Tuesday, February 18, 2014

பயன் தரும் பன்மொழித் தொடர்பு-3

தூரக் கிழக்கு நாடுகளுள் கல்வித் தரத்தில் உயர்ந்தவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். அதனால், அரபுகள், நம்மை “ரபீக்” (தோழர்கள்) என்று அழைப்பார்கள்; பிலிப்பைன்ஸ் காரர்களை, “சதீக்” (உண்மையாளர்கள்) என்பார்கள்!  சில ஆண்டுகள் சென்ற பின்னர் ஒவ்வொரு நாட்டவர்களோடும் பழகி, அவரவர் உண்மை நிலையைக் கண்ட பின்னர், எல்லாரையும் அரபிகள், “ஹராமிகள்” (கள்ளன்கள்) என்பார்கள்;  ஆனால், இந்தியர்களை உயர்வாக, நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று மதிப்பில் உயர்த்துவார்கள்.  இது, இப்படி இருக்கட்டும். 

பிலிப்பைன்ஸ் மொழியில் “கா முஸ்தகா” என்றால், ‘How are you?’ என்பதாம். அதற்குரிய மறுமொழி, “மபோதி” என்பதாம். பிலிப்பைன்ஸ்காரர்களுள் பெரும்பாலோர் ‘செக்ஸ்’ வக்கிர புத்தி உடையவர்கள்.  நான் இன்னொருவனிடம் சுகம் விசாரித்தபோது, அவன் அதற்கு, “மபோதிதி” என்று கூறிச் சிரித்தான்!  அருகில்  நின்றவர்களிடத்தில் அவன் சொன்ன பதிலில் ஒரு ‘தி’ மட்டும் சேர்ந்திருந்தால், அதன் அர்த்தமென்ன என்று கேட்டபோது, அவர்களும் சிரித்துவிட்டு, “அசிங்கமான பொருள்” என்றார்கள். “ச்சப் சாப்” என்றால், ‘சாப்பாடு.’  அவர்கள் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.  

அவர்களுக்கு ஏதாவது இடைஞ்சல், எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டால், அவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள், “பூத்தாங் கினா” என்பதேயாகும்.  இதுவே நம்மிடமிருந்து வெளிப்படுமானால், அவர்களுக்கு வருமே கோபம்!  நாம் இவர்களிடம் ‘Thanks’ சொன்னால், “salamath po” (you welcome) என்று பதில் கூறுவார்கள்.  இவர்களை இதோடு விட்டுவிடுவோம்.  மற்றவர்களுக்கும் இடமளிக்க வேண்டுமல்லவா?

எனது முப்பதாண்டு சஊதி வாழ்க்கையில், பிந்திய 22 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் கழிந்தது.  அதுவும், மொழியறிவு என்ற ‘ப்ளஸ் பாயின்ட்’ இருந்ததால்தான்.  முதல் நிறுவனத்திலிருந்து விடுபட்டு, இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடிய என் முயற்சியின்போது, அமெரிக்க நிறுவனமான Four Winds எனக்கு வாய்ப்புக் கொடுத்தது.  அந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம் வேலை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு ஒரு போன் வந்தது.  ஜித்தாவிலிருந்து ரியாதுக்குச் சில பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் அப்போது வந்திருந்தது.  ஓட்டுனர் சூடானி.  அந்த மேனேஜரோ அமெரிக்கர்.  அலுவலகத்திற்கு எப்படி வரவேண்டும் என்ற ‘ரூட்’ சொல்லவேண்டும் இந்த சூடானிக்கு.

“Do you know Arabic” என்று அந்த மேனேஜர் என்னிடம் கேட்டார்.  “தெரியும்” என்றவுடன், போனைக் கையில் தந்து, “இந்த ஆளுக்கு இங்கு வருவதற்கான ரூட் சொல்லிக்கொடு” என்றார்.  நான் சொன்ன அடையாளங்களை வைத்து சரக்கு வாகனமும் வந்து சேர்ந்தது.  இந்த நிகழ்வே அந்தக் கம்பெனியில் எனக்கு நீண்ட காலப் பணியமர்வைத் தந்தது!

அடுத்துச் சந்தித்த அந்நிய நாட்டார், இந்தொநேஷிகள்.  “சூடா மாக்கான்” என்றால் ‘சாப்பாடு நல்லது’.  (மலேஷியாவில் இருக்கும் சகோ ஜாகிர் பொறுத்துக்கொள்ளவும்.)  “சலாமத் ஹரிராயா” என்பது அவர்களின் தேசிய தினத்தில் வாழ்த்துவது.  

இதற்கு அடுத்து வந்தவர்கள் பங்களாதேஷிகள். “கேமனாஷே?” என்றால், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற சுகம் விசாரிப்பு.  அதற்கு, “பாலூவாச்சே” (நன்றாய் உள்ளேன்) என்பது பதில்.  இந்த நாட்டுக்காரர்கள் வசிக்கும் ‘கேம்ப்’களில் வசிப்பவர்கள் இன்னும் நன்றாக அந்த மொழியை அறிய வாய்ப்புண்டு.

நான் ஒரு தடவை விடுப்பில் வந்து, சென்னை விமான நிலையக் customs சோதனை வரிசையில் நின்றபோது, எனக்கு முன்னால் நின்ற பையன் பங்களாதேஷ் பாஸ்போர்ட்டைக் கையில் வைத்து நின்றான். அப்போது சவூதியா விமானத்தில் வந்து இறங்கியவர்கள்தான் அனைவரும்.  அந்த பங்களாதேஷ் பையன் வித்தியாசமாக எனக்குத் தோன்றினான். “நீ பங்காளிதானே?” என்றேன்.  ‘ஆமாம்’ என்று தலையசைத்தான்.  “நீ ஏன் இந்த வரிசையில் வந்தாய்” என்று கேட்டதற்கு, “உங்க மதராசைப் பார்க்க ஆசையாய் இருந்தது.  என் வெக்கேஷனைக் கழிக்க நண்பர்களோடு வந்தேன்” என்றான் தமிழில்!  இதற்குக் காரணம், அவன் வசித்த கேம்பில் தமிழ் நாட்டு லேபர்கள்தான் அதிகம் பேர்.  இவனும் ஓரிருவர் மட்டுமே பங்காளிகள்.  அதுவே அவனைத் தமிழ் கற்றுக்கொள்ளச் செய்தது!  

1990களில் நான் Dammam Branch Manager பொறுப்பில் வந்தபோது, எனக்குக் கீழ் Operations Manager பொறுப்பில் இருந்தவர் சோமாலியா நாட்டவர்;  பாதுகாப்பு கருதி, தன் அண்டை நாடான கென்யாவில் குடியுரிமை பெற்றவர்.  அவரிடம், “ஹா பாரி காணி” (How are you?) என்றால், “மிஜோரி” (நன்று) என்று பதில் கூறுவார்.

இதுவரை நாம் கண்டுவந்தது, மொழியறிவு.  இனி பல நாட்டாரின் பண்பாடு பற்றி அறிவோம், இன்ஷா அல்லாஹ்.

அதிரை அஹ்மது

11 comments:

  1. //சூடா மாக்கான் என்றால் சாப்பாடு நல்லது// சூடா மாக்கான் என்றால்''சாப்பிட்டுவிட்டேன் ''என்பதே சரி.//சிலாமத் ஹரி ராயா //என்றால் நோன்பு பெருநாள் அல்லது ஹஜ் பெருநாளின் போது கூறும் வாழ்த்துகள்.Sela math Merdeka என்றால் சுதந்திர தினவாழ்த்து.

    ReplyDelete
  2. ///தூரக் கிழக்கு நாடுகளுள் கல்வித் தரத்தில் உயர்ந்தவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். //

    இதையேத்தான் என்னோட முதலாளியும் அடிக்கடி சொல்லிக் காட்டுவார் !

    //சில ஆண்டுகள் சென்ற பின்னர் ஒவ்வொரு நாட்டவர்களோடும் பழகி, அவரவர் உண்மை நிலையைக் கண்ட பின்னர், எல்லாரையும் , “ஹராமிகள்” (கள்ளன்கள்) என்பார்//

    பின்னர் இப்படியும் சொல்லிக் காட்டுவார் !

    ReplyDelete
  3. நம் ஊரிலும் சிலர் அவர்கள் கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை ஹராமீ என்கிறார்களே ! அரபியர் சொல்லும்ஹராமினும்அதிரையர் திட்டும் ஹராமீனும் இதே அர்த்தத்தை தான் குறிப்பிடுகிறதா?

    ReplyDelete
  4. selamat Hari kebangsaan தேசிய தின வாழ்த்து.aku cinta padamu[நான் உன்னை காதலிக்கிறேன்] உங்களில் handsome மான பேச்சாளர் யாராவது மலேசிய போய் இளம் வயது பெண்ணை பார்த்து இதை சொன்னால் சிக்குனாலும் சிக்கும். சிக்கினால் நீங்கள் திறமை யாளராக இருந்தால் விரைவில் நீங்கள் ஒரு கோடீஸ்வரர். சிக்கவில்லை என்றால் சிக்கல் இருக்காது.'' kita suda ada satu.cari lain.எனக்குஒரு காதலன் இருக்கிறான்.நீங்கள் வேறு ஆளைதேடிபாருங்கள் ''என்பார்கள்.நாங்கள் தான் 'ஊரு! ஊரு' என்று சொல்லி நாசமாய் போனோம். உங்களுக்காவது நல்ல காலம் பிறக்கட்டும். ஆமீன்!

    ReplyDelete
  5. ஃபிலிப்பினோக்களிடம் பேசுவதற்கு ஒரு சில வார்த்தைகள் சொல்லிக்கேட்டால் முதலில் அவர்கள் கெட்ட வார்த்தைகளைத்தான் சொல்லித்தருவார்கள்.

    அவற்றை மஞ்சள் பத்திரிகை தரத்திற்கு தளம் நடத்தும் மனநோயாளிகள் புழங்கும் இடங்களில் வேண்டுமானால் பதியலாம், இங்கே முடியாது.

    ஆகவே, அவற்றை உடனே பேசி விடாமல் கவனமாகவே பேச வேண்டும்.

    தகாலுக், பம்பங்கா உள்ளிட்ட ஃபிலிப்பினோக்களின் எந்த மொழிக்கும் பிரத்யேக எழுத்துரு இல்லை என்பது "படித்தவர்கள்" என்று அடையாளம் காணப்பட்ட ஃபிலிப்பினோக்களுக்கு ஒரு குறைதான், இல்லையா காக்கா?

    நல்லவேளை எழுத்துரு இல்லை; இருந்திருந்தால் அவர்களின் அநாகரிக பேச்சை, ஆபாச ஏண்ணங்களை எழுத்தில் காட்டி சாக்கடையென்பதை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கத் தவறமாட்டார்கள்.

    ஆதாரம் இல்லாமல் செய்தால் எதுவுமே தப்பில்லை என்பது அந்த நாய்க்கறிப் பிரியர்களின் நிலைபாடு.

    ReplyDelete
  6. அஹமது காக்காவின் பல நாட்டவரின் பண்பாட்டை படித்து நாம் மேலும் பண்படுவோம்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதனை பன் மொழிகளில் அஹமது சாச்சா அவர்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  8. டகலொக் மொழியில் உள்ள சில கெட்ட வார்த்தைகளை நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.பிலீஸ்

    ReplyDelete
  9. Mixed Fruit Juice குடித்த மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  10. Dear ARA ALA,
    Assalamu Alaikkum.
    'Assalamu alaikum' can be used for both singular and plural. But if someone wants it to one person only, he can say "Assalamu alaika".

    ReplyDelete
  11. Assalamu Alaikkum

    Dear brothers and sisters,

    If there is any one practical way to establish peace every day, each minute in everywhere(nowhere !!!! actually inside the human mind), then it is by committing to Salam - the Peace by saying 'Assalamu Alaikkkum' by sense of real meaning from deep inside the heart and soul, not by the sounds of mouth.

    My compilation of saying salam in different languages we hear there are...

    Arabic - السلام عليكم – Assalamu Alaikkum

    Tamil - உங்கள் மீது அமைதி நிலவட்டும் - Uṅkaḷ mītu amaiti nilavaṭṭum irukkalām

    Telugu - శాంతి మీ మీద ఉండాలి - Śānti mī mīda uṇḍāli

    Hindi - शांति तुम पर हो - Śānti tuma para hō

    Kannada - ಶಾಂತಿ ನೀವು ಮೇಲೆ ಎಂದು - Śānti nīvu mēle endu

    Nepali - शान्ति तिमीहरूमा रहोस् - Śānti timīharūmā rahōs

    Malay - salam sejahtera

    Japanese - あなたが平和でありますように - Anata ga heiwadearimasu yō ni

    Hebrew - שלום עליכם

    Filipino - kapayapaan maging sa iyo

    Russian - Мир вам - Mir vam

    Korean - 평화는 당신에 수 - pyeonghwa neun dangsin-e su

    Swaheli(An African language) - amani iwe juu yenu

    German - Friede sei mit euch sein

    Italian - la pace sia su di voi

    Vietnamis - hòa bình được khi bạn

    Bengali - শান্তি আপনার উপর করা - Śānti āpanāra upara karā

    Chinese - 愿你 - Yuàn nǐ

    Greek - ειρήνη σ 'εσάς - eirí̱ni̱ s ' esás

    and Swedish - frid vare med dig

    Jazakkallah khair

    B. Ahamed Ameen from Dubai.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.