Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிகட்டுகள் - ஏற்றம் 23 30

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2012 | , , ,


வாழ்க்கையில் பணத்தேவை என்பது பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்ததுதான், அதை சமயங்களில் நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் “வேலை”, “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளிப் போடுவதால் பெரிய பணத்தேவைகள் வரும்போது சில சிரமங்களுக்குள் சிக்கிக்கொள்கிறோம். பெரும் பணத்தேவை என்பது பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், இரண்டு பிள்ளைகளுக்கு பிறகு வீடு போதாமல் வீட்டை பெரிதாக்கி கொள்ள தேவையான ரெனொவேசன் காஸ்ட் , உங்களுடைய ஓய்வு காலத்து பணத்தேவை. இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.


ஒரு பெற்றோராக நம் பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதே பிள்ளை எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுத்து வந்து நிற்கும்போது நீங்கள் பொருளாதார ரீதியாக ரெடியாக இல்லை என்றால் அதை விட கொடுமை எனக்கு தெரிந்து எதுவும் கிடையாது. இந்த சூழ்நிலையை ஒருமுறை நானே அனுபவித்திருக்கிறேன். பிறகு என்னை மாற்றிக் கொண்டேன். உங்கள் பிள்ளை பள்ளிக்கூடத்தில் படிக்கும் பட்சத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இந்த எக்ஸல் ஃபைல் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும். இதில் நான் குறிப்பிட்டிருக்கும் வயது ஒரு உதாரணம்தான் உங்கள் / உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வயதுடன் இதை பொருத்தி பார்த்து உங்களுக்கு லேசாக பால்பிட்டேசன் இல்லை என்றால் எதற்கும் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.


இதில் சொல்லப்பட்டிருக்கும் வருடங்கள் எதுவும் உலகம் அழியப்போகும், சுனாமி வரும் , பூமியை பெரிய கல் வந்து தாக்கும் என்ற உட்டாலக்கடி வருடங்கள் அல்ல. இதில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தலைவர் 35 வயது இன்னும் 10 வருடத்துக்குள் அவர் தன்னை மிகப்பெரிய பணத்தேவைகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவரது மகன் கல்லூரி செல்லும்போது   அவர் தன் வயதில் 45 - 51 வரை ஏறக்குறைய 'சரியான ஏ டி எம் மெசினாக " செயல்பட ரெடியாகி விட வேண்டும். ஒரு சிறுகுறிப்பு., "ஏ டி எம் க்கு உணர்வுகள் இல்லை"...நமக்கு???

51 வயதுக்கும் 55 வயதுக்கும் அவ்வளவு தூரம் இல்லை, இருப்பினும் தன்னுடைய ஓய்வு காலமும் நெருங்குவதை நொறுங்காமல் அவதானிக்க வேண்டும்.

லேசாக பயமாக இருக்கிறதா?..பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.பிரச்சினையை  பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம். அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல.  

மனிதனின் பணத்தேவைகளில்தான் சலனமான மனதில் தவறுகள் செய்ய முற்படுகிறான். எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருப்பதே நமது எதிர்கால மகிழ்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் பணம் போதுமானதாக இல்லை  என்பதற்காக இயற்கையின் விதியையும் , இறைவனின் விதியையும் மீறி செயல்பட்டால் ஒரு வேலை உணவு தந்த திருப்தியை தவிர பெரிதாக ஒன்றும் கிடைத்துவிடாது.

 மீண்டும் தேட ஆரம்பிக்கும் முடிவில்லா பசி- உலக வாழ்க்கை 

என் வாழ்க்கையிலும் ஒரு சோதனை எனக்கு நடந்தது, 21 வருடத்துக்கு முன் 700 சம்பளத்தில் இருக்கும்போது 30,000 [ மலேசிய ரிங்கிட்] கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தேன். மிகவும் கஷ்டமான சூழ்நிலை அப்போது. அந்த பணத்தை உரியவரிடம் சேர்த்தற்காக நான் சிலரால் அதிகம் விமர்சிக்கப்பட்டேன், வழக்கமான டயலாக்தான் 'பிழைக்க தெரியாதவன்,- நாமாக எடுக்க கூடாது, கீழே கிடந்ததுதானே" போன்ற வசனங்கள். ஆனால் இன்றுவரை எப்போதும் தூங்கப்போனால் மனதை உறுத்தாமல் இன்றுவரை எனக்கு நிம்மதியான தூக்கம்தான். எனக்கு அறிவுரை வழங்கி விமர்சித்தவர்கள் யாரும் பில்கேட்ஸ் அளவுக்கு உயர்ந்ததாக தெரியவில்லை.  என் வாழ்க்கையில் நடந்ததை ஏன் எழுதுகிறேன் என்றால் யாருக்காவது உதவுமே என்றுதான். சுய தம்பட்டம் அடித்து என் இமேஜை உயர்த்த எனக்கு எப்போதும் அவசியம் இருந்ததில்லை.  

உங்கள் வாழ்க்கையில் திட்டமிடும்போது பற்றாக்குறை இருப்பது சகஜம். அதற்காக அது உங்கள் கன்ட்ரோலில் இல்லை. விதி / சூன்யம் / மனைவி சரியில்லை / பிள்ளைகள் சரியில்லை ராகம் பாட ஆரம்பித்தால்  வாழ்க்கையில் உங்கள் கண் முன்னே வரும் வாய்ப்பைகூட சர்கஸில் கோமாளியை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதற்காக எதுவும் செய்ய மாட்டீர்கள்.

எப்போது பற்றாக்குறை இருக்கிறதோ அன்றிலிருந்து Constructive   ஆக உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எப்போது  Destructive மாற்றினீர்களானால் கால ஓட்டத்தில் எல்லாமே எரிச்சலைத்தரும் ரிசல்ட்தான் கிடைக்கும். 

சந்திரனிலும் ,  செவ்வாயிலும் இறங்கியவர்கள் அதில் போய் இறங்கும் வரை அவர்களுக்கு புதியதுதான். இருப்பினும் தன்னால் முடியும் என்று சரியாக திட்டம் தீட்டியே இறங்கினார்கள். இதில் யாரும் 'சும்மா" நின்று கொண்டிருந்தவனை கூட கம்பெனிக்காக அழைத்து கொண்டுபோய் விட்டவர்கள் இல்லை. எனவே திட்டமிடலும் , பாசிட்டிவ் அப்ரோச்சும் இருந்தால் பணத் தேவைகளின் பற்றாக்குறை நம்மை விட்டு  அகலும்.

உங்கள் ஓய்வு காலத்தில் இவ்வளவு தேவை , உங்கள் பிள்ளையின் படிப்புக்கு இவ்வளவு தேவை என்பதை யாரும் சொன்னால் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். முடிவை நீங்கள் தாராளமாக எடுக்கலாம். ஆனால் உடனே "கேட்" போட்டு தடுக்காதீர்கள். [Law Of Resistance] இப்படி எதற்கெடுத்தாலும் "கேட்" போட்டு தடுப்பவர்களின் மூளையில் "லேர்னிங்" சர்க்யூட் பழுதாகி கிடக்கும். 

லேர்னிங் சர்க்யூட் பழுதாகி விட்டாலே எதுவும் உள் வாங்கி கொள்ளாது. பிறகு ஒரு 10 வருடம் கழித்தாலும் இன்றைக்கு நடந்த விசயமே அவர்கள் 10 வருடம் சென்றும் சொல்வார்கள் [ உதாரணம்: "ராயப்பேட்டையில் ஆட்டோகாரனுக்கு 5 ருபாய் கொடுத்தால் எக்மோர்லெ விட்டுடுவான்"- "உடுப்பிலே 5  ருபாய்க்கு லன்ச் சாப்டுட்டு" - ஏன் டாக்டர் இந்த மருந்து / ஊசியெல்லாம் 50 ரூபாய்க்குள்ளே வாங்கிடலாமா? ]. 


எனவே திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.

திட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும். 

முன் காலத்தில் மிகப்பெரிய தொழில்களை செய்து நொடித்து போனவர்கள் மீண்டும் அதே நல்ல நிலைக்கு வந்தார்கள். சிலர் அப்படி வர முடியவில்லை. மீண்டும் வெற்றியடைந்தவர்கள் சிலரே என்றாலும் அவர்களிடம்ஒற்றுமையாக காணப்பட்ட ஒரே காரணம். அவர்கள் அனைவரிடமும் இறைவன் மீது நம்பிக்கை இருந்தது. இதை நான்  சொல்லவில்லை.  ZizZiglar   ன்  மேனேஜ்மென்ட் ஆய்வு மையம் சொல்கிறது.

நான் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவன், எப்படியிருந்தாலும் திட்டம் போட்டெல்லாம் நான் மாற்றங்களை கொண்டு வர முடியாது என நினைக்கிறீர்களா?

முடியும்....  அடுத்த படிக்கட்டில் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN

30 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//லேசாக பயமாக இருக்கிறதா?.. பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை.

சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.
பிரச்சினையை பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம்.

அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல. //

மிகச் சமீபத்தில் அனுபவித்த உண்மை !

படிக்கட்டு கோபுரத்தின் உச்சத்திற்கு வந்திருக்கிறது....

அலாவுதீன்.S. said...

படிக்கட்டுகள் - 23
அழகிய அழகான அறிவுரைகள்!
ஏற்று நடந்தால் நலம் அளிக்கும்.

சகோ. ஜாகிர்: வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

ஏதோ மேஜிக் மாதிரி ஒரு சாயலுக்குத்தோன்றினாலும் உன் வழிகாட்டுதலில் உண்மை இருக்கிறது. ஆக்கபூர்வமான விமோசனம் இருக்கிறது.

10 வருடங்கள் கழித்து என்றெல்லாம் யோசிக்காததால் நான்கூட நீ சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களைச் சந்தித்தபோது ரொம்பவே தடுமாறிவிட்டேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும்.

அப்போது எழுதியதுதான் "நண்பர்கள் என் நாளங்கள்" என்னும் கவிதை. காரணம், என்னை எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி எடுத்தது உன்போன்ற என் நண்பர்கள்தான்.

வாழ்க்கை எப்போதும்போல் இருந்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறுதான். அது இப்போதுபோல் எப்போதுமே இலகுவாக இருந்து விடாது.

sabeer.abushahruk said...


காலம்
பணிமூப்பு என்றொரு
போர் தொடுக்கும்
நீ
சேமிப்பு என்றொரு
சேனை வளர்

பணிமூப்புப் பட்டாளம்
புறமுதுகு இட்டோடும்.

வட்டமிடும் கழுகெனவே
வாழ்க்கை
வெட்டவெளி கோழிக்குஞ்சு
மனிதன்
கொத்தப்படுமுன் திட்டமிடு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகப்பயனுள்ள பக்குவ அறிவுரைகள்! தேங்ஸ் காக்கா.

Ebrahim Ansari said...

//லேசாக பயமாக இருக்கிறதா?..பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. சவால்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், அதை எதிர் கொள்பவன் தன்னை பெரிதாக நினைத்தால் பிரச்சினைகள் சிறிதாகி விடும்.பிரச்சினையை பெரிதாக நினைத்தால் நாம் சிறிதாகி விடுவோம். அப்படி என்றால் உங்களைதான் நீங்கள் ரீ-ஃபார்மேட் செய்ய வேண்டும் பிரச்சினைகளை அல்ல.//

மலைக்க வைத்த வார்த்தைகள் மட்டுமல்ல. நேற்று மாலை எனக்கு ஒரு பிரச்னை குறுக்கிட்டது.( வீடு கட்டிய காண்ட்ராக்டர் உடன் அநியாய பில் பிரச்னை) அதே நினைவில் இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. இன்று காலையில் சுபுஹு தொழுதுவிட்டு இதைப் படித்தேன். உடனே முடிவு செய்தேன். நான்தான் பெரியவன். என் பிரச்னை எனக்கு முன் மிகவும் சிறியதென்று. பிரச்னையை எதிர் கொள்ளத் தயாராகிவிட்டேன். நன்றி தம்பி. நீங்கள் கலக்கித்தரும் பூஸ்ட் "படிக்கட்டுகள் இஸ் அவர் எனர்ஜி " என்று கோரசாக கூவ வைத்துவிடுகிறது.

இப்னு அப்துல் ரஜாக் said...

இடர்ப்பாடு களைய
கடப்பாடு கொண்டு
ஜாகிர் காக்காவின்
படிக்கட்டு சொல்லும்
விளக்கம்
அருமையே

Iqbal M. Salih said...

//எனவே திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.

திட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும்.//

Admired with those Elegant writings!

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

பயந்தவன் சரியாக முடிவெடுத்ததாக சரித்திரம் இல்லை. திறந்த மனதுடன் கற்றுக் கொள்ள நினைத்தால் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.திட்டமிடலில் மிகவும் முக்கியமானது இறைவன் மீதான நம்பிக்கையும் அந்த மாபெரும் ஆட்சியாளனின் வழிகாட்டலுடன் கூடிய கருணையும்.தம்பி ஜாகிர் மிக அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்களும் துவாவும்


Anonymous said...

வெற்றி பெற முடியாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அதுதான் உழைப்பு, மன உறுதி, விடாமுயற்சி. இக்கட்டுரையில் வெற்றிக்கான பல,படிப்பினை உண்டு.

Yasir said...

ஒவ்வொரு படியிலும் வாழ்க்கைகான தாரக மந்திரத்தை எளிமையாக கற்றுகொடுக்கும் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் காக்கா (யாரும் காக்காவை மந்திரவாதி என்று அழைக்க நினைத்திருந்தால் அதனை கடுமையாக எதிர்க்கின்றேன் :))...இந்த எக்ஸல் ஷீட்டை அப்படியே மனதில் வைத்து திட்டமிட்டால் வாழ்வு இன்ஷா அல்லாஹ் எக்ஸலான்டாக இருக்கும்...

//மீண்டும் வெற்றியடைந்தவர்கள் சிலரே என்றாலும் அவர்களிடம்ஒற்றுமையாக காணப்பட்ட ஒரே காரணம். அவர்கள் அனைவரிடமும் இறைவன் மீது நம்பிக்கை இருந்தது/// கண்கூடாக இரண்டு சம்பவங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்

Yasir said...

//இதில் யாரும் 'சும்மா" நின்று கொண்டிருந்தவனை கூட கம்பெனிக்காக அழைத்து கொண்டுபோய் விட்டவர்கள் இல்லை.// மலேசிய வானிலை இப்படியெல்லாம் ஜோவிலாக யோசிக்க வைக்குமோ

Unknown said...

Thanks for the article,

Nice analysis of financials and plannings, right motivation for triggering financial awareness for family heads to become more responsibile.

At the end everything(financials and plannings) is a matter of self discipline.

sabeer.abushahruk said...

சார்,

நான் ஒன்னும் உங்காள மந்திரவாதின்னு சொல்லல. ஆனால், இவங்கிட்டே மயக்குற வித்தை ஏதோ இருக்கா இல்லையா?

வரிசையாச் சொல்லிக்கிட்டே வரும்போது எதையாவது நம்மால மறுக்க முடியுதா?

அதான் அப்டி மேஜிக்ன்னேன்.

மற்றபடி அவன்ட ரசிகர் மன்றத்தைச் சீண்டிப்பார்க்கும் ரிஸ்க்கெல்லாம் நான் எடுக்கமாட்டேன்.

Shameed said...

ஒவ்வொரு படிக்கட்டும் நம்பிக்கையை வளர்க்கின்றது

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//மற்றபடி அவன்ட ரசிகர் மன்றத்தைச் சீண்டிப்பார்க்கும் ரிஸ்க்கெல்லாம் நான் எடுக்கமாட்டேன்.//

எப்படி நீங்க ரிஸ்க் எடுப்பீங்க ஏன்னா நீங்கதானே ரசிகர் மன்ற தலைவரே !!

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம் ...சரியாக என் எழுத்தை புரிந்துகொண்டதற்காக நன்றி. உண்மையுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு என் எழுத்து நிச்சயம் புரியும்.

இப்ராஹிம் அன்சாரி காக்கா....என் எழுத்து உங்களின் பிரச்சினைக்கு தீர்வாக இருந்ததா?...இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் உங்களின் சுபுஹு தொழுகை நேரம், இரவில் மனக்குழப்பத்தோடு தூக்கம், அதிகாலையில் என் எழுத்து ...இவையனைத்தையும் நேர் கோட்டில் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும்.

இக்பால்...உன் எழுத்தைவிடவா என் எழுத்து Elegant? உன்னைத்தான் பாராட்ட வேண்டும்.

அர அல....சகோதரர் கிரவுன் பக்கத்தில் இருந்தாரா எழுதும்போது. தமிழ் அருவியாய் கொட்டினால் பக்கத்தில் கிரவுன் இருந்திருக்க வேண்டும்.

Bro Naina Al-Khobar , Bro Alaudeen, Bro NKM Abdul Wahid Annaviyar, Bro MHJ [ [படம் எடுத்தவருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு டவுன் பஸ் ரூட் போடலாம் போல இவ்வளவு தூரம் ஏன்? ] எல்லோருக்கும் நன்றி.

சபீர் உன்கேள்விக்கு சாகுல் பதில் சொல்லியாச்சு.

Bro Yasir "மலேசிய வானிலை இப்படியெல்லாம் ஜோவிலாக யோசிக்க வைக்குமோ" .....உங்களின் எழுத்தை படிக்கும்போது உண்மையிலேயே வானிலை அப்படித்தான் இருந்தது,. மாலை மணி 4.30 வெளியில் மெல்லிய மழைச்சாரல்,...இருண்ட மேகம் எங்கு பார்த்தாலும். ஒரு தூரமான மலைப்பகுதியில் மட்டும் டார்ச் லைட் போட்ட மாதிரி சூரிய வெளிச்சம். பச்சைப்போர்வையுடன் மலை அமைதியாக தூங்க ..மழை மட்டும் என் வீட்டு வாசலில் விட்டபாடில்லை.




sabeer.abushahruk said...

முடியாது...ஒப்பல்ல... எல்லோருக்கும் நீ பதில் சொல்வே, எனக்குமட்டும் உன் பினாமியா? ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கா?

ஒழுங்கு மருவாதியா எனக்கும் நீயே பதில் சொல்லு.

உன் பதிவுக்குப் பொருத்தமா எவ்ளோவ் சூப்பரா கவிதைலேயே பின்னூட்டம் இட்டிருக்கேன்!?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//முடியாது...ஒப்பல்ல... எல்லோருக்கும் நீ பதில் சொல்வே, எனக்குமட்டும் உன் பினாமியா? ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கா?//


பினாமியும் இல்லை சுனாமியும் இல்லை. ஊர்லே பவரே இல்லே அப்புறம் எப்படி ஹமீதிடம் ப்பவர் ஆஃப் அட்டானி இருக்கும்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//உன் பதிவுக்குப் பொருத்தமா எவ்ளோவ் சூப்பரா கவிதைலேயே பின்னூட்டம் இட்டிருக்கேன்!?//

கவிதைக்காரர் கவிதையில் பின்னுட்டம் இடாமல் காய்கறியிலா பின்னுடம் இடுவார்!!

KALAM SHAICK ABDUL KADER said...

நீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும்

BORN TO WIN

Life Will Never Be The Same

ZAKIR HUSSAIN said...

//அப்போது எழுதியதுதான் "நண்பர்கள் என் நாளங்கள்" என்னும் கவிதை. காரணம், என்னை எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி எடுத்தது உன்போன்ற என் நண்பர்கள்தான்.//

அன்று நான் சவூதிஅரேபியாவில் உன் வீட்டில் தங்கியிருந்தபோது உன் பிள்ளைகளிடம் நீ சொன்னது
" காலையில் விழித்ததிலிருந்து இரவு தூங்கும் வரை ஒன்றாக என்னுடன் இருந்தவன் இப்போது இவன் முகம் பார்க்க பல வருடங்களை கடக்க வேண்டிய சூழ்நிலை" - கால ஓட்டத்தில் பணம் சம்பாதிக்க தூரம் சென்று விட்டாலும் விலகியிருந்ததில்லை. விடுங்க பாஸ் நண்பர்கள் என்றால் கஷ்டத்துக்கு கூட உதவி செய்யத்தான் செய்வார்கள்.

உன் கவிதை பற்றி.....அது ஒரு 1000 பேர் அடங்கிய அரங்கத்தில் ஒரு முறை வாசிக்கப்பட்டு மிகப்பெரிய கைதட்டலை பெற்றது. வாசித்தது மரியதாஸ் மனைவி பெர்னாடட்செல்வி. அந்த கவிதை வாசித்த பிறகு தன் இமேஜ் உயர்ந்துவிட்டதாக சொன்னார்கள்.


அந்த அரங்கில் உன்பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன்.

பொதுவாகவே நீ , சாகுல் , இக்பால் மூவரும் என் ஆக்கத்தை விமர்சித்து எழுதும்போது நான் பதில் எழுதுவது மிக குறைவு. காரணம்......ஏன் என்று சில தினங்களில் எழுதுவேன். [ இதற்கு கூட "சீரியல் தொடரும்" கான்செப்ட்டா? ]



sabeer.abushahruk said...

கவிதைக்காரர்
கவிதையில் பின்னூட்டமிடாமல்
காய்கறியிலா பின்னூட்டமிடுவார்

ஹமீது,
ஹலாலாக இதுதான் கவிதை

அப்ப இனி,
பேசும்படக்காரர்
புன்னகைக்கும்
புகைப்படங்களால்
பின்னூட்டமிடுவாரா?

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
அர அல....சகோதரர் கிரவுன் பக்கத்தில் இருந்தாரா எழுதும்போது. தமிழ் அருவியாய் கொட்டினால் பக்கத்தில் கிரவுன் இருந்திருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எப்படி என் எழுத்துக்கு வல்ல அல்லாஹ்வின் அருளின் படி என் தகப்பனார், பிறகு என் ஆசான் ராமதாசு, கலைஞர் கருனானிதி, வார்தை சித்தர் வலம்புரிஜான் போன்றவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணியென்றால் என் சகோ. அ.ர.அ.ல ஒரு நேரடி காரணம். அவரின் எழுத்தை பார்த்து ரசித்து முதல் ரசிகனாய் விமர்ச்சித்து வந்ததாலே என் எழுத்தும் ஓரளவு பட்டைதீட்டப்பட்டு உங்களைப்போல் சான்றோர்களின் பாராட்டை அள்ளித்தருகிறது.அவர்(அ.ல)அடக்கி வாசிக்கிறார் நான் காட்டிவிடுகிறேன் அவ்வளவே!அவரைப்போல் அருமையான கவிஞரை காண்பது அரிது என்பது உண்மையிலும் உண்மை.

crown said...

நான் என்ன சொல்ல விளைந்தேனோ அதையே சான்றோர்களும் பொழிந்துவிட்டதால் அவர்கள் போலவே என்னையும்(என்னையும்)உங்கள் ஆக்கம் யோசிக்க வைத்ததை எண்ணி பெருமிதம் அடைகிறேன். ஆனால் படிக்கட்டு உயரே,உயரே போய் கொண்டிருப்பது நிதர்சனம்.

crown said...

காலம்
பணிமூப்பு என்றொரு
போர் தொடுக்கும்
நீ
சேமிப்பு என்றொரு
சேனை வளர்

பணிமூப்புப் பட்டாளம்
புறமுதுகு இட்டோடும்.

வட்டமிடும் கழுகெனவே
வாழ்க்கை
வெட்டவெளி கோழிக்குஞ்சு
மனிதன்
கொத்தப்படுமுன் திட்டமிடு.
--------------------------------------------
இதுவும் நாம் கவனம் கொள்ளவேண்டிய தாரக மந்திரம். நச்'சென்று சிலவரிகளிலேயே இதயம் வந்து தங்கிவிட்ட கவிதை' நன்றி கவியரசே!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

கவிதைக்காரர்
கவிதையில் பின்னூட்டமிடாமல்
காய்கறியிலா பின்னூட்டமிடுவார்

ஹமீது,
ஹலாலாக இதுதான் கவிதை

//அப்ப இனி,
பேசும்படக்காரர்
புன்னகைக்கும்
புகைப்படங்களால்
பின்னூட்டமிடுவாரா? //


ஆகா இதுதான் முல்லை முள்ளால் .....

Ebrahim Ansari said...

//ஆகா இதுதான் முல்லை முள்ளால் .....//

யார் சொன்னது ?

இது சொல்லை சொல்லால் எடுப்பது. எனக்கென்னவோ அண்மைக் காலத்தில் அனைவரும் கவிஞர்களாக ஆகி வருவதாகவே தோன்றுகிறது.

இன்று பாரூக் மச்சான் அவர்களுக்கு படிக்கட்டை படித்துக் காட்டினேன். ஆனந்தம் அடைத்தார்கள். பாராட்டினார்கள். பல புகழ் மொழிகளை ஜாகீரைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//வாழ்க்கை எப்போதும்போல் இருந்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறுதான். அது இப்போதுபோல் எப்போதுமே இலகுவாக இருந்து விடாது.//

Life Will Never Be The Same

படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும்
படிக்கட்டுகளி ஏறி முடித்த பொழுதும்
படிக்க வேண்டிய சூத்திரம்!

KALAM SHAICK ABDUL KADER said...

//வட்டமிடும் கழுகெனவே
வாழ்க்கை
வெட்டவெளி கோழிக்குஞ்சு
மனிதன்
கொத்தப்படுமுன் திட்டமிடு.\\

நேற்று நான் நினைத்தேன்
இன்று நீ வனைந்தாய், கவிவேந்தே!

பட்டம் பெற்றவரும்
திட்டம் இன்றிச் செயலாற்றி
நட்டம் அடைவர்!

THINK+PLAN+WORK = SUCCESS

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு