Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை உலா - 2013 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , ,

2013 - வது  வருடம் விடைபெறும் தருவாயில் இருக்க  அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளையெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் பார்த்தது போலவே இவ்வருடமும்  அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.


1.பல்லாண்டுகளாய் சாக்கடையும் ஆக்கிரமிப்பும் நிறைந்த நடுத்தெரு பள்ளியின் பின்புறமுள்ள செட்டியா குளத்திற்கு தமிழ்நாடு அரசு மூலம்  நபார்டு உதவி திட்டத்தின் கீழ்  50 லட்சம் ஒதுக்கி அவ்வப்போது  பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. 


2.மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதமாக  இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை ஜொஹரா அம்மாள் என்று பெயரிட்டு!


3.செக்கடிப்பள்ளிக்கு சொந்தமான அதன் மேட்டுப் பகுதிகளில் பல கட்டிடமாகவும் கீத்துக் கொட்டகைகளாகவும் இருக்க, மற்றொரு கட்டிடம் செக்கடிப்பள்ளி நிர்வாகம் பேரில் கட்டி வருகையில் திடீரென்று அங்கே பேரூராட்சி சார்பில் "இது பேரூராட்சிக்கு சொந்தமான இடம்" என பெயரிட்டு போர்டு  வைத்து கட்டிட தளவாட சாமான்களை பேரூராட்சி அள்ளிச் சென்றது, பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு வராமலே! பின்னர்  நிர்வாக  (அரசியலில் நீயா நானா) குளறுபடிகள் கலைந்து அத்தகைய அறிவிப்பு போர்டு நீக்கப்பட்டு பேரூராட்சி தலைவரின் தலையீட்டின் பேரில் செக்கடி பள்ளி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டன. 


4. மார்ச் மாத்தத்தில் தக்வாபள்ளிக்கு புதிய நிர்வாகம் வந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு கூடாது அல்லது சர்ச்சை என நன்கறிந்த   மெளலிது ஓதி நார்சாவுடன் முரண்டு செய்தார்கள். சில முடிவெடுப்பதில் சிலரை கலக்காமலேயே செயல்பட்டதாக வழக்கும் தொடர்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் பல்லாண்டுகளாய் மார்க்க பயான் செய்த ஹைதர் அலி ஆலிம் அவர்களை நீக்க வழி தெரியாமல் 10 நாள் சஸ்பென்ஸ் மற்றும் மைக் கிடையாது போன்ற சட்டமன்ற சமாச்சாரமெல்லாம் நடந்து முடிந்தன.


5. அல் அமீன் பள்ளி விவகாரத்தில் பல ஆண்டுகளாய் நிலச் சர்ச்சைக்கு தீர்வு கிடைத்து சாதகமான தீர்வு கிடத்தது ஒட்டு மொத்த அதிரையருக்கும் குறிப்பாக "அதிரை எக்ஸ்ப்ரஸ்" வலைத் தளத்தின் முன்னெடுப்பகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். விரைவில் பிரம்மான்ட பள்ளி உருவாகி தொழுகையால் நிரம்ப துஆ செய்வோமாக!


6. மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.  ஒரு கட்டத்தில் நம்மவர்களே நம்மவர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய காவல் துறை பள்ளிக்கு வந்தும் பின் அவரே நானே வருகிறேன் என்று காவல் துறைக்கு போயும் பின்னர் பலதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி ஓரளவு சுமூக தீர்வுடன் அல்லாஹ்வின் நாட்டபடி அதிரையிலேயே இருக்கிறார்கள்.


7. அதிரையர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் என்ற புதிய முயற்சியாக வர்த்தக திருவிழா என்ற பெயரில்  ஏப்ரல் 28 முதல் மே 12 வரை  ஒரு குழுவினர் சார்பாக நடத்தப்பட்டது. இது கந்தூரிக்கு மாற்றாகவும் மார்க்கத்திற்கு உட்பட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால்  வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இது இப்படியே தொடர்வது மார்க்க விரோதம் என கருதி ஒரு புறம் ஆலிம்கள் தலையீட்டின் பேரிலும் மறுபுறம் கலெக்டரின் தலையீட்டின் பேரிலும் கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா தொடர்ந்தது.


8. கடந்த மேயில் கடற்கரை தெருவில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அன்னை ஆயிசா மகளிர் கல்லூரி நிறுவனர் சலீம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவுடன் சிறப்பாக நடை பெற்றது.


9. கடந்த ஜூனில் கடைத்தெரு மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டும் நோக்கில் திட்டமிட்டு அஸ்திவார மட்டம் வரை தற்போது எழுந்துள்ளது. துவக்க நிகழ்வில் அடிக்கல் நாட்டு சம்பவ முறையில் சர்ச்சைகள் எழுந்தன. நிர்வாகத்தின் நல்ல நோக்கம் சீக்கிரம் நிறைவேறட்டும். இன்சா அல்லாஹ்.


10.  அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் பெண்களால் அதிரையில்  இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா கடந்த  ஜூனில் அன்னை ஆயிசா அறிவியல் கலை மகளிர்கல்லூரி தாளாளர் பேராசிரியை சயீதாபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள    சிறப்பாக நடைபெற்றது.


11. பேராசிரியர்கள் அப்துல் காதர், பரகத் இவர்களுக்கு பதிலாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் எஸ்.எம் அன்வர் பாட்ஷா அவர்கள்  பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


12. சகோ. M.ஜமால் முஹம்மது அவர்களின் மகன் J.மீராசாகிப் குரூப் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் I A S தேர்வு எழுதவுள்ளார். பொறியியல் பட்டம் பெற்றுள்ள J.மீராசாகிப், சென்னை அண்ணா சாலையிலுள்ள அழகிய கடன் I A S  அகாடமியில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


13. காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கா.மு.மே.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையுரையுடன், இணையதள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றி  பேசியதுடன்  பட்டிமன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்க வைத்த பேச்சுடன்  அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூல் நினைவுப் பரிசாக ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது.  அத்துடன் ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் எம். ஸாலிஹ், மூத்த சகோதரர் முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க  தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர்,ஆகியோர் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   


14. கடந்த அக்டோபரில் கடைத்தெரு மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இதிலும் அரசியல் வாதிகள் அத்தனை பேரும் தனக்கே உரிய பானியில் ஆதாயம் அடைய முற்பட்டனர். உண்மை அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இன்னும் கயறு தொழிற்சாலை தீ, சமாதி கூரை தீ, வீடுகள் தீக்கிரை என தொடர்கதையாக உள்ளது. அதிரைக்கென்று தீயணைப்பு வாகனம் ஒதுக்குவதில் அரசின் மெத்தனம் உடனடியாக களையப்பட வேண்டும். வெளியூரில் இருந்து வரும் தீயணைப்பு வாகன தமதித்தால் அவர்கள் மீதே கோபத்தை காட்டி தாக்கிய வேதனைச் சம்பவமும் கடைத்தெருவில் அரங்கேறியது.


15. K M A ஜமால் முஹம்மது அவர்கள் ஆரசியல் ஆதாயம் இல்லாமல் பொது நலனில் அக்கரை கொண்டு பல்வேறு தேவை அறிந்து அரசுக்கு சட்ட ரீதியாக கோரிக்கை வைத்து  அவ்வப்போது சேவையில் சாதித்து வருகிறார். இவரைப் போல தெருவுக்கு நாலு பேர் சமுக அக்கரை கொண்டால் அரசியலே தோற்பது நிச்சயம்.


16. அதிரை தாருத்தவ்ஹீத்  மார்க்க பிரச்சாரங்கள் சிறப்பாக செய்து வருவதுடன் கடந்த இரு சாமதித்திருவிழாவுக்கு எதிராக நேரடி அணுகுமுறை, மற்றும் குறைந்த பட்சமாக  அதனால் மின் துண்டிப்பு தவிர்க்கப்பட மனுச் செய்தும் அதில் வெற்றியும் கண்டது. இன்னும் தொடர் நடவடிக்கைகளால் மார்க்க விரோதங்கள்  முற்றிலும் ஒழியும் என்பதில் ஐயமில்லை. 


17. கடந்த காலம் அதிகமான விபத்துகளை அதிரை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக ரமலான் மாத வாக்கில்  அதிகமான வாகன, உயிர் சேதம் ஏற்பட்டது. 


18. தெருவில் இறங்கி காலி குடங்களுடன் போராட்டம் என்பதெல்லாம் பத்திரிகையில் படித்த செய்தி அன்று. இன்றோ அதிரையில் பெண்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிரை பேருராட்சி!


19. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் சட்டத்தாலும் செயலாலும் தடுக்க முடியாமல் தோல்வியுற்ற பேரூராட்சி இன்று சாலைகளில் அலையும்  ஆடு மாடுகளை பிடிப்பதிலும் சட்டம் போட்டு 'லூஸ்' விட்டு அதிலும் தோல்வி கண்டுள்ளது. ஆளுமையின் குறையா அல்லது ஆள்பவரை பிடிக்காத அரசியல்  சதியா? பாவம் அதிரை!


20. ஈ.சி. ஆர் சாலையில் மூன்றடுக்காய் பிரம்மாண்டமாய் காட்சி தரும் இறையில்லம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்  மீதி வேலை முடித்திட நிதிக்காக காத்திருக்கிறது. இன்சா அல்லாஹ் வழி கிடைக்கும். 


21. சி.எம்.பி.லைனில் அமைந்த  ALM ஸ்கூலில் ஜூம்மா மட்டும் நடந்த இடத்தில் ஐவேளைக்கும் தொழுகைக்கும் மஸ்ஜிதும் உருவாக்கி எளிய முறையில் திறப்பு விழா கண்டு அதிரை மஸ்ஜித் எண்ணிக்கையை மேலும் ஒன்று கூட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.


22. கடந்த தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற S.அப்துல் அஜீஸ் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்., புதிய பொறுப்பு அதிரைக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெருமை சேர்க்க அல்லாஹ் நாடுவானாக!


23. பேரூராட்சி தலைவர் அன்றிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட சவால்களையும் எதிர்ப்புகளையும் வழக்குகளையும்  எதிர் கொண்டு அதிரைக்காக! போராடி வருகையில் அரசியல் காழ்ப்புணர்வால் திட்டங்கள் கேன்சலாகிய கதையாகவே உள்ளன. நேர்மையும் உண்மையும் வெற்றியாகட்டும். 


24. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் தலைமையில்  நடந்தேறியது, இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நம்மை சுற்றியுள்ள   வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி. இந்த வருடத்தின் ஹைலைட் நிகழ்வு இது.


25. அல்லாஹ்வின் நாட்டப்படி மஸ்ஜிதின் கம்பீர தோற்றத்திற்கும், மனம் குளிர இயற்கையை ரசிக்கவும் மண் வளம் கூடிடவும் அல்லாஹ் தந்த அருட்கொடை. இதுபோல் அதிரையின் எல்லா குளமும் நிரம்பிட மனம் ஒன்றிய வலிமையையும்,  மழைநீரையும்  அனைத்து ஆறு ஏரி வளங்கள் வாயிலாகவும் வாய்ப்புகளை தந்தருள்வானாக! 


* இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட அதிரை-உலாவில் அதிரைக்கு இரயில் போக்குவரத்து, ஷிஃபாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பாதாளச் சாக்கடைத் திட்டம், அனைத்து குளத்திலும் தண்ணீர், விபத்தே இல்லாப் போக்குவரத்து  இன்னும் எல்லாம் இன்பமாய் காண்போமாக! மார்க்க நெறிக்குட்பட்டு!

M.H.ஜஹபர் சாதிக்
pictures supplied

24 Responses So Far:

adiraimansoor said...

ஜாபர் சாதிக்

போட்டு தாக்கு தாக்குனு தாக்கிட்டியே
அதிரை 2013ன் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அற்புதம் இதெல்லாம் ஜாபர் சாதிக்கின் வரலாற்றில் பல ஏடுகளில் இதுவும் ஒன்று

உன் என் வீட்டுதோட்டத்தில் பதிவு கண்டே அசந்து போயிவிட்டேன் ஆனால் பின்னூட்டமிடுவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை இருந்த போதிலும் விட்ட குறையை நான் இப்பொழுது கொஞ்சம் தொட்டுவைக்கின்றேன் உன் வீட்டுத் தோட்டத்திற்கு சுருக்கமாக ஒரு பின்னுட்டம் அத்தனை காய்கறிகளும் உன்னைப்போன்று சிரித்துக்கொண்டே இருந்தன
அது என்னை மிகவும் கவர்ந்தன அதுபோல்தான் அதிரை உலா 2013 என்ற தலைப்பின் கீழ் பதியப்பட்ட இந்த அதிரையின் வரலாற்றுச் சுவடுகளும் மிகவும் அற்புதம்

adiraimansoor said...

ஒவ்வொரு போட்ட்டோவுக்கு கீழ் கொடுத்திருக்கும் முன்னூட்டம் சரியான கண்ணூட்டத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

அதிரை உலாவை அதிரை நிருபரின் விழா போல நடத்திக்காட்டியிருக்கும் எம் ஹெச் ஜே அவர்களுக்கு என் கருத்து மாலையை அவர்தம் கழுத்துக்கு மாலையாய்ச் சூட்டுவதில் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் கொள்கிறேன்.

Yasir said...

அதிரை உலாவை அதிரை நிருபரின் விழா போல நடத்திக்காட்டியிருக்கும் எம் ஹெச் ஜே அவர்களுக்கு என் கருத்து மாலையை அவர்தம் கழுத்துக்கு மாலையாய்ச் சூட்டுவதில் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் கொள்கிறேன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அதிரை உலவா! அழகிய உலாவா!

நடந்ததையும், நடக்க வேண்டியதையும் தெளிவாக விளக்கிய உலா!

பரவாயில்லையே இப்படியயெல்லாம் யோசிக்கலாமா!

மாற்றி யோசி மக்களே! என்பதுதான் அதிரை உலாவா!

வாழ்த்துக்கள் சகோதரரே!

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

சிறப்பான தொகுப்பு.

பாராட்டுக்கள்.

ஒரு வருடமாக இதை மனதில் வைத்து உழைத்து சேர்க்கப் பட்டபாடு தெரிகிறது.

என்னை பொருத்தவரை இந்த வருடம் அதிரைக்கு ஐ எ எஸ் , மற்றும் பிற மத சகோதரர்களுக்கான ஈத் மிலன் நிகழ்ச்சி ஆகிய இரண்டும் முக்கிய நிகழ்வாகத் தோன்றுகிறது. ஒரு நல்ல தொடக்கத்தை உணர்கிறேன்.

வரும் வருடத்தில் அரசியல் மாயைகள் மற்றும் ஆட்டிப் படைக்கும் வேறுபாடுகள் மறைந்து ஆக்க பூர்வமான காரியங்கள் ஒற்றுமையுடன் நடைபெறவேண்டுமேன்று ஆசைப் படுகிறேன்.

அதிரைக்காரன் said...

அதிரை வரலாறு தொகுக்கப்படும் பட்சத்தில் இப்பதிவும் உறுதுணையாக இருக்கும். அனைத்து அதிரை வலைத் தளங்களிலும் கிடைக்கும் இத்தகைய பதிவுகளை அதிரை நிருபர் பதிப்பகம் நூல்வடிவில் வெளியிட்டால் இளைய தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்துகள் ஜாஃபர் சாதிக்.

Ameen Bin Jamal said...

அருமையான படைப்பு இவ்வாக்கத்தின் மூலம் துல்லாத மனமும் துல்லும்,தன் உள்ள கிடக்கையில் பதுக்கி வைத்திருந்த வரிகள் லாவகமாக பயன்பட்டிருக்கிறது.வளர்க ஜாபர் சாதிக்.

அதிரைக்காரன் said...

ATCO குறித்த தகவலில் எதிர்மறையான பிம்பம் ஏற்படும் வகையில் தகவல்கள் இருப்பதாகக் கருதுகிறேன். இந்நிகழ்ச்சி குறித்த தொடக்கட்ட ஏற்பாடுகளில் கலந்து கொண்டவன் என்ற அடிப்படையில் இதுகுறித்த குற்றச்சாட்டுகளுக்கு ATCO வின் விளக்கம்http://adirainirubar.blogspot.ae/2013/05/atco.html சுட்டியில் கிடைக்கிறது.

Shameed said...

தோட்டம் போட்டுக்கொண்டே நோட்டம்விட்ட செய்திகளை வருஷ கடைசியில் தொகுத்து அளித்தது அருமை

sheikdawoodmohamedfarook said...

இமாம் ஷாபி உயர்நிலை பள்ளியில்quiz போட்டிவைத்துவெற்றிபெற்றமாணவர்களுக்கு பரிசளித்தநிகழ்வுவிட்டுப் போய் விட்டது.இருப்பினும் ஓராண்டு காலநிகழ்வுகளை மீண்டும் கண்ணுக்கு கொண்டுவந்தது நெஞ்சுக்குள் பரவச ஊற்றை பெருக்கெடுத்து ஒ டவைத்தது.பாராட்டுகள்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

அதிரை உலா! காயாத வானகத்தே நின்றுலாவும் தேயாத வட்டநிலா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனதில் பட்டதை மட்டுமல்ல, பதிந்த வைகளையும் பளிச்சென்று சொல்வதில் MHJ-வுக்கு நிகர் மு.ஹ.ஜஹபர் சாதிக் தான் !

பொறுமையும் இருக்கும் பொறுப்பும் இருக்கும் அதில் புத்தியும் இருக்கும் ! இவரின் கருத்தாடலில் !

எண்ணம்போல் தொகுப்பும் அமைந்திருக்கிறது !

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

சிறப்பான தொகுப்பு /நல்ல நினைவூட்டல்/நிறைகின்ற குளத்தோடு செய்தியும்
நிறைவுறுகிறது /இனி காலமெல்லாம் நம் அதிரையர்களின் தேவைகளும் பூர்த்தியாகி நிறைந்த வாழ்வாக ஆகட்டும் /

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரைக்காரனுக்கு....
மாற்றுக்கருத்துக்கு நன்றி
மாற்றுக்கருத்து ஆதார சுட்டி இப்படி இருக்க ATCO வின் செயல்பாட்டுக்கான எதிர்மறைச் சுட்டி இப்படி இருக்கு
http://adirainirubar.blogspot.co.uk/2013/05/blog-post_4.html
எனினும் எதிர்கால தவறுகள் களையவே இருகருத்துக்களையும் குறிக்க வேண்டியதாயிற்று.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
படத்துடன் அது தொடர்பான கருத்து வரைய எதிர்ப்பு இருக்குமோ என்ற ஐயம் இருந்தாலும், நடந்த (அறிந்த) உண்மையை எழுதி ஆகவேண்டும், எதிர்காலத்தில் அது களையப்பட வேண்டும். என்ற நோக்கில் பதிந்து அதை ஆமோதித்து கருத்திட்ட, கண்ணுற்ற அனைத்து பேருள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அருமையான தொகுப்பு,

எல்லோரும் ஒன்றுகூடி முயற்சித்தால் நமதூரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.

07/12/2013 அன்று அதிரை பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன், இன்றுவரை ஒரு நபர்கூட வாயே திறக்கவில்லை.
http://adiraixpress.blogspot.in/2013/12/blog-post_7.html#.UsNkw9Lz3VE

வேதனையான விஷயம்.

இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

sarabu maraikayar said...

I don't know how to type in tamil..sorry..I read everything..unmai uraka solvem ulaguku...thanks for ur post..may Allah bless all & unite all our community together..

sarabu maraikayar said...

I don't know how to type in tamil..sorry..I read everything..unmai uraka solvem ulaguku...thanks for ur post..may Allah bless all & unite all our community together..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha Allah, wonderful collections and beautiful narrations of my cousin MHJ for the past year 2013 which is just passed away from us. Every one is unable to do these periodic events/incidents those happened around us to provide in one article as a garland gatherings of different flowers in one row. Nice job done by Machan and sorry for my late read and comment.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு