Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெளிவருகிறது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்... 4

அதிரைநிருபர் | January 16, 2013 | , , , ,



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். 

ஒவ்வொரு முயற்சிக்கும் விதை எங்கிருந்தாவது தூவப்பட வேண்டும். எங்களுக்கான விதை என்றால் அது உம்மத் குழுமம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, இணையத்தில் நிலவும் தவறான இஸ்லாமிய புரிதல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. அப்படியான தருணத்தில் சில பதிவர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழுமம். 

இஸ்லாம் என்னும் அற்புத வழிமுறை இருந்ததால் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதில் சிரமம் இருக்கவில்லை. சில பதிவர்களுடன் துவங்கிய இந்த முயற்சி இன்று பல பதிவர்களுடன் ஆரோக்கியமான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நபிமொழி தொகுப்பான சஹிஹ் முஸ்லிமை மின்னூல் வடிவில் கொண்டுவந்தததில் தொடங்கி ஒரு கட்டுக்கோப்பான பதிவர் வட்டத்தை எட்டியது வரை இந்த குழுமம் நடத்திக்காட்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் பல. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. 

அப்படியான முயற்சிகளில் ஒன்றை தான் நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றீர்கள்.  முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று. இன்று அது சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம். இம்மாதிரியான எதிர்கால முயற்சிகளுக்கு நிச்சயம் இந்நூல் முன்னோடியாக இருக்கும் என்று கூறிக்கொள்ளும் இத்தருணத்தில் சிலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியத்தில் சகோதரர்கள் சிராஜ், நிஜாம் மற்றும் சகோதரி ஆமினா முஹம்மத் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. அடுத்ததாக, உம்மத் குழும சகோதர சகோதரிகள். இவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த பணியை முன்னெடுத்து சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. கட்டுரைகளை தொகுக்க குழு அமைத்ததில் தொடங்கி, நேர்த்தியான திட்டமிடல் வரை இவர்களின் உழைப்பு அலாதியானது. இவர்கள் அனைவரின் கல்வி ஞானத்தையும் இறைவன் அதிகரித்து தருவானாக என்று பிரார்த்தித்தவனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.       

ஒரு தரமான படைப்பாக இந்நூல் உங்கள் உள்ளத்தினை ஆக்கிரமிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.   



சகோதரத்துவத்துடன், 
ஆஷிக் அஹமத் அ, 
உம்மத் பதிவர் குழுமம்.

----------------

இன்னும் சில தினங்களில் (இன்ஷா அல்லாஹ்) வெளிவர இருக்கும் முஸ்லிம் பதிவர்களின் நூலுக்காக எழுதப்பட்ட இந்த முன்னுரையே உங்களுக்கு பல தகவல்களை தந்திருக்கும். 


பதிவுலகம் என்பது சவால்கள் நிறைந்த பகுதி. இங்கு நிலைப்பதற்கும் சரி, சிறப்பாக செயல்படுபதற்கும் சரி கடுமையான பொறுமையும், சிறப்பான செயல்பாடுகளும் அவசியம். அதிலும் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை களையவதென்பதே நோக்கம் என்றால் அதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அந்த வகையில் இன்றைய முஸ்லிம் பதிவர்களின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தியையே தருகின்றன. 

இஸ்லாம் குறித்த பல தவறான புரிதல்கள் இன்று ஆக்கப்பூர்வமாக எதிர்க்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு, தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்து, முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று வலுப்பெற்று வருகின்றது. இதுவொரு மிக ஆரோக்கியமான முன்னேற்றம். 

ஆனால் இது போதுமா என்றால், இல்லை. ஆம், தமிழ் பேசும் ஒவ்வொரு வீட்டிற்கும் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு "எதிர்க்குரல்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். 

நூலில் இருந்து சில கிளிப்ஸ் 

கடந்த சில மாதங்களாக, இந்த தளத்திற்கு, குர்ஆன் கேட்டு வரும் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளின் கோரிக்கைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்தகைய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த நூல் இருக்கும். 

இணையத்தில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்து பலருக்கும் சேர்க்க வேண்டும் என்ற எங்களின் தொலை நோக்கு பார்வை இன்று சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
எதிர்வரும் சென்னை புத்தக கண்காட்சியின் போது வெளிவரும் இந்த நூல் குறித்த மேலதிக தகவல்கள் இந்த பதிவில் அப்டேட் செய்யப்படும். ஏனைய முஸ்லிம் பதிவர்களின் தளங்களிலும் தகவல்கள் வெளிவரும். இந்த தளம் மூலம் நேரடியாக நூலை பெறவிரும்புவோர், எத்தனை புத்தகம் தேவை உள்ளிட்ட தகவல்களை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கின்றேன்.  

எங்கள் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள் இந்த பணிக்கும் உங்களின் மேலான ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள் - குர்ஆன் 05:02

இறைவன் என்றென்றும் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

நன்றி: http://www.ethirkkural.com/2013/01/blog-post_10.html 

பரிந்துரை: அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உம்மத் குழுமத்தின் பேரெண்ணம் வெற்றி பெற துஆவும், வாழ்த்துக்களும்!

dheen said...



பட்டுக்கோட்டை ஜனவரி 16: நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.


இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.


இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSPI -யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தயவு செய்து இந்த தடவை "இது பஞ்சாயத்துபோர்டு இங்கே பல்லெல்லாம் பிடுங்குவது இல்லை" என்று யாரும் சொல்லி விடாதீர்கள் பாவம்.

இப்னு அப்துல் ரஜாக் said...


உம்மத் குழுமத்தின் பேரெண்ணம் வெற்றி பெற துஆவும், வாழ்த்துக்களும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு