Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -18 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2013 | , , , , , ,

பசியால் வயிறு வற்றிக் காணப்படும் வறியவன் போல், அந்த ஆற்றின் நீரும் வற்றிய வயிறு போல் தேங்கித் தேங்கி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கரையோரங்களில் ஊர்ந்தும் நீந்தியும்  செல்லும் பாம்பும் நண்டும் சின்னச்சின்ன மீன்களும் சந்தோசம் கொண்டாடிக் கொண்டு இருந்தன. அந்த ஆற்றின் ஓரத்தில், பட்டும் படாததுபோல் இந்தப் பதிவின் கதாநாயகனான  ஒரு கைத்தடி மிதந்து   கரையைத் தழுவித் தடவியது. சூரியன் தன் கதிர்களை சூடாக்க சூடாக்க வறண்டு கொண்டிருந்த நீர் இன்னும் வற்றியது. கைத்தடியும் முக்கி முனங்கிக் கொண்டு புரண்டு புரண்டு ஆற்றின் அலைகளில் அசைந்து கொண்டு இருந்தது. அதற்கும் வயதாகிவிட்டதால், தான் வாழ்ந்த பழைய கதையை தன்னையும் மறந்து புலம்ப ஆரம்பித்தது.  

“ பெரிய ஐயா உயிரோடு இருந்து இருந்தால் எனக்கு இந்தக் கதி உண்டாகி இருக்குமா ? போகுமிடமெல்லாம் என்னைக் கையோடு கொண்டு செல்வாரே ! படுக்கையறைவரை என்னைக் கொண்டு சென்று பத்திரமாக சாத்தி வைப்பாரே! படுக்கையை விட்டு எழுந்ததும் என்னைத்தானே அவரின் கைகள் தேடித்தழுவும்?  இந்த நாதாரிப் பயல்  வந்து என்னை இந்த ஓடும் ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டானே! எனக்கா இந்தக் கதி வரவேண்டுமென்று வாய்விட்டுப் புலம்பிக் கண்ணீர் வடித்தது. அதுவரைக்கும் இதை மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆற்றின் தெறித்த,  உடைந்த படிக்கட்டு கைத்தடியின் அவல நிலையைக் கேட்டு , ஒரு ஆர்வத்துடனும் ஆதங்கத்துடனும் கைத்தடியை விசாரிக்க ஆரம்பித்தது. 

“ யாரப்பா இப்படிப் புலம்புறது?” என்று படிக்கட்டு கேட்டது. 

“ பாவி! யாரப்பா என்றா என்னை நோக்கிக் கேட்கிறாய்? எங்க பெரிய ஐயாவோடு நான் செல்லும் இடமெல்லாம் அவருக்குக் கிடைக்கும் அதே மரியாதை எனக்கும் கிடைக்குமே!  அவர் காலடி வைக்குமுன் நானல்லவா முதலடி வைப்பேன் ! இப்படிப்பட்ட இராஜவம்சத்து வாழ்க்கை வாழ்ந்த என்னை அவரின் கொள்ளுப்பேரன் இந்த ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டானே பாவி! “ என்று வார்த்தையை நிறுத்தி, தேம்பி அழ ஆரம்பித்தது. 

“ சரி ! சரி! அழாதே! மனதைத் தேற்றிக் கொள். அது சரி உன் கதைதான் என்ன ?” என்று படிக்கட்டு விசாரிக்க  , பொங்கி வரும் கண்ணீர் தண்ணீரோடு கலந்து ஓட,  கைத்தடி தனது கதையை சொல்ல ஆரம்பித்தது. “ நான் ... நான் செல்வ ஜமீன்தார் ஜிமிக்கியின் கைத்தடி. அவர் பெயரைச் சொன்னால் இந்த வட்டாரத்துக்கே தெரியும். அவர் இட்டது கட்டளை. சொன்னது தீர்ப்பு. என்னை அவர் கூடவே வைத்து இருப்பார். வாரம் ஒரு முறை அவர் தன் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிராரோ இல்லையோ  எனக்கு ஆலிவ் ஆயில் தடவி பாலிஷ் போட்டு தனது வைரமோதிரம் அணிந்த  கைகளில் வைத்து இருப்பார். பஞ்சணையிலும் பட்டு   மெத்தையிலும் அவர் படுத்துப் புரளும்போது அவரின் பக்கத்திலேயே மவுன சாட்சியாக இருந்தவன் நான். செல்வமும் செல்வாக்கும் சேர்ந்து செழித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் இடி ஒலி கேட்ட நாகம்போலத் தவித்தார் என் ஜமீன்தார் எஜமான் “ என்று தொடங்கியது கைத்தடி. 

“ அடடே! அப்படி என்ன தலை போகிற விஷயம் ? “ என்று படிக்கட்டு ஒரு கேள்வி கேட்டு வைத்தது. 

“ அவசரப்படாதே ! அதைத்தானே உன்னிடம் கொட்ட வந்திருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாகக் கேள்  அந்தக் கதையை “ என்றது கைத்தடி.

“எங்களின் ஜமீனுக்குப் பக்கத்தில் இன்னொரு  ஜமீன் இருக்கிறது. அவர்கள் நிலத்துக்கும் எங்கள் ஜமீன் நிலத்துக்கும் இடையில் ஒரு வரப்பு இருக்கிறது. அந்த வரப்புத்தான் இரண்டு ஜமீன்களையும் வீராப்புப் பேச வைத்தது. வரப்பு யாருக்கு சொந்தம் என்று இரண்டு ஜமீன்களுக்கும் மோதல் உருவானது. இரண்டு பக்கமும் தொடர்ந்து பஞ்சாயத்து மற்றும் அடிதடி ரத்தக் களறி என்று இந்த விவகாரம் பரிணாம வளர்ச்சியடைந்தது. இறுதியில் நீதி மன்றத்துக்கு சென்று இதைத் தீர்த்துக் கொள்வது என்று மூன்றாவது ஜமீனால் தீர்ப்பு சொல்லப் பட்டது.

எங்கள் ஜமீன்தார் சப்- மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் இருந்து ஹைகோர்ட் வரைக்கும் உள்ள எல்லாப் படிக்கட்டுகளிலும் என்னையும் கையில் பிடித்துக் கொண்டு ஏறி இறங்கினார். ஒவ்வொரு கோர்ட்டின் படிக்கட்டுகளிலும் என்னை  ஊன்றி ஊன்றி ஏறினார். “ என்றது. 

உடனே ஆற்றின் படிக்கட்டு “ அடப்பாவி அந்தக் கைத்தடி நீதானா? ஹைகோர்ட் மாடிகளின் படிகளை அலங்கரித்த என்னை நீ காலம் பூரா ஊன்றி நடந்தது நடந்து         சேதாரமாக்கி அங்கிருந்து நான் உடைந்து போய்விட்டேன் என்று சொல்லி எனை உடைத்துப் பெயர்த்து  எடுத்து இந்தப் பாழாய்ப் போன பாசி பிடித்த ஆற்றங்கரைப் படித்துறையில் ஒரு            துர்ப்பாக்கியசாலியாக ஆவதற்குக் காரணமானவன் நீதானா?” என்று கேட்டது படித்துறையின் படிக்கட்டு. இதைக்கேட்டு கைத்தடி அதிர்ந்தது. அந்த நேரம் , 

“ அமைதி! அமைதி!” என்ற குரல் கேட்டு படிக்கட்டும் கைத்தடியும் திரும்பிப் பார்த்தனர். 

“ யார் நீ? இங்கு வந்து எங்களை அமைதிப் படுத்த ? “ என்று ஒத்த குரலில் கேட்டனர். 

“ என்னைத் தெரியவில்லையா? நான்தான் அந்த ஜமீன்களுக்கிடையில் நடந்த வரப்பு வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் உட்கார்ந்திருந்த மேஜையும் நாற்காலியும்.  என் மீது உட்கார்ந்தது உட்கார்ந்து என் மீது வைத்து எழுதி எழுதி என் மீது ஆர்டர் ஆர்டர் என்று சுத்தியலால் தட்டித்  தட்டி என்னையும் உடைத்து , இனி நானும்  இலாயக்கு இல்லை என்று இந்த ஆற்றின் கரையில் அனாதையாக தூக்கி வீசிவிட்டுப் போய்விட்டார்கள் “ நானும் கறையான்களால் அரிக்கப் பட்டு கை இல்லை கால் இல்லே ஆண்டவரே என்று கதறும் நிலையில் இருக்கிறேன் “  என்றது கண்களை கசக்கியபடி. 

“ சரி கைத்தடி!  இருக்கட்டும் நாங்கள் இருவருமே உன்னுடைய  சோகக் கதையில்  சம்பந்தப் பட்டு இருக்கிறோம் . ஆகவே நீ கதையைத் தொடர்ந்து சொல் “ என்று படிக்கட்டு கைத்தடியிடம் கேட்டது. 

“ என் எஜமானும் அடுத்த ஜாமீனும் அன்றைக்கு ஏறிய கோர்ட்டுகளின் படிகள்தான் . இன்னும் வழக்கு தீர்ந்தபாடில்லை. நடந்து நடந்து என் எஜமானுக்கு மூட்டுவலி, மேல் மூச்சு கீழ் மூச்சு . அந்த நேரத்தில் அவர் காலூன்ற  கை கொடுத்தவன் நான்தான். கேஸ் போட்ட ஆரம்ப காலத்தில்  என்  எஜமானுடன் கூட வந்து கொண்டிருந்தவர்கள் காலம் செல்லச்செல்ல வருவதை நிறுத்திக் கொண்டனர். பல நேரங்களில் என் எஜமானுடன் அவர்களும் முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டுகளிலேயே உட்கார்ந்து விடுவார்கள். கேஸ் போடப் போகும்போது கருபாக  இருந்த ஏன் எஜமானின் முருக்கு மீசை வெளுத்துப் போனது. கம்பீரமாக நடந்த அவர் நடை தளர்ந்து போனது. மடிப்புக் கலையாத அவர் உடை கசங்கிப் போனது. இப்படியெல்லாம் அவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நடந்தது,  வயலில் ஒரு வரப்பைப் பிடித்துவிடவேண்டுமென்றே.     

அன்றொரு நாள். அடுத்த வாய்தா நாள். எங்களின் ஜமீன்தாருக்கு வாதாட அவர் சார்பாக ஒரு கறுப்புக் கோட்டுப் போட்ட இளைஞர் வந்தார். அவரை வக்கீல் என்றார்கள்.  அந்த இளைஞரைப் பார்த்து எங்கள் ஜமீன்தார் நீங்கள் யார் எப்போதும் எனக்காக வாதாடும் பெரியவர் எங்கே என்று கேட்டார். அங்கு இன்னொரு சோகம் பற்றிக் கொண்டது. மிடுக்குடன் வாதாடவந்த இளைய வக்கீல் சோகம் கொப்பளிக்க சொன்னார் . அவர் என் அப்பாதான். அறுபது வயதான அவர் கடந்த ஆறு மாதம் முன்பு  திடீரென்று இறந்துவிட்டார். அவருக்கு பதிலாக அவர் நடத்தி வந்த வழக்குகளை இப்போது நான்தான் நடத்துகிறேன் என்று அந்த இளம் வக்கீல் சொன்னார். 

என் எஜமானுக்கு ஆத்திரத்திலும் அவநம்பிக்கையிலும் வெள்ளை மீசை துடித்தது. அடப்பாவிகளா! எனக்கு ஏன் ஆறு மாதமாக யாருமே சொல்லவில்லை? என்று கோபத்துடன் கேட்டார். ஆறு மாதம் வழக்கு ஒத்திப் போடப்பட்டு இருக்கிறது என்று அப்பா சொல்லி இருப்பாரே ! என்று இளம்  வக்கீல் சொன்னார். இதைக் கேட்ட ஏன் எஜமான் இப்படித்தான் போன நாற்பது வருடமாக சொல்லச்சொல்லி என் ஆயுளைத்தொலைத்த  உங்க அப்பா இப்போ அவரது ஆயுளையும் தொலைத்துவிட்டு மண்டையை போட்டுவிட்டார். இப்போ நீங்க  வந்து என் ஆயுளைத் தொலைக்கப் போகிறீர்களா என்று கோபமாக சப்தமிட்டுக் கொண்டே  அவர் கையில் இருந்த அவரது அன்புக்குரிய கைத்தடியான என்னை ஓங்கி அந்த நீதிமன்றத்தின் கடப்பாக் கல் பதிக்கப் பட்ட தரையில் அடித்தார். நான் ஒரு ஓரத்தில் உடைந்து போனேன். ஆனால் ஏன் எஜமான் தனது நாற்பது வயதை தொலைத்த ஆத்திரத்தோடு கீழே தளர்ந்து சரிந்தார். 

உடனே அவரது உயிர் பரலோகம் நோக்கிப் பறந்து சென்று விட்டது. 

இதுவரை அரசியல்துறை அவலங்களைக் கண்டுவந்த நாம் நீதித்துறை அவலங்களை கைத்தடி  இன்னும் சொல்லும்வரை காத்திருப்போம். 

தொடரும் இன்ஷா அல்லாஹ்...
ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி.

26 Responses So Far:

Unknown said...

கைத்தடியும் படித்துறையும் வரப்பும் சேர்ந்து ஒரு அரசியல் எதார்த்தத்தை அழகாக சொல்லுகின்றது..

தாமதிக்கப்பட்ட நீதி , மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது போல்

நம் நாட்டின் நீதித்துறையில் ஓட்டை உடசல்களால் நீதி செலுத்துவது எவ்வளு தூரம் தாமதமாகின்றது என்பதை,, கைத்தடி, படித்துறை வரப்பு என்ற பாத்திரங்களின் மூலம் சொல்லி வருவது, இரு காக்கா மார்களின் எழுத்து வண்ணத்தில், தங்கள்களுக்கு உரிய அழகிய பாணியின் சொல்லாக்கத்தில் தொடர்வது அருமை..

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

கைத்தடி தன் கதையைப் பரிதாபமாக ஆரம்பித்தாலும் விபரீதமாக முடிக்கும்போல் உள்ளதே!

Ebrahim Ansari said...

//கைத்தடி தன் கதையைப் பரிதாபமாக ஆரம்பித்தாலும் விபரீதமாக முடிக்கும்போல் உள்ளதே!//

இருக்கலாம். ஒரு பொடியரும் ஒரு தடியரும் எழுதுவதால் இருக்கலாம்.

Ebrahim Ansari said...

நீண்டகாலமாக பச்சை பெல்ட் பச்சைத் தைலம் கஞ்சிப் பிராக்கு என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களே அவற்றை உணமையாகவே தம்பி அப்துல் காதர் அவர்களுக்கு வழங்கினால் என்ன?

தொடர்ந்து அனைத்துப் பதிவுகளுக்கும் அக்கறையுடன் முதல் பின்னூ ட்டம் இட்டு பதிவாளர்களை ஆர்வப்படுத்தும் அன்பு மனத்தைப் பாராட்டி.

Yasir said...

கைத்தடியை வைத்து இம்புட்டு விசயம் தொடரட்டும் ...என்னதான் ஆவுதுண்டு பார்ப்போம்

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களே!

இது இன்னொரு பேய்க் கதை என நினைக்கிறேன்.

نتائج الاعداية بسوريا said...

//தொடர்ந்து அனைத்துப் பதிவுகளுக்கும் அக்கறையுடன் முதல் பின்னூ ட்டம் இட்டு பதிவாளர்களை ஆர்வப்படுத்தும் அன்பு மனத்தைப் பாராட்டி.//

காக்கா,

நான் சவுதியில் இருந்தாலும் காலையில் நான்கு மணிக்கே எழுந்துவிடுவேன்.. சுபுகு தொழுததும் முதல் வேலையாக சாயா போட்டு குடித்து விட்டு அடுத்த வேலை. A.N. வலைதளத்தில் உட்காருவதுதான்.

ஆதலால் பின்னூட்டத்தில் முதல் ஆளாக முந்தி வந்து கொண்டு இருக்கின்றேன்.

என் அன்பு நண்பன் சபீரிடம் சொல்லி ஏதேனும் நல்ல பரிசாக தர சொல்லுங்கள்.

A.N. வலை தளத்தின் ஞாபகர்த்தமாக .

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

//இது இன்னொரு பேய்க் கதை என நினைக்கிறேன்.//

இது பேயக்கதையல்ல,

மூன்று திடப்பொருளுக்கு உயிர் கொடுத்து
உலவவிடும் ஒரு எதார்த்த மனித வாழ்வின் ஒரு சிறிய அலசல்.

பேய்க்கதை போல தோன்றினாலும் இறுதியில் ஒரு நீதிக்கதை
இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

//நீண்டகாலமாக பச்சை பெல்ட் பச்சைத் தைலம் கஞ்சிப் பிராக்கு//

காக்கா, பச்சை பெல்ட் , பச்சை தைலம், என்பது தெரியும், அது என்ன கஞ்சி பிராக்கு ?

முன்பே இது என்ன என்று கேட்க இருந்தேன் .( இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது)

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ ஆசிப்

கஞ்சி பிராக்கு என்பது ஒன்றும் பேய் அல்ல. பயப்படவேண்டாம்.

அந்தக் காலத்தில் மலேசியாவில் இருந்து வருபவர்கள் பனியனை கஞ்சிப் பிராக்கு என்று சொல்வார்கள். பச்சைத்தைலமும் பச்சை பெல்ட்டும் நமது ஊருக்கு அறிமுகமானது அங்கிருந்துதான் அதனால்தான் கஞ்சிப் பிராக்கு என்று சொன்னேன்.

கஞ்சிப் பிராக்கு என்று பெயர் வரக க் காரணத்தை மலேசிய நாட்டுப் பிரதிநிதிதான் சொல்ல வேண்டும்.

இதே போல் மலேசியத்தமிழ் வார்த்தைகள் சில சிறப்பாக இருக்கும்.

உதாரணமாக

படமோடை= சினிமா தியேட்டர்
குசினி = சமையல் கட்டு
தண்ணீர் = டீ
சாமான் கூடு = டாய்லெட்

نتائج الاعداية بسوريا said...

மலேசியக்காரர்களை உசிப்பிவிட்டால் மேலும் பல புதிய தமிழ் அகராதிகள்
வெளிப்படும்போல் தெரிகின்றதே

نتائج الاعداية بسوريا said...

காக்கா உங்களது, பகுருதீன் காக்கா, மற்றும் பாரூக் காக்கா ஆகியோரது கைப்பேசி எண்ணை எனக்கு என் எண்ணுக்கு மெசேஜ் பண்ணவும்,

இன்ஷா அல்லா கூடிய சீக்கிரத்தில் ஊருக்கு வருவேன். தங்கல்களிடம் அளவளாவ வேணும்.

என் கைப்பேசி எண் 00 966 0567643169 , ரியாத் ( சவுதி அரேபியா )

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

இன்னொரு மலேசிய தமிழ் வார்த்தை

அஞ்சடி = திண்ணை.

Shameed said...

இந்த வரப்பு கேஸ் தீர்ப்பு எப்போ வருமுன்னு சரியா சொல்றவங்களுக்கும் பச்சை பெல்ட் பச்சைத் தைலம் கஞ்சிப் பிராக்கு பரிசு கொடுக்கலாம்

ZAKIR HUSSAIN said...

அஞ்சடி = பிளாட்ஃபாரம். [ ஐந்து அடி கொண்ட இடம் ]

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்காமார்களே,

வேலைச்சுமை நிமித்தம் அதிகம் கருத்தாட வழியில்லாமல் போயிற்று. ஒரு அம்புலிமாமா கதையைப்போல் ஆரம்பித்து மர்ம நாவல் ரேஞ்சுக்குக் கொண்டு போகிறீர்கள். இதில் ஏதோ அரசியல் சாணக்கியத்தனம் இருப்பதாகப் படுகிறது. ஏற்கனவே நேற்றைய அரசியலை பிரிச்சு அக்கு வேறு ஆணிவேறாக அலசிய தாங்கள் இருவரும் இந்த கைத்தடி கொண்டுசொல்ல நினைப்பது என்ன என்று அறிய ரொம்ப ஆவலாக இருக்கிறது.

அமீரக வாரம் ஒரு நாளைப்போல சட்டென்று கடந்துவிடும்தான் இருப்பினும் இப்படி சஸ்பென்ஸ் வைத்தால் ஒரு வாரம் தூரமாகத் தெரிகிறது.

பேப்பர் லீக் ஆகும் ச்சான்ஸ் இல்லையா?

அட்டகாசமாகப் பயணிக்கும் இந்தத் தொடரின் எழுத்தாள நாயகரகளுக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

காதரு, மேரா ப்யாரா தோஸ்து,

உனக்கில்லாத பரிசா? தலை துவட்ட ஒரு நல்ல ட்டர்க்கி ட்டவலும் தலை வார ஒரு நல்ல சீப்பும் தலைமுடியில் தடவ யார்ட்லி ஹேர் க்ரீமும் அனுப்பி வைக்கவா?

(உனக்கு பிரயோஜனப் படாவிட்டாலும் ஆசிஃபுக்காவது கொடுப்பேல்ல?)

KALAM SHAICK ABDUL KADER said...

நபி மூஸா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாகக் காட்சியளிததது போல்,
மூத்த காக்காவும், இளைய தம்பியும் இணைந்து ஊன்றிச் செல்லும் இந்தக் கைத்தடியும் நமக்கு ஓர் அற்புதம் காட்டுமோ? ஆனால், அந்தக் கைத்தடி ஒரு வரலாற்று உண்மை என்றும்; இந்தக் கைத்தடி ஒரு கற்பனைக் கதை என்றும் பகுத்தறியும் ஆற்றலும் எமக்கு உண்டு.

Unknown said...

//உனக்கில்லாத பரிசா? தலை துவட்ட ஒரு நல்ல ட்டர்க்கி ட்டவலும் தலை வார ஒரு நல்ல சீப்பும் தலைமுடியில் தடவ யார்ட்லி ஹேர் க்ரீமும் அனுப்பி வைக்கவா?//என் தலையில் கை வைக்காம உனக்கு பொழுது போகாதே.

சைக்கிள் கேப்புலே தலையிலே கை வச்சுடுவியே. ( இப்பொழுது லேசாக கொட்டிய இடத்தில் முடி முளைக்க ஆரம்பிக்குது )



Anonymous said...

பேதா-போலிசு/

உளவுபேதா-துப்பறியும் போலீஸ்/

சப்தாங்கன்=கை குட்டை/

பிளாஞ்சா=[ஒருவருக்கு]செலவுசெய்தல்.அன்பளிப்பு/

நாசிலும்மா=.நெய்சோறு./

மாக்கான்= சாப்பாடு/ஜாலன்= நடைபாதை. /

ஜாலன்ஜாலன்=நடை/

கச்சோர்=தொல்லை கொடுப்பது அல்லது இடைஞ்சல் செய்வது./

அஞ்ஜடிக்காரன்=மட்டமானவன்,பொறுக்கிபயல்/

செலவுகாஸு=இந்தியர்கள் கடையில்வேலை

செய்பவர்களுக்குபசியாறகொடுக்கும்காஸு/

ஓராங்=மனிதன்/

ஓராங்ஹுத்தான்= குரங்கு./

ஹூத்தான்= காடு/

அல்லூறு=சாக்கடை/

வங்கசா கடை=மளிகை கடை/

கண்ணாடிகடை=சலூன்/

காடி=வாகனம்,Car/

அப்பமச்சம்=என்னசெய்தி/

சிந்தாபடாமு=[நான்]உன்னைகாதலிக்கிறேன்!/

அடாபைக்கா=நலந்தானா! நலந்தானா! உடலும் உள்ளமும் நலந்தானா!/

ஜும்பா lagi=மீண்டும் சந்திப்போம்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

//இன்றைய மலேசியா வார்த்தை-அஞ்சடி=திண்ணை

இப்ராஹிம் அன்சாரி சொன்னது// அன்புள்ள மைத்துனரே!

திண்ணை எல்லாம் மலேசியாவில் இல்லை!.

அதனால் 'திண்ணைப் பேச்சு'ம் இல்லை!

''மம்மசங்கனி பொண்டாட்டி எறமத்தும்மா அஞ்சு பவுனுக்கு ஹிஜ்ஜட்டிய செஞ்சு களுத்துலே போட்டு இருக்காளாமுளோ! பாத்தியா?'' இது மெய்ன் பக்கிர் பொண்டாட்டி மம்மாத்து மிச்சியா அங்கலாய்ப்பு!

''ஆமாம்மா! கேள்விபட்டேன்! எங்கேஈந்து தான் இவ்வளவு காஸும்
இந்த மம்மாசங்கனிக்கி வருதோ? தெரியலேயேம்மா! மாசா மாஷம் பணம் பணமா அள்ளி அள்ளிஅனுப்புறா நேமா!' 'இது ரைமத்து குபுறவின் மனக் குமுறல்!

இது மாதிரியான திண்ணைப் பேச்சுபேச அங்கே திண்ணை''.தடா!'' [தடா=இல்லை]

[மம்மாசங்கனி=முஹம்மது ஹசன்கனி//
எறமத்தும்மா=ரஹ்மத்து அம்மாள்//
மெய்ன்பக்கிர்= மொஹிதீன் பக்கிர்//
மம்மாத்து மிச்சியா=முஹம்மது பாத்திமா நாச்சியா//
ரைமத்து குப்புறா=ரஹ்மத்துல் குப்uறா/

S.முஹம்மது பாரூக்.அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கைத்தடி சொல்ல இருப்பது நீதி மன்றங்களின் மேசையில் இருக்கும், "அமைதி அமைதி அமைதி" கட்டையாக மாற இருக்கிறது அடுத்த வாரம் !

இரண்டு காக்காஸ் கைகோர்த்து அழைத்துச் சென்று காட்டும் இந்த இடங்களும் அவற்றின் வர்ணனையும் நேற்று இன்று நாளை மட்டுமல்ல என்றும் பேசும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கைத்தடியுடன் மலேசிய பாசை தரும் நல்ல பாடம்.!

Ebrahim Ansari said...

அவனா அவன் பினாங்கில் அஞ்சடியில் படுக்கிறான்

என்று பேசிக் கொள்வார்கள். நான் அஞ்சடியை திண்ணை என்று நினைத்தேன்.
ஆனால் அது பிளாட்பாரம் என்று தம்பி ஜாகிர் மூலம் தெரிந்து கொண்டேன்.
ஆக, அங்கு திண்ணை இல்லை அதனால் இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் ஓர் கண்ணா இருக்கணும் அண்ணாச்சி என்று பாடவேண்டியது இல்லை.

sabeer.abushahruk said...

காக்கா,

அது ஜஸ்ட் ப்ளாட்ஃபார்ம் மட்டுமில்ல; அந்த சிமெண்ட் ஸ்லாப்க்குக் கீழே சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும், கும்பகோணம் மணிக்காரத் தெருவைப்போல.

நான் பாத்திருக்கேன். நான் பார்த்தபோது

நேற்று: வேலைமுடிந்து கப்பலைவிட்டு வெளியே வந்த பின்னரும் அலைபோன்ற ஆட்டமும் மிதப்பும் குறையாமப் பார்த்தேன்.

இன்று; அங்கு விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்; குரட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்

நாளை: நாளை நமதே என்றும் சொல்லும் அளவுக்கு நம் வம்சாவழியினர் கோலோச்சுவதாக எனக்குத் தெரியவில்லை.

(எந்த நாட்டு அரசியலாயிருந்தாலும் நாங்கள்ள்லாம் பதிவுக்குத் தொடர்பில்லாமல் கருத்துப்போடவே மாட்டோம்ல)

Anonymous said...

//விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்//

மருமகனே சபீரு! விழித்துக் கொண்டோரில் பிழைத்தவர்கள் கொஞ்சமே! ஏமாற்றியவர்கள், பித்தலாட்டம் செய்தவர்கள். பொய் கணக்கு பங்காளி மோசடி, துரோகம், உழைதவன் ரத்தத்தைக் உறிஞ்சி உறிஞ்சி குடித்த பின் பங்காளிக்கு பே!பே! சொன்னவர்களும் பிழைதுக்கொண்டார்தான்..

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு