Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் - தொடர்கிறது ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 01, 2013 | ,


சிந்திக்கத் தூண்டும் சித்திரம் தொடர் வரிசையில் கண்கவரும் அழகிய மற்றுமொரு புகைப்படம்.

தண்ணீரில் எழுத முயன்று அதனை அப்படியே வாசிக்க முயற்சித்தவர்களுக்கு அது ஒரு சுகமான அனுபவமே. வண்ணங்களை தூரிகை தொட்டு சித்திரம் வரைந்த கைகளுக்குத் தெரியும் அங்கே எண்ணங்களை கலந்த பின்னரே வண்ணங்களும் உயிரோட்டம் பெருகும் என்பது.

கண்களில் சிக்கிடும் காட்சிகளை கச்சிதமாக படமெடுப்பது ஒரு பொழுதுபோக்கு என்றால் அதனை ரசனை கொண்ட பார்வை சேர்க்கும் அழகோ அழகு !

மைதொட்டு வரைய வெண்மை படர்ந்த வானத்தை அன்னாந்து பார்க்கத் தேவையில்லை, வழியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரே போதுமென்று சொல்லும் கண்ணாடிப் பார்வைச் சித்திரம்.


ஷஃபி அஹ்மது

19 Responses So Far:

Unknown said...

Is that a photo of a Adirai guy? Unbelievable n Amazing!!! It's good that AN brings out te talents of all corners.

KALAM SHAICK ABDUL KADER said...

வாவ்..!

நீர்ப்படமா? நிழற்படமா?
நிஜத்தை நீரடியில்
நீர்படமா(ய்) எடுத்ததுமே
நிஜமாய்க் காணுகின்றோம்!

செந்தமிழில் சந்தம்
சீர்கவிக்குச் சொந்தம்
இந்தநிழற் பிடிப்பு
ஈடிலாவுன் துடிப்பு!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படம் நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள்!
-----------------------------------

வருசம் 1434, ஸபர் மாதம், பிறை 18

ZAKIR HUSSAIN said...

நல்ல ரசனையை வெளிப்படுத்தும் போட்டோ. இது எந்த இடம் ?

Unknown said...

It was taken @Ajman. Thanks for all ur kind comments!!!

Unknown said...

அஸ்ஸலாமு அலைகும்
என்னாம்மா சஃபி நல்லா இருக்கியாப்பா படம் நன்னா இருக்கே. எப்புடி இதெல்லாம் ஒகே ஒகே ப்பா. படம் பொய் பேசலப்பா!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அருமையான பதிவு.
அருமையான புகைப்படத் தொகுப்பு.
வாழ்த்துகள்.

எனக்கு தெரிந்த புகைப்பட கலை, "அழகான படங்கள் எடுக்க"..

1 - முடிந்த வரையில் இயற்கை ஒளியில் படம் எடுக்க முயலுங்கள். செயற்கைத் தனமற்ற நல்லதொரு புகைப்படம் கிடைக்கும்.எதையும் சற்று நுணுக்கமாக பார்க்க பழகுங்கள்.

2- ஒவ்வொரு படம் எடுக்கும் முன்னும், உங்கள் கேமராவில் இருக்கும் modeஐ சரியாக உபயோகிக்கலாம். க்ளோஸப்பில் பூக்கள் எடுக்க, தூரத்தில் இருக்கும் பொருள் எடுக்க, இரவில் படம் பிடிக்க என்று வரிசையாக இருக்கும் பொத்தான்களை உபயோகிக்கலாம். ஷட்டர் வேகம், aperture இவற்றின் நுணுக்கங்கள் புலப்படும் வரை, கேமராவில் உள்ள இந்த வசதிகள் கைகொடுக்கும்.

3- வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது. கிடைக்கும் வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.க்ளிக்கரை, முழுதுமாக அமுக்காமல், பாதி அமுக்கிய நிலையில் (half-press) நீங்கள் எடுக்க நினைக்கும் frameஐ, focus செய்து கொள்ள முடியும். நீங்கள் நினைத்த காட்சி தெரிந்ததும், மீதிப் பாதியையும் அமர்த்தி, படத்தை க்ளிக்கலாம்.

5. புகைப்படம் எடுக்க காலை மற்றும் மாலை வெயில் நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.

6. ஒளிவிழும் கோணமும் மிக முக்கியமான ஒன்று. ஒளி விழும் கோணம் தவறாக இருந்தால் வெகு அழகாக வரவேண்டிய புகைப்படம். மிக அசிங்கமாக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

7. புகைப்படத்தை மெருகேற்றும் என்று நீங்கள் நினைத்தால் ஒழிய முடிந்த வரையில் நிழல்களை தவிர்க்க பாருங்கள்.

8. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்.

9. அதிகவெளிச்சம் சில சமயம் glare effect உருவாக்க கூடும். முக்கியமாக மனிதர்களை எடுக்கும்போது நெற்றி மற்றும் கன்னங்கள் புகைப்படத்தில் அதிக வெளுப்புடன் வந்து புகைப்படத்தையே கெடுத்துவிடும்.

இந்த புகைப்பட நுணுக்கங்களை முன்பு எனக்கு ஈமெயிலில் படித்த தகவல் இப்பொழுதுள்ள ஃபோடோ கிராஃபர்களுக்கு பொருந்துமா என்பது எனக்கு தெரியாதுங்கோ....அதை நம்ம "மூன்றாம் கண்" ஹமீது காக்கா அவர்கள் தான் விளக்கனும்...

Shameed said...

பில்டிங்கின் கீழ் பாதியை படமாகவும் மேர்ப்பாதியை நீரில் பிம்பமாகவும் காட்டிய விதம் கேமரா நிபுணர் என்பதை காட்டுகின்றது

Shameed said...

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

//8. எச்சரிக்கை: ஒரு பொழுதும் உச்சிவெயில் நேரத்தில் அல்லது அதிக சூரியவெளிச்சம் உள்ள நேரத்தில் நேரடியாக சூரியனை புகைப்படம் எடுக்க முயலாதீர்கள். அது கேமராவிற்கும் உங்களுக்கும் தீதாக அமையலாம்//

சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வைவ்லெட் (புற ஊதா கதிர்கள்) வேவ் கேரமாவில் உள்ள லென்சை செயலிழக்க செய்துவிடும் இதை தவிர்க்க தற்போது UV என்ற பாதுகாப்பு லென்சுகள் நிறைய கிடைக்கின்றது


இந்த சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா கதிர்கள் நம் கண்களில் உள்ள லென்சையும் பாதிக்கும் இதை தவிர்க்கத்தான் நாம் சன் கிளாஸ்பயன் படுத்துகின்றோம்.

இப்படியோ பல விளக்கங்கள் கொடுத்தாள் அதுவே ஒரு கட்டுரை அளவுக்கு வந்து விடும் என்பதால் ஒரு சிறு விளக்கமே இது

Unknown said...

Thank u so much for all ur valuable comments, ideas, and suggestions.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நானும் தான் அப்போ (20 வருசத்திற்கு முன்னாடி) கேமராவில் ஃபிலிம் ரோல் இல்லாமல் நிறைய எடுத்தேன்... (ப்ளாஸ் அடிக்க அடிக்க)

என்ன பன்றது இப்போ இருக்கிறமாதிரி மெமரி கார்டு வசதி அப்போது இல்லையே... :)

நிழற்படங்களின் வரிசையும்
சரியும் சூரியன்,
ஒளிரும் சந்திரன்,
போர்த்திடும் மேகம்,
சிலிர்க்கும் சாரல்,
ஒதுங்கும் அலைகள்...
பற்றிழுக்கும் பசுமை...

இப்படி நீண்டு கொண்டே செல்லும்.. :)

ஷஃபி ! கலக்கல் என்பது பாராட்டு, கலப்படமில்லாதது உம்முடைய சித்திரம் ! அருமௌ !

Yasir said...

போட்டாவின் நேர்த்தியிலயே தெரிகின்றது..சகோ ஷஃபி அவர்களின் திறமை..வாழ்த்துக்கள் தொடர்ந்து தாருங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அருமௌ !//

அருமை' ன்னு அங்கே கொஞ்சம் மை சேர்த்துக்கவும் ! :) ப்ளீஸ் !

இப்னு அப்துல் ரஜாக் said...

பில்டிங்கின் கீழ் பாதியை படமாகவும் மேர்ப்பாதியை நீரில் பிம்பமாகவும் காட்டிய விதம் கேமரா நிபுணர் என்பதை காட்டுகின்றது

sabeer.abushahruk said...

சகோ ஷஃபி,

மேல்பாதி நீரும்
கீழ்பாதி நீரும்
வார்த்தெடுத்த கட்டடம்
பிரதிபலிப்பது
உம் ரசனையை!

இந்த விஷுவல் ட்டேஸ்ட் தொடர வாழ்த்துகள்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். தண்ணீர் ஆடியில் கட்டிடம் தன் அழகை சரிசெய்யும் அற்புதம் கட்டியம் கூறுகிறது சிறந்த காட்சிபடுத்துதலை! நானும் சற்று ஆடி போய்விட்டேன் இதமான இன்ப மயக்கம் தந்த பின்பம் !அ. நி லோகோவும் அலேகா இப்படி வந்திருப்பதும் காட்சி சொறுகளும் தூள்!

Yasir said...

போட்டோ பிரியர்களுக்கு மட்டும்

http://www.blindmanphotos.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு