Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சினிமாவும் முஸ்லீம்களும் – சிந்திப்பதற்காக ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்,

இவர்கள் துப்பாக்கியைத் தூக்கும்போதே சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும். இந்தச் சினிமா கலாச்சாரத் தீவிரவாதிகளையும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சிறையில் போட்டிருக்க வேண்டும். இப்போ பாருங்க விஸ்வரூபம் எடுத்து வீதிக்கு வந்து சினிமா கலாச்சார தீவிரவாதத்தை தூண்டிவிட்டு தனது சுயலாபத்திற்காக நீளிக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறார்கள் அவர்களின் ஆதரவாளர்களை. இந்த அயோக்கியர்களைச் சட்டம் தண்டிக்க கால அவகாசம் எடுத்தாலும் மக்கள் புறக்கனித்து தண்டித்தே ஆகவேண்டும்.

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத நினைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல இது என் ஆதங்கமும் கூட,

இந்தப் பதிவைப். படிக்கும் போது சினிமா பிரியர்களுக்குக்(!!) கோபம் வரலாம், கொஞ்சம் நிதானமாக வாசியுங்கள். 

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாத்துறை அழிந்து சீரழிந்து வரும் துறையாகவே இருந்து வருகிறது. சினிமா ஒரு கலையே அல்ல. அன்மைகால சினிமாக்கள் கேடுகெட்டக் காமக்கூத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும் யதார்த்த நிலைக்கு அப்பாற்பட்ட கற்பனையின் மூலம் உப்புக்குச்சப்பானியாக ஒரு சில கலைகளை (நடிப்பு, நடனம், இசை, வீரசாகச விளையாட்டு) உள்ளடக்கிய கலவைதான் சினிமா. இதை கலை என்று ஒருவன் சொன்னால் நிச்சயம் அவன் பைத்தியக்காரனாவே இருப்பான். 

இது ஒரு பக்கம் இருந்தாலும். கேடுகெட்ட சினிமா என்ற ஊடகம் சக்திவாய்ந்ததாக உருமாறியிருப்பதற்கு மிகப்பெரிய காரணம். மனிதன் நடைமுறையில் வாழ்வில் சாதிக்க முடியாததைக் கற்பனையின் மூலம் அவைகளை சாதித்து காட்டும் காட்சியமைப்புகளே அதிகம் இடம்பெறுவதால், சினிமா மக்கள் மனத்தில் இடம்பிடித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஒரு சிறிய உதாரணம்: இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுகிறான், நேர்முக தேர்வுக்கு செல்கிறான், தோல்வியை சந்திக்கிறான். மீண்டும் தேடுகிறான் தோல்வியடைகிறான். மீண்டும் தேடுகிறான் தோல்வியடைகிறான். உடனே நேர்முக தேர்வு எடுப்பவர் நம்மை தோல்வியுற செய்யவேண்டும் என்ற தொணியில் கேள்வி கேட்பார், அவரைச் ஷூவைக் கழட்டி அடிக்கனும் போல் இருக்கும், நம்மிடம் இருக்கும் சர்டிபிகேட்களை கிழித்து அவர் மேல் தூக்கி வீசவேண்டும் என்பது போல் இருக்கும். நடைமுறையில் அப்படி செய்ய முடியாது. ஆனால் உங்கள் அபிமான ஹீரோ சினிமாவில் வேலை தேடுவார், நேர்முகத் தேர்வில் தோல்வியுறுவார், உடனே தான் போட்டிருக்கும் ஷூவால் தேர்வாளரை அடிப்பார், தன் கையிலிருக்கும் சர்டிபிகேட்டை கிழித்து அவர் முகத்தில் எறிவார். நடைமுறையில் செய்யமுடியாததைச் சினிமாவில் செய்து காட்டுவதால் சினிமா மக்களின் கற்பனைக்குக் காட்சியமைத்து காட்டுவதை கற்பனையில் செய்யத்துடிக்கும் ஒவ்வொருத்தனும் ரசிக்கிறான். இதுவே சினிமாவின் வெற்றியின் ரகசியம். ஆனால் அந்த அபிமான ஹீரோ செய்த வன்முறை செயலை நியாப்படுத்தும் காட்சியே இருக்குமே தவிர, அந்த வன்முறை காட்சிக்கு பிறகு யதார்த்த உலகில் நடப்பவை பற்றி காண்பிக்க மாட்டார்கள்.

இது போல் சாதாரண நம்முடைய வாழ்வில் நாம் சாதிக்க முடியாத அனுபவிக்க முடியாதவைகள், தடை செய்யப்பட்ட விரும்பியவைகள் அனைத்தையும் கற்பனை மட்டுமே செய்ய முடியும், அவைகளை அபிமான ஹீரோ சினிமாவில் செய்வதால் நாம் ரசிக்கிறோமே தவிர, வேறு என்ன இந்த சினிமாவில் நன்மையுள்ளது?

நாகரீகம் 21ம் நூற்றாண்டு என்று தங்களை முற்போக்கு சிந்தனைவாதிகள் பீற்றிக்கொள்ளும் பிற்போக்கு அதிமேதாவிகள் நிறைந்தது இவ்வுலகம். கனவு, கற்பனை மூலம் காலத்தில் கழிப்பதில் மட்டுமே அநேக மனிதர்கள் விரும்புகிறார்கள். நம்மை இவ்வுலகில் படைத்த ஒரு சக்தி இறைவன் என்கிற ஒரு வினாடி சிந்தனைகூட மனிதனின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகிவிட்டது சினிமா கற்பனை அடிமைகளிடம். கேடுகெட்ட சினிமா மனித சமூகத்தில் சாதித்ததைவிட சீரழித்ததே அதிகம் என்பது வரலாறு.

சினிமாதுறையில் உள்ள எத்தனை பேர் ஒழுக்க சீர்கேடுகளின்றி வாழ்கிறார்கள்? என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு வந்த மிகப்பெரியச் சாபக்கேடு தமிழ் சினிமா. இறுதியில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. என் டி இராமராவுக்கு பிறகு ஆந்திராவில் சினிமா கூத்தாடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வபோது முஸ்லீம்களைச் சீண்டி தங்களின் வருமானத்தை பெருக்குவதில் சினிமாக்காரர்கள் கில்லாடிகளாகவே இருந்துள்ளார்கள். அந்த கில்லாடி லிஸ்டில் முன்னணியில் இருப்பவர் உலக ‘நாய்’கன் என்று இணையதளங்களில் தற்போது சித்தரிக்கப்படும் கமல் என்ற 'காம'ஹாசன்.  இவரின் வி(ச)சுவரூபம் என்ற திரைப்படம் முஸ்லீம்களை இதுவரை சினிமாவில் சித்தரிக்காத வகையில் படுமோசமாக சித்தரித்துள்ளது. சில நாட்களாக அனைவர் மத்தியிலும் ஹாட் நியூஸாகிப் போன 'விஸ்வரூபம்' திரைப்படத்தினை, தமிழக அரசு அதிரடியாக தடை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டியது! தமிழகத்தில் பரவலான அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலை தூக்காமல் காப்பாற்றப்பட்டதில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் அமைதியை விரும்பும் மற்ற அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டுள்ளது.

விசரூபத்தை தடை செய்யக்கோரி பலமுனை கண்டன தாக்குதல்கள் பத்திரிகை செய்தி மூலமும், இணையதளங்கள் மூலமும், ஒலி ஒளி ஊடகங்களிலும் உரக்க ஒலித்தாலும். முஸ்லீம்களாகிய நாம் செய்ய வேண்டியவைகள் நிறைய உள்ளது. 
  • காம கூத்துகள், வன்முறை வெறியாட்டங்கள் நிறைந்த சினிமாவை வெறுத்த முஸ்லீம்கள் எத்தனை பேர்.?
  • சினிமாவோடு சம்பத்தப்பட்ட பெயர் தாங்கி முஸ்லீம்களின் சாதனையைக் கண்டு பெருமிதம் கொண்டவர்கள் பலராகவே இன்றைய முஸ்லீம்கள். உதாரணமாக ஏ ஆர் ரஹ்மானின் சினிமா இசைக்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்? சினிமா கூத்தாடிகளுக்கு துணை நிற்கும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தும் ஆனந்த கண்ணீர் விட்டவர்களின் முஸ்லீம்களே அதிகம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
  • சினிமா பாடல்கள், சினிமா பாடல் தொடர்பான டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்காத, கேட்காத, வெறுக்காத முஸ்லீம்கள் எத்தனை பேர்?
இப்படி சினிமாவோடு தொடர்புபடுத்தி கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கலாம். சினிமா நம்மை எவ்வளவு மூடர்களாக்கி விட்டது சிந்திருக்கிறோமா? ஆனால் முஸ்லீம்களாகிய நாம் பல சந்தர்பங்களில் உணர்ச்சிவசப்படுகிறோமே தவிர சிந்திக்க தவறுகிறோம்.

“முஸ்லீம்களும் இஸ்லாமிய சினிமா எடுக்க வேண்டும்” என்று சகோதரர் ஆளூர் நவாஸ், இலங்கையை சேர்ந்த ஓர் அமைப்பும் முயற்சி செய்து வருகிறார்கள். ஷியாக்கள் எடுக்கும் இரானிய சினிமாக்களை இஸ்லாமிய சினிமா என்று உதரணம் காட்டி, இஸ்லாமிய சினிமா அவசியம் என்று நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இஸ்லாம் வெறுத்த பொய்யான கற்பனை, நடனம், இசை, நகைச்சுவை இல்லாமல் சினிமா அன்மைகாலத்தில் சாத்தியமா, மக்களிடம் சென்றடையுமா? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், நடிப்பு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.

(ஒரு தடவை) நபியவர்களிடம் ஸபியா இப்படி இப்படி என்று அவரை உயரமற்றவர் எனச் சொல்லிக்காட்டினேன். அதற்கவர்கள் 'நீங்கள் இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச் செய்து விடும் என்று சொன்னார்கள். (ஒரு தடவை) நபியவர்களிடம் ஒருவரின் செயலை செய்து காட்டினேன். ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும் நான் விரும்பமாட்டேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, ஆதாரம்:அபூதாவூத்-4875

இந்த ஹதீதில் இரண்டு விசயங்கள் புலப்படுகிறது.

1. அன்னை ஆயிசா(ரழி) அவர்கள் அன்னை ஸபிய்யா(ரழி) அவர்கள் இப்படி இருப்பார்கள், அப்படி இருப்பார்கள் என்று சொல்லி செய்து காட்டியதை வன்மையாக கண்டிக்கும் விதமாக, ஆயிசா(ரழி) அவர்கள் சொன்ன வார்த்தையைக் கடலில் கலந்தால் கடல் நாற்றமெடுக்கும் என்று கடுஞ்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஒருவரை போன்று நடித்து காட்டுவதையும், பழித்துக்காட்டுவதையும் இங்கு நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

2. அன்னை ஆயிசா(ரழி) அவர்கள் ஒருவரை போல் நடித்து காட்டியபோது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ஒருவர் போல் நடித்து காட்டுவதற்கு எனக்கு எவ்வளவு தான் (இவ்வுலகில் செல்வமாகவோ, பணமாகவோ) எனக்கு கிடைத்தாலும் நான் அதை விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நடித்துக்காட்டுவதை விரும்பவில்லை, வெறுத்துள்ளார்கள் என்பது நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

நம்முடைய உயிருனும் மேலான நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறர் நடிப்பதை தடுத்துள்ளார்கள், தானும் பிறர் போல் நடித்துக் காட்டுவதை வெறுத்துள்ளார்கள் என்று ஹதீஸின் மூலம் அறிந்த பிறகும், நடிப்போடு தொடர்புடைய இசை, சினிமா, சீரியல், நகைச்சுவை காட்சிகள் என்று நவீன சைத்தானிய ஊடகத்திலிருந்து நம்மை தூரமாக்கினால் மட்டுமே சினிமா என்ற கேடுகெட்ட ஊடகத்தை அழித்தொழிக்க வலுவான சக்தியாக முஸ்லீம்கள் உருவாக முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் விரும்பியதை விரும்பி செய்பவனே உண்மை முஸ்லீமாக இருக்க முடியுமே தவிர, நபி (ஸல்) அவர்கள் விரும்பாத, வெறுத்த செயல்களை விரும்பி செய்பவன் உண்மை முஸ்லீமாக இருக்க முடியாது என்ற கருத்தை இங்கு உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

குர் ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் காட்டித்தந்த தூய வழியில் நம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டால் மட்டுமே அல்லாஹ்வின் நல்லருள் கிடைக்கும். அல்லாஹ் நம் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக.

இந்தப் பதிவை படிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி,  சினிமா பார்ப்பதால் குறைந்தபட்சம் 5 நன்மைகள் உங்களால் கூற முடியுமா?

விரும்பினால் கருத்துப் பெட்டியில் பதில் தரலாம்.

M.தாஜுதீன்

20 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எடுத்திருக்கும் விஸ்வரூபத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறவய்ங்க அத்தனை பேரையும் பார்க்கும் போது (பாவம்) அடுத்தடுத்து வரும் காலங்களில் வருந்தப் போகிறார்கள் !

"அட! டா ! வட போச்சே'ன்னு மரத்தடியில உட்கார்ந்து இருக்கிறவங்களாத்தான் தெரியுறாய்ங்க !

நேற்று இரவு சகோதரர் பி.ஜே. அவர்களின் உரை (சினிமாக்காரர்களுத்) தேவையான காட்டமானதாக இருந்தது (உண்மைகள்). அவ்வாறு அவர் பேசியது இந்த தருனத்தில் மிக அவசியமே ! நிறைய பேர் மறந்து இருக்கக் கூடிய விஷங்களையெல்லாம் பட்டியிலிட்டார்.

அவர் சொன்னதில் சினிமாப் பிரியர்களான அனைவருக்குமான செய்தியும் உள்ளடக்கம் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விசரூபம் பற்றிய வீரிய கருத்தாக்கம்!
இன்ஷா அல்லாஹ் இனி திருந்துவார்கள் என நம்புவோம்.
தீமை பற்றி கேட்டால் எழுதி தள்ளலாம்.ஆனால் நன்மை என்னா'னு கேட்டால் அவனுகளுக்கு மட்டும் தான்.நல்ல காசு பார்க்க கல்யாணம் எனும் நெறிமுறைக்கு அப்பாற்பட்டு கண்டதையும் டேஸ்ட் செய்ய,முதலமைச்சர் கனவு காண என அவன்களின் சுய நன்மையை மட்டுமே அடுக்கி சொல்லலாம்.

Yasir said...

யூதர்களிடம் “இஸ்லாமிய எதிர்ப்பு” நிதியை பெற்று,அதனைக்கொண்டு படமெடுத்து, "war on muslims" என்ற அமெரிக்காவின் திட்டத்திற்க்கு துணைபோய், முஸ்லிம்களின் மேல் கறையை படிய வைக்க நினைக்கும் உன்னைபோன்ற கலைக்கூத்தாடிகளை படிய வைப்போம் கமல்,இஸ்லாத்திற்க்கு எதிராக கிளம்பி இருக்கும் இந்த ”மீடியா தீவிரவாதத்தை ” மண்ணோடு மண்ணாக மக்கிப் போகச்செய்வோம் அல்லாஹ்வின் உதவியால் விரைவில்

KALAM SHAICK ABDUL KADER said...

"சீரழிய சினிமாவைப் பாருங்கள்” என்ற நூலை என் இளம்வயதில் படித்துள்ளேன்; இன்று அதைவிட நுணுக்கமாகவும், ஆழமாகவும் அன்புத் தம்பி தாஜுதீன் அவர்களின் இவ்வாக்கம் எனக்குத் தெரிகின்றது. “அக்னிக் குஞ்சு” என்ற அடைமொழியைக் கவிவேந்தர் அவர்கள் இட்டதன் காரணம் நன்றாகப் புரிந்து கொண்டேன்; உண்மையில் இவ்விளம் எழுத்தாளரின் இரத்த ஓட்டம் போலவே, இவரின் எழுத்தோட்டமும், எண்ணவோட்டமும் மிகவும் துடிப்பானவைகள்; அத்தனையும் படிப்பினைகள்! திரைப்படத்துறையில் பாடல் எழுத வாய்ப்பளிக்கப்பட்டும், தீமைகட்குத் துணைபோவதில் அடியேனுக்குக் கிஞ்சிற்றும் விருப்பமில்லை என்பதால் எவ்வளவு பேரும், புகழும் , பணமும் கிடைத்தாலும் அப்பணியைச் செய்திட மனம் ஒப்பவில்லை. இவ்விடயத்தில் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்கள் எனக்கு முன்னுதாரணமாகப் படுகின்றார்கள்.
இளைய சமுதாயம் இச்சினிமாவால் சீரழிவதைக் கண்கூடாகக் கண்டு வேதனைப்படுகின்றோம்!

அதிரை சித்திக் said...

ஏதாவது அறிவு பூர்வமான சிந்தனை கொண்டு தடுக்க வேண்டிய துறை
சினிமா துறை ...எப்படி .. என்பதை சிந்திப்போம் ..உலகெங்கும் பரவி
கிடக்கும் சினிமா கலைஞர்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறார்கள்
மிக விரைவில் அழிய போவது சாத்தியமே

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

சமீபகாலமாக எனது நெருங்கிய நன்பர்களிடம் சினிமாவை பார்ப்பதர்காக 2 1/2 மணி நேரம் படத்தில் ஏதோ ஒரு விஷயத்திற்காக லயித்து இருக்கும் பொழுது அல்லாஹ்வை முழுவதுமாக நினைவிழக்கச் செய்யும் ஓர் இடமாகத்தான் தியேட்டர்கள் இருக்கிண்றது என்பேன்! அப்படி ஓர் இடத்திற்க்கு நாம் செல்லவேண்டுமா?கேல்வியும் கேட்பேண் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராது நான் இவ்வளவு தைரியமாக கேட்க காரனம் நான் சினிமா பார்ப்பதை விட்டு 1 வருடங்களாகிறது.
பக்கத்து வீட்டு மாற்றுமத நன்பர் ஓர் இஸ்லாமியர் வீட்டிற்க்கு வந்து எனது வீடு பழுதாகி விட்டது இப்பொழுது மழை காலமாக இருப்பதால் வீடு முழுவது ஒழுகுகிறது ஆகையால் இன்று ஒரு நாள் மட்டும் தங்கள் வீட்டில் எனது மகளின் பிறந்த நாள் பார்டியை கொண்டாடி விட்டு அப்படியே எனது தெய்வத்தின் சிலையை வைத்து வழிபட்டுவிட்டு செல்கிறேண் என்று அனுமதி கேட்டாராம் உடனே அந்த இஸ்லாமியருக்கு கோபம் வந்து என்ன கேட்கிறாய் முட்டாலே என்மார்கத்தில் நீ சொன்ன விஷயங்களுக்கு அனுமதித்தால் எனக்கு எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா? என்று கோபப்பட்டு அவரை துரத்தி விட்டாராம்.
பொருமையாக அந்த மாற்று மதத்து நன்பர் சொன்னாராம் உங்கள் வீட்டில் இருக்கும் TVல் நான் கேட்ட அத்துனை விஷயங்களும் தினம் உங்கள் hall ல் நடுவில் நடந்தேருகிறதே இதர்க்கு உங்கள் மார்க்கம் என்னசொல்கிறது? என்று கேட்டாராம். நம்மில் யாராவது பதில் வைத்திருக்கிண்றீர்களா????
அல்லாஹ் வின் உதவிகொண்டு நம் வீட்டில் இருக்கும் TVயை அப்புறப்படுத்தினால் பதில் கிடைத்துவிடும் அல்ஹம்துலில்லாஹ் நான் அதை செய்து விட்டேன்

sabeer.abushahruk said...

சிறப்பான ஆக்கம்.

வாழ்த்துகள் தம்பி

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

விஸ்பரூபத்திற்க்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்று கூடி கைகோர்த்து நிற்பதை கண்டால் உள்ளம் பூரிக்கிறது[thanks to kamal]ஒன்று சேர்த்தமைக்காக.
இதில் ஓர் இஸ்லாமிய இயக்கம் மட்டும் இதில் சேரவில்லை குரல் கொடுக்கவில்லை காரனம் அவர்கள் சினிமாவே பார்க்கக்கூடாது என்று சொல்லும் தப்லீக் எனும் உன்னத இயக்கம்

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சினிமா பற்றிய விளக்கம் அருமை. பெரும்பால மக்கள் அதன் கற்பனையான ஒரு போலிக்கவர்ச்சி மாயையில் சிக்கித்தங்கள் வாழ்வினை மனம்போன போக்கில் விட்டுவிட்டுள்ளனர். இதன் விளைவுதான் இளைய சமுதாயம் சீர்கெட காரணம். ஆனால் இந்த கூத்தாடிகள் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல் தங்கள் தவறை மறைத்து உயர்தரமான கலாச்சாரத்தின் மீது போலிக் குற்றம் சுமத்துகிறார்கள். நடுனிலையான மக்களுக்கு உண்மை எதுவென்று நன்றாக புரியும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமையான பதிவு.கூத்தாடிகளுக்கு மட்டுமல்ல டிவி வைத்துக் கொண்டு அதில் முழு ஈடுபாடு கொண்டு சினிமாவையும் நாடகத்தையும் தினம் பார்த்து வரும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும் நன்றாக செருப்படி தந்திருக்கிறீர்கள் சகோ தாஜ் .வெல்டன்

Ebrahim Ansari said...

தம்பி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தாஜுதீன் அவர்களின் எழுத்தில் இத்தனை எரிமலையின் இயல்பா? பல காலங்களாக உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த இந்த எழுத்தின் நெருப்புக் குழம்புகள் இப்போது வெடித்து சிதறி இருக்கின்றனவா?

மற்றவர்களுக்கு போதிக்கும் முன்பு நாம் திருந்த வேண்டியது நிறைய இருக்கிறது. முகநூலைப் பாருங்கள் . கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் நடைபெற்று வருகிறது. வார்த்தைகளின் வீரியங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பாக உணர்வுகளைப் புண் படுத்துவதாகவும் - தூண்டிவிடுவதாகவும் அமைந்து இருக்கின்றன. எதிர்காலத்தை எண்ணி அச்சமாக இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்காக ஒரு நாடே எழுத்துப் போரில் ஈடுபட்டு இருக்கிறது.

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ZAKIR HUSSAIN said...

கமலஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும், இத்தனை காலம் தொப்பி போட்டு நோன்பு கஞ்சி குடித்து, தேர்தல் சமயங்களில் மட்டும் கர்சீப்பில் தலையை மூடி ஒட்டு கேட்கும் பன்னாடைகள் இன்று எப்படி முஸ்லீம்களின் உணர்வுக்கு எதிராக அறிக்கை விடுகிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. இந்த படம் வராவிட்டால் நம்மோடு சேர்ந்து பழகும் பாம்புகளை தெரிந்து கொள்ளாமலேயே காலத்தை ஓட்டியிருப்போம்.




அப்துல்மாலிக் said...

படத்தை பார்க்கவிடாமல் தடுத்துட்டாய்ங்களே என்ற கோபம்தான் இன்று அனைவரும் கமலுக்குஆதரவாக குரல் கொடுக்க வெச்சிருக்கு. இதுலே கூத்து என்னான்னா கமலை பிடிக்காதவன் கூட ஆதரவா குரல் கொடுக்கான் நாளைக்கு அவன் தலைவனும் இது மாதிரி அவஸ்தை பட்டால் அதுக்கு எச்சரிக்கையா இருக்கலாம்...

சினிமாவை பற்றிய ஆதங்கம் அருமை தாஜ்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்டு ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

//இந்தப் பதிவை படிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி, சினிமா பார்ப்பதால் குறைந்தபட்சம் 5 நன்மைகள் உங்களால் கூற முடியுமா?//

என்னுடைய இந்த கேள்வி கடந்த 15 வருடத்திற்கும் மேல் நட்பு வட்டாரத்தில் கேட்டு வரும் கேள்வி. இது வரை பதில் இல்லை. இதுவே போதும் சினிமா நல்லவை சாதித்ததைவிட தீயதையே சாதித்துள்ளது என்று..

மீண்டும் இந்த வரிகளை மட்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

நம்முடைய உயிருனும் மேலான நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறர் நடிப்பதை தடுத்துள்ளார்கள், தானும் பிறர் போல் நடித்துக் காட்டுவதை வெறுத்துள்ளார்கள் என்று ஹதீஸின் மூலம் அறிந்த பிறகும், நடிப்போடு தொடர்புடைய இசை, சினிமா, சீரியல், நகைச்சுவை காட்சிகள் என்று நவீன சைத்தானிய ஊடகத்திலிருந்து நம்மை தூரமாக்கினால் மட்டுமே சினிமா என்ற கேடுகெட்ட ஊடகத்தை அழித்தொழிக்க வலுவான சக்தியாக முஸ்லீம்கள் உருவாக முடியும்.

ஒன்று மட்டும் நிச்சயம் நபி (ஸல்) அவர்கள் விரும்பியதை விரும்பி செய்பவனே உண்மை முஸ்லீமாக இருக்க முடியுமே தவிர, நபி (ஸல்) அவர்கள் விரும்பாத, வெறுத்த செயல்களை விரும்பி செய்பவன் உண்மை முஸ்லீமாக இருக்க முடியாது என்ற கருத்தை இங்கு உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

Yasir said...

Great Judgement...!!! In India

புதுடில்லி: பெற்ற மகளை கற்பழித்து, அந்த குற்றத்திற்கான தண்டனை காலத்தில், பரோலில் வெளியே வந்து, மனைவியையும், மகளையும் கொலை செய்த கொடியவனுக்கு, ஐகோர்ட் வழங்கிய மரண தண்டனையை, சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்தது. 1999ல், தான் பெற்ற மகள், மைனராக இருக்கும் போது, தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதை கண்ட தாய், கணவன் மீது போலீசில் புகார் தெரிவித்தார்.சிறையில் அடைக்கப்பட்ட, இப்போது, 48 வயதாகும், மொகிந்தர் சிங் என்ற அந்த கொடூரனுக்கு, 2001ல், ஆயுள் தண்டனை விதித்து, பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவிட்டது. தண்டனை காலத்தில், 2006ல், பரோலில் வெளியே வந்த அவன், கற்பழித்த மகளையும், சாட்சியம் கூறி தண்டனை பெற்று தந்த மனைவி, வீணாவையும் வெட்டி கொன்றான்.இதையடுத்து, அவனுக்கு, பஞ்சாப் ஐகோர்ட், மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அவன் மேல் முறையீடு செய்தான். அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா, பி.சதாசிவம் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன், கடந்த, 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தனர். அது குறித்து அவர்கள் வழங்கிய தீர்ப்பில், "இந்த வழக்கு ஒன்றும், அரிதிலும் அரிதானது அல்ல; தண்டனை பெற்று தந்த மனைவியையும், மகளையும் பழிவாங்கவே அவர்களை கொலை செய்துள்ளான். இதில், அரிதான செயல் எதுவும் இல்லை. எனவே, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக் கப்படுகிறது' என தெரிவித்தனர்."மிகவும் கொடூரமான முறையில், மைனர் மகளை கற்பழித்து, பின் அந்த பெண்ணையும், மனைவியையும் கொலை செய்தவன் மீது சுப்ரீம் கோர்ட் கருணை காட்டியுள்ளது சரியான தீர்ப்பல்ல' என, பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636529

Riyaz Ahamed said...

சலாம், அருமையான மிக முக்கிய பதிவு,இனியவது இந்த கூதாடிகளின் குத்தாடங்கலை தூக்கி எரியனும் நம் சமுதாயம்

KALAM SHAICK ABDUL KADER said...

கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியின் சொல்புதிது நிகழ்ச்சியில் பேராசிரியர்.முனைவர். ஹாஜா கனி அவர்கள் விஸ்வரூபம் தடை பற்றி விளக்குகிறார். அவசியம் காண வேண்டிய வீடியோ


http://www.youtube.com/watch?v=zDP7KgrJtKU

KALAM SHAICK ABDUL KADER said...

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் பார்வையில் விஸ்வரூபம்............!!

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள்.
கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும்
ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே
இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு
சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது.
என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம்
மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே
இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான்
உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும்
பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில்
இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன்.
விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான்
ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல்
குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப்
படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர்
என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து
வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன
தோன்றும்?

இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில்
வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று
பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில்
குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும்
பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத்
தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை
அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும்
சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும்
சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு
(Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே
விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன்
கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி
இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால்
நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு
இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும்
கேவலப்படுத்தியது.

வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி
வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி
சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும்
சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க
ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த
குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு
வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி
இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல்
உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி
உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப்
படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம்
எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய்
விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி
போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு
வருத்தத்தை அளிக்கிறது…

(விஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய கட்டுரை.இப்படி
எழுதிய இவரும் இன்றுமுதல் ஒருவேளை கலாசாரதீவிரவாதி என்று
அழைக்கப்படலாம்....)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு