Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2013 | , , , ,

உலக மாந்தர் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை எங்கு ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும், அதனையே முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் கியாமா [மறுமை நாள்] என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்) 

வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-

75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-

75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).

75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.

75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.

75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  

75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.

75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?


நன்மையை நாடியே பதிக்கப்பட்டதன் பலனை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

Unknown said...

//75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.//

பாதிக்கப்பட்டவர்களின் சாபத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாகவும்,..ஆமீன்..

Adirai pasanga😎 said...

குர் ஆனை ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகள் என்பதனை நாம் அறிவோம். ஆனால் பொருளுணர்ந்து ஓதுவதால் ஏற்படும் நன்மைக்கு அதனைவிட பலன் அதிகம் என்பது நிதர்சனம்.

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
crown said...


அஸ்ஸலாமுஅலைக்கும்.

குர் ஆனை ஓதுவதால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகள் என்பதனை நாம் அறிவோம். ஆனால் பொருளுணர்ந்து ஓதுவதால் ஏற்படும் நன்மைக்கு அதனைவிட பலன் அதிகம் என்பது நிதர்சனம்.
நன்றி! சகோ.அஹமது தாஹா.
------------------------------------------------------------------------------------------------------

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்குர்ஆன் இறை வசனங்களை அதன் பொருளுணர்ந்து வாசிக்கும் வழமையை நம்மோடு நிலைத்திருக்கச் செய்வோம் !

முன்பெல்லாம் அச்சடிக்கப்பட்ட குர்ஆன், ஆனால் இப்போது எங்கும் எதிலும், எச்சூழலிலும் இலகுவாக அல்குர்ஆன் வசனங்களை வாசிக்க வாய்ப்புகள் நிறைந்து இருக்கிறது...

உலக வாழ்வுக்கு பொருள் தேடும் போதே ஆகிரத்து வாழ்வுக்கு அல்குர்ஆனின் பொருளையும் தேடுவோம் இன்ஷா அல்லாஹ் !

Unknown said...

//75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.//

மரணத்தின் உச்சகட்ட வேதனையின் வெளிப்பாடு.

யா அல்லாஹ் எங்கள் மரணத்தை லேசாக்குவாயாக !
வீரிய ஈமானுடன் இவ்வுலகை விட்டு எங்களை எடுத்துக்கொள்வாயாக !

ஆமீன் !

அபு ஆசிப்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு