Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயன் தரும் பன்மொழித் தொடர்பு-2 31

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2014 | ,

‘சூப்பர்வைசர்’ தந்த கையுறையை மாட்டத் தொடங்கினேன். “அரே மோல்வி சாப்! தும் ஐஸா மத் கரோ. ஜப் அராம்கோ சூப்பர்வைசர் ஆயேகா, தப் தும் ‘கிலவ்ஸ்’ பெஹன் கர் கடே ஹோ ஜாவ்” என்றார் ஷஃபி பாய். நானும் அவர்களோடு சேர்ந்து பணி செய்வ தாகப் ‘பாவ்லா’ காட்டணுமாம்! இருக்கட்டும்; கொஞ்ச நாளைக்கு இப்படியே ஓடட்டும் என்று ‘வேலை’ பார்த்துவந்தேன்.

நாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த Aramco கேம்பில், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் வெவ்வேறு உலக நாடுகளின் அடிப்படையில், தனித்தனி dormitaryயும் தனித்தனி mess hall ம்மாக இருந்தது. கொரியா நாட்டவர்கள் எங்கிருந்தாலும், பொறுமையோடு வரிசையாக நின்றே பழக்கப்பட்டவர்கள். அதனால், அவர்களுக்கிடையில் சண்டை சச்சரவு இருக்காது.

பணியிடத்திற்கு எங்களை ஏற்றிச் செல்லும் எங்கள் பஸ்ஸில் கொரியாக்காரர் ஒருவர் ஓடிவந்து ஏறினார். பஸ்ஸில் முன்னதாக ஏறியிருந்த மற்றொரு கொரியன், “சிக்ஸா ஸா ஹாயோ?” என்று ஓடிவந்து கடைசியாக ஏறியவரைப் பார்த்துக் கேட்டார். அதற்குத் தலையாட்டினார், அவசரமாக வந்து ஏறிய கொரியன். 

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த கொரியனிடம், அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டபோது, “ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாயா?” என்பது பொருள் என்றார். அதை நான் மனப்பாடம் செய்துகொண்டேன். கேம்பில் எந்தக் கொரியனைச் சந்தித்தாலும், அப்படியே கேட்பேன். அவர்களும் சிரித்துவிட்டு, சாப்பிட்டதை உண்மைப் படுத்த எதோ கூறிவிட்டுச் சிரிப்பார்கள்.

ஒரு நாள் இரவு, கேம்பில் கூட்டமாக வந்த கொரியர்களைப் பார்த்தவுடன், “சிக்ஸா ஸா ஹாயோ?” என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதற்குக் காரணமென்ன என்று ‘பேந்தப் பேந்த’ விழித்த எனக்கு, என் தவறு புரிந்தது. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வந்தவர்களிடம், காலைச் சாப்பாட்டைப் பற்றிக் கேட்டுவிட்டேனே! அசடு வழிய நின்ற என் முதுகில் தட்டிக் கொடுத்து, ஏதோ சொன்னார்கள். அது, அவர்களின் பாராட்டாக இருக்கலாம். அதை நான் மறந்துவிட்டேன்.

அந்த நிகழ்வுக்குப் பின்னர், வேற்று மொழிப் பேச்சுகளை அறிய முற்படும் போதெல்லாம்.நேரத்துக்கும் ஈடுபட்டிருக்கும் வேலைக்கும் பொருத்தமானவற்றையே கேட்டுக் கற்றுவந்தேன். படிப்படியாக, என் பணியிலும் மாற்றமும் முன்னேற்றமும் வந்தபோது, சில மாதங்களில் article checker ஆனேன்.

இந்த நாளில்தான், Samgwan என்ற தாய்லாந்துக்காரரின் நட்பு கிடைத்தது. அவரும் நானும் ஒரே இடத்தில் இருந்த பொருள்களை அவற்றின் நிலை, எண்ணிக்கை போன்ற பரிசோதனையில் ஈடுபடுவோம். இடையில், ‘தாய்’ மொழி பற்றிப் பேசுவோம். “குன் ட்யு அராய்?” என்றால், “உன் பெயர் என்ன?”வாம். “குன் பைனாய்?” என்பது “நீ எங்கே போகிறாய்?” என்று கேட்பதாம். “போம் பை தம் ங்க்வான்” என்பது, “நாம் வேலை செய்யப்போகிறோம்” என்று பொருளாம். “டீ மாக்” (dee maak) என்பது, “மிக நன்று” என்பதைக் குறிக்குமாம். 

‘தாய்’ மொழிச் சொற்களைக் கற்றுக்கொள்வதில், எனக்கு மற்றொரு வாய்ப்பும் கிடைத்தது. தாய்லாந்து என்ற நாட்டுப் பெயர் வருவதற்கு முன் அந்த நாட்டின் பெயர் ‘லாவோஸ்’ என்பதாகும். அந்த லாவோசுக்குப் போய்வந்த தமிழ் நாட்டுக்காரர் ஒருவர் எங்களுடன் லேபராக வேலை செய்துவந்தார். அவரிடம் சந்தேக நிவர்த்தி செய்துகொள்வேன். Tea break நேரத்தில்தான் நான் அதிகமாகக் கற்றுக்கொள்வதுண்டு. “டிம் சாய்” என்றால், ‘டீ குடி’ என்பது அதன் பொருளாம். “மைமீ” என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தமாம்.

நாங்கள் பணி செய்துகொண்டிருந்த இடத்தில் ஒருவர் ஏருக்கு மாறாக எதையோ செய்ததைப் பார்த்த தாய்லாந்து நண்பன் “மைமீ சமோங்” என்றார். அருகில் நின்றுகொண்டிருந்த நான், “என்ன சொன்னாய்?” என்று கேட்டபோது, ‘அந்த லேபருக்கு மூளையில்லை’ என்றார். அதையும் கற்றுக் கொண்டு, அதற்கான அடுத்த வாய்ப்பு வந்தபோது, நானும் அதன்படிக் கூறினேன். ‘தாய்’ நண்பன் பாராட்டினான். 

‘அராம்கோ’வில் பணியாற்ற இலங்கைக்காரர்கள் அப்போது வந்து, பல வேலைகளில் அமர்ந்தார்கள். அப்படி வந்தவர்களுள், துவான் ஆமித் எனும் பெயருள்ள இலங்கை ‘மலாய்’ முஸ்லிமும் ஒருவர். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். ஒரு நாள் நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நாய் ஓடியது. “மிஸ்டர் அஹமட், எப்பவாவது நீங்க நாய் நடந்து போறதெப் பாத்துக்கிரியளா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஓடுவதே நாயின் இயல்பு” என்றேன். 

“பல்லாட்டே வெடா கொத்த நெ, ங்கமின் ஹமன கொத்த நெ” என்று சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, “நாய்க்கு எந்த ஒரு அவசரமான வேலையும் கிடையாது; அது மெதுவாவும் போகாது. (ஓடிக்கொண்டுதான் இருக்கும்)” என்பதுதான் அந்தப் பழமொழி” என்றார் துவான். “கேம ஹொந்தாய்” என்றால், சாப்பாடு நல்லம் என்பது அர்த்தம் என்றார் துவான் ஆமித். “வெடக் கரெண்ட” என்றால் ‘வேலை செய்தல்’ என்று அர்த்தமாம். “கொஹய்த ஏன்ட?” என்பது, ‘எங்கே போகிறாய்?’ என்பதன் பொருளாம். “நமே மொக்கத்தே?” என்றால், ‘உன் பெயர் என்ன?’ என்பதாம். “கத்தாக் கரெண்டே” என்றால், ’பேசு’ என்பது அர்த்தமாம். இவை போன்று இன்னும் சிங்களத்தில் நிறைய அறிந்துகொண்டேன். அதுவே ஒரு வாரப் பதிவாகிவிடும் என்பதால், சிலவற்றை மட்டும் தொட்டுக் காட்டினேன்.

மத்தியக் கிழக்கின் அரபு நாடுகளில் பணி புரியச் செல்வோர் அதிகமாகக் காண்பது, ‘பிலிப்பைன்ஸ்’ நாட்டவர்களைத்தான். அடுத்த பதிவில் அவர்களைச் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்.

அதிரை அஹ்மது

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பல்சுவை விருந்து !

இங்கு கண்ட அகராதி... நிச்சயம் பயன் தரும்... அதோடு தேவையேற்படும்போது இங்கேயும் பயன்படுத்தவும் உதவும் :)

adiraimansoor said...

காக்கா பல மொழிகளில் கலக்குறீங்க

மைலூலியாங் மலூலியாங் (தாய்)


பல்லட்ட வெடகுத்ன விலாவட்ட வெடகுத்ன

நாயும் கெடியார முள்ளூம் ஓடிக்கொண்டுதான் இருக்கும் இரண்டுக்குமே நிற்பதற்கு நேரமில்லை
காக்கா கொய்த வெட

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எங்கள் நிறுவனத்திற்கான இந்திய, வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய தேசத்தவரை வேலைக்கு எடுக்கும் விசா ஒதுக்கீடு 'ரொம்பி வழிவதால்' இலங்கையரை வரவழைத்தோம்,

வந்தவர்கள் அனைவரும் எங்களவரல்லர்; சிங்களவர்.

இவர்களிடம் வேலை வாங்க நான் சவுதியில் கற்ற ஓரிரு வார்த்தைகளே உதவின.

வந்தவர்களிடம் "நம முக்கத்த?" "எண்ட?" "ஷுத்த கரண்ட" "வத்துர, கத்துர, யத்துர" என்று கலக்க அவர்களுக்கு ஏதோ "பிழைத்தோம்" என்ற உணர்வில் புன்னகைக்கின்றனர்.

மெளலவி சாஹெபின் அனுபவ வகுப்புத் தொடர அல்லாஹ் ஆத் ஆஃபியா.

sabeer.abushahruk said...

ஆனால், இந்த பங்காலிகள் உருது பேசுவதைக் கேட்கவே 'சடப்படமா' இருக்கும்.

ஒரு முறை ஒரு பங்காலி என்னிடம் வந்து,

"ஸார்ஜி, சிரியாக்கா பாஷா மர்கயா" என்றான்.

அந்நேரம் சிரிய உள்நாட்டுக் கலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்ததால், " கப் ஹுவா? தும்கோ கெய்சா பத்தா?" என்றேன்.

"நா மானேகா? ஆஜா திக்காத்தாவும்" என்றான்.

காட்றானாமாம். சிரியா நாட்டு தலைவர் இறந்துபோயிருப்பதை காட்றானாமா? மண்டை முடியைப் பிய்த்துக்கொண்டு "ச்சலோ திக்காவ்" என்று அவனுடன் போனேன்.

அவன் காட்டிய இடத்தில், சிரியா பாஷா இறந்து கிடக்க வில்லை. குஞ்சுப்பறவை ஒன்று இறந்து கிடந்தது.

"தேக்கோ சிரியாக்கா பாஷா" என்றான்

"ச்சிடியாக்கோ பச்சா" ன்றாறாமாம்.

உன் நாக்குல நல்ல பாம்பு கடிக்க என்று 'உருதி' அங்கிருந்து அகன்றேன்.

Unknown said...

எனது இக்குறுந்தொடர் பதிவாகியது முதல், பின்னூட்டமிடும் சகோதரர்களின், அவரவர் Personal experiences வெளிப்பட்டு, தொடர் மெருகூட்டப்படுகின்றது.! தொடருங்கள் சகோஸ் ! உங்கள் நினைவாற்றலுக்கு இது ஒரு சவால் !

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா

அருமையாக இருக்கிறது.

ஒரு வேலை இருக்கிறது வெளியில் போகிறேன். பின்னர் வந்து எனது சில அனுபவங்களையும் பகிர்வேன் இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

கார் மீன் வீட்டுகல்யாண விருந்து ஹோமஹந்தாய்! இந்தச்சொல்1950= என் நண்பர்கள் வட்டத்தில் புழக்கதில் இருந்தது.வேறொரு அர்த்தத்தில்.kerangan Anda ada sedap dan bagus. Anda boleh fahamka Bahasa Melayu ? உங்களின்கட்டுரை நன்றாகவும் சுவையாகவும் இருக்கிறது.மலாய் மொழி உங்களுக்கு தெரியுமா? Jumpa lagi மீண்டும் சந்திப்போம்.!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முப்பது நாட்களில் மலையாளம் கற்றுக் கொள்வது எப்படி'ன்னு புக்கு வாங்கிப் படிக்கும் அளவுக்கு நம்மில் சிலர் அவதிப்பட்டனர்... அந்தக் காலத்தில் அவர்களின் ஆதிக்கம் அப்படி இருந்தது !

இப்போது, வேலை தேடுவோர் அனைத்து பயோ டேட்டாவிலும் (அவர்கள் அதாவது மலையாளிகள்) தமிழ் வாசிக்க எழுதத் தெரியும் குறைந்த பட்சம் தமிழ் வாசிக்கத் தெரியும் என்று போடும் அளவுக்கு மாறியிருக்கிறது. (மலையாளம் தெரியும் என்று போடுவதில்லை)

Ebrahim Ansari said...

ஒரு நண்பர் அன்றுதான் ஊரிலிருந்து துபாய் வந்தாராம்.
அவரை நண்பர்கள் தனியாக ரூமில் விட்டுவிட்டு வேலைக்குப் போய்விட்டார்கள். ஊரிலிருந்து வந்தவருக்கு குளிக்க சோப் தேவைப் பட்டது. எதிர்ப்புறக் கடையில் சென்று சோப் வாங்கப் போனபோது சாளியை கடக்கத் தெரியாமல் திகைத்து நிற்க, வெகுவேகமாக வந்த ஒரு கார் -பட்டென்று ப்ரேக் போட்டு நின்றது . ஓட்டியவர் ஒரு பஞ்சாபி

" கியா பாய் கியா பாத் ஹை?" என்று கோபமாக கேட்டான்.

நம்ம ஆள் , " சும்மாதான் பாத்தேன்".

======
ஒரு அரபி புதிதாக வந்த ஒரு நம்ம ஆளை நோக்கி " தால் " என்று கூப்புட நம்ம ஆள் ஒரு A4 பேப்பருடன் போய் நின்றாராமே!

Ebrahim Ansari said...

சாலையைக் கடக்க என்று படிக்க வேண்டுகிறேன்.

சாளியைக் கடக்க என்றால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும். அப்புறம் குடும்பத்தில் பிரச்னை.

adiraimansoor said...

பாரூக் காகக்கா மலாய் பாஷையில் கலக்குகின்றார்கள்
நான் கற்ற மொழியையும் இங்கு இடுகின்றேன்
யாரும் முடிந்தால் எந்த மொழி என்பதை சொல்லிவிடுங்கள் பார்ப்போம்

சீமாசேன் கெங்கி திஸ்க்கா
நமாய்வா நானி
ஈமா இக் திஸ்க்கா
அரிஹாத்தோனே
கூனி தோக்கோ
ஓ இந்தோஜின் திஸ்க்கா
இந்தோஜின் ஆத்தமா ஈனே

பசக்கோன்வா தைஜிப் திஸ்னே
உந்தோனி இந்தோஜின் கோஹான்வா ஒய்சி திஸ்னே

சொல்லுங்கள் பார்ப்போம்

அப்துல் கபூர் said...

மன்சூர் காக்கா, தைஜிபு (தெசு)கா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிஞரின் அழகு மொழிக்கலக்கல்!

கபூரு சான், மன்சூரு சான் அஸ்ஸலாமு அலைக்கும் மோ உஹையோ உதைமாசு!

எக்ஸ்க்யூஸ்மி
பேரென்ன?
எம்பேரு ஜாபரு
நன்றி அண்ணே
நாடு எவடெ?
இந்தியருக்கு மூளை ஜாஸ்த்திலோ!
இந்திய சாப்பாடு ருசி ஜாஸ்திலோ!
கம்யூட்டர் சரியாத்தான் இருக்கு.
மன்சூரு சான் ஒரேன குத்பா தைஜிபூ?

sheikdawoodmohamedfarook said...

பஸுக்காக ஒருவர் பஸ் ஸ்டாப்பில் காத்து நின்றால் அந்தப்பக்கம் காரில் வரும் ஒருவர் தன்காரை நிறுத்தி Tuan mana mohu pergi ?// பெரியவரே! நீங்கள் எங்கு போக வேண்டும்?என்பார்// saya mohu pergi ke Jalan Bangsar !// நான் பங்சார் ரோட்டுக்கு போகவேண்டும்'' என்றால்/ saya pun lalu Jalan itu juga!naik kertak saya dan kita dua orang pergi ke ketempat itu! ''நான் அந்த வழியாகவே போகிறேன்! நாம் இருவரும் ஒன்றாகவே போகலாம்.காரில் ஏறுங்கள்'' என்பார். அந்தப்பண்பாடு அங்கே உண்டு.இங்கு இல்லை!அந்த காரில் ஏறியவர் பண்பாடு உள்ளவராய் இருந்தால் இறங்கும் போது'' banyak Trimah kaseh Tuan! assalaamu allikkum. Jumpalagi! . ரெம்ப நன்றிபெரியவரே! மீண்டும் சந்திப்போம்.அஸ்ஸலாமுஅலைக்கும்'' என்று சொல்லிவிட்டுதிறந்தமூடிவிட்டு அவர் புறப்படும் வரை நின்று கைஅசைத்து வழிஅனுப்பி விட்டுவருவார்கள்.ஆனால் பெருபாலான இந்திய முஸ்லிம் 'மாடுகள்' அந்த பண்பாடுகளை எல்லாம் கவனிப்பதில்லை.காரை விட்டு இறங்கிய பின் கார்கதவை திறந்த படியே போட்டுவிட்டு பின்பக்கத்தை[ உதவி செய்தவர்க்கு] காட்டிவிட்டு ''நீ எக்கேடும் கேட்டு போ! எனக்கென்ன'' என்றுபோவார்கள். மற்றும் சிலரோ கார்கதவை சாத்துகிறேன் என்று பலம் கொண்டமட்டில் அதை ஒரு இழு இழுத்து காரோடு 'ஒரே அடி! உதவி செய்தவரின் காது அன்றோடு அது காதல்ல! ''வேறென்ன?'' யார் எதை கத்தி கத்தி சொன்னாலும்'கேட்-காது' ! இது கற்பனை அல்ல உண்மை. அங்கு திருக்குர்ஆன் விற்கவந்த நம்ஊர்காரர் ஒருவருக்கு நான் எந்த 'கமிஷன்'னும் பேசாமல் உதவிசெய்யப்போய் அவன் என்னை'இழிச்சவாயன்' என்றான் .

sheikdawoodmohamedfarook said...

மேலே சொன்ன என்கமெண்டுக்குஒரு ஆங்கில பழமொழி சொல்ல விட்டுவிட்டேன். /A willing Horse is most ridden.//

Shameed said...

அப்போ அடுத்த பதிவில் கொமஸ்த்தக்கா இருக்கு

N.A.Shahul Hameed said...

Assalamu alaikkum
I am at present in my office (6.02PM), reading the article of the polyglot Adirai Ahamed kaakka. As he mentioned in his comments really the comments are rather entertaining. On reading my Saachcha Mohamed Farook's comment I could not control the burst of laughter.
My colleagues around me - mostly Chinese - gazed at me lifting their eyebrows up.
I tried to stop laughing but I could not stop tears rolling upon my cheeks.
His pun of words and the sense of humour always make us think and laugh.
Awesome.
Wassalam
N.A.Shahul Hameed

Ebrahim Ansari said...

பெங்காளிகள் பேசும்போது ஸ் ஷ் அதிகமாக இருக்கும்.

ஒரு முறை ஷார்ஜாவில் ஒரு டாக்சியை பெங்காலி கைகாட்டி நிறுத்தினார்.

டிரைவர் பாகிஸ்தானி கேட்டார்: கிதார் ஜாநேகா?
பெங்காலி சொன்னார் : மே ஆஸ்மான் ஜானா ஹை.
குறும்புக்கார பாகிஸ்தானி டிரைவர் சொன்னார்: அரே பாய் மேரா காடி ஜமீன் மே ஜானேவாளா காடி. தும் ஆஸ்மான் ஜாநேகேளியே துஸ்ராகாடி பகடோ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

உண்மையில் பெங்காலி போக வேண்டியது : அஜ்மான்.

sabeer.abushahruk said...

அதே மாதிரி பங்காலிகளுக்கு ப வராது பொ ன்னுதான் சொல்வாய்ங்க.

பொந்த்ரா பொந்த்ரா பொச்சீஸ் என்றால் பந்த்ரா பந்த்ரா பச்சீஸ் என்று அர்த்தம்.

ஈனா ஆனா காக்கா சொன்ன அதே பங்காலி பட்டான் டாக்ஸியில் ஏறினான்.

"கஹான் ஜானாஹே பந்து?" - ட்ரைவர்

"போல்தியா" - பங்காலி

"போல்தியா? சுனா நஹி பாய். ஃபிர் போலோ கஹாங் ஜானாஹே?" - ட்ரைவர்

"போல்தியா"

"அரே க்ஹாங் போலா தும். குஸ்ஸா மத் கராவ். போலோ கஹாங் ஜானாஹே"

"கித்னா பார் போலேகா போல்தியா போல்தியா"

"அரே சாலா உத்தார் மேரி காடிசே. போல்த்தா நை போல்தியா போல்த்தாஹே"

"போல்தியா கேம்ப் மாலும் நஹீ தும்கோ?"

"ஓ பல்தியா? முனிசிபாலிடி பலதிய்யா?

"ஹாங்...போல்தியா"

"ச்சுப் சாலா"

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

// பெங்காளிகள் பேசும்போது ஸ் ஷ் நிறை இருக்கும்;மைத்துனர் இப்ராஹிம் அன்ஸாரி சொன்னது// அப்போ வங்காளிகள் வாய்க்குள்ளே நாக பாம்பு வச்சு இருக்கானோ !

adiraimansoor said...

கெமினாஷி?

பாலுபாஷி

அனித்தமேக்க பாலு பாஷி

மொன்சூர் போய் சொபீர் பாய் பொஹுத் குஸ்ஸாமே தொமாம் கொயா

என்னிடம் ஒரு பங்காளி

மன்சூர்பாய் சபீர்பாய் ரொம்ப கோபத்துடன் தமாம் போய் இருக்கின்றார்

adiraimansoor said...

அதிகமாக உலக மொழிகளில் பரிட்சியம் பெற்றவர்களில் அதிராம்பட்டினத்தார்களும் ஒன்று என்பதை இந்த தொடர்மூலம் காட்டப்படுகின்றது

ஜாப்பான் போய் வந்து 12 ஆண்டுகள் கடந்தாலும்
அங்கு கற்ற சில வார்த்தைகள் அப்படியே மனதில் பதிந்து விட்டதை கபூர் & ஜாபர் சாதிக் ம்முலம் அறிகின்றோம்
கெங்கி திஸ்யோ

ஈமா சிகத்தோவா அரிமாஸ்க்கா

Unknown said...

//அதிகமாக உலக மொழிகளில் பரிட்சியம் பெற்றவர்களில் அதிராம்பட்டினத்தார்களும் ஒன்று என்பதை இந்த தொடர்மூலம் காட்டப்படுகின்றது// - மன்சூர்

3M சலீமின் மூத்த மகன் ஹாபிஸ் முஹம்மத் ஸாலிஹ், ஜப்பான் மொழியை சரளமாகப் பேசக் கற்றுள்ளார். ஜப்பான்காரர்கள் அவர்களுடைய மொழியில் பேசுவதை, தமிழிலோ ஆங்கிலத்திலோ interpret செய்து கொடுப்பதில் வல்லவராகத் திகழ்வது பற்றித் தெரியுமா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எனக்கு தெரிந்த பங்காளி மொழியில் பிடிபட்ட சில தமிழ் சொற்கள் ; வயசு - பொயசு, ரத்தம் - ரொக்தொ, விமானம் - பிமான், சிந்தனை - சிந்தா, ஆரம்பம் - ஆரம்பொ, லாபம் - லாப், நஷ்டம் - நொஷ்டொ, மேகம் - மேக், சக்தி - சொக்தி, புத்தி - புத்தி, மனுசன் - மனுஷ். இப்படி இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கிப்பார்க்க வேண்டியுள்ளது எதிலும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இத்திக்கே இகன் ராற்றே கியாராட்டெ பஜெ ஒய்சே. அம்மி கும் ஜாய்போ. இன்ஷா அல்லாஹ், கல்க்கே சுக்ரபர் இதிக்கே ஆய்ம்மோ.....துஆ கொரன்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அர்கதாஸ், நாசெ சென்? இது துருக்கியில் நலம் விசாரித்தல். கமஸ்தாய், து து பெனெ? பாப்பெனெ....இது இத்தாலியில் நலம் விசாரித்தல். கமஸ்தகா? மபுதி......இது ஃபிலிப்பைன்ஸில் நலம் விசாரித்தல்.....மோதுநெய்னா சோமா ஈக்கிரியா? இது என்னை அக்கம்பக்கத்து வீட்டார் விசாரிக்கும் நம்மூர் தமிழுங்க, நெசமாங்கெ.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//3M சலீமின் மூத்த மகன் ஹாபிஸ் முஹம்மத் ஸாலிஹ், ஜப்பான் மொழியை சரளமாகப் பேசக் கற்றுள்ளார். ஜப்பான்காரர்கள் அவர்களுடைய மொழியில் பேசுவதை, தமிழிலோ ஆங்கிலத்திலோ interpret செய்து கொடுப்பதில் வல்லவராகத் திகழ்வது பற்றித் தெரியுமா?//

இது புது தகவல் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எம்.எஸ்.எம்(n): எங்கே ஆளையேக் கானோம் ? உலக மொழி (!!!) ஆய்வு மாநாட்டுக்கு போயிட்டியலோ ?

salih3m said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.

அஹமது அப்பா அவர்களின் பதிவை இன்று தான் காண நேர்ந்தது பொதுவாக பொது வளைத்தலங்களில் வரும் ஆக்கங்கலை வாசிப்பத்தோடு சரி கருத்திடும் வழக்கம் இருந்ததில்லை காரணம் வேலைப்பலு.
அதிரைமன்சூர் காக்கா அவர்களின் கேள்வியில் சில திருத்தங்களோடு எனது பதில்.

சீமாசேன் கெங்கி திஸ்க்கா- How are you
நமாய்வா நாந்திஸுகா - what is your name
ஈமா இக் திஸ்க்கா? (ஈமா இகிமஷோக்கா or ஈமா ஈ திஸ்க்கா) -are you ok now -shall we go
அரிஹாத்தோனே -Thank you
கூனி தோக்கோ (குனி வா தோக்கோ திசுக்கா)-Where is your Country

ஓ இந்தோஜின் திஸ்க்கா - Are you Indian

இந்தோஜின் ஆத்தமா ஈனே -Indians are very clever

பசக்கோன்வா தைஜிப் திஸ்னே-Your computer is ok

உந்தோனி இந்தோஜின் கோஹான்வா ஒய்சி திஸ்னே
(உந்தோனி இந்தோஜின்னோ தாபெமோனோ வா ஒய்சி திஸ்னே) -Really Indian foods are very tasteful

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு