Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுவர்க்கத்திற்கு வேகத்தடை ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2013 | , , , , ,

அறியாமைக் காலத்து
அரேபியர்களா
அதிரைக் காரர்கள்?

செவ்வக செங்கல் வைத்து
சிமென்ட்டால் செதுக்கியெடுத்து
சவப்பெட்டிச் சாயலிலே
சிலை வணங்கத் துணிந்தனரே

ஐயகோ என்ன செய்ய
அறிவழிந்து போயினரே

இபுறாஹீம் அலைஹிவசல்லம்
இன்றில்லை என் செய்வேன்
சின்னச் சின்ன கபுருடைத்து
பெரிய கபுரைக் குற்றஞ்சொல்ல!

பச்சைப் போர்வை போத்தி
பாதுகாக்கும் முன்பதாக
பகுத்தறியப் படித்தவரே
பிழையுணர மாட்டீரோ

காற்றுப்புகாக் கபுரறையில்
கண்தெரியாக் காரிருளில்
மூச்சுத்திணறி மரணித்த
மனிதனை நீர் மறந்தீரோ

கொலைபாதகச் செயலன்றோ
விலைமதிப்பற்ற உயிரன்றோ
அருள்பாலிப்பார் அவ்லியா எனில்
அழித்துவிட்ட தென்ன நியாயம்

ஓரிறையை வணங்குவதாய்
ஊரறியச் சொல்லிவிட்டு
சிலை வணங்கத் துணிந்தீரோ
நிலைகுலைந்து போயினரோ

கழிப்பிடமா பிறப்பிடம்
குமட்டுதய்யா சம்பவம்
இடித்துடையும் இழிச்சின்னம்
துடைத்தழியும் கேவலம்

குதிரைக்கு கிண்டியாலும்
அதிரைக்கு உண்டியலும்...
செயல் வேறு பலன் ஒன்று
காசேதான் கடவுள்

எல்லைக் கற்களைக்
குலதெய்வங்களுக்காக
விட்டுக்கொடுத்த
நெடுஞ்சாலைத் துறையே...

வேகத்தடைகளின்
வடிவத்தை மாற்று - இல்லையேல்
பச்சைப்போர்வை போத்தி
பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

19 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

பிறந்த இடத்திலிருந்து
பிறந்த பூகம்பம்...!
சிறந்த கவிதைக்கானச்
சொற்களின் “பூ”கம்பம்!!

அறியாமை விபத்தை
அழகாய் நிறுத்தும் “வேகத்தடை”
நெறியான வழியை
நிலையாய் நிறுத்தும் வேகத்திலே..

இத்தனை நாட்களாகியும்
இன்னமும் அகற்றவில்லையா?
எத்தனை “நாற்றம்”
ஏனிந்த ஏமாற்றம்?!


KALAM SHAICK ABDUL KADER said...

கப்ரு கவிதை
கலக்”கல்”!

Anonymous said...

\\பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!\\
இறைவனால் மன்னிக்கப்படாத கூட்டம் காக்கா இது எம் கூட்டம் இல்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: இதைவிட சாட்டையைச் சுழற்றி அடிக்க முடியாது...
'கல்'லறைக் கனவான்களுக்கு 'சுல்'...

காசு பார்க்க
கழிப்பிடத்தை தேர்ந்தெடுத்தவர்கள்
கட்டணம் வசூலிக்க
கல்லறை உண்டியல்..!
கட்டியிருக்கிறார்கள்...

Adirai pasanga😎 said...

சுவர்க்கத்திற்க்கு (வேகத்)தடை

அஸ்ஸலாமு அலைக்கும்

///வேகத்தடைகளின்
வடிவத்தை மாற்று - இல்லையேல்
பச்சைப்போர்வை போத்தி
பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!///

இணையற்ற இறைவனை வணங்க
இறைத் தூதர் காட்டிய வழி மறந்து
மாற்றார் வழியில் தடம் மாறிப்போய்
தடுமாறி நிற்கும் சமுதாய செல்வங்களே
செல்லும்பாதை அது சுவர்க்கத்திற்க்கு
வேகத்தடையன்று நிரந்தர தடையாக்கிவிடுமே

Unknown said...

Assalamu Alaikkum,

An emotional burst against ignorant acts.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு திருந்தினால் அவர்களுக்கே நல்லது.இல்லையென்றால் நாளை சுவர்க்கவாசிகளை paarththu,நரகத்தில்இருந்து கொண்டு பெரு மூச்சு விடவேண்டியதுதான்.அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றி இருக்க கூடாதா என்று .

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...


வேகத்தடைகளின்
வடிவத்தை மாற்று - இல்லையேல்
பச்சைப்போர்வை போத்தி
பத்தி கொளுத்திவிடும் எம் கூட்டம்!
என்ன ஒரு சிந்தனை
நல்லகவிதை
பிறப்பு இருந்தால்
இறப்பு நிச்சயம்
பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை
எங்கே வந்தது இந்த கபுரு
அலாஹ்வே இவர்களூக்கு
ஹீதாயத் கொடு

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.கல்லறை வணங்கிகளே!
நீங்கள் சொர்கம் புகதடையுண்டு ஆனால் நரகில் "வேக"(பொசுங்க)தடையில்லை அரிவீரோ அறிவினர்களே!உங்கள் மூளையேன்ன கல்லும்,மண்ணும் அடங்கிய கல்லறையா?அறிவுமூச்சு முட்டலையா?மடசாம்புரானினளே உங்களைச்சுற்றி அறியாமை புகைமூட்டம் நீங்களே ஏற்றிகொண்டது அதன் திரியும், நெருப்பும் நீங்களே ஏந்திவந்தது!என்று தவ்ஹீத் வெளிச்சத்திற்கு வருவீர்கள் வீனர்களே? கவிஞரின் நியாயக்கோபம்
சரிதான்!வாழ்த்துக்கள்.

crown said...

என் கருத்தில் உள்ள பிழையைத்திருத்தி மட சாம்புரானி என படிக்கவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இது இருக்கிற இடம் தெரியாமல் செய்ய தொடுக்கும் போர்க் குரல் பைத்து இது.
இதை உடைத்திடும் நன்னாளில் படிக்க சிறந்த மெளலிது இது.

Ebrahim Ansari said...

கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை. உண்டு கொழுக்கவும் உண்டியல் ஏந்தவும் கக்கூசை கபுராக்கத்துணிந்த காட்டு மிராண்டிகளுக்கு எம் கவிஞரின் இன்சுவைக் கவிதையால் பதில் சொன்னால் புரியாது.

தேவை ஒரு கடப்பாறை.பாறை மனமுள்ள பத்து இளைஞர்கள்.

ஊருக்குக் களங்கம் என்று ஒரு புறம் ஒதுக்கி வைப்போம் இது தெருப் பேருக்கும் களங்கம். எனவே தெருவாரைத் திரட்டுங்கள். பெற்ற குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் போடும் காலமிது. இதுவும் ஒரு ஹராத்தில் பிறந்த குழந்தைக் கபுறு. இதையும் இடித்துக் கொல்வதில் தவறில்லை.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தீமைக்கு எதிரான குறைந்தபட்ச த'வா வாகிய எண்ணத்தாலும் எழுத்தாலும் தடுப்பதை நான் செய்துவிட்டேன். என்னோடு சேர்ந்து குரல் கொடுத்த சகோதரர்களுக்கும் இறைவன் அதற்கான நற்கூலியை வழங்குவானாகவும்.

அமீரகத்திலும் ஊரிலும் இது தொடர்பாக பலர்டம் உரையாடிய வகையில் பச்சைப்போர்வை போத்தியாயிற்று, புறாக்கூடுதான் பாக்கி என்றும் அறிகிறேன்.

எனக்கெதிராக காசு வெட்டிப்போடப்படலாம் என்று உளவுத்துறை (ஹிஹி) சொல்வதால் சிரிப்பு சிரிப்பா வருது.

பைபை.

Adirai pasanga😎 said...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

///தீமைக்கு எதிரான குறைந்தபட்ச த'வா வாகிய எண்ணத்தாலும் எழுத்தாலும் தடுப்பதை நான் செய்துவிட்டேன். என்னோடு சேர்ந்து குரல் கொடுத்த சகோதரர்களுக்கும் இறைவன் அதற்கான நற்கூலியை வழங்குவானாகவும்.///

அன்புச்சகோதரர் சபீர் அவர்களே..

நமது சம காலத்தில் நம் கண்முன்பே கழிப்பிடம் கபுராக மாறியுள்ளது. நாம் இவ்வாறு புலம்பி இறைவனிடம் முறையிடுவதைத் தவிர நம்மால் ஏதும் செய்யமுடியவில்லை - இத்தனைக்கும் ஆலிம்கள் நிறைந்த ஊர் என்ற பேச்சு வேறு.

ஏகத்துவம் பேசி - செயல்பட்ட சகோதரர்கள் தாங்கள் முன்பு இருந்த நிலைமாறி ஏகத்துவம் பேசும் இயக்கவாதிகளாக மாறிவிட்டனரோ என்றும் இந்த சூழ்னிலையில் நினைக்கத்தோன்றுகிறது. அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பற்ற வேண்டும். நமது ஊரில் தா அவா பணி மீண்டும் முழுவீச்சில் மேற்கோள்ளப்பட வேண்டும். அதற்கு தகுந்த தாயீ உள்ளூரிலிருந்தோ வெளியூரிலிருந்தோ வரவேண்டும். அதற்கு அனைத்து ஏகத்துவ சகோதரர்களும் ஒரு தலைமயின் கீழ் ஒன்றிணைந்து முயற்சித்து செயல்பட வேண்டும் - செய்வார்களா? இல்லையெனில் அவர்களை இதனைச்செய்ய தடுப்பது எது என அனைவரும் சிந்திக்க வெண்டிய தருணமிது.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

Update : http://theadirainews.blogspot.in/2013/01/blog-post_1217.html

Yasir said...

காலணி அடி கவிதை அந்த காட்டுவாசிகளுக்கு...நன்றி கவிக்காக்கா விஸ்வரூபத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நாம் நம்மிடைய நடக்கும் இந்த கல் வழிப்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்..

அதிரை சித்திக் said...

வேக தடைக்கு வடிவம் மாற்று ..
இல்லையேல் பச்சை போரவை போர்த்தி
பத்தி கொளுத்தும் எம் கூட்டம்
சரியா சொன்னீர்கள் காக்கா
இதை குறும்பாக முப்பது வருடங்களுக்கு முன்
குறும்பாக நான் செய்துள்ளேன் ..

sabeer.abushahruk said...

ஜமீல் காக்கா,
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...

தாங்கள் கொடுத்திருக்கும் தொடுப்பில் சென்று வாசித்தேன். எல்லோருமே குரல் கொடுக்கிறோம்,சரி. இவிங்கள அடக்க நம்மால முடியாதா? இணையத்திலேயும் வந்து விட்டதால் அசலூர்க்காரர்களெல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கிறமாதிரி கிண்டல் செய்றாங்க,காக்கா. வெட்கம்...வேதனை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு