Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Making Of "படிக்கட்டுகள்" 27

ZAKIR HUSSAIN | January 04, 2013 | , ,

"படிக்கட்டுகள்" தலைப்பு வைக்கவே எனக்கு 18 பட்டி பஞ்சாயத்தின் விருப்பம் தேவைப்பட்டது. 'முன்னேற்றம், புறப்படு , விழித்தெழு" என்று நிறைய பேர் எழுதி முடித்து விட்டார்கள். இனிமேலும்  இப்படி எழுதினால் போய்ச்சேருமா என்ற சந்தேகம்தான்.

இன்னும் சொல்லப்போனால் நம் ஊர் சார்ந்த மக்கள் இன்றைக்கு அதிக அளவில் வலைப்பூக்கள் நடத்துவதில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது வலைப்பூக்களின் தரத்தை இன்னும் சில நல்ல விசயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அதனால் நான் எழுத எடுத்த சப்ஜெக்ட் Personal Development.

எழுதிய பிறகு இருந்த வரவேற்பு என்னை அந்த தொடருடன் தொடர்பில் இருக்க வைத்தது. அந்த 24 தொடரிலும் நான் எழுதியது வெறும் தலைப்புதான்...இன்னும் ஆழமாக எழுத முடியும். ஆனால்  குழப்பம் வரும். இதை எல்லாம் ஒரு ஒர்க்ஷாப் ஷெசனில்  4 , 5 நாள் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களே அதிகம்.

எனக்கும் அறிவுரை வழங்குவதில் உடன்பாடில்லை, If I can bring some awareness, that itself  can be worth my effort.

நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமையாதலால். அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நான் எழுத எனக்கு ஆதரவாக இருந்த விசயங்கள் நான் இதுவரை கற்றுக்கொண்ட சில பயிற்சிகள். அதில் சில ஒரு தீவுக்கு போய் சூரியன் உதிப்பதற்கு முன் செய்யும் சில தற்காப்பு கலையின் ஆரம்பக் கல்விகளும் / பயிற்சியும் அடங்கும். சில பயிற்சிகள் நமது தொழிலுக்கு நிச்சயம் உதவும். அவைகளில் மரம் ஏறத்தெரியாத எனக்கு ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து செங்குத்தாக பூமியை நோக்கி முகம் வைத்து இறங்கும் பயிற்சியும் அடங்கும். [ஷேஃப்டி விசயங்கள் உண்டு].

இப்படியெல்லாம் செய்வதற்கும் வாழ்க்கையில்  முன்னேறுவதற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று நான் அப்ரானியாக நினைத்தது உண்டு. உடலை சில தடைகளை கடக்க வைப்பதன் மூலம் வாழ்க்கையின் தடைகளை கடக்க பயிற்சிகள் கிடைக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. இவை அனைத்தும் தொழிலில் team building  பயிற்சிகள்.

சமயங்களில் கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்களுக்கு பதில் எழுதும் நான் சாகுல் / இக்பால் / சபீர் ..இந்த மூவருக்கும் பதில் எழுதுவது இல்லை. காரணம் இந்த 3 பேரின் பெயரில் யாரையாவது நான் மைனஸ் செய்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பகுதியை ஒழித்து எழுதியதாகிவிடும்

சாகுல்.. எல்லோருக்கும் கிடைப்பது அவரவர்கள் நட்புதான். எங்கள் இருவருக்கும் கிடைத்தது மூன்று தலைமுறை நட்பு.  எங்களின் இருவரின் பாட்டியிலிருந்து ஆரம்பித்த நட்பு, எங்கள் தந்தையினர் என்று ஆரம்பித்து இப்போது எங்கள் நட்பு என்று இருக்கிறது. சாகுல் சின்ன வயதிலிருந்தே தெரியும், ஆதலால் அவரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விசயமும் எனக்கு தெரிந்தே நடந்தது.   வயதில் என்னைவிட குறைந்தவராக இருந்தாலும்  புத்திக்கூர்மையில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய அனுபவசாலிளை மிஞ்சக்கூடியவர்.

இக்பால்... என் நெருங்கிய நண்பர்களில் இவனும் ஒருவன். அவனது வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் , கூடப்பிறந்தவர்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அவனுக்கு கொடுக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நான் அவன் வீட்டில் முக்கியமானவன். நான் சொல்லும் எந்த விசயத்தையும் விவாதித்து சரி / தவறு என்பதற்கு காரணம் சொல்லி சண்டை போட்டு எப்போதும் என் மீது உள்ள அன்பில் மாறாத குணம் உடையவன். சின்ன வயதில் விவாதிப்பது என்பது சண்டை போடுவதல்ல. கருத்து பரிமாற்றம் என உணர வைத்தவன். மார்க்க விசயங்களில் நமக்கு கிடைத்த ஆன்லைன் ரெஃபரன்ஸ் இவன்.  உண்மையைச்சொல்ல யாராக இருந்தாலும் பயப்படமாட்டான். சிங்கப்பூர் கவர்ன்மென்ட் மாதிரி..தப்புனா தப்புதான்.

சபீர்.... ஸ்கூல் படிப்பு / கல்லூரி என்று தொடர்ந்தாலும் ஏனோ மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒன்றாக தெரியும் ஒற்றுமை எங்களிடம். நண்பனாக இருப்பது என்பது வேறு. நண்பனாகவே ஆகிப்போவது என்பது வேறு. நாங்கள் 2 வது ரகம். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு = நட்பு என்பதின் அடையாளங்கள் நாங்கள். எங்கள் சின்னம்மாவின் [சபீரின் தாயார்] செல்லப்பிள்ளை நான். இரண்டு பேரும் ஒன்றாக கால்பந்தாட்டத்தில் அடிபட்டு வர எனக்கு முதலில் மருந்து கொடுத்த தாய். நிறைய பேர் நினைப்பது நாங்கள் இருவரும் சகோதரர்கள்... எனக்கு அதில் உடன்பாடில்லை.. நண்பனாய் இருப்பதில் அதிகம் சுதந்திரம் இருக்கிறது. என் தவறுகளை இவன் கண்டித்தால் மட்டும் கேட்டுக்கொள்வேன் சின்ன வயது தொடக்கம். என் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் இவன் முடிவுக்காக காத்திருந்திருக்கிறது, அன்றும் இன்றும் எப்போதும்.

படிக்கட்டுகள் எழுத நிறைய நெறியாளுகை செய்திருக்கிறான். கால ஒட்டம் பல விசயங்களை மாற்றிப் போட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அப்படியேதான் இன்னும் மாறாமல்.

படிக்கட்டுகள் எழுத முக்கிய காரணங்களில் ஒன்று , நம்மைச் சார்தவர்கள் யாரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்ற என் பாசிட்டிவ் அப்ரோச்தான். பெரும்பாலும் எழுதும்போது மற்றவர்களை திறமையற்றவர்களாகவும் , ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் அட்வைஸ் அள்ளிக்கொட்டும் எந்திரமாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் பகுதியை சார்ந்த அனைவரும் மிகவும் கடின உழைப்பாளிகள். சரியான வாய்ப்புகள் , வழிகாட்டிகள் இல்லாததும் அவர்களின் பின் தங்கிய நிலைக்கு காரணம்.  May be எனக்கு கிடைத்த அந்த exposure மற்றவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏன் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று முதல் படிக்கட்டுகள் எழுதிய உடன் சகோதரர்கள் அபு இப்ராஹிம் / தாஜூதீன் இருவரும் தந்த ஆர்வம் தொடராக வெளிவர உதவியாக இருந்தது.   அபு இப்ராஹிமின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது. வேலையிடத்தில் உள்ள டென்சன், மற்றும் பல வேலைகளுக்கிடையே தனது அதிரை நிருபருக்கான வேலையை தள்ளிப்போடாமல் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது.  தம்பி தாஜூதீன் அவர்களின் தன்னடக்கமான பண்பு போற்றத்தக்கது.

இதை எழுதுவதற்கு நான் எந்த புத்தகங்களையும் ரெஃபரன்சாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது நம் வழக்கம் / இனம் / மொழி சார்ந்த விசயங்களுடன் ஒத்துப்போகாது.

வெள்ளைக்காரர்களும், வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இதுபோன்ற விசயங்களை தொட்டு எழுத முடியும் என்ற விசயத்தில் உண்மைகள் இல்லை.
 
இந்திய தேசம் இதுவரை கணக்கில் அடங்காத ஞானிகளையும் , அறிவாளிகளையும் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆசியாவில் பிறந்தவர்கள் சொல்லாத பிசினஸ் சைக்காலஜியை மற்றவர்கள் சொல்லியிருப்பார்களா என்பதில் சந்தேகம்தான். மற்றும் வெள்ளைக்காரர்களின் அதிகமான அறிவுரைகள் ஒரு rat race போலத்தான் இருக்கும். ஜெயித்த பிறகு ஜீவன் செத்துப்போயிருக்கும்.

சம்பாத்யம் புருச லட்சனம்,” எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் மாதம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் உனக்கு" என்று சொன்ன  மர்ஹூம் சமது மாமா அவர்கள்.   [ இப்ராஹிம் அன்சாரி அண்ணனின் தந்தை ] ,  எந்த சுழ்நிலை வந்தாலும் தன்மானத்தை ஒரு சதவீதம் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டு என்று எனக்கு அறிவுரை தந்த எங்கள் முகம்மது பாரூக் மாமா [சாகுலின் தந்தை] ,ஆம்பளையா பொறந்தா ஒரு 24 பேருக்கு உணவு கொடுக்கும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும், அதே சமயம் அப்படி உணவளிக்கவும் வேண்டும் என்று சொன்ன எங்கள்  மாமா  [மர்ஹூம்] முஹம்மது யூனுஸ் அவர்கள். [சபீரின் தாய்மாமா].   உழைக்க  துணிஞ்சவனுக்கு கஷ்டம் ரொம்ப நாள் இருக்காதுடா என்று சொன்ன என் தாய். "மேயப்போற மாட்டுக்கு கொம்புலெ எதுக்கு புல்லு??" என கேட்ட படிக்காத என் பாட்டி [தந்தையின் தாய்]

இவர்கள் யாரும் எந்த யுனிவர்சிட்டியிலும் படிக்கவில்லை.இது போன்ற காகிதக்கல்வி படிக்காத மனிதர்களிடம் அதிகம் நடைமுறை அறிவை கற்றுக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
 
இதுவரை இந்த தொடர் எழுத எனக்கு கமென்ட்ஸ்களின் வழி உற்சாகம் தந்த அனைவருக்கும் நன்றி.

அவர்களின் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன். 

இப்ராஹிம் அன்சாரி அண்ணன், ஜமீல் நானா, அதிரை அஹ்மது காக்கா ,  அண்ணன் N.A.S, [சமயங்களில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா ஸ்டேசனும் எடுக்கும் அறிவுஜீவி],   சகோதரர் கிரவுன் [சமயங்களில் டெலிபோனில் அழைத்துபேசுவார்] தம்பி யாசிர் [ஒரு அத்தியாயம் படித்து விட்டு டெலிபோனில் அழைத்து பேசினார்] சகோதரர் கவிஞர் அபுல்கலாம் [மறவாமல் எல்லா அத்யாயங்களிலும் இவரின் கவிதையான கருத்து இருக்கும் ]  

என் பாசமிகு சகோதரர்கள் நூருல் அமீன்.  அப்துல்வாஹித் அண்ணாவியார். அப்துக் ராஜிக், அப்துல் மாலிக் , எம் ஹெச் ஜஹபர் சாதிக், ZAEISA , Ara Ala , Naina [ AlKhobar ] B. Ahamed Ameen, Sister Ameena.A,  Abu Bakar [ amazan ] Abdul Malik , Alaudeen S. uroovaasi ,  Ahamed Irshad, MSM Naina Mohamed [இவரின் எழுத்துக்கு நான் ரசிகன் ],  புதுசுரபி,  LMS AbooBakar , Mohamed Buhari, SS Syed Ibrahim.A [ Dubai], அன்புடன் புகாரி , sekkana M.Nijam,  Hidaayathullah,  Adirai N.Safath,  Noor Mohamed [ My senior in school ] , Ashik Ahamed , N. fathhudeen, ஜாகிர் ஹுசைன் , நட்புடன் ஜமால் .... மற்றும் எனக்கு கல்வி தந்த SKM ஹாஜா முஹைதீன் சார் , வாவன்னா சார் , முஹம்மது அலியார் சார், திரு சீனிவாசன் சார் இன்னும் யாரையாவது எழுதாமல் விட்டிருப்பேன்.. மறதிதான்…. மன்னிக்கவும்.

 படிக்கட்டுகள் இது போன்ற நிறைய பேருடன் என்னை அழைத்துச்சென்று அன்பையும், சகோதரத்துவத்தையும், நட்பையும் எனக்கு பரிசாக தந்திருக்கிறது.

Wish You All the Best,  இறைவன் உதவியால் மீண்டும் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN

27 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

This article reveals various influences that contributed to your developments and making of 'PADIKKATTUGAL'.

Personal development concepts can make considerable growth and maturity in indiviuals. But few educated innocents used to argue with me that by reading some books and articles won't make any difference. Every individual should be in search of knowledge in all the possible ways. By non stop reading, studying and observing. Knowledge gained should be put into practice.

The students should not think that after the college the study is over as most of people do. Compentencies for life and profession are to be learned through life long period.

Brother Mr. Zakir Hussain's contribution about personal development concepts by the title 'PADIKKATTUGAL' is most valuable knowledge and lessons to our community.

Thanks and best regards

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதலில் : ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

அடுத்து (மெய்யாலுமே): படிக்கட்டுக்கான அஸ்திவாரம் போடப் போகிறோம் என்று கலந்து பேசிக் கொண்டிருக்கும்போதே என் மனதில் அப்போது உதித்தது அசத்தல் காக்காவின் வழக்கமான ஹூமரோடு கூடிய இயல்பான அவர்களுக்கே உரிய தொடராக இருக்கும் என்று !

பின்னர் : தொடர் முதல் அடுத்து இரண்டாவது என்று வெளியானதை உள்வாங்கியதில் நிச்சயம் இந்த தொடர் உச்சம் தொடும், உச்சுக் கொட்டிக் கொண்டிருப்பவர்களையும் உசுப்பிவிடும் என்று தெளிவாக எடுத்துக் காட்டியது...

நிறைவில் : உயர்தரமான கட்டிடமொன்று கட்டிமுடித்தது மட்டுமல்ல ஒவ்வொரு படியாக எப்படி அடியெடுத்து வைத்து உயர வேண்டும் என்று படிப்பினை போதித்தது அழுத்தமான உண்மை !

மும்மூர்த்திகள் ஒவ்வொருவரோடு உங்களின் நெருக்கம் எங்களுக்கும் அவர்களோடு நெருக்கம் அதிகரித்ததும் மெய்யே !

மீண்டுமொரு தொடர் / அதற்கிடையில் இடர் போக்கும் இயல்களும் அவ்வப்போது வெளிவரும் என்று சொன்னதையும் மறக்கவில்லை நான்... :)

இன்னும் நீங்கள் சாதிக்க வல்லமை நிறைந்த அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

சீக்கிரம் இந்தப் (துபாய்) பக்கம் வாருங்கள் புத்தகம் ரெடியாவதற்கான ஆயத்தங்களை துவங்கிடலாம் !

Iqbal M. Salih said...

//அபு இப்ராஹிமின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது. வேலையிடத்தில் உள்ள டென்சன், மற்றும் பல வேலைகளுக்கிடையே தனது அதிரை நிருபருக்கான வேலையை தள்ளிப்போடாமல் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது. தம்பி தாஜூதீன் அவர்களின் தன்னடக்கமான பண்பு போற்றத்தக்கது.//


இருவர் பற்றியும் என் மனதில் இருந்த மேற்கண்ட வரிகளை
ஜாகிர் இங்கே எழுதிவிட்டான். மாஷா அல்லாஹ்!

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
Well said Prof.B.A.A. Learning is a continuous life long process. The thirst for knowledge is some sort of fire within ourselves. We can gain knowledge by reading, observing, knowing the experience of elders and seniors and further by experimenting ourselves.
Learning does not confine itself to a single platform.
What my brother Zakhir has contributed is out of his movement with peoples of various kinds, from attending motivational lectures and from reading the people. This sort of involvement is the basis for the upliftment of one's career.
Brother BAA I could not post my comments in the recent past for I had been to Singapore on holidays and after returning from Singapore unfortunately I met with serious road accident. Now I am getting well by the mercy of Allah.
Sorry that I could not appreciate your valuable poem. May Allah bless all of us.
Wassalam
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

ஜாகிர்,

படிக்கட்டுகள் போன்றொதொரு மனோதத்துவ, சுய மேம்பாட்டுக் குறிப்புகள் எழுதுவது இலகுவானதல்ல. எழுதி முடிக்கும் ஒவ்வொரு குறிப்பிற்கும் அதன் விளைவுகளுக்கான பொருப்பு எழுதுபவரே ஏற்கவேண்டிய நிர்பந்தம்  இருக்கிறது.

எனவே, ஆயிரத்தில் ஒரு எழுத்தாளரே இதுபோல் எழுதத்தலைப்படுவர். நீ இதைச் செம்மையாகவேச் செய்திருக்கிறாய்.

புத்தக வடிவில் மீண்டுமொருமுறை வாசிக்கக் காத்திருப்போரில் நானும் ஒருவன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதர ஜாஹிர் ஹூஸைன் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

படிக்கட்டு உருவான பின்னணி என்னைப் படிக்கத்தான் விடாமல் வடிக்கத்தான் செய்தது கண்ணீரை! பாசமும், நேசமும் இம்மடலில் மேகங்களாய் நெருக்கத்தை உண்டாக்கி அதன் உருக்கத்தில் வழிநீரை உகுக்கத்தான் வைத்தன என்றால், உங்களின் ஆளுமைத் திறன் ஆழமாய்ப் பதிய வைக்கும் வித்தை!

மாஷா அல்லாஹ்! நீங்கள் கூறும் பயிற்சி முறைகளும் கற்றிருப்பதும், நடைமுறையில் நீங்கள் ஒரு முன்னுதாரமான பயிற்சியாளர் என்பதும் “படிக்கட்டுகள்” தொடரின் தொடக்கத்திலிருந்தே அவதானித்தேன்;கணித்தேன்;தற்பொழுது அடியேனும் NLP seminar பயிற்சிகட்குச் சென்று வருவதால், நீங்கள் கூறிய- இப்பொழுதுக் கூறும் விடயங்கள் யாவும் சாத்தியமானவைகள்; சத்யமானவைகள் என்று சான்று பகர்கிறேன்.

உங்களின் “படிக்கட்டுகள்” நூலுருவில் வரும் நாளுக்காகக் காத்திருக்கும் மக்களில் அடியேனும் ஒருவன். அல்லாஹ் உங்களின் ஆயுளை நீடித்து, நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் வழங்க துஆ செய்கிறேன்.

இறுதியாக, நீங்கள் குறிப்பிட்ட நம் பெற்றோர், உற்றார்க் காகிதப் படிப்பு இல்லை என்றாலும் பட்டறிவின் மூலம் நமக்குச் சொன்ன அறிவுரைகள் தான் வாழ்க்கையின் வழிகாட்டிகள் என்பது முற்றிலும் அனுபவப் பூர்வமான உண்மை.


..

KALAM SHAICK ABDUL KADER said...

\\வழிநீரை \\ விழிநீரை

Unknown said...

Assalamu Alaikkum,

I am shocked to hear from NAS sir, my teacher and colleague, who awarded the star comment in this forum recently, met with serious accident. I am deeply sorry for you sir. May Allah cure you and help you get well completely soon, InshaAllah. I am happy to read your esteem enriching comments.

Thanks and best regards,

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி!

அமர்க்களமான உனது தொடர் வெளியிடப்பட்டு வந்த வாரங்களில் எல்லாம் அதனைப் படித்த அன்பு அதிரை நிருபரின் வாசகர்கள் அனைவரின் சிந்தனைக் கதவுகளைத் திறந்து விட்டாய். உனது தொடரைப் படித்த யாராவது ஓரிருவர் நிச்சயமாக அவர்கள் அதுவரைக் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களை ஒருவேளை மாற்றிக் கொண்டிருப்பார்கள் அல்லது மாற்ற வேண்டுமேன்று உறுதி எடுத்து இருப்பார்கள். யார் மனமும் புண் படாமல் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த அந்த தொடரைப் பற்றிய உனது நிறைவுரை அடக்கம் நிறைந்து -தற்பெருமையற்று தன்னிகரற்ற நிறைவுரையாகத் தோன்றுகிறது.

இந்தத் தொடரை விரைவில் நூல் வடிவில் கொண்டுவரும் நல்ல முயற்சியில் இன்ஷா அல்லாஹ் ஈடுபடுவோம். இதற்காக 'மூன்று குழல் துப்பாக்கி ' ஒன்று வானம் நோக்கி வெடித்து ஸ்டார்ட் என்று உரக்க சப்தமிடும் நாளை நோக்கி இருக்கிறேன்.

எவரெவர் அந்த மூன்று குழல் துப்பாக்கி? அந்த மூவருக்குமே தெரியும்.

உனது நிறைவுரையில் உன் மாமாமார்களான - என் வாப்பா- மச்சான் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டதற்கும் நன்றி செலுத்துகிறேன்.

நீண்ட நாள் நலமுடன் வாழ்ந்து இது போல் இன்னும் நிறைய எழுதவேண்டுமென்று து ஆச் செய்கிறேன்.

sabeer.abushahruk said...

என் ஏ எஸ் ஸார் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களுக்கு நடந்த விபத்து குறித்து யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அதனால் இந்தச் செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

தாங்கள் பூர்ண நலம் அடைய என் துஆ.

இப்படிக்கு,

தங்களின் நலம் நாடும், தங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத மூன்றாமவன் சபீர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

NAS சார் அவர்கள் பூரண குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் இன்ஷா அல்லாஹ் !

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
My sincere and heartfelt thanks to all by beloved brothers and well wishers. ஏண்டா சபீர் நக்கலா?
Wassalam
N.A.Shahul Hameed

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா, ஆரம்ப காலத்தில் அதிரைநிருபர் தளம் உருவாகுவதற்கு மிகவும் ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர்களின் ஹமீத் காக்காவும் நீங்களும் தான் என்பதை இங்கு குறிபிட்டே ஆகவேண்டும்.

படிக்கட்டுக்கள் போல் மேலும் நீங்கள் சமுதாயத்திற்கு பயன் தரும் பதிவுகள் தொடர்ந்து எழுத வேண்டும். அல்லாஹ் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக.

//இதை எழுதுவதற்கு நான் எந்த புத்தகங்களையும் ரெஃபரன்சாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது நம் வழக்கம் / இனம் / மொழி சார்ந்த விசயங்களுடன் ஒத்துப்போகாது.//

படிக்கட்டுக்கள் தொடர் பற்றி தங்களை பற்றி அறியாதவர்(கள்) என்னிடம் தனிப்பட்ட முறையில் விமர்சனம் என்ற போர்வையில் காழ்புணர்வுடன் பேசியதற்கு நீங்கள் மேற் சொன்ன வரிகள் 70mm திரையில் போட்டுக்காட்டிய பதில் என்று நான் சொல்லுவதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்.

உங்களை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளது காக்கா.. விரைவில் வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

என்றும் உங்களின் மேல் மரியாதையுடன் கூடிய பாசத்துடன்.

தம்பி தாஜுதீன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Respected NAS சார்,அஸ்ஸலாமு அலைக்கும்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களை ஊரில் இருக்கும் போது சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

சாலை விபத்து பற்றி செய்தி படிக்கும் போது கவலையளித்தது.

நலமாக இருக்கிறீர்களா?

எனக்கு மின்னஞ்சலிடுங்கள் சார் tjdn77@gmail.com

KALAM SHAICK ABDUL KADER said...

\\படிக்கட்டுக்கள் தொடர் பற்றி தங்களை பற்றி அறியாதவர்(கள்) என்னிடம் தனிப்பட்ட முறையில் விமர்சனம் என்ற போர்வையில் காழ்புணர்வுடன் பேசியதற்கு நீங்கள் மேற் சொன்ன வரிகள் 70mm திரையில் போட்டுக்காட்டிய பதில் என்று நான் சொல்லுவதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். \\

உங்களிடமுமா சகோ. தாஜூதீன்?
இன்னும் எத்தனை பேர்களிடம் இப்படி அவதூறுகள் பரப்பட்டிருக்குமோ?

KALAM SHAICK ABDUL KADER said...

Prof.NAS Sir,

Assalaamu alaikkum,

I supplicate to Allah for speedy recovery from ailment happened by an accident which we came to know thru comment of Bro. BAA.

Regards,

Yours affectionately
Brother in Islam
Abu al Kalam

இப்னு அப்துல் ரஜாக் said...

இதுவும் இன்னொரு படிக்கட்டு போல அவ்வளவு ஊக்கமும் கருத்துக்கள் கொண்டதாகவும் மிளிர்கிறது.மாஷா அல்லாஹ்

Yasir said...

”படிக்கட்டுகள்” வாழ்வில் தடையாக இருந்த பல கட்டுகளையும் அறுத்தெறிந்து சீக்கெரட் ஆஃப் மை சக்ஸஸ்” என்று சொல்லுமளவிற்க்கு பல மாற்றங்களை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல

Yasir said...

NAS sir we pray for your speedy recovery...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்களின் பின்ணணி ரொம்ப பலமானது தான்!

ஒரு புறம் கவிக் கலைஞர், மறுபுறம் விஞ்ஞானத்துடன் கேமராக் கலைஞர், மேலும் ஒரு புறமோ மொழி மற்றும் மார்க்க வல்லுனர் என இருக்கும் போது நீங்களும் ஒரு முன்ணணி வெற்றிக் கலைஞரே!

எடுக்கும் நல் காரியம் எதுவும் வெற்றியுறும் இத்தகைய நல்லோரை நட்பாக்கி இருப்பதால்! இன்சா அல்லாஹ்.
---------------------------------------------------------------------------

ஷபர் 22, 1434

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய பேராசிரியர் N.A.S. அவர்களின் மேன்மை மிகுந்த பின்னூட்டங்களை கடந்த இரண்டு மூறு மாதங்களாக காண முடியவில்லையே என்ற எண்ணம இரண்டொரு முறை எனக்கு ஏற்பட்டது. அவர்கள் ஒரு விபத்தில் சிக்கியுள்ள செய்தியை என்போல் அவர்களை கண்டிராதவர்கள் மட்டுமல்ல நெருக்கமானவர்களுக்குக் கூட அறிவிக்காமல் இருந்த செய்தி இப்போதே அறிகிறோம்.

அவர்களுடைய உடல் நலம் சிறக்கவும் விரைவில் பூரண நலமுடன் தனது மாணாக்கர்களை/ பிள்ளைகளை/ சகோதரர்களை/ என்னைப் போல் முகமறியா உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்த வரவேண்டுமென்று வல்ல நாயனிடம் து ஆச செய்கிறோம்.

ZAKIR HUSSAIN said...

அண்ணன் N.A.S அவர்களிடம் இப்போதுதான் பேசினேன். சாலையை கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் அவர் பிழைத்ததே இறைவனின் கருணையை அன்றி வேறொன்றும் இல்லை. மற்றும் அவரது தாயாரின்
து ஆ வும் காரணமாக இருக்கும். எனக்கு தெரிந்து அவர் மிகவும் இறையச்சம், இபாதத் நிறைந்த மனிதர்.

இப்போது நன்றாக இருக்கிறேன். பயப்பட வேண்டியதில்லை என்று சொன்னார்.

ZAKIR HUSSAIN said...

இந்த பதிவில் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

To Bro Thajudeen

//விமர்சனம் என்ற போர்வையில் காழ்புணர்வுடன் //


விசயம் பொது என்று வந்து விட்டாலே விமர்சனங்கள் தவறாகவும், நன்றாகவும் இருக்கும் என்பதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.


நம்மீது மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்வதில் தவறில்லை. யாரும் நம்மைப்பார்த்து பரிதாபப்படும்படி வாழ்வதுதான் தவறு.





அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இதுவும் இன்னொரு படிக்கட்டு போல அவ்வளவு ஊக்கமும் கருத்துக்கள் கொண்டதாகவும் மிளிர்கிறது.மாஷா அல்லாஹ்

நீண்ட நாள் நலமுடன் வாழ்ந்து இது போல் இன்னும் நிறைய எழுதவேண்டுமென்று துஆச் செய்கிறோம்.

Unknown said...

Thumbs Up!!!
Happy to be a part of society where there is experts from Computer to Carpenter!!!
The above is the perfect example for this. Mashallah. May Allah enrich our Knowledge to serve the society!!!

அப்துல்மாலிக் said...

ஒருவரை ஒருதடவை புகழலாம், ஆனால் நான் 24 எபிஸோடுகளிலும் 24000 தடவைக்கு மேல் புகழ்ந்துள்ளேன். அனைத்தும் 10 நாள் லீடர்ஷிப் கிளாஸ் அட்டெண்ட் செய்த திருப்தி. வாழ்வில் நடைமுறைப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கேன்.

//நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை.//

இதை நீங்க உடைத்தெரிந்திருக்கீங்க... வாழ்த்துக்கள் (விரைவில் புத்தமகாக எதிர்ப்பார்கிறேன்)

அப்துல்மாலிக் said...

மதிப்பிற்குரிய N.A.S சார் எங்கள் அனைவரின் அன்பும் துஆவும் எப்போதும் உங்களிடையே கலந்திருக்கும், இறைவன் கிருபையால் எதுவும் ஆகாது. இன்ஷா அல்லாஹ்... உடம்பை நல்லபடியாக பார்த்துக்கொள்ளவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு