Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒளரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 3 [வரலாறு பதிக்கப்படுகிறது] 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2013 | , , , ,

சிந்தையின்றிப் பூட்டிச் சிறையினில் வாட்டியே
தந்தையையும் வீணாகத் தண்டித்த- விந்தைமிகுச்
செய்தியாகச் சொல்லுமவர் செய்தத் தவறென்ன
கைதியாய்த் தந்தையைக் காண்.

காணும் தவற்றினைக் கூறிப் பிதற்றிடும் காரணங்கள்
பேணும் ஒழுக்கம் பிறழா இணையிலாப் பேரெளிமை;
நாணும் அரசரின் ஆளும் விவேகமும் நானிலங்கள்
பூணும் விரிவினால் காழ்ப்பினைப் பொய்மையில் பூசினரே!

பூசி மறைக்கும் பொழுதினில்
.....பொய்யாய்த் திரித்துச் சரித்திரம்
பேசி மக்கள் மனத்தினில்
....பேதம் கொள்ளச் செய்வதே
கூசி டவைக்கும் இவர்களின்
...கூட்டுச் சதியாம் கதைகளைத்
தூசி தட்டி உள்ளமைத்
...தூய்மை ஈண்டு நிலவுமே!

நிலவிடும் தவறுகள் நிகழா வண்ணமே
பலவித முயற்சிகள் பரிவுடன் தடைகட்
செய்தார் ஔரங்க சீப்பென வெகுண்டே
பொய்கள் கொண்டுதான் புனைந்தனர் வரலாற்(று)
ஆசிரி யரென்போர் ஆரியர் குழுவாம்
மாசில் மன்னரின் மகிமையை மறைத்துப்
போட்டவைப் புலம்பலின் பொடியாய்க்
காட்டும் மெய்கள் கட்டுரை வழியே!

“கவியன்பன்” கலாம்

4 Responses So Far:

sabeer.abushahruk said...

மாமன்னரின் உண்மையான வரலாற்றை செய்யுள் வடிவில் யாத்துப் பதிந்து வரும் கவியன்பன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!

Anonymous said...

//காழ்ப்பினை பொய்மையில் பூசினரே //
பொய் மையில் பூசினரே! [நான் வரி]

பொறுத்தமான இரட்டை அர்த்தம்!. சொல்லாட்சி திறனையும் கவித் திறனையும் ஒருங்கே காட்டுகிறது..பாராட்டுகள் சகோதரர் கவியன்பரே!

S.முஹம்மது பாரூக்.அதிராம்பட்டினம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

The great & simple moghal emperor marhoom janab Aurangajib's history of uprightness with dignity are hidden here in our nation which can lead & guide the current young generation in the right path to shine our country in the world platform and ugly, corrupted history are in every students' syllabus now which bring them to false & fake path lying them in the road or drainage as a drunkards by drinking TASMAC. Our conch to be blown until our last breath eventhough it's not reached to the ears those are acting like a deaf & dumb without liking to listen the words from the real heaven. Kaviyanban kaka, you are making poetries for the sake of Allah. May Allah bestow his all blessings & mercies upon all of us in his grace.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொய்யர்களிடம் உள்ளதை சொல்லி போர்தொடுக்கும் நற்கவிதை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு