Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 28 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2014 | , ,


கண்தானம் பற்றிய பதிவுகளை 5 தொடர்களாக பார்த்தோம் இனி கண்ணை பாதுகாக்கும் சில டிப்சுகளை அலசுவோம்

கண்ணை பாதுகாக்க உணவு முறைகள்

ஒரு கேரட்டை குறுக்குவாட்டில் வெட்டிப் பார்த்தால் அது ஒரு கண்ணைப் போலவே தோற்றமளிக்கும். கண்பார்வைக்கு எந்த அளவுக்கு இந்த கேரட் உதவி செய்கிறது என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். பிடாகரோடின்  என்னும் தாவர வேதியியல் பொருளிலிருந்து கேரட் தனது ஆரஞ்சு நிறத்தைப் பெறுகிறது. இந்த பிடாகரோடின் கண்புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. 65 வயதைக் கடந்த நால்வரில் ஒருவரை பாதிக்கும், முதுமையுடன் தொடர்புடைய கண் பார்வைச் சீரழிவு ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில்  மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிக நிறமுல்ல பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் உணவில் அதிக அளவில் பச்சை காய்கறிகளை   சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும்  காய்கறிகளை சாப்பிடவேண்டும். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.  இவை கண்களுக்கு மிகவும் நல்லது. 

தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை,  அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை  அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை கண் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும்  இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.  கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. 

பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து  பற்றாக் குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். கறிவேப்பிலை, கேரட் கண்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது  இவை இரண்டும் கண்களின் காவலனாக விளங்குகிறது. 

தக்காளி,  பசலை, லிவர்,  முட்டை, நிறமயமான காய்கறிகள், , பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது. உடலில் அதிகமாக சுரக்கும்  குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன

தொடர்ந்து மீன் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தொடர்ந்து மீங்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தைற்க்க உதவும் என ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்.

கண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூளர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடுகள் ஏற்படும். இந்த குறைபாட்டை தவிற்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.

ஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்மன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்

கண்ணை பாதுகாக்கும் டிப்சுகள் அடுத்த தொடரிலும் பார்க்கலாம்
தொடரும்...
அதிரை மன்சூர்

20 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்ணுக்கு தொடர் ஒளிதரும் நல்தகவல்கள்!

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களைப் போல வயதானவர்களுக்கும், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும் சிறந்த அறிவுரியாகளைத் தேடித்தந்து இருக்கிறீர்கள்.

கண்களைப் பாதுகாத்துக் கொள்பவர்களும் படித்துப் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்.

தொடர்ந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

sheikdawoodmohamedfarook said...

ஆனந்தத்திலும் கண்ணீர்வழிகிறது!சோகத்திலும் கண்ணீர் வழிகிறது.இவைஇரண்டும் கண்ணுக்கு நல்லதா கெட்டதா?

sheikdawoodmohamedfarook said...

ஒருவரின் கண்ணீரை டெஸ்ட் செய்து அது ஆனந்தக்கண்ணீரா? சோககண்ணீரா?அல்லது முதலைகண்ணீரா ?என்று கண்டுபிடிக்க முடியுமா?

Shameed said...

//தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.//


தினமும் ஏதாவது கீரை காய்கறி சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்பதை படித்த டாக்டர் சொன்னதை நீங்கள் இங்கே எங்களுக்கு சொன்னதில் உங்கள் முகத்திரை கிழிந்தது போங்கள்!!!!!!.

sabeer.abushahruk said...

மன்சூரின் கண்சார்ந்த பராமரிப்புக் குறிப்புகள் மிகவும் உபயோகமானவை.

அருமையானத் தொடருக்கு வாழ்த்துகள்.

இருப்பினும் கண்ணின் படத்தை எங்கிருந்து திருடி காப்பியடித்து பேஸ்ட் பண்ணீங்க என்பதைத் தெரிவிக்கவும். :-)

Ebrahim Ansari said...

//இருப்பினும் கண்ணின் படத்தை எங்கிருந்து திருடி காப்பியடித்து பேஸ்ட் பண்ணீங்க என்பதைத் தெரிவிக்கவும். :-)//

இது ஒரு தொடர். தொடர் நிறைவு பெறும்போது எழுத உதவிய குறிப்புகளைப் பட்டியல் இட நினைத்து இருக்கலாம். அப்படிப் பட்டியல் இட்டு தொடர்புடையவர்களுக்கு நன்றி சொல்வார். அவற்றுள் இந்த கண்ணின் படம் பற்றிய தகவலும் வரலாம்.

sabeer.abushahruk said...

காக்கா,

தொடர் என்றதும் நினைவுக்கு வருகிறது.

தொடர்கள் எல்லாம் இடர்களுக்கு உள்ளாவதால் எனக்குச் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது என்னவென்றால்,

எல்லோரும் சொல்றாங்களே என்று சமீபத்தில் "மூடர் கூடம்" என்றொரு தமிழ்ப்படம் நெட்டில் பார்த்தேன். அதுல, எல்லாரும் ரொம்ப சீரியஸான காட்சிகளில் படு சீரியஸாக நடிப்பதைக் காணும் யாருக்கும் செம காமெடியாத் தெரியும்; சிரிச்சி சிரிச்சி வயிற்றை வலிக்கும்.

இப்போதெல்லாம் மூடர் கூடம் சினிமா மட்டுமல்ல; நிஜத்திலும் வாசிக்கக் கிடைக்கிறது.

சீரியஸா சொல்றாய்ங்க; எனக்கு சிப்புசிப்பா வருது போங்க.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களே

உங்களிடம் நான்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது அது கடந்தகால பல உங்கள் தொடர்கள் மூலமும் பல பின்னூட்டங்கள் மூலமும் அறிய பெற்றேன்
அப்படி இருக்கும்போது நானெல்லாம் உங்கள் முன்னாடி கால்தூசி பெறமாட்டோம் இருந்தும் என்னை போன்றோர்களை பல பின்னூட்டங்களில் வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் வந்துள்ளீர்கள் அது உங்களது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது ஜஸாக்கல்லாஹ் கைரன்

சில சகோதரார்கள் தேவையில்லாமல் என்னை விமர்சித்தார்கள்

அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு போன்று பெருமையையும் புகழையும் தேடி என்னுடைய வாழ்க்கையில் நான் என்றும் காய் நகர்த்தியது கிடையாது அப்படி அவர்கள் நினைப்பார்களேயானால் அந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக்கொள்ளாட்டும்

நமக்குள்ளே தேவையில்லாமல் சில பிரட்சனைகளை கிளப்பி அதனால் பல பிரிவிகளாக பிரிந்து இன்று நம் சமுதாயமே அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றோம் என்பதை நினக்கும்போது

நெஞ்சு வெடித்துவிடும் போல இருக்கின்றது

உடன் பிறவா சகோதரர்களே
தயவு செய்து இந்த வார்த்தைக்கும் ஏதாவது உள் நோக்கம் கற்பித்து விடாதீர்கள்

adiraimansoor said...

///ஆனந்தத்திலும் கண்ணீர்வழிகிறது!சோகத்திலும் கண்ணீர் வழிகிறது.இவைஇரண்டும் கண்ணுக்கு நல்லதா கெட்டதா?///

பாரூக் காக்கா இரண்டுமே கண்களின் வரட்சியை நீக்கும் அந்த விஷயத்தில் கண்களுக்கு நண்மையே பயக்கும்
ஆனால் அந்த கண்களுக்கு தெரியாது எது ஆனந்த கண்ணீர் எது சோக கண்ணீர் என்பது.
ஆனந்த கண்ணீரையும் சோக கண்ணீரையும் இனம் காணுவது நாமும் அந்த கண்ணீர் வடிப்பதை பார்ப்பவர்கள் மட்டுமே

adiraimansoor said...

///ஒருவரின் கண்ணீரை டெஸ்ட் செய்து அது ஆனந்தக்கண்ணீரா? சோககண்ணீரா?அல்லது முதலைகண்ணீரா ?என்று கண்டுபிடிக்க முடியுமா?///

காக்கா ஒருவரின் கண்ணீர் சொல்லும் கதையிலேயே அந்த இனம் நமக்கு புலப்பட்டுவிடும்

அது என்ன இனமென்று
இதவேற புடிச்சி எதுக்கு லேபுக்கு டெஸ்ட்டுக்கு அனுப்ப சொல்றிய

பாரூக் காக்காவுக்கு
இந்த வயசிலும் எத்தனை கற்பனை குறும்பு

adiraimansoor said...

என்னை ஊக்கப்படுத்தும்
ஜாபர் சாதிக்
இப்னு அப்துல் ரஜ்ஜாக்
அபூசாரூக்
அப்துல் ஹமீத்

ஆகியோருக்கு ஜஸாக்கல்லாஹ் கைர்

Ebrahim Ansari said...

//சில சகோதரார்கள் தேவையில்லாமல் என்னை விமர்சித்தார்கள்//

தம்பி! உங்களை மட்டுமல்ல. இந்த விமர்சனப் பட்டியலில் பெரிய மார்க்க அறிஞர்கள், சஹாபாக்கள், இமாம்களே அடங்கி இருக்கும்போது நாம் எம்மாத்திரம்?

அதே நேரம் இப்படிப்பட எழுத்துப் பணிகளில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதுவும் விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கும் சகோதரர்களிடமிருந்து நிச்சயம் வரும். இதற்கெல்லாம் மனம் துவண்டு விடாதீர்கள்.

நாம் ஒன்றும் சமுதாயத்தின் பெயரால் அல்லது சமுதாயத்தை சீர்திருத்துகிறேன் என்கிற பெயரால் எவ்வித மேடீரியல் பெநிபிட்டும் பெறுவதில்லை.

நமக்குக் கிடைக்கும் அரிதான நேரத்தில் நாம் படித்தவைகளை நமது பாணியில் மற்றவர்களுக்கும் பகிர்கிறோம். நமது நோக்கமெல்லாம் நமக்குத் தெரிந்ததை - நாம் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்வதுதானே தவிர யாரையும் பழி சொல்லவோ- கருத்து மாறுபாடு கொண்டவர்களை களங்கப் படுத்தவோ- சொந்த வாழ்வின் பிரச்னைகளை தோண்டிப் பார்த்து அடுத்தவர் மனதை நோகச் செய்வதோ அல்ல.

உங்களின் இந்தப் பணியை தொய்வில்லாமல் - சோர்ந்துவிடாமல் இன்னும் தெளிவாக - தீர்க்கமாக செய்யுங்கள்.

உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் ஒளிந்து கொண்டு இருப்பதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தியது தம்பி ஜாகிர். உங்கள் பதிவுகளை சந்தோஷமாக வெளியிட்டது அதிரை நிருபர். இதே போல் பல எழுத்தாளர்கள்- சிந்தனையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் பெற்று வருகிறார்கள். திறமைகளை மெய்ப்பித்து வருகிறார்கள். இது நமது ஊருக்கும் கிடைத்த பெருமை.

அந்த வகையில் நீங்கள் இந்தத் தளத்துக்கு கிடைத்துள்ள ஒரு எழுத்தாளர். உங்கள் பாதையில் இடரும் சிறு கற்களைப் பொருட்படுத்தாமல் அடி எடுத்து வையுங்கள். அப்படி ஒருவேளை தவறு நிகழ்ந்தால் தவறுகளில் இருந்து பாடம் படித்துக் கொள்ளுங்கள்.

தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது.

நாம் தவறாக எதையும் செய்திருக்கலாம் ஆனால் தப்பாக எதையும் செய்வதில்லை.

தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எங்களின் கண்கள் தேடும். இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

அந்த ரெண்டு கண்ணையும் வாராவாரம் பாத்து பாத்து என் ரெண்டு கண்ணும் பூத்துபோச்சு! வேறே புதுஸா ரெண்டு கண்ணை புடுச்சு ஒருகண்ணுக்கு மஞ்சமையும் இன்னொரு கண்ணுக்கு பச்சமையும் தடவிபோட்டா அதை பாக்குற எங்க கண்ணுக்கு பரவசம் ஏற்படாதா ? எதையும் கொஞ்சம் மாத்தியோசிங்க. தெரியலேனா புரட்சி கரமான வேறே வேறேதளத்தை பாத்துஅதுலேந்துகொஞ்சம் வெட்டிபசைதடவிஒட்டி காப்பிபண்ணக்கூடாவா தெரியலே! சுத்த கர்நாடக பேர்வழிகளா இருப்பிய போல இருக்கே !

ZAKIR HUSSAIN said...

//ஒருவரின் கண்ணீரை டெஸ்ட் செய்து அது ஆனந்தக்கண்ணீரா? சோககண்ணீரா?அல்லது முதலைகண்ணீரா ?என்று கண்டுபிடிக்க முடியுமா? //


அன்புமிக்க எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு,

சிலரின் முதலைக்கண்ணீரை அடையாளம் காணாமல் அதை உண்மை என்று நம்பியதால்தான் நாம் சோகக்கண்ணீர் சிந்த வேண்டியதாகிவிட்டது. வாழ்க்கையில் பெரும்பாலான காலமும் இவர்களின் முதலைக்கண்ணீரை நம்பியதால் காலமும் போய்விட்டது.

ZAKIR HUSSAIN said...

To Brother Adirai Mansoor,

சமீபத்தில் அதிரை ததஜ வின் விமர்சனத்தை ஒட்டியும் உங்கள் கமென்ட்ஸ் இருக்கிறது.

பொதுவில் எழுத வேண்டும் என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும், இதற்காக யோசிக்கத்தேவையில்லை. தவறு என்றால் தவறு என்று ஒத்துக்கொள்வதும், சரி என்றால் நமது பக்கத்தின் ஞாயத்தை எடுத்து வைப்பதும் ஒரு பொதுவில் எழுதுபவருக்கான தகுதியாக நான் கருதுகிறேன்.

அதே போல் விமர்சிப்பவர்கள் எதை சரியில்லை என்று சொல்கிறார்களோ அதை சரி என்று சொல்லும் ஜனநாயகமும், சுதந்திரமும் உங்களுக்கும் இருக்கிறது.

adiraimansoor said...

இன்ஷா அல்லாஹ்
பாரூக் காக்காவின் ஆசையை சீக்கிரம் தீர்த்துவைப்போம்
நான் ஒரு முட்டாளு பாரூக் காக்காவின் ரசனை தெரியாமல் கண்ணை போட்டோ காப்பி எடுத்து ஒட்டி 28 தொடரை ஓட்டிவிட்டேன்
இனி காக்கா சொல்வது போன்று மாத்தி யோசிக்க வேண்டியதுதான்

adiraimansoor said...

இபுராஹீம் கக்கா போன்றோரின் அறிவுரை மிக அவசியமான ஒன்று நாம் இந்த சிறு இடருகளெல்லாம் உண்மையில் நம்மை பக்குவ படுத்தும் என்றே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இன்ஷா அல்லாஹ் நாம் கடைமையில் கண்ணா இருப்போம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு