Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒளரங்கசீப் நான்மணி மாலை [வரலாறு பதிக்கப்படுகிறது] 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2013 | , , , , ,

புண்ணியம் செய்தவரைப் பொய்ச்சாயம் பூசியே
கண்ணியம் இல்லாமற் கல்லடியாய் - எண்ணில்
அவச்சொல் வலைக்குள் அவுரங்க சீப்பைத்
தவறாய்ப் புனைந்ததைச் சாடு.

குர்ஆன் ஹதீஸ்கள் வரம்பை நிறுவும் குறியுடன்தான்
நிர்வா  கமெல்லாம் இருக்க விழைந்து நினைத்ததனால்
கர்வம் மிகுந்து திரித்த புளுகைக் களையவேண்டி
மர்ம   முடிச்சுகள்  யாவும் அவிழ்ந்து மதித்திடுமே

வரியாய் ஜிஸ்யா விதித்தாராம்
.....வஞ்சம் கொண்டு புனைந்தார்கள்
சரியாய்ச் சொன்னால் அவர்கள்தான்
....தங்கள் கோயில் நிர்வாகம்
வரியால் வந்த வருமானம்
....வைத்துக் கொள்ளத் துணைநின்றார்
கரியைப் பூச நினைத்தார்கள்
...கயவர் கூட்ட வரலாறே!

விற்பனை வரிகளாய் விதித்தவைச் சுமையாய்
நிற்பதை அறிந்தவர் நிறுத்தினார் வரிகளை;
விதவையைத் திருமணம் விரைவாய்ப் புரிதலை
உதவிட வரியை உடனே நீக்கினார்
மதுவினை ஒழித்ததால் மதச்சா யமாக்கி
ஒதுக்கினர் சரித்திர உளறலால்
விதைத்தனர் பொய்மையாம் விதைகள் பிஞ்சிலே!

‘கவியன்பன்’ அபுல் கலாம்
ABUL KALAM BIN SHAICK ABDUL KADER

6 Responses So Far:

Unknown said...

i//குர்ஆன் ஹதீஸ்கள் வரம்பை நிறுவும் குறியுடன்தான்
நிர்வா கமெல்லாம் இருக்க விழைந்து நினைத்ததனால்
கர்வம் மிகுந்து திரித்த புளுகைக் களையவேண்டி
மர்ம முடிச்சுகள் யாவும் அவிழ்ந்து மதித்திடுமே//

இப்பேர்ப்பட்ட ஒரு முகலாய மன்னரைக்காட்டுங்கள்.

எளிமைக்கும், சிக்கனத்திற்க்கும், உண்மை உழைப்பிற்கும் , கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த ஒரு உத்தம மன்னர் ஔரங்க சீப் . இப்பேர்ப்பட்டவரைத்தான் வரலாற்றில் தூற்றி எழுதும் கயமைத்தனத்தை இன்றளவும் செய்து வருகின்றனர்.

ஜிஸ்யா என்னும் வரி விதிப்பில் , யார்மேல் விதித்தாரோ அவர்களுக்கே அதன்மூலம் நன்மைகள் போய் சேரும் அளவுக்கு நிர்வாகத்தை அருமையாக செய்து காட்டியவர் ஔரங்க சீப்.(

முஸ்லிம்கள் மீது ஜக்காத் (என்னும் ஏழைகளின் உரிமை ) கட்டாய வரி இருந்ததால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஜிஸ்யா என்னும் வரியை விதித்து நன்னோக்கத்தொடு அதை தந்த மக்களுக்கே போய் சேரும் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி நர்ப்பேருடன் அரசாட்சி செய்து வாழ்ந்து சென்ற மன்னர்தான் ஔரங்க சீப்.

இவர்மீது களங்கம் சுமத்துவது உண்மை வரலாற்றின் மீது கறை படியச்செய்வதாகும்

இம்மன்னருக்கு கவி யாத்த எம் கவி மன்னரை, ( இன்றிலிருந்து என் மூலம் இந்த சிறு பட்டம் வழங்கப்படுகின்றது) எம் அருமை நண்பரை, கலாம் அவர்களை வாழ்த்திட இத்தளத்தை பயன்படுத்திக்கொள்ளும்

அபு ஆசிப்.

Shameed said...

இவர் பெயரின் கடைசியில் சீப் என்று வருவதால் வரலாற்று ஆசிரியர்கள் இவரை சீப்பா எடை போட்டுடாங்க அதுவும் நம்ம ஆளு என்பதால் ஒரு மொடக்கு தண்ணி கூடவே குடிசிட்டாங்க

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாமன்னரின் மறைக்கப்பட்ட மகத்துவம் கவிப்படுத்தியமை அருமை.
அவர் அரச மன்னர், நீங்க கவிமன்னர்.

sabeer.abushahruk said...

ஓளரங்கசீபை வாழ்த்தவும் அவரின் ஈமானை வியக்கவும் எதிர்பார்த்து வாசித்து முடித்தால்... கவியன்பன் அவர்களை வாழ்த்தவும் கவிதையைக் கண்டு வியக்கவும் வைத்துவிட்டது இந்தச் செய்யுள்.

தொடரட்டும் இந்த தூய முயற்சி.

Ebrahim Ansari said...

சிறப்பாக இருக்கிறது. பாராட்டத்தக்க புதிய முயற்சி. வாழ்த்துக்கள் தம்பி கவியன்பன் அவர்களே!

KALAM SHAICK ABDUL KADER said...

என்னுடைய கவிதையைப் பாராட்டியும் ஆய்ந்தும் கருத்துச் சொன்ன, சொல்ல நினைத்த அனைவருக்கும் என் நன்றி
ஜஸாக்கல்லாஹ் கைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு