Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 4 27

அதிரைநிருபர் பதிப்பகம் | January 19, 2013 | , ,


தொடர் : நான்கு
மதங்களும் பொருளாதார இயலும் ( தொடர்ச்சி).

தொடர்ந்து நாம் படித்த, நம் பார்வையில் படுகிற மதங்கள் பொருளாதாரம் பற்றி என்ன வெல்லாம் சொல்கின்றன என்பதைப் பற்றியும் மதங்களைத் தொடர்ந்து  சில உலக அறிஞர்கள் ,தலைவர்கள்,  நாட்டபிமானிகள் வகுத்த கொள்கைகள் யாவை அவற்றின் சாதக பாதகங்கள் யாவை என்பனவற்றை   சுருக்கமாக அறியலாம். இவற்றிலிருந்து இஸ்லாமியக்  கொள்கைகள் எவ்வாறு வேறுபடுகின்றன- வெற்றி பெறுகின்றன என்பதை தொடர்ந்து காணலாம்.

முதலாவதாக,

புத்த மதம் :-

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று போதித்தது புத்த மதம். ஆகவே பொருளாதாரக் கோட்பாடுகளுடன் ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு இந்த மதத்தில் ஒன்றும் இல்லை. காரணம் பொருளாதார செயல்பாடுகளின் அடிப்படையே மனிதனின் ஆசை/ விருப்பம்/ தேவை ஆகியவைதான். ஆடையின்றிப் பிறந்தோமே! ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கேள்வியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தாளம் போட்டு ரசித்து இருக்கிறோம். அப்படிப்பட்ட ஆசைகளைத் துறந்துவிடு  என்று போதித்தது  புத்த மதம்.

உலக வாழ்வு  என்பதே துன்பமானது. ஏழ்மை, நோய், முதுமை , இறப்பு இவை நிறைந்த துன்பங்களையே மனிதப் பிறவிக்குத் தருகின்றன. சிற்றின்ப ஆசைகள் துன்பத்தையே வரவழைக்கின்றன. - ஆசை ஒழிந்தால்தான் துன்பம் ஒழியும் . இந்தத்  துன்பத்தை ஒழிக்க அட்டசீலம் எனப்படும் எட்டுவகை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அந்த எட்டுவகை முறைகள் என்பவைகளுள் இல்வாழ்வைத் துறப்பது, அகிம்சை, பிச்சை எடுத்து உண்டு மட்டுமே வாழ்வது, எப்போதும் தியானம் செய்வது ஆகியவை அடங்கும். இல்லறவாழ்வில் ஈடுபடாதோர், பிச்சை எடுத்தே வாழவேண்டுமென்ற கொள்கை உடையோர், எப்போதும் தியானம் செய்துகொண்டே இருக்கவேண்டுமென்ற நிலை கொண்டிருந்த ஒரு மதத்தில் பொருளாதார நடவடிக்கை  மற்றும் கொள்கைகளைக் காண வாய்ப்பு இல்லை. மனித வாழ்வை புத்த மதம் ஒரு எதிர் மறையான நோக்கிலேயே பார்த்தது. துன்பம் பற்றியே பேசியது. இன்பம் பற்றி ஏறெடுத்தும் பார்க்கவில்லை .

தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொள்ளக் கூடாது  வனாந்தரங்களில் மர நிழல்களிலேயே உறையவேண்டும். நோயுற்றால் மருந்துகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. சிறுநீர் கழிவதே போதுமான நிவாரணம் ஆகும். உடலைத் தூய்மையாக   வைத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குளித்துக்கொள்ளலாம். பணத்தை கைவசம் வைத்துக் கொள்ளவே கூடாது.  வியாபாரம்.வணிகம்,கொடுக்கல்-வாங்கல்,தொழில் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும்  பொன்னையோ வெள்ளியையோ பயன்படுத்தக் கூடாது. ஆகிய கொள்கைகள் உடைய புத்தமதத்துடன்    நாம்  பொருளாதாரமும் பேச முடியாது ; பொரிச்ச முறுக்கைப் பற்றியும் பேச முடியாது.  (Ref : Sant Hilaire - Buddha and His Religion.P.150,151.)  

இருந்தாலும், ஒரு கருத்தை இங்கு பதிவு செய்தாக வேண்டும். புத்த மதத்தைத்  தங்களின் தேசிய மதமாக அறிவித்து ஆட்சி செய்து  கொண்டிருக்கும் இலங்கை ,  தாய்லாந்து, வியட்நாம், மியான்மர்   போன்ற நாடுகள் ஆசைகளைத் துறந்ததாகவோ அல்லது  தங்களின் நாட்டு மக்களை அஹிம்சை வழியில் வாழும்படி போதிப்பதாகவோ வரலாறு மெய்ப்பிக்கவில்லை. அத்துடன் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகளே கொத்துக் கொத்தாக கொலை செய்யத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருககிறார்கள்.  புத்தர் போதித்த அஹிம்சை வழிகளையே துறந்துவிட்டு ஆட்சி நடத்தி மனித இனப் படுகொலைகளை செய்து வரும் நாடுகளாகவும், மிருகங்களை வேட்டையாடி அவற்றின் உறுப்புகளை விற்பதை வியாபாரம் செய்யும் நாடுகளாகவுமே  அவை இருக்கின்றன. புத்தர் போதித்த அஹிம்சையை ஆழக்குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டன இத்தகைய நாடுகள்.

ஜைன மதம்:-

சமண மதம் என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் வர்த்தமான மகாவீரரால் தோற்றுவிக்கப் பட்ட ஜைன மதம் ஒரு நாத்திக மதம் என்றே கூறப்படுகிறது. உலகம் படைக்கப் படவும் இல்லை; அழிக்கப்படப் போவதும் இல்லை என்று கூறும் இந்த மதத்திலும் துறவறமே முன்னிலைப் படுத்தப் படுகிறது. திகம்பர சாமியார்கள் என்கிற ஜைன மதத் துறவிகள் உடுத்தும் ஒரு முழ ஆடையைக் கூட துறந்துவிட வேண்டுமென்று போதித்தனர்; பின் பற்றினர். குடும்பத்தில் ஒரு பெண்ணை கட்டாயம் சந்நியாசம் வாங்க

வைத்து விட வேண்டுமென்பது இந்த மதத்தின் சட்டம். அதையும் விட ஒரு படி மேலாக சாந்தாரா என்கிற மத முறைப்படி சுயமாக தற்கொலை செய்து இந்தப் பிறவியை விட்டொழிக்கவேண்டுமென்பதும் அதிர்ச்சியடைய வைக்கும் தகவல். காலில் செருப்புக்கூட அணியக் கூடாது என்பதும் உடைமை என்று வைத்திருக்க ஒரு கோவணம் கூட இருக்ககூடாது என்பதும் மதத்தின் முக்கிய  விதிகள். ( www. nilacharal.com ) .

கர்நாடக மாநிலம் சரவணபெலகொலா என்கிற இடத்தில் அமைக்கப் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிலை ( நிர்வாணமாக) மகாவீரர் உடையதே. இதைக்காண பல சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். சென்னையில் வாழ்பவர்கள், தங்கசாலைப் பகுதியில்  வருடா வருடம் காவல்துறையின் பாதுகாப்புடன் நடத்தும் நிர்வாண ஊர்வலத்தைக் கண்டு கண் பொத்தி இருக்கலாம்.    

அகிம்சை, வாய்மை, திருடாமை, சிற்றின்பத்தை நாடாமை, பற்றறுத்தல் ஆகிய ஐந்து முக்கிய நோக்கங்களைக் கொண்ட மதம்.  ஆனாலும் தொழில்கள் செய்ய வேண்டும்; தொழிலுக்காக உழைக்க வேண்டும் என்கிற போதனைகளையும் சொன்ன மதம்.

ஆன்மிகம், முக்தி, நிர்வாணம் ஆகியவை பற்றியே அதிகம் சொல்லியதால் பொருளாதார கோட்பாடுகள் என்கிற ஆய்வில் மத ரீதியாக   பெரும் தாக்கங்களையோ மாற்றங்களையோ இந்த மதமும்  ஏற்படுத்திவிடவில்லை. ஆனாலும் இந்த மதத்தைப் பின்பற்றுகிற குறிப்பாக வட இந்தியர் அதிலும் சிறப்பாக இராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் பகுதிகளைச் சேர்ந்த  ஜெயின் இன மக்கள் நாடு முழுதும் வட்டிக்கடை வைத்தும், தங்க, வெள்ளி,  வைர வியாபாரங்களிலும் பெருமளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் மார்வாடிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். காரணம் அவர்கள் வாழ்ந்த பகுதி ஒரு காலத்தில்  மார்வார் அரசாக இருந்தது  என்பதனால் இந்தப் பெயர். கொடுமையான வட்டி வாங்குவதில் யூதர்களுக்கு நிகரானவர்கள். விவசாயக் கிராமங்களில் இவர்களின்  கடைகளில் ஏழைகள் வீட்டு பித்தளை செம்புக்குடங்கள் கூட  தலைகுப்புறக் கவிழ்த்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வறுமையின் வடிவத்தைக் காணலாம்.    இவர்களின் இந்தச் செயல் இவர்களுக்கு போதிக்கப்பட்ட மதக்  கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிரானதே. அண்மைக் காலங்களில் இவர்கள் அடிதடி வேலைகளிலும் ஆள் கடத்தல் விவகாரங்களிலும் ஈடுபட்டதாக வரும் செய்திகள் மகாவீரரின் போதனைகளை மரணிக்கச் செய்கின்றன.

கிருத்தவ மதம்:-

உலகில் அதிக மக்களால் பின்பற்றப் படும் கிருத்துவ மதத்தின் பொருளாதாரக் கோட்பாடுகள் இன்னவைதான் என்று துரதிஷ்டவசமாக அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாத நிலைதான் இருக்கிறது. கிருத்துவ மதத்தின் வேதம் என்று வழங்கப்படுகிற  பைபிள் பல சந்தேகங்களுக்கும் விவாதங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. இன்ஜீல் என்கிற கிரேக்க வார்த்தைக்கு GOSPEL – நற்செய்தி என்று பொருள். இறைவன் ஈசா நபிக்கு அருளியது என்று வழங்கப்பட்டாலும் இவற்றில்  காலை வாரிவிடும்  கருத்துப் பிளவுகள் காணப்படுகின்றன.  கத்தோலிக்கர்கள் காட்டும் பைபிளில் 46 ஆகமங்கள் உள்ளன. புரோட்டஸ்டண்டுகள் காட்டும் பைபிளில் 39 ஆகமங்களே உள்ளன. ஏழு ஆகமங்களின் வித்தியாசத்தில் 4370 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன. பைபிளில் உள்ள வசனங்கள் நீக்கப்பட்டன என்றும் நீக்கப்படவில்லை என்றும் கற்பனையாக சேர்க்கப்பட்டவை அதிகம் உள்ளன என்றும் அவர்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டுக்   கொள்ளப்படுவதால் நாம் அவற்றுள் எந்தக் கோட்பாட்டை வைத்து பொருளாதாரம் பற்றிய கிருத்துவ மதத்தின் கோட்பாடுகள் இன்னவை என்று முடிவுக்கு வரமுடியும்?

கிருத்துவ மதத்தின் ஸ்தாபகர் என்று கூறப்படும் இயேசு நாதர் பற்றி தனது * A Ranking of the Most Influential Persons in the History. என்கிற நூலில் Micheal H. Heart  என்கிற கிருத்தவரே இப்படிக்கூறுகிறார்.  ( பக்கம் 49 ).    

In the first place, most of the information that we have about Jesu’s life is uncertain. We are not even sure what his original name was. The year of his birth, too, is uncertain, although 6 B.C. is a likely date. Even the year of his death, which must have been well known to his followers, is not definitely known to-day. 

இயேசுவின் வாழ்க்கை குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவை ஐயத்துக்கு இடமானவை.

அவருடைய உண்மையான பெயர் கூட இன்னதென்று நிச்சயமாகத் தெரியவில்லை.

அவர் பிறந்த ஆண்டு கூட உறுதியான ஆண்டல்ல.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அவர் பிறந்து இருக்கலாம் என்று உறுதியற்றுத்தான்  கூறுகிறார்கள்.

அவர் இறந்த ஆண்டு அவருடன் இருந்த சீடர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அது நிச்சயப் படுத்தப் பட்டு அறியப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் இறைவன் வழங்கிய வேதம் என்று கூறப்படும் ஒரு புனித நூலில்  ஒரு சிலர் மாற்றங்களைத் தாங்கள் விருப்பப்படி செய்ய இயலும் என்றால் அந்த வேதம் எவ்வளவு பலகீனமானதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்து இருக்கும்?  எனவே, அவர்களுக்கிடையிலேயே விவாதங்கள் நடைபெற்று வருகின்ற ஒரு வேதத்தின் அடிப்படையை மட்டும் நம்பி நாம் இந்த ஆய்வில் கருத்துரைக்க  இயலாமல் இருக்கிறோம்.  

ஆயினும், கிருத்தவ மதத்தை தங்களது தேசிய மதமாக அறிவித்த நாடுகள் நடந்து கொண்ட முறைகளை வைத்தும் அத்தகைய நாடுகளுக்கு கிருத்துவத் திருச்சபைகள் கொடுத்த அங்கீகாரம் மற்றும் உதவிகளை வரலாற்றுச் சான்றுகளோடு வைத்து  அவர்களின் சில பொருளாதார நடைமுறைகளை நாம் கணிக்க இயலும்.

அன்பும் அருளும் சமத்துவமும் கருணையும் உள்ள மதங்களில் கிருத்துவ மதமும் ஒன்று என்று பொதுவாகப் பேசப்படுகிறது. ஆனால் வரலாறு காட்டும் உண்மைகள் வேறுவிதமாக இருக்கின்றன. செல்வம் தேடும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கிருத்துவ மதத்தை தேசிய மதமாகக் கொண்ட இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல்,பிரான்சு, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி,  ஆகிய நாடுகள்  தங்களின் நாடு பிடிக்கும் ஆசை, பிடித்த நாடுகளின் மூலவளங்களை சுரண்டல், அடிமை முறை, மத மாற்றம், அடக்குமுறை, நிறவெறி ஆகிய உபாயங்களைக் கையாண்டு அன்பையும் கருணையையும் துறந்து   உலகின் பல பகுதிகளை கபளீகரம் செய்தன. வரலாற்றின் முந்திய காலகட்டங்களில் மிகவும் உயர்வாகப் பேசப்பாட்ட ரோமர்களின் சமுதாயத்திலிருந்து மனித உறவுகள் மாட்சிமை பெரிதாக அமையவில்லை.  கடற்கொள்ளையில் ஆரம்பித்த இந்த நாடுகளின் பொருளாதாரத் தேடல் ஆக்ரமிப்பும்   அடிமை வணிகமும் அடுத்தவர் நாட்டில் புகுந்து அட்டூழியம் செய்ததும்   வரலாற்றில்  வலிகள் அல்ல வடுக்கள். இவர்களின் இந்த நோக்கத்துக்காக பல பல நாடுகளை இவர்கள் கடித்து சாப்பிடத் தொடங்கினார்கள்; அநீதியான உத்திகளைக் கையாண்டார்கள்.  

முதலாவதாக இந்த கிருத்தவ நாடுகளின் அத்துமீறிய நுழைவை எதிர்த்த நிலபிரபுக்களை அழித்து ஒழித்துவிட்டு தமக்கு சாதகமாக நடக்கும் நம்பிக்கையான ஒரு புதிய மேட்டுக்குடியினரை உயர் பதவிகளைக் கொடுத்து  உருவாக்கினர். உதாரணமாக இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சமஸ்தானங்களை பிளாட் போட்டு வாங்கியபோது அவற்றில் திவான்களாக உயர்சாதி என புகுத்தப்பட்ட பிராமணர்களை நியமித்தார்கள்.

இரண்டாவதாக பிரித்தாளும் தந்திரத்தைக் கடைப்பிடித்து ஒரே  நாட்டுமக்களை தங்களுக்கெதிராக ஒன்று திரளாமல் தடுத்தனர். உதாரணமாக இந்தியாவில் சாதிப் பிரிவினைகளை சலுகைகள் கொடுத்து அல்லது அழித்து சட்டபூர்வமாக்கினார்கள். உள்சாதிப் பிரிவினைகள் என்கிற தீயை மூட்டிவிட்ட பாவத்தின் பெரும்பகுதி ஆங்கிலேய ஆட்சியாளரைச் சேரும். இதனால்தான் பாரதியார்,

“ஆயிரம் உண்டிங்கு சாதி – இதில்
அந்நியன் வந்து புகல் என்ன நீதி – ஒரு
தாயின் வயிற்றில் பிறந்தோம் –நாம்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?”  என்று பாடினார்.  

மூன்றாவதாக அந்தந்த நாடுகளில் நிலவிய ஏகபோக அதிகார வர்க்க முதலாளித்துவத்தோடு தங்களது காலனி ஆதிக்க விருப்பத்தை  இணைத்து செயல்பட்டனர். இதன் காரணமாக பல நாடுகளின் இயல்பான வளர்ச்சி தடைப் பட்டது. உதாரணமாக இந்தியாவில் அன்றே பெரும் பணக்காரர்களாக இருந்த டாடா பிர்லா போன்றோடு இணைந்து,  உழைக்கும் வர்க்கத்தை  ஒடப்பராகவும் ஏழையப்பராகவுமே வைத்தனர். சமூக முன்னேற்றம் என்பது சாக்கடையில் தள்ளப்பட்டது. “ஆண்டைகள்”  சிலரால் பொது மக்கள்  ஆண்டிகளாயினர். சுரண்டலில் சாதனை புரிந்தனர்.  

நான்காவதாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது மக்கள் நேசித்த தலைவர்களைக் கொன்றோ , சிறையிலடைத்தோ, இராணுவப் புரட்சி அல்லது பொதுக் கலவரத்தைத் தூண்டியோ, தோற்றுவித்தோ தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமரவைத்தோ அந்த நாடுகளின் மேல்  தங்களின் உடும்புப்  பிடியை உறுதி செய்து கொண்டனர்.  இராக்கில் சதாம் ஹுசேன் தூக்கிலப்பட்டதும், லிபியாவில் , எகிப்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அத்துமீறலும் அண்மையில் நாம் கண்ட / காணும் காட்சிகளாகும்.  இதே போல பல  காட்சிகளை வரலாறு இவர்கள் மூலம் பலமுறை பதிவு செய்திருக்கிறது.

ஐந்தாவதாக, ஒரு நாட்டிற்கு அல்லது அந்த நாட்டின் ஒரு பகுதியை ஆளும் மாநில அரசுக்கு அவர்களால் திருப்பித் தராத அளவுக்கு கொடுமையான வட்டி வீதத்தில் கடனைக் கொடுத்து அந்த நாடுகளை கடனாளியாக்கி திவாலாகச்செய்து  அந்தக் கடனுக்கு பதிலாக அந்நாட்டின் மூலவளங்களை மற்றும் சிறப்புச் சலுகைகளையும் உரிமைகளையும் பெறத்தொடங்கி கடைசியில் அவற்றை அடிமை      நாடுகளாக்கினர்.  

ஆறாவதாக பீரங்கி, துப்பாக்கி போன்ற அன்றைய நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பயமுறுத்தி அடக்கி ஆள்வது, சுதந்திரம் கேட்டோரை தூக்கிலிடுவது, கண் காணாத இடத்தில் சிறைவைப்பது ஆகிய பலப்  பிரயோகம் செய்வது. அந்தமான் தீவில் சிறைக்குள் உரிமைக் குரல் எழுப்பியோரின் வாயில் மனித  மலத்தைக் கரைத்து புனல் வைத்து ஊற்றிய ஒரு கொடுமையே இவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு உரைகல்லாக இருக்கப் போதும்.  

மதங்களும் பொருளாதாரமும் பற்றிப் பேசும்போது இங்கு பல அரசியல் காரணங்களை அடுக்கக் காரணம் மேலே  குறிப்பிடப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் எல்லா அட்டூழியங்களின் பின்னணியிலும் கிருத்துவ திருச்சபைகளும், போப ஆண்டவரும் கூடவே இருந்து ஆசி வழங்கினர் என்பதால்தான். கிருத்தவ தேசங்களின்  அரசியல் எல்லை விஸ்தரிக்கப் படும்போது மதத்தின் எல்லையும் விரிவடையும் என்கிற நப்பாசை மதபோதனைகளுக்கெதிராக நடந்த வன்கொடுமைகளைப் பார்த்து வாய் மூடவைத்தது.   இதனை முன்னிட்டே பிலிப்பைன்ஸ் முதலிய ஆசிய நாடுகளில் கிருத்துவம் மத மாற்றத்தின் மூலம் பரவியது.  பைபிளின் வாசகங்கள் திருச்சபைகளில் வாசிக்க  மட்டுமே பயன்பட்டது; நடைமுறையில் அந்த வாசகங்களுக்கு முழுதும் எதிரான கொள்கைகளே பின்பற்றப்பட்டன.   

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று அவர்களின் இயேசு நாதர் போதித்ததை பொட்டலம் கட்டிப் புறக்கடையில் போட்டுவிட்டு ஒரு நாட்டை அடிமையாக்கினால் மறு நாட்டையும் அடிமையாக்கு என்று புதிய பொருள் படைக்க படையெடுத்துப் புறப்பட்டனர் பரங்கியர்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்று படித்தார்கள் ஆனால் தட்டாமல் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள். கேளுங்கள் கொடுக்கப்படுமென்று படித்தார்கள் ஆனால் கேட்காமலே கொள்ளையடித்தார்கள். தேடுங்கள் கிடைக்குமென்று படித்தார்கள் ஆனால் நடைமுறையில் திருடுங்கள் கிடைக்குமென்று ஆக்கிக் கொண்டார்கள்.    

ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் வரலாறு வரம்பற்ற அடிமை முறையிலிருந்துதான் தொடங்குகிறது. எல்லா இனங்களும், எல்லா கலாச்சாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் முறையிலிருந்து கொடுமையான அடிமை முறை வரை அடிமை முறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், கிருத்தவ ஐரோப்பியர்களே, அடிமைமுறையை ஒரு உற்பத்தி முறையாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாகவும் ஆக்கியவர்கள். வேறு எந்த அடிமை முறை கொண்ட பேரரசும், இந்த அளவிற்கு எண்ணிக்கையிலும், கொடுமைத்தனத்திலும், ஐரோப்பியர்களின்  அருகில்  கூட வர முடியாது. பல நூற்றாண்டுகள் எந்தவிதமான விடுதலையும் இல்லாமல் இது தொடர்ந்தது. சுமார் 60 மில்லியன் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைமுறை காரணமாகக் கொல்லப்பட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் சித்திரவதையாலும், நோயாலும், துயரத்தாலும் இறந்தவர்களைக் கணக்கிடவே வழியில்லை.ஆப்ரிக்க நாடுகளின் வரலாறு படிப்போர் கண்ணீர் வடிக்காமல்  இருக்க இயலாது.

அடிமை முறையின் முக்கியமான காரணம், பொருளாதாரப் பேராசையும், மற்றவர்களை மேலாதிக்கம் செய்யும் நிறவெறியுமே. இவை நேரடியான  மத ரீதியான காரணங்களல்ல, ஆயினும், கிருத்துவ  திருச்சபைகள்  இதில் முக்கிய  பங்கு வகித்து, அடிமை முறையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அடிமைமுறையை மேலாதிக்கம் செய்தும், அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட பேரரசுகளை ஆதரித்தும் , அடிமை முறையைக் கொண்டொழுகிய பேரரசுகள் 1400 வருடங்கள் நீடிக்கவும்  பசுத்தோல் போர்த்திய திருச்சபைகள்தான்  தான் உதவிகள்  செய்தன.  அரசர்களுக்கும், அரசிகளுக்கும், அடிமை முறையை உபயோகித்துக்கொள்ள ஒவ்வொரு தடவையும்  அனுமதி அளித்து அடிமை முறைகளை  பாதிரியார்களே  நிர்ணயித்தனர். அல்லல்பட்ட அடிமைமுறையில் இந்த மதத்தலைவர்களின்  பங்கு, மனசாட்சியின் குற்ற உணர்வினை அமைதிப்படுத்தவும், ஒழுக்கரீதியிலும், மத புத்தகங்களை வெறும் பெயருக்காகப் படித்துக்காட்டி பாவமன்னிப்புக் கோரவேப் பயன் பட்டது. இப்படி அடிமைப் படுத்துவதிலும் ஆக்ரமிப்பு செய்வதிலும் அடுத்த நாட்டின் வளங்களை சுரண்டுவதிலும் கத்தோலிக்கர் என்றும் புராடஸ்டண்டுகள் என்றும் இந்த திருச்சபைகள் நீதிக்குப் புறம்பாக நடப்பதில் மட்டும் வித்தியாசம் பார்த்துக் கொள்ளவில்லை.  ஆற்றில் போகும் தண்ணீரை ஐயா குடி! அம்மா குடி!  என்று ஊரார் சொத்துக்களை அள்ளிக்  கொள்ளை அடிப்பதில் இந்த பிரிவுப் பாகுபாடுகள் இல்லாமல் கூட்டுக் களவாணிகளாக  செயல்பட்டனர்.   

ஆகவே சிரித்து சிரித்து சிறையில் இடுவது, அடுத்துக் கெடுப்பது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, உரிமைகளற்ற சொத்துக்களை சூறையாடுவது ஆகியவை கிருத்தவ  ஐரோப்பியர்களின் பொருளாதாரக் கோட்பாடாக திகழ்ந்தவை என்பதை வரலாறு பறை சாற்றுகிறது.          (சரியான கிருத்துவம் பிடிச்சவனாக இருக்கிறானே என்று சொல்லப்படுவதின் பொருள் இப்போது புரிகிறது). 

நாம் ஒப்பிட்டுப் பார்க்க இன்னும் சில மதங்கள் இருக்கின்றன.

தொடர்ந்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்...
இபுராஹீம் அன்சாரி
====================================================================
* THE 100  A RANKING OF THE MOST INFLUENTIAL PERSONS IN HISTORY  என்கிற இந்த நூல் உலக சரித்திரத்தை உருவாக்கிய நூறு பேர்களை தரப்படுத்தி அவர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் முதல் தரம், முதல் இடம் பெற்றிருப்பவர் எம்பெருமானார் இரசூலே கரீம் முகமது முஸ்தபா (ஸல் ) அவர்களாவார்கள். அல்லாஹு அக்பர். இயேசு கிருஸ்துக்கு மூன்றாம் இடம் தரப்பட்டு இருக்கிறது. இந்த நூலில்  மொத்தம் மூன்று   இந்தியர்களின் பெயர்களே  காணப்படுகின்றன.  பலர் படித்து இருக்கலாம். படிக்காதவர்கள் படித்துப் பார்க்க முயலுங்கள்.
====================================================================

27 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பளமான ஆராய்சி ஆசையை துறக்கச்சொன்ன புத்தர் ஆசையை துறக்க ஆசைப்பட்டார்

sabeer.abushahruk said...

காக்கா,
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
 
எத்துணை நீண்ட வரலாற்றுக் குறிப்புகள்! எவ்வளவு செறிவான மதக்கோட்பாடுகள்! எல்லையற்ற வாழ்க்கை முறைகள்! அரசியல் விளையாட்டுகள்! அத்துணையும் சாரம் மாறாமல், அர்த்தம் பிசகாமல், வாசிப்பவரைக் குழப்பாமல் எழுதிச்செல்லும் உங்களைக் கண்படும் அளவுக்கு ஆச்சரியமாகப் பார்க்கின்றேன்.   பள்ளிக்காலங்களில் “சுருக்கி வரைக” கேள்விக்குத் தங்களுக்கு பத்துக்குப் பத்து கிடைத்திருக்குமே!?
 
மாஷா அல்லாஹ், காக்கா. சிறப்பான எழுத்தாளர் தாங்கள்.
 
அப்புறம் காக்கா, புத்த மதக் கொள்கைகளில் இன்னும் கொஞ்சம் தேடிப்பாருங்களேன்.  எங்கேயாவது “கைகள் இரண்டையும் கீழே ஊண்டி நடங்கள், தலையில் கொம்பு வளருங்கள், பின்னால் வாலும் அதில் குஞ்சத்தை ஒத்த உரோமமும் வளருங்கள்” என்றும் இருந்துவிடப்போகிறது. ஹய்யோ ஹய்யோ!
 
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,காக்கா.

Shameed said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அரிய அலசல்!

பொருளதாரத்தின் அரிய சிற்பி நீங்கள்!

இன்னும் தொடர ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் துஆ!
--------------------------------------

ரபியுள் அவ்வல் 7
ஹிஜ்ரி 1434

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா...

முதலில் தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று படைத்தவனிடம் துஆ செய்கிறேன்.

அல்லாஹு அக்பர், எவ்வளவு வரலாற்று தகவல்கள்.

இந்த பதிவை படிக்கும் போது "வரலாற்று உண்மையை எந்த மத முதலைகள் விழிங்கியிருந்தாலும், கொடுக்க வேண்டிய இணிமாவை கொடுத்து எடுத்து உலகுக்கு கொண்டுவருவோம்ல என்று நண்பர் யாசிர் ஸ்டையில் எழுத தோன்றியது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நாம் ஒப்பிட்டுப் பார்க்க இன்னும் சில மதங்கள் இருக்கின்றன.//

மிக ஆவலுடன் இன்னும் பிற மதங்களின் பொருளாதார கொள்கை பற்றிய ஆவலாக உள்ளது.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
Brother Ibrahim Ansari. The vast knowledge you have acquired through your education, reading, learning and experimenting has been clearly depicted in all your episodes in this article.
Your wisdom on Economic Theory, your vision on contemporary religions and your diligent feeling about humanity are all reflected here. It is amazing to read and I pray Allah to shower His blessings upon you to contribute more and more to the society.
Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு..." என்று அவர்களின் இயேசு நாதர் போதித்ததை பொட்டலம் கட்டிப் புறக்கடையில் போட்டுவிட்டு

"ஒரு நாட்டை அடிமையாக்கினால் மறு நாட்டையும் அடிமையாக்கு" என்று புதிய பொருள் படைக்க படையெடுத்துப் புறப்பட்டனர் பரங்கியர்கள்.

"தட்டுங்கள் திறக்கப்படும்" என்று படித்தார்கள்

ஆனால் "தட்டாமல் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள்".

"கேளுங்கள் கொடுக்கப்படுமென்று" படித்தார்கள்...

ஆனால் "கேட்காமலே கொள்ளையடித்தார்கள்".

"தேடுங்கள் கிடைக்குமென்று" படித்தார்கள்...

ஆனால், "நடைமுறையில் திருடுங்கள் கிடைக்குமென்று" ஆக்கிக் கொண்டார்கள்.//

ஆ..ஹா ! என்னே அவர்களின் அகராதி !

நாம் விரும்பிப் படிக்கும் ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரிசையையில் இது நிச்சயம் இடம் பெரும் ! இன்ஷா அல்லாஹ் !

Abdul Razik said...

An excellent fiscal research script comprised with religion & regions. I didn’t read ever like this article in Tamil. Anticipating to hear your supplementary pearl words earlier.

Abdul Razik
Dubai

Unknown said...

Assalamu Alaikkum,

MashaAllah, good exploration of different religious principles and their condition of practicality.

Although all the above mentioned religions could have genuine principles by their establishers, serverely they lack practicality and less universal natured.

All the religions have good intentions, but if a person's basic characters are evil dominating ones, religions can not correct him.

Thanks and best regards

Ebrahim Ansari said...

Dear Prof. NAS,

Alaikkumussalam. (Warah).

Hope this finds you in good health and cheers.

Jasakkallah hairan.

Our thanks are due for your kind consideration and continued support.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நல்லதொரு ஆராய்ச்சித் தொடர்!

இதுவரை அறியாத அறியத் தகவல்கள்!

தங்களுக்கு வல்ல அல்லாஹ்! நல்ல
ஆரோக்கியத்தை வழங்கி நல்லருள் புரியட்டும்!

அன்புச் சகோதரருக்கு! வாழ்த்துக்கள்!

Iqbal M. Salih said...

//ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று அவர்களின் இயேசு நாதர் போதித்ததை பொட்டலம் கட்டிப் புறக்கடையில் போட்டுவிட்டு ஒரு நாட்டை அடிமையாக்கினால் மறு நாட்டையும் அடிமையாக்கு என்று புதிய பொருள் படைக்க படையெடுத்துப் புறப்பட்டனர் பரங்கியர்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்று படித்தார்கள் ஆனால் தட்டாமல் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள். கேளுங்கள் கொடுக்கப்படுமென்று படித்தார்கள் ஆனால் கேட்காமலே கொள்ளையடித்தார்கள். தேடுங்கள் கிடைக்குமென்று படித்தார்கள் ஆனால் நடைமுறையில் திருடுங்கள் கிடைக்குமென்று ஆக்கிக் கொண்டார்கள்.//

அட்டகாசமான ஆராய்ச்சிக் குறிப்புகள்.
ஆழமான எழுத்துக் கோர்வைகள்.

டாக்டர் என்றால், டாக்டர் தான்!

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும். முன்னரே முகமன் கூறிய அன்புத்தம்பிகள் கவிஞர் சபீர், தாஜுதீன் , அஹமது அமீன், பேரறிவாளர் அலாவுதீன் ஆகிய அனைவருக்கும் அலைக்குமுஸ்ஸலாம்.

பேராசிரியர் NAS அவர்கள் முதல் இந்த அத்தியாயத்துக்கு கருத்திட்ட தம்பிகள் எம். ஹெச். ஜெ., அப்துல் ராசிக், இக்பால் எம் ஸாலிஹ், அபூ இப்ராஹீம் மற்றும் சகோதரர் திருப்பூர் சபீர் தவிர படித்து அலைபேசி மூலம் கருத்து வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

Dear Bro. Ahmed Ameen, I regard your comments to our articles as a lengthiest glass of SENIOR HORLICKS.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா....:

//SENIOR HORLICKS// இது எங்க LMS.இ.அப்பா விரும்பி குடிப்பதாச்சே ! அதுவா !?

இன்னும் Junir Horlicksதான் நினைச்சுகிட்டு இருந்தேன் ! :)

Ebrahim Ansari said...

தம்பி அ. இ !

கொள்ளுப் பேரன் பிறந்த பின்னும் Junior Horlicks குடித்துக் கொண்டிருக்க முடியுமா? செரிக்காது. உங்க அப்பா குடிப்பதுதான் இந்த அப்பாவுக்கும் ஏற்றது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுறாஹிம் அன்சாரி காக்காவின் அழகான விளக்கங்கள் இங்கு அடுத்த புத்தகத்திற்கு நல்ல அடிக்கல் நட்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் காக்கா.

அப்துல்மாலிக் said...

it's an excellent historical anticipating episodes. You have multiple faces like History, Economic, etc...

May the almighty blessed with good health

Ebrahim Ansari said...

Assalamu alaikkum

Dear brothers M.S.M Naina and Abdul Malik. Jazakkallah.

Yasir said...

மாஷா அல்லாஹ் வியக்கவைக்கும் கருத்து செறிவுமிக்க எழுத்துநடை / திகைக்கவைக்கும் ஆதாரங்கள் அதனை அலசும் முறை.....தொடர்ந்து கணிப்பொறி மேல் விழிவைத்து காத்திருப்போம் அடுத்த தொடருக்காக...வாழ்த்துக்கள் மாமா

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களுக்கும் மிக்க நன்றி. சொந்தக்காரர்கள் தாமதமாகவே வருவீர்களா ? இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம் அடுத்த பின்னூட்டத்தில். .

Ebrahim Ansari said...

சற்று முன் எனது மச்சான் முகமது பாரூக் அவர்கள் அலைபேசியில் அழைத்து அவர்கள் கூறியதாக பின்னுட்டம் இடச்சொன்ன வார்த்தைகள்.

" தலைப்பைப் பார்த்து மிகவும் சொதப்பலாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் மிகவும் கத கதப்பாக இருந்தது. கட்டுரை தந்த சூட்டின் காரணத்தால் ஒருவாரம் போர்வை இல்லாமலேயே தூங்கலாம் போல் இருக்கிறது. "

என்று எழுதச்சொன்னார்கள். மிக்க நன்றி மச்சான். எனது ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் நீங்களே inspiration.

இப்னு அப்துல் ரஜாக் said...

போலி மத போதனைகளை பின்னி எடுத்துட்டீங்க காக்கா வாழ்த்துக்கள்

Unknown said...

Hard Work = Dr.Ansari kaka

Thameem said...

அஸ்ஸலாமு அலைக்கும் மாமா,

//சொந்தக்காரர்கள் தாமதமாகவே வருவீர்களா ?//

இந்த கேள்வியை என்னையும் சேர்த்து தானே கேட்டீர்கள்?

மன்னிக்கவும் உங்கள் கட்டுரையை இன்று படிக்கதான் நேரம் கிடைத்தது.உங்கள் கட்டுரையை படிக்கும் போது படத்தில் வரும் claimax காட்சிகளை பார்பதுபோல் தோன்றுகிறது. Very interesting. Thumbs UP!.

அதிரை சித்திக் said...

பொருளாதார பார்வை ..
மற்ற மதங்கள் பற்றிய ஆய்வு ...
தெளிவான பார்வை ...
காக்காவிடம் பெறவேண்டிய பாடங்கள்
பல உண்டு ..நல்ல ஆரோக்யத்துடன் இத்தொடரை
இனிதேநிறைவடைய து ஆ செய்கிறேன்

KALAM SHAICK ABDUL KADER said...

அட்டகாசமான ஆராய்ச்சிக் குறிப்புகள்.
ஆழமான எழுத்துக் கோர்வைகள்.

டாக்டர் என்றால், டாக்டர் தான்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு