Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் மழையாமே ! - குடைக்குள் சின்னஞ்சிறு மொட்டு ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 11, 2013 | , , , ,


அழகிய அதிரைத் தெருக்கள், அசர வைக்கும் வானிலை மாற்றம் தந்த சாந்தமே அந்த தூறலோடு தாலாட்டிக் கொண்டு வந்த அட! மழை.... !

மழை என்றால் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை என்ற தண்ணீரில் எழுதி வைக்காத விதியொன்று மனதில் ஆட்கொண்டு தெருக்கோடியையும், அன்னாந்து வாணத்தையும் பார்க்கும் தருணம் ஒரு சுகமான சுகந்தமே !

எது எப்படியிருந்தாலும், என் பள்ளிக்கூடம் செல்ல இந்த மழை என்ன! எந்த மழையும் தடையில்லை! என்று பள்ளிச் சீருடையில் சின்னஞ்சிறு மொட்டு ஒன்று வெறிச்சோடி கிடக்கும் தெருவை விழித்தெழ வைக்கும்  எழில் நடை !

பள்ளிக்கூட காலங்களை அசைபோட வைக்கும் குடைக்குள் இந்த மொட்டு ! அழகிய சிட்டு !

இனி உங்கள் ரசனைப் பார்வை எப்படி !?


புகைப்படம் : அபூமஹ்மூத்
அதிரைநிருபர் பதிப்பகம்

16 Responses So Far:

sabeer.abushahruk said...

மழை
பெய்துகொண்டிருக்கிறது
சாலை
நெய்து கொண்டிருக்கிறது

துளிகளைக் கோத்தெடுத்து
சிறு சிறு ஓடைகளை
நெய்து கொண்டிருக்கிறது சாலை.

சிறுமிக்குத்
துணையாக மழை

கார்ப்பரேஷனுக்கோ
சம்பளம் வாங்காத
வேலைக்காரனாய்
தெருக்களைக்
கழுவிக்கொண்டிருக்கிறது மழை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கார்ப்பரேஷனுக்கோ
சம்பளம் வாங்காத
வேலைக்காரனாய்//

அதிரை தே.நி.பே. மழையால் கார்ப்பரேஷனாக மாறிவிட்டதா ?

இருப்பினும்,
குப்பையும் தொப்பையும்
இல்லாத தெருச் சாலை !
அழகுதான் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று இங்கிலாந்து அடித்ததோ 325
இன்றே இந்த மழை ராஜ்கோட்டில்
இடியுடன் பெய்யாதா?

என்று ஏங்கி நிற்கிறான் இந்திய கிரிக்கெட் ரசிகன்... (பாவம் இவய்ங்க அடிப்பாய்ங்களா ?)

Ebrahim Ansari said...

மழை - குடைக்குள் மலர் . மலர் என்றாலே அழகு. மழையில் மலர். அழகுக்கு அழகு.

பேசும்படம் இப்போவெல்லாம் பேசும் அறிவியலாகிவிட்டதால் பல படங்கள் இப்போதெல்லாம் அழகாகப் பேசத்தொடங்கி இருக்கின்றன. பாராட்டுக்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

நடுத்தெருவின்
நடுத்தெருவில்
நற்றளிர் நடை
நடுங்கும் கையில் குடை

பிஞ்சுக் கையில்
மஞ்சள் பையில்
புத்தகம் யாவும்
மொத்தமாய் நனைய
குடையின் பிடிதளர
நடை வேகமாய்
உடை நனைந்த
மழைக்காலம்
மனத்தினில்
கனாக்காலம்

KALAM SHAICK ABDUL KADER said...

மழலை கழறும் குழலின் பிழிவே!
அழகும் இழியும் பொழிலின் நிழலே!
விழிகள் தழுவ விழையும் எழிலே!
செழிவு வழிய வழங்கு பொழிவே!
பழைய வழிகள் முழுதும் அழிய,
உழவின் மொழியே! எழுக மழையே!


இந்தப் பாடலின் உட்பொருளாக நான் எழுதிய வண்ணம்: மழலைகள் பேசுகின்ற அந்தக் குரல் போன்ற புல்லாங்குழலின் சாரமே! அது விளைகின்ற இடமான, அழகு சொட்டும் தோட்டதின் நிழலே! நம்முடைய விழிகளிரண்டும் என்றும் தழுவுவதற்கு விழைகின்ற அத்தோட்டத்தின் எழிலே! அவ்வெழிலும் செழித்து பொங்கி வழிய, வானம் வழங்குகின்ற பொழிவே! எங்கள் மனித இனத்தின் பிழையான பழைய வழிகள் அழிந்து இனம் மேலோங்க, உழவின் மொழியான மழையே! நீ எழுக!

KALAM SHAICK ABDUL KADER said...

சில்லென்றக் குளிரினால்
சிதறுமே மழைத்துளி
நில்லாத பிரசவ
நெடுவலி(யில்) முகிலினம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இது நடுத்தெரு மட்டுமல்ல அதன் நடுப்பகுதி கூட!
பால்கனி வீட்டுக்கெதிரே அமைந்துள்ள பிரதான சந்தில் என் வீடு உள்ள பகுதி,
என் மணநாளில் நண்பர்களால் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர் அந்த பால்கனியுடைய வீட்டின் சுவர்,
இன்னும் EPS School அதிபர் மர்ஹூம் அபுல்ஹசன் காக்கா அவர்களால் எங்களுக்கு நல் உபதேசம் பெற்ற பகுதி (மார்க்க உபதேசம் அல்ல, காரணம் அவொ நஜாத் காரவொ என எங்களால் முத்திரை குத்தப்பட்ட ஆள்)
இன்னும் MB மாமா அவர்களின் இனிய புன்முறுவலையும் அடிக்கடி பார்த்த பிரதான பகுதி,
இப் பகுதியிலிருந்து மனம் விரும்பியபடி 4,5 பள்ளிவாசல்களுக்கு சற்றே அடைய முடியும்.
இன்னும் நிரைய்ய்ய்ய்ய எழுதலாம். சுருங்கச் சொன்னால் அந்த வீட்டால் இன்று தெருவும் சுருங்கிற்று. உண்மை படைத்தவனுக்கே வெளிச்சம்.
-----------------------------------------------------------------------------------

ஹிஜ்ரி 1434
ஸபர் பிறை 29

ZAKIR HUSSAIN said...

காலயில் 7 மணிக்கெல்லாம் சைக்கிளில் போய் S.K.M ஹாஜாமுஹைதீன் சாரிடம் போய் ட்யூசன் கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் கடந்து சென்ற ரோடு இது. போட்டோவைப்பார்க்கும்போது அந்த காலம் [ உடல் நம் சொல் கேட்கும் காலம் ] வராதா என ஏங்க வைக்கிறது.

இப்னு அப்துல் ரஜாக் said...

ரஹ்மத்தான மழை
பரக்கத்தான பிள்ளை
அல்லாஹ் அருள் செய்யட்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

\\அந்த காலம் [ உடல் நம் சொல் கேட்கும் காலம் ] வராதா என ஏங்க வைக்கிறது.\\

உண்மையும் அதுதான் உளவியல் மருத்துவரே! எல்லார் மனத்திலும் “கனாக்காலம்” பதிய விட்டார் இம்மழைக்காலம் பதிய விட்ட அன்பர்.
இப்பொழுதெல்லாம் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்காவைப் பார்க்கச் செல்லும் பாதையும் இவ்வழி;அதனால் எனக்குக் கிட்டியதோ செம்மொழி மற்றும் நல்வழி.

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
அப்துல்மாலிக் said...

தூரத்தில் ஒரு ட்ராக்டரோ அ லாரியோ நிற்பது பீதிய கெளப்புதே..

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

விடாமுயற்சியின் விடியல்
விடாமழையிலும் குடையில்!

தடையிலாப் பயணம்
நடையிலே கவனம்!

படிப்பில் தீவிரம்
துடிப்பில் தெரியும்!

பாடம் படிக்கும்
இச்சிறுமி
பாடம் கற்பிக்கும்
ஆசிரியையாய்

“மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்”

வாழ்த்துகிறேன் உன்னையும்
வளர்த்தெடுத்த பெற்றோரையும்
கற்பித்த ஆசிரியையும்

சோம்பல் என்னும்
சாம்பல் போக்கித்
திறமைத் தீயைத்
திறம்படத் தூண்டும்
வேகம் உன்றன் நடையில்!

இப்படித்தான்


இடியாய்ச் சத்தமும் வாழ்விலே
...இன்னலாய் வந்திடும் போதில்
துடியாய்த் தோல்வியில் துவண்டிடத்
....தோன்றிடும் வேளையில் நீயும்
பிடியாய்க் கொள்வது துணிவுடன்
....பிடித்தவுன் குடையுடன் கூடி
மடியா நோக்கிலே படிப்பினை
...மட்டுமே நினைத்தலைப் போலே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு