Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொடர் 3/4 48

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2013 | , , ,

உருவத்தை நெருங்கியதும் கம்பை ஓங்கி ஒரே போடாக நண்பன் ஓங்கி அடித்தான் அந்த அடி  தாங்க முடியாமல் அந்த "அலையாத்தி" செடி சட சட வென்று முறிந்தது மேலும் பல அடிகளை அந்த அலையாத்தி செடியை அடித்து விட்டு நண்பர்கள் நின்ற இடத்திற்கு வந்ததும் அலையாத்தி செடி வாங்கிய அடி எல்லாம் பேயை காட்ட வந்தவருக்கு விழுந்தது போல் இருந்தது அவர் முகம். 

இரவு வீடு வந்து சேரும் போது அதிகாலை மூன்று மணி வீட்டில் கதவை தட்டியதும் உம்மா வந்து கதவை திறந்து விட்டு, “இப்படி நடு சாமத்துலே ஊற சுத்திகிட்டு வர்றியே பேயோ  பிசாசோ பின்னாடியே வந்து ஊட்டுக்குள்ள உட்காரப் போவுது”  என்று ஒரு திட்டு திட்டி கதவை திறந்து விட்டார்கள்.

ஒருவாரம் கழிந்த பின்னர் ‘ஆவிகள் தொடர்பும் அடையும் நன்மைகளும்’ என்ற புத்தகம் கைக்கு வந்து கிடைத்தது புத்தகம் வந்ததில் இருந்து நண்பர்களுடன் ஒரு வரி விடாமல் ஒரே நாளில் படித்து முடித்தோம். அந்த புத்தகத்தில் சொன்னபடி ஆவிகளோடு தொடர்பு கொள்ள அனைத்து ஏற்படுகளும் செய்தாகி விட்டது.

அதெப்படி என்றால் சிறிய கேரம் போர்டின் மேல்  பலகையில்  A B C D அனைத்து எழுத்துக்களையும் எழுதி  சுத்தி ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும் கேரம் போர்டின் நடு பகுதியில் ஒரு சிறிய கிளாசை தலை கீழாக கவுத்தி வைத்து கிழக்கு மேற்காக இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு இருவரின் ஆள் காட்டி விரலை அந்த கிளாசின் மேல் வைத்து “புண்ணிய லோகத்தில் இருக்கும் ஆவியே எங்களோடு  பேச வாருங்கள்” என்று அழைக்க வேண்டும். 

அப்படி அழைத்ததும் கிளாஸ் மெல்ல  தானாக நகரும்  A B C D ஒவ்வொரு எழுத்தாக காட்டும் அந்த நேரத்தில் நாம் என்ன கேட்க விரும்புகின்றோமோ அதை நாம் வாய்விட்டு சொல்ல வேண்டும்  அப்படி நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது ஒவ்வொரு எழுத்தையும்  காட்டும் அதை ஒருவர் குறித்துகொண்டு வந்தால் வாக்கியங்கள் கிடைக்கும் என்று அந்த புத்தகத்தில் பதிந்து இருந்தது.

இதை செய்யும்  இடம் சுத்தமாக (சுத்தபத்தமா) இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நல்ல ஆவி வரும் என்றும் அந்த புத்தகத்தில் இருந்தது. சரி எப்படியும் ஆவியுடன் பேசிவிட வேண்டும் என்ற ஆவலில் நாங்கள் இதற்காக தேர்வு செய்த இடம் சின்ன புளிய மரத்தடிக்கு எதிரிலே இருந்த நூர் கடையின் பின் பகுதி-ரூம் அன்று மலை அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்து பத்தியெல்லாம் கொளுத்தி வைத்து அன்று இரவு ஆவியுடன் தொடர்பு கொள்ள ஆயத்தமானோம்.

இரவு மணி ஒன்பது ஆனது நண்பர்களில் ஒரு சிலர் ஒவ்வொரு ஆளாக செத்த மாட்டில் உண்ணி இறங்குவதுபோல் பயத்தால் மிஸ்ஸிங்  ஆனார்கள்.  கடைசியா மிஞ்சியது இருவர் தான் அதில் நானும் ஒருவன். இருவரும் கடையின் பின் பகுதி ரூமில் சென்று ரெடியாக இருந்த கேரம் போர்டை எடுத்து வைத்து அதில் கிளாசை கவுத்தி இருவரும் ஆள் காட்டி விரலை வைத்து புண்ணிய லோகத்தில் இருக்கும் ஆவிகள் எங்களுடன் பேச வாருங்கள் என்றதும்  கிளாஸ் மெல்ல நகர  ஆரபித்தது கிளாஸ் நகர ஆரம்பித்ததும் எங்களை அறியாது உடம்பு ஜில்லிட்டு சிலிர்த்ததுக்  கொண்டது கிளாஸ் மெல்ல நகர்ந்து எழுத்தை தொட்டதும் சொல்லி வைத்தார் போல் கரண்டு கட்டானது.

கொஞ்ச நேரத்தில் காற்று அடித்து மழை கொட்ட ஆரம்பித்தது இருவரது விரல்களும் அனிச்சையாக கிளாசை விட்டு விலகியது அந்த  நேரம் பார்த்து   நண்பருக்கு தலை சுற்றி மயக்கம் வந்து கீழே சரிந்து விட்டார். நான் பயந்து போய் கடை உள்ளே சென்று  மெழுகுதிரி எடுத்து கொளுத்தி ஒரு சோடாவை உடைத்து அவர் வாயில் ஊற்றினேன் சோடாவை குடித்து கண் முழித்தவர் “ஏதோ இரத்த  வாடை அடிக்கின்றது” என்று சொல்லி மேலும் பயத்தை காட்ட ஆரம்பித்தார் எனக்கோ பயத்தில் வேர்த்து விறுவிறுத்து  கை காலலெல்லாம் ஆட  ஆரம்பித்தது.

ஒருவாறாக தைரியத்தை வரவழைத்து கொண்டு அந்த இருட்டிலும் நண்பரை கைத்தாங்காளாக அவர் வீட்டுக்கு அழைத்து கொண்டு போய்  விட்டு விட்டு. அங்கிருந்து எடுத்த ஓட்டம் எந்த சாம்பியனும் என்னை ஜெயித்திருக்க முடியாது அப்படி ஒரு ஓட்டம். என் வீட்டில் வந்துதான்  நின்றேன். அன்று இரவு முழுதும் தூக்கம் இல்லை, அந்த கிளாஸ் நகர்ந்த விதம் என்னை பயம் காட்டிக் கொண்டே இருந்தது ஏண்டா இதை தனியாக செய்தோம் என்ற சிந்தனை வேறு மனதை போட்டு குழப்பியது ஒருவாறாக பொழுது விடிந்தது நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினோம். இரவு நடந்த நிகழ்ச்சியை சொல்லிக் காட்டினேன் அவர்களுக்கோ ஆச்சர்யம் கிளாஸ் நகர்ந்ததா என்று ஆமாம் என்றதும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

அந்த முடிவு என்னவென்றால் இந்த ஆவிகள் தொடர்பு இரவில் வேண்டாம் பகலில் குறைந்தது 5 பேராவது இருக்கணும் இப்படியாக தீர்மானம் போட்டு ஆவியுடன் தொடர்பு  கொள்ளும் வேலையை ஆரம்பித்தோம். கேரம் போர்டை எடுத்து வைத்து கிளாசை கவிழ்த்து கை விரலை வைத்தது புண்ணிய லோகத்தில் இருக்கும் ஆவி எங்களுடன் (இணைப்பில்) தொடர்பு கொள்ளவும் என்று சொன்னதும்  கிளாஸ் மெல்ல நகர்ந்து வாக்கியங்களை (எழுத்துக்களை) காட்ட ஆரம்பித்தது.

அங்கே நடந்த உரையாடல் இதோ :-

கேள்வி : வந்திருக்கும் ஆவியின் பெயர் என்ன ?

ஆவி : "என் பெயர் “       ” [பெயரைச் சொன்னா கொட்டாவி விட்டுடுவீங்க]

கேள்வி : “நீங்கள் இறந்து எத்தனை நாட்கள் ?”

ஆவி  : 38 நாட்கள் ஆச்சு

கேள்வி : “நீங்கள் எந்த ஊர் ?”

ஆவி : “இந்த ஊர்தான் !”

கேள்வி;    எந்த தெரு 

ஆவி : “அந்த விபரம் எல்லாம் சொல்ல வேண்டும் என்றால் எனக்காக  யாசின் ஓதுங்கள் அப்போத்தான் பதில் சொல்லுவேன்”

கேள்வி : ஏன் எதற்காக உங்களுக்கு யாஸின் ஓத  வேண்டும் 

ஆவி : கபுரில் வேதனை தாங்க முடியவில்லை அதனால் எனக்கு யாசின் ஓதுங்கள் 

கேள்வி : என்ன மாதிரியான வேதனை கபுரில் நடக்கின்றது 

ஆவி : அதை இங்கே சொன்னால் உங்களுக்கு புரியாது அனுபவிக்கும் போதுதான் புரியும்.

இதற்கு மேல் கேள்வி கேட்காமல் நண்பரை வைத்து யாஸின் ஓதி முடித்ததும் கேள்வி தொடர்ந்தது...

கேள்வி : உங்களுக்கு  எந்த தெரு 

ஆவி : பெரிய தைக்கால்  தெரு 

கேள்வி : உங்கள் வீட்டு நம்பர் 

ஆவி : 23 தைக்கால்  தெரு.

கேள்வி : சரி இதல்லாம் உண்மையா என்று  நாங்கள் பார்த்துவிட்டு பிறகு உங்களை  தொடர்பு கொள்கின்றோம் போய்  வாருங்கள் 

ஆவி : நல்லது நீங்கள் அழைக்கும் போது வருகின்றேன் .

தொடர்பை துண்டித்துக்கொண்டு நண்பர்கள் அனைவரும் பெரிய தைக்கால் 23ம் நம்பர் வீட்டை நோக்கி படை எடுத்தோம் 23ம் நம்பர் வீட்டுக்கு சென்று, “உங்கள் வீட்டில் சமிபத்தில் யாரும் இறந்து போனார்களா?” என்று கேட்டோம் ஆமாம் இறந்து போய்  38 நாட்கள் ஆகின்றது நாளை மறுநாள் 40ம் ஹத்தம் சோறு ஆக்கத்தான் விறகு வந்து வாசலில் கிடக்கின்றது என்றார்கள் எங்கள் அனைவருக்கும் குடல் கொதவலை வரை வந்து சென்றது 

தொடரும்
Sஹமீது

48 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

திக்கு, திக்கு என்று அடிக்க வைக்கும் ஒவ்வொரு வரிகளும். ஹமீத் காக்கா, நீங்கள் என்றோ அன்று செய்த இந்த ஆவிகளின் பரிசோதனையை இன்று செய்திருந்தால் ஆவிகள் "யான் வாப்பாமாரா என்னை திரும்பி அழைக்க இத்தனை கஷ்டங்கள் உங்களுக்கு? என்று சொல்லி ஸ்கைப்பி, ஜிமெயில் அட்ரஸுடன் அவசர அழைப்புக்கு என மூன்று டிஜிட் டெலிபோன் நம்பரும் தந்திருக்கும்.

மற்றும் கேரம்போர்டுக்கு பதிலாக யாராச்சும் கேலக்ஸி5 அல்லது ஐஃபோன்5 வைத்திருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கும்.

டொக்கோமோவின் அதன் நம்பருக்கு அம்பது ரூவாய்க்கு ரீசார்ஜ் செய்யச்சொல்லி இருக்கும்.

சொந்தக்கார ஆவியாக இருந்திருந்தால் ஊட்ல வாப்பா, உம்மாவெல்லாம் நல்லார்க்காங்களா? மச்சானுக்கு அமெரிக்கா விசா வந்திருச்சா? என்றெல்லாம் நலம் விசாரித்திருக்கும்.

இணையத்தில் தொடர்பு உள்ள ஆவியாக இருந்திருந்தால் ஏன் நம்மூரில் நடக்க இருந்த மராத்தான் ஓட்டப்போட்டியை நிறுத்தி விட்டார்கள்? என்று கேட்டிருக்கும்.

ஊரில் மக்கள் பண்ணும் அட்டூழியங்களை ஒழிக்காமல் மழை தண்ணி இல்லாததற்கு வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணனை மக்கள் குறைகூறித்திரிவதை குறை சொல்லி வருத்தப்பட்டிருக்கும்.

பணமிருந்தால் மார்க்கமுண்டு என்று பழமொழியை திரித்து மக்கள் பணத்திற்காக இன்று அலைந்துதிரிவதையும், அதனால் வரும் சண்டை சச்சரவுகளையும் பட்டியலிட்டு வசை மாரி பொழிந்து வருத்தப்பட்டிருக்கும்.

இயக்கங்களால் ஒருவருக்கொருவர் வரும் தயக்கங்களையும், அதனால் வரும் இழப்புகளையும் திட்டித்தீர்த்திருக்கும்.

வாப்பா, உம்மாவைப்பேணாத பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதியுடன் எச்சரித்து ஏசி இருக்கும்.

இப்படி இன்னும் என்னவென்னெத்தையெல்லாம் சொல்லி வருத்தப்பட்டிருக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அரசியலில் ஆர்வமுள்ள ஆவியாக இருந்திருந்தால் வரக்கூடிய 2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கைகோர்ப்பவர்களை கண்டபடி கண்ணாபிண்ணாவென்று திட்டித்தீர்த்திருக்கும்.

சொத்துபத்து சேர்ப்பதில் ஆர்வமுள்ள ஆவியாக இருந்திருந்தால் நம்மூரில் இன்று ஒரு மனைக்கட்டு எவ்ளோவ்? என்று விலை விசாரித்திருக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n)னின்... ஆவி பறக்கும் ஆர்ப்பரிப்பு நல்லாத்தானே இருக்கு !

ஆவியை இன்டர்வியூ எடுத்தீங்க கேமரவோடு போயிருந்தா ஒரு அதிரையில் முதன் முறையாக என்று ஒரு காணொளி கலந்துரையாடல் கிடைத்திருக்குமே !

Anonymous said...

அடுத்த சந்திப்பில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் "எந்தக் கூட்டணி ஜெய்க்கும்?'' என்றும் கேட்கலாம்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

யாரும் பயப்படாதிய. பேய்க்கதைன்னு சொல்லிட்டு ஹமீது பூச்சாண்டி காட்றாப்ல எங்களுக்கு பயம்லாம் கிடையாது.

சத்தமா "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" கத்திக்கிட்டே ஓட்டமெடுத்தா "தினம் அச்சப்பட்டு வாழ்வதற்கு உயிரெதுக்கு" என்று பாடுவதற்குள் வூட்டாண்ட போய்டுவோம்ல?

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம ஹமீதுடன் உரையாடிய பேய் படிச்ச பேய்தான்.

படிச்ச பேய் புடிக்காது என்றெல்லாம் கிடையாது, எதுக்கும் சாக்ரதையா உரையாடுங்க.

சஸ்பென்ஸ் தாங்கல. சீக்கிரம் 4/4 வெளியிடுங்கப்பா.

sabeer.abushahruk said...

ஹமீது,

இந்த மாதிரி பேய்க்கதைல மெத்தப் படிச்ச பாதிரியார் வந்து பேய்ட்ட "கேவல"ப்பட்டு முடிச்சி வைப்பாரே அப்டி யாராவது க்ளைமாக்ஸ்ல வர்ராங்கலா?

Ebrahim Ansari said...

சீக்கிரம் அந்த நான்காம் பகுதியை வெளியிடுங்கள்.

பேய் மீதும் ஆவிகள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட நம்பிக்கை வரும்படி இருக்கிறது அந்த பெரிய தைக்கால் தெரு விசாரணையின் விடைகள்.

பலூன் ஊத ஊத நன்றாகவே இருக்கிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படத்தை பேச வைக்கிறீங்க
இல்லாத ஒன்றை பேச வைக்கிறீங்க
இன்னும் என்னவெல்லாம் காட்ட போறீங்க
எதுவானாலும் ரொம்ப சுவராஸ்யமாத் தான் இருக்குங்க

நிகழ்வின் பிரதம விருந்தாளி ஜனாதிபதியாக்காவை இன்னும் காணோமே! வலை விரிக்கவும்?

نتائج الاعداية بسوريا said...

பேயக்கென்று ஒரு பதிவு ,

அதற்கென்று ஒரு சிலர் பின்னூட்டப்பதிவு .

நினைத்தாலே ...ஹஹா .....ஹஹா .....ஹஹா ......ஹஹா......ஹஹா....


அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

என் அன்பின் குடும்ப உறுப்பினர் நைனா அவர்களே,

அதெப்படி, எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டத்தில் விலா வாரியாக பதில் தரும் தாங்கள் பேய் கதைக்குமா ?

இது எப்படி உங்களால் இவ்வளவு தூரம் உட்கார்ந்து யோசித்து எழுத முடிகிறது ?

அபு ஆசிப்.

Anonymous said...

//பேய் படிச்ச பேய்தான் // நீங்க என்ன சொல்றிங்க? ஊடு ஊடா கால் நடையா போயி தபுசு தட்டி பட்டு படிச்சதை சொல்றியளா அல்லது கலேஜுலே படிச்சதை சொல்றியளா?என்னாண்டு வெலங்கலேயே!
--------------------

என்ன மௌத்தா போயி 38 நாளுதான் ஆவுதா?

அப்போ ரெம்போ Latest பேயி! voltage கூட இருக்குமே!

மாலே மகதி நேரம் அந்தப் பக்கம் போனாக்கா ஓதி ஓதி ஊதி ஊதி கிட்டே போங்க!

S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்

Shameed said...

نتائج الاعداية بسوريا சொன்னது…
//பேயக்கென்று ஒரு பதிவு ,

அதற்கென்று ஒரு சிலர் பின்னூட்டப்பதிவு .

நினைத்தாலே ...ஹஹா .....ஹஹா .....ஹஹா ......ஹஹா......ஹஹா....


அபு ஆசிப்.//



இது இதுபோன்ற பின்னுடங்களைத்தான் நான் எதிர் பார்த்தேன்
முடிவில் பதில் அளிக்கின்றேன் சகோ அபு ஆசிப் அவர்களே
வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் பயப்படாமல் கேள்வி கேளுங்கள்

Shameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்

A N வலைதளத்தில் வந்து போகும் அனைத்து சகோதரர்களுக்கும்
இந்த கட்டுரையை நான் எழுத தொடங்கும் போதே நிறைய எதிர்ப்பு வரும் என்று எதிர் பார்த்தேன் ஏனோ தெரியவில்லை அப்படி எதிர்ப்பு ஏதும் வரவில்லை

சகோ அபு ஆசிப் தைரியமாக சின்னதா ஒரு அதிர்ப்தியை காட்டி உள்ளார் அதை நான் இங்கு மனதார வரவேற்கின்றேன்

ZAKIR HUSSAIN said...

சாகுல் & அவரது வயதைச்சார்ந்த குரூப் நூர் கடைக்கு பின்னாடி இருந்த கொட்டகையில் ஆவியுடன் பேசிய அடுத்த நாள் [ ஏறக்குறைய "சுடச்சுட"] செய்தியாக என்னிடம் சொன்னார்கள். அன்றைக்கு முழுக்க நான் புறாக்க்கூண்டு & கொடிமரத்த பார்த்த மாதிரிதான் உட்கார்ந்து இருந்தேன்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
ஹமீது,

//இந்த மாதிரி பேய்க்கதைல மெத்தப் படிச்ச பாதிரியார் வந்து பேய்ட்ட "கேவல"ப்பட்டு முடிச்சி வைப்பாரே அப்டி யாராவது க்ளைமாக்ஸ்ல வர்ராங்கலா?//



வருவாங்க வருவாங்க கைலி கட்டிக்கிட்டு வருவாங்க!!!!!!

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
/சாகுல் & அவரது வயதைச்சார்ந்த குரூப் நூர் கடைக்கு பின்னாடி இருந்த கொட்டகையில் ஆவியுடன் பேசிய அடுத்த நாள் [ ஏறக்குறைய "சுடச்சுட"] செய்தியாக என்னிடம் சொன்னார்கள். அன்றைக்கு முழுக்க நான் புறாக்க்கூண்டு & கொடிமரத்த பார்த்த மாதிரிதான் உட்கார்ந்து இருந்தேன்.//



நீங்க புறா கூண்டை பார்த்த பார்வைலே நீங்க ஏதோ நேத்திகடனுக்கு புறா வாங்கி உடப்போரியலன்னு அப்போ நெனச்சேன்

sabeer.abushahruk said...

காதரு,

இதுக்கு ஏண்டா இப்டி பேய்ச் சிரிப்பு சிரிக்கிறே?

Yasir said...

சாவன்னா காக்காவின் “பேய்” பற்றிய கதையை வன்மையாக எதிர்க்கின்றேன்.....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேய்ட்ட சொல்லிடதீங்க ( காக்கா சந்தோஷம் தானே ).........என்ன வொரு எழுத்தாற்றல் பேய் இல்லை என்று சொல்லுபவர்களும் நம்பும் படியான நடை...வாழ்க ....

نتائج الاعداية بسوريا said...

//வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் பயப்படாமல் கேள்வி கேளுங்கள்//

பயம் நான் வாழ்வில் அறியாத ஒன்று . ( அல்லாஹ்வுக்கன்றி ) சிறு வயதில் பெற்றோர்களுக்கு வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததினால் இப்பொழுத் வீட்டுக்கு போனால் அடி விழுமே என்ற பயம் இருந்ததுண்டு.

மற்றபடி மைத்தாங்கரை (அதுதானுங்கோ மைய வாடி ) பக்கத்தில் போய் ராத்திரி பூராவும் படுத்து காலையில் எழுந்துவா என்றால் போய் படுத்து எழுந்து வரக்கூடிய அளவுக்கு பயப்படாத பார்ட்டி நான்.

எனக்கு எழும் கேள்விகள்.

1. பேயை நேரடியாக பார்த்தவர்கள் யார் ?
2 அதோடு உறவாடியது யார் ?
3. பேயின் உண்மையான நிறம் என்ன ?
4. பூமியில் மட்டும்தான் பேய் உண்டா ? அல்லாத மற்ற கோலங்களிலும் பேய் இருக்கின்றதா ?
5. உண்மையில் பேய்க்கு மனிதனைவிட சக்தி அதிகமா அல்லது குறைவா ?
6. இறந்தவர்கள்தான் பேயாக வருவார்களா ? அல்லது பேயென்று ஒரு சமூகம் இறைவனால் படைக்கப்பட்டதா ?
7. பேயென்று ஒன்று இருந்தால் அதை நம்பும் நாடுகளில்தானே அதைப்பற்றிய பேச்சும் , அது இருக்கின்றது என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
8. பேய் நம்பிக்கை இல்லாத அரபு நாடுகளில் அதைப்பற்றிய பேச்சு இல்லையே ஏன்.

தம்பி சாகுல் இந்தக்கேள்விகளுக்கு பதில் தருமாறு தங்கள் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அபு ஆசிப்.


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எக்ஸ்யூஸ்மீ !

நாங்களும் நிறைய பேயீ பார்த்திருக்கோம் !

அதுல ஒன்னுதான் இந்த "அக்கெவுன்ட் பேயீ" இதைப் பத்தி தெரியுமா உங்களுக்கு !?

Shameed said...

نتائج الاعداية بسوريا சொன்னது…
//வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும் பயப்படாமல் கேள்வி கேளுங்கள்//

//பயம் நான் வாழ்வில் அறியாத ஒன்று . ( அல்லாஹ்வுக்கன்றி ) சிறு வயதில் பெற்றோர்களுக்கு வீட்டு வேலை ஒழுங்காக செய்யாததினால் இப்பொழுத் வீட்டுக்கு போனால் அடி விழுமே என்ற பயம் இருந்ததுண்டு.

மற்றபடி மைத்தாங்கரை (அதுதானுங்கோ மைய வாடி ) பக்கத்தில் போய் ராத்திரி பூராவும் படுத்து காலையில் எழுந்துவா என்றால் போய் படுத்து எழுந்து வரக்கூடிய அளவுக்கு பயப்படாத பார்ட்டி நான்.

எனக்கு எழும் கேள்விகள்.

1. பேயை நேரடியாக பார்த்தவர்கள் யார் ?
2 அதோடு உறவாடியது யார் ?
3. பேயின் உண்மையான நிறம் என்ன ?
4. பூமியில் மட்டும்தான் பேய் உண்டா ? அல்லாத மற்ற கோலங்களிலும் பேய் இருக்கின்றதா ?
5. உண்மையில் பேய்க்கு மனிதனைவிட சக்தி அதிகமா அல்லது குறைவா ?
6. இறந்தவர்கள்தான் பேயாக வருவார்களா ? அல்லது பேயென்று ஒரு சமூகம் இறைவனால் படைக்கப்பட்டதா ?
7. பேயென்று ஒன்று இருந்தால் அதை நம்பும் நாடுகளில்தானே அதைப்பற்றிய பேச்சும் , அது இருக்கின்றது என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
8. பேய் நம்பிக்கை இல்லாத அரபு நாடுகளில் அதைப்பற்றிய பேச்சு இல்லையே ஏன்.

தம்பி சாகுல் இந்தக்கேள்விகளுக்கு பதில் தருமாறு தங்கள் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அபு ஆசிப். //



சகோதரர் அபு ஆசிப் உங்கள் கேள்வி அனைத்திற்கும் நீங்கள் (நாம் )நம்பிக்கை கொண்டபடி நல்ல பதில் இந்த கட்டுரையின் இறுதி பகுதியில் இருக்கு அதை படிக்கும்போது உங்களுக்கும் புரிய வரும் மேலும் இந்த கட்டுரையின் நோக்கம் என்ன என்பதும் அனைவருக்கும் அறிய வரும்.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//படத்தை பேச வைக்கிறீங்க
இல்லாத ஒன்றை பேச வைக்கிறீங்க
இன்னும் என்னவெல்லாம் காட்ட போறீங்க
எதுவானாலும் ரொம்ப சுவராஸ்யமாத் தான் இருக்குங்க

நிகழ்வின் பிரதம விருந்தாளி ஜனாதிபதியாக்காவை இன்னும் காணோமே! வலை விரிக்கவும்?//



வலை விரித்து வலை நமண்டு போச்சு ஜனாதிபதியாக்காவை இன்னும் காணோம்

Shameed said...

//தம்பி சாகுல் இந்தக்கேள்விகளுக்கு பதில் தருமாறு தங்கள் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அபு ஆசிப். //

சகோதரரே அது என்ன தங்கள் சமூகம் புரியவில்லையோ ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//வலை விரித்து வலை நமண்டு போச்சு ஜனாதிபதியாக்காவை இன்னும் காணோம்//


தேடிப்பிடிக்க வலை அல்லாமல் வேறு வழி (நவீன இக்காலத்தில்) உண்டா?

Bloggerரில் போட்டாவும் போடாத ஆளாச்சே, காணவில்லை என்று எப்படி போடுவது? எங்கே தேடுவது?

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…



//தேடிப்பிடிக்க வலை அல்லாமல் வேறு வழி (நவீன இக்காலத்தில்) உண்டா?

Bloggerரில் போட்டாவும் போடாத ஆளாச்சே, காணவில்லை என்று எப்படி போடுவது? எங்கே தேடுவது?//

செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டாங்களே அது ஆள் இல்லாத ராக்கெட்டா ? இல்ல ஆளோடு போய் இருக்கா ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டாங்களே அது ஆள் இல்லாத ராக்கெட்டா ? இல்ல ஆளோடு போய் இருக்கா ?//

அது ஒரு மத சார்புடைய சமஸ்கிருத பெயரில் இருப்பதால் அதில் நம்மாளு போயிருக்க வாய்ப்பில்லை

Ebrahim Ansari said...

//அது ஒரு மத சார்புடைய சமஸ்கிருத பெயரில் இருப்பதால்//

அது மட்டுமல்ல. அந்த செயற்கைக் கோளின மாடலை திருப்பதி கோயிலுக்குக் கொண்டுபோய் பூஜை செய்தே அனுப்பி இருக்கிறார்கள் உலகின் நான்காம் நிலையில் இருக்கும் அறிவியல் அறிஞர்கள். ஒருவேளை இது வெற்றி பெற்றால் அதன் பலன் அறிவியல் அறிஞ்ர்களுகும் செய்யப்பட்ட நானூற்று ஐம்பது கோடி பணத்துக்கும் போகாது.

எல்லாம் அந்த வெங்கடாசலபதியின் அருள் என்று பேசுவார்கள்.

எத்தனை மங்கல்யான் விட்டென்ன?

சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய போதே அமாவாசை அன்று அனுப்பாதே என்றவர்கள்தானே!

Ebrahim Ansari said...

தம்பி அபூ ஆசிப் உடைய கேள்விகளின் பட்டியலில் இதையும் சேர்க்க வேண்டும்.

நமது ஊர் தர்காக்களில் மட்டும் பேய் பிடித்து இருக்கிறது என்று சொல்லி கூந்தலை விரித்துப் போட்டு க் கொண்டு- முட்டிக் கால் போட்டுக் கொண்டு -

என்னோட நாதாவே! என்னோட சீதேவி ! என்று மெட்டுப் போட்டுப் பாடி
பேய் ஆடுவது ஏன்?

இப்படிப்பட்ட பேய்களுக்கு அரபுநாடுகள் வருவதற்கு விசா தடை உண்டா?
எமிகிறேஷன் அனுமதி இல்லையா?

இதைக் கேட்கக் காரணம்,

எனக்குத்தெரிந்த ஒரு திருப்பத்தூர் நண்பரின் மனைவி ஊரில் பேய் ஆடியவர் துபாய்க்கு வந்ததும் ஒருநாள் கூட அப்படி ஆடவில்லையாம்.
ஆனால் விடுமுறையில் ஊருக்குப் போனதும் மீதும் ஆட்டமாம்.

ஒருவேளை ஊரில் மாமியார் பேயைப் பார்த்ததும் ஆடத்தோன்றுகிறதோ?

adiraimansoor said...

ஹமீது அவர்களே

ஏதோ ஹாலிவுட் போக ப்ளான் போடுகின்ற மாதிரி தெரிகின்றது

Unknown said...

//சகோதரரே அது என்ன தங்கள் சமூகம் புரியவில்லையோ ?//இது பழங்கால கடிதப்போக்கு வரத்துக்குண்டான தமிழ் வார்த்தை. . அதாவது கணினி, மடிக்கணினி, தொலைபேசி, கைப்பேசி, மற்றும் இதர சாதனங்கள் வருவதற்கு முன்னால் கடிதப்போக்கு வரத்து ஒன்று மட்டுமே இருவரின் எண்ண ஓட்டங்களையும் அதற்குரிய பரஸ்பர பதில் பரிமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி வாய்ப்புகள் என்று கடிதம் ஒன்று மட்டுமே இருந்த காலத்தில் ஒருவருடைய பார்வைக்கு என்று எழுதவதற்கு கொஞ்சம் மரியாதையுடன் கூடிய வார்த்தை

இந்த "சமூகம் "என்ற வார்த்தை என் உம்மா என் வாப்பாவுக்கு கடிதம் எழுதும்போது இந்த வார்த்தையை பயன் படுத்த நான் பார்த்திருக்கின்றேன்.

அபு ஆசிப்.





M.B.A.அஹமது said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது
///நிகழ்வின் பிரதம விருந்தாளி ஜனாதிபதியாக்காவை இன்னும் காணோமே! வலை விரிக்கவும்?////
அன்பு சகோதரர் ஜாபர் சாதிக்குக்கு அஸ்ஸலாமுஅழைக்கும்
காணவில்லை விளம்பரத்தை தின தந்தியில் பார்த்தேன் நன்றி .பேயோடு ஒரு ஹாய் ரெண்டாம் பாகத்திற்கு பின்னோட்டம் இட்ட பிறகு பேய்க்கு பிடிக்காமல் பின்னோட்டமாட இடுகிறிய பின்னோட்டம் என்று என்னை பிடித்து கொண்டது .பாரூக் காகாவுகாவது தாஜுதீன் ஹஜ்ரது கடல்கரை தெருவிலிருந்து போட்டது போட்டபடி ஓடி வந்துட்டாங்க இங்கு தாயத்து தட்டை எழுத தாஜுதீன் ஹஜ்ரதும் இல்லை எனக்கு அருகாமையில் இருவர் உள்ளனர் ஒருவர் ஸ்டாக்டனில் இக்பால் காக்கா அவரிடம் சொன்னால் அல்லாஹ்காடா இணை வைக்றீங்க என்று ஸ்டாக்டனில் உள்ள மெக்ஷிகன் கேன்கிடம் சொல்லி அடித்தே கொண்டு போடுவார் அப்புறம் என் பேய் தான் உலா வரும் .இன்னொருவர் ப்ரெஸ்னொவில் தஸ்தக்கீர் அவரிடம் சொன்னால் வா மாப்பிள்ளை இங்கே என்று அழைத்து இங்கே பக்கத்திலே யோசமிடே பால்ஸ் இருக்கு வா போகலாம் என்று அழைத்துக்கொண்டு போய் அந்த ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் மலையிலிருந்து தள்ளிவிட்டுட்டு மொவுனமா வந்துருவாரு ,,, இன்னொரு விஷயம் நாமே சிரமபட்டு தமிழில் டைப்பு செய்வதை அப்படியே மூன்று முறை அப்படியே அளித்துவிட்டு சென்றுவிட்டது அந்த பேய் ................மூத்த காக்கா பாரூக் காக்கா பைனலா உங்களுக்கு பிடித்த பேய்க்கு என்ன ட்ரீட்மென்ட் சென்ஜீகன்னு சொன்னா கொஞ்சம் உதவியா இருக்கும் அதுக்காக வேண்டி எர்வாடிகெல்லாம் போக சொல்லாதிய இங்கேருந்து இப்ப போக முடியாது நீதானப்பா மலசியவிலேல்லாம் தர்கா கண்டு பிடிச்சு சொன்னா ஆளு அமெரிக்காவில எங்க தர்கா இருக்குண்டு உனக்கு தெரியளையாண்டு நீங்க கேட்குறது புரியுது நான் நியுயார்கில
இருந்தபோது ஒருமுறை ஜாக்சனைடில் தொழ போனபோது ஒரு பாகிஸ்தானியர் சொன்னார் பக்கத்துக்கு மாநிலமான பென்சிலோவியாவில் ஒரு தர்கா இருக்கு வாங்க போகலாம் என்று அழைத்தார் அந்த தர்கக்கு வெப்சைடலாம் உண்டு என்று சொன்னார் நான் இப்போ லீவு இல்லை பிறகு போகலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் .அங்கே போறதுக்கும் இங்கிருந்து 6 மணி நேரம் ப்ளைட்டில் போக வேண்டும் அதுவும் முடியாது கிறிஸ்மஸ் ,நியூ இயர் டைம் ஆக இருப்பதால் டிக்கட் வேறு உச்ச கட்ட விலையில் உள்ளது சரி பாப்போம் யாசினும் சுபஹனல்ல கலிமாவும் ரொம்ப ஹெல்ப் பண்ணுது ..

M.B.A.அஹமது said...

///செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டாங்களே அது ஆள் இல்லாத ராக்கெட்டா ? இல்ல ஆளோடு போய் இருக்கா ?//

//அது ஒரு மத சார்புடைய சமஸ்கிருத பெயரில் இருப்பதால் அதில் நம்மாளு போயிருக்க வாய்ப்பில்லை///



செவ்வாய் கிரகத்துக்கு ராகெட்டே நீங்க பின்னூட்டமிட்ட செவ்வாய் கிழமை தான் அனுப்பி இருக்கானுங்க ...... அதுக்கு முன்னாடியே எங்க மூத்த காக்கா பாரூக் காகா நாசாவிலிருந்து அனுப்பிய ராகெட் என்னை இன்னும் தேடி கொண்டுள்ளது..... மகனின் ராகெட் பற்றிய கட்டுரையில் பின்னூட்டத்தில் நினைவிருக்கலாம்

M.B.A.அஹமது said...

///N வலைதளத்தில் வந்து போகும் அனைத்து சகோதரர்களுக்கும்
இந்த கட்டுரையை நான் எழுத தொடங்கும் போதே நிறைய எதிர்ப்பு வரும் என்று எதிர் பார்த்தேன் ஏனோ தெரியவில்லை அப்படி எதிர்ப்பு ஏதும் வரவில்லை ///


பேய் கதைக்கு எதிர்ப்பை விட எதிர்பார்ப்பு தான் அதிகமாக உள்ளது . சகோதரர் சபீர் ., சபாநாயகர் எனது அன்பிற்குரிய இப்ராகிம் அன்சாரி காக்கா போன்றோரின் நான்காம் தொடர் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது ..

M.B.A.அஹமது said...

பேய் பிடித்திருந்ததால் ரிலாக்சுக்கு முக நூல் பக்கம் சென்றேன் அங்கேயும் பேயோடு ஒரு ஹாயை ஷேர் செய்து உள்ளார்கள் அதை பார்த்துவிட்டு எனக்கு கால் வலி வந்துவிட்டது ஒரு மாற்றத்துக்கு ஜுரம் வந்துவிட்டது என்றால் பேய் பிடித்தவர்களுக்கு ஏன் ஜுரம் மட்டும் வருகிறது என்று சகோதரர் ஜாகிர் கேள்வி கேட்பார் அதனால் மாற்றுக்கு கால் வலி வந்துவிட்டது

M.B.A.அஹமது said...

போதுமா மு சென மு இப்ப திருப்தி தானே

M.B.A.அஹமது said...

Mazar of Shaikh M. R. Bawa Muhaiyaddeen Some forty miles from Philadelphia, among the rolling hills and tall trees of Chester County, is the Mazar, the resting place of Muhammad Raheem Bawa Muhaiyaddeen, the Sufi saint, and founder of the Bawa Muhaiyaddeen Fellowship, who passed away in 1986.

This beautiful Mazar, the first in the United States, was conceived, designed, and built by the members of the Bawa Muhaiyaddeen Fellowship, and dedicated in 1987.

Since that time it has become an important destination for pilgrims from all over the world who wish to pay their respects to this remarkable Sufi teacher.

All are welcome to visit the Mazar of Sheikh M. R. Bawa Muhaiyaddeen (Ral.) between sunrise and sunset everyday.

Please read this helpful and important information before traveling to the Mazar.

For groups who wish to visit the Mazar please contact Muhammad Abdullah, the caretaker of the Mazar or Muhammad Abdul Lateef Hayden, Mosque Secretary at mosque_mazar@bmf.org or phone 215-879-6300.

The Mazar Address
20 Fellowship Drive,
East Fallowfield, PA 19320
USA


http://www.aulia-e-hind.com/dargah/Intl/USA.htm

Shameed said...

Abdul Khadir Khadir சொன்னது…

//இது பழங்கால கடிதப்போக்கு வரத்துக்குண்டான தமிழ் வார்த்தை. . அதாவது கணினி, மடிக்கணினி, தொலைபேசி, கைப்பேசி, மற்றும் இதர சாதனங்கள் வருவதற்கு முன்னால் கடிதப்போக்கு வரத்து ஒன்று மட்டுமே இருவரின் எண்ண ஓட்டங்களையும் அதற்குரிய பரஸ்பர பதில் பரிமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி வாய்ப்புகள் என்று கடிதம் ஒன்று மட்டுமே இருந்த காலத்தில் ஒருவருடைய பார்வைக்கு என்று எழுதவதற்கு கொஞ்சம் மரியாதையுடன் கூடிய வார்த்தை

இந்த "சமூகம் "என்ற வார்த்தை என் உம்மா என் வாப்பாவுக்கு கடிதம் எழுதும்போது இந்த வார்த்தையை பயன் படுத்த நான் பார்த்திருக்கின்றேன்.

அபு ஆசிப்.//

சமூகம் பற்றி நான் எண்ணி இருந்த தவறான கருத்தை அகற்றி விட்டீர்கள் அபு ஆசிப்

"சமூகம்" பற்றி மேலும் பல தகவல்களை இரண்டு கவி வேந்தர்களும் இங்கு விவரித்தால் இன்னும் சுவையான அர்த்தங்கள் கிடைக்கும் என்று நினைக்கின்றேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாதிபதியாக்கா,

விண்ணிலும் மண்ணிலும் தேடலில் கிடைத்த பலனால் களமிறங்கி காட்சி தந்தமைக்கு மகிழ்ச்சி.

நம் நாட்டில் 2- 3 நாள் பயணம் செய்து அஜ்மீர் வரை அநியாயமாக பயணிக்கும் போது 6 மணிநேரம் பயணித்து அங்கே 'பென்சிலோவியா' போயிட்டு வர்ரது தப்பே இல்லை. ஹாலிடே பிஸியெல்லாம் முடிந்து டிக்கட் சல்லிசா கிடைக்கும் போது ஒரு விசிட் பாத்துட்டு வாங்கள். ஒரு காலம் நம் நாட்டில் தர்காக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதும் கடைசியாக இருக்கும் பக்தர்களுக்கு வழிகாட்ட உங்கள் உதவி ஒரு வேளை தேவைப்படலாம்.

அதற்கிடையில் கால் வலி குணமாகட்டும். ஏர்வாடி பார்ட்டியுடன் அடிக்கடி தொடர்பில் இருங்கள். வஸ்ஸலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

”சமூகம்” என்பது உங்கள் முன்னிலையில் ( your good office) எனபதாக முன்னோர்கள் கருதியிருக்கின்றனர்.

அன்பின் சுட்டும் விழிச்சுடர் அவர்கள் சுட்டிக்காட்டும் ஆவியைப் பற்றி பல வருடங்கட்கு முன்னர் குமுதம் வார இதழில் ஒரு பெண் ஆவியுடன் பேசுவதாகவும், அதில் பெரியாரின் ஆவியுடன் கூட பேசியதாகவும் படித்திருக்கின்றேன். இப்பொழுது நினைவுக்கு வந்தது.

உங்களிடம் சில கேள்விகள்:ஏ

பேய், ஷைத்தான் குணம், ஆவி, பிசாசு, நஃப்ஸ் இவைகள் எல்லாம் “ஜின்” என்று அரபுமொழியில் சொல்லபடும் அந்த இனம் தானா?

ஜின்னைப் பற்றி அல்-குர் ஆன் ஒரு அத்தியாயம் கூட சொல்லியிருப்பதால் “ஜின்” இருப்பது உண்மைதானா?

ஜின் உடைய சக்தியும் ஆற்றலும் மனிதனை விட மிகவும் பலம் வாய்ந்தது அல்லவா?

M.B.A.அஹமது said...

சகோதரர் சாகுல் காக்காவுக்கு சீக்கிரமாக நான்காம் தொடரை வெளியிட்டு அனைவரூக்கும் பிடித்திருக்கும் பேய் ஜுரத்தை சீக்கிரமாக சரி செய்யுங்கள் இல்லைன்னா உடுக்கை அடிப்பேன் பாட்டு படிப்பேன் சைத்தானோட கூட்டில அடைப்பேன் .

Shameed said...

M.B.A.அஹமது சொன்னது…
//சகோதரர் சாகுல் காக்காவுக்கு சீக்கிரமாக நான்காம் தொடரை வெளியிட்டு அனைவரூக்கும் பிடித்திருக்கும் பேய் ஜுரத்தை சீக்கிரமாக சரி செய்யுங்கள் இல்லைன்னா உடுக்கை அடிப்பேன் பாட்டு படிப்பேன் சைத்தானோட கூட்டில அடைப்பேன் .//


நான்காம் தொடர் கூடிய விரைவில் வெளி வரும் உடுக்கு அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நம்மூருக்குன்னு ஒரு நிரந்தர நோய் ஒன்னு இருக்கு அது என்னான்னு உங்களுக்கு தெரியுமா ?

அந்த நோய் இதுதான்

ஒருவர் நகை கடை வைத்து நல்ல படி வியாபராம் நடந்தால் நம்ம ஆளுக ஆங்காங்கே நகை கடை திறந்துவிடுவார்கள்

ஒருவர் பழக்கடை வைத்து நல்லபடிவியாபாரம் நடந்தால் நம்ம ஆளுக ஆங்காங்கே பழக்கடை தொடங்கி விடுவார்கள் இதுதான் அந்த நோய்

இது இப்போ என்னசுன்னா ஒருவர் பேய் கதை எழுதினா .......................

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//நான்காம் தொடர் கூடிய விரைவில் வெளி வரும்//

அதோடு நம்மூரில் பேய் ஓடிவிடுமா?
----------- --------------------

//இது இப்போ என்னசுன்னா ஒருவர் பேய் கதை எழுதினா ..................//

அப்படின்னா இன்றைய உங்கள் போட்டியாளர் யாரு. யாரும் எழுத துவங்கி விட்டதாக ரகசிய தகவல் ஏதும் வந்திருக்கா?

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
//நான்காம் தொடர் கூடிய விரைவில் வெளி வரும்//

அதோடு நம்மூரில் பேய் ஓடிவிடுமா?
----------- --------------------

//இது இப்போ என்னசுன்னா ஒருவர் பேய் கதை எழுதினா ..................//

//அப்படின்னா இன்றைய உங்கள் போட்டியாளர் யாரு. யாரும் எழுத துவங்கி விட்டதாக ரகசிய தகவல் ஏதும் வந்திருக்கா?//



பேய் ஓடாது ஏன்னா இருந்தாதானே ஓட


பெட்டி கீட்டி எல்லாம் ஒன்னும் இல்லை நம்ம ஊரு ட்ரன்டை சொன்னேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பேய் ஓடாது ஏன்னா இருந்தாதானே ஓட //

இல்லாத ஒன்னெ இழுத்துப்போட்டு வக்கனெ வக்கனெயா சொல்லிப்புட்டு, இருந்தா தானெ ஓட என்கிறீர்களே இது எந்த வகையிலெ நியாயம்?

ஏகப்பட்டவர்கள் ஏகப்பட்ட வினா தொடுத்து கடைசி 'எபிசோடு' க்காக காத்திருக்கையில் இப்புடி ஒரே வரியிலே பொய்யெ பொய்யின்டு உடைச்சுபுட்டியலே!

அந்த கமென்டெ யாரும் பாக்காமெ இருக்க பாத்துகிடுங்க!

Shameed said...

//பேய் ஓடாது ஏன்னா இருந்தாதானே ஓட//

கால் விடுபட்டு விட்டது திருத்தி வாசிக்கவும்

பேய் ஓடாது ஏன்னா கால் ன்னு இருந்தாதானே ஓட

M.B.A.அஹமது said...

வியாபாரத்தில் சரி கதை எலுதுவதிலுமா போட்டிக்கு வந்துவிட்டார்கள் சுபஹனால்லாஹ் ..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு