Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது... 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2013 | , , ,

குறுந்தொடர் : 4
விரிந்து படர்ந்து கிடக்கும் விக்டோரியா ஐலேண்ட் செல்லும் பாதை எழிலாகவும் வனத்துடனும் காணப்பட்டது. விக்டோரியா ஐலேண்ட் பாலம் உலகிலயே நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நான் மட்டும் தனியாக சென்றதால் (‘தல’ என்னுடன் வரவில்லை) “மொபோ” வேண்டாம் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வை மட்டுமே நம்பியவனாக  நன்கறிந்த வாகன ஓட்டியுடன் சென்றேன்.

அவரோ ரொம்ப(வே) நல்லவர் , இண்டியாவை காணவேண்டும் என்பது அவரின் வாழ்நாள் அவாவாம். அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருப்பதாய் கூறினார். எத்தனை பேரிடம் இந்த பிட்டையே போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கின்றார் என்பது தெரியவில்லை.


லெக்கி பெனிசுலாவை நோக்கி பறக்கும் எங்கள் பயணம்…


வழியெங்கும் பச்சைப்பசேல்


ஐலேண்டில் உள்ள மூன்று முக்கிய கட்டிடங்கள்.

போகும் வழிகளெல்லாம் கால்முளைத்த வீடுகள் கடலில் இருப்பதைக் கண்டு என்னோடு வந்த (வாகன)ஓட்டியிடம் கேட்டேன். அவர் “இவைகளெல்லாம் மீனவர்களின் வீடுகள் இந்த கடலே அவர்களுக்கு எல்லாமே, ஆதலால் அதன் மீதே தம் இருப்பிடங்களை அமைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்கள்” என்றார். வக்கனையாக சமைத்து சாப்பிட மற்றவர்களுக்கு மீனை வாரி கொடுக்கும் இவர்கள் வாழ்வு அந்தரத்தில் தொங்குவது கண்டு பரிதாபமாக இருந்தது.


கால்முளைத்த வீடுகள் ஐபோன் பிக்சர்தான் தெளிவா இருக்கா ?

ஒரு வழியாக லெக்கி இலவச மண்டலத்தை அட அதாங்க ஃபீரிஜோன் (free zone) சென்றடைந்தாகிவிட்டது. அங்குமிங்குமான அலைச்சல்களுக்கு பின்னர் ஒரு நிறுவனத்தை கண்டு அது ரொம்பவும் பெரிதாக தெரிந்ததால் அங்கு சென்றோம்.

சந்திப்பின்போது,மெனேஜர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட ஒருவர் “உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்களிடம் சில மில்லியன் டாலர் பணம் உள்ளது நீங்கள் சப்ளை செய்யும் பொருட்களுக்கு பேமண்ட ஆக அதனை நாங்க உங்க அக்கவுண்டுக்கு மாற்றிவிடுகின்றோம்” என்றார். நானும் சந்தோஷமாக ஆஹா! ஒரு திமிங்கலத்தை அல்லவா பிடித்துவிட்டோம் என்று ஒரு செகண்ட சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார் “அதற்கு முன் நீங்கள் 4 கண்டெய்னர் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் அது எங்கள் போர்ட்டை அடைந்தவுடன் நாங்கள் பணத்தை அனுப்பி விடுக்கின்றோம்” என்றார். 

ஆஹா ஹாட்மெயில் அக்கவுண்ட் நான் 1999-ல் தொடங்கினதிலிருந்து வந்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர், செத்துப் போய்ட்டார் என்று படித்து படித்து மனதில் பதிந்திருந்த அந்த பிம்பங்கள் உண்மை தோற்றங்களாக நம் முன்னிருப்பதைக் கண்டு ஆடிப்போய்விட்டேன். சமாளித்துக் கொண்டு நானும் அவரிடம் “துபாய் திரும்பியதும் எங்கள் நிதி ஆலோசர்களிடம் அப்ரூவல் வாங்கிவிட்டு உங்ளைத் தொடர்புக் கொள்கின்றேன்” என்று அவர்களின் வீட்டு வாயிலோடு சொன்னதை மறந்துவிட்டு ‘ஜூட்’ விட்டேன். பெரிய டீமையே அவர் வைத்துக் கொண்டு இதே தொழிலாகத்தான் திரிகிறார் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்திப்பிற்கு பிறகு காதில் கடித்தார்கள்.

இன்னும் சில மார்க்கெட்டுகளைப் பார்க்க வேண்டி உள்ளேயிருக்கும் சில ஏரியாக்களை வட்ட மடித்தோம். வறுமையின் கொடுமையையும், வாடிய முகங்களையும் காண சகிக்காமல் வண்டியை லாகோஸை நோக்கி திருப்பச் சொன்னேன்.


லெக்கியின் லக்கி மார்க்கெட்


பெரும்பாலான மக்களின் காலை உணவு விடுதி இதான்

லாகோஸ் வந்தடைந்ததும் ஒரு சில முன் அனுமதி பெற்ற சந்திப்புக்களை ஹோட்டலிலேயே முடித்துவிட்டு கொஞ்சம் இணக்கமாக நம்முடன் தொழில் செய்ய விரும்பியவர்களின் தகவல்களைத் திரட்டிக்கொண்டு ஹோட்டலை சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னரே காலி செய்து விட்டு ஏர்ப்போட்டில் போய் அமர்ந்துவிடலாம். இந்த ஹோட்டலுக்கு ஏர்ப்போர்ட் எவ்வளவோ மேல் என் தல கூறியதால், அனைத்தையும் பேக் செய்துவிட்டு ஆயத்தமானோம்.

நைஜீரிய காட்டுத்தேன் நல்லது என்பதால் ஒரு கிலோ வாங்கி என் ஹேண்ட லக்கேஜில் வைத்துக் கொண்டேன். ‘தல’ ஒரு 100 நைரா பணத்தை போர்டிங் கவுண்டரில் கொடுத்து எக்ஸிட் பக்கத்தில் சீட் வாங்கிவிட்டார்.


கிளம்புமுன் ஹோட்டலின் சன்னலிலிருந்து எடுத்தது


முர்த்தலா முகம்மது ஏர்ப்போர்ட்டில் புறப்படுமுன் நான், மிஸ்டர் போட்டோ ஜெனிக்க்கு தேவையான அடையாளம் ஏதும் உண்டா ?:)

சுங்க சோதனையில் சுரண்டி எடுத்து விட்டார்கள். எங்க வாப்பா பெயர் உடைய ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் “வாவ்” உன் வாப்பா பெயரும் என் பெயரும் சேம் சொல்லிவிட்டு ஆர் யூ முஸ்லிம்?? என்னிடம் கேட்டார் “ யெஸ்” என்றடவுடன் மாஷா அல்லாஹ்! என்று  மகிழ்ச்சியுடன் அவர் குத்திய ஸ்டாம்பில் எல்லாம் கேட்டிலேயும் கேள்விகள் எதுவும் இல்லாமல் வெளியேறினேன். 

கடைசியில் போர்டிங் போகுமுன் உள்ள செக்கிங்கில் ”தேன்” அனுமதியில்லை என்றனர், ”ஏன்” என்று காது புடைத்து கொண்டு கேட்கும் பழக்கம் இல்லாததால் ”என்ன தீர்வு” என கேட்டேன். அவர்களின் சைகளை புரிந்தவனாக, பெண்னொருத்தி “நீங்க அந்த பெரிய ஆபிஸரைப் போய் பாரும்” என்றார். கம்பீரமாக கன் செக்யூரிட்டியுடன் இருந்த அவரை தயக்கத்துடன் நெருங்கினேன், அவரோ “ஹவ் ஆர் யூ ?” என்றதும் நானும் பதிலளித்துவிட்டு சொன்னேன் ‘தேனை’ப்பற்றி அதற்கும் அவர் ”ஓ எமிரேட்ஸில் அனுமதிப்பது இல்லை” என்றார்.

நான் சொன்னேன் கொண்டு செல்ல வேண்டும் “1000 நைரா கொடுத்தா நேரா விட்டுர்ரேன்” என்றார். பயணிகளின் பாதுகாப்பு இந்த பணத்தால் காம்பரமைஸ் ஆகுதா ? என்று ஆச்சரியப்பட்டு விட்டு “என்னிடம் பணம் இல்லை ஒரு பாடி ஸ்பிரே உள்ளது அதை வேண்டுமென்றால் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள்” என்றேன். 

நமட்டுச் சிரிப்பை சிந்திய அந்த பெரிய ஆஃபிஸர் அதற்கும் இறங்கி வந்து அந்த 3$ மதிப்பு உள்ள ஸ்பிரேயைப் எடுத்துக்கொண்டு ”ஹே வ சேஃப் ஜோர்னி” என்று சொன்னவுடன் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமலே விமாப் பயணிகள் காத்திருப்பு பகுதியை நோக்கி நடந்தேன்.

எமிரேட்ஸில் ஏறியதும் நம் சொந்தவீட்டிற்கு வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு எல்லா பயணத்திலும் ஏற்படுகின்றது.

பயணத்தில் பல நன்மையான / தீமையான விசயங்கள் இருந்தாலும் பல படிப்பினைகளையும்,அனுபவங்களையும்,அல்லாஹ் நம்மை வைத்திருக்கும் உயர்வான நிலையை உணர்த்தி அவனுக்கு நன்றி மேலும் அதிகமாக செலுத்த காட்டித்தந்த நைஜீரியா பயணம் வாழ்வில் மறக்கமுடியாதது.

அல்லாஹ்வின் உதவியால் எல்லா நடைமுறைகளும் முடிந்து என்னுடைய முதல் இரண்டு கண்டெய்னர் ஆர்டர் இதனை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் சைனாவிலிருந்து கிளம்பிற்று,முதல் பயணத்திலயே ஒரு நாட்டில் அதுவும் நைஜீரியா போன்ற நாடுகளில் மொத்த வியாபாரம் கிடைப்பது என்பது சாத்தியம் குறைவு அல்லாஹ்வின் கிருபையால் என் விசயத்தில் அது நேர்மாற்றமாக இருந்தது.

எனக்கு இருக்கின்ற இருபத்தி நாலு மணிநேரத்தில் அலுவலக வேலையும் அனுபவச் சூழலையும் கோர்த்து எழுத அவகாசம் குறைவே, பயணம் மற்றும் மற்ற வேலைச் சூழலுமே இந்த பதிவுக்கான தாமதம்.

அடுத்து எத்தியோப்பிய பயணத்தைத் தொடரலாமா !?

முகமது யாசிர்

18 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

mr.யாசிர் நல்ல உறை நடை அஃதோடு புகைப்படமும் அருமை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பக்குவம் நிறைந்த பயண நடையும் பசுமையுடன் படங்களும் சூப்பரு!
எத்தியோப்பியாவும் எழுதுங்கோ சீக்கினம்!
------------------------------------------------------------------------------------------

ரபியுள் அவ்வல் பிறை 18
ஹிஜ்ரி1434

sabeer.abushahruk said...

ஆஃப்ரிக்கப் பயணம் அமர்க்கலமாக இருந்தது. எத்தியோப்பிய பயணமும் த்ரில்லாகத்தான் இருந்ததா?

அரபு நாடுகளுக்கு மட்டும்தான் பயமின்றிப் போகலாம்போல் இருக்கிறது.

ஃபோட்டோஜெனிக் விஸ்வரூபமா இருக்கே, ட்ரென்டா?

ஸ்மைல் ப்ளீஸ்.

Abdul Razik said...

Always we are hearing the business circumstances of Europe /America and Asian countries. Your business trip is dissimilar, Please script the remaining poor nations business moments. Allah bless and grace u to have a successful trade trip over Africa.

Abdul Razik
Dubai

KALAM SHAICK ABDUL KADER said...

"பெனின்” என்ற இடத்தில் வேலைக்கு அமர்த்துவதாக ஒரு பொய்யான- ஆனால் மிகவும் உண்மையென்று நம்பும் அளவுக்கு எனக்கு இந்த ஆஃப்ரிக்கா நாட்டிலிருந்து அடிக்கடி மின்மடல்கள் வருவதைப் பார்த்து, ஆஃப்ரிக்காவில் திருட்டு வியாபாரம் அதிகம் என்று உணர்கிறேன்; நீங்கள் எப்படியோ அல்லாஹ் உதவியால் நேர்மையானவருடன் வியாபார ஒப்பந்தம் பெற்றது அறிந்து அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன். பயணங்களும், படிப்பினைகளும் கற்றுத் தரும் நுணுக்கங்களைக் கொண்டு நீங்களாகவே ஏற்றுமதி/இறக்குமதி வியாபாரம் செய்யலாமே?

இப்னு அப்துல் ரஜாக் said...

பயண அனுபவத்துடன் ஏற்றுமதி தொழில் சம்பந்தமாகவும் விவரம் தருகிறீர்கள் .படிக்க படிக்க சிகரம் தொட ஆசை வருகிறது.வெல்டன் அருமை சகோ யாசிர்.

அதிரை சித்திக் said...

தேனுக்கு லஞ்சம் ..
நோ மணி ..நோ ஹனி ..
எங்கோ சொல்ல கேட்டிருக்கேன்
யாசிர் பயணத்தில் நிஜமாயிற்றே ..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுவராஸ்யமாக செல்லும் தொடரில் இந்தப் பதிவின் நிறைவில் இடம் பெற்றிருக்கும் படம்... நைஜிரியா ஏர்போர்ட்டை விட்டு வரமாட்டேன்னு சொல்ற மாதிரி ஃபோஸ் தெரியுது.... :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. யாசிரின் ஆப்பிரிக்க ப‌யணப்படங்கள் அதிரை நிருபரில் ஆர்ப்பரிக்கின்றன. அங்கு வானம் எப்பவும் மப்பும்,மந்திரமுமாக சீந்தாப்பாக இருக்குமோ? எந்த மாசத்துல போனிய? இருண்ட கண்டத்திலும் ஒரு ஒளிமயமான வர்த்தகம் வாழ்த்துக்கள்.

Unknown said...

Assalamu Alaikkum,

Nice pictures with narration about Africa travel experience.
I could sense the condition of the place and people over there by your article.

அப்துல்மாலிக் said...

//அல்லாஹ் நம்மை வைத்திருக்கும் உயர்வான நிலையை உணர்த்தி அவனுக்கு நன்றி மேலும் அதிகமாக செலுத்த காட்டித்தந்த நைஜீரியா பயணம் வாழ்வில் மறக்கமுடியாதது.//

அதே ஃபீலிங் எமக்கும் எழுந்தது, படங்களை பார்த்தும், வர்ணனைகளை மக்களின் நடைமுறைகளை கண்டும் அல்லாஹ் நம்மை நல்ல நிலமையில்தான் வைத்திருக்கான் என்று மீண்டும் படைத்தவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்...

தொடரட்டுமானு ஒரு கேள்வி கேட்டுப்புட்டியலே.. உலகின் பொருளாதார நிலையையும், அதன் தனித்துவத்தையும் அறிந்துகொள்வது கூட ஒரு வகை கற்றலே.. அது உங்களிடமிருந்து பெற முயற்சிக்கிறேன்..

Ebrahim Ansari said...

//அவரோ ரொம்ப(வே) நல்லவர் , இண்டியாவை காணவேண்டும் என்பது அவரின் வாழ்நாள் அவாவாம். அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருப்பதாய் கூறினார். எத்தனை பேரிடம் இந்த பிட்டையே போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கின்றார் என்பது தெரியவில்லை.//

மருமகனார் யாசிர் அவர்களே முதலில் கையைக் கொடுங்கள். நல்ல எழுத்து நடை. சுவராஸ்யமான தொடர்.

மேலே நான் மேற்கொள காட்டி இருப்பது போல் ஆப்ரிக்காவின் எல்லா வழிகாட்டி ஓட்டுனர்களும் சொல்வார்கள் போல் இருக்கிறது. நான் அங்கோலா சென்று இருந்த போது எங்களுக்கு வந்த ஓட்டுனரும் இதையும் சொன்னார் இதற்கு மேலும் இந்தியாவைப் பற்றி சொன்னார்.

அடுத்த முறை நான் வரும்போது துபாயிலிருந்து உனக்கு என்ன வாங்கி வரவேண்டுமென்று தெரியாத்தனமாகக் கேட்டபோது போட்டாரே ஒரு போடு " ஒரு லேப் டாப் " என்று.

Yasir said...


கண்ணியத்திற்க்குரிய மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)காக்கா நன்றி தங்களின் கனிவான கருத்திற்க்கு

நன்றி நண்பர் M.H. ஜஹபர் சாதிக் அவர்களே ..தொடருவோம்

கவிக்காக்கா..எத்தியோப்பியா பயணம் எந்தவித பயமும் இல்லாத நல்ல பயணமாக இருந்தது
இஸ்லாமிய சட்டங்கள் இல்லாத நாடுகள் அனைத்தும் பாதுகாப்பற்றதாக இருப்பதாக என் அனுபவத்தில் உணர்கின்றேன்
தன்னைத்தானே எடுத்துக்கொண்டால் ஸ்மைல் பண்ண முடியல காக்கா

Bro Abdul Razik , thanks ton for your wonderful comment and keep boosting me,thanks too for your wishes…will continue to explore more african countries If time permit

லண்டன் வானொலில் ஒலித்து அதிரைக்கு பெருமை சேர்க்கம் கவியன்பன் அவர்களே…பெனின் என்ற தனி நாடும் உண்டு / நைஜீரியாவில் பெனின் என்ற சிட்டியும் உண்டு
இரண்டுமே மோசமானதுதான்…என்ன செய்வது இவன் இப்படி கொள்ளையடிக்கின்றேன் மற்ற நாடுகள் வேறுவிதமாக கொள்ளையடிக்கின்றன
யாராவது குறைந்தது 3 மில்லியன் அமெரிக்க டாலர் தந்த உடனே ஆரம்பிக்க வேண்டியதுதான்

சகோ.அர அல தாங்கள் போட்ட விதைதான் இன்று என் வடிவில் மரமாக வந்து நிற்க்கின்றது..இன்னும் பழமாக எழுத அ.நி-க்கு நிறையபேர்கள் வருவார்கள்
எத்தியோப்பியாவின் தொடரின் இன்னும் பல குறிப்புகள் தருவோம்

சித்திக் காக்கா. தங்களின் கருத்துக்கு நன்றி, அல்லாஹ் தங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்க பொறுமையையும் / சக்தியையும் தருவானாக ஆமீன்

சகோ. நெய்னா முஹம்மது தங்களின் கருத்துக்கு நன்றி ,ஆம் நான் போனது ஜுலையில் – மழைக்காலம்

Bro.Ahamed Ameen thanks for your regular attendence for my aritcles ,yes I am happy that I could narrate here what I have seen there.

ஆமாம் நண்பரே அப்துல்மாலிக் , அல்லாஹ் நம்மை ஒரு சுற்றுப்புற ஆரோக்கியமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு கூட நன்றி செலுத்த ஆயுள் பத்தாது,அல்ஹம்துலில்லாஹ்

என்ன மாமா உங்களுக்கும் அப்படிதான் நடந்ததா ? அப்ப நான் நினைத்தது சரிதான் ..உடல்நலம் பேணிக்கொள்ளுங்கள்

மற்றும் படித்த ஜாஹிர் காக்கா / சாவன்னா காக்கா / இக்பால் காக்கா மற்ற அனைவருக்கும் நன்றி









Yasir said...


எழுத மறந்தது..

இடையில் ஒரு முன்னால் கடத்தல்க்காரரை (இப்ப திருந்திட்டாராம் ) சந்தித்தேன், அவரிடம்” ஏன்யா மற்ற நாட்டுக்காரங்களை கடத்துறீங்க” என்று கேட்டேன் அதற்க்கு பதிலாக அவர் சொன்னார் ”மேல நாட்டுக்காரன் எங்க நாட்டு வளங்களை கடத்துகின்றான், நாங்கள் அவனை கடத்தி அவன் பணத்தை பிடுங்குகின்றோம்” என்றார், என்னமோ இந்த “லாஜிக்” எனக்கு இடிக்கவில்லை...வசதிகளை ஏற்ப்படுத்தி வளங்களை சுரண்டியது ஆங்கில அரசு என்று ஹாஜி சார் பாடம் நடத்தினார்கள்...ஆனால் இங்கு “வறுமை”யில் மக்களை கஷ்டப்பட விட்டுவிட்டு அரசும்,அந்தியனும் வளங்களை கொள்ளையடிக்கின்றன.

KALAM SHAICK ABDUL KADER said...

\\லண்டன் வானொலில் ஒலித்து அதிரைக்கு பெருமை சேர்க்கம் கவியன்பன் அவர்களே…பெனின் என்ற தனி நாடும் உண்டு / நைஜீரியாவில் பெனின் என்ற சிட்டியும் உண்டு
இரண்டுமே மோசமானதுதான்…என்ன செய்வது இவன் இப்படி கொள்ளையடிக்கின்றேன் மற்ற நாடுகள் வேறுவிதமாக கொள்ளையடிக்கின்றன
யாராவது குறைந்தது 3 மில்லியன் அமெரிக்க டாலர் தந்த உடனே ஆரம்பிக்க வேண்டியதுதான்//

ஜஸாக்கல்லாஹ் கைரன்,

கல்வியாளரும் எதிர்காலத் தொழிலதிபருமான அன்பினுக்கினியத் தம்பி யாசிர் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இலண்டன் வானொலியில் என்னைப் பேட்டி எடுக்கவும் அழைத்துள்ளனர்; அல்லது இலண்டனில் ஓர் இலக்கிய நிகழ்வில் பங்கேற்கவும் அழைத்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் உங்களின் எண்ணமும் எழுத்தும் எண்ணிய வண்ணம் அதிரையின் பேரையும் புகழையும் என்னால் இயன்ற அளவுக்குத் தமிழ்கூறும் உள்ளங்களில் பதிய வைப்பேன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

அதிரை நிருபர் என்னும் இப்பல்கலைக்கழகத்தில் பெரும் பணக்காரர்களும் பலர் வாசகர்களாக/ பங்களிப்பளிப்பாளர்களாகப் பலர் உளர். இன்ஷா அல்லாஹ் நீங்கள் ஓர் அறிவிப்புக் கொடுத்தால் பங்குதாரர்களாகிடக் காத்திருக்கின்றனர்.
(மலேசியாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் “நாங்கள் ரெடி” என்று சொல்வது காதில் விழவில்லையா?)


Shameed said...

Yasir சொன்னது…

//மற்றும் படித்த ஜாஹிர் காக்கா / சாவன்னா காக்கா / இக்பால் காக்கா மற்ற அனைவருக்கும் நன்றி//

இப்படியும் பன்ச் வைக்காலாம் என்பதை இப்போதான் தெரிந்து கொண்டேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Yasir சொன்னது…

//மற்றும் படித்த ஜாஹிர் காக்கா / சாவன்னா காக்கா / இக்பால் காக்கா மற்ற அனைவருக்கும் நன்றி//

இப்படியும் பன்ச் வைக்காலாம் என்பதை இப்போதான் தெரிந்து கொண்டேன் //

ஆமா ஆமா ! அந்த பன்ச் எனக்கு இல்லைன்னு நானே யூகிச்சுகிட்டேன் :)

Yasir said...

//இப்படியும் பன்ச் வைக்காலாம் என்பதை இப்போதான் தெரிந்து கொண்டேன்// இது பன்ச் இல்லை “பாசம்” காக்காஸ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு