Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வளைகுடா விடுப்பு - பயணம் - 1 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 02, 2013 | , ,


துபாயிலிருந்து விமானம் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது அதில் அதிரையைச் சேர்ந்த அஹமது (பயணத்தின் நாயகன்) மிக சந்தோசத்தோடு வரும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட 45 நாள் விடுப்பில் வந்து கொண்டிருந்தார்.

திருச்சி விமான நிலையம். அஹமதுவின் தம்பி மற்றும் மைத்துனர், மாமனார் ஆகியோர் சகிதம் ஆவலோடும் பரபரப்போடும் வெளியில் காத்திருந்தனர்.

அல்லாஹ்வின் உதவிகொண்டு விமானம் திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிரங்கியது அதன் பின்னர் விமான நிலைய சட்டதிட்ட நடைமுறைகள் முடிந்து அஹமதுவும் விமான நிலையத்திலிருந்து வெளிவந்தார். அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த அனைவர்களது முகத்திலும் சந்தோசம் முசாஃபா செய்து கொண்டனர்.


தம்பி, காக்காவிடம் நலம் விசாரித்துவிட்டு "காக்கா சாம்சங் ஸ்கிரீன் டச் ஃபோன் வாங்கி வந்துயிருக்கிங்கதானே?" உரிமையோடும் ஆவளோடும் கேட்டான்.

சிரித்துக்கொண்டே "கொண்டு வந்திருக்கிறேன்டா தம்பி" என்றவர். அனைவரும் காருக்குள் ஏறினர். கார் அதிரையை நோக்கிச் சென்றது. ஊர் விசயங்களை ஒவ்வொன்றாய் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு வந்தார் அஹமது. இடையிடையே கார் ஓட்டுனரும் மற்றவர்கள் சொல்லவிட்டதை எடுத்து கொடுத்தார்.

மாமனாரை பார்த்து "ஆமினா (மனைவி) நல்லா இருக்கின்றதா?" என்று கேட்க... அவரும் "நல்லா இருக்கிறது, என்ன சுகரும் ப்ரசரும்தான் அடிக்கடி தொந்தரவு செய்கிறது." என்று சொல்லிக் கொண்டு வர, இடை யே ஓட்டுநர்(ஜமால்) அஹமதுவைப் பார்த்து "காக்கா தஞ்சாவூர் சென்றாலும் பட்டுக்கோட்டை சென்றாலும் ராத்தா என் காரில்தான் வருவார்கள் என்ன ஆஸ்பத்திரி வேலை மட்டும் தான் என்று சொல்லிவிட்டு எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி லேட் பன்னிட்டு வெயிட்டிங் சார்ஜ் மட்டும் தரவே மாட்டார்கள்" என்று சொல்ல, மாமனார் ஓட்டுனரை முரைத்துவிட்டு ரோட்ட பாத்து ஓட்டுப்பா என்று அதட்டினார்.

அதிரை மண்ணில் கால் பதித்தாகிவிட்டது உம்மாவிடம் சலாம் சொல்லி முசாஃபா செய்து தம்மை பார்க்க வந்தவர்களிடம் உடல் நலம் விசாரித்து அமானித சாமான்கள் கேட்டுவந்தவர்களிடம் மஃக்ரிபுக்கு பிறகு வரச் சொல்லியும் பரபரப்பாய் இருந்து கொண்டிருந்தார் அஹமது.

தன்னந்தனியாய் பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் திரும்பக் கிடைத்த சந்தோசம் குருவிக் கூட்டுக்குள் இரை கொண்டு வந்த தாய்ப் பறவையை கண்ட பரவசம் 3 வருடம் ஒரே அறையில் சந்தோசமாய் படித்து படுத்து குதூகளித்து கல்லூரி படிப்பு முடிந்து பிரிந்த இரண்டு நண்பர்கள் நீண்ட இடைவேளைக்குப்பின் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சி அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை என்று கழிந்தது. 

அன்று இரவு 9 மணி கணவன் மனைவி சந்திப்பில் ஒருவர் ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பேச்சு வரவில்லை நான்கு கண்களும் ஏதேதோ பேசுகிறது. வாயில் புன்னகை வார்த்தைகளில் தடுமாற்றம் 2 வருட பிரிவிற்கு பின்னர் அல்லாஹ் தந்த அற்புத நேரம் ஆனந்தச் சூழல் அல்ஹம்துலில்லாஹ்..
தொடரும்
மு.செ.மு.சஃபீர் அஹமது

19 Responses So Far:

Unknown said...

கதை நாயகன் ஊருல நல்ல பிசினஸ் செட் பண்ணிட்டு உட்காந்துவிடுவது போன்று அமையுமா? ஒரு சின்ன ஆச தான்.... ;)

Ebrahim Ansari said...

விமானம் தரை இறங்கிவிட்டாலும் தொடர் உயரப் பறப்பது போல் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.

திருப்பூர் = திருப்பு ஊர் . தொடருங்கள். இன்ஷா அல்லாஹ்.

Saleem said...

அப்போ வந்தவருக்கு விருந்தெல்லாம் தடபுடலா இருந்திருக்குமே!!

KALAM SHAICK ABDUL KADER said...

சிறுகதை எழுத்தாளராகிவிட்ட தொழிலதிபர்க்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!

sabeer.abushahruk said...

//தன்னந்தனியாய் பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் திரும்பக் கிடைத்த சந்தோசம் குருவிக் கூட்டுக்குள் இரை கொண்டு வந்த தாய்ப் பறவையை கண்ட பரவசம் 3 வருடம் ஒரே அறையில் சந்தோசமாய் படித்து படுத்து குதூகளித்து கல்லூரி படிப்பு முடிந்து பிரிந்த இரண்டு நண்பர்கள் நீண்ட இடைவேளைக்குப்பின் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சி அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை என்று கழிந்தது//

உணர்வுபூர்வமான வர்ணனை.

வாழ்த்துகள் சஃபீர் பாய்.

Ahamed irshad said...

அருமை வார்த்தைகளை கொண்ட கட்டுரை...சூப்பர்.. சபீர் காக்கா மென்ஷன் பண்ண வார்த்தைகள் அருமை...

நீங்க எந்த சஃபீர் என தெரியவில்லை.. எனிவே அருமை.... தொடருங்கள்...

இப்னு அப்துல் ரஜாக் said...


கதை நாயகன் ஊருல நல்ல பிசினஸ் செட் பண்ணிட்டு உட்காந்துவிடுவது போன்று அமையுமா? ஒரு சின்ன ஆச தான்.... ;)

இப்பிடி அமைத்தால் சொந்த நாட்டில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்க்கு தூண்டு கோளாய் அமையும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கதைகளில் இது கலங்கரை விளக்கம்!

விமானம் தரை இறங்கிவிட்டாலும் தொடர்ந்து உயரப் பறப்பது போல் அசத்தலாக உள்ளது.

இடையே பேச்சுலெ மூக்கெ நுழைக்கிற ஜமால் மாதிரி டிரைவர் ரொம்ப ஆபத்தானவர்.

புள்ளெ (இருக்கா?) அஹமதை பார்த்து இவ்வளவு நாளா போனில் பேசின வாப்பா நீந்தானா என்று கேட்டுச்சா?

இன்னும் 45 நாள் ஓடிய வேகமும் விமானம் போல பறந்து ஓடி இருக்குமே!
----------------------------------------------------------------------------------------------
இன்று, ஸபர் பிறை 20, ஹிஜ்ரி ஆண்டு 1434

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

கருத்துக்களை பதிந்திட்ட நள்ளோர்க்கும் வள்ளோர்க்கும் வறவேர்ப்புக்கள் கதையின் ஆசிரியர்தான் திருப்பூரிலேயே செட்டிலாகிவிட்டார் கதியின் நாயகனோ என்ன ஆகிறார் என்பதுதானே கதையின் திரிலிங்கே இப்பவே முடிவச்சொல்லஏலாது பொருத்திருங்கள்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

கருத்துக்களை பதிந்திட்ட நள்ளோர்க்கும் வள்ளோர்க்கும் வறவேர்ப்புக்கள் கதையின் ஆசிரியர்தான் திருப்பூரிலேயே செட்டிலாகிவிட்டார் கதியின் நாயகனோ என்ன ஆகிறார் என்பதுதானே கதையின் திரிலிங்கே இப்பவே முடிவச்சொல்லஏலாது பொருத்திருங்கள்

Yasir said...

விமானம் தரை இறங்கிவிட்டாலும் கதையின் எதிர்ப்பார்ப்பு வேகம் கூடி இருக்கே...அதுவும் பேச்சிலர்கள் அதிகம் புழங்கும் இந்த தளத்தில் இராத்திரி சந்திப்போடு முடித்து இருக்கீங்க...உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே களை கட்டுதே .......நல்லாயிருக்கு தொடருங்கள் சகோ.சபீர் அவர்களே

Anonymous said...

அன்புச் சகோதரர்களுக்கு,

கட்டுரையாளர் இது கதையல்ல அதிரைச் சகோதரரின் பயண அனுபவச் சம்பவம் என்ற உறுதிமொழிந்த பின்னரே பதிவுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.

அதிரைநிருபர் வலைத்தளம் கதை என்ற பெயரில் ஏதும் பதிவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.

Yasir said...

//அதிரைநிருபர் வலைத்தளம் கதை என்ற பெயரில் ஏதும் பதிவதில்லை // அன்பின் அ.நி...கதைகளில் இரண்டுவகை உண்டு கற்பனைக்கதை,நடந்ததை சொல்லும் கதை அல்லது சம்பவம்....இங்கு நாங்கள் பயன்படுத்தியிருக்கும் “கதை” என்ற வார்த்தை நடந்ததை குறிக்கின்றது...

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

முயல் ஆமை கதையை நடந்த சம்பவம் என்பதா? கதை என்பதா? கட்டுக்கதைகளை ஆதரிக்காதீர்
யாசிர் சொல்வது போல் கதைகளில் 2 வகையுண்டு

dheen said...

ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!
ததஜவினரே வசை பாடாமல் பதில் சொல்லுங்கள்!





அன்பார்ந்த சகோதரர்களே! உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது அநியாயம்தான் இதற்கு அனைத்து முஸ்லிம்களும் அணி திரள வேண்டும் என்பது நியாயம் தான்! ஆனாலும் நாம் கேட்பது இதுதான் !

இதே போல் மற்ற இயக்கத்தினர் பாதிக்கப்பட்டபோது நீங்கள் வர மறுப்பதேன்?
மற்ற முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் இது போன்று போராடுவீர்களா?
இதைக் கேட்டால் நாங்கள் உங்களை அழைக்கவில்லை! நாங்கள் மக்களை அழைக்கிறோம் என்கிறீர்களே மக்களிலே இயக்க வாதிகள் அடங்க்குவார்களா இல்லையா?
இயக்கங்கள் வேண்டாம் அதில் உள்ள மக்கள் வேண்டும் என்றால் ஆடு பகை குட்டி உறவா?
அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கின்றீர்கள் ! முஸ்லிம்கள் என்றால் யார் ? அதன் வரைவிலக்கணம் என்ன? அதற்குள் மற்ற அமைப்பினர் அடங்குவார்களா இல்லையா?
மண்ணடி கூட்டத்தில் பேசிய பி.ஜே 'எதிரி அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தனர் ஏன் எனில் இது சமுதாயப் பிரச்னை' என்றாரே? சமுதாயப் பிரச்சனையில் மற்ற அமைப்புகளோடு சேர்ந்து போராடுவதில் என்ன இடர்ப்பாடு?
மற்ற அமைபினரோடு சேர்ந்து போராடுவது கொள்கையற்ற கூட்டு என்கிறீர்களே ? குரான் ஹதிஸ் அல்லாத மற்ற மக்களை அழைப்பது கொள்கையற்ற கூட்டு இல்லையா ?
சமுதாயத்திற்கு நன்மை பயக்குமானால் கொள்கையற்ற , கொள்ளையடிக்கும் அரசியல் கட்சிகளோடு கூட்டணி சேரும் போது சமுதாய நன்மைக்காக முஸ்லிம் அமைப்பினருடன் இணைவதில் என்ன தவறு?
தடியடிக்கு சிறை நிரப்பும் போராட்டம் என்றால் பல்லாண்டு சிறையில் வாடும் மக்களுக்கு போராடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
மரணத்தோடு போராடும் அபுதாகிருக்காக ஒரு அறிக்கை விடுவதில் என்ன சிரமம் ?
உங்கள் மீது தடியடி நடத்தியது சமுதாயப் பிரச்னை என்றால் சமுதாயத்திற்காக சிறை சென்று பல்லாண்டுகளாக தங்களின் குடும்பத்தை, இளமையை, சுகத்தை ,சொந்தத்தை ,ஏன் உயிரையும் இழந்து கொண்டிருக்கிறார்களே ! அது இந்த சமுதாயத்தின் பிரச்னை இல்லையா?
இந்தக் கேள்விகள் சமுதாயம் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள் பதில் சொல்வதை விட்டு விட்டு மீண்டும் வசை பாடினால், கேள்வியை விட்டு விட்டு கேள்வி கேட்டவன் மேல் பாய்ந்தால், உங்களின் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுக்கு கூட ஐயம் எழுந்து விடும்.ஆகையால் நேர்மையுடன் பதில் சொல்லுங்கள்! கண்ணியத்துடன் பதில் சொல்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.கோபப்பட்டால் உங்களிடம் பதில் இல்லை என அர்த்தம்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

லீவுல ஊருக்கு வந்து ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா தீன் என்ன இம்மாம் பெரிய கேள்விய கேட்டுப்புட்டிய?

KALAM SHAICK ABDUL KADER said...

\\லீவுல ஊருக்கு வந்து ஜாலியா\\

திரும்பவும் ஊரா?
திருப்பூரில் இல்லையா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

45 நாட்கள் லீவில் வந்த அகமதுவிடம் தீன் என்பவர் தீன் சம்பந்தமாகவும், முஸ்லிம்களுக்கே வரைவிலக்கணம் கேட்பதாலும் மனம் உடைந்து போய் லீவை கேன்சல் பண்ணி உடனே துபாய் திரும்பும் முடிவில் இருக்கார். பாவம்

எங்கெ? எப்பொ? கேள்வி கேட்கனும் என்ற சுபாவம் நம்மவர்களிடம் இல்லையே என மனம் நொந்து போய் இருக்கார்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அபுல்கலாம் காக்கா அவர்களுக்கு அஹமது(எனது கதானாயகன்) என்பவர் பதில் சொல்வது போல் சொல்லியிருக்கிறேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு