Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்தூரி மாயை...! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2013 | , , , ,

இது ஒரு மீள்பதிவு
என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?

அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?

ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே

ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி

தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா

கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்

போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்

இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்

அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

20 Responses So Far:

Shameed said...

//அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது

முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்//

முன்பு நமக்கும் முகவரி தெரியாமல் பல கடிதங்கள் போட்டுவிட்டோம் இப்போ சரியான முகவரி தெரிந்ததும்
இறைஞ்சலை தீர்ப்பவன் இடமே கேட்க்கின்றோம். திருந்திக்கொள்வது மிக முக்கியம்

Unknown said...

நம் சமூகத்தில் சிலரின் புலன்கள் நிரந்தரமாக செயல் இழந்ததினால் ஏற்படும் அவலம் இது.

கவிதை நடையை ரசிப்பதை காட்டிலும், கவி கூறும் பொருள் கனமாக இருப்பதால், இப்பொருள், புலன் இழந்தவர்களுக்கு மருந்தாக அமைய இறைவனை பிரார்திகின்றேன்.

Anonymous said...

கந்தூரி என்று தலைப்பு பாக்கவும் ஒரு சிர்கான வற்ரை பற்றி எல்லாம் நிருபரில் கவிதை என்று எழுதுகிறார்கள், என்று நினய்தேன், ஆஹா!!! ஆஹா!!! அருமயான கவிதை.

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

Brother Mr. Sabeer's poetic lines express his deep concern over some of our people's wrong worshiping and wrong way of celebrating in Islam.

Whenever there is a regularity in five times prayer with deep spiritual aspiration towards God Almighty, people will realize that the Handoori, Sandhanakkoodu Urchavam all these things are not right things to do in Islam. These festivals are similar to and derived from the Hindu religion and their celebrations and customs(Our forefathers might have been doing in the same land).

I hope gradually worshiping of Awliya and related celebrations will fade away soon. We have to realize that its not easy to force those people abruptly stop these wrong beliefs. But these beliefs are for sure not growing, losing strength, because of current generations have good education, Sharia knowledge, and good rationale.

May Allah increase our knowledge and guide us to the right path.

Thanks and best regards,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.
ரபியுல் ஆகிர் பிறை 27 நிகழ்வாவது
ரத்தாகிட இன்று முதல் உழைத்திடுவோம்!

இப்னு அப்துல் ரஜாக் said...

கந்தூரி என்று தலைப்பு பாக்கவும் ஒரு சிர்கான வற்ரை பற்றி எல்லாம் நிருபரில் கவிதை என்று எழுதுகிறார்கள், என்று நினய்தேன், ஆஹா!!! ஆஹா!!! அருமயான கவிதை.

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

Yasir said...

//ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே/// உண்மை கவிக்காக்கா

//கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி/// கண் கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்

//அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.// ஆமீன் யாரப்பல் ஆலமீன்




نتائج الاعداية بسوريا said...

//அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்//

ஒவ்வொரு கபுறு வணங்கியையும் உற்று நோக்க வைக்கும், நெத்தியடி வரிகள்.

கேட்க சக்தி இல்லாதவர்களிடம் கேட்பது இல்லாத ஊருக்கு வழி கேட்பது போன்று உள்ள ஒன்று.

எந்நேரமும் எக்கணமும் தீர்ப்பு நாளின் நீதிபதியிடமே கேட்கவும் என்ற பொருள் பொதிந்த வரிகளை இவர்கள் சிந்திக்க மாட்டார்களா ?

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தர்கா தலைவர் கனவு காண வேண்டும்.

அந்த மகானே! கனவில் வந்து வழக்கமாக முஹர்ரம் 27 ல் துவங்கும் நிகழ்வு இனி இருக்கக்கூடாது என அறிவிக்க வேன்டும். இன்சா அல்லாஹ்.

கனவில் கொல்லைபுறம் சமாதி உருவானது போல் அதே கனவு மூலம் சமாதி விழா ஒழிய வேண்டும்.

இந்த செய்தி நிருபர், எக்ஸ்ப்ரஸ், அதிரை நியூஸ் ஆகியவற்றில் பிரதான செய்தியாக அதி விரைவில் காண வேண்டும். இன்சா அல்லாஹ்.

نتائج الاعداية بسوريا said...

//But these beliefs are for sure not growing, losing strength, because of current generations have good education, Sharia knowledge, and good rationale. //

Mr. Ameen absolutely you are correct.

Nowadays ( current generation ) has enough knowledge in Shariah more than their elders. So we may hope like theses bidaths ( new activities in the name of religion )never affect their way of life Ishaa Allah.

Abu asif.

அதிரை.மெய்சா said...

கந்தூரிக்கெல்லாம் கவிதையா .?
என்று தான் நினைத்தேன்.!
உள்ளே சென்று பார்த்த போதுதான்
தந்தூரி சிக்கன் போல் சுவைமிகு அர்த்தங்களைக் கொடுத்து சொல்கேளா மூடர்களுக்கு உணர்த்தியிருக்கிறாய்.

அருமை வாழ்த்துக்கள் நண்பா.!

ZAKIR HUSSAIN said...

"கந்தூரி" யை படித்தவர்கள் அதோடு சேர்ந்த 'மாயை"யை விட்ட மாயம் என்ன?

Ebrahim Ansari said...

நமது ஊரின் கலாச்சாரத்தில் நீண்டகாலமாக ஊறிப போயிருக்கும் இந்த மாயப் பிசாசை விரட்ட இன்று சங்கல்பம் ஏற்றிருக்கும் மிகப் பலர் ஒரு அறியாமைக் காலத்தில் - நான் உட்பட- இவற்றில் ஏதோ அற்புதம் உண்டென்றே நம்பி இருந்தனர்.

நமது ஊர் மக்களிடம் மாதங்களின் பெயர்களை சொல்லச்சொன்னால் அவர்களுக்கு

ஜனவரி , பிப்ரவரி தெரியாது. சித்திரை , வைகாசி தெரியாது, . முஹர்ரம் , சபர் தெரியாது.

கடற்கரை தெரு கந்தூரி மாதம், முத்துப் பேட்டை கந்தூரி மாதம், நாகூர் கந்தூரி மாதம், காட்டுப் பள்ளி கந்தூரி மாதம் என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு இரத்த நாளங்களில் இவை கலந்து விட்டன.

மாஷா அல்லாஹ் இப்போது ஒரு விழிப்புணர்வு மெல்ல மெல்ல மேலோங்கி வருகிறது. அத்தகைய உணர்வுக்கு இந்தக் கவிதை பெருமளவில் உதவும்.

இதை அச்சடித்து அதிரையின் அனைத்துப் பள்ளிகளின் ஜூம் ஆவில் விநியோகிக்க , யாராவது ஊரில் இருக்கும் நண்பர்கள் ஏற்பாடு செய்யலாம் என்பது எனது கருத்து.

sabeer.abushahruk said...

நல்லவேளை காலாகாலத்ல எங்களுக்கு இந்த ஷிர்க் தெரிய வந்தது. இல்லேனா, இது வளர்ந்து ஷார்ஜாவிலிருந்து ஒரு மண்டகப்படியும் தமாமிலிருந்து ஒரு மண்டகப்படியும் மலேயாவிலிருந்து மண்டகப்படியும் வ்ந்த வண்ணம் இருந்திருக்கும்.

சந்தணம் பூசிச் சாக ஆள் ரெடியான்னும் தெரியல
அந்தப் பொம்பிளை கபுருக்கும் கந்தூரி எப்ப?

எல்லாத்தையும் இழுத்து மூடுங்க படிச்ச பழம்பெரும் தெருவாசிகளே. எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து தெருவை ஒருக்கா நல்லா கழுவி விடுவோம் வாங்க.

sabeer.abushahruk said...

இந்தக் கந்தூரிக் காலத்த எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு வேற ஊர்க் கார நண்பர்களும் வேற நாட்டுக்காரங்களும் "உங்க ஊர்ல கந்தூரியாம்ல. ஹெஹே" ன்னும் வெடைக்கிறாங்க மக்களே. கூசுது.

கொத்துப்புரோட்டா, முர்த்தபா, முட்டாசு, ரோஸ் மில்க்குக்கெல்லாம் மாத்து வழி வந்துடிச்சி மக்களே. இதுக்காகவெல்லாம்போய் கூடு எடுப்பாங்களா?

திருந்துங்கப்பா, ப்ளீஸ்.

Unknown said...

//திருந்துங்கப்பா, ப்ளீஸ்.//

எத்தனை தடவை சொல்றது?

கந்தூரியை எதிர்க்கிறேன் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு.. கூட்டுராவு அன்று கூத்து பார்க்க போயிடுறாங்களே...கேள்வி கேட்டா.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்கண்ணு பார்க்க வந்தேண்ணு சமாளிக்கிறாங்க..

தயவு செய்து அன்று இரவு போய் பார்த்தீங்கண்ணா .. அதிர்ச்சி தரக்கூடிய நபரெல்லாம் நிர்பார்கள்..!!

KALAM SHAICK ABDUL KADER said...


கண்மூடி என்றோ
மண்மூடப்பட்டவர்களிடம்
மன்றாடி நிற்கும்
கண்மூடிப் பழக்கங்களை
மண்மூடச் சொல்லும் கவிதை!

உண்மையில் இறைநேசர்கள் இந்தக் களியாட்டங்களை விரும்பவே மாட்டார்கள் என்பது மனசாட்சிக்கும் தெரியும்; ஷைத்தான் என்னும் ஈகோவும், பணம் பண்ணும் உத்தியும் இருக்கும் வரைக்கும் தொடரும் என்றாலும், இளைஞர்கள் மற்றும் படிப்பறிவுள்ள மாணவிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு வந்து விட்டதால் மெல்ல மெல்ல இந்தப் பழக்கம் குறையும்; அதுவரை எத்தனை மீள்பதிவுகள் இட்டாலும் தகுமானது இந்தக் கவிதையாகும்..

உணர்ச்சிகளை அப்படியே வார்த்தெடுக்கும் வார்த்தைகளை வசப்படுத்திக் கொண்ட கவிவேந்தர் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

Ahamed irshad said...

கந்தூரியை எதிர்க்கிறேன் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு.. கூட்டுராவு அன்று கூத்து பார்க்க போயிடுறாங்களே. //

Jafar hassan அவர்கள் சொன்னதுதான் இயல்பில் நடக்கிறது... ஆண்களைவிட பெண்களிடத்தில் அதிகம் வலியுறுத்தல் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து... கெட்டதோ/நல்லதோ பழமையில் ஊறிப்போன விஷயங்களை அவ்வளவு எளிதாக அகற்றுதல் கண்டிப்பா கஷ்டம்தான்..

அல்லாஹ் காப்பாற்றட்டும்.......

Shameed said...

கந்தூரியே நடக்கக் கூடாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு தகவல் : எனக்கு இந்த கந்தூரிக்காக சில்லறை செலவைத் தவிர்த்து மொத்த செலவு மட்டும் 24500 ரூபாய்

sabeer.abushahruk said...

ஹமீது,
தமாமிலேர்ந்து மன்டகப்படியா?
வெவரமாச் சொல்லவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு