறியவர்கள் வைத்து கொள்ளாமல் தெருவில் தூக்கி எறிய வேண்டாம், திருடன் அல்லாத மற்றவர் எடுத்தாலும் 'வீடு' பாதுகாப்பற்று போகும் என்பது தான் என் கருத்து.

அன்புடன்,
ஷஃபாத்

sabeer.abushahruk said...

அதிரை நிருபர்,

சுய அடையாளம் இல்லாதவர்களின் கருத்துகளைப் பதிவதில்லை என்ற கொள்கையிலேயே இத்தளம் புகழ் பெற்றுத் திகழ்கிறது.

இங்கு வெளிப்படையாக தம்மை அடையாளம் காட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் தள நிர்வாகிகளிடம் மட்டுமாவது அறிமுகம் செய்துகொண்டவர்களைத் தவிர்த்து மற்ற பின்னூட்டஙகள் களையப்பட்டே தீரவேண்டும்.

தம்பி ஷஃபி,அபுசுஹைமா, ஜமாலுதீன், ஹமீது, யாசிர் போன்றோருக்கு இருக்கும் தைரியம் ஏனையோருக்கு இல்லையெனில் அவர்கள் வாளாதிருத்தலே நலம்.

அதிரை நிருபர் எந்தக் கொள்கைகளோடு வெற்றி பெற்றதோ அதே கொள்கைகளோடுதான் தொடர வேண்டும்.

sabeer.abushahruk said...

தம்பி மீராஷா,

உணர்ச்சி வசப்படாதீர்கள்.

அதிரை நிருபர்,

இதற்குமேல் காத்திருப்பது சரியல்ல. ட்டெர்மினேட் திஸ்.

Unknown said...

சில‌ ஆலிம்க‌ளுக்கு நாம் புற‌ந்த‌ள்ள‌ப்ப‌ட்டு விட்டோமே, ந‌ம‌க்கு கூட்ட‌ம் கூடுவ‌தில்லையே, ந‌ம் சொல் யாரும் கேட்ப‌தில்லையே எனும் என்ன‌த்தை ஷைத்தான் விதைத்து அத‌ன் கார‌ண‌மாக‌ இத்த‌கைய‌ ஆலோச‌னையை ச‌லாம் சொன்னால் "அங் அங் ஹூம் எப்ப‌டி" என்று ப‌தில் கூறும் சில‌ த‌லைவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி ந‌ம் ச‌முதாய‌த்தை இப்ப‌டி சீர‌ழிவில் கொண்டு சென்ற‌வ‌ர்க‌ள் அல்லாஹ்வுக்கு அஞ்சி த‌வ்பாச் செய்து ப‌த‌வி வில‌குங்க‌ள்.

நீங்க‌ள் உம‌ர் த‌ம்பி வ‌ழ‌க்கு விஷ‌ய‌மாக‌ எவ்வாறு ச‌ங் க‌த்திற்கு ஆலோச‌னை வ‌ழ‌ங்கினீர்க‌ள்?

அல்லாஹ்வுக்காக‌ ஹ‌க்கை ம‌க்களிட‌ம் கூறுங்க‌ள் அல்லாஹ் உங்க‌ளை இம்மையிலும் ம‌றுமையிலும் பாதுகாப்பான். உண்மையான‌ முஃமின்க‌ள் உங்க‌ளுட‌ன் இருப்பார்க‌ள். அதை விடுத்து, ஹ‌ராமுக்கு வ‌க்கால‌த்து வாங்கும் யாராக‌ இருந்தாலும் அல்லாஹ் இம்மையிலும் ம‌றுமையிலும் இழிவு படுத்துவான் என்ப‌தை அஞ்சிக்கொள்ளுங்க‌ள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Shafi MI said...

இப்போது ஹைதர் அலீ ஆலிம் விஷயத்தில் நடக்கும் எல்லா அநியாயங்களும் ஊரிலிருக்கும் ஒருவரின் ஒரே சொல்லால் நல்ல தீர்வு கிடைக்கும். அது, "ஹைதர் அலீ ஆலிம் அவரின் சொந்த நலனுக்காக சி.பள்ளி நில விவகாரத்தில் கருத்துச் சொல்லவில்லை; மார்க்கத்தில் அவர் அறிந்ததைச் சொல்கிறார். அவரை தனிப்பட்ட முறையில் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், விட்டு விடுங்கள்" என அப்துல் காதர் ஆலிமிடமிருந்து வர வேண்டும். ஏனோ அவர் வாய் திறக்கக் காணோம். இதைக் குறிப்பிட்டு சி.பள்ளி நிர்வாகத்திலுள்ள ஒருவரிடம் கேட்டதற்கு "அப்துல் காதர் ஆலிம் அப்படிச் சொன்னாலும், அவருக்கு மனநிலை சரியில்லாததால் தான் இப்படியெல்லாம் சொல்கிறார் என அவரின் குடும்பதிலிருந்தே சொல்ல தயாராய் இருக்கிறார்கள்"என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் சொன்னார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! கிரவ்னு நீ போட்டிருக்கிற கண்ணாடிய கொஞ்சம் கொடு(டா)ப்பா!

கண்ணைத் திறக்கனும்....

என்னத்த சொன்னாலும், எத்தனை தடவை சொன்னாலும் இதுதாண்(டா)ப்ப நடக்குது தொடர்ந்து.

இந்த பொட்டியை மூடிட்டு "நபிமணியும் நகைச்சுவையும்" கதவு திறந்திருக்கு அங்கே போறேன்(டா)ப்பா ! :)

கருத்துக்களில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்களுக்கு நன்றி(கள்) பல !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு