Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர்-21 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 20, 2014 | ,


கான்டாக்ட் லென்சுகளின் உபயோகம்

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, பார்வை குறைபாட்டை கண்டறிந்து கண்ணாடிகள் அணிந்தனர். பின்பு கான்டாக்ட் லென்சுகள் அணிந்தனர். இரண்டும் வேண்டாம் என்று கருதுகிறவர்கள் லேசர் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள். 

இப்போது உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்கள், உடைக்கு தக்கபடி கலர்கலரான காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளை பொருத்திக்கொள்கிறார்கள். அதில் டிஸ்போசபிள் லென்சுகளும் வரத் தொடங்கி விட்டன. 

பார்வை குறைபாட்டிற்காக கண்ணாடி அணிவது பலநூறு வருடங் களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடிக்குப் பதிலாக கண்ணின் மேல்புறத்தில் பொருத்தப்படும் ஒரு மெல்லிய சாதனம் `கான்டாக்ட் லென்ஸ்' எனப்படுகிறது. இந்த கான்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர்களை' பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை எளிதாக கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும். 

கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவர், பார்வை குறைபாட்டிற்காக அதை அணிந்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். கண்ணாடி அணிவதால் சிலரது வெளித் தோற்றத்திலும், அழகிலும் மாற்றம் ஏற்படும். கண்ணாடி அணிவதை சிலர் அசவுகரியமாகவும் கருதுவார்கள். கண்ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும் வேண்டும். இதனை அணிவதால் மூக்கின் மேல்பகுதியிலும், முகத்திலும் தழும்பும் உருவாகலாம். 

சிலர் முக்கியமான வேலைக்கு செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்று, அவஸ்தைபடுவதும் உண்டு. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்பதை மற்றவர்களால் எளிதாக கண்டறிய முடியாது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம் கண்ணாடி அணியவேண்டியதில்லை.

ஒருவர், மிக அதிகமான `பவர்' கொண்ட கண்ணாடி அணியும்போது கண்ணாடி மிக தடினமாகவும், பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால், பார்வை துல்லியமாகும்.  கான்டாக்ட் லென்சை பல்வேறு காரணங்களுக்காக நாம் உபயோகப்படுத்தலாம். பார்வைக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை Rigid, semi soft, soft  எனப்படும். ஒவ்வொரு வகை கான்டாக்ட் லென்சும், வெவ்வேறு வகை பாலிமரில் தயாரிக்கப்படுகிறது. 

கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் ` கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம். 

கான்டாக்ட் லென்சை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக கண்களில் வைத்திருக்கலாம் என்றால் பொதுவாக கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணில் பொருத்திய சில மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். மீண்டும் மறுநாள் பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக இவைகளை 8 முதல் 10 மணிநேரம் வரை கண்களில் வைத்திருக்கலாம். 

தற்போதைய புதிய வரவான `Extended wear' என்ற கான்டாக்ட் லென்சை 14 முதல் 16 மணிநேரம் வரை கண்களில் பொருத்திக்கொள்ளலாம். தற்போது தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய `Daily disposable' லென்ஸ்களும், ஒரு வாரம் மட்டும் பயன்படுத்துவ தற்கானவைகளும், ஒரு மாதம் மட்டும் பயன்படுத்தக்கூடியவைகளும் உள்ளன. 

கான்டாக்ட் லென்ஸ்களை தினமும் பிரத்யேகமான திரவத்தில் கழுவிய பிறகே கண்ணில் பொருத்த வேண்டும். சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அணிந்துகொண்டு கண்களை கசக்கக்கூடாது. பயன்பாடு முடிந்ததும் கழற்றி பாதுகாக்கவேண்டும். இதனை அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. இவைகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிது.  அவற்றை நாம் பார்வை மற்றும் அழகுக்காக பொருத்திக்கொள்கிறோம். அதனால் எந்த பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் லேசர் சிகிச்சை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதை இதற்கு ஓரிரு பதிவுகளுக்கு முன்பும் விளக்கமாக எழுதி இருந்தேன்.. 

கண் துடிப்பு

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர்.

இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள்.

மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம். சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும். அதிகமாக காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை துளிகூட பருகாமல் இருப்பது நல்லது. கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பதும், கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது.

சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.

சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

இதை தொடர்ந்து கன்ணை சுற்றி ஏற்ப்படும் கருவளையம்  பற்றி அடுத்து இடம் பெறும் தொடரில் பார்போம்.

அதிரை மன்சூர்

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//டிஸ்போசபில் லென்ஸ்களும் வந்துவிட்டன// இனி நாம்எதிர்பார்க்கவேண்டியது டிஸ்போசபில் கண்கள். அதை அடுத்து மனைவி கணவன் பிள்ளைகள் என்றும் டிஸ்போசபில் தொடருமோ?.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஸ்டையிலான கண்ணாடி முதல் நடிக்கும் கண்கள் வரை நல்லபாடம்!

//ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.//

மன்னிக்கவும் காக்கா! இப்படியெல்லாம் கொஞ்சமா குடிங்க என்று நாம் சொல்லலாமா?

sabeer.abushahruk said...

மன்சூர்,

கண்களை வெளியே எடுத்துச் சலவை செய்து இஸ்திரி போட்டு திரும்ப மாட்டி விட்டதுபோல் பளிச்சென்று செல்கிறது தொடர்.

குட் ஜாப்.

ஒரு கேள்வி:

பார்வை குறைபாடு உடையோர்களுக்கு ஆலோசனைகள் சொல்லுங்களேன். நான் கேட்பது "சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையில் குறைபாடு"?

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைகும்
ஜாபர்
ஜஸாக்கல்லாஹ் கைர்
இங்கு வார்த்தை பிசகு நடந்துவிட்டது

மேலும் நிறைய வார்த்தைகள் விடுபட்டதினால் அது படிக்கும்போது தறான விஷயத்தைத்தான் சொல்லுகின்றது என்பதை ஒப்புக்கொள்கின்றேன்
மன்னிக்கவும் அல்லாஹ் மன்னிப்பானாக

அந்த வார்த்தையை

///ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை துளிகூட பருகாமல் இருப்பது நல்லது. என்று நெறியாளர்களே அதை மாற்றி அமைத்துவிட்டார்கள்
ஜஸாக்கல்லாஹ் கைர் ஜாபர் சாதிக் & அதிரை நிருபர் நெறியாளர்

adiraimansoor said...

ஜஸாக்கல்லாஹ் கைரன் சபீர்

///பார்வை குறைபாடு உடையோர்களுக்கு ஆலோசனைகள் சொல்லுங்களேன். நான் கேட்பது "சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையில் குறைபாடு"? ///
சமுதாயத்தைப் பார்க்கும் பார்வை ஏறக்குறைய 90% பேருக்கு இந்த குறைபாடு உண்டு
இந்த குறைபாட்டை அவரவர்களின் மனது மாறினால்தான் இந்த குறைபாடு நீங்கும்

இந்த குறைபாட்டை நீக்க மைக்கு பிடித்தவர்களும் பேனா பிடித்தவர்களும் என்னிலடங்காது

adiraimansoor said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்கு முஸ்ஸலாம் மன்சூராக்கா
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

Ebrahim Ansari said...

தொடர்ந்து வெற்றிகரமாக இந்தத் தொடர் ஒரு தகவல் பலகையாக சிறப்புடன் செல்கிறது.

//"சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையில் குறைபாடு"? //

மனங்களைக் கழற்றி நல்ல தண்ணீர் வரும்போது நசுவினி ஆற்றில் அருணா சோப்பு போட்டு அடித்துத் துவைத்து பிறகு மாட்டினால்தான் உண்டு.

adiraimansoor said...

///மனங்களைக் கழற்றி நல்ல தண்ணீர் வரும்போது நசுவினி ஆற்றில் அருணா சோப்பு போட்டு அடித்துத் துவைத்து பிறகு மாட்டினால்தான் உண்டு.///

காக்கா செம காமெடி
அருனா சோப்புக்கு அவ்வளவு பவர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு