Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 3 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2012 | , ,


கண்ட அதிர்ச்சி கண்ணிலிருந்து அகல மறுத்தது, அதுதான் சாக்கடை தண்ணீரும், பேப்பர் குப்பைகளும் !? சிங்கப்பூரா இது !? ஆச்சர்யமாக இருந்தது. சிங்கப்பூர் தெருக்களில் சோறு உண்ணலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா ? ஆச்சரியம் தாங்க இயலவில்லை, அவைகளை கிளிக்கிக் கொண்டேன். சரி சரி அவர்களும் சராசரி மனிதர்கள் தானே!.


மீண்டும், உடனே டாக்சி எடுத்துக் கொண்டு டெர்மினல் 2 வந்து சேர்ந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 20/-ஐ கொடுத்து விட்டு, அடுத்த பயணத்துக்கு இன்னும் நேரம் மிச்சம் இருந்ததால். சாங்கை விமான நிலையத்தையே அளந்தோம். மிக நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருந்தது. எமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸில் சில தமிழ் முகங்கள்.

இரவு மணி 08:20 சென்னை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது. இந்தியாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து வரும் நினைவுகள், கனவுகள் எனக் கழிந்தன ஆனால் சிங்கப்பூரில் விமானத்தில் ஏறிய தமிழ் ‘குடி’மகன்களின் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை. விதவிதமான கலர் பாட்டில்கள் அடைத்து வைத்திருந்த 'சரக்கு'களை ஒற்றை விரல் காட்டி, கேட்டு குடித்தனர். ஒன்றுக்கு இரண்டாக! 'ஓ' வென்ற சப்தம் வேறு! எப்போதுதான் இந்த 'குடி'மகன்கள் திருந்துவார்களோ ?


ஒரு வித்தியாசத்தை நன்றாக உணர முடிந்தது. சான்பிரான்சிஸ் கோவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் அமெரிக்காவிலும், மற்ற ஆசியர்களும் இருக்கத்தான் செய்தனர் ஆனால் 90 சதவிகிதமானோர் ஆரஞ்சு, ஆப்பிள், ஜூஸ்களையே வாங்கி அருந்தினர் எவ்வித சத்தமும் இல்லை. எல்லாம் அமைதியாக இருந்தது. ஆனால், சிங்கப்பூர் - சென்னை விமானத்தில்தான் இந்த களோபரம்.

நாங்கள் எங்கள் பயணத்துக்கு முன்னரே இந்தியன் வெஜிட்டேரியன் என்று புக் செய்திருந்தோம். அதனால் எங்களுக்கு சென்னை வரை தோசை, இட்லி, வடை, சாம்பார் சாதம், காய்கறி, கனிகள், ஐஸ்கிரீம் என்று நல்ல சாப்பாடு அல்ஹம்துலில்லாஹ்.

விமானம் சென்னையை நெருங்கி விட்டது புள்ளிகள் பெரிதாகி அதோ அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் தெரிகிறது.

ஒருமுறை சகோதரர் ஜாகிர் ஹுசைன் எழுதியது ஞாபகத்திற்கு வர அட! அது நிஜமாக நடந்தேறியது! அது நம் ரத்தத்தில் ஊறியது என்று கமெண்ட்டும் ஞாபகத்திற்கு வருகிறது
தொடரும்
A.R.அப்துல் லத்தீஃப்

16 Responses So Far:

Yasir said...

பயணத்தில் கூடவே கூட்டிக்கொண்டு போகும் கட்டுரை...தட்டில் உள்ள இட்லியைவிட உங்கள் கட்டுரையை நீங்கள் கட்டும் விதம் நல்லாயிருக்கு..தொடருங்கள் சகோ.A.R.அதுல் லத்தீஃப் ( இட்லி நமக்கு அலர்ஜி)

அப்துல்மாலிக் said...

//விதவிதமான கலர் பாட்டில்கள் அடைத்து வைத்திருந்த 'சரக்கு'களை ஒற்றை விரல் காட்டி, கேட்டு குடித்தனர்.// நீண்ட நாள் கழித்து குடும்பத்தினரை பார்க்கப்போறோம் நிதானமா, சந்தோஷமா இருக்கவேணாமா..

ஓசி தானே என்று மொடாக்குடியா குடிச்சிட்டு போதையில் தன் லக்கேஜுக்கு பதிலா மாத்தி எடுத்து களேபரம் பண்ணவங்களுக் உண்டு...

திருந்துங்கடாடேய்....

Ebrahim Ansari said...

தம்பி அர. அல. அவர்களே! கரம்பிடித்து சென்னைவரைக் கூட்டி வந்துவிட்டீர்கள். இனி இந்தப் பயணக் கட்டுரை இன்னும் சூடு பிடிக்குமென்று கருதுகிறேன்.
இந்தக் குடிமகன்கள் விமானத்துக்குள் படுத்தும்பாடு. பெரும்பாடு. பல நேரங்களில் பக்கத்து சீட்டில் குடிமகன்கள் மாட்டுவது ஒரு பக்கம்- ஒரு முறை இலங்கை - கோலாலம்பூர் விமானத்தில் "குடிமகள்"களும் பண்ணிய அட்டகாசம் மறக்க முடியாது. உனக்கு வேண்டாமென்றால் எனக்கு வாங்கித்தா!என்ற கோரிக்கைவேறு.

Shameed said...

போக்கு வரத்துக்கு ஒரு டிக்கெட்டை வாங்கிட்டு இவனுவ போடுறா ஆட்டம் தாங்க முடியாது

Shameed said...

சென்னை ஏற்போர்ட் வந்ததும் அங்கு உள்ள ஆட்களெல்லாம் வத்தி வதங்கி காஞ்சி போய் இருப்பாங்களே!

Ebrahim Ansari said...

//சென்னை ஏற்போர்ட் வந்ததும் அங்கு உள்ள ஆட்களெல்லாம் வத்தி வதங்கி காஞ்சி போய் இருப்பாங்களே!//

கூடவே ஆளுக்கு ஆறு கொசுக்கள் காதோரம் ரீங்க்காரமிட்டுப் பறந்து இன்னிசை ( அதுவும் உங்களுக்கு) முழங்க வரவேற்று இருக்குமே!

sabeer.abushahruk said...

அர அல,

ஊருக்கு நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். நாங்களோ உங்களோடு பயணிப்பதாய் உணர்கிறோம்.

துபை வழியாகப் போயிருந்தாலும் அந்த விமானங்களில் தண்ணியடிப்பவர் தொந்தரவு இருக்கும்தான்.

சீக்கிரம் ஊருக்குள் நுழையுங்களேன்.

என் அடுத்த பின்னூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஏதும் உங்களுக்கு இருந்ததா

sabeer.abushahruk said...

அடைகாக்கும் ஆசைகள்!

அடுத்தமுறை நான்
அதிரைக்குச் செல்லுகயில்
அனுபவிக்க சில
அவசியம் வாய்க்க வேண்டும்

புத்தம்புது மழையால்
பூமி நனைந்திருக்க வேண்டும்
பின்னிரவில் விட்ட மழை
மண்ணில் மிச்சம் வேண்டும்

உம்மா மட்டும் விழித்திருக்க
ஊரே உறக்கத்தில் வேண்டும்
உற்றார் உறவினர் வருமுன்
உம்மா மடி வாய்க்க வேண்டும்

பொய்த்துப்போன கம்பன் கனா
மெய்ப்பட்டு வர வேண்டும்
மெய்ப்படும் நாள்வரை
பொய்யாகவாவ தொரு ரயில் வேண்டும்

கடற்கரைக் கருங்கற்சாலையில்
காலார நடக்க வேண்டும்
கம்சு சட்டையும் கைலியும்
கடற்காற்றில் கலைய வேண்டும்

புதுப்புது மினுக்கமில்லா
புர்காவின் கருப்பு வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும்

கைப்பந்து கால்பந்தென
மைதானங்கள் செழிக்க வேண்டும்
மட்டைப் பந்துக்கும்
மையத்தில் இடம் வேண்டும்

விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்

பள்ளிகளில் ஐம்பொழுதும் 
பல வரிசைகள் அமைய வேண்டும்
நேராகவும் நெருக்கமாகவும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும்

ஜும்-ஆ தொழுதபின்பு
சொந்தபந்தம் தழுவ வேண்டும்
பலகாலம் பரிச்சயம் மறந்த
பலரையும் பார்க்க வேண்டும்

இயக்க குணம் புறக்கனித்து
இஸ்லாமியர் இணைய வேண்டும்
இறையில்லங்களை நிர்வகிக்கும்
இதயங்கள் இணைய வேண்டும்

தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்

மரண அறிவிப் பென்று
காதுகளில் விழ நேர்ந்தால்
ஜனாஸா தொழுகையொன்று
அதிரையில் தொழ வேண்டும்

சாயங்கால வெயிலில் சற்று
செந்நிறம் கூட வேண்டும்
சமகால நண்பர்களோடு
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்

கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்

பெண்களின் விருந்தை
முன்னிருந்து நடத்த வேண்டும்
பேசி வைத்தப் பெண் விழியை
தேடியலைந்த நெனப்பு வேண்டும்

ஓதிக் கொடுக்கும் சப்தம்
காது வழி கேட்க வேண்டும்
உஸ்தாது கைபிடித்து
சலாம் ஒன்று சொல்ல வேண்டும்

நவீன வசதிகளில்
நாளுக்கு நாள் மாறினாலும்
நிச்சயம் நிலைக்க வேண்டும்
நம்மூரின் நற் பாரம்பரியம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பயணங்கள் பலவிதம், நானும் எழுதப் போறேன்னு சொன்னா உங்களுவொளுக்கு கோபம் வருதோ இல்லையோ வரவேண்டியவங்களுக்கு கோபம் வந்தே தீரும் !

தம்பி அ.ர.அ.ல.வின் கருத்தில் இருக்கும் நேர்மை கட்டுரையிலும் இருப்பதும் சிறப்பே !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்//

அதை பழசுகள்
ரசிக்கவேண்டும்
கலரி முடிந்த
கையோடு இளசும்
பழசும் சகனுக்கு மூணு
மல்ல எறைச்சி ஆணமும்
ரசமும் சேர்த்து இளசும்
பழசும் உட்காந்து
சாப்பிட வேணும்

அதிரை சித்திக் said...

பயணங்களில் சுவையான நிகழ்வுகளை

அசை போதுவதும் சுவைதான்

Unknown said...

சிங்கப்பூரை தொட்டவுடனே உனக்கு சொந்தவூருக்கு வந்த பீலிங் கிடைத்திருக்குமே !! அதுமட்டும் இல்லை தாஷ் மார்க் கடையை கிராஸ் பண்ணிய வாடை விமானத்தில் உள்ளயே கிடய்திருக்குமே !!so far journey is going smooth. i hope you give us more interesting subject.I used to be posted as a mulakkam name now changed mulakkam to my real name as a editor requested.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல அழகான எழுத்துநடையை இவ்வளவு நாட்கள் எங்கு தான் ஒளிச்சி வச்சீந்தியளோ? வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துப்பயணம் இனிதே தொடரட்டும்.

சகோ. அர. அப்துல் லத்தீஃப் அவர்களே, உங்கள் பொன்னா வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒபாமாவுக்கோ, ரோம்னிக்கோ வாக்களிக்க மறவாதீர் என யாரேனும் கொடி பிடித்துக்கொண்டு ஆட்டோவில் வாக்கு கேட்டு உங்களிடம் இதுவரை வந்தார்களா? யாரு வந்தா தேவல? ஒத்தருக்கும் தெரியாம ரஹசியமா சொல்லுங்களேன்?

இப்னு அப்துல் ரஜாக் said...

வழக்கம் போலவே துவா செய்தும் ஊக்கப்படுத்தியும் கருத்திட்ட எல்லா காக்காமர்களுக்கும் மிக்க நன்றியும் துவாவும் . சபீர் காக்கா உங்கள் கவிதையின் சில சுகங்கள் எனக்கு கிடைத்தன.அல்ஹம்துலில்லாஹ்.சகோ நெய்னா மூச் அது ரகசியம் இன்று பகல் தான் ஒட்டு போட்டேன் நம் ஊர் மக்களும் சிலர் ஒட்டு போட்டனர். இது டைப் பண்ணும்போது ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றதாக செய்திகள் சொல்கின்றன. எல்லா மக்களும் நன்றாக வாழ அல்லாஹ் துணை நிற்பானாக

அலாவுதீன்.S. said...

சகோ. A.R. அப்துல் லத்தீஃப் :
தாங்கள் வந்த விமானத்தின் சேவைகள் மிகச்சிறப்பாக இருக்கிறது.

நாங்கள் செல்லும் இலங்கை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்(பல்லவன் போக்குவரத்துக்கழகம்) விமானங்கள் சேவை என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்?

அதிரை என்.ஷஃபாத் said...

சின்னதாய் சின்னதாய்... பெரிய பெரிய பயண அனுபவம் தந்துகொண்டிருக்கின்றீர்கள்.

கொசுறு கேள்வி: ரிட்டர்ன் பயணத்தை எழுதும் அடுத்த பகுதிகளுக்கு "செக்கடிமோடிலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோ வரை" என தலைப்பிடுவீர்களா? :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு