Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 21 33

ZAKIR HUSSAIN | October 23, 2012 | , , ,

[It is not a light reading…Please pay attention]

யூகத்தின் அடிப்படையில் ஒரு மனிதன் இயங்குவது, மற்றவர்களின் வாழ்க்கைக்குள் பிரச்சினையை உருவாக்க வாய்ப்புகள் அதிகம். இது தொழிலுக்கும் உதவாது, குடும்பத்திற்கும் உதவாது. அதனால் தான் "ஜென்' தத்துவங்களில் LIVE IN PRESENT என்ற பயிற்சியே உண்டு.

நாம் பெரும்பாலும் கடந்தகால நினைவுகளில் வாழ்கிறோம், இல்லையென்றால் எதிர்கால நினைவுகளில் வாழ்கிறோம். இதனாலேயே We Forget to Live. மனிதர்களைப் பற்றி நமக்குள் இருக்கும் யூகம் நாமாகவே ஒரு முடிவுடன் அவர்களைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். நமது யூகம் சமயங்களில் தொழிலும், குடும்பத்திலும் தவறான முடிவு எடுக்கவே காரணமாகிவிடுகிறது. எந்த மனிதனும் தான் நல்லவன் என்றுதான் நினைப்பான்..மற்றவன் மட்டும்??

சில இன மக்களைப் பற்றி சில கமென்ட்ஸ் நிறந்தறமாக இருப்பதற்கான காரணம் " யூகம்" தான்.

விற்பனைத்துறையில் யூகத்துடன் அனுகுவதை தவறாகவே சொல்லப்படுகிறது.

குடும்பத்தில், தொழிலில் சிலர் செய்யும் தவறுகளை மட்டும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் இளையவர்கள் உங்களை பார்த்தவுடன் 'நடிக்க ஆரம்பிக்கலாம்... வாய்ப்பு கிடைத்தால் உங்களின் கண்ணில் படாமல் கம்பி நீட்ட அவர்களுக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? . உங்கள் வயதும் அனுபவமும் எப்போதும் விரும்பிக் கேட்கும் விசயமாக இருக்க நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். வாங்க , வாங்க என்று கூப்பிட்டு மனதுக்குள் ' என் நேரம் சரியில்லை இன்னிக்கு இவன் கிட்டே மாட்டிக்கிட்டேன்" என்று வாய்க்குள் முனங்குவது  மாதிரி நாம் அட்வைஸ் மழை பொழிவதால் எந்த பயனும் இல்லை.

பெரும்பாலான சமயங்களில் நம்முடைய கருத்தை மற்றவர்களிடம் திணிக்க நினைக்கும் ஆட்களின் ரேடியசில் எந்த உயிரினமும் அன்டாது. எதற்கெடுத்தாலும் விவாதம், எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்று வாழும் மனிதர்கள் "தொடர்ந்து தீர்ப்புவழங்கும் மெசின்" மாதிரி மதிக்கப்படுவார்கள். தொடர்ந்து தீர்ப்பு வழங்குபவர்கள் உண்மையை விட்டு விழகி வாழக்கூடும். இவர்களிடம் காது கொடுத்து கேட்கும் மிகப்பெரிய பலம் இருக்காது.  தொழிலில் இருப்பவர்கள் இப்படி இருந்தால் நான் இங்கிருந்தே அவர்களின் 'நஷ்ட கணக்கை" எந்த விதமான கேபிளும் இல்லாமல் பார்க்க முடியும். குடும்ப வாழ்க்கையில் இளையவர்களாக இருந்தால் நிறைய எதிரியையும் , பெரியவர்களாக இருந்தால் நிறைய வெறுப்பையும் சம்பாதித்தவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் நடுவயதை / ரிட்டயர்மன்ட் வயதை நெருங்கும்போது ஒரு  insecure Feeling இருக்கும். இறைவன் மீது மனிதனின் நம்பிக்கை குறையும் போதெல்லாம் இதன் மீட்டர் முள் “FULL”  காண்பிக்கும். நாம் நல்ல நேரத்தையெல்லாம் தவற விட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வு இருக்கும். அனைத்தும் 100 % மாயை. இந்த எண்ணங்களுக்கு தீனி போட்டு வளர்த்துவிட்டால் தரித்திரம் டெனன்ட் அக்ரீமன்ட் போடாமல் உங்களுக்குள் குடிவந்து ரேசன் கார்டுக்கு அப்ளை செய்துவிடும்.

வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த சூழல் பெரும்பாலும் கிடையாது... நம்பிக்கை இழந்த மனிதர்கள்தான் இருக்கிறார்கள் .

ஒரு தனிமனிதன் பொருளாதார சூழல்களால் முடக்கப்படும் போதுதான் அவன் முன்னேற வேண்டும் என நினைக்கிறான். இன்றைக்கு வாழ்க்கையில் பணக்காரர்கள் ஆன எல்லோருடைய வாழ்க்கை வரலாற்றிலும் இந்த உண்மை இருக்கிறது. மற்றும் உழைத்து முன்னேறியவர்களின் வாழ்க்கையில் எப்போதுமே வெற்றி நிச்சயம்தான். நீங்கள் உழைக்க சோம்பேறித்தனப்படாத மனிதராக இருந்தால் கவலையே பட வேண்டாம். உங்களுக்கு வரும் கஷ்டம் எல்லாம் ஒரு மலைபோல் தெரிந்தாலும் உடனே விலகி விடும்.

வேசம் போடாமல் எதையும் எதிர்கொள்ளலாம்.

ஒரு மனிதனின் வெற்றியை தூரமாக்குவது அவன் இதுவரை போடும் வேசம்தான். அது சரி நாம் என்ன நாடகத்திலா நடிக்கிறோம் வேசம் போடுவதற்கு என்று நினைக்க வேண்டாம்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் வளரும் சூழலில் நாம் இப்படித்தான் என்று சில விசயங்கள் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். அதில் சில :
  • நான் இந்த இனம்,இதனால் இவனிடம் உதவி கேட்க முடியாது.
  • நான் இந்த குடும்பம் அதனால் இவனிடம் பேச மாட்டேன்.
  • நான் இந்த மதம், அதனால் அடுத்த மதத்தை சார்ந்தவர்கள் எல்லாம் என்னுடன் பழக முடியாது.
இது கடைசியில் எங்கே கொண்டு போய் விடும். குடும்பம் கஸ்டத்தில் இருக்கும்போது கூட கெளரவம் பார்த்து கெளரவம் பார்த்து வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டி விட்டு பின்னாலில் தன்னை நம்பியிருக்கும் மனைவி, பிள்ளைகளையும் கஷ்டத்தில் நிறுத்தி இருக்கவே இருக்கிறான் இறைவன், இவனுடைய போலிவேசத்தால் வந்த வினைக்கு குற்றம் சாட்ட. 

உங்களுக்கு இறைவனின் கருணை கிடைக்குமாஅனைத்தும் அறிந்த இறைவன் தான் பதில் சொல்ல முடியும். தனக்கு தானாகவே உதவிக்கொள்ள முடியாதவன் மற்றவர்களின் கஷ்டத்தில் மனமுவந்து உதவி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான். 

உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தூக்கி நிறுத்த சிரமப்பட்டால் மற்ற குடும்பத்தை தூக்கி நிறுத்த வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம். கேட்பவர்கள் உங்களை ஈசியாக சந்தேகப்படுவார்கள்.

ஆக முன்னரே பயிற்சிகளில் ஒன்று உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் வேசம் என்ன என்பதை கண்டுபிடிப்பது.

ஒட்டிக்கொண்டிருக்கும்  வேஷத்தை வைத்தே கோபமும் ஒரு ஊற்றுபோல் வந்து கொண்டிருக்கிறது, எப்போதும் வற்றாமல்.

கோபத்தின் தாக்கம் உங்கள் பக்கம் திரும்பினால் நீங்கள் பணம் சம்பாதிப்பதில், மாணவப் பருவத்தில் இருந்தால் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் மனிதனாக மாறலாம். 

கோபம் மற்றவர்கள் மீது திரும்பும்போது அது உங்களுக்கு பெரும்பாலும் நஷ்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும். சிலர் சின்ன வயதிலிருந்து தனக்குள் போட்டுக்கொண்ட சிறைக்குள்ளேயே வாழ்ந்து விட்டு அதன் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் போது தன் சிறைக்கு பக்கத்திலேயே இவ்வளவு பெரிய பரந்த உலகம் குதூகலத்தோடு இயங்குகின்றது என்பதை தனது வயதான காலத்தில்தான் தெரிந்து கொள்கிறார்கள். காலக் கடிகாரத்தை மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஓட வைக்க முடியுமா?.

அதனால்தான் சொல்கிறேன் நாம் போட்டுக் கொண்டிருக்கும் வேஷமும் வெறுப்பும் வாழ்க்கையை சிதைத்து விட வேண்டாம். ரோஜா மலர்களை நிலக்கரித் தீயில் எரிப்பது போன்ற உணர்வுதான் எனக்கு வருகிறது. மீண்டும் சொல்ல வேண்டுமென்றால் Do Not Forget to Live

சில சமயங்களில் நாம் போட்டிருக்கும் வேஷம் நம் ஈகோவை சந்தோசிக்க வைக்கலாம், அவை அனைத்தும் போலி.

மரணமும், நோயும் , வறுமையும் சுத்தமாக ஈகோவை வடித்து எடுத்துவிடும்.

அந்த தருணங்களில் உங்களுக்கு அன்பு தேவை , அப்போது ஏற்கனவே ஈகோ பார்த்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் உங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் நீங்கள் இன்னும் உடைந்து போகலாம்.

முன்னாடியே நம் வேசம் எது என்று தெரிந்து விட்டால் ஈகோ தலை தூக்க வாய்ப்பு இல்லை. மனிதர்களும் உங்களிடம் சேர்ந்து அன்பு செலுத்த முடியும்.

இதை தொழில், குடும்பம், நட்பு எதில் வேண்டுமானாலும் பொறுத்தி பார்த்து கொள்ளுங்கள். ரூல்ஸ் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான்.

மனிதனுக்குள் பில்ட்-இன் ஆக இருக்கும் இன்டலிஜென்ட்சி  எப்போதும் மாற்றத்தை நோக்கி பயணித்து இருக்கும். இதற்கு துணையாக சுற்றுப்புற சூழல்கள் இருந்தாலும் அப்படி ஒரு சூழல் இல்லாத போது தானாகவே இயங்க ஆரம்பிக்கும். இதனால்தான் புதிய கண்டுபிடிப்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதற்கு வயது ஒரு தடை இல்லை.

சிலர் உழைப்பையும் , வயதையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்வதும் உண்டு. 

இனிமேல் நம்ம காலம் முடிஞ்சிடுச்சி... இனிமேல் போன வயது திரும்பி வராது என்ற விரக்தியில் இத்தனை நாள் தான் சேர்த்த இன்டலிஜென்ட்சியை தூர தூக்கி போட்டு விடுவார்கள்.

இன்றைக்கு நகர்ப்புரங்களை ஒட்டி உருவான பல நகர்கள் ஒரு சில மனிதர்களின் இன்டலிஜென்ட்சில் உருவானது. பொட்டலாக கிடக்கும் நிலங்களை மனிதர்கள் வாழ நகர்களாக உருவாக்குவதன் நோக்கம் “Land Banking “ வெளிநாடுகளை பொறுத்தவரை மிகப்பெரிய பிஸினஸ். இதை முதலீட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய நெட் வொர்க்கில் “Land Banking Investments”என்று கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கிறது.

உழைப்பு என்றால் மண் வெட்டியை கையில் பிடித்துமண்ணை சட்டியில் அள்ளி,  மண்ணை தலையில் சுமந்து மாலையில் வரிசையில் நின்று கூலி வாங்குவது என்று நாம் தவறாக நமது மைன்டை ஃபார்மேட் செய்திருக்கிறோம். 


Hard work some time do not pay!!  Some time SMART WORK also pay !!

கடின உழைப்பில் மட்டும்தான் வருமானம் என்றால் உயர்ந்த கட்டிடங்களில் நின்று சிமென்ட் பூசும் கூலித் தொழிலாளியை விட கீழே நின்று சேஃப்டி தொப்பி போட்டு டை கட்டி சில பெரிய தாள்களை பார்க்கும் Engineer க்கு ஏன் அதிக வருமானம்??

ZAKIR HUSSAIN

33 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படிக்கட்டுகளில் இது உயர் ரகம்!

ஆக யூகம் கலைந்து எதிலும் நம்பிக்கையே கை கொடுக்கும் என்பது இதன் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

Iqbal M. Salih said...


ஜாகிரின் இந்தப் படிக்கட்டுகள் தொடர்களிலேயே internal perception பற்றி அதிகம் அலசப்பட்டிருப்பது இந்தத் தொடர் தான்!

மனித மனங்களின் அடர்த்தியான நினைவுப்படிமங்களிடையே எழும் மனோ இச்சைகளின் தாக்கம் எப்படிப்பட்ட கோணலான Habitual actions களை உருவாக்குகின்றது என்பதை எளிய நடையில் புரிய வைத்திருக்கின்றான் என் நண்பன்!

I mean, its talking about the Introspections.இன்னும் அவன் இதுபோல் நிறைய எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்...

Ebrahim Ansari said...

//வாழ்க்கையில் நடுவயதை / ரிட்டயர்மன்ட் வயதை நெருங்கும்போது ஒரு insecure Feeling இருக்கும். இறைவன் மீது மனிதனின் நம்பிக்கை குறையும் போதெல்லாம் இதன் மீட்டர் முள் “FULL” காண்பிக்கும். நாம் நல்ல நேரத்தையெல்லாம் தவற விட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வு இருக்கும். அனைத்தும் 100 % மாயை. இந்த எண்ணங்களுக்கு தீனி போட்டு வளர்த்துவிட்டால் தரித்திரம் டெனன்ட் அக்ரீமன்ட் போடாமல் உங்களுக்குள் குடிவந்து ரேசன் கார்டுக்கு அப்ளை செய்துவிடும்.//

நான் ரசித்த வரிகள் மட்டுமல்ல; சிந்திக்க வைத்த வரிகள் மட்டுமல்ல; உணர வைத்த வரிகள்.

நம்ம கண்ணு காணப் பொறந்த புள்ளே எப்புடி எல்லாம் எழுதுதுன்னு ஆச்சரியப்படுகிறேன். அல்லாஹ் உனக்கு மேன்மேலும் எழுதும் ஆற்றலைத் தந்து சமுதாயத்துக்கு இன்னும் பயன்படச் செய்வானாக.

sabeer.abushahruk said...

ஆரம்பத்திலேயே சென்ஸார் சர்ட்டிஃபிகேட் மாதிரி ஹெவி சப்ஜெக்ட், கவனமாப் படிங்க என்று சொல்லிவிட்டபடியால் அவ்வாறே துவங்கினேன்.

உண்மைதான். சற்று கனமான பொருளடக்கம்தான் என்றாலும் நீ அதை மிக இலகுவாகச் சொல்லித்தருவதால் தெளிவாகவேப் புரிகிறது.

ஈனா ஆனா காக்கா ரசித்த அதே வரிகளே என் கருத்துக்கு ஆதாரம்.

கசப்பு மருந்தை கேப்ஸ்யூலுக்குள்ளோ தேன் குழைத்தோத்தான் தரவேண்டும் எனும் யுக்தி நன்றாகவே வேலை செய்கிறது.

உன் திட்டப்படி தேனைச் சுவைத்து மருந்தை உட்கொண்டுவிட்டோம்.

இவ்வளவு அற்புதமான வழிகாடிதல்களுக்கு தட்சணை கேட்காதது ஆச்சரியம்.

sabeer.abushahruk said...

ஆரம்பத்திலேயே சென்ஸார் சர்ட்டிஃபிகேட் மாதிரி ஹெவி சப்ஜெக்ட், கவனமாப் படிங்க என்று சொல்லிவிட்டபடியால் அவ்வாறே துவங்கினேன்.

உண்மைதான். சற்று கனமான பொருளடக்கம்தான் என்றாலும் நீ அதை மிக இலகுவாகச் சொல்லித்தருவதால் தெளிவாகவேப் புரிகிறது.

ஈனா ஆனா காக்கா ரசித்த அதே வரிகளே என் கருத்துக்கு ஆதாரம்.

கசப்பு மருந்தை கேப்ஸ்யூலுக்குள்ளோ தேன் குழைத்தோத்தான் தரவேண்டும் எனும் யுக்தி நன்றாகவே வேலை செய்கிறது.

உன் திட்டப்படி தேனைச் சுவைத்து மருந்தை உட்கொண்டுவிட்டோம்.

இவ்வளவு அற்புதமான வழிகாடிதல்களுக்கு தட்சணை கேட்காதது ஆச்சரியம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒன்றுக்கு இரண்டு முறையல்ல பலமுறை வாசித்து உள்வாங்க வேண்டிய ஆய்வு இது !

//வேசம் போடாமல் எதையும் எதிர்கொள்ளலாம்//

ஆம் காக்கா, உணர்ந்தது !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

sabeer.abushahruk said...

இனி கேள்வி நேரம்:

(எம் ஹெச் ஜே: கருத்து மட்டும் சொன்னா ஏற்புரையில் இவன் என்னய கண்டுக்கிட்ரதே இல்லை. அதான் இந்த ட்ராப்)

//தொழிலில் சிலர் செய்யும் தவறுகளை மட்டும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தால் இளையவர்கள் உங்களை பார்த்தவுடன் 'நடிக்க ஆரம்பிக்கலாம்..//

சரிதான் ஐயா,

ஆனால் தொடர்ந்து தொழிலில் தவறு மட்டுமே செய்யும் ஜீவன்களைச் சுட்டிக்காட்டலேன்னா அவர்களுக்கு அதைத் தவறு என்று எப்படி புரிய வைப்பது?

(எம் ஹெச் ஜே, எப்புடீ?)

sabeer.abushahruk said...

//விற்பனைத்துறையில் யூகத்துடன் அனுகுவதை தவறாகவே சொல்லப்படுகிறது.//

அன்புள்ள அல்லி...ஸாரி ...அன்புள்ள ஐயா,

வாங்குபவர்கள் மடையர்கள் என்ற யூகத்திலேயே வெற்றிகரமாக செயல்படும் பல சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளின் நிலைபாடு என்ன?

அவர்கழ்லின் யூகங்களில் சில:

-பெட்டி பெட்டியாக பழங்கள் விற்கும்போது பெரிய நல்ல பழத்தை மேலடுக்கிள் வை. அழுகிய சிறிய பழங்களை மறைத்துக் கீழே வை.

ஐஸ் பெர்க் மற்றும் லெட்யூஸ் (சாலட் இலைகள்) ஆகியவற்றை வெளியே பச்சைப்பசேலென்று ஃபிரஷ்ஷா காட்டு. உள்ளே புழுக்கள் பத்திரம்.

பேஇய நல்ல மீனை/இறாலை/நண்டை மேல வை;  சின்ன நாறியவற்றைக் கீழே வை. 

இப்படியாக பல.
(யாசிர், கிடுக்கிப்பிடி எப்புடீ?)

sabeer.abushahruk said...

//இனிமேல் நம்ம காலம் முடிஞ்சிடுச்சி... இனிமேல் போன வயது திரும்பி வராது என்ற விரக்தியில் இத்தனை நாள் தான் சேர்த்த இன்டலிஜென்ட்சியை தூர தூக்கி போட்டு விடுவார்கள்.//

கேள்வி 3:

அன்புடையீர்,

எங்க இன்ட்டெலிஜென்ஸியைத்தான் பிரயோஜனமா காட்டலாம்னு பார்த்தா " பெருசு, பொத்திக்கிட்டுப் போ"ன் றாய்ங்களே! அதேன், தூரத் தூக்கிப்போட்டுட்டு தினத்தந்தியில கன்னித்தீவு சிந்துபாத்தை வாசிச்சிக்கிட்டு கம்முனுகீறோம்.

(அபு இபு, எப்புடீ ப்பாயின்ட்டு?)

sabeer.abushahruk said...

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் மாதிரி இவன் ஏற்புரையில் என்னய கண்டுக்கிடாததும்; நான் தாம்தூம்னு குதிக்கிறதும் இவன் ஏதாவது சொல்லி சமாளிக்கிறதும் வாடிக்கையாப் போச்சு.

இப்ப சொல்லுடா நீயி ஏற்புரை, என்னைய விட்டுட்டு!

ZAKIR HUSSAIN said...

//இப்ப சொல்லுடா நீயி ஏற்புரை, என்னைய விட்டுட்டு! //

இப்பவே சொல்லிடறேன் பாஸ்..


Q::ஆனால் தொடர்ந்து தொழிலில் தவறு மட்டுமே செய்யும் ஜீவன்களைச் சுட்டிக்காட்டலேன்னா அவர்களுக்கு அதைத் தவறு என்று எப்படி புரிய வைப்பது?

A:: இடையிலே கொஞ்சம் பாராட்டலாமே...பாராட்டுனா கொஞ்சம் மரியாதை வரும். அப்புறமா கேட்டு நடக்கலாமுலெ.
ஏன் தவறு 'மட்டும்" செய்கிறார்கள். ஒரு நல்லது கூட செய்யவில்லையா...[ கல்ஃப் லெ ரொம்ப பேர் இப்படித்தான் என்றால் அந்த ஆளை கூப்பிட்டு அவன் வேலைக்கு எதற்கு வந்திருக்கிருக்கிறான் என்பதை ஒரு சாஃப்ட் அப்ரோச்சில் சொல்லிப்பார்க்களாம்.. அப்படியும் முடியலேனா...என்ட் கார்டுதான்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களே!

ஏற்புரை பற்றிய எச்சரிக்கை தம்பி ஜாகிருக்கு மட்டுமா? எல்லோருக்குமா? நினைத்தாலே உதறல் எடுக்குது. இத்த்தனை கேள்விகளா? எல்லாப் பதிவர்களும் இனி உஷார்.

ZAKIR HUSSAIN said...

//வாங்குபவர்கள் மடையர்கள் என்ற யூகத்திலேயே வெற்றிகரமாக செயல்படும் பல சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளின் நிலைபாடு என்ன?//


கன்ஸ்யூமர் மினிஸ்ட்ரி ஏதும் இல்லையா?...ஒரு இ-மெயில் போதுமே இவனுக திருந்த.

சமீபத்தில் என் தங்கையின் மகன் படிக்க பணம் கட்டிய காலேஜொரு டுபாங்கூர் காலேஜ் என்று தெரிந்து, நான் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு அந்த காலேஜை இழுத்து , பி.காம் படிக்கும்போது படித்த Contract law , Uberimifide, Case Law references உதாரணமாக காட்டி பணத்தை திருப்பி வாங்கிட்டேன்ல.


இந்த அளவுக்கு போனதால் பணம் தப்பியது. எனக்கென்ன என்று மற்ற மாணவர்களின் குடும்பம் மாதிரி இருந்தால் நமக்கே பெப்பே காட்டிடுவானுக.

ZAKIR HUSSAIN said...

//எங்க இன்ட்டெலிஜென்ஸியைத்தான் பிரயோஜனமா காட்டலாம்னு பார்த்தா " பெருசு, பொத்திக்கிட்டுப் போ"ன் றாய்ங்களே!//

End result ஐ ஊகிக்க முடிந்தால் The Choice is yours.

எல்லா பெரிசுகளும் எப்போதும் சரியாகவே சொல்லிவிடுவதாக காண்பிக்க வாழ்க்கை ஒன்றும் கே.எஸ்.கோபாலகிருஷ்னன் படம் அல்ல.

ZAKIR HUSSAIN said...

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேட்களாம், முடிவு உன்னிடமிருந்தே வர வேண்டும்.

sabeer.abushahruk said...

காக்கா,

நல்லா எழுதுற எல்லோருக்குமே நேரம் கிடைத்தால் இனி கேள்விக்கணைகள்தான். இந்த நடவடிக்கை அதிரை நிருபரின் இலக்கியத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

"நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்" ட்டைப்பான கவிதை/ கட்டுரைகளா? நான் கப்சிப்.

(இதுக்குமேல கேக்காதிய. வேணாம் வேணாம். அப்புறம் அழுதுடுவேன்.)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஏற்புரையில் இப்பவாவது தோழர் இடம் பெறுவாரா?

படிக்கட்டுகளிலேயே இது ஒரு படி மேலாகி தோழர்களுக்கிடையே ஏற்புரைச் சண்டையில் இன்னும் பல விசயம் கிடைக்கிறது.

என்னிடம் யாராவது கேள்வி தொடுத்தால் இதற்கு கவிஞர் சபீர் காக்கா பதில் சொல்வார்கள் என்று சொல்லி விடுவேன்.

Shameed said...

//அந்த தருணங்களில் உங்களுக்கு அன்பு தேவை , அப்போது ஏற்கனவே ஈகோ பார்த்து விரட்டியடிக்கப் பட்டவர்கள் உங்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் நீங்கள் இன்னும் உடைந்து போகலாம்//


நாட்டு நடப்புக்களை அப்படியோ புட்டுபுட்டு வைக்கின்றிர்கள்


sabeer.abushahruk said...

//எல்லா பெரிசுகளும் எப்போதும் சரியாகவே சொல்லிவிடுவதாக காண்பிக்க வாழ்க்கை ஒன்றும் கே.எஸ்.கோபாலகிருஷ்னன் படம் அல்ல.//

சீரியஸ்ஸா பேசிக்கிட்டு இருக்கும்போது சிரிப்பு காட்டுறது எந்தூரு நியாயம்ங்க?

ஹமீது, எல்லா சிறுசுகளும் மட்டும் சொல்பேச்சு கேட்கிறாங்கலாமா? அவன்ட்ட கேட்டு சொல்லுங்க சீக்கிறம்.

Yasir said...

யூகம் - ஈகோ இரண்டும் எதில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ குடும்பத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்...அந்த பாதிப்பு வியாபாரம் படிப்பு,வேலை என்று வாழ்வின் எல்லா அங்கத்திலும் எதிரொலிக்கும்....யூகத்தை கம்முண்டு இருக்கச்சொல்லியும்,ஈகோ-வை கோ என்று விரட்டியும் வைத்துவிட்டால் பெரும்பலான் விசயங்களில் வாழ்வு செழிக்கும்...நீங்கள் எந்த ஒரு சிக்கலான விசயத்தையும் சிக்கன் குருமா போல சுவையாகவும் சுலபமாகவும் தருவதால்...படித்து அறிந்து கொள்வதில் கஷ்டம் இல்லை ஆனால் அன்றாட வாழ்வின் நடைமுறையில் கொண்டு வருவதுதான் சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம்...வாழ்த்துக்கள் காக்கா

Yasir said...

கவிக்காக்கா...ஈத் விடுமுறை அதுகுல்ல ஆரம்பிச்சுடுச்சா உங்களுக்கு....
//யாசிர், கிடுக்கிப்பிடி எப்புடீ?/// நல்ல அடுக்கி பிடிச்சு இருக்கீங்க.....ஆனால் பதில் என்னமா வருது பாத்தீங்களா...உங்கள்ட பாதி தானே அவஹ...

அப்துல்மாலிக் said...

ரொம்பவே டீப்பா எங்களையும் சேர்த்து இறக்கிவிட்டுடீங்க, நிறைய மாற்றம் தேவை கத்துக்கனும்.... நன்றி காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா சீரியஸா பேசிகிட்டு இருக்கும்போது இப்புடி ஊடால வந்து சிரிப்பூட்டுனா எப்புடி !? (அசத்தல் காக்காவைத்தான் கேட்கிறேன்) ! :)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//ஹமீது, எல்லா சிறுசுகளும் மட்டும் சொல்பேச்சு கேட்கிறாங்கலாமா? அவன்ட்ட கேட்டு சொல்லுங்க சீக்கிறம்//

சிறுசோ பெருசோ சொல் பேச்சு கேட்கிறாங்களோ இல்லியோ 'செல்' பேச்சு ஜாஸ்தியா போச்சி

KALAM SHAICK ABDUL KADER said...

//தெரிந்தோ தெரியாமலோ நாம் வளரும் சூழலில் நாம் இப்படித்தான் என்று சில விசயங்கள் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். அதில் சில :
நான் இந்த இனம்,இதனால் இவனிடம் உதவி கேட்க முடியாது.
நான் இந்த குடும்பம் அதனால் இவனிடம் பேச மாட்டேன்.
நான் இந்த மதம், அதனால் அடுத்த மதத்தை சார்ந்தவர்கள் எல்லாம் என்னுடன் பழக முடியாது.//

அடியேன் அடிக்கடி என் நண்பர்கள்/ என்னுடன் பணியாற்றும் ஊழியர்கள்/என் உறவினர்களிடம் சொல்லும் இந்த என் அறிவுரையை உங்கள் தொடரில் கண்டதும், எனக்கும் உங்கட்கும் எண்ணோட்டத்திலும்- கண்ணோட்டத்திலும் ஒன்றான ஓர் உறவுத் தென்படுகின்றதே?!

Unknown said...

I glad to know your journey very nice and your child comment awesome write more await for journey experience next episode.thanks.expect continue with duaa!!

Ahamed irshad said...

Thanks Kakka Zahir Hussian..

Padikattugal thodar vittu vittu padikkiren naan... 21 varai ulla anaithaiyum Pdf versionil thoguthaal ellorukkum payanpadum vagaiyil irukkum enbathu en ennam.. possible? insha allah yaaravathu intha muyarchi eduthaal nalam... enakku theriyaathu..illavidil naan seithu viduven..

[Sorry for thanglish...]

Anonymous said...

//Thanks Kakka Zahir Hussian..

Padikattugal thodar vittu vittu padikkiren naan... 21 varai ulla anaithaiyum Pdf versionil thoguthaal ellorukkum payanpadum vagaiyil irukkum enbathu en ennam.. possible? insha allah yaaravathu intha muyarchi eduthaal nalam... enakku theriyaathu..illavidil naan seithu viduven..//

இந்த தொடரும் விரைவில் அச்சு புத்தகமாக உருவெடுக்க இருக்கிறது... இன்ஷா அல்லாஹ் ! அதன் பின்னர் முறையாக PDF செய்யலாம் என்ற திட்டமும் இருக்கு! :)

//Ahamed irshad சொன்னது…

[Sorry for thanglish...] //

புன்னகைக்கவும் : தமிழில் பதில் தந்துட்டேன் :)

புல்லாங்குழல் said...

அன்பு ஜாஹிர் Personality psychology பற்றி மிகவும் அருமையாக எழுத வருகின்றது உனக்கு. ஊடாலே

/மரணமும், நோயும் , வறுமையும் சுத்தமாக ஈகோவை வடித்து எடுத்துவிடும்/ போன்ற அரிய தத்துவங்களும் எடுத்து விடுகின்றாய். சூப்பர் கண்ணா சூப்பர்!

Ahamed irshad said...

புன்னகைக்கவும் : தமிழில் பதில் தந்துட்டேன் :) //


:)))

ZAKIR HUSSAIN said...

என் மதிப்பிற்குறிய சென்னை புதுக்கல்லூரியில் சீனியர் நூருல் அமீன், எப்படி இருக்கிறீர்கள். சமயங்களில் சபீரின் கவிதைக்கு நீங்கள் எழுதும் விமர்சனம் பார்ப்பேன். நாகையில்தானே இருக்கிறீர்கள்?. [ சம்பாதிப்பது எங்கிருந்தாலும்]

உங்கள் கமென்ட்சுக்கு நன்றி. நீங்களும் ஏதாவது இந்த வலைத்தளத்தில் எழுதலாமே..

ZAKIR HUSSAIN said...

படிக்கட்டுகள் 21 ல் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தனித்தனியாக எழுத முடியாத அளவுக்கு நிதம் பயணத்தில்.

அடுத்த படிக்கட்டுகள் 22 ல் சந்திப்போம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு