Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உணவுக்கான அவசர உதவி கோரி மடல் 4

அதிரைநிருபர் | December 27, 2012 | , , , ,

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


என் அன்புச் சகோதரர்களுக்கோர்  வேண்டுகோள்..

السلام عليكم ورحمة الله وبركاته

தற்போது இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதனால் மக்கள் அடைந்துவரும் சிரமங்களும் செய்தி ஊடகங்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் எமது ஊரான மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்குட்பட்ட கரடிக்குளி மற்றும் அதைச்சூழவுள்ள பகுதிகளான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி போன்ற பகுதிகள் நான்கு பக்கங்களும் வெள்ளத்தினால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் சுமார் ஓரு வார காலமாக மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எற்கனவே 22 வருட அகதி வாழ்வை அனுபவித்த இவர்கள் மிக அண்மையில் தான் ஓலைக்குடிசைகளில் மீண்டும் தம் வாழ்வை தொடங்கினார்கள். இதற்கிடையில் மீண்டுமொரு சோதனை.


இந்நிலையிலிருந்து விடுபட இவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வதோடு. முடியுமாக இருந்தால் இந்த மூன்று ஊர்களிலும் மொத்தம் 800 குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். மின்சாரம் போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் இதுவரை அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களின் மிக அத்தியாவசியமான உணவுக்கு தங்களில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ ஏற்பாடு செய்தால். அதனை மிக அவசரமாக கடல் வழியாக அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராகவுள்ளோம்.




இது மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக செய்யப்பட வேண்டிய உதவியாகும். குறைந்தது மூன்று நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாட்டினை மூன்று கிராமங்களுக்குமோ அல்லது மூன்றில் ஒரு கிராமத்துக்கோ செய்வதற்கு உதவி செய்யுமாறு தங்களை அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம். அண்ணளவாக சராசரி ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அவசியமான பொருட்களும் அதற்கான பெறுமதிகளும்


5 kg அரிசி (1 kg70/) 350

2 kg கோதுமை மாவு (1 kg100/) 200

2 kg சீனி 105(1 kg105/) 210

1 250g பால்மா 200/ 200

1 மீன்டின் 96/ 105

250g பருப்பு 55

200g தேயிலை 70

மொத்தம் 1190 (இலங்கை ரூபாய்)

ஒரு குடும்பக்கிற்கு சராசரி 1190 (இலங்கை ரூ) தங்களின் இயல்புக்கு ஏற்ப குடும்பங்களை பொறுப்பேற்கலாம்

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 2442


தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்

மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217

தௌபீக் ஆசிரியர் 0094713555993

அஸ்மல் டெய்லர் 0094775993812

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka

தகவல்: மௌலவி முஹம்மது நாஸர்

தொலைபேசி 0094774224217
Email: ttmnasar@yahoo.com / ttmnasar@gmail.com
Website / www.onlinenasar.com

நன்றி: AIM


இலங்கை முஸ்லீம்களின் வரலாறு... உண்மை நிலவரம்.. அவசியம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.


4 Responses So Far:

Anonymous said...

பதிவிட்ட சில மணித்துளிகளிலே அலைபேசி வாயிலாக அழைத்து உதவிக்கரம் நீட்ட ஆதரவு அளித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

தேவையுடையவர்களின் நேரடி தொலைபேசி எண்களும் அவர்களின் வங்கி விபரங்களும் பதிந்திருபதனால் நேரடியாகவே தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

வெள்ளம் சூழ்ந்தச் சொந்தங்கள்
...வாட்டம் நிறைந்து வாழ்வதையும்
உள்ளம் பொறுக்க முடியாமல்
...உடனே உதவி செய்திடுவோம்!
கள்ளம் இல்லாக் குழந்தைகளும்
...களிப்பை எய்து வாழ்ந்திடவே
துள்ளும் அன்பைக் காட்டிடவே
...துயரைத் துடைக்க உதவிடுவோம்!

KALAM SHAICK ABDUL KADER said...

தோழமையை உண்டாக்கக் தொழுவோம் கூடி
...தோளொடுத்தோ ளாகத்தான் உரசல் நாடி
ஆழமுடன் சிந்தித்தால் மார்க்கச் சட்டம்
..ஆதரவை ஏற்படுத்த அமைந்த திட்டம்
வாழவந்த இவ்வுலகில் செல்வம் தந்து
...வாடுவோர்க்குச் கொடுக்கத்தான் அல்லாஹ் சொன்ன
வாழ்வியலின் கோட்பாடு என்று காண்போம்
....வாரிவழங் கும்நமக்கு அருளும் கிட்டும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு