Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 30 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 19, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் உஸ்மான்(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குழப்பத்தினால் ஸஹப்பாக்களுக்கு மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் பகைத்துக்குக்கொள்ளும் நிலை உருவான நிலையில் அவர்கள் எப்படி அவற்றை எதிர்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று பார்த்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் பெருமை விசயத்தில் அன்றைய முஸ்லீம்கள் எப்படி அனுகினார்கள், பெருமை விசயத்தில் இன்று நாம் எப்படி உள்ளோம் என்பதை பற்றி பார்க்கலாம்.

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் பெருமை அடித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக உள்ளோம் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சியே அவைகளுக்கு சாட்சி. இவ்வுலகில் நம்முடைய தந்தை ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் படைத்த பின்பு சைத்தானிடமிருந்தே அந்த பெருமை குணம் ஆரம்பமானது. இதோ அதன் வரலாறு குர் ஆன் வசனங்களிலிருந்து.

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.  திருக்குர் ஆன் (07:11 – 07:13)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக் கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 8:47)

உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 16:22)

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 16:23)

“ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (திருக்குர்ஆன் 16:29)

பெருமை யார் அடிப்பார்கள்? அவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும், நாளை மறுமையில் பெருமையடிப்பவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் தன் இறைமறையில் மிகத்தெளிவாக கூறியுள்ளான்.

மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களை பற்றி மிகக் கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டித்துள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்: - "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்).

ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) அறிவிக்கிறார்கள்: - நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” . (ஸஹீஹுல் புகாரி)

”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட நபி மொழிகளைப் போன்று நிறைய நபி மொழிகள் பெருமையடிப்பவர்கள் குறித்து மேலும் எச்சரிக்கை செய்கிறது. நபி(ஸல்) அவர்களும் தங்களுடை வாழ் நாட்களில் துளி அளவும் பெருமையடிப்பவர்களாக வாழ்ந்ததாக ஹதீஸ் தொகுப்புகளில் காண இயலாது.

மேலும் நபி(ஸல்) அவர்கள் பணிவோடு நடக்கும்படி நிறைய கட்டளை பிறப்பித்த்தோடு அல்லாமல், அவர்களும் தன் வாழ் நாட்களில் வாழ்ந்துகாட்டினார்கள்.  மக்காவில் தொழுது கொண்டிருக்கும் போது தன் மேனி மீது அழுகிய குடலை மக்கத்து குரைசிகள் வைத்து அவமானப்படுத்தினார்கள், திட்டினார்கள், ஏசினார்கள், சமூக பரிஷ்காரம் செய்தார்கள், தாயிப் நகரத்தில் காஃபிர்கள், சிறுவர்களை வைத்து கல்லால் அடித்து துரத்தப்பட்டார்கள், பிறந்த சொந்த மண்ணில் எண்ணிலடங்கா துயரங்கள் பட்டு தன் நாட்டை விட்டு வெளியேறி மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். 

மதீனாவிலும் நிம்மதியற்ற வாழ்வையும், பல எதிர்ப்பு போர்களையும் சந்தித்தார்கள். இது போன்ற பல சந்தர்ப்பங்களிலும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் யாரையும் திட்டவில்லை, தான் அல்லாஹ்வின் தூதர் என்று அகங்காரம் கொண்டு கேவலப்படுத்திய மக்களை ஏசவில்லை. அவர்களை பலிவாங்கும்விதமாக அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லை. பொருமையாக அனைத்தையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டார்கள். தன்னை பாதுகாப்பவன் அவன் ஒருவனே என்று நம்பினார்கள்.

இறுதியில் மக்கா வெற்றி கிடைத்தது, சூரத்துல் நஸ்ர் (110:1 -110:3) என்ற அத்தியாயம் இறங்கியது, உலக ஆட்சியே கையில் வந்ததை போன்ற ஓர் நிகழ்வு, தனக்கு நபித்துவம் கிடைத்த நாள் முதல் மக்கா வெற்றிக்கு முன்பு வரை சகிக்க முடியாத எண்ணற்ற துன்பங்களை பட்ட நபி(ஸல்) அவர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க பாவமன்னிப்பு தேடியவர்களாக தங்களுடைய சிரத்தை தாழ்த்தியவர்களாக தான் பிறந்த பூமிக்கு மீண்டும் பல்லாயிரக்கணக்கான தன் தோழர் படையுடன் ஆராவாரமின்றி அமைதியாக தான் அமர்திருந்த ஒட்டகத்தின் கழுத்தை தொடும் அளவிற்கு தலையை குனிந்தவாறு நுழைகிறார்கள்.

பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, எல்லா வெற்றியும் அல்லாஹ்வுக்கு உரியது, தனக்கு ஒன்றுமில்லை என்று எந்த ஒரு தற்பெருமையோ, அங்காரமோ இன்றி, தன்னை கொடுமைப் படுத்தியவர்களையும், கேவலப் படுத்தியவர்களையும் மன்னித்து தான் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கு முன் மாதிரி என்பதையும், தலைவர்களுக்கெல்லாம் முன் மாதிரி என்பதையும் இவ்வுலகிற்கு நிரூபித்துக் காட்டினார்கள் நம்முடைய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். 

யார் எல்லாம் மக்காவில் நுழைகிறார்களோ, யார் எல்லாம் அவரவர் வீட்டில் நுழைகிறார்களோ, யார் எல்லாம் அபுசுப்யான்(ரலி) அவர்கள் வீட்டில் நுழைகிறார்களோ இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு என்று சொல்லி கவுரவமாக மக்காவின் உள்ளே துழைந்தார்கள், ஆனால் பெருமை இல்லை, ஆனவம் இல்லை, அட்டகாசம் இல்லை, வெற்றி முரசு சத்தமில்லை, எந்த ஒரு விளம்பரமும் இல்லை. ஒன்றே ஒன்று தான் அல்லாஹ்வின் கட்டளைக்காக பணிந்து மக்காவில் துழைந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று. 

நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் பணிவோடு நடந்துக்கொண்ட ஏராளமான சம்பவங்கள் உள்ளது. இது போல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து கவுரமிக்க, கண்ணியமிக்க, சத்தியத்தோழர்களான ஸஹாப்பாக்கள் அனைவரும்  பணிவோடு இருந்தார்கள் என்பதை ஏராளம் ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம். சுப்ஹானல்லாஹ்.

இவ்விலகில் இன்று பெருமையோடு வாழும் நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பது பற்றி சிந்திக்க வேண்டாமா?

நம் வாழ்வில் பல தடவை அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை நாம் சொல்லுகிறோம், என்றைக்காவது நம் மனதில் ஒரு துளி அளவு பெருமை இல்லாமல் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்லி இருப்போமா? அல்ஹம்துலில்லாஹ் சொல்லுவது ஒரு பெருமை என்ற நிலையில் தானே நாம் இருக்கிறோம்.

இன்று பெருமை என்பது எல்லா நிலைகளிலும் நம்மோடு உறவாடி வருகிறது என்பதை மறுக்க முடியாது. விட்டில் மனைவி பிள்ளைகளிடமாக இருந்தாலும், வெளியில் நண்பர்களிடமாக இருந்தாலும், அலுவலகத்தில் சக ஊழியரோடாக இருந்தாலும் நம்மை பற்றி பெருமையாக பேசி தான் மட்டும் எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்று ஒரு பில்டப் கொடுப்பது என்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இது போன்று பெருமையடிப்பதை அல்லாஹ் ஒரு போதும் விரும்பவில்லை என்பதை என்றைக்காவது உண்ர்ந்திருக்கோமா?

இன்று இஸ்லாமிய தஃவா களமும் பெருமை என்ற புற்று நோய்க்கு கொடி பிடித்து, சுவர் விளம்பரம் செய்து, பிளக்ஸ் பேனர் விளம்பரம் அடிச்சு வீண் விரயம் செய்து அனாச்சாரத்தின் உச்ச நிலைக்கு சென்று வருங்கால தலைமுறைக்கு இது தான் தஃவா களம் என்று ஒரு தவறான எடுத்துக்காட்டை தருகிறதே இது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழைப்புப் பணியின் வழிமுறைகளா?

நாங்கள் அப்படி செய்தோம், இப்படி செய்தோம், இந்த சேவை செய்தோம், சமுதாயத்திற்கு இத்தனை சதவீதம் பெற்றுக்கொடுத்தோம், வாங்கிக் கொடுத்தோம் என்று பெருமையடிக்கும் இயக்கங்கள் இன்று தமிழகத்தில் ஏராளம் காணலாம். இது போல் ஒரு சில இயக்கங்களில் உள்ளவர்கள் “நாங்கள் மட்டும் தான் தமிழகத்தில் ஆரம்பகாலத்திலிருந்து ஏகத்துவக் கொள்கையில் உள்ளோம், மற்றவர்கள் வழி தவறியவர்கள்” என்று தங்களை உயர்த்தி பிறரை தாழ்த்தி சுய தம்பட்டம் அடிப்பது தான் நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெரும் படிப்பினையா? நான் ஆரம்ப ஏகத்துவவாதி என்று வெறும் தம்பட்டம் அடிப்பது முக்கியமா? அல்லது எந்த ஒரு சூழலிலும் பெரும்மை கொள்ளாமல், கொஞ்சம்கூட ஆனவமில்லாமல், சக முஸ்லீம்களின் மானத்தை சந்திச் சிரிக்க வைக்காமல் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் வாழ்ந்து காட்டுவது முக்கியமா? என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும், திருந்த வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

நான் இன்று இணைவைப்பில் இருந்து மீண்டும் அல்லாஹ்வை வணங்கும் நல்லடியானாக உள்ளேன் இதற்கு காரணம் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ். நான் இன்று நிறைய சம்பாதிக்கிறேன், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நான் நோய் இல்லாமல் வாழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். இந்த சமுதாயத்திற்காக சேவை செய்கிறேன் இவ்வாறு செய்யத்தூண்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், நான் நிறைய தர்மம் செய்கிறேன் இது எனக்கு அல்லாஹ் கொடுத்த்து அல்ஹம்துலில்லாஹ், பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே நான் பெருமைக்குரியவன் அல்ல என்ற எண்ணங்கள் நம் அனைவரின் உள்ளங்களில் வர வேண்டும். இவ்வாறான எண்ணங்கள் நிச்சயம் நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஓர் பணிவு ஏற்படும். ஆனவத்தோடும், அகங்காரத்தோடும் வாழும் மனிதன் எவரும் இவ்வுலகில் வெற்றி பெற்றதாக ஒரு சிறப்பான வரலாற்றை நாம் காண்பது மிக மிக அறிது. பணிவோடு வாழும் மனிதனுக்கு அல்லாஹ் தரும் வெற்றி இவ்விலகிலும் மறுவுலகிலும் நிச்சயம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

தன் வாழ் நாட்களில் பெருமையடிக்காத நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளது. யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

8 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//இன்று இஸ்லாமிய தஃவா களமும் பெருமை என்ற புற்று நோய்க்கு கொடி பிடித்து, சுவர் விளம்பரம் செய்து, பிளக்ஸ் பேனர் விளம்பரம் அடிச்சு வீண் விரயம் செய்து அனாச்சாரத்தின் உச்ச நிலைக்கு சென்று வருங்கால தலைமுறைக்கு இது தான் தஃவா களம் என்று ஒரு தவறான எடுத்துக்காட்டை தருகிறதே இது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழைப்புப் பணியின் வழிமுறைகளா?//

இந்த அணுகுமுறை கொண்ட இயக்கங்கள்,தனி மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.சகோ தாஜுதீன் அவர்களின் அக்கறையில் வேகம் ம்ற்றும் விவேகம் உள்ளது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அல்லாஹ்வை வணங்கும் நல்லடியானாக உள்ளேன் இதற்கு காரணம் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
நான் இன்று நிறைய சம்பாதிக்கிறேன், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
நான் நோய் இல்லாமல் வாழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த சமுதாயத்திற்காக சேவை செய்கிறேன் இவ்வாறு செய்யத்தூண்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,
நான் நிறைய தர்மம் செய்கிறேன் இது எனக்கு அல்லாஹ் கொடுத்த்து அல்ஹம்துலில்லாஹ்,
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே நான் பெருமைக்குரியவன் அல்ல என்ற எண்ணங்கள் நம் அனைவரின் உள்ளங்களில்// வரட்டுமாக! ஆமீன்

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sheikdawoodmohamedfarook said...

புகழுக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறுயாருமில்லை. புகழ் தேடி திறியும் மனிதனும் அவனுக்கு பின்னே தொடரும் ஜால்ராவும் மலத்தில் உருவான புழுவைவிட கேவலமானவர்கள்.அவர்கள் முடிவில் சேருமிடம் நரகமே.

Ebrahim Ansari said...

அகந்தை , ஆணவம் , கர்வம் , தலைக்கனம் ஆகிய பிசாசுகள் நம்மை பிடிக்காமல் அல்லாஹ் இந்த சமுதாயத்தைக் காப்பானாக!

மிகவும் சிந்திக்க வேண்டிய பதிவு தம்பி.

Shameed said...

//இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்: - "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்).//

இதை படித்ததும் அவர்களின் நிலையை நினைத்து கவலையா உள்ளது

Shameed said...

//”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)//

கண்ணியம் இல்லாது ஆட்டம் போடும் கூட்டத்தாருக்கு இறைவன் நல்வழி காட்டுவானாக ஆமீன்

sabeer.abushahruk said...

குர் ஆன் ஹதீஸ்களிலிருந்து படிப்பினை தரும் சம்பவங்களைத் தொடர்ந்து தந்துதவும் தம்பி தாஜுதீன், நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,2

அல்ஹம்துலில்லாஹ்..

இந்த பதிவை வாசித்து கருத்திட்ட மற்றும் வாசித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி..

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு