Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழமொழிகள் - பழகிய மொழியிலே ! 34

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2012 | , , , , ,


பழமொழிகள் ஏராளம் காலம் காலமாக மக்கள்  மத்தியில் பு(ப)ழக்கத்தில் இருந்து வருகின்றன . ஒவ்வொரு சமுதாயத்தினரின் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், வரலாற்றையும் , அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்துக் காட்டுவதாக அவை இருக்கின்றது.  

பழமொழிகள் சில நேரங்களில் நக்கலாகவும், சிரிப்பை வரவழைப்பதாகவும், மேலும் அறிவுரைகளை 'நச்' என்று சொல்வது போலவும்  அமைந்திருக்கும். எடுத்துக் கொண்ட கருப் பொருளைச் சுருக்கமாகவும் நளினமாவும்  சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற  மாதிரியான பழமொழிகளை நெத்தி அடியாகச்  சொன்னால் அந்த சூழ்நிலையை விளங்க வைக்க இது போன்ற பழமொழிகள்  உதவும். சில நேரங்களில் இந்த பழமொழிகள் மனஸ்தாபத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணிவிடும் இதை கையாள்வதில் நேர்த்தியும், திறமையும் மிக முக்கியம் 

நமது ஏரியாவில் புழக்கத்தில் உள்ள பழமொழிகள் சில இதோ :- 

நமதூரைப் பொறுத்தவரை ஒரு  சில பழ மொழிகள் இன்னும் வழக்கில் உள்ளன உதாரணத்திற்கு இங்கு  சிலவற்றிற்கு  விளக்கம் தேவை இருக்காது என நினைக்கின்றேன். காரணம், மண்ணின் மைந்தர்களுக்கு நெத்தி அடியாய் விளங்கும் என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்காது.

"வெலக்கமாரா இருந்தாலும், கப்பல் கூட்டுற வெலக்கமாரா இருக்கணும்" (நல்ல மரியாதை மாப்பிள்ளைக்கு) !. அது சரி, கப்பலை வெலக்கமாத்துலே கூட்டுறாங்கன்னு யார்தான் கூட்டி கழிச்சு கண்டுபிடித்ததோ தெரியலே?. 

"வெலக்கமாத்துக்கு  பட்டு குஞ்சமா ?"  

"மகள் வாழ்ற வாழ்க்கைக்கு மாசத்துக்கு நாலு வெளக்கமாறு". இதுக்கு மேலே வெளக்கமாறு வேனாமுங்கோ! 

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" 

"கழுதையை அறிந்து காலை கொரச்சான் குதிரையை அறிந்து கொம்பை கொரச்சான்"

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" - மாட்டுக்கறி ஒரு சூட்டுலே வெந்துருமான்னு  கேட்கப்புடாது.

"கடல் மீனுக்கு கண்ணுலே சூடு" - கரக்டா கண்ணுலே  'சுடு'வியலான்னு கவிக் காக்கா கிண்டல் பண்ணக்கூடாது"

"பத்துபுள்ளே பெத்தவளுக்கு தலைச்சான் புள்ளக்காரி பக்குவம் சொன்னாளாம்".

"சட்டியிலே  இருந்தாத்தான் ஆப்பையிலே வரும்?"

"தும்ப உட்டுட்டு வால புடிக்கிறான்"

"வாழவும் உடமாட்டான் சாவவும் உடமாட்டான்"

"முள்ளை முள்ளாலே தான்  எடுக்கணும்" - அப்போ குடிகாரனுக்கு குவாட்டர் கொடுத்தா திருத்தனும் ?

இங்கு எனது சிற்றறிவுக்கு தெரிந்த சில  பழமொழிகளும் அதற்கான தர்ஜுமாவும் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன (அதிரைநிருபரின் திருவள்ளுவருன்னு கவிக் காக்கா சொல்லி தூக்கத்தை கெடுத்துப்புட்டாங்க). 

1 "அகல கால் வைக்கிறான்"

பொருள் : முன்னூறு  அடிக்கு போர் போட்டுவிட்டு ஐநூறு அடி ஆழத்துலே இருந்து நீரை உருஞ்சும் நீர் மூழ்கி மோட்டார் வாங்குவது.

2 "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான்"

பொருள் : முத்துபேட்டையில்  இருந்து திருவாரூர் வரைதான் அகல ரயில் பாதையாம்  என்று குழப்பி விட்டது.

3 "அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு"

பொருள் : பெண்ணுக்கு வீடு கட்டி கொடுப்பது  யானைக்கு தீனி போடுவதற்கு சமமாம் !!!

4  "அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது"

பொருள் : உழைத்து சம்பாரிக்க  வேண்டிய வயதில் உறங்கினால் உறங்கும் வயதில் உழைக்கும் நிலை ஏற்படும்.

5 "அரை கிணறு தாண்டுறான்"

பொருள் : எந்த வேலை செய்தாலும் ஆர்வமாகவும் முழு மனதுடனும் செய்யவேண்டும் அரை குறையாக செய்ய கூடாது.

6 "குதிரை  கொம்பா இருக்கே"

பொருள் : அதிரையில் ஆப்பிள் பயிர் இடுவேன் என்று பில்டப் கொடுப்பது  

7  "நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல"

பொருள் : கிணற்றில் முதலை வசிக்காது, ஒருசில ஆளுக சும்மா பொய்யை அள்ளி வீசி விடுவதை இப்படி  சொல்லலாம்.

8  "ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒருகால்"

பொருள் : எந்த பிரச்சனைக்கும் தீர்க்கமா  முடிவெடுக்க தெரியாம விழி பிதுங்கி நிற்பது. உதாரணம் துபாய் போகாமல் ஊரோடு தங்கி விடலாமா? செலவுக்கு என்ன செய்வது?

10 "பகலிலே பசு மாடு பிடிக்கத்தெரியyaaதவன் இரவிலே எப்படி எருமை மாட்டைப் பிடிப்பான்"

பொருள் : கொடுத்த வேலையை சரியாய் செய்யாமல் வேற  வேலை கிடைத்தால் நல்laaல செய்வேன் என்று சால்சாப்பு சொல்லும் ஆசாமிகளுக்கு உள்ள உவமை.

11 "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே"

பொருள் : தகுதியில்லாத வந்தவன் போனனவனை எல்லாம் நம்பி நம்ம வாழ்க்கையை பணயம் வைக்க கூடாது.

12 "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"

பொருள் : எளிமென்ட்ரி ஸ்கூலில் எ பி சி டி படிக்காதவன் எட்டாவதில் என்ன பண்ணுவான்?   

13 "வாய் வாழைப்பழம் கை கருனாக்கிழங்கு"

பொருள் : வாய்ச்சொல்லில் வீரணடி கைவேலைக்கு உதவமாட்டான்

14 "அடுத்த வீட்டில் அம்மி நகருதா ஆட்டுக்கல் நகருதா?ன்னு பார்க்கிறவன்"

பொருள் : தன் முதுகு அரிப்பதை சொரிந்து கொள்ளத்தெரியாதவன்

15 "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"

பொருள் : "கொலஸ்ட்ரால் இல்லாமல் செம்மரியாட்டுக்கறி தின்ன ஆசைப்படுபவன்"

 16 "கீழே விழுந்தும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்கிறான் "

பொருள் : சமாளிபிகேஷனில் டாக்டர் பட்டம் வாங்கியவன்.   

17 "குருடன் ராஜ முழி முழிக்க ஆசைப்படுகிறான்"

பொருள் : பார்டரிலே பாஸ் பண்ணிவிட்டு பாரீஸ் போய் படிக்க நினைப்பவன். 

18 "நாளைக்கு வருகிற பலாக்காயை விட இன்னைக்கு கிடைக்கிற கலாக்காயே மேல்"

பொருள் : போதுமென்ற மனம்.

19 "ஆதாயம் இல்லாமல் ஆத்தைக் கட்டி இறைப்பானா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா?"

பொருள் : எல்லாரும் இலாபம் வச்சே வியாபாரம் பண்ணுவார்கள். 

20 காரியம் ஆக வேண்டுமானால் கழுதையையும் காலைக்கட்டிப்பிடிpபான்.

பொருள் : சுயநலமி. 
தொடரும்னு போட்டுடலாம்ங்களா ?
Sஹமீது

34 Responses So Far:

Ebrahim Ansari said...

கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை.

அகல உழும் கட்டுரையாளர்களுக்கு மத்தியில் ஆழ உழுது இருக்கிறார்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்போல இருக்கிறதே.

அது சரி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?

பாம்பறியும் பாம்பின் கால் என்கிற பழமொழியின் உண்மைப் பொருள் என்ன?

வாக்கத்தவனுக்கு வாத்யார் வேலையும் போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலையும் என்பதன் உண்மைப் பொருள் என்ன?

Yasir said...

நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துகொண்டிருந்தது...”முந்திரி கொட்டையாட்டம் முந்திக்கிட்டு“ நீங்க எழுதிட்டீய..காக்கா எழுதிய என்ன தம்பி எழுதினா என்ன...கொஞ்சம் நேரம் கழித்து வந்து இன்னும் எழுதலாம்

Unknown said...

Dear brother,

I like the flavour of speech like writing is beautiful which reflects our Adirampattinam dialect. All the proverbs mentioned are useful as per the contexts and similar to Tirukkural couplets with stuffed meanings to the point, but lets not learn the proverbs to hurt anyone.

Thanks and regards

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

புகைப்படத்தில் தான் கலக்குவிங்கன்னு நினைச்சேன் இப்படி பழமொழிக்கு பொருள் தேடும் ஆய்வில் தன்னை முழுவதும் இணைத்துள்ளீர்கள் என்றதும் பெருமிதமாக உள்ளது அதிலும் யாசிர் காக்கா அவர்களும் பழமொழி ஆய்வுப்பணியில் இருந்து பதியலாமா வேணாமா என்ரிக்கும் நேரத்தில் ஹமீது பதிவு ஓட்டத்தில் முந்தி வெற்றி பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்.

அருமை காக்கா இன்னும் பழமொழிகள் நிறைய விடுபட்டுள்ளதை இ அ காக்கா தனக்கு அறிந்த பழமொழியை இணைத்துள்ளார் பாராட்டுக்கள் அதற்க்குண்டான பொருளை இந்நேரம் தேடி பிடித்திருப்பார் என்று நினைக்கிறன் நானும் பொருளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்தவனாக...

\\தொடரும்னு போட்டுடலாம்ங்களா ?//

என்ன காக்கா இப்புடி கேட்டுப்புட்டிங்க வித்தியாசமான தொடர் எழுதும் நீங்களா இப்படி கேட்பது ??.......அருமையான தொடர் பதிவுவை தாருங்கள் இன்ஷா அல்லாஹ்

sabeer.abushahruk said...

//"கடல் மீனுக்கு கண்ணுலே சூடு" - கரக்டா கண்ணுலே 'சுடு'வியலான்னு கவிக் காக்கா கிண்டல் பண்ணக்கூடாது"//

ச்சேச்சே அதெல்லாம் கிண்டல் பண்ணமாட்டேன். கடல் மீன் கடைத்தெருவுக்கு வந்தபின்னே ஆடாம அசையாம சும்மாத்தானே கெடக்கும். அதத்தான் சூப்பரா சுட்டுருவியலே.

அசையும் பொருட்களை இதுவரை எனக்குச் சுட்டுக் காட்டலயே ஹமீது?

மல்லிபட்டிணம் கடற்கரையில் அந்தப் பொட்டி மடையானை நீங்க வச்ச குறிக்கு அது ப்பீஸ் ப்பீஸாகவல்ல ஆகியிருக்கனும்.

ஆனா,
நடந்தது என்ன?

(நான் சொன்னா சொல்றான்ம்பீங்க)

இப்படி பழமொழிகளைத் தொகுப்பது சிரமமான வேலை அதைவிட, பழமொழிகளுக்கான புதுமொழிகள் செம ட்டச்சு.

கலக்கிட்டிய. தொடரும்தானே?

sabeer.abushahruk said...

நாம மல்லிப்பட்டிணத்துக்கு மீன் பிடிக்க போன கதையை வெளியே சொன்னா வெக்கக்கேடு அதான் நான் கமுக்கமா இருக்கேன்.

எவ்ளோவ் விலையுயர்ந்த ஃபிஷ்ஷிங் ராட்? எத்தாத்தண்டி புழுக்கள்? (அந்தப் புழுக்களுக்கு நாம் சட்ட சிறுவா தச்சி போடலயே தவிர நல்லா கவனிச்சு வச்சிருந்தோம்)

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஒரு மீனு, ஒக்கே ஒக்கே மீனு, ஏக் மச்சி, ஒன் ஃபிஷ், வாஹித் சமக், ஒற்ற மீனுகூட கிட்டாது போயதே படச்சோனே.

ரொம்ப கடுப்பு என்னான்னா, நம்ம கண்ணு முன்னாலேயே காதுல துண்டு பீடியும் விரல்களில் நரம்பு சுற்றிய தூண்டிலும் மண்ணோடு மண்புழுவும் வச்சிக்கிட்டு வந்த லோக்கல் நாசமா போவான் ட்டக் ட்டக்குன்னு மீன்களைப் பிடிச்சானே, இந்த மேட்டரை இதுவரை நான் யார்ட்டேயும் சொல்லியிருப்பேன்? இல்லையே.

sabeer.abushahruk said...

//பாம்பறியும் பாம்பின் கால் என்கிற பழமொழியின் உண்மைப் பொருள் என்ன?//

என்ன காக்கா ட்டெஸ்ட்டா?

நாங்க பார்க்கத்தான் பேக்கு மாதிரி இருப்போம். புத்திய ரொம்ப் தீட்டி வச்சிருக்கோம்.

இதுகூடவா தெரியாது? பாம்புக்கு கால் இல்லைனு பாம்புக்குத் தெரியும் அப்டீன்னு அஞ்சாங்கிளாஸ் பையன் மாதிரிலாம் சொல்ல்மாட்டோம்.

பாம்பினங்களின் காலை (கால் என்றால் பிறப்பிடம்/இருப்பிடம்/வசிப்பிடம் என்றொரு அர்த்தம் உண்டு) பாம்புகளே அறியும். பாம்பாட்டியும் அறிவான். ஆனா அதப்பத்தி நீஙக் கேட்கல.

sabeer.abushahruk said...

//வாக்கத்தவனுக்கு வாத்யார் வேலையும் போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலையும் என்பதன் உண்மைப் பொருள் என்ன?//

ரொம்ப கஷ்டமானைதை நான் சொல்லிட்டேன். இவ்ளோவ் இலகுவானதையெல்லாம் என் சிஷ்யன் யாராவது வந்து சொல்வாங்க.

(சபீரு, எஸ்ஸாக்கும்?)

ZAKIR HUSSAIN said...

ரொம்ப காலமா மறந்து போன பழமொழிகள் ஞாபகப்படுத்தியதற்கு தேங்க்ஸ்.

ஏதோ நான் கேள்விப்பட்டது:

நாக்கு நாவிதன் [ நாசுவன் ] கத்தி - [அதான் இப்போ எலக்ட்ரிக் ஷேவர் வந்துருச்சே...இன்னுமா மாத்தெலெ]

மொசப்புடுக்கிற மூஞ்செ பார்த்தா தெரியலெ. [மூஞ்சி எப்போதும் முயல் பிடிப்பதற்கல்ல]

ஆடு மலையேறி மேஞ்சாலும் குட்டி கோனானுக்குத்தான். [இப்ப உள்ள ஆடு எல்லாம் சேர் ஆட்டோ எடுத்து தப்பிக்கிற டெக்னிக் தெரிஞ்சது...]

குரங்குக்கு எல்லாம் ஒரே மூஞ்சி. [இனிமேல் அதுங்களுக்கும் தேர்தல் அடையாள அட்டை கொடுக்கலாம்னு இருக்கீங்களா? ]



Shameed said...

மீனுதான் தூண்டிலில் மாட்டும் இப்போ மீனுக்கு கண்ணுலே சூடுன்னு சொல்லிப்புட்டு கவி அவர்களிடம் நான் மாட்டிக்கிட்டேன் (நல்ல சூடு )

Shameed said...

Yasir சொன்னது…
//நான் நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துகொண்டிருந்தது...”முந்திரி கொட்டையாட்டம் முந்திக்கிட்டு“ நீங்க எழுதிட்டீய..காக்கா எழுதிய என்ன தம்பி எழுதினா என்ன...கொஞ்சம் நேரம் கழித்து வந்து இன்னும் எழுதலாம்//

அப்போ எல்லோருமே ஒரு மார்கமாத்தான் இருக்கோம்

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//பாம்பறியும் பாம்பின் கால் என்கிற பழமொழியின் உண்மைப் பொருள் என்ன?//

கடல் மீனுக்கு கண்ணுலே சூடுன்னு சொல்லிட்டு சூடு பட்டது போதும் பாம்பை பத்தி சொல்லிபுட்டு நான் கொத்து வாங்கஏலாது மாமா

Unknown said...

அஸ்ஸலாமு அலைகும்

Ebrahim Ansari சொன்னது…

//அது சரி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?//


இது மருமகளை கொடுமை படுத்தும் மாமியாவிற்கு பயம்படுதும் பழமொழிதானே. அது என்னன்டா
மருமகளை கொடுக்கவேன்டிய எல்லாஉரிமைகலையும் (உனவு முதல் உரிமைகளை)கொடுக்காமல் கொடுமை செய்யும் மமியார் தன் மருமகளின் கற்பகாலத்தில் தன் மகனின்கருவை எப்படி பேனி பாதுகாப்பது என்று சிந்தித்து கொன்டு இருக்கயில் அவளின் அறியாமையைய் (கொடுமையை)தெரிந்து சொல்லப்பட்டதே இது.மகனின் கருவை தாங்கியிருக்கும் வெளி வீட்டிலிருந்து வந்திருக்கும் மருமகளை நன்கு கவனித்தால் அவளின் மகனின் கருவாகிய தன் வீட்டு குழந்தை நன்கு தன்னாலேயே வளர்ந்துவிடும். என்ரு தானே பொருள்.

மனு நீதி மனித குலத்திற்கு நீதியா என்று கேட்ட முதல் பதிப்பு கன்ட நாயகரே சொல்லுங்கள் பிழை இருந்தால் திருத்திக் கொள்கின்றேன்.

Shameed said...

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

//புகைப்படத்தில் தான் கலக்குவிங்கன்னு நினைச்சேன்//

வலைக்கும் முஸ்ஸலாம்
தலைக்கு மேலே வெள்ளம் போச்சு ஜான் போனா என்ன முலம் போன என்ன கலைக்கிற வேண்டியதுதான்

sabeer.abushahruk said...

//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் //

பழமொழியே தப்பு, காக்கா.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளையை கொடைக்கானல் வளர்க்கும் என்பதுதானே பழமொழி.

சகோ. முஹமது புஹாரி, அருமையான விளக்கம். சபாஷ்.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?//

ஊரார் பிள்ளையை ஊட்டி யில் வளர்த்தால் தன் பிள்ளை கொடைக்கானலில் வளரும்

(சும்மா மாத்தி யோசிச்சேன் மாமா)

Shameed said...

11 "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே"

மண் குதிரை என்பது சரியல்ல மண் குதிர் என்பதுதான் சரியான சொல் என்று சகோ நூர் முஹம்மது (அதிரை களஞ்சியம் )அவர்கள் தொலை பேசி மூலம் விளக்கம் கூறினார்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பழமொழிகளுக்கு புதுமொழி சூப்பரு!

//வாக்கத்தவனுக்கு வாத்யார் வேலையும் போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலையும் என்பதன் உண்மைப் பொருள் என்ன?//

வாய் கத்த அதாவது உரக்க பேச தெரிந்த ஆளுக்கு வாத்தியார் வேலை பொருத்தம்

போக்கு அற்றவனுக்கு அதாவது எங்கும் போகாமல் கிணற்றுத் தவளையா யிருப்பவன் அதுவும் இந்த ஆட்சி அரசில் போலீசு வேலையில் இருந்தால் அடிக்கடி தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்பி எங்கும் போக வாய்ப்பு கிடைக்கும் என்ற பொருளில் இருக்குமே!

சரியா சபீர் காக்கா!

crown said...

mohamed buhari சொன்னது…

அஸ்ஸலாமு அலைகும்
//அது சரி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்கிற பழமொழியின் உண்மையான பொருள் என்ன?//
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி சொன்னதைத்தான் நானும் கேள்வி பட்டிருக்கிறேன். நான் எழுத தாமதம் கொண்டேன். தம்பி எழுதுவிட்டார்.

crown said...

வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,
போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்டவன்

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//பாம்பறியும் பாம்பின் கால் என்கிற பழமொழியின் உண்மைப் பொருள் என்ன?//
---------------------------------------------------------------
கவியரசுவின் கருத்தே என் கருத்து. பாம்புக்கு கால் இல்லை அப்படி ஒருக்கால் இருந்தாலும் அது பாம்புக்கு மட்டும் தெரியும்.

Abdul Razik said...

Nice Saying Mr. Hameed and Buhari has given fantastic Explanation..

Note: saying mean proverb (பலமொழி)

Abdul Razik
Dubai

Abdul Razik said...

Big Correction in my comment பலமொழி wrong one
"பழமொழி" right one.. Both word have big different.

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பழமொழிகளுக்கு நம்ம ஊரு மொழி சூப்பரு!ஹமீது காக்கா

//கேக்கிரக்வன் கேணயனா இருந்தா கேப்பைல நெய்வடியுதுன்னு சொல்லுவாங்க //
//கருவாடு கரஞ்சா சட்டியோட//

//சபீரு, எஸ்ஸாக்கும்?//
விடுவோமா சபீர் காக்கா பொருள் சொல்லிட்டு போங்க!

Unknown said...

//வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,
போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்டவன் // Its wrong.

புணர்ச்சி விதியின்படி
வாக்கத்தவன் = வாக்கு + அற்றவன் = One who is not able to speak well cannot become a teacher.

போக்கத்தவன் = போக்கு + அற்றவன் = One who is not outgoing can not become a police guard.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


யாங்க‌ங்க‌,

//அடி உதவுவது போல் அண்ணன், தம்பி கூட உதவ மாட்டான்// என்கிறார்களே, செலவுக்கு முடையாக இருந்தாலும் ஏதேனும் கடன்கிடன் கொடுத்து உதவுமா?

//பழகப்பழக பாலும் புளிக்கும்//என்கிறார்களே, பாலுட்டெ போயி யாராச்சும் பழக்க,வழக்கம் வப்பாங்களா?

//உயர,உயரவேப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது//ண்டு சொல்றாங்களே, நம்மூர்லெ எத்தனையோ எருமை மாடு, ஒதவாக்கரை, வெறுவாக்லகெட்டவன் என்று பிறரால் திட்டப்பட்டவர்கள் கூட ப்ரந்துக்கு மேலெ ஒசக்க ஏரோப்ளேன்லெ பறக்க வச்சி வெளிநாட்டுக்கு அனுப்பி காசு பணத்தை பார்த்து விடுகிறார்களே?

//காஞ்ச‌ ம‌ட்டையைப்பார்த்து ப‌ச்சை ம‌ட்டை சிரிச்சிச்சாம்// என்கிறார்க‌ளே, அப்பொ ப‌ச்சை ம‌ட்டைக்கு எத்த‌னை ப‌ற்க‌ள்?

//மாமியார் உடைத்தால் ம‌ண் குட‌ம், ம‌ரும‌க‌ள் உடைத்தால் பொன் குட‌ம்//என்கிறார்க‌ளே, ப‌வுன் விக்கிற‌ விலைக்கு ஊட்லெ உள்ள‌ எல்லாக்குட‌த்தையும் ம‌ரும‌க‌ள் கையில் கொடுத்து ஒட‌க்க‌ச்சொல்ல‌ வேண்டிய‌து தானே?

Unknown said...

Assalamu Alaikkum,
Dear brothers/sisters,

Most of the Tamil proverbs are of nature of nurturing negative and verbal attacking patterns of meanings.

If a culture is having negative form of speech patterns which degrades the self esteem among the members of the community(like calling by bad names - Pattapeyar), the community cannot excel.

So, we need to focus on positive form of proverbs, which are found in English mostly, which boosts morals, develop self esteem, and make one smarter. Please check some English proverbs then you would understand what I mean.

So, let our cultural elements (like negative proverbial dialogs) not influence our thinking in negative ways.

Best Regards

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

''பழ'மொழிகளுக்கும் எனக்கும் தூரம் என்பது எனோடு 'பழ'கியவர்களுக்கு தெரியும்... அதற்காக 'பல'மொழிகளும் தெரியாது என்றும் சொல்ல வில்லை !

:)

சொன்னா கேட்டுக்குவேனுங்க !

அதிரை சித்திக் said...

சட்டி சடக்குனா சாடை நமக்கு

கோட்டனுடைய முட்டை ..
சோனா வீட்டு அம்மியை உடைக்கும்

தென்னைய வச்சா இளநீரு
பிள்ளைய பெத்தா கண்ணீரு

பூனை கண்ணை மூடினா
உலகம் இருட்டு எங்குமாம்

உப்பை திண்டவன் தண்ணீர் குடிப்பான்

குடிகாரன் பே ச்சு விடிஞ்சாக்க போச்சு

பணம் பந்திலே குளம் குப்பையிலே

பல்லு போனா சொல்லு போச்சு

பாலுள்ள போதே மேண்டுக்கோ
புள்ள பெற முன் திண்டுக்கோ

தாயை போல் பிள்ளை நூலை போல்
சேலை ...

போதுமா ...இன்னும் வேணுமா

crown said...

B. Ahamed Ameen சொன்னது…

//வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்=வாக்குகற்றவன்,
போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்டவன் // Its wrong.

புணர்ச்சி விதியின்படி
வாக்கத்தவன் = வாக்கு + அற்றவன் = One who is not able to speak well cannot become a teacher.

போக்கத்தவன் = போக்கு + அற்றவன் = One who is not outgoing can not become a police guard.
----------------------------------------------------------------------அஸ்ஸலாமுஅலைக்கும்.சகோதரர் அமீன் நான் தங்களைப்போல் மொழியறியும் ஆற்றல் பெற்றவன் அல்லன்.ஆனால் என் சிற்றறிவிற்கு நீங்கள் சொல்லிய விடை எதிர்மறையாக இருப்பதாக உணர்கிறேன். கேள்வி எழுப்பிய அறிஞர் இபுறாகிம் அன்சாரி காக்காவின் பதிலை அறிய ஆவலாய் உள்ளேன். ஒருகால் என் ஊகம் பொய்க்கலாம்.விடைகான ஆவலாய் உள்ளேன் ஐயா!

KALAM SHAICK ABDUL KADER said...

பிழை
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சரி:
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது
பிழை:
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
சரி:
மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே


ZAKIR HUSSAIN said...

இதில் மண்குதிர் என்பது இரண்டு ஆறு அல்லது பெரும்கால்வாய்கள் ஒன்றாக சேரும் இடத்தில் காணப்படும் மண்....பார்ப்பதற்கு ஸ்ட்ராங் ஆக தோன்றும் காலை வைத்தால் புதையும். இதை ஒரு முறை சுகி.சிவம் அவர்கள் சொல்லக்கேட்டது.

KALAM SHAICK ABDUL KADER said...

பிழை:
களவையும் கற்று மற
சரி:
களவையும் அகற்று மற

KALAM SHAICK ABDUL KADER said...

”பயணக்காரன் பைத்தியக்காரன்”
என்ற பழமொழியை எல்லாரும் அனுபவித்திருந்தாலும், இக்கட்டுரை ஆசிரியர்- சுட்டும் விழிச் சுடர்-ஷாவன்னா அவர்கள் நிரம்ப அனுபவித்து விட்டார்கள் -ஸ்ரீலங்கன் ஏர்வேய்ஸில் ஆட்டுத்தலை “பார்சல்” அனுப்பியதில் அறியலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு