Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அலைகள்...! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2013 | , , ,



அவனியை ஆட்டுவிக்கும்
...அலைகற்றான் என்பதை
கவனமாய் நோட்டமிட்டுக்
...கவனிக்கும் மன்பதை

கருவாகிக் கருவறையின்
....காரலையில் நீந்தி
உருவாகும் குழவியெனும்
..ஓரழகு முத்து

ஒலியலைகள் பதிவாகி
....உலகமெலாம் அலையாக
ஒலிபரப்பின் நிலையாகும்
...உளமகிழும் கலையாகும்

நீரலைகள் நிலமகளை
..நொடிதோறும் முத்தமிடும்
பேரலையாய்ச் சுழலுகின்றப்
...பொழுதானால் சத்தமிடும்

கார்குழலின் நெளிவுகளும்
....கடலலையின் சுளிவுகளாய்
பார்புகழும் கவிஞரெலாம்
...படைத்திடும்பா தெளிவுகளாம்

அலைக்கற்றை ஊழலினால்
....அரசும் கவிழுமென்றால்
அலைப்பற்றி ஊரினிலே
...அதிகம் உணருவாரே!

அனுதாப அலைகளால்
..அளந்திடும் வாக்கிருந்தால்
இனியாரும் விலையிலா
..இலஞ்சமும் நோக்கிடாரே!

காற்றின் அலைகளாலும்
..கடல்கிழிக்கும் கதிரவக்
கீற்றின் அலைகளாலும்
...கரமசைக்கும் இலைகளும்!

உதிரத்தின் அலைகள்
..உடல்கூறும் நிலைகள்
இதயத்தின் அசைவு
..இரத்தத்தின் அலைகள்!

அலைகள் வாழ்ந்தால்
...அனைவரும் வாழ்வோம்
அலையே வாழ்க
...அனைத்திலும் நீதான்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை), அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை), மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

12 Responses So Far:

sabeer.abushahruk said...

//அலைக்கற்றை ஊழலினால்
....அரசும் கவிழுமென்றால்
அலைப்பற்றி ஊரினிலே
...அதிகம் உணருவாரே!//

அலை அடிக்கிறது என்பது இதுதானா கவியன்பன்? ஒவ்வொரு வரியும் படீர் படீரெனவல்லவா அடிக்கின்றது!

கடலலைகளைவிட கடுமையாகவும் கலக்கலாகவும் அல்லவா அடிக்கின்றது உமது கவியலைகள்!

வாழ்த்துகள் கவியன்பன்.

sabeer.abushahruk said...

கவியன்பனின் கவிதைகளுக்கு முத்திரை தந்து அவர்தம் கவிதைகளை திறந்த மனதோடு அங்கீகரித்திருக்கும் அதிரை நிருபரைப் பாராட்டுகிறேன்.

தனி முத்திரை தருமளவுக்கு முழுத்தகுதி வாய்ந்தவர்தான் கவியன்பன் அவர்கள்.

இனிவரும் கவியன்பனின் கவிதைகளும் தனி முத்திரைப் பதித்தே வெளிவரும் என நம்புகிறேன்.

குட் வொர்க், அ. நி.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Kaviyanban,

Beautiful waves of lines...

Nice observations about waves and vibrations without those truly no life at all.

Thoughts are also vibrations.If our thought vibrations and waves are harmonious we are at peace.

There are waves and vibrations which are invisible in this world.(cosmic waves, ether waves).

I expected tens of meters high disastrous tsunami waves from your lines.

Thanks and best regards

Iqbal M. Salih said...

உதிரத்தின் அலைகள்
..உடல்கூறும் நிலைகள்
இதயத்தின் அசைவு
..இரத்தத்தின் அலைகள்//

தளபதி கவியன்பனுக்கு தாராளமாக தனிமுத்திரை அளிக்கலாம்.

சபீர் முன்பு சொன்னதுபோல் 'இலக்கியத்துறையின்
இலக்கணத்துரை' அவர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்களின் கடலான கவியலைகள்
இங்கு தனி முத்திரையாய் மிளிரும்
இங்கிலாந்து பி.பி.சி யிலும் ஒலிரும்
இன்னும் கடலலை போல என்றென்றும்!
---------------------------------------------------------

ஸபர் - 24 - 1434




ZAKIR HUSSAIN said...

தென்றல் வந்து அசைந்தாடியது உங்கள் அலைகளில்
[ என் கருத்துத்தமிழ் கண்ணதாசனிடம் சுட்டது ]

Ebrahim Ansari said...

அலைகள் பற்றிய இந்த முத்திரைக் கவிதை அலைகள் சில நினைவலைகளைக் கிளறி விட்டது.

பேராசிரியர் தி. மு. அ. காதர் அவர்கள் எங்களது மாணவப் பருவத்தில் ஒரு தலைப்பைக் கொடுத்து மாணவர்களின் கவிதை சிந்தனைகளை வளர்ப்பதற்காக அடிக்கடி போட்டி நடத்துவார்.

விலைமகளின் கல்லறையில் என்ன எழுதலாம் ?
மலடியின் மரணசாசனம்-
கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் கருமேகம்-
இப்படியெல்லாம் .

அவற்றுள் ஒரு தலைப்பு. கடல் அலைகள்.

கடல் அலைகளுக்கு ஒரு மாணவர் எழுதிய சிந்தனையைப் பகிர விரும்புகிறேன்.

முத்துக்களை மீனினத்தை
முளைத்த பச்சைப் பாசிகளை
அத்துமீறிக் குடலில் அடைத்ததனால்
உப்புச் சோடா
உன்னிடம் இருந்தும்
அஜீரணம் உண்டாகி
அலைவாந்தி எடுக்கின்றாய்.

- (1970- நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் என்னால் மறக்க முடியாத வரிகள்) )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவனமாய் நோட்டமிட்டுக்
...கவனிக்கும் மன்பதை//

மன்பதை = மனிதர்கள், புதிய வார்த்தை இன்று கற்றுக் கொண்டது !

'அலை' யவைத்து ஆர்ப்பரிக்கும் அசத்தல் !

Yasir said...

”அலைகள்” கலாம் காக்காவின் பண்பு போல சுகமாக எழும்பி வீசுகின்றன..கரையில் இருக்கும் எங்களைப்போன்றர்க்கு இவ்வலைகள் பெருமகிழச்சியை கவிதை வடிவில் தந்து இருக்கின்றன..வாழ்த்துக்கள் கவியன்பன்
கற்பூரத்தின் வாசனை தெரிந்த இடத்தில் உங்கள் கவிதை வெளிவருவதுதான் உங்கள் கவிதைக்கு சிறந்த அங்கீகாரமாக அமையும்

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜஸாக்கல்லாஹ் கைரன்

அன்பலைகள் வழியாகப்
பண்பலைகளின் பதிவுகளாய்
தனி “அக்மார்க்” முத்திரை
தனியோனருளால் என்றன்
கவிதைக் குழந்தைக்கு
நீங்கள் இட்ட முத்தத்தினை
அன்போடு ஏற்கிறேன்!

கவிவேந்தர் சபீர், ஆங்கிலப் புலமை மிக்க அன்புச் சகோதர் அமீன். அமெரிக்க அதிரையர்களின் அமீர்- நற்றமிழும் நன்மார்க்கமும் பெற்ற பேரறிஞர் இக்பால், இலண்டன் இளங்கவிஞர் ஜஃபர், உளவியல் மருத்துவர் ஜாஹிர், பொருளாதாரப் பேராசான் டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா, அன்பு நெறியாளர் அபூஇப்றாஹிம், கல்வியாளர் யாசிர் ஆகிய உங்களனைவருடன் இணைந்திருப்பது “கற்றவர் சபையில் எனக்கொரு இடம்” கிடைத்த மட்டிலா மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதிரை நிருபர் என்னும் அறிவுச்சுடரால்தான் என் கவிதைகள் நேசிக்கப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன.

கடமையுணர்வுடனும், கண்ணியமான பின்னூட்டத்துடனும், கட்டுப்பாடன மட்டுறுத்தலுடனும்- நெறி முறைகளுடனும் என்னைப் போன்றவர்கட்குத் தளம் அமைத்துக் கொடுக்கும் அதிரை நிருபர்க் குழுவுக்கும், வாசகர்கட்கும் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன், இன்ஷா அல்லாஹ்!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அலைகள் வாழ்ந்தால்
...அனைவரும் வாழ்வோம்
அலையே வாழ்க
...அனைத்திலும் நீதான்!

அலைகளின் புறப்பாடு
அல்லாஹ்வி ஏற்பாடு
அசத்தி விட்டீர்!!!!!!!!
அலைகளைப்பற்றி

KALAM SHAICK ABDUL KADER said...

திருப்பூர் மு.செ.மு. சபீர் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி- ஜஸாக்கல்லாஹ் கைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு